Wednesday, September 30, 2015

உணவில் உரிமை மீறல்

இந்தியச் சமூகம் தனது மதவெறியையும்,சாதி வெறியையும் உணவில் காட்டுவது
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் எதை உண்ணவேண்டும்,எதை
உண்ணக்கூடாதென்று தீர்மானித்து உண்ணக்கூடாது என்று தடைபோடவும்,தடையை
மீறினால் அவர்களை அடித்துக் கொல்லவும் வெறியர்களுக்கு உரிமை
வழங்கப்பட்டிருக்கிறத­ு என்றால் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கி
செயல்படுத்தும் மதமும்,சாதியமும் மனித அழிவுக்கான முதன்மைச்
சமூகவிரோதியாகத்தானே இருக்க முடியும். சமூக விரோதத்தையும் உரிமை
மீறலையும் கண்டிக்காத அல்லது சட்டத்தின்படி குற்றவாளியாக பாவிக்காத அரசு,
இருந்தும் பயனற்றதாகவே பொருளாகும். மாட்டிறைச்சிக்கு எதிராக தற்போது
களமிறங்கியிருக்கும் இவ்வகையிலானச் சமூக விரோதிகளிடம் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவலத்திற்கு இந்தியச் சமூகம்
தள்ளப்பட்டிருக்கிறது­ எனும் போது தேசத்தில் பிறந்தமைக்காக அவமானப்படுதலை
விட வேறென்ன பாவனையை வெளிபடுத்த முடியும்.

உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவைச் சேர்ந்தவர் அஃப்சல். இவர் பிசாராவில்
வசித்துவந்தார். அஃப்சல் தனது வீட்டில் மாட்டிறைச்சியை சமைத்து உண்டதாகக்
கூறி.அஃப்சலை அவரின் வீட்டிலிருந்து இழுத்து வந்த இந்துத்தவ வெறியர்கள்
அவரை சரமாரியாக அடித்திருக்கிறது.
இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ,இந்துத்துவ வெறியர்களிடமிருந்து
அஃப்சலைமீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.­காவல்
துறையின் இச்செயலை கண்டித்த வெறியர்கள் காவல்துறை மீது கற்களை வீசியதால்,
அங்கே கலவரம் மூண்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன.இதனிடை­யில் அஃப்சல்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள நொய்டா காவல்துறை ஆறு பேரை
கைதுசெய்துள்ளனர். மேலும் நால்வரைத் தேடி வருவதாக குறிப்பட்டுள்ளனர்.

மனித அத்துமீறல்கள் அதிகமாக மண்டிக்கிடக்கும் வகையில் ஒட்டுமொத்த
தேசத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கும்
இந்துத்துவம், மனிதன் உண்ணும் உணவில் தன் மதவெறியை காட்டியிருப்பது
மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் இம்மாதிரியான சமூக அவலங்கள்
தொடர்ந்து நடக்குமேயானால் நிச்சயம் சமத்துவம்,சகோதரத்துவ­ம், சனநாயகம்
ஆகியவை இல்லாது மனித வாழ்வுக்கு ஏற்ற நாடாக நிச்சயம் இருக்காது என்பதே
உண்மையான ஒன்றாகும்.

Tuesday, September 29, 2015

கசியும் காதல்

மலர்களை தொடும் போதெல்லாம் உன்னை தொட்டணைப்பது போன்றதொரு உணர்வு காதல்
மயக்கத்தில் நான்,,,
____

எதை இழக்கச் சொல்கிறாய் நீ!
மறந்தும் இழப்பதென்பதை காதல் எனக்கு உணர்த்தாத பொழுது,,,
____

தனிமையில் சதுரங்கம் ஆடுகிறேன்
நான் எதுவாக வேண்டும் நீயே சொல்லிவிடேன் நினைவுகளின் ஊடே,,,
____

முத்தம் அமுதமாகாது அளவுக்கு மீறினாலும் அது நஞ்சாகாத ஒன்றாதலால்,,,
____

சாலையை கடந்தேன் எதிரில் நீ வந்தாய் உன்னை கடந்துபோக அவ்வளவு நேரம் ஏன்
தாமதமானதெனக்கு,,,
____

தாயும்,சேயும் நானாகி நின்றேன் நீயும் நானும் காதலும், காட்சியும்,
சாட்சிக்கு
வந்து நிற்க
வாழ்ந்து விடுகிறேன்
காதலோடு,,,
_____

இரவு உறக்கம் பிடிபடவில்லை
என்னை சுற்றி எண்ணிலடங்கா கனவுகள்
அத்துணையும் நீயாகி நிற்கிறாய்,,,
_____

நிலவு ஏன் மறைகிறது? கேட்கிறாய் கேள்வியாய் உனதழகால் வெட்கத்தில் அது
தன்னை மறைக்கிறதென்றேன் பதிலாய்
புதையலைத் தேடி வந்தது நம் காதல்
_____

பிரிவோம், பிரிந்தோம், மறந்தோம் என மிகச்சாதாரணமாய் கடந்து போவதல்ல காதல்
மடியில் தவழ்ந்து மனதில் நுழையும் மழலை மொழி பேசும் நம் காதல் மழையில் நனையலாம் வா!

_____

என் பேனா தோற்றுவிக்கும் ஒவ்வொரு வரிகளும் உன் பெயரை உச்சரிக்கும் கவிதைகளாக,,,
_____

நம் முத்தங்களால்
உலக யுத்தங்களை தவிர்க்கலாம்
உயிர்கள்
ஒவ்வொன்றும் இனி காதலின் மடியில் பிறக்கட்டும்
_____

கல்லடிபட்ட நதியை அரவணைக்கும்
மரங்கள் காதலிப்பதை
நம் கண்கள் உற்றுப்பார்க்க
புது நேசம் பிறந்தது அப்போது,,,
_____

உனக்காக கண்ணீரை சேகரித்து வைத்திருக்கிறேன் விரைந்து வந்து கேட்கிறது
உனக்கு முன்னே காதல்
என் கண்ணீரை,,,
_____

யாருக்கோ
நிச்சயம் செய்து விட்டார்கள் நிமிடங்களை கணக்கிடுகிறேன் எப்போதும்
பிரிவென்பது வலிதான் என்பதால்,,,
_____

உன் சிரிப்பை விலைபேசுகிறேன் தூரிகையிடம்,,,
வாங்கிக் கொண்டு வண்ணக் கோலமிடுகிறது வானத்தில்,,,
_____

அடுத்த நிமிடம்
எனை நெருங்கும்போது மறக்காமல் கொடுத்துவிடு என் மனதை ,,,
_____

அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் அழத்தொடங்கி விட்டார்கள்,
வலுபெற்ற காதலின் வலியினால்,,,
_____

பேருந்தில் ஒரு புன்னகை நீ சிந்த
பூக்கள் புதிதாய் பிறக்கிறது
என்னைக் கடந்து செல்கிறது
அந்தக் காதல்,,,
_____

என் நிழலோடு நீயும் வருவதனால் நிழலெது நிஜமெது அறிய எனக்கு பிடிக்கவில்லை ,,,
_____

பட்டாம்பூச்சிகளிடம் உரையாடுகிறேன் உன்மீதான அன்பை அவைகளேனும் வெளிப்படுத்தாதா!
எனும் ஏக்கத்தில்,,,
______

சிகிச்சை பிரிவில் மருத்துவரின் அலோசனை
காதலை மருந்தாக்கு என்று,,,
______

தாயில்லாத குறையை தீர்த்து வைக்கிறாய் கல்லறையில் எனக்கான நட்பின் அடையாளமாய் நீ!
_____

சுவாசம் நின்று விடாமல் கடினப்பட்டு பாதுகாக்கிறேன்
நட்பை நிரூபிக்கும் முயற்சியில்
முதல் வெற்றி எனக்கு,,,
_____

பிழைப்புவாத பார்ப்பானியம்

சமீப காலமாக சமூகத்தின் மீது பார்ப்பானியம் சுமத்தும் குற்றங்களில் ஒன்று
"பார்ப்பனர்களை இச்சமூகம் கீழ்த்தரமாக பாவிக்கிறது" என்பதாக இருக்கையில்
எப்படி இது நடைமுறைபடுத்தப்படுகி­­­றது என்பதற்கான விளக்கங்களை தத்தம்
குமுறலாக எடுத்துரைக்கிறார்கள்­­­ எழுத்தாளர்கள் என்கிற போர்வையில்
இருக்கும் இந்துத்துவர்களான ஜெமோ, பத்ரி ஷேசாத்ரி, போன்றோர்கள் . அவர்கள்
முன்னெடுத்துச்செல்லு­­­ம் பார்ப்பானிய அணுகுமுறைகள் மிகவும்
அசாத்தியமானவை, மற்றும் அசத்தலானவையும் கூட, வெகுசன மக்களிடம்
பார்ப்பானியத்தின் மீது ஒருவித ,பாசத்தையும்,இரக்கத்தையும் தூண்டுவதன்
மூலம் பார்ப்பானியத்தையும் அதன் முதற்பொருளான இந்துத்துவத்தையும் எளிதில்
வென்றெடுக்கலாம் என்பதே அவ்வாறான எழுத்தாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
சக இந்து எழுத்தாளரான பெருமாள் முருகன் அவர்களின் " மாதொரு பாகன்"
நாவலுக்கெதிரான அடக்குமுறைகளைக் கையாண்ட அதே இந்துத்துவத்தை எதிர்க்கவும்
அதற்கான செயல்பாட்டினை முன்னெடுக்கவும் பார்ப்பானிய பற்றுகொண்ட
எழுத்தாளர்கள் முன்வராததற்கு மாதொரு பாகனால் தங்கள் பார்ப்பானியம்
சீர்குலைந்து விடுமென்கிற உண்மையும் மக்களுக்கு தங்களின் இந்துத்துவ
கட்டுக்கதைகளால் உறுவான கடவுளர்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்
என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்­­­. அதே வேளையில் அவர்களின்
மீதான கறையை முற்றிலுமாக வெளியில் தெரியாத வண்ணம் பத்திரப்படுத்தி
வைத்துக் கொண்டு பார்ப்பானியம் மட்டுமே மக்களின் மீதான கறையை துடைக்கும்
ஆகச்சிறந்த ஒன்றாக அதே மக்களை நம்பவும் வைத்து விடுகிறார்கள்.ஓரளவிற­­்கு
பார்ப்பானியத்திலிருந­­்து வெளிவரும் மக்கள் அதனை எதிர்ப்பதற்கான உண்மைக்
காரணங்களை வெளிப்படையாகவே பேசத்தொடங்கி அதன் மீதான விமரிசனங்களை
முன்வைக்கிறார்கள் எனும் உண்மை பார்ப்பானியத்தை அச்சப்பட
வைத்திருக்கிறதென்றுச­­­் சொன்னால் அது மிகையன்று, கைபர் போலன் கனவாய்கள்
இன்னும் திறந்தே இருக்கிறது ஆதிக்கர்களாகிய ஆரியர்களே எப்போது நீங்கள்
வெளியேறுவீர்கள் என்று வெளிப்படையாகவே கேட்கத்தொடங்கி விட்ட மக்கள்
பார்ப்பானியத்தின் முந்தையகால வரலாற்றை அறிந்தகொண்டுதான் அவ்வாறு
கேட்கிறார்கள் எனும் உண்மையும் பார்ப்பானியர்களை மிகவும் அச்சப்பட வைத்து
விட்டது
மேலும் பார்ப்பானியம் தங்களின் உழைப்பை செலுத்தி உயிர்பிழைக்க
விரும்பவில்லை அதற்கு மாறாக தங்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்களை உழைக்கச்
செய்து அதன் பலன்கள் முழுவதையும் அனுபவிப்பதை கண்டு மக்கள் வெகுண்டெழ
தொடங்கிவிட்டார்கள் . இதன் மூலம் பார்ப்பானியம் பயப்படத் தொடங்கிவிட்டதாக
அவ்விதமான எழுத்தாளர்கள் உணர்ந்துவிட்டதன் பலனாக பார்ப்பானியர்களும்
மூன்று சதவிகிதம் இருக்கும் சிறுபான்மை மக்களே என்று பரப்புரையும்
செய்யத் துணிந்து விட்டார்கள்.
"அந்த நாட்களில் கீழ்ச்சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளைகளில்
கல்கத்தாவின் சாலை ஒரத்தில் கையில் நீர் நிறைந்த குவளைகளுடன் வரிசையாக
நிற்பார்கள். அந்தப்பக்கம் ஒரு பிராமிணர் எப்போது வருவார் என்று ஆவலோடு
எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள் . ஏனெனில் அந்த பிராமிணர்களின் காலை
கழிவீய நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்றால்தான் பெற்றோர்க்ள் அதனை
சிறிதளவு உறிஞ்சி குடித்துவிட்டு உணவு உண்ண ஆரம்பிப்பார்கள். சர் .பி சி
ரே அதொநூ 17 பக்கம் 80
மேற்கோள்: "இட ஒதுக்கீடல்ல
மறு பங்கீடு" - ஆதவன் தீட்சண்யா 2008.
ஆரம்பகால அடிமைத்தனத்தின் உச்சம் நம்மை வெட்கித் தலைகுணிய வைக்கிறது .
ஆண்டாண்டு காலமாக பார்ப்பானியத்தின் காலைக்கழுவி குடிக்கும்
அடிமைச்சமூகம் இப்போதும் அப்படியே தொடர்ந்தாலும் தான்
அடிமைபட்டுகிடக்கிறோம­­­் என்கிற குற்றவுணர்ச்சி வெகுசனங்களிடம்
முற்போக்காக வந்துவிடுகின்றது. சாதியப் படிநிலைகளை விலக்கிக் கொண்டு
சமத்துவத்தை நிலைநாட்ட பார்ப்பானியம் என்றுமே முன்வந்ததில்லை,
அவ்வாறிருக்க அவர்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்று பொய்யுரை எங்கும்
சுற்றித்திரிவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது
பார்ப்பானியம்.
"மன்னர் ஒரு பெண்ணை தன்னுடைய மனைவியாக தேர்ந்தெடுத்ததும் பிராமிணர்களில்
மிகச் சிறந்தவனை, மிகவும் தகுதியானவனை அழைத்து தன்னுடைய மனைவியைக்
கன்னிக்கழிக்கும்படி கேட்கிறான். அதற்காக அவனுக்கு நூறு முதல் ஐநூறு
டுகாட் பணம் தருவதற்கு அரசன் கடமைபட்டிருக்கிறான் . (வர்த்தேமாவின்
சுற்றுப்பயணம்) . ஹக்லுயத் சமுதாயம் தொகுதி 1 பக் 141
மேற்கோள் : "இட ஒதுக்கீடல்ல
மறு பங்கீடு" - ஆதவன் தீட்சண்யா 2008.
தங்களை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ளும் பார்ப்பானியம் தன்
ஆதிக்கத்தினை ஆட்சியாளர்களிடமும் செலுத்தியிருக்கிறது.­­­ பழைய
நடைமுறைகளை பின்பற்றத் தயங்கும் ஆட்சியாளர்கள் புதிய பரிணாம யுக்திகளை
பார்ப்பானிய ஆதிக்கத்திடம் அப்படியே பெற்றுக்கொள்கிறார்கள­­­். முந்தைய
முறையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் நவீன காலத்திற்கு ஏற்றவாறு
மாறிக்கொள்கிறது அவ்வளவே, மற்றபடி எந்த கலாச்சாரத்தை காப்பதாக
பார்ப்பானியம் சொல்கிறதோ அதே கலாச்சாரத்தை முன்னின்று அழித்த பெருமை
அதற்கு உண்டு. முழுக்க முழுக்க ஆணாத்திக்கம் பெற்றுள்ள பார்ப்பானியம்
பெண்ணினத்தை பகடைக்காயாக உருட்டியிருப்பது தெளிவாகப்
புலப்படுகிறது.அதுவும­் ஆட்சியாளர்களின் துணையோடும் , அவர்களின்
சம்மதத்தோடும் அதோடல்லாமல் வருமானப் பெருக்கத்தோடும் பார்ப்பானியம்
அன்றைய காலத்தை தனது இந்துத்துவத்தால் கட்டிப்போட்டிருக்கிற­­­து.
பெண்ணினத்திற்கு தெய்வ வழிபாடு தந்த ஒரே மதமென்று பெருமையடிக்கும் அதே
பார்ப்பானியம்தான் பெண்ணடிமையை வளர்த்தெடுத்திருக்கி­­­றது. சொந்த
மண்ணில் கீழ்த்தர குடிமக்களாள் பார்ப்பானர்களை நடத்துகிறார்கள் எனப்
பொங்கும் இந்துத்துவ வாதிகள் இன்றுவரையில் தெருக்களில் ஓடும் சாக்கடையை
சுத்தம் செய்யவும், துப்புரவுப் பணியாளர்களாக தங்களை மாற்றிக்கொள்ளவும்,
மலம் அள்ளும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாராக இல்லையெனும்
பொழுது பொய் பரப்புரையை கையாள்வது அவதூறு குற்றமாகத்தானே இருக்க
முடியும்.பார்ப்பானியத்தின் வேஷம் வெளிவரத் தொடங்கிவிட்டது. விழிப்புடன்
சமூகம்,,,

Saturday, September 26, 2015

நான் தோற்றுப் போகிறேன்

ஏன் தோன்றியது இந்த சிந்தனை என்று அலசி ஆராயும் அளவுக்குச் செல்லவில்லை,
இருந்தும் ஏதோ ஒன்றை இழந்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும்
உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதுவும் இவ்வுள்ளுணர்வு என்
பிறந்த நாளிலா குத்திக் கிழிக்க வேண்டும் , ஆமாம் நான் தோற்றுப் போகிறேன்
இந்த சமூகத்தில்,இருபத்தெட­்டு ஆண்டுகளை எப்படி கடந்தேன் என்று என்
அன்னையிடம் கூட கேட்க கூச்சமாக இருக்கிறது. தாயாக இருக்கிறாளே தன்நலம்
கருதி சுயநலத்தோடு இச்சமூகத்தை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டால் அதை
விட வலி வேறென்ன இருக்கப்போகிறது. மவுனமாய் கடந்து போகும் வேடிக்கை
மனிதர்கள் என் கண் முன்னே அநீதிகளின் கூடாரங்களை அமைத்து அதில்
சாதிவெறியையும், மத வெறியையும் குடியிருக்கச் செய்துவிட்டு சமூகத்தில்
அந்தஸ்த்து மனிதர்களென்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு , நடைபோடுகையில்
நான் சிறுவண்டாகவே உணர்கிறேன் எனில் நான் தோற்றுப்போய்விட்டேன்­ என்பதில்
தெளிவு பிறக்கத்தான் செய்கிறது. என்ன செய்தேன் இச்சமூகத்திற்கு? இனி என்ன
செய்ய வேண்டும் இச்சமூகத்திற்கு? என்கிற தெளிவு யாரால் எனக்கு
உணர்த்தப்படுமென்று தேடியே தொலைத்து விட்டேன் என் தோல்வியை என்னால்
ஏற்றுக்கொள்ள முடிகிறது. கல்வியும், அக்கல்வியின் மூலமாக பெற்ற அறிவையும்
எவருக்கோ விற்றுவிட்டு இயந்திர மாணவர்களை இயக்கிக் கொண்டிருக்கும்
அரசிற்கு அது தேவையாக இருக்கிறது. எதுவென்று யாரும் கேட்காத அளவிற்கு
அவர்களுக்கே அது தெளிவாகத் தெரியும். அவர்களிடத்தில் நான் தோற்றுப்
போய்விட்டேன் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தினந்தினம் நடக்கும்
சா(தீய) வன்கொடுமைகளை சகித்துக் கொண்டே எவ்வளவு தூரம் நான் செல்ல
வேண்டும் என தீர்மானிக்கும் எந்த புத்தகமும் என்னிடத்தில் இல்லை,
இருப்பது வெறும் மார்க்ஸிய,லெனினிய,அம­்பேத்கரிய, பெரியாரியம் மட்டுமே ,
அனைத்தும் என்னிடத்தில் வலியுறுத்துவது "அடிமையை உடைத்தெறி" என்பதாகவே
இருக்கையில் எனக்கு அப்பால் வளர்ந்துக் கொண்டேச் செல்கிறதே இந்த
மதவெறியும்,சாதிவெறிய­ும் அப்படி இருக்கையில் நானெப்படி வெற்றி பெற்றவனாக
முடியும். இந்த சமூகத்தின் மீது அதீத பற்று வைத்துக்கொண்டு வாழ்ந்திட
இயலாத காலச்சூழலை உறுவாக்கித் தந்தவர்கள் இங்கே ஏகபோகமாக, சுகபோகமாக
வாழ்ந்திடுகையில் ஏன் நீ மட்டும் இப்படி சினுங்குகிறாய் என்று ஏதோ ஒரு
மூலையில் யாரோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என் நிழகலாகவும் அது
இருக்கலாம். என் மூளைக்குச் சென்று நீ மிருகமல்ல மனிதனென்று பதியவைத்த
படிப்பறிவால் பெற்ற பகுத்தறிவு பகலவன்கள் அந்நிழலில் மறைந்திருக்கலாம்,
நான் தோற்றுப்போகிறேன் என்பது பசுமரத்தாணி அல்ல பட்டமரத்தில்
அடிக்கப்பட்ட ஆணி , நிழலில் இருந்து வெளிச்சத்தை நோக்கி புறப்படத்
தயாகிறேன். என்னால் பகுத்தறிவு பகலவன்கள் விடுதலையாகலாம் என்கிற ஒரு
வாய்ப்பினை எனக்கு நானே உறுவாக்கிக் கொண்டதில் ஆத்ம திருப்தி. சாதியற்ற
சமூகம், மதவெறியற்ற மனிதம், படைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை
விட்டுக்கொடுப்பதாய் இல்லை, என் அடுத்த நகர்வுக்காக எதையும் இழக்கத்
துணிந்துவிட்டேன், இழக்காத ஒன்றினால் இழுத்துக் கட்டி ஊஞ்சலாடுவது
சுலபமான ஒன்றுதான், துணிவு மட்டுமே எனக்கு தாலாட்டாகும். இருந்தும் நான்
தோற்றுப்போகிறேன் எனும் எண்ணம் காற்றில் அலைகிறது. அலையட்டுமே!
தோல்வியில் தானே வெற்றிக்கான பல யுக்திகள் கண்டெடுக்கப்படுகிறது­.
தோல்விக்கும் இடமுண்டு என் மனதில், ஏனெனில் இந்தச் சமூகத்தை இன்னும்
படிக்கத்தூண்டுவதற்கு­ அது காரணமாக இருக்கின்ற ஒரே காரணத்தால் இன்னமும்
சொல்வேன் நான் தோற்றுப் போகிறேன் என்று,,, என்னில் இருந்து அடிமைத்தனம்
ஒழியத் தொடங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.எனக்குள்­
எப்போதும் அது ஒலித்துக்கொண்டே இருக்கும் " பிச்சை எடுப்பது கேவலமல்ல
அவ்வழியிலேனும் பகுத்தறிவு புகுத்தப்படுமேயானால்­" என்பதுதான் அது.
எதற்கும் துணிந்துவிட்டைன் ஏதோ ஒரு விதத்தில் என் போக்கை மாற்றிவிட
என்தாய் முயற்சி செய்யலாம், என் நலன் கருதி, ஒருவேளை நான் மரண வாசலை
முத்தமிட்டால் வருகை தரும் மனிதர்களின் வார்த்தைகளில் உதிக்கும்
வாழ்த்துக்களே என் தாய்க்கு அப்போது போதுமானதாக இருக்க வேண்டும்.
என்பதற்காக இப்போதே தயாராகிக் கொள்கிறேன். முடிந்தளவு முயற்சி செய்கிறேன்
." சாதி வெறி என்பது கலாச்சாரமல்ல அது ஒரு குற்றம்" என்பதையும் " மத வெறி
என்பது மனிதனை கொல்லத்துடிக்கும் மிருகம்" என்பதையும் உணர்த்திக் கொண்டே
இருப்பேன், நான் தோற்றுப் போகிறேன் என்கிற மையம் ஒருநாளேனும் என்னை
விடுவித்துக் கொள்ளும் வரையில் தொடரும் இந்த சமூகப் பயணம்.

Sunday, September 20, 2015

ஆள்காட்டி குதிரை

செவ்வக
பெட்டகத்தினுள் வெளிவராத
முத்துக்கள் போல

பூத்துக் குலுங்கும்
ஒரு பூவின் வாசம் மெய்சிலிர்க்க மேனிதனில் அவ்வாசம் ஊடுருவ

உலகம் மறந்து
உயிரை தொலைத்து நிற்கும் எதனிடத்திலும்
இருக்கிறதோர்
ஆன்மாவின் துடிப்பு

நிற்க வேண்டும் அதேயிடத்தில் என்கிறது மனம்

விடாமல் துரத்தும் அத்துணை கசப்புகளையும் அங்கேயே தேக்கிவிட
நிரம்பாத ஆசைக்கிணறுகள் அங்கே இருந்திருக்கக் கூடாதா!

அப்படியே இறக்கிவிட்டு
கிணற்றுத் தவளையிடம்
தொடாதே நீயும் மனிதனாகி மிருகமாவாய் எனும் எச்சரிக்கையினை ஏகபோகத்தில்
விடுக்க வேண்டுமென
துடிக்கும் மனதினில் உதிக்கிறது உயிர்வலி

பூக்களாவது சுதந்திரமாக பூக்கட்டும்

அடுத்தவர் சுதந்திரத்தை அழகாக பறிக்கும் ஆள்காட்டி குதிரைக்கு இங்கே என்ன வேலை

காட்டிக்கொடுத்தால்
கண்களுக்கு விருந்தாகும்
செல்வத்தை புறக்கணித்தால்

பூக்கும் மரத்தின் கழுத்தில் கோடாரியாவது பாயாமலிருக்கும்

உணர்ந்த தருணமது
உடனே நகர்ந்துவிட்டேன்
உயிரொன்று பிழைத்துக்கொண்ட
மனநிறைவில்,,,

Tuesday, September 08, 2015

மெல்லப் பேசுவோம் நாம்

வாய்ப்பேச்சில் ஓசை வேண்டாம்
வரும் பேச்சில் தடங்கல் வேண்டாம்

மௌனமாய் இருப்பது இரவுகளுக்கு
பிடிக்காதாம்
கொஞ்சிப் பேசு
கொஞ்சம் உரசிப்பேசு காதலின் மொழி
காதுகளுக்கு விருந்தாகும்

விலகிப் போகாதே
விழுந்து விடக்கூடாது உச்சரிப்புகள்
எதிரில் யாருமில்லை
பக்கத்தில் நீ மட்டுமே
இருந்தும் உரக்கப் பேசாதே உறங்கும் ஜோடிப் பறவைகளின் செவிகள் விழித்திருக்குமாம்

சில புதிரான தோற்றப் பொய்கள்
நம்மிடையே தங்கியிருக்கலாம்
விடைதேடும் ஆவலும் விளக்கேற்றும் நேர்த்தியும் நம் விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கலாம்

யாரையும் மிஞ்ச வேண்டாம்
மிச்சமிருக்கும்
பொழுதுகளையாவது
புன்னகையோடு
பேசிக்கழிக்கலாம்
உண்மைகளை துரத்தியபடியே

வாய்ப்பேசுதல் ஒருபுறமிருக்க
வாய்ப்புகள் நழுவி விடாதபடி
நம் விரல்களும்
மொழிபேசுதலை
கண்டு ரசித்திட வேண்டாமா அந்த
நிலவு

என் பக்கத்தில்
நீ அமர்ந்தால்
இரவில் கூட
பூமலரும்
அறிந்த மனதில்
ஆசையோடு சாய்ந்துக்கொள்கிறேன்

ஆகாயம் வெளிச்சம்
நீட்டுகிறது இந்த நொடிபொழுது
இரவிலும்

நம் உதடுகள் இனியும்
பேசாமலிருந்தால்
காதல் சுவடுகள்
மறைந்து போகலாம்
மறக்காத நினைவுகள்
நமக்கு
வேண்டுமல்லவா

எதை எதை எங்கே
பேசினோம் எதிர்காலக் கனவுகளை எங்கே
தீர்மானித்தோம்
என்பதை
முதுமையில் நம்முதடுகள்
அசைபோட அப்படியே இறந்தாலும்
அதற்காக கண்ணீர் விடும் காதலுக்கேனும்
நாம் பேசிட வேண்டும்
யாருக்கும் எந்த
இடைஞ்சலுமில்லாமல்

ஆகவே நாம் மெல்லப் பேசுவோம்
மென்மையாக அனுகுவோம்
மெய்யுலகம் உறங்கும்
அந்த இரவு வேளையிலும்,,,

Monday, September 07, 2015

காதலெனும் தேன்

எட்டும் தூரத்தில் இருந்தும்
எட்டிப் பறிக்கத் தயங்குகிறாள்

அவளின் பதற்றம் அவளைத்தவிர
அவனுக்கும் தெரிந்திருக்குமோ

திரும்பும் திசைகளெல்லாம் பறக்கும்
பட்டாம் பூச்சிகள்
தங்களுக்காக
சேகரித்த தேனை
காதல் மீது தெளித்துவிட்டு
தன் பசியை புதைத்துவிட

என்றும் பூக்களின் மடியில்
அன்பெனும் வார்த்தை தவழ்ந்து தவழ்ந்து
துள்ளியாடுவதை

தூரத்தில் நின்று
பார்க்க வேண்டுமா!
பயமெதற்கு
காதலென்பது
பிசாசுகளின் வாழ்விடமென்று

கட்டவிழ்த்து விட்டவர்களே
அச்சம் கொள்ளாமல்
வாழவில்லையா

வாழ்த்துதலை வாங்கி மனதில் பூட்டிய
அவள் மெல்லப் பேசுகிறாள்

மயக்கும் மன்னவனே
எனை நீ மணப்பாயோ
உடல் குறுகி நிற்க வைக்கும் தயக்கத்தை என்றோ உடைத்து விட்டாள் அவள்

காதலுக்காக
பட்டாம் பூச்சிகள் செய்த தியாகத்தால்
நிகழ்ந்திருக்காலாம்

பூக்களின் வாசத்தோடு பருகி விட்டாள்
அவள் அன்போடு கலந்த காதலெனும்
தேனை,,,

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...