Thursday, August 21, 2014

"கைநாட்டு"

நீங்கதான் எங்களை எல்லாரையும் படிக்க வச்சுட்டீங்க நாங்களும் படிச்சிட்டு
நல்ல உத்யோகத்தில தான் இருக்கோம் அப்புறம் ஏம்மா எங்கள அசிங்கப்படுத்துர,
நாங்க தான் கையெழுத்து போடவும் கத்துக்கொடுத்துட்டோம்
படிச்ச புள்ளைங்களோட அம்மானு சொல்ரதுக்கே வெட்கமா இருக்கும்மா எப்போ
பார்த்தாலும் யார் நீட்டினாலும் "கைநாட்டு" தானா? பேனாவ புடுச்சி அப்டி
ஸ்டைலா போட்ரது நல்லா இருக்கா அந்த மையை அப்படியே கட்டவிரல்ல அப்பி
அழுக்கா அங்கங்க பூசி அந்த மையை தலைல வேற தேச்சி போம்ம்மா அசிங்கமா
இருக்கு எப்போதாம்மா நீ திருந்த போற , உனக்கு மேல நைனாவும் இப்படித்தான்
கடிதாசிலேருந்து தாலுக்காபீஸ் வரைக்கும் "கைநாட்டே" வைக்குறாரு,
கேட்டவன்
கேட்பாரற்று கிடந்த அதுவும் அனாதையாகிபோன அரசு ஆஸ்பத்திரியில்
மூனாவதாக பிறந்தவன் மூத்தவனுக்கு முந்தி காலேஜுக்கு போனவன்,
பிரசவ வலி பொருத்து பிஞ்சு முகத்த பார்த்தவுடன் பட்ட அதே சிரிப்பில்
அழகாய் சொன்னாள் அம்மா!
அதுவொன்னுமில்லடா செல்லம் நீங்க எனக்கும் உங்கப்பாவுக்கும் கையெழுத்து
போட கத்துகொடுத்த மாதிரி உங்க ஆயாவுக்கும் தாத்தனுக்கும் அதுக்கும்மேல
பாட்டனுக்கும் நாங்க கத்துக்குடுக்குற அளவுக்கு பள்ளிக்கூடமும் இல்ல
இருந்த பள்ளிகூடத்திலும் அனுமதி இல்ல பால்வாடினு ஒன்னு இல்லவே இல்ல இப்ப
நீ படிச்சு போடுர கையெழுத்துக்கு பின்னாடி நானும் உங்கப்பனும் மட்டும்
காரணமில்ல நம்ம நாட்ல இதுக்குனே செத்தவனுகளாள தான் ஒன் அஞ்சு வெரலும்
கும்முட்டு பேனா புடிக்குது அத எப்பவுமே நீ மறக்க கூடாதுனு தான் இன்னக்கி
வரைக்கும் கத்துகொடுத்த கையெழுத்துல பெரும படாம நானும் உங்கப்பனும்
கைநாட்டே வைக்கரோம் அத நீயும் ஒணரனும்யா
இதுல யாரு திருந்தனும்னு சொல்லு நாம இதுலயெல்லம் கவுரவம் பாக்கலாமா போய்
பேனாவுல மையி இருக்கா பாருயா இல்லனா சொல்லு வாங்கிட்டுவந்துட்ரேன்
("கைநாட்டு" பற்றி மிகக்கேவலமாக அதை ஏதோ அசிங்க வார்த்தையாக ஆகாதவரை
திட்டுவதற்குத்தான் இன்று பலர் உபயோகிக்கின்றார்கள் அதையும்
அறிவுஜீவிகளாக காட்ட பகிர்ந்து கொள்கிறார்கள்
கைநாட்டு அவமானமல்ல பலகைகள் அடிமைக்கெதிராக அனுமதி கேட்டு அது எங்கள்
உரிமையென மேலோங்கியதால் தான் உங்கள் கைகள் "கையொப்பம்" இடுகின்றது .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...