Friday, December 18, 2015

சக்கரம்

வணக்கம் சொல்லிவிட்டு
அடுத்த நகர்வை
முன்வைக்கிறது
ஒரு சக்கரம்

அதன் சுழற்சிக்கு
அப்பால் சுழலாத
உலகத்தை
சூழ்ச்சி என்பார்கள்
சுட்டெரிக்கும்
சூரியனையும் சேர்த்து

எதன் மீதும் பாரத்தை
ஏற்றி சுவடுகளாக்காமல்
பாறைகளுக்கு
பஞ்சுமெத்தையாகிறது
அச்சக்கரம்

போகப் போக
முடிவற்ற
ஒரு பாதையில்
மூச்சிரைக்க ஓடி
முன்னேறியதில்
முகத்தில் பொலிவிழந்து
முந்தைய பயண
வரலாற்றை
அசைபோகிறது
அப்போதும்
அசைந்தாடிய படியே

நிரந்தர பொழுதென்று
எதுவுமற்று
எண்ணம் மட்டும்
மணல்வெளியில்
உழல உச்சத்தின்
பெருவிளக்காய்
வெகுண்டெழும்
கானல் நீரில்
பார்வையற்ற தடுமாற்றம்
சக்கரம் காலத்தை
சர்க்கரையாக்கி
சுவைக்கிறது

பார்க்காத
பள்ளங்களில்லை
பார்க்காத
மேடுகளில்லை
சந்தித்திடாத
வலிகளில்லை
கடக்காத தூரமில்லை
தேயாத
அச்சாணிகளுமில்லை
அனைத்தையும்
அதிவேகமாய்
முன்னோக்கி பாய்ந்ததில்
பின்னோக்கி
தள்ளிவிட்டு
தக்கவைத்துக்
கொள்கிறது
தன்வரலாற்று இருப்பை

பொக்கிஷம்தான்
பரப்பளவில்
மறுமலர்ச்சி கண்ட
பெருமை மிகு
சக்கரம் பொக்கிஷம்தான்
ஆனால் அதுவொன்றும்
பெருமைபேசவில்லை
தானொரு
வட்ட நிலவென்று

அதுவே ஆதி
வரலாற்றில்
அசைக்கமுடியாத
நம்பிக்கை சக்கரமாக
இன்னும்
சுற்றிக்கொண்டே
சூரியனை துணைக்கு
அழைக்கிறது
விளையாடும்
பருவத்தில் இன்னமும்
சக்கரம்,,,

Sunday, December 06, 2015

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை
பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .

அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,,,‪‬

*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.

*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.

*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்
முறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.

*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.

*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,
தாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.

*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி "The problem of the rupee-It's
orgin and it's solution."என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய
ரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.

*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.

*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.

*இந்துசட்ட மசோதா,பிற்படுத்தபட்டவர்களுக்குஇட ஒதுக்கீடு போன்றவற்றை
நிறைவேற்ற நேரு அரசாங்கம் ஒத்துழைக்காத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா
செய்தார்.பின்னர் நேரு அரசு இந்து சட்ட மசோதாவை மட்டும் நிறைவேற்றியது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 40 ஆண்டுகளுக்கு பிறகு வி.பி
சிங் அரசு நிறைவேற்றியது.

*The Buddha and his Dhamma(புத்தமும் தம்மமும்) என்ற நூலை எழுத 10
ஆண்டுகளில் சுமார் 1டன் புத்தகங்கள் ஆராய்ச்சி செய்தார்.

*கொலம்பியா பல்கலை கழகத்தில் Waiting for a visa என்ற பெயரில் அண்ணலின்
வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

*The Annihilation of cast என்ற தலைசிறந்த புத்தகத்தை எழுதியர்.
(இந்தியாவில் சாதிகள்-உருவாக்கம் ,இயக்கும் முறை என்ற அவரது ஆய்வு
கட்டுரை அடிப்படையாக கொண்டது).

*உலகத்திலே அதிக சிலைகள் இருப்பது அண்ணலுக்கு மட்டுமே.

*மகாத்மா என காந்தியை அழைக்காமல் வெறுமனே "காந்தி" என்றே அழைப்பார்
அம்பேத்கர்.

Sunday, November 29, 2015

இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS

இந்துத்துவ பார்ப்பானிய மதவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஷ்வ இந்து
பர்ஷித், சிவசேனா, இன்னும் பல இயக்கங்கள் மற்றும் கட்சிகளின்
பயங்கரவாதத்தை எதிர்க்கின்றபோது அதன் மையப்புள்ளியான பார்ப்பானியத்தை
முன்வைத்தே எதிர்க்கின்ற வேளையில் மதவாத ஆதர்வாளர்கள் பார்ப்பனர்களை
ஆதரிக்கும் விதமாக வாதம் புரிவதை முற்போக்காளர்கள் கண்டிருப்பார்கள்.
அவர்கள் பார்ப்பனர்க்கும் மேற்கண்ட இயக்கம் மற்றும் கட்சிகளுக்கும்
எவ்வித தொடர்புமில்லை, பார்ப்பனர்கள் எங்கேயும் நிர்வாக
பொறுப்புநிலைகளில் இல்லாதபோது இந்து இயக்கங்களை எதிர்க்கையில் ஏன்
பார்ப்பனர்களை உள்ளிழுக்கிறீர்கள், பார்ப்பானர் அல்லாதோரான இடைநிலை
சாதியாதிக்கர்களைத் தானே நீங்கள் எதிர்க்க வேண்டும். என்பது மதத்தீவிரவாத
ஆதரவாளர்களின் கருத்து வாதமாக இருக்கிறது. மதத்தீவிரவாதத்தை
எதிர்க்கின்றபோது இடைநிலை சாதியாதிக்கர்களின் எவ்வித செயலுக்கும்
ஆதிமூலமான பார்ப்பானியத்தையே சாடவேண்டியிருக்கிறது­. அவர்கள் தலித்திய
சாதி ஆதிக்கர்களாக இருந்தாலும் பார்ப்பானியத்தின் பிள்ளைகளாவே இருக்க
முடியும் என்பது எங்களின் வாதம். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் இன்
பயங்கரவாதத்தையும், பிராமணியம் அல்லது பார்ப்பானியத்தின் விளக்கத்தையும்
மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஐ.ஜி. S.M. முஷ்ரிப் மிக சுருக்கமாக
கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் என முதலிடத்தில்
இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்... எனவும், அதுவே மிகப் பெரிய பயங்கரவாத
இயக்கமெனவும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஐ.ஜி. S.M. முஷ்ரிப் அதிரடி
குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர்
பேசுகின்றபோது: நாட்டின் நிகழ்ந்த 13 பயங்கரவாத சம்பவங்களில்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளம் போன்ற இதர அமைப்புகளையும் சேர்த்து
மொத்தம் 17 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா இயக்கத்தினர்
மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த
ஒரு சந்தேகமும் இல்லை. ஹைதராபாத்தில், (2007) மெக்கா மஸ்ஜித் மசூதி
குண்டுவெடிப்பு,2007ஆ­ம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில்
குண்டுவெடிப்பு,2008 மலேகான் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களை
குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணிய
கட்டமைப்பைக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிட்டுச் சொல்வது அல்ல...
பிராமணியம் என்பது சித்தாந்தம்... அதாவது ஆதிக்கம் செலுத்துவதும்
ஒடுக்குவதும் பிராமணியத்தின் பிரதான அம்சம். சகிப்பின்மை என்பது
நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது ஏன் இதை பெரிதாக்குகின்றனர் எனத்
தெரியவில்லை? 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது
பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின்
மூளையாக உளவுத் துறை இருக்கிறது.
மக்கள் இயக்கமாக ஒன்றுதிரண்டால்தான் கர்கரே மரணத்தின் உண்மையை கொண்டுவர
முடியும். இவ்வாறு முஷ்ரிப் கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும்
கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தோமானால் இந்தியாவின்
இறையாண்மைக்கும்,மதசா­ர்ப்பின்மைக்கும் , சமத்துவத்திற்கும் மிகப்பெரும்
சவாலாய் ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவ பார்ப்பானிய பயங்கவாதம்
முளைத்திருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆர்.எஸ் எஸ் ஆனது
வெளித்தோற்றத்திற்கு தங்களை நியாயமான போராட்டங்களில் பங்கெடுப்பதாக
மக்களை ஏமாற்றி அவர்களின் ரத்தங்களை குடிக்கும் அட்டைப் புழுக்களாக
இருக்கின்றது. சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல்களை முன்னெடுத்தாலும்
அவர்கள் தங்களை இந்துக்களுக்காக பாடுபடுபவர்கள் எனச் சொல்லி இந்துக்களை
பலியாடுகளாக மாற்றுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. மத ரீதியிலான
எந்தவித இயக்கங்களும் தங்களின் மதக்கொள்கைக்கு அப்பால் செல்லவில்லை என
பொய்யுரைக்கின்றது. எந்த மதமும் எந்த இந்துக்கடவுளும் மற்றவனை
துன்பறுத்து என்று வெளிப்படையாக சொன்னதில்லை என்பதை ஆர் . எஸ் . எஸ்
போன்ற மத பயங்கரவாத இயக்கங்களுக்கு தெரிந்த ஒன்று என்றாலும் அதை ஏற்கவா
போகிறார்கள். இந்தியா இந்துக்கள் நாடென்று இவர்கள் பிரகடனப்படுத்த
துடிப்பது உண்மையில் ஹிட்டலின் நாஜிஸத்துவத்தையே கொண்டிருக்கிறது.
வரலாற்றில் ஹிட்லரின் கருப்பு பக்கங்களை எஸ்.எஸ் எஸ் நிச்சயம் வாசிக்க
வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கே தெளிவு படுத்திவிட
வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள ஆர்.எஸ்.எஸ்
அலுவலகத்தை சோதனையிட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அவர்களிடமிருந்த
மனித அழிவுக்கு உத்வேகமான பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றி அதன்
இயக்கத்தார்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் இங்கே
குறிப்பிட வேண்டும். ஆக இந்தியாவை பயங்கரவாத இந்துத்துவ மத சக்திகள்
மிகப்பலமாக ஆக்கிரமித்துள்ளார்கள­் என்பது தெளிவாக வெளிச்சத்திற்கு
வந்திருக்கிறது.

நடிகர்களை "கூத்தாடிகள்" என இழிவுபடுத்துவது சரிதானா?

திரையுலக கலைத்துறையினரை
விமர்சிக்கவும்,அவர்களை கீழ்த்தரமாக
வசைபாடவும் பெரும்பாலான
தமிழ்ச்சமூக மக்களால்
பயன்படுத்தப்படும் வார்த்தை
"கூத்தாடிகள்" என்பதாக இருக்கிறது.
எழுத்துலக விமர்கர்களும் , அறிவுலக
முற்போக்காளர்களும் இதற்கு
விதிவிலக்கல்ல,அவர்களும்
திரையுலக விமர்சனத்திற்கு
"கூத்தாடிகள்" என்றே
பயன்படுத்துகின்றனர். இது பொதுவாக
இழிவுபடுத்தவே
பயன்படுத்தப்படுகிறது என்பதை
அனைவரும் அறிவார்கள்,
கலைத்துறை சார்ந்தோரை
"கூத்தாடிகள்" என இழிபடுத்துவது
சரியா? என்கிற கேள்வி எழுகிறது,
இதற்கு எவ்வித தமிழ் ஆராய்ச்சிக்கும்
செல்ல விரும்பவில்லை, அதன்
நடையிலேயே "கூத்தாடிகள்" எனும்
கலையை நேரடியாகவே
இழிபடுத்துகிறார்கள் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தெளிவாகிறது. இது சரியான
நடவடிக்கை தானா? சரியான புரிதல்
தானா? எனும் கேள்விப்பதம்தான்
தற்போதெழும் அவசியத் தேவையாக
இருக்கிறது.
நம் தாய்த்தமிழில் இயல் ,இசை,
நாடகம் எனும் முத்தமிழ் போற்றியே
தமிழை வளர்த்திருக்கின்றோம். சங்க
இலக்கியத்தை தாயாக இருந்து
வளர்த்தவைகளாக "முத்தமிழ்"
இருந்திருக்கிறது. இம்மூன்றும் ஒரு
சேர ஒரே அரங்கில் பண்டைய
காலத்திலேயே ஏற்றியிருக்கிறார்கள்.
பண்டைய காலத்தில் சிறப்புற்று
விளங்கிய "கூத்தாடிகள்" எனும் சொல்
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான
இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது. "ஊர்
ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டம்" என்பது அப்போதுதான்
பரவலாக்கப்பட்டிருக்கி
றது.முதன்முதலாக "கூத்தாடிகள்"
எனும் சொல் இதிலிருந்தே
இழிபடுத்தப்பட்டிருக்கக் கூடும், ஓர்
ஊரானது இரண்டாக பிரிந்து இரண்டு
இனக்குழுக்களும் ஒருவரையொருவர்
தாக்கிக்கொண்டால் அவர்களை
சமாதானம் செய்து சமரச உடன்பாடு
செய்ய வேண்டிய தன்
கடமையிலிருந்து "கூத்தாடிகள்"
நழுவி தங்கள் வியாபாரப்
பணவரவையே நோக்கமாக
கொண்டிருக்கிறார்கள் என்பதாக
மேற்கண்ட வழக்க சொலவடை
இருப்பதாக நமக்குத் தெரிகிறது. இதன்
மூலம் கூத்தாடிகள் முதன்முதலாக
இழிபடுத்தப்படுகிறார்கள் என்பதாக
உணர்த்தப்படுகிறது. இந்தச் சொலவடை
பண்டையக்காலங்களில் இருந்ததாக
தெரியவில்லை இரண்டாம்
தலைமுறைகள் உறுவாக்கம் பெற்ற
பின்னர்தான் வழக்கத்திற்கு
வந்திருக்கிறது அதாவது மேடை
நாடகங்கள் புகழுறும் காலத்தில்
வந்திருக்கிறது. மேடை நாடகங்கள்
அடுத்தக்கட்ட நகர்வான சினிமா எனும்
திரைத்துறையில் கால்பதிக்கும்
காலத்தில் யாராலும் மறக்கமுடியாத
மனதில் அழியாத புகழுடையோர்களாக
தியாகராஜ பாகவதர் ,
சிவாஜிகணேசன்,எம் ஜி ஆர்,
போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கலைத்துரையினர்கள் மத்தியில்
பல்வேறு போட்டிகள் நிலவிய
காரணத்தினால் மக்கள் அவர்களுக்கு
பிடித்தமான நடிகர்களை
விட்டுக்கொடுக்காத விவாதங்களில்
வெகு தீவிரமாக மேற்கண்ட சொலவடை
பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது .
ஆனாலும் அதனை வெளிப்படையாக
விமர்சனம் என்கிற கட்டத்துக்குள்
மக்கள் எடுத்துச் செல்லவில்லை
காரணம் மேடை நாடகங்கள் மற்றும்
சினிமா கலைத்துறை மூலம்
வெகுசன மக்களுக்கு அதிதீவிரமான
சமூக மாற்ற விழிப்புணர்வு
கொள்கைகளை பரப்பினார்கள். மேலும்
சமூகத்தில் ஏற்பட்டுள்ள
பிளவுகளையும்,சமூக
அவலங்களையும் கண்டித்து பல்வேறு
மேடை நாடகங்களையும்,திரைப்
படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்
கூத்தாடிகள் எனும்
கலைத்துறையினர். குலக்கல்வி
முறையை கண்டித்து மேடை
நாடகங்களை அரங்கேற்றயதற்காக
அன்றைய ராஜாஜி அரசு நடிகவேள் எம்
ஆர் ராதா அவர்களை கைது செய்து
சிறையடைத்து சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றியதாக
வரலாறு, தியாராஜ பாகவதர் அப்போதே
விதவை மறுமணம் குறித்தான
விழிப்புணர்வினை
ஏற்படுத்தியிருக்கிறார், சுதந்திர
போராட்டத் தியாகிகளை நம்
கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்
சிவாஜிகணேசன், என அன்றை
சினிமாவின் சமூக அக்கரைப் பணிகள்
நீண்டுக்கொண்டே செல்கின்றன,
அப்போதும் கூத்தாடிகள் என
இழிபடுத்தப்பட்டிருந்தாலும் அதன்
தன்மை அவ்வளவாக
பாதிப்பாகவில்லை , ஆனால் இன்றைய
காலக்கட்டத்தில் மிகத்தீவிரமாக
"கூத்தாடிகள்" இழிபடுத்தப்பட்டு
வருகிறது. கிட்டத்தட்ட அதன்
எல்லையைத் தாண்டி அடுத்தவரை
திட்டுவதற்கு கூட ஆங்காங்கே
பயன்படுத்தப்படுகிறது . உண்மையில்
நடிப்புத் தொழிலை செய்பவர்களின்
குறியீட்டு கலைச் சொல்லான
"கூத்தாடிகள்" என்பதை
இழிபடுத்துவது நாகரீகமானதா என்று
சிந்திக்க வேண்டும். அன்றைய
நடிப்புத் தொழில் புரிந்தோரின் சமூக
அக்கரையினை துளிகூட இன்றைய
நடிப்புத் தொழிலாளர்கள் பெற்றிருக்கா
விட்டாலும் அவர்களின் தொழிலை
கேவலப்படுத்தி "கூத்தாடிகள்" என
குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது.
ஏனெனில் இங்கே தொழிலின்
அடிப்படையினான பல்வேறு
கலைச்சொற்களை
கேவலப்படுத்துவதை நாம் அன்றாடம்
பார்க்கின்றோம்.இது சரியான
அணுகுமுறைதானா என்று பரிசீலனை
செய்ய கடமைபட்டுள்ளோம்.
அதுமட்டுமில்லாது அக்கால
கலைத்துறை நடிகர்களை போல சமூக
அக்கரையில் தங்களை அர்பணிக்க
இன்றைய கலைத்துறை நடிகர்கள்
முன்வர வேண்டும். ஒரு பொழுதுபோக்கு
அம்சமாக அல்லாமல் கொஞ்சமேனும்
சமூக அக்கரை விழிப்புணர்வு கொண்ட
காட்சிகளை கலைத்துறையினர்
முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமே அவர்களின் கலைச்
சொல்லான "கூத்தாடிகள்" என்பதை
இழிவுபடுத்துவதிலிருந்து தடுக்கும்.
சினிமா ரசிகர்கள் உண்மையில்
திரையில் காண்பிக்கப்படும்
செயல்களையே நிஜத்தில் நடிகர்களும்
கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து
வெளியேறி நடிப்பு மட்டுமே அவர்கள்
தொழில் அவர்கள் நடிக்கிறார்கள்
நிஜமென்பது வேறென்று உணர்ந்து
அதீதி பற்றின் காரணமாக எழும்
கோபத்திலிருந்து வெளியேறினால்
நன்றாக இருக்கும். "பயணம்" என்றோரு
படத்தில் கடத்தப்பட்ட ஒரு
விமானத்தில் இக்காட்சியை
அருமையாக வடிவமைத்திருப்பார்கள்.
ஒருவன் தன் தொழிலை
இழிபடுத்துவதை எந்த விதத்திலும்
அனுமதிக்காத பொழுது அந்த ஒருவன்
மற்ற தொழிலை இழிவுபடுத்துவது
தவறென்று உணர மறுப்பதன்
விளைவே இன்று "கூத்தாடிகள்"
எனும் கலைச்சொல்
இழிவுபடுத்தப்படுவதற்கான
காரணமாய் அமைகின்றது.
கூத்தாடிகள் எனும் சினிமா நடிகர்கள்
மீது நமக்கு பல்வேறு விமர்சனங்கள்
இருந்தாலும் கலைக்கான
கலைச்சொல்லை இழிவுபடுத்த
இழுப்பதனால் சினிமா மட்டுமல்லாது
அதையும் தாண்டிய பல்வேறு
கூத்தாடிகள் தொழிலாளர்களையும்
சேர்த்தே நாம் இழிவுபடுத்துகிறோம்
என்பதை உணர்ந்து விமர்சனம்
தவிர்ப்பது நமக்கான நல்லதொரு
பாதையாக அமைகின்றது. இதில் நாம்
கழைக்கூத்தாடிகளையும் சேர்த்தே
இழிபடுத்துகிறோம் என்றுணர
வேண்டும்.

Friday, November 27, 2015

ஊடறுக்கும் ஓர் இரவில்

மெல்ல மெல்ல
ஆடைகளை அவிழ்த்து
என் மேனிதனை தழுவி
காற்றின் மென்மையாக
படர்கிறான் அவனொரு
கொடிமலர் போல

மோகம் துளிர்த்து
மனதை தளர்த்தி
மெய்சிலிர்த்து
எனனுள்ளே
அனலாய் ஏறும்
காம இச்சைதனை
உச்சி முகர்ந்தேன்
உச்சந்தலையில்
ஓங்கி விழந்தன
அதிர்வலைகள்

இன்பக்கடலில்
உணவு தேடும்
உணர்சியின்
மறுவேகத்தடையாக
ஏதோவொன்று
அவ்வப்போது
அலைபாயும்
சங்கடத்தில்
இருந்தும் நான்
பாய்விரிப்பில்
அப்படியே
அரைநிர்வாணமாய்

சங்கடச்செய்தி
விஷ்வரூபமெடுக்க
திணருகிறேன்

என்னை உள்ளே
தள்ளிவிட்டு
விடுக்கென
வெகுண்டெழுகிறது
வேட்டையாடும்
பருந்தொன்று

பட்டென
தன் அலகால்
என்னையது கொத்திவிட
அதிர்ந்து எழுகிறேன்
அத்தனையும் கனவாக
தூக்கம் தொலைத்து
என் துக்கம்
தொண்டையில்

உச்ச இன்பம்
உருகுலைந்து போனதில்
உருவத்து நிழல்களை
எல்லாம் வெறிகொண்டு
திட்டுகின்றேன்
திருட்டுத் தனமாக
என் கனவுக்குள்
நுழைந்து வேட்டையாட
வந்த பருந்தையும்
சேர்த்து

மீண்டும் படுத்தாலும்
பாய் விரிப்பில்
புரண்டாலும்
என் மீட்புக்காரன்
வர மறுக்கிறான்

காமம் கருவிழி எனில்
காதல்
கண்னிமையன்றோ

ஊடறுக்கும் ஓர் இரவில்
ஊடலுக்கும் கூடலுக்கும்
அவன் மெய்ப்பொருள்
காண்கிறான்
என்னுள் அவன்
எதிரே நிற்கிறான்

என் மனசாட்சியை
எப்படி படித்தது
இந்த கடலைகள்

என் கனவினில்
முளைத்த காமக்
களியாட்டங்களின்
உடலசைவுகளையும்
உள்ளத்து
அதிர்வுகளையும்
கடற்கரை மணலிடத்தில்
அப்படியே செய்கிறதே
எனும்
அதிசயத்தில் விரிந்து
கிடகிறதென் கண்கள்

அவனும் நானும்
வியப்பில் காதல்
குறியீடுகளாய்
மீண்டும் மலர்ந்தோம்
நான் கண்ட கனவை
அவனும்
அனுபவித்திருப்பான்
உள்மனம் சொல்லியது
உண்மை அதுவே

நான் அவளென்று
மறந்தேன்
நான் நானாகவே
இருந்தேன்
இருவரும்
புணர்ந்து விட்டோம்
கனவல்லாத
ஒர் நிஜத்தில்

சிலந்தியின் வலையில்
சிக்கி மூலையில்
முடங்கியிருக்கும்
விரிக்கப்படாத
பாய்கள் எங்கள்
விளையாட்டை
எட்டிப்பார்த்து
பொறாமையில்
வாயடைத்து
எரிச்சலில்
ஊமையாகி
கருப்புச் சாயம்
பூசிக்கொள்கிறது
முகத்திலும்
மனத்திலும்
காமம் கூடாது காதலில்
எனும் புகுத்தப்பட்ட கற்பிதங்களால்,,,

Wednesday, November 25, 2015

அம்மா உத்தரவின் பேரில் மழை? ஆட்சியர்களும் அடிமைகளாக,,,

தமிழக ஆளும் அதிமுக ஜெயா அரசின் சர்வாதிகார அடிமைத்தன ஆட்சிக்கு
அடையாளமாய் விளங்குவது அக்கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற
உறுப்பினர்களும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளான நாங்களும்தான் என்கிறது அரசு
உயர் மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள். அரசு
அதிகாரிகள் தாங்கள் என்ன பேசினாலும் ஜெயாவின் புகழுக்கும் அவரின் ஆதிக்க
மனோபாவத்திற்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் மிகத் தெளிவாக?
கனங்கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறார­்கள். ஏதேனும் புது
வார்த்தைகளா? என்று எதிர்பார்க்கத் தேவையில்லை, எப்பொழுதும் போல
அக்கட்சியின் தொண்டர்கள் வரையில் உபயோகப்படுத்தும் அதே "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என்கிற தங்கத்தாரகையின் தாரக மந்திரம்தான் அது,,,
ஆனால் அத்தாரக மந்திரத்தை உபயோகித்த மாவட்ட ஆட்சியர் தற்போது பெரும்
சிக்கலில் மாட்டி அவதிப்படுகிறார். படித்த படிப்பை மறந்து, பெற்ற அறிவை
துறந்து, வகிக்கும் பதவியை பறக்கவிட்டு, எதற்கெடுத்தாலும் "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என உபயோகித்தால் அவஸ்தைகள் தானாகவே தேடிவருமென்பதற்கு
நல்லதொரு உதாரணமாய் விளங்கிறார் அந்த! மாவட்ட ஆட்சியர். மக்களுக்கு
முழுநேர பணிசெய்யும் உன்னதப் பதவியையும் ஆளும் அதிமுக ஜெ அரசிற்கு அடகு
வைத்துவிட்ட இவ்வகை அரசு அதிகாரிகளின் அடிமை வாழ்க்கையை விட, ஏழைகள் ஒன்று இழிவாக வாழ்ந்துவிட வில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்­
மாவட்ட ஆட்சியர் சம்பத். இயற்கையின் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட
வடகிழக்கு பருவநிலையின் காரணமாக பொழிந்த மழையின் தாக்கம் குறித்து சேலம்
மாவட்ட நிலவரங்களை குறிப்பிடுகையில் அம்மாவட்ட ஆட்சியர் சம்பத் IAS,
அவர்கள் சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது,
''முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு
பெய்துள்ளது" என்றார். இதனை ஆராய்ந்தால் இயற்கைக்கு உத்தரவு போடும்?
அளவிற்கு மாநிலத்தை ஆளும் ஜெயாவிற்கு ஏகாதிபத்திய அதிகாரம்
இருந்திருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. மழையே ! உடனே
தமிழகம் இறங்கி வா! என இயற்கைக்கே உத்தரவு போட்ட ஜெயா அவர்கள்
மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானபோத­ு "நான் மூன்று
நாட்களுக்குத்தான் உத்தரவு போட்டேன் இந்த மழை ஒரே நாளில் பெய்துவிட்டது
ஆகவே மழையின் மீது அவதூறு வழக்கு போடப்போகிறேன் என்று இதுவரையில் சட்ட
நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆட்சியர் சம்பத் இக்கேள்வியை
புறக்கணித்தாலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி
என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு
அனுப்பியிருக்கிறார்.­ அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன்.
"முதல்வர் உத்தரவின் படி" மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள்.­­ அதற்கான
முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு,
கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்று அவர் படித்த
படிப்பும்,பெற்ற அறிவும், வகிக்கும் பதிவியும் எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கி­றது. முற்றாக அதிமுக ஜெவின் அடிமைகளாகிப் போன
தமிழகத்தையும்,அதன் அமைச்சர்களையும், அதன் அரசு உயர் ஆட்சியாளர்களையும்
இனி காப்பாற்றவோ, கரைசேர்க்கவோ முடியாது என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.

திருவாங்கூர் சமஸ்த்தான இந்துத்துவ தலைவரின் ஆணாதிக்க கருத்து,,,

நாம் பார்க்கும் சராசரி
நடவடிக்கைகளில் ஒன்று டாஸ்மாக
கடைகளில் எப்போதும் அலைமோதும்
கூட்டங்களை பார்த்தும்
பார்க்காதவாறே அல்லது அதனை
சகித்துக்கொண்டே கடந்து போவோம்,
ஆனால் கார்த்திகை மாதம் பிறந்து
விட்டலே ஒரு ஆத்ம திருப்தி நமக்குள்
முளைக்கத் தொடங்கும், அதற்கு
காரணம் "அப்பாடா ஓரளவிற்கு யாரும்
குடிச்சிட்டு வண்டி ஓட்ட மாட்டங்க"
"இப்பதா நிம்மதியா இருக்கு
குடிச்சிட்டு அவ்வளவா யாரும்
வம்பிழுக்கல" இப்படியான
சிந்தனைகளும் அதிலொரு
மனநிம்மதியே நமக்கு வரும். இந்த மன
நிம்மதியானது "ஐய்யப்பன்" என்று
இந்துக்களால் கடவுளாக்கப்பட்ட
கற்சிலைக்கு வந்தால்தான்
ஆச்சர்யமே,,, அன்றிரவு முழுக்கு மது
அருந்தி மதியிழந்து மயங்கிய
நிலையில் களியாட்டம் போட்டுவிட்டு
அதிகாலையில் திடீரென சபரி மலை
ஐய்யப்பனுக்கு மாலை
போட்டுக்கொண்டு உத்தரமாய்
வேஷமிடும் ஒழுக்கமற்றவர்களை
நிச்சயமாக இச்சமூகம் நிறைய
கண்டிருக்கும்.மற்ற மாதங்களில் வராத
ஒழுக்கம் அவர்களுக்கு கார்த்திகை
மாத 40 நாட்களில்
வந்துவிடுகிறது,,,அதுமட்டுமில்லாது
திடீர் சாமியார்களான அக்
குடிகாரர்களை மற்றவர்களும் "சாமி"
என்றே அழைக்க வேண்டுமாம்.
அந்தளவான பக்தி மயக்கம் ஏன்
மதுபாட்டிலை தொடும் போது
ஏற்படவில்லை என்று
கேட்டுவிடாதீர்கள், நம்மவர்கள்
"பூமாதேவி" என்று அதே
இந்துக்களால் அழைக்கப்படும் பெண்
கடவுளான பூமிக்கும் ஒரு சொட்டு
குடிக்கக் கொடுத்து மார்டன் நாகரீகமாக
"சியர்ஸ்" அடித்துக் கொள்கிறார்கள்.
பாவம் பூமித்தாய் அதுவும் குடிக்கு
அடிமையாகி போதையில்
தன்னையும்,தன்னை சுற்றியுள்ள
கோள்கலையும் சுற்றிக்கொண்டிருக்கி
றது. இப்படியான சபரி மலை ஐய்யப்ப
பக்தர்களின் ஒழுக்கச்
சீர்கேடுகளையும் ஆதரித்தே
வந்திருக்கிறோம், அதைவிடவும் அந்த
40 நாள் விரதமும் தற்போது 48
மணிநேர விரதமாகி காலையில் மாலை
போட்டு மறுநாள் மாலையில் சபரி
மலைக்கு கிளம்பி மாலையை
கழட்டிப்போட்டவுடனே மதுபாட்டில்
கையில் ஏந்துபவர்களின் சீர்கெட்ட
ஒழுக்க நெறியை என்றேனும் கேள்வி
கேட்டிருக்கிறோமா? அப்படிக் கேள்வி
கேட்கத்தான் இந்த இந்துமதச் சமூகம்
சம்மதிக்குமா? இவற்றையெல்லாம்
ஒதுக்கி விட்டு உற்றுப் பார்த்தால்
ஆங்காங்கே "கோவிலுக்கு செல்லுதல்"
என்கிற பகுதியை எடுத்து விவாதிக்க
தொடங்கியிருக்கிறார்கள். நல்ல
முயற்சிதானே எதையும்
விவாதத்திற்கு எடுத்தாளுதல் சமூக
வளர்ச்சிக்கு உந்துதலாகலாம் எனும்
பார்வையில் தூசித்தான் விழுகிறது.
எந்த மதமானாலும் தங்களின்
மதப்பற்றின்பால் கொண்ட உணர்ச்சியின்
காரணமாக "கோவிலுக்கு
செல்லுதலை" நியாயப்படுத்தியும்
கூடாது என்போரை
குற்றவாளிகளாகவும் சித்தரிக்கிறது.
"கோவிலுக்குச் செல்லுதல் கூடாது"
என்போரை குற்றவாளியாக்கியவர்கள்
குடித்துவிட்டு பிறகு கோவிலுக்குச்
சென்று வந்தபின் உடனே மீண்டும்
குடிக்க ஆரம்பிக்கும் உத்தம சாமி?
களை எதிர்க்க முன்வர மறுக்கிறார்கள்
அதைவிடவும் எல்லா மதத்திலும்
இருக்கும் "யாரெல்லாம் கோவிலுக்குள்
நுழையலாம்" என்கிற திணிக்கப்பட்ட
ஒரு நியாயத்தை? தெளிவுபடுத்த
வேண்டும். அதிமுக்கியமாக
பெண்களை குறிவைத்து தாக்கும்
"கோவிலுக்கு போகத் தடை"
என்பதற்கான பிற்போக்கு
அடிமைத்தனத்துக்கு
மதவாதியாளர்களிடையே
மண்டிக்கிடப்பது என்னவோ
பழமைவாதமாகத்தான் இருக்கிறது.
பெண்கள் சபரிமலை கோவிலுக்குள்
எப்போது அனுமதிக்கப்படுவார்கள்
என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட
கேள்விக்கு பதிலளித்த திருவாங்கூர்
தேவஸ்தான தலைவர் பிறையார்
கோபாலகிருஷ்ணன், " பெண்கள்
தூய்மையாக தான் இருக்கிறார்களா
என உறுதி செய்வதற்கான பரிசோதனை
செய்யும் கருவி ஏதேனும்
கண்டுபிடித்தால்தான் அது சாத்தியம்
என்றார். அப்படியெனில் சபரி
மலைக்குப் போகும் ஆண்களெல்லாம்
துய்மையானவர்கள் என்று
கண்டுபிடிக்க இந்த இந்துத்துவ
பார்ப்பானியர்கள் ஏதேனும்
பரிசோதனைக் கருவி
வைத்திருக்கிறார்களா? அவ்வாறு
கண்டுபிடிக்கப்பட்ட கருவியின்
கண்டுபிடிப்பாளருக்கும் ஏன் விழா
எடுத்துக் கொண்டாடி
அக்கண்டுபிடிப்பை பொதுவில்
வைக்கவில்லை? பெரும்
ஊழல்வாதிகளில் தொடங்கி சிறுதொழில்
சுரண்டல் கயவர்கள் முதற்கொண்டும்,
பெண்களைப் போகப் பொருளாக,ஒரு
இயந்திரமாக பயன்படுத்திவிட்டு
தூக்கியெறியும் "விபச்சாரன்"களும் ,
குடிக்கும்,சூதாட்டத்திற்கும்
அடிமையாகிப்போன அனேக ஆண்களும்
சபரி மலைக்கு மாலைப் போட்டுக்
கொண்டு தங்களை அந்த ஒரு
மாதத்திற்கு மட்டும்
தூய்மையானவர்களாக
காட்டிக்கொள்ளும் ஆணாதிக்க
பேர்வழிகளை இன்னமும் இவர்களால்
தடுக்கமுடிவில்லை, இவர்கள்
தடைகள் போடுகிறார்கள்,
பெண்தூய்மை பற்றிப் பேசுகிறார்கள்
என்றால் ஆதிக்க மனநிலையின்
உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதே
தெளிவாகத் தெரிகிறது. பெண்களின்
பிறப்பில் இயற்கையாக
அமைந்திருக்கும் "மாதவிடாய்" போக்கு
தூய்மையற்றதாகவும்,
ஒழுக்கமற்றதாகவும் தீர்மாணிக்க
ஆணாதித்திற்கு திறந்தத்
தன்மையிலான உரிமை
இருக்கிறதெனில் , ஆண்களுக்கும்
அவ்வாறு அமையுமேயானல் இந்த
மதப்பற்றாளர்கள் எதை வைத்து
தீர்மானிப்பார்கள் என்பதை பொதுவில்
வைத்தேயாக வேண்டும்.
மாதவிடாயை காரணங்காட்டி பெண்கள்
சபரி மலை கோவிலுக்குள்
நுழைவதற்குத் தடைவிதிக்கும்
அதேநேரத்தில் ஆண்களிடம் காணாமல்
போய்விட்ட ஒழுக்க நெறிகளை
முன்வைத்து தடைவிதித்தால் சபரி
மலை ஐய்யப்ப கோவிலின் வருமானம்
மிகப்பெரிய அளவில் பாதிப்படையும்
என்பது மட்டும் உறுதி. இதனை
கருத்தில் கொண்டே பெண்களின்
தூய்மைத் தன்மையை கேள்வி
கேட்கும் ஆணாதிக்கர்கள் தங்களின்
தூய்மைத்தன்மை குறித்து
வாய்திறந்து கூட பேசுவதில்லை.
கோவிலுக்குச் செல்லுதலை அவரவர்
விருப்பமெனவும் , நாத்திகர்கள்
இதற்குள் மூக்கை நுழைக்க
வேண்டாம் எனவும் கேட்கும்
மதப்பற்றாளர்களும் மாதவிடாய்
ஒழுக்கமற்றது, என
ஏற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படி
இல்லையெனில் மீண்டும் ஒரு
சப்பைக்கட்டு ஐய்யப்பன் என்பவன்
கண்ணிகழியாதவனென்று,
அதற்கென்ன வந்தது உங்கள் கடவுள்
உத்தமனெனில் கோவில் கருவறைக்குள்
நுழையும் பெண்களின் அங்கங்களை
திருட்டத்தனமாக பார்க்கிறானா என்ன,,,
காஞ்சி கோவில் தேவஸ்தானத்தில்
பெண்களை மிரட்டி காமலீலை செய்து
அதை வீடியோ எடுத்து
சிக்கிக்கொண்டவனின்
ஒழுக்கத்தையும்,தூய்மையையும்
என்றேனும் கேள்வி கேட்காமலும்,
அவனின் பிராமினத்தன்மைமை
இழக்கச் செய்யாத முகபோலித்தனத்தை
கொண்டிருக்கும் பார்ப்பானிய புத்திதான்
பெண்களின் மாதவிடாயை
தூய்மையற்றது என்கிறது,
பெண்களின் பிறப்புருப்பில் அதுவும்
புதிய கண்டுபிடிப்புகளைச் சொருகத்
துடிக்கிறது. ஆணாதிக்கத்தின்
பிடியிலும் அதே ஆணாதிக்க புத்தி
கொண்டு மதக் கொள்கை பிடியிலும்
காலங்காலமாக அடிமைபட்டிருக்கும்
பெண்கள் மீதான ஒருதலைப்பட்ச
தாக்கதலை நிகழ்த்திக்கொண்டிருக்கும்
பிறையார் கோபாலக்கிருஷ்ணன் போன்ற
பார்ப்பன அதிமேதாவிகளை கண்டிக்க
வேண்டிய கடமை பெண்களுக்கு
மட்டுமல்லாது ஆண்களுக்கும்
சேர்ந்தே இருக்கிறது. மதப்போர்வையில்
இவர்கள் செய்யும் அயோக்கியத்தனம்
மற்றும் தீமிர் பேச்சுக்களில் ஒன்று
மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது
பெண்களும் ஆணாதிக்கத்தை
ஆதரிக்கவே செய்கிறார்கள். அதனால்
இயற்கையாக அமையும் மாதவிடாய்
தன்மை இல்லாமல் போய்விடுமா
என்ன? மாதவிடாய் காலங்களில்
பெண்களும் படும்
கஷ்டங்களையும்,வேதனைக
ளையும்,வலிகளையும்,அவ
ஸ்தைகளையும் கடவுள் வேண்டாம்
ஆணாதிக்கம் ஒருமுறை
அனுபவித்தாலே அத்தனை
யுகங்களையும் மரணத்
தூண்டுதலாக்கி மடிந்துபோவார்கள்
என்பதை ஆணாதிக்கத்தாலே மறுக்க
முடியாது. அப்படியிருந்தும்
தூய்மையற்றவர்கள் பெண்கள் என
மாதவிடாயை காரணம் காட்டும்
ஆணாதிக்க மனோபாவத்தை கழட்டி
தூரே எறிய முன்வருவதில்லை.
காரணம் பெண்கள் காலம் முழுக்க
ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க
வேண்டுமென்று அவர்கள்
நினைக்கிறார்கள். அதனை
நிறைவேற்றவும் செய்து
விடுகிறார்கள்.பார்ப்பானியல் அதன்
இலக்கை இப்படியே தொடர்ந்து
எடுத்துச் செல்கிறது.

Tuesday, November 24, 2015

விகடன் மீது வழக்கு தமிழக முதல்வர் அதிரடி

தமிழத்தின் முன்னணி பத்திரிக்கையான விகடன் முழுமையாக வலதுசாரிய ஈடுபாடு
கொண்டிருந்தாலும் , அதன் சமூக அக்கரை கொண்ட கட்டுரைகளும்,கருத்து­க்களும்
பாராட்டுதலுக்குரியதா­கவே இருக்கும். பல்வேறு தரப்பினர்களின்
வாசிப்புகளுக்கு தேர்ந்த சுவாரஸ்யமான செய்திகளை வெளியிடுவதை கடமையாக
கொண்டிருக்கிறது விகடன் , அந்த வகையில் ஆளும் அதிமுக ஜெயா அரசின்,
அமைச்சர்கள் மீதான அலசல் அறிக்கையின் சிறப்புக் கட்டுரையாக, முதல்வர்
ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, ''என்ன செய்தார் ஜெயலலிதா?"
என்ற தலைப்பில் நவம்பர் 25 தேதியிட்ட இதழில் வெளியிட்டது. இதில் அதிமுக
அரசின் செயலற்ற மெத்தனப்போக்கினையும்­, அடிமையாகவே வாழ்ந்து
கொண்டிருக்கும் அமைச்சர்களை பற்றியும், பல்வேறு ஊழல்கள் குறித்தும்,
நான்கரை ஆண்டுகாலத்தில் நடந்த சமூக அவலங்களையும் வெளிச்சமிட்டுக்
காட்டியிருந்தது.
அது முதல் விகடன் பத்திரிக்கையை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் வரையில்
எதிர்ப்பு வலுத்த நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை
செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்தவிகடன் பத்திரிக்கை மீதும் அதன் ஆசிரியர்,
மற்றும் வெளியிட்டாளர் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த
வழக்கை விகடன் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும். என்றும் வேண்டுமென்றே
அதிமுக தங்களின் (விகடன்) பேஸ்புக் கணக்கினை முடக்கிவிட்டதென்றும்­
மேலும் எத்தகைய இடையூறுகள் வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்
என்றும் விகடன் தனது இணையதள பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
பத்திரிக்கைகள் மீதான இவ்வகையான அடக்குமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் உண்மையை உரக்கச் சொன்னால் உடனே வழக்கு போடுவது என்பது ஆளும்
முதலாளித்துவ அதிமுக அரசிற்கு வழக்கமான ஒன்றாகவே இருக்கின்ற வேளையில்
மக்கள் தங்களின் எதிர்ப்பு வினையினை காட்டியே ஆகவேண்டியிருக்கிறது.­
இன்னும் ஆறு மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பின்னடைவை
சந்திக்க வாய்ப்பிருப்பதாகவே இவ்வகையான அடக்குமுறை நடவடிக்கைகள்
நமக்குணர்த்துகிறது.

தலித் பெண் (கர்ப்பிணி) மீது தாக்குதல், பார்ப்பானியத்தின் கோவில் நுழைவுத் தடைகள் உடைபடுமா?

ஒருங்கிணைந்த சமூகத்தின் ஒற்றுமை பிரதிபிம்பம் என்பது கூடிவாழ்தலும்,
கூட்டு முயற்சிக்கு ஒத்துழைத்தலுமேயாகும்­ . அதுவே சமூகச் சீரமைப்பிற்கான
வழியாக இருக்கிறது. ஆனால் இந்தியத்தில் அவ்வாறான கூடிவாழ்தலுக்கும்,
கூட்டுமுயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பது நடப்பு நிகழ்கால
சான்றாக விளங்குகிறது.
எத்தனையோ யுகங்கள் கடந்தபின்னரும் தொட்டால் தீட்டு, தொழுதால் தீட்டு,
என்று தலித்திய சிறுபான்மை மக்கள் மீது இந்துத்துவ பார்பானியம்
தொடுக்கும் அடிமைமுறை சங்கிலித் தொடராவாகவே நீண்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருந்து வந்துவிடும் இங்கே சமத்துவம். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு
, ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட தலித்துகளின் வாழ்வியல் துயரங்களை
விளக்கினால் நிச்சயமாக பார்ப்பானியம் நிர்வாணமாய் நடுத்தெருவில்
நிற்கும். அந்த அளவிற்கு தலித்துகள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகள் அளவு
கடந்து ஓர் எல்லையில்லாப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதற்கும்
ஓர் அளவுத் தீர்மானத்தை முன்வைக்கும் பல்வேறு விதமான முற்போக்குகாளர்கள்
தலித்துகள் மீதான தீண்டாமைகளுக்கு எவ்வித அளவு வைக்கப்படவேண்டுமென்றே­
தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். எங்கும் தீண்டாமை , எதிலும்
தீண்டாமை என்றால் அவர்களால் என்ன செய்துவிட முடியும். குறைந்தபட்சம்
தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்களின் கருத்துக்களையும்
அவர்கள்தம் எழுத்துக்களையும் வெகுசன மக்களிடையே எடுத்துச் செல்ல கடுமையாக
உழைத்தாலும் காலத்தின் கொடுமைகள் தலித்தின விரோதப்போக்கினை
ஆதிக்கர்களிடமிருந்து­ மீட்டெடுக்கவே முடியவில்லை, இந்தியத்தில் தலித்தின
மக்கள் மீதான தீண்டாமை 3000 வகைகளைக் கொண்டுள்ளது இவைகள் வெளிப்படையாக
அறிந்த தீண்டாமைகள் மட்டுமே,,
இதில் நவீனத் தீண்டாமைகள் இடம்பெறவில்லை, இத்தீண்டாமை வகைகளில் "கோவில்
நுழைவுத் தடை" பரவலாக்கப்பட்டிருக்கிறது . "கோவில் நுழைவுத் தடை" எனும்
தீண்டாமைக்கு நேரடியாகவே பாதிக்கப்பட்டும் அதை எதிர்த்து புரட்சிப்
பிழம்பாய் வெகுண்டெழுந்து வெற்றி கண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை
இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் , மகாராஷ்டிர மண்ணில் அம்பேத்கரும்
தென்னிந்திய தமிழ்த் திராவிட மண்ணில் வைக்கம் போராட்ட பெரியாரும் கோவில்
நுழைவு போராட்டத்தில் அளப்பறிய தன் கடமைகளை செய்தவர்களாக
இருந்திருக்கிறார்கள்­, இருந்தும் தலித்துகள் மீதான காழ்ப்புணர்சியின்
காரணமாக ஆதிக்க இந்துத்துவர்கள் கோவில்களில் அனுமதிப்பதில்லை, தொடர்ந்து
பின்பற்றப்படும் இத்தீண்டாமைக்கு எதிரான குரல்கள் தலித்துகளைப் போலவே
நசுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட
வேண்டியதாயிருக்கிறது­. "தன்னை விடவும் தன் இனத்தை சேர்ந்த ஒரு தலித்தை
விடவும் ஒரு சாதி இந்துவை உயர்வாக மதிக்க தலித் ஒருவருக்கு
கற்றுத்தரபட்டிருக்கி­றது என்கிறார் -அம்பேத்கர் , அதன்படியே தானொரு
ஆதிக்கச்சாதியாளன் ஆகவே தன்னுடைய அடிமைத்தனத்திற்கெல்ல­ாம் நீ அடிபணிய
வேண்டும், அப்படி இல்லையெனில் நீ மண்ணில் மரணத்தைத் தழுவ நேரிடும் என்பதே
ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியத்தின் மிரட்டலாக இருக்கிறது.
அம்மிரட்டலுக்கு பயந்த தலித்தினம் ஒருவிதத்தில் மீண்டெழுந்தாலும் அவர்களை
அடக்கியாளுவதில் கொஞ்சமும் சளைத்துபோகவில்லை ஆதிக்க இந்துத்துவம்.
அதன்படியே தலித்துகள் கோவிலுக்குள் நுழைவதை தடைசெய்வது காலங்காலமாக
இந்தியத்தில் எழுதப்படாத சட்டமாகவே தொடர்ந்து பின்பற்றப்படுகிறது, சென்ற
மாதம் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட ஓர் தலித் முதியவரை அடித்து அதே
இடத்தில் எரித்து கொன்றிருக்கும் ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியம் அதனைத்
தொடர்ந்து,,, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (22-11-2015) உத்தரகாண்ட்
மாநிலம் டேராடூன் மாவட்டம் கபேலா கிராமத்தில் குகர்ஷி மகராஜ் கோவிலில்
நுழைய முற்பட்டதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணையும்
(கர்ப்பிணி) அவரது கணவன், மாமனார் ஆகியோரை அங்கிருக்கும் ஆதிக்கச்
சாதிவெறி இந்துத்துவர்கள் மூவரையும் தடுத்ததுடன் அல்லாமல் சம்மந்தப்பட்ட
பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­்.
அதன் பின்னர் கட்டப்
பஞ்சாயத்தின் மூலம் மூன்று பேருக்கும் தலா ரூ.501 அபராதமும்
விதித்திருக்கிறார்கள­். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தை போல் இந்துக்களின்
எழுதப்படாத தலித் விரோத சட்டத்தின் படி குகர்ஷி மகராஜ் கோவிலுக்குள்
நுழையவோ வெளியில் நின்று வணங்கவோ தலித் பிரிவினருக்கு அனுமதி மறுத்து
அக்கிராமத்து இந்து ஆதிக்கர்கள் தடை விதித்திருக்கிறார்கள­். அத்தடையினை
எதிர்த்து வெகுண்டெழுந்த கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவர் மற்றும்
மாமனரையும் தண்டித்திருக்கிறது ஆதிக்கச் சாதியம், தகவலறிந்த காவல்துறை
கண்துடைப்புக்காக மூன்றுபேரை மட்டும் கைது செய்திருக்கிறது. ஆதிக்கம்
அதன் அடிமைபடுத்தும் வெறித்தனத்திலிருந்து­ இன்றளவும் தம்மை
மாற்றிக்கொள்ளவில்லை என்பதை இங்கே உணர்த்தப்படுகிறது. மேலும் ஒரு
தகவலுக்காக புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு
ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research -
NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய
சர்வேயில் "நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்" எனும்
அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கையில் உண்மையில் ஆதிக்க சாதிவெறியைக்
கண்டு அச்சப்படவே முடிகிறது.
அம்பேத்கர் அன்று சொன்ன "இந்துக்கள் தலித்துகளை மிருகங்களை விடக் கேவலமாக
நடத்துகிறார்கள்" என்பதை இன்றளவும் கண்கூடாக பார்க்கமுடிகிறதெனில்­ எங்கே
பிறந்து விடும் இங்கே சமத்துவம்? மீண்டும் இங்கே உரக்கச் சொல்லப்படுவது
ஒன்றே "தலித்தின விடுதலை இல்லாமல் இந்தியத்தில் சமத்துவத்திற்கு
வழியில்லை"

துப்புரவுத் தொழிலாளிகள் என்றால் கேவலமானவர்களா?

வீட்டின் அத்யாவசியத் தேவைகளை வாங்குவதற்காக அன்று கடைத்தெருவுக்கு
சென்றிருந்தேன், வழக்கம்போல மழைத் தூறல் விடாமல் போட்டுக்கொண்டே
இருந்தது. ஒருவழியாக அனைத்தையும் வாங்கியெடுத்துக் கொண்டு என் இருசக்கர
வாகனத்தை பறக்க விட்டேன் (மெதுவாகத்தான் 40 தாண்டாமல் பார்த்துக்கொள்வது
வழக்கம்,பழைய வாகனம் என்பதால் விரட்டினாலும் ஓரடி எடுத்து வைக்காது)
வழியில் எதையோ வாங்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன், என்ன
அதுவென்று பாதிதூரம் கடந்த பின்னர் நினைவுக்கு வர,,, அருகிலேயே
கிடைகக்கூடுமென்று கடைகளை தேடினேன். மெழுவர்த்திதான் அது,,,
மழையால் தொடர் மின்சார துண்டிப்பினால் ஏற்படும் இருளை தவிர்க்க அதுவே
போதும். ஒரு மளிகைக் கடை கண்ணுக்குத் தென்பட அருகில் சென்றேன், ஏற்கனவே
பொருட்களை வாங்கும் இரண்டு வாடிக்கையாளர்கள் அங்கே கடை உரிமையாளரிடம்
சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்கள்,கடை­ உரிமையாளர் மூவருமே
ஒரே வயதுக்காரர்கள் போல தோற்றத்தில்,,, மூவரின் வயதும் கிட்டத்தட்ட
நாற்பதை தாண்டியிருக்குமென உள் அனுமானம் முடிவு செய்யது. மெழுகுவர்த்தி
வாங்கிக் கொண்டு நகர்ந்து போக முற்படுகையில் திடீரென பெருமழை வந்ததால்
அங்கேயே இருக்க வேண்டிய அவசியமாகிவிட, மழையை உற்றுப்பார்த்துக்கொண்டே
நின்றிருந்தேன். அச்சமயத்தில் அந்தப் பெருமழையிலும் ஆட்டோ ஒன்றில்
ஒலிப்பொருக்கி அலறிக்கொண்டு மெதுவாக ஊர்ந்துக்கொண்டிருக்க­ , கவனம் அதன்
மீது சென்றது " மரண அறிவிப்பு " தகவலை பரப்பிக்கொண்டிருந்தத­ு
ஆட்டோ,,, இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கிறார்,அவரின் தொழில், ரத்த
உறவுகள்,மற்ற உறவினர்களையும் கூறிவிட்டு பின்னர் அவர் இன்ன தேதிக்கு,
இன்ன மணிக்கு அகால மரணமடைந்துவிட்டார் எனவும் இறுதி அடக்கம் இன்ன
இடத்தில் நடைபெறும் எனவும் அவ்வறிவிப்பு செய்யப்பட்டது. இதன் நோக்கம்
விடுபட்ட உறவுகள் மற்றும் தெரிந்தவர்களுக்கு சரியான முறையில் மரணச்செய்தி
கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும். இறந்துபோன பெண் "துப்புரவு"
பணியாளரென்று ஒலிப்பெருக்கி கூறிவிட்டு ஆட்டோவும் நகர்ந்து போனது .
அதுவரையில் வேறு எதையோ பேசிக்கொண்டிருந்த மூவருக்கும் இம்மரணச்செய்தி
காதில் விழவே,,, அதுபற்றிய பேச்சுக்களை பேச ஆரம்பித்தார்கள். எடுத்த
எடுப்பிலேயே வீசிவிட்டார்கள் வார்த்தைகளை,,,
பாருய்ய இப்பல்லாம்
" கார்ப்பரேஷன்ல குப்ப அல்றது செத்தாக்கூட ஆட்டோல அனோன்ஸ்ட்மென்ட்
பண்ராங்க " ஆட்டோல அனோன்ஸ்மெண்ட் பணறதுக்கிருந்த மரியாதையே போச்சி!
என்றார் ஒருவர். அவரின் வார்த்தை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து
போனேன். கொஞ்சமும் தாமதிக்காமல் "சார் ஒரு நிமிஷம் தப்பா நெனைக்காதீங்க
,ஸ்டேட்டஸோட வாழ்ரவங்க டெத்த மட்டுந்தான் ஆட்டோல அனோன்ஸ்மெண்ட்
செய்யுனும்னு ரூல்ஸ் ஏதும் இல்ல , அதுவுமில்லாம சாவு விஷயத்த ஆட்டோல
சொல்ரது அவங்கவங்க இஷ்டம் , இதுல மரியாத எங்க போய்டப்போவுது, ஒருநாள்
அந்த கார்ப்பரேஷன் காரங்க வரலனா ஒங்க வீடோட சேர்த்து இந்த டவுனும்
நாறிபோய்டும் மனசுல வச்சுக்கங்க,,, என்று கடிந்துக்கொண்டு அங்கே இருக்க
மனதில்லாமல் மழையிலும் வண்டியை எடுக்க ஆரம்பித்தேன். கிளம்பும் சமயத்தில்
திரும்பிப்பார்த்தேன்­ மளிகை உரிமையாளர் என்னை காட்டி அவர்கள்
இருவரிடமும் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் வழக்கமாக செல்லும்
பாதையென்பதால் என்னைப் பற்றி ஓரளவிற்கு அறிந்த விபரங்களை கடை உரிமையாளர்
பகிர்ந்து கொள்கிறார் , என நினைத்துக் கொண்டு வீடடைந்தேன்.
உண்மையில் இந்தச் சமூகம் துப்பரவுத் தொழிலாளர்கள் மீது மிகக் கேவலமான
பார்வையையே கொண்டிருக்கிறது என்பது தெளிவு. அதற்கு முதற்காரணம்
துப்புரவுப் பணியாளர்கள் தலித்துகளாக இருக்கிறார்கள். மலம்
அள்ளுதல்,குப்பை அள்ளுதல் , கழிவுகளை அப்புறப்படுத்துதல் என்பவனவற்றை
"இழிதொழிலாக" இச்சமூகம் கட்டமைத்திருக்கிறது.­ உடல் சிலிர்க்கும், உடல்
உபாதைகள் வரவழைக்கும் அல்லது திடீர் குமட்டல் வரவழைக்கும் இவ்வகையான
தொழில்களை துணிந்து செய்பவர்கள் மீது கொஞ்சமும் பரிதாபப்படாமல் ,
அவர்களையும் குமட்டல் வரவழைக்கும் கழிவுகளைப் போல பார்க்கும்
மனோபாவத்திலிருந்து மனிதர்கள் முதலில் விடுபட வேண்டும். துப்புரவுப்
பணியாளர்களும் நம்மைப் போலவே சக மனிதர்கள், அவர்களை தொடுவதும் தொட்டு
அணைப்பதும் தீட்டு ஆகாது என்கிற மனநிலைக்கு என்று வருகிறார்களோ அன்றே
அங்கேயொரு சமத்துவம் முளைவிடத் தொடங்கும் என்பதை அனைவரும் நன்குணர
வேண்டியதாய் இருக்கிறது. துப்புரவுத் தொழிலாளிகள் என்போர் சகல
வசதிகளையும் தான் பெறுவதற்காக ஒன்றும் உழைக்கவில்லை, தங்களின் வயிற்றுப்
பிழைப்புக்கா ஓர் அன்னாடங்காச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.­
மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்காக மிகப்பெருஞ் சவாலை அவர்கள்
சந்திக்கிறார்கள் இருந்தும் அவர்களால் தேவைகளை பூர்த்துசெய்துக் கொள்ள
முடியவில்லை, அதீத உழைப்பு, அடிமட்ட கூலி வருமானம், உடலில் தொற்றும்
நோய்கள், என பெரிதும் அவதியுறும் அடிமட்ட தொழிலாளர் வர்க்கங்களாக
இருக்கிறார்கள். இதுவரையில் சுயமாக அவர்களுக்கென்று ஒரு ஓட்டு வீடுகூட
இருந்ததில்லை அனைத்து துப்பரவு கூலித்தொழிலாளிகளும் குடிசைகளிலும்,
தெருவோரங்களிலும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவ்வாறு
இருக்கையில் சக மனிதர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது
கரினங்காட்டக்கூடத் தேவையில்லை குறைந்தபட்சம் அவர்களையும்,அவர்கள்
செய்யும் தொழிலையும் இழிவுபடுத்தாமல் இருப்பதே போதுமானதாக இருக்கிறது.
இங்கே மனிதர்களை மதிக்கக்கூடிய மனித மனங்களே அவசியம் தேவை என்பதை
அனைவரும் உணர வேண்டும்.

Monday, November 23, 2015

அம்பேத்கரின் புத்தமத உறுதிமொழி ஏற்புரை,,,

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1956 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 இல் புத்த
மார்க்கத்தில் தன்னை இணைந்த பின் 22 உறுதிமொழி ஏற்பு சூளுரைகளை
பிரகடனப்படுத்தினார்.

அவை வருமாறு:

1. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத்
தொழுது தொட்டு வழிபடவும் மாட்டேன்.

2. ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு
வழிபடவும் மாட்டேன்.

3. கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங்களிடமும் பெண்
தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு
வழிபடவும் மாட்டேன்.

4. கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

5. மகான் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்று நான் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.

6. நான் 'சிரார்த்தம்' செய்ய மாட்டேன். 'பிண்டதானமும்' தரமாட்டேன்.

7. புத்தரின் சித்தாந்தங்களுக்கும் போதனைகளுக்கும் மாறான முறையில்
எவ்வகையிலும் செயல்படமாட்டேன்.

8. பிராமணர்களைக் கொண்டு எந்த சமயச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்.

9. மனித குலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்.

11. புத்தர் போதித்த எண்வழி மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

12. புத்தர் வகுத்துத் தந்த 'பத்து பரமிதாக்களை' நான் பின்பற்றுவேன்.

13. அனைத்து ஜீவராசிகளிடமும் பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொள்வேன்.
அவற்றை அன்போடு பேணி வளர்ப்பேன்.

14. நான் திருடமாட்டேன்.

15. நான் பொய் சொல்லமாட்டேன்.

16. சிற்றின்ப பாவங்களை செய்ய மாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.

18. பிரத்னியா (விவேகம்) சீல் (சீலம்) காருண்யா (கருணை) ஆகிய மூன்று
புத்தமதக் கோட்பாடுகளுக்கு இணங்க என் வாழ்க்கையை நடத்த நான் முயல்வேன்.

19. மனித குலத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் பாதகம் விளைவிக்கும்,
மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்த்து, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தும்
எனது பழைய இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை இப்பொழுது தழுவுகிறேன்.

20. புத்த தம்மன் சத்தம்மம் என்று உறுதியாக நம்புகிறேன்.

21. நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறேன்.

22. புத்தரின் போதனைகளின்படி இனி நடப்பதென இப்பொழுது முதல் உறுதி மேற்கொள்கிறேன்.

இந்த உறுதிமொழிகள் புத்த
ஏற்பு மாநாட்டில் அம்பேத்கரால் பிரகடனப்படுத்தப்பட்டது.

பேசும் இதயம் 2

காலத்து
இடைவெளியில்
கருவேலங்காடு
முளைத்திருந்தது
பயனற்ற என்
கடுங்கோபமும்
விறகாகும்
என் மனமும்,,,
__________

என் மனச் சிறையை
குடைந்து
கொண்டிருக்கிறேன்
எப்போது
வேண்டுமானாலும்
வெளியே வரலாம்
நானொரு
சுதந்திரப் பறவையாக,,,
__________

எதுவும்
எமக்கானதில்லை
என்றபின்
எழுந்தாடுகிறது
என் மௌனம்,,,
__________

இதழில்
முத்தம்
பதிக்கையில்
இதயம்
கவிதை
எழுதுகிறது
காதல் வயப்படும்
கண் சொக்கியே
நிரந்தரமாய்,,,
__________

பசிக்கிறது
தட்டில் ஈரம்
ஒட்டவேயில்லை
வயிற்றில்,,,
__________

சுழன்று
சுழன்று
வேர்களை
பறிக்கும் புயல்காற்றுக்கு
ஆத்மார்த்தமாய்
அரைநிர்வாண
பரிசு
-அகோரங்கள்
__________

என் தேனீர்
கோப்பைகளை வெறித்து
பார்க்கும் ஈக்களே
அதில்
பாலுமில்லை
சர்க்கரையுமில்லை
வெறும் ஏமாற்றமே விஞ்சியிருக்கும்
உங்களுக்கு,,,
__________

சுற்றமெல்லாம்
சீற்றத்தில்
தவறை நானே
புரிந்தேன்
சுயமாய் வாழவே
இயற்கை அன்னையின்
பிள்ளைகளை
கொன்றேன்,,,
__________

காசுகள்
குளிக்கும்
நதி
அளந்து
போடுகிறார்கள்
லாரிகளில்
ஆற்று மணலை,,,
__________

கிழக்கு வாசல்
அழகான கோலம்
வெள்ளைப்
பாதசாரிகள்,,,
__________

திகட்டவில்லையாம்
தேன்
அவள் குரல் போன்று
இருப்பதாலும்!
இனிப்பதாலும்!
__________

நிசப்த
அலைகளின்
நிர்வாணம்
தேடியும்
தேகச்சூடோடும்
அலைகிறதென்
ஆன்மா
இயற்கையின்
பின்னாலே,,,

__________***_______­___

Sunday, November 22, 2015

நடிகைகளின் விபச்சார ஈடுபாடும், முத்தப்போராட்ட முக்கிய குற்றவாளியும்

முற்போக்கு என்றாலும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பதும்
பிற்போக்கு என்றும் தளவளையத்திற்குள் வந்துவிடுகிறது. அந்த வகையில் கடந்த
(2014) ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்திய
ஊடககங்களாலும் , முற்போக்காளர்களாலும்­­ பெரிதும் கவரப்பட்ட ஓர்
போராட்டம்தான் "கிஸ் ஆஃப் லவ்" எனும் முத்தப் போராட்டம்.
சென்னைப்பெருநகரத்து உயர்படிப்பாளர்களான IIT மாணவர்கள் இந்த முத்தப்
போராட்டத்தால் தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்தார்கள்­­ போலவே
தொடங்கப்பட்ட கேரளத்தில் அதன் தாக்கம் பரவலாக்கப்பட்ட நிலையில் , ஏன்
எதற்கு இந்தப் போராட்டம் , இதன் பின்புல அமைப்பாளர்கள் யார்? இந்துத்துவ
சங்பரிவார
அமைப்பை எதிர்க்க கையாளப்பட்ட போராட்டமெனில் எந்த வகையில் அது
இந்துத்துவத்தை எதிர்க்கிறது, என்கிற எவ்வித முன்யோசனை முயற்சிகளையும்
மேற்க்கொள்ளாமல் சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு ஆதரவு பதிவுகள்
இட்டு இந்திய அளவிற்கு "முத்தப் போராட்டத்தினை எடுத்துச் சென்றார்கள்"
இது இந்துத்துவ பார்ப்பானியத்தின் அடாவடிச் செயல்களுக்களுக்கான அல்லது
போலி கலாச்சாரத்திற்கான எதிர்ப்பு வகை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால­­ும்
எதிர்ப்புக்கு முந்தைய அல்லது பிந்தைய இயக்க வகையினர் யாரென்பதை மறந்தும்
அறிய முற்படாமல் விட்டதன் விளைவுகளுக்காக இன்று முத்தப்போராட்ட
ஆதரிப்பாளர்கள் அவமானப்பட்டு உதட்டை கடித்துக்கொள்வார்கள்­­ என்பது
நிச்சயம். கேரளாவில் சமீபத்தில் சங்பரிவார அமைப்புகளை கண்டித்து பொது
இடங்களில் கட்டிப்பிடித்து முத்தமிடும் போராட்டம் நடத்திய கிஸ் ஆஃப் லவ்
என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் "ராகுல் பசுபாலன்" என்பவனும் அவரது
மனைவியான கேரள மாடல் ரஷ்மி ராயரும் விபசார தொழிலில் ஈடுபட்டதாக கேரள
காவல்துறை கைது செய்திருக்கிறார்கள்.­­
இவர்களோடு மொத்தம் எட்டு பேர், ஆன்லைனில் விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பசுபாலன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்கையில் பல
அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறான்­­. அவன் கூறுகையில்,,,
ஏழு வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றிருந்தேன். அப்போது
அங்கு ரஷ்மியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். திருமணம்
செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தோம்.
அப்போது இருவரும் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட முடிவு செய்தோம்.
ஆன்லைன் மூலமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு
இருந்தது. அதனால் கொச்சிக்கு சென்று இன்னும் விரிவாக இந்த தொழிலை செய்ய
நினைத்தோம்.
இந்தத் தொழிலில் மாதம் ரூ. 20 லட்சம் வரை வருமானம் கிடைத்தது" என்று
சொல்லுகிறான். மேலும் அவன் கூறுகையில்,,, திரைத்துறையில் புகழ் பெற்ற
நடிகைகள் பலரை வைத்து தான் விபசாரம் செய்ததாகவும். குறிப்பிடுகிறான்.
காவல்துறை வாக்குமூலத்தில் "எங்களுக்கு புகழ் பெற்ற பல நடிகைகளின்
அறிமுகம் உண்டு. அவர்களும் எங்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மலையாளத்தில் பிரபலமாக உள்ள நடிகைகள் பலரையும் நாங்கள் தொழிலில்
ஈடுபடுத்தியுள்ளோம். நடிகையுடன் ஒரு இரவைக் கழிக்க 2.25 லட்சம் ரூபாய்
கட்டணம் வசூலித்தோம்" எங்களுக்கு தமிழக திரையுலகிலும் தொடர்பு உண்டு.
மிகப் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகைகள், சின்னத்திரை நாடக
நடிகைகள்,விளம்பர நடிகைகள் பல பேரை நாங்கள் இத்தொழிலில்
ஈடுபடுத்தியிருக்கிறோ­­ம். என்று தெரிவித்திருக்கிறான்­­. விபச்சாரத்தில்
ஈடுபட்ட குறிப்பிட்ட தமிழ் நடிகைகள் மற்றும் கேரள நடிகைகளின் விவரங்களை
பசுபாலன் காவல்துறைக்கு தெரிவித்திருப்பதாகவு­­ம் செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஷ்வரி ,
விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகளின் விவரங்களை கொடுத்திருந்தாலும் ,
அப்போது அந்த விவகாரம், அதிரடியாக மூடப்பட்டது. விவரங்களை தெரிவிக்க
கடும் எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் போராட்டத்தில்
ஈடுபட்ட நடிகர் ரஜினி அவர்கள் நடிகைகளுக்கு ஆதரவாக கடுமையாக
விமர்சித்தார் என்பதும் கவனத்திற்கு,,, இதனிடையே பசுபாலன் என்கிற
விபச்சாரன் கைதானதை தொடர்ந்து தமிழ் திரையுலகம் நிச்சயமாக அடையாளங் கண்டு
அதன்பின்னரே ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முற்போக்காளர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு பாடமாக அமைந்து விடுகிறது. அவலங்களை
முன்னெடுத்தவனே ஒரு கொடுமையான சமூக அவலத்திற்கு காரணமாய்
இருந்திருக்கிறான் அதனை ஆதரித்த குற்றத்திற்காக முற்போக்கும் குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது எனும் போது அவமானப்படுவதைத் தவிர வேறென்ன இருக்கப்
போகிறது. முற்போக்கு மறுபரிசீலனை தேவைப்படும் ஒன்றாக இங்கே இருக்கிறது.
தொடர் தற்கொலைகள், தொடர் விபச்சார தொழிலென திரையுல நடிகைகளின் சமூக
அவலங்களுக்கும்,ஒடுக்­குமுறைகளுக்கும் நல்லதொரு தீர்வுகள் முன்னெடுத்து
அவர்களின் மறுவாழ்வுக்கான அலோசனை நடவடிக்கைகள் இங்கே தேவையாக இருக்கிறது.

என்னுள் நீயாக,,,

நானாக என்னுள்
நீயாக
நம்மில் மெய்யாக
உயிரின் அர்த்தங்களை
உள்ளங்கையில்
சேகரித்திருக்கிறோம்

செங்காந்தள் மலராக
சீமை விளக்காக
ஞானப் பொருளாக
நமக்குள்ளே
காதல் வீதியுலா
வருவதற்கு வாழ்க்கை
கனவுகளை தீர்மானித்து
வைத்திருக்கிறோம்

வந்ததும் சென்றதும்
வரப்போவதுமாக
நிஜங்களை விழுதுகளாக நிழல்களை இரவாக
இமைகளின் இம்சைகளாக
ஒன்றிக் கலந்து
உறவாடும் உன்னத
பரிமாற்ற நிகழ்வுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருக்கிறோம்

வாழலாம் வாவென
அழைக்கிறாய்
வசந்தமாய்
வருகிறேனென
இசைகிறேன்

மலர்தேடும் தேனீக்கள்
மழைதேடும் மயில்கள்
இசைதேடும் குயில்கள்
நிலவுதேடும்
விண்மீன்கள்
கடல்தேடும் நதிகள்
இரைதேடும் பறவைகள்
இன்பமாய் நமை
வாழ்த்திட வருகின்றன
வரிசையில்

ஊடலும் கூடலும்
உன்னத காமச்சிறு
புனலும் காதலை
புகழ்ந்து பாடுகையில்
கண்ணெதிரே ஆடும்
கரிச்சாங்குருவிகளின்
மேள தாளங்களோடு
நம் திருமண முடிச்சுகள்

நமக்கே நமக்கான
நலின மயமான
வாழ்வியல் வாசலில்
வலதுகால் வேண்டாம்
இஷ்டப்படி உள்ளே வா
நம் உறவும் காதலும்
உண்மையதனால்,,,

பிரளயங்கள்
சடங்குகளின்
சந்ததிகளை அழிக்கும்

அழகே முத்துச்சிமிழே
முல்லை மலரே
வர்ணிக்கிறேன்
உனை நானும்

அழகா ஆண்மைப்
பேரழகா அகிலத்து
வானழகா
என்னிமைகளின்
ஏட்டழகனே
என்னையும் பெண்ணாக
மதித்தவனே மன்னவனே
வர்ணிக்கிறாய்
எனை நீயும்

இப்படியே
கடந்துபோகாதோ
யுகங்கள் பலவென்று
ஏங்கித் தவிக்கிறேன்
எழுதி முடித்த
கவிதையில்
இறுதி மூச்சாக நீ!

Saturday, November 21, 2015

பேஸ்புக்கில் என் சுய பாதுக்காப்பு முறைகள்

உலக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த ஒன்றுதான் பேஸ்புக்காக
இருக்கிறது. தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதவும்
பரிமாறிக்கொள்ளவும் மிக எளிதான ஓர் சமூக வலைதளமாக பேஸ்புக்
இருந்திருக்கிறது , இந்த பேஸ்புக்கில் போலி கணக்கர்களின் வருகை
நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிரு­க்கின்ற வேளையில் அவர்களிடமிருந்து
நம்மையும் நம் நட்பு வட்டங்களையும் சேர்த்தே பாதுகாப்பளிக்கபட வேண்டிய
கட்டாயம் நமக்கிருக்கிறது. ஆகவே நமது பாதுகாப்போடும் அடுத்தவரின்
பாதுகாப்புக்களையும் நாம் தீர்மாணிக்க வேண்டி தள்ளப்படுகின்றோம். பொதுவாக
நம்மை பெரிதும் அச்சுறுத்தும் போலி கணக்குகளின் நோக்கம் நிறைவேற அவர்கள்
பயன்படுத்துவது அதீத சாதிமத வெறியையும் முக்கியமாக ஆபாசத்தையும்
தேர்ந்தெடுக்கிறார்கள­். இதனால் பல தொல்லைகள் ஏற்பட்டு நட்புகள் பல
இழக்கும் அபாயக் கட்டத்தை நாம் நெருங்கிவிடுகிறோம். பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர்கள் எழுதி வந்தாலும் நம்மில்
இன்னும் விழிப்புணர்வு ஏற்படவேயில்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.
ஆகையால் எனது சொந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன். காரணம் கடந்த ஏழாண்டு கால பேஸ்புக் அனுபவத்தில்
எந்தவிதமான போலி அல்லது ஆபாசக்காரர்கள் என்னை நெருங்கவில்லை அவர்களை நான்
நெருங்கவிட்டதுமில்லை­ அப்படியான சில வழிமுறைகளை நான்
கையாண்டுக்கொண்டிருக்­கிறேன் அதை பகிர்தல் மூலம் பேஸ்புக் பாதுகாப்பு
பற்றி சிறிய விழிப்புணர்வு ஏற்படலாம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அதேவேளையில் எனது பேஸ்புக் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதில் சில
சிக்கல்கள் இருக்கின்றன. ஆசைகளை துறக்க வேண்டும், அதிக லைக் மற்றும்
ஷேருக்கு ஏங்கக்கூடாது. முக்கியமாக பேஸ்புக் பிரபலம் என்கிற நோக்கத்தை
கைவிட வேண்டும். உங்களின் பதிவுகளும்,புகைப்படங­்களும்,வீடியோக்களும்­
சிறப்பாகவும் சமூகத் தேவைக்கு உகந்ததாகவும் இருக்குமேயானால் தானாகவே
நீங்கள் பிரபலமடைவீர்கள் அவ்வளவே,,, இனி எனது சுய பாதுகாப்பு முறைகளைச்
சொல்கிறேன்.

* முதலில் ஆபாச லைக் பேஜ்களிடமிருந்து சுத்தமாக விலகியிருக்கிறேன்.
*தேவையற்ற விளம்பரங்களை லைக் மற்றும் ஷேர் செய்யவதில்லை, மேலும்
பேஸ்புக்குகென இருக்கும் பிரத்யேக அப்ளிகேஷனை இன்ஸ்ட்டால் செய்வதில்லை
*ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் நூறு அதற்கு மேற்பட்டு வந்தாலும் நிதானமாக
அவர்களின் ஃப்ரொபைலை பரிசோதிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.
*ஒருவர் எனக்கு ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் அளித்தால் அவரின் கணக்கில் சென்று
கீழ்க்கண்டவைகளை பரிசோதிப்பேன்,,,
a) பேஸ்புக் யூஸர் நேம்
b) லைக்பேஜ், குரூப்,டைம்லைன்
c) பிறந்த தேதி, இடம்,படிப்பு
c) பதியப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதற்கு லைக்கிட்டவர்கள்
c) அவரின் நட்பு வட்டம்,எனக்கும் அவருக்குமான பொது நண்பர்களின் விவரங்கள்.
இவைகளனைத்தையும் ஆராய்ந்தாலே அது போலிக்கணக்கா என்று கண்டுபிடித்துவிடலாம்­.
சில அறிவுசீவிகள் பெண்கள் பெயரில் உலாவரும் ஆனால் பேஸ்புக் பிரத்யேக
யூஸர் நேமில் ஆண் பெயர் இருக்கும்,சிலர் ஃபெஸ்டிவல் நாளை பிறந்தநாளாய்
வைத்திருக்கும் , சிலர் ஆபாச லைக்பேஜ்க்கு லைக் இட்டிருப்பார்கள், சிலர்
வேண்டுமென்றே பெண்கள் பெயர்களை முன்னால் போட்டிருப்பார்கள் (சிலர்
மட்டுமே,அவர்களின் நோக்கம் குறைந்த காலத்தில் பேஸ்புக் பிரபலமாவது).
*ஃப்ரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபர் நடப்பாண்டின்படி 20 வயதுக்குள்ளாக
இருப்பின் எவராயினும் நிராகரித்து விடுவேன்.
*ஃபிரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபருக்கும் எனக்கும் பிரதான பொது
நண்பர்களின் எண்ணிக்கு 50 க்கும் மேலாக இருந்தால் மட்டுமே
ஏற்றுக்கொள்வேன்(முந்­தைய ப்ரொபைல் பரிசோதனை செய்த பின்னரும்)
*ரிக்கொஸ்ட் கொடுக்கும் நண்பரின் லைக் பேஜில் ஆபாசங்கள் கூடவே ஆதிக்க
மதவெறி மற்றும் சாதிவெறி லைக்பேஜ்களை சேர்த்திருந்தாலும் உடனே
துண்டித்துவிடுவேன்.
*மிகச்சாதாரணமாகவும்,­மற்றும் அதீத உணர்ச்சியாலும் கெட்ட வார்த்தைகளை
உபயோகிப்போரை என்றுமே சேர்க்க மாட்டேன்
*எனது நட்பு வட்டாரங்களின் பதிவுகளுக்குச் சென்று அனாவசியாம
மேற்குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை உபயோகித்தாலும் இதே நிலைதான்,,
*ஒருகால் நட்பில் சேர்த்துவிட்டபின் வியாபார நோக்கோடு அவர்கள் ஆரம்பித்த
லைக்பேஜ் , குரூப், களில் என்னை சேரவேண்டி அழைப்பு விடுத்தால் உடனே
துண்டிப்பு.
*எனது நட்பு வட்டத்திலிருந்து குறிப்பிட்ட நபர்களை நியாயமான
காரணங்களுக்காக தடைசெய்ய கோரினாலும் உடனே துண்டிப்பு.
* பேஸ்புக் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில்லை
*இந்த சாமியை ஷேர் செய்யுங்கள் பத்து நிமிடங்களில் நல்லது நடக்கும்
என்றும், ஒரு புகைப்படத்தை போட்டு லைக்கிட்டால் நகரும் ஷேர் செய்தால்
ஆடும் என்கிற அனாமதேய பதிவுகளின் பக்கம் போவதேயில்லை.
*நேரடியாக ரிக்கொஸ்ட் கொடுக்காமல் ஃபாலோ மட்டும் செய்பவர்களின் கணக்குகளை
ஆராய்ந்த பின்னரே அனுமதிப்பு , தவறானவரென தெரிந்தால் உடனே தடை,
*எனது டைம்லைனில் எனக்கு விருப்பனான புகைப்படங்களை மட்டுமே ஃடேக் செய்ய
அனுமதிக்கிறேன். அதற்கான செக்யூரிட்டி வசதிகளை பேஸ்புக் செட்டிங்
தந்திருக்கிறது.
*பேஸ்புக்கிற்கென தனியான ஈமெயில் வைத்து உபயோகிக்கிறேன். எக்காரணம்
கொண்டும் மொபைல் எண் கொடுப்பதில்லை. ஈமெயிலையும் பூட்டியே
வைத்திருக்கிறேன். இதன்மூலம் தேவையற்ற கருப்பழகிகளின் செய்தி
தடைபடுகிறது. அதையும் மீறி வந்தாலும் பதிலளிக்காமல் முதல் அழித்தல் வேலை
மேற்க்கொள்வேன். இவ்வளவுதான் நான் மேற்கொள்ளும் பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள்,இது தவிர்த்து பேஸ்புக் பரிந்துரைக்கும் மீட்சுவல்
பட்டியலில் அவ்வப்போது உள்நுளைந்து மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி
தடைசெய்யும் நடவடிக்கைகளில் மேற்கொள்வேன். நான் குறிப்பிட்டுள்ள பேஸ்புக்
பாதுகாப்பு நடவடிக்கைகள் பெண்களுக்கும் பொறுத்தமாக இருக்குமென்று
கருதுகிறேன். முதலில் நாம் பாதுகாப்பு உறுதி செய்துவிட்டு பிறகு பேஸ்புக்
மார்க்கிடம் முறையிடுவோம் அதுவே முறையாகவும் இருக்கின்றது.

நீயாவது விட்டுக்கொடுத்திருக்கலாம்,,,

உனதாடை
கிழிந்துள்ளது அப்படியே
திரிகிறாயே
கழற்றிக் கொடு
இப்படி
அம்மா அதட்டுகிறாள்

அமைதியாக
அவிழ்த்துத் தருகிறேன்
எனதாடைகளை

வெளித்தோற்றத்து
கிழிசலை தைக்கும்
அம்மாவின் நூலூசிகளால்
நிச்சயம் கோர்த்து
தைக்க முடியாது
என்
பிளந்து கிடக்கும்
மனதினை

மௌனத்தில் ஒருதுளி
விசம் கலந்து
கொடுத்தால் வலியில்லாமல் சாவேன்
என் காதலால் உடைந்த
மனதாலெழும் வலிகளை
விட அதுவொன்றும்
மரணவேதனையன்று

எப்படிச் சொல்வேன்
இதனை என்
அம்மாவிடம்
அவள் அழுவாளா
ஆறுதல் சொல்வாளா
இல்லை கோபக் கொடுஞ்சொல்லாயுதம் தொடுப்பாளா

ஏதுமறிந்திருக்கவில்லை ஏற்படுகிறது அதீத
பயங்கள்

காலங்கள் ஓடியது
தெரியாமல்
கானக்குயில்களின் இசைகளை அருந்தி
பழகிப்போன
காதலனுபவங்களை
கண் சிமிட்டும்
நேரத்தில் கண்ணாடி
உடைவது போல
இருவரின் கண்ணெதிரிலேயே உடைத்து விட்டோம்
காதலையும் காதலில் பூத்த மனதினையும்

யார்மீது தவறு? எப்படி
அத்தவறு நிகழ்ந்தது?
அலசிட வேண்டாம்
அத்தருணத்தில்
நிகழ்ந்துவிட்ட
ஒன்றால் மீண்டும்
மீட்டெடுக்கலாம்
என்றாலும் அப்போதது தோன்றவில்லை

போகட்டும் வழியொன்று
இருக்கிறதே
"விட்டுக் கொடுத்தல்"
எனும் தன்மைகொண்டு

இங்கேதான் இதே
இடத்தில்தான்
செய்துவிட்டோம்
அப்பெருந் தவறை
ஈகோவெனும்
கரும்புகை மூடியது
எங்கள் இருவரின்
கண்களிலும்

முறிந்துபோன
காதலுக்கா முழுநேர
ஒப்பாரிகள்
இங்கே நான் அழுதுக்
கொண்டிருப்பேன்
என அவளும்
அங்கே அவள் அழுதுக்
கொண்டிருப்பாள் என
நானும்
இரவெது விடியலெது
தெரியாமல் குடித்துக்
கொண்டிருக்கிறது
கைக்குட்டைகள்
எங்களின் கண்ணீரை

கிழந்த ஆடையை
தைத்து என் கையில்
திணிக்க அம்மா
உள்ளே வந்தாள்
அழுவதை மறைத்தேன்
நான்

இந்தாடா
தச்சிட்டேன் துணிய
இப்போ போட்டுக்கோ கிழிஞ்சது வெளியே
தெரியாது
ஆனா உள்ளே உம்
கிழிஞ்ச மனச
எதவச்சி யாரவச்சி
தக்கப்போற
"நீயாவது விட்டுக்
கொடுத்திருக்­கலாம்"
எம்மருமவளுக்காக

குளிரில் உறைந்து
கிடக்கும் ஏற்றப்படாத
ஓர் மெழுகுவர்த்தின்
தோற்ற நிழலோடு
நான்
அதிர்ச்சியில் அப்படியே
பேச நாவெழவில்லை
தலைதூக்கி அம்மாவின்
முகம்பார்த்தேன் அவளும் அழுகையுடன்

சத்தமிட்டழுதேன்
என் வீட்டறைகளில்
அலறல் சப்தங்கள்

சந்ததி தெரியாமல்
மூடி மறைத்திருந்தேன்
அம்மா
என்ன மன்னிச்சிடு
தப்பு பண்ணிட்டேன் திட்டிவிட்டேன் அவளை திரும்பிக்கூட பார்க்க
மாட்டேனென்றும்
சொல்லிட்டேன்
திரும்பி அவ வரவே
மாட்டாம்மா!!!

உணர்வுகளை மதிக்க
மறந்ததின் விளைவு
உறவுக் காதலையும்
இழந்துவிட்டேன்
அம்மாவின்
ஆழ்மனதையும் அறிய மறந்துவிட்டேன்

ஆமாம் உண்மைதான்
தன் மகனி(ளி)ன்
ஒவ்வோர்
அசைவுகளையும்
அறிந்து வைத்திருப்பவள்
அம்மாதான்
என் அம்மா அவளை
மருமகளென்றாலே

அப்படியா
எனக்கு நிகழ்ந்தது போல்
எனதருமே காதலிக்கும் நிகழ்ந்திருக்குமா?
அவளம்மா என்னை மருமகனென்று
அழைத்திருப்பாளோ

நாளை விடியலுக்காய்
காத்துக்
கொண்டிருக்கிறேன்
கர்வம் உடைந்து
காதல் வாழலாம்
நாங்களிருவரமே
ஈகோவை புறக்கணித்து
பரிமாறிக் கொள்ளப்
போகிறோம்
விட்டுக் கொடுத்து
வாழ்தலையும் ,
காதலையும்

பெற்றோம் வளர்த்தோம்
என்றில்லாமல் மனதின்
நீளங்களை
அறிந்திருக்கும்
அன்னையர்க்கு
என் நன்றிகள்!

பருப்பு விலையில் பணம் கண்ட கார்ப்பரேட்டுகள்,,,

பருப்பு விலைநிர்ணயம் மற்றும்
பருப்பை இருப்பு வைத்துக்
கொள்வதற்காக கார்ப்பரேட்
கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென
விதிமுறைகளை தளர்த்தியது போன்ற
விபரங்கள் வெளியாகியுள்ள
நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல்
நடந்திருக்கிறது என்ற
குற்றச்சாட்டினை "அகில இந்திய
விவசாயிகள் சங்கம்"
எழுப்பியிருக்கிறது. பருப்பு வகைகளை
விவசாயிகளிடமிருந்து பெரும்
நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல்
செய்து கொள்ள அனுமதித்ததை
தொடர்ந்து, பருப்பு 1 கிலோ வெறும் 40
ரூபாய் மட்டுமே விவசாயிக்கு
கொடுத்த கார்ப்பரேட் கம்பெனிகள்,
அதை வெளிச் சந்தையில் ரூ 180
க்கென மொத்தம் 220 ரூபாய்க்குவிற்று
பல்லாயிரம் கோடி கொள்ளையடித்தன,
இதற்கு மத்திய அரசு உறுதுணையாக
நின்றதென, பருப்புஊழலை
விளக்குகிறது விவசாயிகள் சங்கம்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்
நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 17
அன்று தில்லியில் அதன் தலைவர்
அம்ராராம் தலைமையில்
நடைபெற்றது. பொதுச் செயலாளர்
ஹன்னன்முல்லா உள்ளிட்ட
தலைவர்கள் பங்கேற்றனர். நாடு
முழுவதும் உள்ள விவசாய நிலைமை
குறித்து இக்கூட்டம் விரிவாக ஆய்வு
செய்தது. தமிழகம், ஆந்திரப்பிரதேசம்
ஆகிய மாநிலங்களின் கடலோர
மாவட்டங்கள் சமீபத்திய
கனமழை,வெள்ளம் காரணமாக மிகப்
பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
மறுபுறத்தில் நாட்டின் மொத்தமுள்ள
676 மாவட்டங்களில் 302
மாவட்டங்கள் வரலாறு காணாத
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
மிகப் பெருமளவில் பயிர்கள்கருகிப்
போனதால் விவசாயிகள் துயரத்தின்
பிடியில் சிக்கியுள்ளனர்.இத்தகைய
பின்னணியில்தான் மிகப்பெருமளவில்
விவசாயிகளிடமிருந்து பருப்பு
வகைகளை கொள்முதல் என்கிற
பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள்
கொள்ளையடித்தன, விவசாய விலை
விட 5 மடங்கு கூடுதலாக
விலைவைத்து மக்கள் தலையில்
சுமை ஏற்றி இலாபமடித்த
விபரங்களும் வெளியாகியுள்ளன.
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார்
24 மில்லியன் டன் பருப்பு வகைகள்
உட்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த
2 மாதங்களில் மட்டும் சுமார் 4
மில்லியன் டன் அளவிற்கு பருப்பு
உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4
மில்லியன் டன் பருப்பை
விற்றவகையில் மட்டும் ஒரு
கிலோவிற்கு ரூ.180 என பெரும்
நிறுவனங்கள்
கொள்ளையை.வெளியிட்டிருக்கும்
விவசாயிகள் சங்கம், இந்தக்
கொள்ளையை மத்திய பாஜக
மோடிஅரசின் ஆதரவோடு
நடத்தியபெரும் கார்ப்பரேட்
கம்பெனிகளின் பெயர்களையும்
வெளியிட்டுள்ளது. குறிப்பாக
அதானியின் விவசாய மார்க்கெட்டிங்
கம்பெனியான "அதானிவில்மர்"
நிறுவனம் தனது 'பார்ச்சூன்'
நிறுவனத்தின் மூலம் பருப்பு
வகைகள் மற்றும் எண்ணெய்
வகைகளை விற்பதற்காக பல லட்சம்
டன் பருப்பு வகைகளை
விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
செய்துள்ளது. ஆனால், 1கிலோ ரூ.40
என வாங்கி, அதே பருப்பை பாக்கெட்
போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220
என்ற விலையில் விற்று
சம்பாதித்துள்ளது.
விலையேற்றமடைய அதானி
பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த
பருப்பு வகைகளையும் பதுக்கியதாக
விவசாயிகள் சங்கம்
குற்றம்சாட்டியுள்ளது. மேலும்
டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி
மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய
வர்த்தக நிறுவனங்களும், பருப்பு
இருப்பு வைத்துக் கொள்வதற்கான
வரையறையை அரசு தளர்த்தியதை
காரணமாகக் கொண்டு, மிகப்
பெருமளவில் பதுக்கி விலையை
ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே,
விவசாயிகளிடமிருந்து கூடுதல்
பருப்பை கொள்முதல் செய்யப் போவதாக
கூறிக் கொண்ட மத்திய அரசு, மிகவும்
தாமதமாக ,16ம் தேதி துவரம் பருப்பு
குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4625
என்றும், பாசிப் பருப்பு ரூ.4825
என்றும், குறைந்தபட்ச விலை
நிர்ணயித்து அறிவித்தது. அதாவது
விவசாயிக்கு 1 கிலோ ரூ.46 , ரூ.48
என்ற அளவில் மட்டுமே,,, இதனால்
விவசாயிக்கு எந்த பலனும்
ஏற்படப்படாது .அரசு நிர்ணய
விலையை விட கூடுதலாக ரூ.1
மட்டும் கொடுத்து இதே அதானி
உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும்
மிகப்பெரிய அளவில் விவசாயிகளிடம்
கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன.
உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை
ஏற்பட்ட நிலையில்,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
செய்திட அரசு திட்டமிட்டது. ஆனால்
அதற்கு முன்பு,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் பருப்பு வகைகளை
நாட்டின் பல்வேறு துறைமுகங்களில்
கையாளுகிற பொறுப்பினை அதே
அதானி நிறுவனத்திடமே மோடி அரசு
கொடுத்துவிட்டது.2014–15ம்
ஆண்டில் இந்தியாவின் பருப்பு
உற்பத்தி மொத்தம் 17.20 மில்லியன்
டன்னாக வீழ்ந்தது. அதற்கு முந்தைய
ஆண்டு 19.25 மில்லியன் டன்
அளவிற்கு பருப்பு உற்பத்தியானது.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காக
நடப்பாண்டில் சுமார் 4 மில்லியன் டன்
அளவிற்கு வெளிநாட்டு பருப்பு
இறக்குமதி செய்திட அரசு
உத்தரவிட்டது. ஆனால் அதற்கு
முன்பே அக்டோபர் இரண்டாவது
வாரத்தில், நாட்டின் அனைத்து
துறைமுகங்களிலும் வந்திறங்கும்
பருப்பை கையாளுகிற பொறுப்பு
அதானி நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்திய
பருப்பு மற்றும் தானியங்கள் சங்க
அமைப்புடன் அதானி துறைமுகங்கள்
மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்க்கொண்டு. அதன் படி நாட்டின் 7
துறைமுகங்களில் அதானி நிறுவனம்
சொந்தமாக வைத்துள்ள துறைமுக
டெர்மினல்களுக்கே வெளிநாடுகளின்
பருப்பு வந்திறங்கும் என்று ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது. முந்த்ரா, டாகெஜ்,
கண்ட்லா, கஜீரா (குஜராத்), தம்ரா
(ஒரிசா), மர்மகோவா (கோவா) மற்றும்
விசாகப்பட்டினம் (AP) ஆகிய 7
துறைமுகங்களிலும் பருப்பு
இறக்குமதி கையாளப்படும் என்று
அந்த ஒப்பந்தம் கூறுகிறது. குறிப்பாக
கனடா, ஆஸ்திரேலியா மற்றும்
கருங்கடல் பிரதேச நாடுகளிலிருந்து
சுமார் 5 மில்லியன் டன் பருப்பு,
மேற்படி அதானி
குழுமதுறைமுகங்களுக்கு
வந்துசேரும். என்பதே ஒப்பந்தமாகும் .
என விவசாய்கள் சங்கம்
குறிப்பிடுகிறது. அவ்வகையில் பருப்பு
விலை எந்த விதத்திலும் இறங்க
வாய்ப்பில்லை, மேலும் ஒட்டுமொத்த
பருப்பும் தற்போது அதானி போன்ற
கார்ப்பரேட்டுகளின் கைவத்திலே
இருக்கின்ற நிலையில்
விவசாயிகளையும்,பொதுமக்களையும்
திட்டமிட்டே சுரண்டுகின்றன
கார்ப்பரேட்டுகளும்,அ­
ரசுகளும்,,,உள்நாட்டில்
வேண்டுமென்றே பருப்பு
பற்றாக்குறையை உறுவாக்கி
பலகோடிகளை சுருட்டும் கார்ப்பரேட்
மற்றும் ஆளும் அரசுகளால்
நிச்சயமாக மரணத்தை தழுவிவிடும்
நிலைக்கு விவசாயிகளும்,பொதுமக்­­­
களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோதாதென்று இயற்கை
அழிவுகளும் அவர்களின் கழுத்தை
நெறிக்கிப்பிடிக்கின்றன. ஊழலற்ற
அரசு அமைப்போம் என்கிற போலி
அறிக்கைகளால் ஏமாந்து இன்று
விழிப்பிதுங்கி நிற்கிறார்கள்
விவசாயிகளும் பொதுமக்களும்,
அத்தியாவசிய உணவில் கூட
ஊழலெனில் உழைப்பாளிகள் வர்க்கம்
இனியும் தாமதிக்காமல்
விழித்துக்கொள்ள வேண்டும். சனநாயக
சக்திகளால் மட்டுமே முதலாளித்துவ
கார்ப்பரேட்டுகளையும் அதிகார
வர்க்கங்களையும் விரட்டியடிக்க
முடியும்.

Friday, November 20, 2015

நடிகர் சங்க அறிவிப்பும் நமக்கான விழிப்பும்

மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட
மக்களுக்கு உதவ வேண்டியது அரசின்
கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும்
செய்ய முடியாது நடிகர் சங்கம்
என்பது நடிகர்களின் பிரட்சனையை
மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும்.
முதல்வரை சந்தித்த பின்
நடிகர் சங்க நிர்வாகிகள் இப்படி
அறிவித்திருக்கிறார்கள். மாற்றுக்
கோணத்தில் நடிகர்கள் சங்கம்
கூடியெடுக்கும் முடிவுகளிலும் சிலச்
சாதகமானவைகள் இடம்பெறவேச்
செய்கின்றன. ஈழ இனப்படுகொலை
குறித்து ரஜினி ஏன் பேசவில்லை,
உலகவங்கிகள் ஒப்பந்தம் குறித்து
உலகநாயகன் ஏன் கண்டனம்
தெரிவிக்கவில்லை, காஷ்மீர்
இனவாதம் குறித்து நாசர் ஏன்
வாய்திறக்கவில்லை , கடலூர்
சென்னை கரூர் வெள்ள பாதிப்பு
குறித்து நடிகர்சங்கம் ஏன்
கேட்கவில்லை, என்று நம்மறிவு
கேட்கும் கேள்விகளென்பது
அபத்தபமாகும். நடிகர்
சங்கத்திற்குள்ளேயும் பல
ஒடுக்குமுறைகள் காலங்காலமாக
இருந்துக்கொண்டே இருக்கிறது.
அதற்கான பலமானச் செயல்பாடுகளை
முதலில் அவர்கள் முன்னெடுக்கட்டும்
. கலைத்துறைக்கும் , அரசியலுக்கும்
இருக்கும் நெருக்கத் தொடர்பை
இவ்வகையான முடிவுகளின் மூலம்
பிரித்தெடுக்கலாம். அரசியல் வேறு,
கலைத்துறை வேறு என்கிற
பார்வையில் எடுத்துச் சென்றால்
மக்கள் சிந்தனையுள்ள சமூக
நல்லிணக்க மனிதர்களை எளிதாக
தேர்ந்தெடுத்து விடலாம். 18 வயது
பூர்த்தியடைந்த ஒரு இளைஞனோ,
இளைஞியோ வாக்களிக்கும் உரிமை
பெற்று அதனை முறையாக
பயன்படுத்தும் ஓர் முடிவுக்கு
வருகிறார்கள் அது மக்களவை
தேர்தலோ, சட்டசபை தேர்தலோ,
உள்ளாட்சித் தேர்தலோ . யாருக்கு
ஓட்டுப்போட வேண்டும் என்பதில் சில
சதவிகிதங்கள் நடிகர் நடிகைகளே
தீர்மானிக்கிறார்கள். அதனால்தான்
ஆளுமையின் உச்சத்தில் இருக்கும்
அதிமுக மற்றும் திமுக கட்சிகள்
தேர்தல் நேரங்களில் நடிகர்
நடிகைகளை களத்தில் இறக்குகின்றன.
அதுமட்டுமில்லாது 2016 தேர்தல்
சந்திக்கப்போகும் வேளையில்
இவ்வகையிலான முடிவுகள்
சாதமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது
எனலாம். தனது நடிப்புத் துறையின்
அடையாள முகங்கொண்டு அரசியலில்
உள்நுழையும் நடிகர் நடிகைகளால்
மக்கள் பாதிப்படைவதை விடவும்
அதிகமாக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக
உண்மையாக உழைக்கும் மக்கள் நல
களப்பணியாளர்களின் உழைப்பு
வீணாக்கப்பட்டு பெரும்
பாதிப்படைகிறார்கள். ஒரு தொகுதியில்
பேச்சுக்காக ரஜினியோ, கமலோ, அஜீத்தோ,
விஜயோ, கார்த்திக்கோ, விஷாலோ
தேர்தலை சந்திக்கிறார்களெனில்
அங்கே அவர்கள் வெற்றிவாகை
சூடிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு
மாறாக அந்த தொகுதி மக்களின்
அடிப்படை வசதி மற்றும்
உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கு­
ம் சமூகச் சிந்தனையாளர்கள் அல்லது
அரசியலாளர்கள் டெபாசிட் இழந்து
படுதோல்வி சந்திக்கிறார்கள் . இது
நமது அரசியலின் எதார்த்த
உண்மைகள். திமுக ஆட்சியின் போது
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
எடுப்பதும், ஊழல் அதிமுக ஜெ
சிறையிலிருக்கும்போது தெய்வத்தை
தண்டிப்பதா என்பதும்
அரசியலாளர்களுக்கும்
கலைத்துறையினருக்கும்
மத்தியிலிருக்கும் பிழைப்புவாத
பரிவரித்தனையே காரணமாய்
இருந்திருக்கிறது. இதனை
மையப்படுத்தி நடிகர் சங்கமும் நடிகர்
நடிகைகளும் தங்களை
வளர்த்துக்கொள்கிறார்கள் மேலும்
ஒடுக்குதலுக்கும் ஆளாகி
நிற்கிறார்கள். ஒரு சங்கம் மக்கள்
பாதிப்புக்கு உதவ வேண்டும் என்பதை
திணிக்க முடியாது. அது
அவர்களாகவே முன்வந்துச் செய்ய
வேண்டும் . உதவுவதும் உதவ
மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில்
தலையிட நமக்கு உரிமையில்லை
ஆனால் யார் உதவுகிறார்கள் உதவ
மறுக்கிறார்கள் எனும் வகையறிந்துச்
செயல்படுவதும், சிந்திப்பதும்,
அடையாளம் காணுவதும் மிக
முக்கியான பணியாக நமக்கிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்களுக்கு நடிகர் சங்கம்
தலையிட முடியாது, அது அரசின்
வேலையென செல்வதில் ஓர்
உண்மையும் கடமையும் இருக்கிறது
நமக்கான முதல் பணி
மெத்தனப்போக்கோடு ஐந்தாண்டுகள்
ஆட்சி செய்யும் அரசை கண்டிக்கவும் ,
எதிர்க்கவும் ஓர் வலுவான இயக்க
முடிவுகளை முன்னிலை படுத்த
வேண்டும். அதன் பிறகே
கலைத்துறையின் அரசியல்
குறிக்கீடுகளை எதிர்க்க முற்பட
வேண்டும். நடிகர் சங்கம் உதவ
மறுத்து விட்டது என்பதற்காக
அவர்களை கடுமையாக எதிர்க்கும்
அதே மக்கள்தான் அதீத உணர்ச்சி
கொண்டு அவர்களின் உருவத்திற்கும்,
திரைப்பட கட்டவுட்களுக்கும்
பாலபிஷேகம் செய்கின்றோம் .
அதையும் தாண்டி ஒருபடி மேலே போய்
பீர் அபிஷேகம் நிகழ்ந்துக்கொண்டிருக­
்கிறது இது முரணாக நமக்குத்
தெரியவில்லையே ஏன்?
கலைத்துறையிலும் பல்வேறு
ஒடுக்குமுறைகள் இருப்பதை நம்மால்
மறுக்க முடியாது. அவ்வப்போதெழும்
"தடை உத்தரவுகள்" நமக்கு
பழிகிப்போனவைகள். அது பற்றியே
பேசாத போது அவர்களிடமிருந்து
மற்றவற்றை எதிர்பார்ப்பது நியாயமே
இல்லை.ஒரு வலுவான மக்கள்
இயக்கம் இருந்தால் ஒருவேளை அந்த
தைரியம் நடிகர் சங்கத்திற்கு
வந்திருக்கும். ஏன் நமக்கே
அப்போதுதான் நம்பிக்கை வரும். நாமும்
இங்கே வலுவான மக்கள் இயக்கத்தை
கட்டமைக்கவுமில்லை என்பதே
பிரதான உண்மை. வெறும் மூவாயிரம்
ஓட்டுக்களை முன்வைத்த நடிகர்
சங்கத் தேர்தலை முழுநேர
நேரலையில் காட்டிய நமது செய்தி
ஊடகங்கள் , ஒரு லட்சத்திற்கும்
மேலாக இருக்கும்
விவசாயம்,கூலித்தொழிலாளர்,
கட்டுமானர்கள் சங்கங்களின் தேர்தலை
ஏன் நேரலையில் காட்டவில்லை
என்று என்றாவது கேள்விக்
கேட்டிருப்போமா? இங்கே
தவறுகளையும்,குற்றவுண­
ர்வுகளையும் தற்செயல் நிகழ்வுகளாக
கடந்துபோகும் மனநிலையே சராசரி?
மனித மனநிலையென கற்பதம்
கொண்டவர்கள் நாமாக இருக்கையில்
ஏன் எதிர்பார்க்கிறோம் அடுத்தவர்
உதவு வேண்டுமென்று,,,
காலம் கனிந்து வந்துக்
கொண்டிருக்கிறது நமது முன்னால்
நமக்கேத் தெரியாமல் நன்மைகள்
பின்தொடர்ந்து வருகிறது அடுத்த
2016 தேர்தலில் மக்கள் நல சனநாயக
முற்போக்கு சிந்தனைகளின் வெற்றிச்
சுடர்களை ஏற்றிவைக்க நமக்கே உரிய
முழு அதிகார இயக்கமொன்றை
கட்டமைப்போம் , அப்போது கலைத்துறை
தாமாக விலகிவிடும் அரசியலில்
இருந்து, அதுவரையில்
எதிர்பார்க்காதீர்கள் அவர்களின்
கைகளை,,, IT துறையில் தொடங்கி
தொழிலாளர் துறைகள் வரையில் நம்
கண்முன்னால் வெள்ள நிவாரண
உதவிகளைச் செய்திடும்
நல்லுள்ளங்களை இத்தருணத்தில்
பாராட்டிட வேண்டுமல்லவா
அதற்காகவேனும் கலைத்துறை மீதான
எதிர்ப்புகளை கொஞ்சம் ஒதுக்கியே
வையுங்கள். நடக்கும், நடக்கப்போகும்
நிகழ்வுகளை நேரில் கண்டு நடிகர்
சங்கம் தாமாகவே தங்களை திருத்திக்
கொள்ளும் வாய்ப்புகளை
பொதுமக்களாகிய நாம் உறுவாக்கிட
வேண்டும்.

யாழ் நூலகம்

காற்றசைவின்
சப்தங்களையும்
மறந்து போயின
மரங்கள்

புத்தகங்களை
புரட்டும் கைகள்
இசைத்துக்
கொண்டிருந்தது
ஓர் அழகான
அனுபவத்தை

உள்ளே
மேசை நாற்காலியில்
வாழ்க்கைப் பாடம்
கற்கும் பள்ளிச்
சிறுவர்களும்
கல்லூரிக்
கனவாளர்களும்
ஒரு புரத்தில்

தான் பெற்ற
ஏற்கனவே அனுபவித்த
வாழ்க்கையின்
மனச்சாரல்களை
அசைபோட்டும்
இனி வாழப்போகும்
காலத்திய கனவுகளை
அலசியும்
ஆத்மார்த்தமாய்
புத்தகம் வாசிக்கும்
முதியோர்கள்
ஒரு புரத்தில்

எழுதியும்
எழுதப்படாமலும்
எழுத்தின் மூச்சினை
எப்போது வேண்டுமாலும்
உட்கொள்ளப்படலாம்
என்கிற ஆவலோடு
ஆங்காங்கே குறிப்பெழுத
வைத்திருக்கும்
பேனாக்களும்
நோட்டுகளும்
அவரவரிடத்தில்

தன் அறிவுக்கு எது
வேண்டுமென்பதை
ஏற்கனவே முடிவு
செய்துவிட்ட
மூளையின் சொல்படி
புத்தக தலைப்புகளையும்
எழுதிய
படைப்பாளியையும்
தேடி நகரும் புத்தக
மேய்ப்பர்கள்
ஆங்காங்கே

யாருக்கு என்ன
வேண்டும் எவ்விடத்தில்
எந்த புத்தகம் உள்ளது
எத்தனை புத்தகம்
சுற்றுலா சென்றுள்ளது
வாசிக்கப்படும்
புத்தகங்களை
குறிப்பெடுப்பது
சீர்மரபில்
அலமாரிகளில்
புத்தகம் அடுக்குவதென
அத்தனை பெருஞ்சுமை
வேலைகளையும்
ஓர் கால்முளைத்த
குழந்தை ஓடியாடி
துள்ளிக்குதிப்பதை போல
சிமரமின்றி செய்து
முடிக்கும் காப்பாளர்கள்
ஒரு புரத்தில்

அதுவரையில் அமைதியாகத்தான்
இருந்தது அந்த பூமியும்
அந்த நூலகமும்
அது சுற்றியிருந்த
மரங்களும்

அப்போதுதான்
வீசினார்கள்
அந்த முதல்
பெருநெருப்பு
தீப்பந்தத்தை
எமது
யாழ் நூலகத்தில்,,,

அன்பெனும் ஆகாசப் பறவைகள்

அடுத்த நிமிடமே
அழத்துடிக்கும்
மனங்களுக்காக
ஏதோ ஓரிடத்தில்
மடைகளைத் திறந்தே
வைத்திருக்கிறது
அன்பெனும் நேசம்

தாவிக்குதித்து
பெருங்கோபம் தவிர்த்து
அமைதியாய்
ஆனந்தமாய்
தேன் சுரக்கும்
பூக்களின்
நறுமணங்களாய்
நேசமிங்கே
யார் கண்ணிலும்
படாமல்
ஓர் அழுகையின்
கண்ணீரைத் துடைக்கும்
கைக்குட்டையாகிறது

யாருக்காக அழுகிறது
இந்த மனம்
ஆராய்ச்சியின் முடிவில்
இலக்கணங்கள்
உடைகின்றன
இமைகளின் துடிப்புகளை
அன்பெனும் ஆழ்கடல்
அள்ளி அணைக்கிறது

சிந்தப்படும் கண்ணீரில்
அடுத்தவர் படும்
வேதனைகளை அளவாக
படிக்கிறது இந்த
அன்பெனும் நேசம்

இவன்,இவள்,
இவர்கள்,இதற்குத்தான்
கண்ணீர் சிந்துகிறார்கள்
எதற்கெனும்
கேள்விகளுடைந்து
மனிதாபிமானமாக
அன்பின் பிறப்பிடமாக
மனிதம் போற்றுவதாக
எங்கும் நிறையும்
கண்ணீரின் கரிசனங்கள்

சனங்களை திட்டாதீர்கள்
சன்னல்களை
மூடாதீர்கள்
கண்ணீர்கள் நேசத்தின்
கால்களை தொட்டுத்
தழுவுகிறதே அன்றி
வாரிவிடுவதற்காக
அல்ல

ஒரு கணம்
அந்த ஒரு கணம்
அடுத்தவருக்காக
அழுகின்ற மனங்களின்
அழுக்குகளை
துடைக்கிறது என்
நேசத்து அன்பெனும்
ஆகாசப் பறவைகள்,,,

Thursday, November 19, 2015

இணைய உலகிற்கு என் நன்றிகள்!

இவ்வாண்டில் 300 பதிவுகளை எழுதிக் கடந்துவிட்டேன் . எதுவும்
சாத்தியமாகிறது என்னுள் பிறந்து வளர்ந்த நம்பிக்கையினால்,,, இணைய
வெளியில் அதுவும் வலைப்பூவுலகில் முதலில் என்னை எழுதவைத்தது பேஸ்புக்காக
இருக்கிறது. ட்விட்டர் எனக்கு அவ்வளவாக பரிட்சயமில்லை, உண்மையில்
பேஸ்புக்கால் எந்த நன்மையுமில்லை, அதுவொரு வெட்டியாக பொழுது போக்குமிடம்,
அதனால் எவ்வித சிந்தனைகளும் வளர்த்தெடுக்க முடியாதென வாதம் புரிவோர்களைக்
கண்டால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எனக்கு இவ்வளவு செய்திருக்கும்
பேஸ்புக்கை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. "உன்
நண்பன் யாரென்றுச் சொல் நீயாரென்று சொல்கிறேன்" என்பதை மறந்திருப்பார்களோ
இவ்விவாதக்காரர்கள். நான் பேஸ்புக்கை, ஜி ப்ளசை எந்தளவுக்கு
காதலிக்கிறேனோ அதைவிட மேலாக வலைப்பூவினை காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
அவ்வளவு பிடித்திருக்கிறது இந்த பரந்து விரிந்த வலைப்பூவுலகம்.
பேஸ்புக்கில் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதை உணர்ந்தாலே
நீயும் நல்ல நண்பனாகவும்,சிந்தனைய­ுள்ளவனாகவும் நிச்சயமாக இருப்பாய்.
எனது நட்பு வட்டம் அவ்வளவு அலாதியானது. ஊடகவியலாளர்கள்,சமூக
ஆர்வலர்கள்,எழுத்தாளர­்கள்,முற்போக்குச்
சிந்தனையாளர்கள்,கவிஞ­ர்கள்,இலக்கியவாதிகள்­,அரசியலாளர்கள், பெண்
ஆளுமைகள், பெண்ணிய சிந்தனையாளர்கள்,
பதிப்பகத்தார்கள்,சட்­டத்துறையினர்,மருத்து­வர்கள்,பொறியாளர்கள்,­மார்ஸியர்கள்,பெரியார­ியர்கள்,அம்பேத்கரியர­்கள்,இயக்கத்தார்கள்,­என
பட்டியல் மிக நீண்டுக்கொண்டே போகும். இதைவைத்து நான் பேஸ்புக் பிரபலம் என
நினைக்காதீர்கள். நான் சாதாரணன், மிஞ்சிப்போனால் ஒருபதிவுக்கு மூன்று
லைக் விழும் அம்மூன்றுபேரும் எனது பழைய பள்ளி நண்பர்கள்.
மேற்குறிப்பிட்ட சிந்தனையார்கள் எழுதிய, பரிந்துரைத்த, புத்தகங்களை
வாசிக்கத் தொடங்கியதன் விளைவுதான் இந்த "அரும்பிதழ்" வலைப்பூ.அதுமட்டுமல்லாது "நீங்க எழுதுங்க, உங்களால முடியும்" நிச்சயமா நீங்க எழுதுவீங்க! என்று, என்னை எழுத வைத்த பேஸ்புக் தோழர் திருமதி Rajeswary Medzinskii அவர்களை நன்றியோடும் அன்போடும் பார்க்கிறேன்.
பேஸ்புக் திறந்து அவரவர் பதிவுகளை கவனிப்பேன், எதை
எழுதுகிறார்கள்,எதுபற­்றி எழுதிகிறார்கள்,யாரை பின்பற்றுகிறார்கள் ,
என்றெல்லாம் கவனத்தோடு பார்த்தும் தெரிந்தும் கொண்டேன். நட்புப்
பட்டியலில் இருக்கும் மூவாயிரத்து சொச்சம் நண்பர்களை குறிப்பிட்டு
எழுதமுடியாது, ஆகவே யார் என் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்க
நீங்கள் எழுத்துலகில்,வாசிப்ப­ுலகில், நுழைந்தாலே போதுமானதாகும். இதில்
இன்னொரு வேடிக்கை என்னவெனில் நான் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று அனேக
நண்பர்களுக்குத் தெரியாது. அவ்வளவா பேஸ்கில் பகிர்ந்து கொண்டதில்லை,
காரணம் இருக்கிறது உபயோகிப்பது செல்போன் என்பதால்,,,
வலைப்பதிவுலம் பொருத்தவரையில் 2014 ஆகஸ்ட்டில் எழுதத் தொடங்கினாலும்
முழுமையாக எழுதத் தொடங்கியதும் அறிமுக தோற்றத்தை அளித்ததும் நடப்பாண்டான
2015 சனவரி 5 , அந்நாளில்தான் தமிழ் மணம் என் தளத்தை இணைத்துக்கொண்டதாக
ஈமெயில் அனுப்பியது. அதற்கு முன்பு தமிழ்மணம் பேஸ்புக்கால்
அறியப்பட்டாலும் அந்த சனவரி 5ம் நாளிலிருந்து பல புதிய
நண்பர்களும்,மூத்தோர்­களும்,அனுபவஸ்த்தர்கள­ும் எனக்கு அறிமுகமானார்கள்.
மூத்தோர்கள்
புலவர் இராமாநுசம்,பழனி கந்தசாமி, தருமி, இரா எட்வின், ஆகியவர்களையும்,
என்னை வழிநடத்தியவர்களான
கில்லர்ஜி, திண்டுக்கல் தனபாலன் , சி.பி.செந்தில்குமார்­(சென்னியார்),
யாழ்பாவாணன் , புதுவை ராம்ஜி , S.Raman, தி.தமிழ் இளங்கோ , S.P. Senthil
Kumar, முகுந்த் அம்மா, வலிப்போக்கன் , தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,
நாகேந்திர பாரதி, Ramani S , Geetha M, Thulasidharan, 'தளிர்' சுரேஷ் ,
Mythily kasthuri rengan, Mubeen Sadhika, ஊமைக்கனவுகள். செங்கதிரோன்,
தனி மரம், சுரேகா, பசி பரமசிவம் ஆகியோர்களையும் நன்றியுடன் இத்தருணத்தை
எண்ணிப்பார்க்கிறேன்.­ இதில் (வினவு, மு.வி.நந்தினி, கனி ஓவியா, சத்தீஷ்
செல்லதுறை, வே மதிமாறன் பேஸ்புக் நட்பு வட்டார நண்பர்களையும்)
இவர்களனைவரும் என்னை எழுத வைத்தவர்கள்,வாசிக்க வைத்தவர்கள், அனைவரையும்
ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய தமிழ் மணத்திற்கு முக்கிய நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் ஒரு தகவலைத் தெரிவிக்க
விரும்புகிறேன், கணினி,மடிக்கணினி இருந்தால் மட்டுமே வலைப்பூவில்
பதிவெழுத முடியும் என்கிற தவறான கருத்தினை அனேகரும் கொண்டுள்ளனர் .
அக்கருத்தை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுகிறேன். கையில் தேனை
வைத்துக்கொண்டு வாய்க்கு சர்க்கரை இனிக்கவில்லை என்கிறார்கள்
இவ்வகையினர். வெறும் ஆண்ட்ராய்ட், சிம்பெய்ன் என இரண்டு கைபேசிகளை
மட்டுமே வைத்து இந்த 300 பதிவுகளை ஓராண்டில் எழுதியிருக்கிறேன். ஒரு
பொருளின் நுணுக்கங்களை நன்கறிந்து அதன் தேவைப் பயன்பாட்டினை அப்படியே
உள்வாங்கிக் கொண்டோமானால் கைபேசியால் உலகை அளந்து விடலாம். எதையும் மிகச்
சாதாரணமாக எடைபோடாதீர்கள். எல்லாவற்றிலும் அதற்கான சேவைகள்
கொடுக்கப்பட்டே இருக்கின்றன. அதனை சரியான முறையில் கையாண்டு நமக்குச்
சாதமாக்கிக்கொள்ளலாம்­. உங்கள் எண்ணம் உங்கள் கையிலேதான் இருக்கிறது
கைபேசி வடிவத்தில், ஆகவே வலைப்பூவுலகில் எழுதவும் , வாசிக்கவும் முன்வர
வேண்டி அரைகூவல் விடுக்கிறேன். ஆனந்தப் பெருவெள்ளத்தில் வரும் ஆனந்தக்
கண்ணீரை கொஞ்சம் மாடலாக மாற்றிவிட்டார்களாம் ஆகையால நானு "அழுவுலயே!!!
கண்ணு வேர்க்குது!!!"

ஆண்(மை)கள் தினமா இன்று!

இன்று ஆண்கள் தினமாம்
யார் ஆண்கள்? எது ஆண்மை என்று இன்றளவும் தீர்மாணிக்கப்படவில்லை " காளை
போல் கட்டுடலோடும் ,விந்துக்கள் சீறிப்பாயும் விவேகத்
துடிப்போடும்,முறுக்க­ு மீசைகள் கம்பீரத்தோடும் வலம் வருவதுதான் "ஆண்மை
அழகு" என்கிறார்கள் பொதுபுத்திக்காரர்கள்­. எது ஆண்மையென காட்ட ஆணின்
ஆயுதம் பெண்மைமீது பிரயோகப்படுத்தப்படுகிறது, நாட்டாமை என்கிற
திரைப்படத்தில் ஓர் வசனம் "ஒரு ஆம்பள எத்தன பொம்பளகிட்ட போனாலும் அவன்
ஆம்பளடி,ஒரு பொட்டச்சி பலபேர்கிட்ட போனா அதுக்கு பேரு வேறடி!" வசனம் நம்ம
தமிழ்நாட்டு திரைப்படமே தான், இதுதான் "ஆண்மை" என கற்பிதம் பெற்ற அறிவு
மழுங்கிய கத்தியாகத்தானே இருக்கும். "கற்பை பொதுவில் வைக்க மறந்தவர்கள்
நாம்" இன்னும் அப்படியே தொடர்கிறது ஆண்மை என்பது ஓர் ஆணாதிக்கமாய்,,,
வழக்கமாக எழுதும் கவிதை நோட்டினை புரட்டிப்பார்த்தேன் , சட்டென கண்ணில்
பட்டது என் பேனா கிறுக்கிய கவிதையொன்று,

"ஆ(ண்)மை"

பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
என் முதுக்குக்கு
பின்னாலே
அலைகிறார்கள்
பித்து பிடித்தவர்களாய்
மெதுவாக பயணிக்கும்
ஆமைகளாய்
என் தாயும்
என் மனைவியும்
என் மகளும்
என் மருமகளென

முன்தடையும்
பின்தடையும்
வரைந்த நான்
அவர்களின்
பாதைக்கு
தடைக்கல்லாய்

நானொரு
ஆண்மகனாய்
அவர்களை
முன்னோக்கிப்
போக விடாமல்
முனைப்புடன்
பார்த்துக் கொண்டேன்

எப்படி முடிந்தது
என்னால்
சர்வசாதாரனமாய்
அவர்களை
அடிமைபடுத்திய
அக்குற்றவுணர்ச்சி
அற்றவனாய்
நடிக்கவும், இயல்பாய்
நடக்கவும்,

பழகிப்போயிருந்தது
என்னுள் அந்தப்
பழமைவாதம்
என் குணத்தோடுமது
ஒட்டியே
இருந்திருக்கிறது

அதனாலே
நான்
நடிக்கிறேன்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
நடிப்பேன்
நானொரு ஆண் எனும்
ஆண்மைக்காரனாகி
அகங்காரத் திமிரோடு,



இதிலிருந்து மாறுப்பட்டவர்களுக்கும்
மாற முற்படுபவர்களுக்கும்
மாற்றமில்லா மனதுக்காரர்களுக்கும்
ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

பாரிஸ் தாக்குதல் "அந்த சில நிமிடங்கள்"

கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு
நாளாக பதியப்பட்டு விட்டது
.132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர். 90 பேர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர். தாக்குதல்
நடந்த ஆறிடங்களில் ப்ளேஸ் த ரிபப்ளிக் எனுமிடத்தில் மட்டும் இரண்டு
இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது. லெ காரில்லோன் மற்றும் லெ பெத்தி
கம்போஜ் ஆகிய இரண்டு உணவகங்களில் தீவிரவாதியொருவன் நடத்திய கடும்
துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதில் லெ பெத்தி கம்போஜ் எனும் கம்போடிய உணவகத்தை தீவிரவாதிகள்
தாக்கியபோது உள்ளே 6 தமிழர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே பாரிஸில் பயங்கரவாதத்
தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச்
உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் தெரிவித்திருக்கிறார். உலகை உலுக்கிய
இப்பேரழிவு தீவிரவாத தாக்குதலை நேரில் கண்டவர்களும் , அனுபவித்தவர்களும்
தங்களின் அந்த சில நிமிடங்களின் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
பயங்கரவாத தாக்குதலில்
உயிர் தப்பியவர்களில் ஒருவரான கலைசெல்வன் மற்றும் பெயர் வெளியிட
விரும்பாத தமிழர் ஒருவரும் கூறியதாவது. (தங்களை வெளிப்படையாக
அடையாளப்டுத்திக்கொள்ள பல்வேறு சிக்கல்கள் அவர்களிடத்தில் உண்டு.)

' நாங்கள் வழக்கம் போல உணவகத்தின் குசினியில் சமையலறையில் பணி
செய்துக்கொண்டிருந்தோம். சரியாக இரவு நேரம் 9:30 மணியளவில் திடீரென்று
படபடவென வெடிப்பது போன்று கடும் சத்தம் கேட்டது. முதலில் அருகில் யாரோ
பட்டாசு வெடிக்கின்றனர் என்று நினைத்துக்கொண்டு கவனிக்காதிருந்த நாங்கள்,
கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டதும் சந்தேகப்பட்டு, நான் மட்டும் எங்கள்
அறையிலிருந்து வெளியே சென்ற பிறகுதான் அங்கு துப்பாக்கி சூடு
நடந்துக்கொண்டிருப்பதே எனக்கு தெரியவந்தது. சில குண்டுகள்
நாங்களிருக்கும் திசை நோக்கி வந்ததும் சுதாரித்துக்கொண்டு எங்கள் ஊரில்
(ஈழத்தமிழர்) போரில் பெற்ற அனுபவத்தில் அனைவரும் தரையில் படுத்து
மயிரிழையில் தப்பித்தோம். போலீஸ் வந்த பிறகு வெளியே வந்து பார்த்தபோது
ஏராளமானோர் சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். '
என்றார்.

தாக்குதல் நடந்த கம்போஜ் உணவகத்தின் கிளை அருகிலியே அமைந்திருக்கிறது.
அதில் பணிபுரியும் தமிழரொருவர் தாக்குதல் குறித்து தனது அனுபவத்தை
தெரிவிக்கையில்

' தாக்குதல் நடந்தபோது சத்தம் கேட்டு வெளியே வர முற்பட்ட எங்களை நிர்வாக
ஊழியரொருவர் தடுத்து அந்த உணவகத்தில் ஏதோ தகராறு நடப்பதாக கூறி
முன்னேற்பாடாக வாசல் கதவை பூட்டி எங்களை வெளியே அனுப்ப மறுத்தார்.
நாங்கள் ஏதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தோம். பிறகு
போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். முதலில் புரளி பரப்ப செய்யப்பட்ட
அழைப்பென்று நினைத்த அவர்கள், பிறகு நிறைய அழைப்புகள் வந்ததும் விரைந்து
வந்தனர். ஏனெனில், இந்த இடத்தில் இப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும்
எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நாங்களும் முதலில் ஏதோ கோஷ்டி மோதலில்
துப்பாக்கி சண்டை நடக்கிறதென்றுதான் நினைத்தோம். வெளியே வந்த பிறகே பலர்
கொல்லப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாதப் படுகொலை என்பது தெரிய வந்தது.
உணவகம் தாக்குதலில் சேதமடைந்துவிட்ட்து ' என்றார்.

இது போன்று பட்டகலான் தாக்குதலில் பலியான ஒருவரின் தாய்

' லெ படகலானில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு செல்ல என் மகனுக்கு ஆசையாக
வாங்கி பரிசாக கொடுத்த டிக்கெட்டே அவன் உயிருக்கு எமனாக போய்விட்டது '
என்று ஊடகத்தில் தெரிவித்திருந்தது மனதை பிழிவதாக இருந்தது.

பாரிஸில் இருந்து
ஜே ரீ பார்ன் பகிர்ந்து கொண்ட பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவ குறிப்புகள்.

தீவிரவாதங்களை ஆதரிப்பது என்பது மரணத்தின் சவக்குழிகளை தாங்களே
வெட்டிக்கொள்வதற்கு சமம் . முதலாளித்துவம் வளர்த்துவிட்ட தீவிரவாத
கத்திகள் மீண்டும் அவர்கள் மீதே பாயும்போது அப்பாவியாய் பலியாவதும்
பொதுமக்களாகவே இருக்கிறார்கள். வேண்டாம் தீவிரவாதம்!

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...