Saturday, February 28, 2015

ஏங்கும் புல்வெளிகள்

இரவுகளை
கடந்து
இன்பத்தினை
பகிர்ந்து
துயில்
கொள்ளும்
தீராத வேட்கையில் வீண்மீன்கள்
பவ்யமாய்
விளக்கேற்ற,,,

வந்தனைக்கும்
தீபவொளியாய்
திகட்டாத
தேனமுதாய்
சிந்திவிடும்
நிலவொளியை,,,

சுமந்தவாரே
சுவைக்கிறது
நம்
படுக்கையறை,,,

காலை முகத்தை
கவ்விய
முழுமதியாய்
முதலில்
கண்விழித்தாய்
நீ!

மூர்ச்சையாகி போனது புல்வெளிகள்தான்
என்பதை
நானறிவேன்,,,

உனக்கு முன்பே
உலகை ரசிக்க
வழியில்லா
புல்வெளிகள்
கதிரவன்
கண்விழிக்க
மாட்டானா
என்று
புலம்புவதை
செவிகொடுத்து
கேளடி
என்னவளே,,,

இரவு நிலவின் இன்பக்காதலில்
புல்வெளிகள்
உறங்க
இழுத்துப் போர்த்திய
பனிப்போர்வை
காலை
விடியலில்
விலக
வேண்டுமெனில்
கதிரவன்தான்
காலை முகம்
பார்க்க வேண்டும்
என்னவளே,,,

புலம்பும்
புல்வெளிகளை
உன்
புன்னகையில்
ஆருதல்
மொழியை
அவிழ்த்து விடு
என்னவளே,,,

பாவம் அவைகளை
பார்க்கும் பொழுது
மனம் தானே
உடைகிறது,,,

கால் சலங்கை
தேவையில்லை
என்னவளே
கதிரவனாய்
நீயுமாகி,,,

கால்தடம்
பதிந்துவிடு
புல்வெளிகள்
புதுவரவை
எதிர்நோக்கட்டும்
புது வசந்தங்களாய்
அவை
மலரட்டும்,,,

எழுதி விடுவோம் இவ்வரலாற்றில்
ஏட்டுக்கு போட்டியாக
என்றும்
எழுந்து விடவில்லை
நாம் செதுக்கிய
காதல் சிற்பங்கள்,,,

Friday, February 27, 2015

இரு இலக்கியவாதி உரையாடலும் புலியூர் முருகேசன் தாக்குதலும்

இலக்கியவாதி 1 :
ஐயா!!நலமா?
நான்தான் இன்ன நபர்தான் பேசுரேன்
நீங்கள் பதிவுசெய்த வள்ளுவன் எந்தமதம் என்கிற பதிவுக்கான என் பதிலுரை
திருப்தி அளிக்குமாறு அமைந்ததா?

இலக்கியவாதி2 :
நன்று ஐயா!
தங்களால் வள்ளுவன் சமணரா பௌத்தரா சைவரா வைஷ்னவரா என்கிற எனது ஐயத்திற்கு
அவர் வைஷ்னவரே அதுவும் இந்துமதத்தினை உள்வாங்கிக் கொண்டவரே என்று எவ்வளவு
அழகாக விளக்கிச்சொன்னீர்கள்­ . இது குறித்து புத்தகமொன்றை
வெளியிடப்போகிறேன் நிச்சயம் தாங்கள் தான்
அணிந்துரை எழுதிட வேண்டுமென்பது என் அன்பு கட்டளை.

இலக்கியவாதி1: இருக்கட்டும் ஐயா நன்று , நான் எடுத்துரைத்த வள்ளுவன்
குறளில் அவர் வைஷ்னவரென்று ஒப்புக்கொண்டதில் மகிழ்சி எனக்கு ,
அதைவிடுங்கள் வள்ளுவன் கோயில் எங்கேனும் இருக்கிறாதா என்று கேட்டீர்களே !
நானும் சென்னை திருமயிலையிலும் , திருச்சியிலும் பெருமாள் பிள்ளையாக ஐயன்
காட்சியளிக்கிறார் என்று கூட சொன்னேனே அவ்விடங்களை சென்று ஐயன் அருளை
பெற்றீர்களா? அயன் வள்ளுவன் ஆசியை பெற்றீர்களா?
இலக்கியவாதி 2 . நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று ஐயன் வள்ளுவனை
தரிசித்தேன் ஐயா இந்த இந்துமதம் தான் எத்தகைய சான்றோர்களை இம்மண்ணிற்கு
தந்துள்ளது . தாய்மதம் இந்து என்பது எவ்வளவு பெரிய உண்மை ஐயன் வள்ளுவனின்
திருக்கோயில்களை அறிமுகப்படுத்தியதற்க­ாக நன்றி ஐயா ! தங்கள் அனுமதியோடு
எழுதப் போகும் நூலிற்கு இதையே என்னுரையாக எடுத்தாளப்போகிறேன் .

சில வினாடிகள் இருவரும் பேசவில்லை

இப்போது முதல் இலக்கியவாதி பேசத்தொடங்குகிறார்.

இலக்கியவாதி1 :
ஐயா!! இந்த கலைஞரெனும் கருணாநிதிக்குத்தான் எவ்வளவு பெரிய துணிச்சல் இந்த
கிழடு தன்னை பகுத்தறிவாதியென்று சொல்லிக்கொண்டு நம்மதத்தையல்லவா
பின்பற்றி நாட்டை பிடித்தது நல்லவேளை இக்கிழடுவை விரட்டிவிட்டு மக்கள்
முதல்வர் அம்மாவை இம்மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.­ தூய்மையான இந்து
பற்றாளர் ராமாயணம் ,மகாபாரதம் ஆகிய நம் மூல இலக்கியங்களை கற்றோருக்கு
சிறப்புச்சலுகைகள் அளிக்கிறார் .
இலக்கியவாதி 2 . மிக உண்மை ஐயா அந்த கிழடு இருந்திருந்தால் இந்நாட்டையை
கூறுபோட்டு விற்றிருக்கும் ஏதோ எம்பெருமான் அருளால் மக்கள் முதல்வர்
அம்மா அவர்கள் நமக்குக் கிடைத்தார் . பிறந்த உன்னதத் தலைவர் மோடி அவர்கள்
பிரதமராகி நமக்கெல்லாம் புதியதொரு புத்துணர்ச்சி அளித்திருக்கிறார் .

இலக்கியவாதி1 : அப்புரம் இன்னுமொரு தகவல் ஐயா! அதை கேட்டதிலிருந்தே
நெஞ்சு வெடிக்கிறது . கோபம் கொழுந்து விட்டெரிகிறது . என்ன ஜனநாயக நாடிது
தற்போதீ கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் பறிக்கப்படுகிறதே
தொலைகாட்சியை பார்த்ததிலிருந்து தூக்கமேயில்லை
சக இலக்கியவாதியும் நம்மில் ஒருவருமான பெருமாள் முருகள் அவர்களின் மீதான
தாக்குதலைத் தொடர்ந்து இந்த இந்துக்கள் இப்போது ுரையூர் குணா, புலியூர்
முருகேசன் என்று எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டும் தாக்கப்பட்டும்
வன்முறையில் ஈடுபடுகிறார்கள் இந்த அரசும் இந்த முற்போக்குச்
சிந்தனையாளர்களான கம்யூனிஸ்டுகளும் , திக வினரும் இன்னும்பிற
முற்போக்குச் சிந்தனையாளர்களும் எவ்விதமான எதிர்ப்பையோ அறிக்கையோ
கொடுக்கவில்லை . டிவில பார்த்தீங்கனா முருகேசன் ரொம்ப சீரிஸா மருத்தவமனைல
அனுமதிக்கப்பட்டதா சொல்ராங்க , ஜனநாயக நாட்டில எழுத்தாளர்களுக்கு
பாதுகாப்பும் இல்லாம போச்சு , உரிமையும் போச்சு .

இலக்கியவாதி2 :
ஆமாம் ஐயா இதுக்கப்பரம் எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார்
இப்போது வெறும் பெருமாள் முருகன்தான் என்று அவர் எழுதும்போதை கண்ணீர்
விட்டு அழுதேன் இப்போ என்னடான்னா தொடர்ந்து நம்ம மேல தாக்குதலை
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த அரசும் ,அரசோட சேர்ந்து கலைஞரும்
கலைஞரோட சேர்ந்து இந்த முட்டா மக்களும் நம்மள அழித்துக்
கொண்டிருக்கிறார்கள் மனம் பொருக்கமுடியவில்லை . யாராவது முற்போக்கு
சிந்தனையாளர்கள் கண்ணில் பட்டால் எங்களுக்காக ஏன் குரல் கொடுக்க
மறுக்கிறீர்கள் என்று நறுக்குனு நாலு வார்த்தை கேட்காமல் விட மாட்டேன்
."பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான் இப்படியான அராஜாகங்கள் நடக்கின்றது
"

இலக்கியவாதி1 : (மெல்லிய குரலில்) அப்படி ஏதும் அவசரப்பட்ட
வாய்விடாதீர்கள் நம்மக்கேன் வம்பு , இப்போது புத்தகம் வேறு வெளியிடுவதாக
கூறியிருக்கிறீர்கள் . பதிப்பகத்திற்கு ஏதேனும் தடைகளோ சிக்கல்களோ வரலாம்
அதனால் எதுவும் பேசாமல் எதையும் பார்த்த மாதிரி காட்டிக்காமல் தொடர்ந்து
எழுதிக்கொண்டிருங்கள்­ . (இப்போது மிக மெல்லிய குரலில்) அப்படி ஏதாவது
பிரச்சனை வந்திடுச்சினா பதிப்பத்த மட்டும் காட்டிக்கொடுக்காமல் இந்த
முட்டா முற்போக்கு வாதிகளை தூண்டி விட்டுட்டு ஏதாவது சாதி சங்கத்தில்
உங்களை இனைத்துக்கொள்ளுங்கள்­ .புத்தகமும் அமோகமாக விற்பனையாகும் . அப்போ
நான்! விடைபெறுகிறேன் ஐயா! ஏதாவது உடனடி தேவையென்றாலோ . சமூக வலைதளத்தில்
ஏதேனும் பரப்புரை செய்வதாக இருந்தாலோ என் நம்பருக்கு உடனே போன் செய்து
விடுங்கள் எந்நேரத்திலும் உதவி செய்ய காத்திருக்கிறேன் . நன்றி!

இருவரின் கைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அடுத்து இவ்வுரையாடல்
இலக்கிய நயத்துடன் பேஸ்புக்கில் பதிவிட அவரவர் மடிகணிணியின் முன்
அமர்ந்திருக்கிறாகள்.­ (இருவர் மனதிலும்) "நாங்கல்லாம் ஒரு புள்ளி
வைத்தாலே லைக்கா வந்து குவியும்"

"இதுவொரு கற்பனையே "

அவள் குளிக்கிறாள்

அவள் குளிக்கிறாள்
அருகினில்
நானில்லை

அவளும்
பெண்ணல்லவா

அவளின்
உச்சந்தலையில்
தொடங்கி
உள்ளங்கால்
வரையில்

ஒழுகும் சீனத்து
மஞ்சள் நதியின்
வாசம் கண்டு
வசமிழுத்து வாழ்ந்துவிடும் பூஞ்செடிகளின்
மடியில் தவழும்
தேனை

ருசிக்க வந்த
பட்டாம்பூச்சிகளோ
மயங்கி விழ
நான் காதலால்
மயக்க
முற்றிருப்பதை
எப்படி
அறிந்தனவோ
அந்த
பட்டாம்பூச்சிகளென்ற வியப்புதான்

என் மிச்சக்
காதலையும்
சுமந்துச் செல்கிறது சுகமான
காதலிதுதானோ!

இங்கே நகையடகு வைக்கப்படும்

நாளை
அக்சயதிருதிகை
இன்றே
அடகு கடையில்
நகைகள்
___

அதிக நேரம்
காதிலும்
மூக்கிலும்
வேப்பங்குச்சி
நகையாக
___

நகைகள்
வாங்க
காசில்லை
தங்கமாக
ஜொலிக்கிறது
வேர்க்கடலை
___

அவர்கள்
புன்னகை
அப்போதுதான் தொலைந்திருந்தது
வீடு முழுக்க
ஒரே
அடகுச் சீட்டு
____

எப்போது
மீட்கப்படுவோம் எதிர்பார்த்தே காத்திருக்கிறது அடகுநகைகள்
___

வட்டி போட்ட
குட்டி
மூழ்கிப்போன
அடகு
நகைகள்
___

இன்றும்
குடியில்
மூழ்கிடவேண்டும் அடகுகடையில்
கடைசியாக
பறிக்கப்பட்ட
தாலி
____

அவசியம்
நகை
வேண்டும்
ஆபத்து காலத்தில்
அடகு கடைகளை
அவை
அழகுபடுத்தும்
___

வாழாவெட்டியான
மணப்பெண்
பிறந்த வீட்டிற்கே வந்துவிட்டாள்
அடகு நகைகளாக
____

Tuesday, February 24, 2015

தெரேசா தேசத்துரோகியா?

தொட்டால்
தீட்டென்றாய்
துடிதுடித்து
போனோம்

அமரும்
திண்ணைகளில் தண்ணீருற்றி
கழுவினாய்
தலைவிதியென
தன்னையே
திட்டிக்கொண்டோம்

தாய் குலத்தை
தேவசாசி
தேவடியா
ளென்றாய்
துடைத்துக் கொண்டே தூரதேசமிதுவென
வாழ்வுதனை
வலிந்து பெற்றோம்

உங்களுக்கேன்
ரவிக்கை என்றாய் உடையிலும்
ஊடுறுவியது
சாதியொளி

கல்வி கற்க
ஆசை எங்களுக்கு
கல்லால் அடித்து விரட்டினீர்கள் முதுகெங்கிலும்
முளைத்த
கொப்பளக்
காயங்களில்
வழிந்த சீழுக்கு
மருந்திடகூட
மறுத்தது
இம்மானிட
பிறவி

மனிதனை
மனிதனே
தள்ளிவிட்டான் மரணக்குழியில்
குழிகளும்
குதூகலப்பட்டது

உங்களாலே
நாங்களோம்
தொழு
நோயாளியாக

தூரே
எரிந்தீர்கள்
தொடர்ந்து
பழகும்
வீட்டு
விலங்குகளும் வாய்விட்டே
சிரித்தது

எங்களின் பரிதாப
கோலம் அதற்கு பவளமுத்துக்களாக தெரிந்ததோ
என்னவோ

வீதியெங்கும்
ஒரே நாற்றம்
விரட்டப்பட்ட உடல்களில் வெளியெறிய
நாற்றம்தான்
அது

வந்தாள் ஒருவள்
தூரதேசத்து
பெண்ணவள்

வீதியிலறங்க தயங்கிடவில்லை
இவர்கள்
தொழுநோயாளி
எனும்போதிலும்
தொட்டே
தூக்கினாள்

வற்றிப்போன
எங்களின்
வயிற்றிற்கு
பிச்சைக்
கேட்டாளவள்

எச்சில்
உமிழ்ந்தார்கள்
பலர்

பரவாயில்லை
உமிழ்ந்த
எச்சில் எனக்கு
உடையேனும்
கொடுங்கள் அவர்களுக்கென்றாள்

உள்ளத்து அன்பால்
ஊரையே அழச்செய்தவள் அவளிறுதி
ஊர்வலமே
அதற்கு
சாட்சி

அவளொரு
அடுத்த
மதக்காரிதான்
அவள் உள்ளத்தில் எப்போதும்
மதவெறி
இருந்ததில்லை

மோகன் பகவத்தே அன்னை தெரசாவை தேசத்துரோகி,
மதவெறி
பிடித்தவள்
என்கிறீர்களே

கடலை விட
பெரிதான மூவாயிரத்துக்கும்
மேலான
மனுதர்மம்
ஈன்றெடுத்த
இந்துத்துவ
சாதிசனங்களை
என்றேனும்
தொட்டதுண்டா?
தன்மானத்தோடு
அவர்களின்
தோளோடு தழுவியதுண்டா?

தரணியில்
புரள்கிறது
உங்களின்
வேஷம்

விரைவில்
வெகுண்டெழுவோம் விழுதுகளையே
சாய்த்து விடும் எங்களுக்கு
இந்துத்துவ
ஆணிவேரை அசைப்பதென்பது
எங்களுக்கு
எளிதான
காரியமே!

காத்திருங்கள் புரட்சியொன்று
பூமியதிற
புறப்படுகிறது,,,

நதியின் தாகம்

வரண்டுபோன
நதியானது
தாகமெடுத்து
கடைசியாக
முத்தமிட்ட
முகங்களை
தேடிக்
கொண்டிருக்க கிடைக்கவில்லை எங்கும்
மணலின்
ஊற்றுப்படுகை

கண்பார்க்கும் திசையெல்லாம் எம்மைப்
போலவே
ஏக்கங்களை
சுமந்த எத்தனையோ
முகங்கள்

எண்ணிப்
பார்க்கிறேன் கடத்தும் லாரிகளில்
கையசைத்து காப்பாற்றென்கிறது
ஆற்று மணல்

அழுவதைத் தவிர
வேறொன்றும்
தோன்றவில்லை

விரலொடிந்த
கைகளையே
விசாலாமாய்
பரப்பிவிட
வெட்டியவன்
அருகிலேயே வேக வைத்திருக்கிறான் கூர்முனை மழுங்கிய கடப்பாறையை

அவ்வளவு
சீக்கிரத்தில் அவனும் நகர்வதாய்
தெரியவில்லை
அனைத்தும்
நகர்மயமாகிப்
போனதால்

மாசந்தோரும்
மழைவருமா
மகிழ்சியில்தான் நதியாடுமா

சிந்தனையில்
சிறகொடிந்த
மனிதர்கள்தான்
மண்ணில்
மையல் கொண்டிருக்க மனசாட்சிதான்
என்ன செய்யும்

மடிந்துபோன
மனசாட்சியை
ஒருமுறையேனும் ஒளிரவிட்டுக்
கேளுங்கள்

ஓராயிரம் கதைகளை
சொல்லும்
உலகம் சுற்றும் வாலிபர்கள்
நதிகளென்று

சிறைச்சாலை
கட்டுவதற்கும்
சிறகொடிந்த
ஆற்று
மணலைத்தான் அள்ளுகிறீர்கள்

அறிவீரோ

ஆருதலுக்கேனும் விட்டுவையுங்கள் விடியுமுன்
கானாமல்
போகின்றோன் காற்றோடு
கரைந்து
போகின்றோம்

விடுதலை தாராயோ விழுங்கும்
மனிதயினமே

எங்களுக்கும்
ஏக புதல்வர்களுண்டு பூமித்தாய்
வயிற்றில்
பிறந்தவர்கள்
நாங்கள்

விடுதலை தாராயோ விழுங்கும்
மனிதயினமே,,,

Monday, February 23, 2015

ஜெ விற்காக சிலுவையை சுமந்தானாம் ஹூசைனி

முன்னாள் முதல்வரும்
இன்றைய குற்றவாளியுமான அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும்
ஆட்சி அரியணையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற
வேண்டுதலில் சிலுவையில் தன்னைத்தானே அறைந்திருக்கிறார் அந்த அதிமுக தொண்டன் ஹூசைனி
இந்துத்துவத்தில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைக்கு நிகரான நாங்களும்
இருக்கின்றோம் என்று சவால் விடுகிறது அவரை சுமந்திருந்த சிலுவை
அன்று ஒரு சரித்திர புரட்சிக்கான விதையாக அமைந்திருந்த அந்தச் சிலுவை
இன்று பல தரித்திரங்களின் கையில் சிக்கி
சின்னாபின்னாமாகிக்கொ­ண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக இச்சம்பவத்தை
எடுத்துக்கொள்ளலாம்
ஏற்கனவே இந்துவமயமாகிப்போன
அதிமுகவின் அழகான அடிமைத் தொண்டர்கள் எடுத்த காவடி முதல் மண்சாதம்
வரையில் மறந்துவிடாது இந்த மனம் அவ்வளவு பெரிய பெரும்பான்மை முட்டாள்களை
வாக்களித்து வக்காளத்து வாங்கி வெற்றிபெறச்செய்தது
நாம்தானே
அதனால் அவர்களை வேடிக்கைப்பார்த்தே
பழகிப்போயிருந்தது
தமிழ்மண்ணிற்கு
புதிதொன்றுமில்லை
அந்த வகையில் இன்றைய ஹூசைனி யின் அதிமுக வின் அடிமைகளாக சிறுபான்மை
கிரிஸ்த்துவர்களும் கயிறாக பிணைந்துள்ளனர் என்பது தெளிவு ஏற்கனவே மாதா
எனும் தொலைக்காட்சி பரிசுத்த ஆவியானவரே என்றழைப்பதற்குப் பதில்
பரிசுத்த அம்மா அவர்களே என்று புகழ்பாடும் வேடிக்கையும் இங்கே
நடந்துக்கொண்டிக்கத்த­ான் செய்கிறது.

பொதுவாகவே என் கழுத்திலொரு சிலுவை
தொங்கவிடப்பட்டிருப்ப­ேன் . இது இவன் கிருஸ்த்துவ மதத்தான் என்பதை
பறைசாற்றும் விதத்தில்லை . ஏனெனில் மார்க்ஸியமும் பெரியாரிஸமும் போதித்த
கடவுள் மறுப்பினை உள்வாங்கி கொண்டிருக்கிறேன். இருந்தும் இச்சிலுவை
உறுத்தவில்லையா என கேட்கலாம் . உறுத்தவில்லை உங்களின் பார்வையில் அது
கிருஸ்த்துவ அடையாளம் எனது பார்வையில் அதுவொரு கொலைக்கருவி.
நியூட்டனின் ஆப்பிள் வித்தையை அப்படியே உள்வாங்கிக்கொண்டது சிலுவைக்
நிகராக வேறெதையும் சொல்லிவிட முடியாது மனத இனத்தில் ஆர்ப்பரிய அழிவிற்கு
ஆதாராமாய் அவன் கண்டுபிடித்த சக்கரத்தை விட சாதனையை சுமக்கிறது இந்த
சிலுவையெனும் கொலைக்கருவி

உலகில் கொடுமையான கொலைக்கருவிகளில்
முதலிடம் பெற்றிருப்பது இச்சிலுவையெனும்
கொலைக்கருவிதான்
காரணம் இயற்கையின்
புவியீர்ப்பு விசையினை அப்படியே உள்வாங்கி
ஆளைக்கொல்லும் அனிச்சை செயலை சிலுவையைத் தவிர வேறெந்த கொலைகருவியும்
செய்துவிடவில்லை
இப்படியான மனித படைப்பில் கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட இயேசுவிற்கே
மனிதளித்த தண்டனையில் அவனால் தயாரிக்கப்பட்ட கொலைகருவிக்கு ஒரு இடம்
ஒதுக்கியே
வைத்திருக்க வேண்டும்

கடவுளை போதித்த கடவுளாக்கப்பட்ட தூதுவனான இயேசுவின்
தேவன்தானே அந்த
சிலுவையை உறுவாக்கும் சக்தியை மனிதனுக்கு கொடுத்திருப்பான் அப்படியிருக்க
அவனெப்படி கடவுளானான் . அதே கடவுள்தானே சாத்தானை படைத்திருக்கிரான்
சாத்தானின் குணநலன்களை உள்வாங்கி அச்சாத்தனையே உலகிற்கு அர்ப்பணித்த
அவனெப்படி கடவுள் அவனும் சாத்தான் வகையில் இரண்டறக்கலப்பவன் தானே
எனும் கேள்விகளை பறைசாற்றும் விதமாக என் கழுத்தில் எப்போதும் அச்சிலுவையை
தொங்கவிட்டிருப்பேன் .
இப்போது விட்ட இடம்
தொடங்குகிறது அது ஹூசைனி க்கான இடம்
கராத்தே மாஸ்ட்டரென பெயர் வாங்கிய ஹூசைனி க்கு பகுத்தறிவில்லா பச்சை நரம்புகளெதற்கு
நிச்சயம் அச்சிலுவையிலேயே
சாகவேண்டியர்தான்
அவர் . வாக்குமூலம் வேறு வாந்தியெடுக்கிறது
"என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கம்
வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான்
முடியும்" எப்படியான முட்டாள் தனமிது. திறமையிருந்தால்
அம்மாணவர்களனைவரும் சாதனையாளர்களே .ஒரு வேளை வாய்ப்பு
மறுக்கப்படுமேயானால் அது விளையாட்டுத்துறையை ஆக்ரமித்துக்கொண்டிரு­க்கும்
பூணூல் முதலாளிகளையேச் சாரும் . அந்த பூணுல் முதலாளிகளை நியமிப்பதே ஆளும்
அரசுதான் . என்ற அறவுகூட இல்லாத இவர்களால் தங்கப்பதக்கம் வென்றிட
முடியாது மாறாக தங்கப்ப தக்கம் தான் வாங்கிக்குவிப்பார்கள­்.
முட்டாள்கள் இருக்கின்ற வரையில் முதலாளிகள் கொழுத்திருப்பார்கள் என்ற
சிந்தனைக்கெதிராக சிலுவையை பலியிட்டிருக்கிறார்க­ள் இவர்கள்.
முடிவினை எட்டும் போது முழுதாய் சொல்லிவிட வேண்டும்
ஒன்றைப்பற்றி , இந்த சிலுவையில் அறைவதற்காக காவல்துறையிடம் அனுமதி
வாங்கவில்லை அவர்களும் ஹூசைனி யை கைது செய்துவிட மாட்டார்கள் ஏனெனில்
ஆட்சியதிகாரம் அதிமுகவின் பலமாகிபோயிருக்கிறது சர்வாதிகாரம் எப்போது
சர்வாதிகாரத்தை கைது செய்திருக்கிறது . இன்னும் பல வேடிக்கைக்களை பார்த்த
படியை பழகிபோயிருக்கிறான்
தமிழன்.

பாசத்திற்குரிய பாட்டி

ஒரு
செல்லச் சினுங்களை சிறகடிக்க
விடுகிறாள்
தாய்மனம்
தனதுயிரை
துட்சமென
தூரேயும் எரிகிறாள்

சுமந்த வயிற்றிலேயே சுரண்டவளும் படுத்துறங்குகிறாள் பாசாங்கில்லா
மழலையவள்

சின்னச் சின்ன
சண்டைகளில்
சிதைந்து விடாத சிலைவடிக்கும்
சிற்பியின்
கைகளுக்கு
தங்க காப்பிடுகிறாள் தமையனவனிடம்
செல்லமாய்
சினுங்கி
விளையாடுகிறாள்

ஆர்ப்பரிக்கும்
ஆரவார கூச்சலிட்டு
அடுத்த யுகங்களை
அவளும் கடக்கிறாள் நண்பனவனிடம்
நஞ்சினை விதைக்காத அப்பாவி முகத்திலவள் அகிலத்தை
ஆள்கிறாள்

கைதொடும் இன்பம்
கலவியில் கரைபடிந்ததில்லை கடைசிவரையில்
கணவனவனிடம்
காலத்தை
செதுக்குகிறாள்

கானும் இடமெங்கிலும் கானக்குயிலாகி வாழ்வியலின்
வசந்தங்களை
பாடித்திரிகிறாள்

அவளே மீண்டும்
தாயாகிறாள்
வாழ்க்கையின் சுழற்சிதனில்
சுழன்றும் வருகிறாள்

பெற்றெடுத்த
பிள்ளைகளை
செல்லமாக திட்டியும் புதுவரவாம்
பிள்ளைகளின்
மனைவிகளை
அன்போடு
கண்டித்தும்
அவளும் பெண்ணென
அறிந்தே அவர்களுக்கே ஆதரவாகவும்
நிற்கிறாள்

உள்ளங்கால்
முதல்
உச்சந்தலை
வரையில்
பேரக்குழந்தைகளை பேணிக்
காத்திடுகிறாள் பேரக்குழந்தைகளின்
பேரன்ப
தூக்கத்திற்காக
கதை கதையாய் பேசியவள்

மீண்டுமவள்
மழலையாகும்
முதுமையினை
தொட்டு
முத்தமிடும் போது

மாறியதனைத்தும்
தலைகீழாக

தற்போதவள்
பேசும் பேச்சுகள் அனைத்தும் தனிமை அளித்த தண்டனையாகவே தெரிகிறது
அவளுக்கு

அந்தளவிற்கு
அனைத்தையும் இழந்திருந்தால்
அணைத்து ஆருதல் மொழி வீசக்கூட அவளருகே
ஆளேயில்லை

முதியோரில்லத்தில் புலம்பித் தவிக்கிறாள் புழுவாய் துடிக்கிறாள்
பாசத்திற்கேங்கும் பாட்டி!

முதல் சந்திப்பு

கோர்வையாய்
வியர்வையை
கோர்த்தெடுக்கும்
கோடை காலம்
அது

இன்னும்
இமைகளை
மூடவில்லை
நான்

முந்தைய தினத்தில்
என்னை முழுதாய்
தின்றுக்
கொண்டிருந்தது திகட்டாத உதடுகள்

பார்வையிலொரு
பயத்தினை
கலந்து
பறந்தோடும்
பறவைகளை போலே
பார்க்கலாம்
நாளையென
பக்குவமாய்
எடுத்துரைத்து
ஏடுகளில் எழுதாத
முற்றத்து
முல்லைக்கு
திடீரென
கால்முளைத்து
கைகளில் சிறகுகள்
முளைத்தது போல்
சொல்லிவிட்டு
பறந்தாய்

அந்த நிமிடத்தில்
அது சொர்ப்பனமா?
சொர்க்க பூமியிலுள்ளோமா?
என எண்ணிப்
பார்ப்பதிலே
மலையேறிய
மாலைக்
கதிரவனையும்
மறந்தே போனேன்

ஓர் அரவமற்ற
அமைதி கருநிழல்
இரவினை
கடக்க நேரிடுகையில் கனவுகளும்
கல்லெறிந்து
துறத்தியது
இரவினை

சீக்கிரம்
விடிந்துவிடு
அவன் காதல்
சிகரத்தை
தொட்டுவிட
துடிக்கிறான்
கல்லெறிந்த
கனவுகள்
கடைசியாக
விடுத்த
இரவுக்கான
எச்சரிக்கை மட்டும்
ஏந்தி நிற்கிறது
எனதுடல்

மலரும் மொட்டுகளில் விலகிய பனியானது விடிந்தது பொழுதென வக்கனையாய்
எடுத்துரைக்க

வழிநெடுகிலும்
பூவிரிய
ஆளில்லா
அனிச்சை சூழலை
நானே உறுவகப்படுத்தினேன்

என்ன பேசுவது?
எப்படி தொடங்குவது? எவ்வாறு நடப்பது?
எவ்வகை வெளிபடுத்துவது? எதையும் விட்டு வைக்கவில்லை எல்லாவற்றையும்
எண்ணிப்
பார்க்கையில் எவற்றுக்கும்
விடை
தெரியவில்லை

திருவிழாவில்
தொலைந்த
குழந்தை மனம்
போல
குழந்தை தேடும்
தாயுள்ளம் போல
தவித்து கொண்டிருந்தேன் தரணியில்
புரண்டிருந்தேன்

பூமிக்கிறங்கிய
பூவுலக தேவதைபோல புன்னகையை சிதறிவிட்டபடியே
எனதருகே
வந்தமர்ந்தாய்

நாவெழவில்லை
இருவருக்கும்

அடிக்கடி என்னையும்
எனை சுற்றிய
பகலையும் பயத்துடனே பார்த்திருந்தாய் பத்திரபடுத்தி வைக்கச் சொல்கிறது பாவிமனது

உன் நாவிதழ்
முதலெழும் என
நானும்
என் நாவிதழ்
முதலெழும் என
நீயும்
முழுபிரம்மை
பிடித்திருந்தது

யார் தொடங்குவது
பூவிற்கு சமமானவள்
பெண்ணல்லவா
தொட்டால் சினுங்கி
பூ வினமல்லவா

நானே நாவிதழை
நடைபழக
விடவேண்டு மென்றென்னி
உன் பெயரை
உச்சரிக்க
உதட்டினை விரித்தேன்

வெறுங்காற்று
வெண்னிலவை
தொடுகிறது

முழுதாய் வெளிவர
மறுக்கும் எனதொலி
எழுந்திருக்கும்
முன்பே
சட்டென எழுந்து
நின்றாய் நீ

நேரமாகிவிட்டது
வேற்று வாசிகள்
வரும் சத்தம் கேட்கிறது வருகிறேன் நானென
சொல்லி

மலர்விரிந்து கிடக்கும்
பூவுலகில் தேனைத்
தேடும் தேன்சிட்டாய்
சிறகசைத்து பறந்துவிட்டாய்

காலம் கடந்தோடி
கடலை அடைந்து
கதிரவன் காலில்
விலகி
உச்சந்தலையில்
ஓங்கிக் கொட்டுவதை
அப்போதான்
உணர்ந்திருந்தேன்

அத்தனை கனவுகளையும்
உடைத்தெரிந்தேன்
இதுதான் காதலா?
இதுதான் காதலின்
மாயாஜாலமா?

காதலில் நாவெழாதெனும்
உண்மை அறிந்தவன்
உலக விஞ்ஞானிதான்

பெண்மை ஆராய்வதில்
பெற்று
விடுவானவன்
நோபல் விருதினை

முற்றிய விரக்தியுடனே
முடிந்துபோன நிகழ்வுடனே
முன்னேற மறுக்கிறதென்
கால்கள்

காத்திருக்கிறேன்
அடுத்தச் சந்திப்பு
எப்போது
அவசியம் பேசிவிட
வேண்டும் அவளிடம்

அதற்கு முன்பே
அவளை அனுகுவதெப்படி
அலைகடலின்
அனுபவத்தை
நானும்
அறிந்திடல்
வேண்டும்

இப்படிக்கு காதலன்

ஒரு எதார்த்த
இடைவெளியில்
எனதுயிர்
விளக்கேற்றி
இம்மடலை
வடிக்கிறேன்

உன் விழிகளில் வழிந்தோடும்
விருட்சக்
கனவுகளாக
வலிகளுக்கு
மருந்தாக
இந்த மடல்
அமையுமெனும் நம்பிக்கையில்
நான்

படித்து விடடி
என்
பாசத்திற்குரியவளே

குறுஞ்செய்தியில்
தொடங்கி
குனிந்த தலை நிமிர்ந்திடாத
வாட்ஸ்சப் வரையில் யுகங்களை
கடந்து விட்டோம்
ருசியற்ற மடலிது
என்
விழிகளுக்கு
விருந்தாகுமா?

மடலை
எழுதும் போதே முகத்திலெழும் கிண்டலையும்
கணித்து விட்டேன்
அதையும் நான்
ருசித்து விட்டேன்

கஷ்டம் தான்
என்ன செய்ய
கணிணியும்
கைபேசி யுகமும்
தராத காதல்
சுகத்தை
காதலை ஏந்திய
இந்தக் காதல் மடலல்லவா
தருகிறது

இணையம்
வீழ்த்தியது
மொழியை
மட்டுந்தானா
இல்லவேயில்லை
நம் காதலின்
அசைவுகளும்
அதிலடங்கும்

மடலை வாசிக்கும்
முன்பே
உன் காதுமடல்
கம்மல்
மழலையாவதை
நானறிவேன்

காகிதம்
கைதொடும்
முன்பே
உன்
கால்களிரண்டும் நடனமாடுவதை
நானறிவேன்

என் வார்த்தைகளை
சுமந்து வரும் எழுத்துக்களை
ஏந்தும்
கண்களுக்கு
பௌர்ணமி
நிலவு
பரிசாகட்டும்

மடலை
பிரித்து படி
செவ்விதழில்
சொற்கள்
சொர்க்க பூமியில்
சுழன்று வரட்டும்

பிரித்தவுடன்
தெரிகிறதா
காதலில்
முளைத்த
காகித மடலின்
அருமை

இதோ முதலெழுத்தே முத்துக்களை சிதறிவிடுகிறது

பத்திரமாக
பார்த்துக்கொள்
அதை இதய
பாத்திரத்தில்
சேமித்து வை

நம் காதல்
கைகூடும்
வேளையில்
அதுவே
கழுத்திற்கு மாலையாகட்டும்

அழகில்
பூத்தவளே
ஆருயிர்
காதலியே

கேள்

மழையெனும்
மழலையை
மடியில்
சுமக்கும்
வான்மேகமொரு
தாயெனில்

பத்து மாதம்
காதலெனும்
மழலையை
மடியில்
சுமக்கும்
நானுமொரு
தாய்தானே

எப்போது எனக்கு
பிரசவம்
பார்ப்பாய் நீ

காதல்
மழலை
அவ்வப்போது
வயிற்றில்
உதைக்கிறாள்(ன்) வலியும்
சுகம் தானே
சுமந்தே மெய்சிலிர்க்கிறேன்
நான்

நானென்பது
நாமாக
அமையும்
வேளையில்

வான்மேகத்து
பிரசவமும்
என்னுடைய
பிரசவமும்
ஒன்றாக அமைந்து பரசவசத்தில்
வாழ்நாட்களை
எண்ணலாம்
வழிநெடுகிலும் வழிந்தோடும்
மழலை
மழையும்
நம் காதல்
மழலையும்
காற்றினில்
மீண்டும் கலந்து காலமெல்லாம் பெற்றெடுக்கும்
அதுவும் பல
மழலைகளை

சிறு துளி பெரு
வெள்ளமாம்
பெரியோர்கள்
சொன்னதிது
பொய்த்து
விடலாகுமா
பொய்க் காதலுக்கு
நாமும்
இடம்தந்திடலாமா

இம்சையிலும்
இழப்பினிலும்
இமைமூடா
பிரிவினிலும்
வாழுமாம்
காதல்
வளர்த்தெடுப்போம் வாழ்வுதில்
ருசி கானுவோம்
காகிதம் சுமந்து
வந்த காதலை
வாசிக்கும்
செவ்விதழும் காட்சியாக்கும் கருவிழியும் கலங்குவதையும் சினுங்குவதையும்
சிந்துவதையும்
நானறிவேன்
வருத்தம் வேண்டாம் வந்துவிடுவேன்
விரைவில்
உன் விரல் தொடாமல்
மண்ணில்
வீழ்ந்து விடாது எனதுடல் வாழ்த்தி வழியனுப்பிவிடு விரைவிலொரு
முடிவை எட்டிவிடு விடைபெருகிறேன்




இப்படிக்கு
காதலன்

Sunday, February 22, 2015

வாசல் கோலங்கள்

காலை திங்களவன்
பட்டொளி வீசி
புல் மீது படர்ந்து பனித்துளிகளை
பருகி தாகம்
தணிக்கின்றது
தாவித் தாவி குதிக்கின்றது,,,

வண்டுக்கு
தேனை தந்துவிட்டு
வாடி நிற்கும்
மலருக்கு
வாடா மல்லி
பெயரெதற்கு
வாடியதுதான்
காரணமா
வந்து பழியை
சுமந்து நின்றதும்
சுகமென
எண்ணியதோ
சாளரத்து
திங்களவன்,,,

விடிந்தவுடன்
அவள்
வீட்டு வாசலை
பார்க்கத்
தோன்றுகிறது
எனக்கு,,,

தாகத்திலும்
ஏக்கத்திலும்
திங்களவனும் நானும் ஒன்றென ஓசையெழுப்பிய
ஆலைய மணியோசையை
அப்படியே
உள்வாங்கிய
காதுகளுக்கு
கவர்தலோசை
மிக பிடிக்குமாம்,,,

அவள்
கோலமிடும் அழகிலும் கொக்குகள்
இடம்பெயர்தல்
போல சுற்றி சுற்றி வட்டமிடும்
அவள் இடையினழகை
கோலங்கள்
கவனித்ததாய்
தெரியவில்லை,,,

கவனம் முழுக்க வைத்திருக்கிறது
பார்வையை
தெளிக்கும்
என் கண்கள்,,,

காது மடலோடு
காதல் பூண்டது
கண்கள்,,,

இன்பமயமான
வேளையில்
சத்தமிடும் அவள் கொலுசோ
நாடிநரம்புக் கோர்வைகளில்
குத்தி
விளையாடுகிறது,,,

கோலம் பூசணி
மலருக்காக
காத்திருப்பதை
போல
உன் ஒற்றை
பார்வைக்காக
காத்திருக்கிறேன்,,,

கடைசி வரிகள்
கொலுசோடு சுற்றி வருகிறதென்
கவிதைகளாக
காதலை எப்போது
சொல்வாயோ
காத்திருக்கிறேன்
கண்மணியே!

Saturday, February 21, 2015

குயிலிறகு

கொஞ்சம் கொஞ்சமாக
குயிலிறகினை பெயர்த்தெடுத்து
குவித்து
வைத்துள்ளேன்
கூச்சத்தில் குயிலும்
நெளிந்தாடுகிறகு,,,

என்னவள் கார்கூந்தல்
ஏற்குமா
கருப்பிறகினை
குயிலே
கொஞ்சும் மொழியில் கூப்பிடு
என்னவளை,,,

கருவிழிகளில்
காதலெனும்
மைபூசி சுண்டியிழுக்கிறாள்
அவள்
சுருண்டு விழுந்த இதயத்தில்
சுகமாக பரவிய
காதல் தேனை
பருகிட வேண்டும்
நான்,,,

பக்கத்தில்
அமர்கிறாள்
முகபாவனையில்
ஏனோ
முந்திச் செல்கிறது
ஊடல்,,,

குயிலிறகே
குதூகலத்துவிடு
அவள்
கார்கூந்தலில்
உனக்கோர்
இடம்
ஒதுக்குகிறாள்,,,

உன் குழலோசையில்
கொஞ்சம்
ஸ்ருதி சேரட்டும் காதுமடலில்
குயிலோசை
குடிபோகட்டும்,,,

அவளின்
இதழோரம்
இதயக்கனல்
எரிகிறது,,,

எழுந்திரு குயிலே
மயிலிறகு
மடியில்
சாய்கிறது
இப்படியே
வாழ்ந்திட வேண்டும்
நான்,,,

வழியப்புகிறேன்
உன்னை
யுகங்களை தாண்டி மீண்டுமென்னை
பார்க்க வந்துவிடு
நான் பறித்த
உன் சிறகுகள்
பூவுலகில்
மிதந்து
கொண்டிருக்கும்,,,

இதுவரையில்
இதயவலியை
இடம்பெயர
உதவிய
குயிலிறகே
மனதாரச்
வாழ்த்துகிறேன்,,,

மனதிலெழும்
நன்றியினை
மறக்காமல்
வாங்கிக்கொள்,,,

வையகம்
வசைபாடுமுன்னே வாழ்ந்துவிடவும்
எனை நீயும்
வாழ்த்திடவும்,,,

விண்மீன்களை பரிசளிக்கிறேன்
குயிலிறகே
வாங்கிக்கொள்!
விண்மீன்களை பரிசளிக்கிறேன்
குயிலிறகே
வாங்கிக்கொள்,,,

மார்க்ஸிய மர நிழல்

ஆடைகளின்றி
அலைகிறார்கள்
அவர்கள்
பருத்தியை
பதம்பார்க்கும்
இவர்கள்
பகிர்ந்தளிப்பார்களா
என்ன
பஞ்சத்தின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

பசி பட்டினியில்
அலைகிறார்கள்
அவர்கள்
நிலம்படாத
பாதங்களாக
இவர்கள்
பதுக்கிய உணவினை
பகிர்ந்துண்பார்களா
என்ன
பற்றியெரியும்
வயிற்றின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

தாகத்தில்
தவிக்கிறார்கள்
அவர்கள்
தர்பாரையே
நடத்துகிறவர்கள்
இவர்கள்
தண்ணீரை பருக
தாராளமாய்
கொடுப்பார்களா
என்ன
விக்கலை விழுங்கித்
தாகம் தணித்தார்கள்
அவர்கள்
அடிமையின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

விடுவதாய் இல்லை
விரட்டிய வறுமை
விதைகளை
பொசுக்கத்
தாயாரான
அவர்களுக்கு
தங்குமிடம் , தன்மான
எண்ணம், தார்மீக
பொருப்பென
தந்துதவியது
மார்க்ஸிய
மரநிழல்

புரிந்தது
அவர்களுக்கு
புரட்சி
விதைகளை
பொசுக்குவது
தவறென்று

போர்க்குணம்
நமக்குண்டு
பூமியை
புரட்டிப்போடும்
பொதுவுடமை
நமக்கென்று
போராளியே
நீ முழங்கு!,,,

ஆகட்டும் பார்க்கலாம்

அன்றொருநாள்
நீயெனுக்கு
பரிசளித்த
பார்வையின்
வணப்புகளை
சேகரித்து
வைத்திருக்கிறேன்,,,

உனக்கென
நான்
எனக்கென
நீயென
உள்ளத்து
உணர்வுகளை
காதலெனும்
குவியலாக்கினேன்,,,

குனிந்த தலை
நிமிரவில்லை
ஆகட்டும்
பார்க்கலாமென்று
அவசரமாய்
மறைந்து விட்டாய்,,,

அதுவே
ஆறுதலெனக்கு,,,

அன்று முதல்
உனை சந்திக்கும்
போதெல்லாம்
எனதியத்தை
ரசமாக பருகிய
விழிகளை பார்த்தே
உரையாடலை
தொடங்கினேன்
வேறெதுவும்
தோனவில்லை
எனக்கு,,,

கெண்டை விழியாளே
தித்திக்கும் தீஞ்சுவையே
கற்பனையில் நான்
மிதந்து கலங்கி
நிற்கிறேன்,,,

ஒருநாள்
உன்னைக் கான
ஓடோடி
வந்தபோது
ஊமையாகி
நிற்கிறது
உனது விழிகள்
ஊனமாகி போனது
நம் காதலெனும்
கால்தடங்கள்,,,

காலத்தின்
இச்சூழ்நிலையை
பழிப்பதா? பறிப்பதா?
இதயத்தில்
விழுந்து விட்ட
இக்கேள்விகளுக்கு
இன்றுவரை
விடை
தெரியவில்லை,,,

Friday, February 20, 2015

என் பார்வையில் "கடைசி மனிதன்"

தொட்ட இடமெங்கும்
தேள் கொட்டிவிட
கானுமிடமெல்லாம்
கல்லறைகளாக
காட்சி நெளிய
எழுதிவிடுகிறான் எழுதுகோல்
ஏதுமின்றி

சல சலவென
ஓயாமல் பேசிய
பொழுதுகள்...
சிறுகச் சிறுகச்
சிந்தியது அவனது பேச்சொலிகள்
பிரியங்களை பகிர்ந்த வார்த்தைகள்
அவனது ஆன்மாவிற்கு மட்டுமே பரிமாறப்பட்டன

நிகழும் பரிமாற்றத்தை உணர்ந்து அவ்வப்போது குறிப்பெழுதுகிறான் தரையில்

கூழாங்கற்கள் கல்லறைகளோடு
புணர்வதையும்
முத்தச்
சத்தங்களையும் முத்துக்களாக சேகரிக்கிறான்

மூழ்கிடாது அவனது காதல் நினைவுகள்
உறவுகளின்
சிதறல்கள்

கல்லறைகளில்
உலாவருகிறான்
ஒரு பேய்களையும் கானவில்லை
பேச்சி துணைக்கு
ஒவ்வொரு கல்லறையாக
அவனும் சென்று
மதி வரைந்த
ஓவியமாக மனதிலெழும்
எண்ணங்களை
மயான வெளியில்
பரப்பி விடுகிறான்

பாதைகள் வழிவிடவில்லை நித்திரை தொலைத்து நினைவுகளுடனே
நீண்ட நேரமாய்
அவனது மூச்சுக்காற்றுகள் மூர்க்கமாய் விழித்திருந்தது

எங்கும் சூழ்ந்திருந்த கருப்புடல்
இரவுகளை அவன்
கானவேயில்லை

அவன் முகத்தை
பார்க்க
நிலவுக்கும் ஆசையில்லை
மறைத்து கொண்டது மேகத்திரையில்

மோகனங்கள்
முளைக்கத் தொடங்கிய அதிகாலை
மணமணக்கும்
மல்லிகையின்
மீது பிறந்தது
காதல்
கதிரவனுக்கு
கதிர் வீச்சுகள்
மல்லிகை
பூவின் மேல்
மயக்கம்
கொண்டிருந்தது

தெளியாத மயக்கத்துடனே தேசத்தில் ஒளியினை உமிழ்ந்துக் கொண்டிருந்தது கதிரவன்
அவ்வொளியில் ஊடுறுவி அனலை குளிரச்
செய்துவிடுகிறது
எங்கும் வீசிக்கொண்டிருந்த அவனது
உயிர்காற்று

அனலுடலால் உயிர்காற்றின்
அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை

மல்லிகை மயக்கத்தில் விடைபெற்று
உயிர்காற்றுத்
தேடலில் இறங்கியது கதிரவனின் கதிர்கள்

இறுதியான தேடலில் தேர்ச்சி கண்ட
கதிரவன்
உயிர்காற்றின்

கலையிழந்த முகம்,
மூடாத விழிகள்,
இன்னும் பேசிக்கொண்டிருக்கும்­ அவனுதடுகள்,
வற்றியது கண்ணீரென காட்டிய கண்ணங்களை
கதிர்கள் கண்டதும்

யாரிவன்? யாரிடம் பேசுகிறான்? மண்தரையில் அவனது கை
எழுதுகிறதே! அடுக்கிய கேள்விகள்
ஆயிரம் முளைவிட

வேருக்கு நீராகரம்
தேடி அவனருகே சென்றது கதிரவன்

மனதிலெழுந்த
ஆயிரம் கேள்விகள் மரணித்துப் போனது அவனது
காட்சிதனை
கானுகையில்
கதிரவனும்
கண்கலங்கி போனது

உறங்க
மறுத்து கல்லறையில் காட்சிப்பொருளாகி குவிந்து கிடக்கும் பிணங்களுடன்
இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறான்

இவன்தான் உலகின்
கடைசி மனிதனென
உணர்கையில்
கதிரவனும் கண்கலங்கித்தான்
நின்றது,,,

காட்சிப்பிழை

மாடத்தில்
புதுவிளக்கு
இன்று
பௌர்ணமி
____

உழைத்து
வியர்த்த
உடம்புகள்
தோளில்
துயரம்
சுமக்கிறது
துண்டுகள்
____

அவனியை
வலம் வரும்
ஆண்டவன்
கையில்
தோலில்லா
எலும்புக் கூடுகள்
___

வழிந்தோடிய
வாடைக்காற்று
மௌனமொன்றே சாட்சிக்கூண்டில்
___

கற்பில்லா
ஆண்மகன்
கடைச்சரக்கில்
குவிந்து விட்டது
விலைமகளிர்
இல்லங்கள்
___

எந்த ஓநாய்கள்
வீசியதோ
மானிட உடலெங்கும் சாதியெனும்
பாவத்தழும்பு
____

நெஞ்சை விட்டு
நீங்காத நெடி
சூடுபிடிக்கும்
தமிழீழ
வியாபாரம்

_____

தூளியில் குழந்தை

பால் சுரக்காத
முலைகள்
இருந்தும்
அப்போதைக்கு
ஆருதலாய்
மடியில்
குழந்தை

____

அழுகை
நின்றிடவில்லை
பேராளும்
விடுவதாய்
இல்லை
தூளியில்
குழந்தை

___

வயிற்றில்
ஈரத்துணி
வற்றித்தான்
போனது
குழந்தையின்
சிரிப்பு

____

ஜோடி பொருத்தம் பார்க்கவில்லை
வறுமையில்
மெலிந்த
காலுக்கு
மெழுகானது
காலணிகள்

____

பாலுக்கு அழும்
குழந்தை
இருந்தையும்
வந்தவன்
வாயில் திணித்தான்
விபச்சாரி பட்டத்தை

___

தலையணை
மெத்தை வீடு
எதுவும்
வேண்டாம்
தெருவோர
தூளியில்
குழந்தை

____

பசிக்கிறது
குழந்தைக்கு
கோயிலில்
பாலபிஷேகம்
வாயிலில் நின்ற
-தாய்

_____

பாட
புத்தகமெல்லாம்
தராசில்
தொங்கியது
தொடர்ந்து
வந்த
வறுமையால்

____

கணவன்
குடிகாரன்
கழுத்தில்
தாலியெனும்
-தூக்குக்கயிறு
____

மேடையில் சீர்திருத்த முழக்கம்
சிரித்தே கடந்து போனாள் ஒருவள்
முழக்கம் முனகியது கட்டிலில்

___

Wednesday, February 18, 2015

முண்டச்சி முறையிடல்

தேங்கி கிடந்த
சருகிலைகள்
அதன்மேல்
மிதந்து மீண்டுவர முற்படுகிறது
மீந்துபோன
பனித்துளிகள்

அனிச்சை
வார்த்தைகளில்
ஆங்காங்கே
வழிந்தோடும்
வாழ்க்கை
கோடுகளை
கண்டும் கானாது சேகரிப்பில்
இறங்கிய
சேற்றுப் புழுதிகள்

வாழ்வினிது
வையகம்பெரிது
வசனங்கள்
அறியுமா
வரிக்குதிரை
வடுக்களை
தாங்கிய
உதிர்ந்துபோன
அச்சருகிலைகள்

மெஞ்ஞானம்
விஞ்ஞானம்
இரண்டும்
ஆராய இறுதிபக்கம்
முடிந்த தாளில் முற்றுப்புள்ளியாக
மூழ்கி கிடக்கிறது அச்சருகிலைகள்

குனிந்த தலையுடனே குளத்தங்கரையில் முண்டச்சி

முடிவளர்ந்தது போல் மீண்டெழுந்தது
மரங்களில் புதுக்கொழுந்துகள்

முழுதாய் பாரமில்லை ஆனாலும்
வலிக்கிறது
மகரந்தம் பரப்பும் பறவைகளே
பட்டாம்பூச்சிகளே இம்முண்டச்சி
மீண்டெழும்
மீட்சிக்கான வழிச்சொல்லுங்களேன்

வெ­ட்டுண்டும் துளிர்க்குமாம்
முருங்கை மரம்
வீட்டருகே
நட்டுவைத்தும் வெற்றிடங்களே
வாழ்வுதனை
நிரப்பியது

எந்தன் வெள்ளை நிறத்திற்கு எப்போது விடுதலை
குறிகேட்க வந்திருக்கிறேன் கூறிவிடுங்கள்
சருகிலைகளே

குற்றமேதும்
செய்யவில்லை
கத்திவிட்டு கிழிக்கிறார்கள்

வீதியெங்கும்
இவ்வுடலை
வேடிக்கை பார்த்தே நடக்கிறார்கள்

நானுமொரு
வெண்ணிற
பூனைதான்

பொறு,,
முண்டச்சி
குறுக்கே
போகிறாள்
மூழ்கிப்போகும்
முக்கிய
காரியமென்று
மூக்கைச் சிந்தும் மூர்க்கமான
இவ்வுலகில்

எழிலழகு
எல்லாம்
பெண்னென
போற்றப்பட்டது என்னைத்தவிற

எந்தன் வெள்ளை நிறத்திற்கு எப்போது விடுதலை
குறிகேட்டு வந்திருக்கிறேன் கூறிவிடுங்கள் சருகிலைகளே,,,

Tuesday, February 17, 2015

மகத்தான பால்யம்

புத்தகம்
மயிலிறகு
புழுதி படிந்த
புத்தகப்பை
மடியில்
தவழும்
பால்யபருவம்

எங்கும்
எதிலும்
கானக்கிடைக்காத
கண்ணாடி
ஒளிச்சிமிழ்
ஒளித்து வைத்தவன்
யாரோ

ஓங்கியெழும்
ஒய்யார நடையில்
ஒற்றைக் காதலில்
அழகுப்பறவை
பால்யத்தின்
அண்ணப்பறவை

அழகே
அறிவே
அன்பே
அடுத்த நிமிடம்
விலகிப் போகிறேன்
அழைக்கிறது
கல்லூரி

அங்கேயும்
முளைத்திடுமா
அழகான
பால்யபருவம்

இல்லையில்லை
இது வித்தியாசம்
விழிகளில்
வியப்பினை
தேடுகிறது
அடிக்கவும்
ஆளில்லை
அணைக்கவும்
ஆளில்லை
தானாக தேடியதொரு
தட்பவெப்ப நிலை

மெதுவாக நகரும்
ஏகாந்த மாயை
பார்வையில் எங்கோ
பற்றிய அனல்
தானாக எரிந்தது
நட்பெனும் பஞ்சு

அனுபவம் பெற்றது
கல்லூரியில்
அனுபவத்தது
எப்போதும்
பால்யத்தின்
மடியில்

நித்திரையில்
எப்போது
நிஜமெழும்
கடந்து போன
கல்லூரியை
காற்றோடு சேர்ந்தணைக்க
ஆசை

அழைக்கிறது
அடுத்தது
வாழ்க்கை
போராடியதில்
போர்முனையில்
நின்றது
கத்தி
அப்போதும்
தோற்றே போனது
வாழ்வெனும்
யுக்தி

விடவில்லை
வாழ்வினை
வென்றது
வேட்கையின்
வியர்வைத்துளி
வெறுப்போடு
இவ்வாழ்க்கை
போனாலும்
தயிரை கடைந்த
மத்தாகிபோனது
மகத்தான
பால்யம்

Sunday, February 15, 2015

தாமதமானதா நம் அரசமைப்புச்சட்டம் தயாரிக்க;

அரசியல்
நிர்ணய
சபையின்
பணிகளை ஒரு முறை திரும்பிப்
பார்க்கும்போது, 1946 ஆம்
ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில்
கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள்
பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள்
கழிந்துள்ளன. இந்தக் கால அளவில்
அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில்
பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப்
பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப்
பற்றிய
தீர்மானங்களை நிறைவேற்றவும்,
அடிப்படை உரிமைகள் பற்றிய
குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின்
அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை,
ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய
அறிக்கை, மாகாண அரசியல்
அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை,
சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை,
பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை,
பட்டியல் பழங்குடியினர் பற்றிய
அறிக்கை ஆகியவைகளைப்
பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு,
ஒன்பது, பத்து மற்றும்
பதினோராவது அமர்வுகள், அரசியல்
சாசன வரைவுச்
சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன.
அரசியல் நிர்ணய சபையின் இந்தப்
பதினோரு அமர்வுகளுக்கும் 165
நாட்கள் பிடித்தன.
வரைவுக் குழுவைப் பொறுத்தவரை,
அது அரசியல் நிர்ணய சபையால்
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29
அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில்
அது தன் முதல்
கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30
ஆம் நாளிலிருந்து 141 நாள்கள்
அது அமர்வில் இருந்தது. இந்த
சமயத்தில் அது அரசியல் சாசன
வரைவைத் தயாரித்தது. வரைவுக்
குழுவின் பணிக்கு அடிப்படையாக,
அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர்
தயாரித்து, வரைவுக் குழுவின்
பணிக்கு அடிப்படையாகக்
கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் –
243 விதிகளையும் 13
அட்டவணைகளையும் கொண்டிருந்தது.
வரைவுக் குழு அரசியல் நிர்ணய
சபைக்கு அளித்த முதலாவது அரசியல்
சாசன வரைவில், 315 விதிகளும் 8
அட்டவணைகளும் இருந்தன.
பரிசீலனைக் கூட்டத்திற்குப்
பிறகு அரசியல் சாசன வரைவில்
அடங்கியிருந்த விதிகளின்
எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது.
அதன் இறுதி வடிவத்தில் அரசியல்
சாசன வரைவு, 395 விதிகளையும் 8
அட்டவணைகளையும் கொண்டுள்ளது.
சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல்
சாசன வரைவுக்கு முன்
வைக்கப்பட்டன. இவற்றில்
எதார்த்தத்தில் சபையில்
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475
ஆகும்.
இந்தத் தகவல்களையெல்லாம் நான்
ஏன் கூறுகிறேன் என்றால்
ஒரு கட்டத்தில், இந்தப்
பணியை முடிப்பதற்கு அரசியல்
நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக்
கொள்கிறது என்று கூறப்பட்டது. அது,
பொதுமக்கள் பணத்தை விரயம்
செய்து ஆமை வேகத்தில்
பணியாற்றுவதாகக்
குறை கூறப்பட்டது.
‘ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன்
பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது’
என்று பழி சுமத்தப்பட்டது. இந்தக்
குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம்
உள்ளதா?
அரசியல் சாசனங்களை உருவாக்க
மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய
சபைகள் எடுத்துக் கொண்ட
நேரத்தை நாம் பார்க்கலாம். சில
எடுத்துக்காட்டுகள் : 1787 மே மாதம்
25 அன்று கூடிய அமெரிக்க
கன்வென்ஷன், தன் பணியை 1787
செப்டம்பர் 17இல்
அதாவது நான்கு மாதத்தில் முடித்தது.
கனடா நாட்டு அரசியல் சாசன
அமைப்பு கன்வென்ஷன், 1864
அக்டோபர் 10 இல் கூடியது; 1867
மார்ச்சில் அரசியல் சாசனம்
ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும்
அய்ந்து மாதங்களும் எடுத்துக்
கொண்டது. ஆஸ்திரேலியாவின்
அரசியல் சாசனத் தயாரிப்பு அவை,
1891 மார்ச்சில் கூடியது; 1900
சூலை 9 இல் அரசியல்
சாசனத்தை உருவாக்கியது. 9
ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
தென்
ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908
அக்டோபரில் கூடியது; 1909
செப்டம்பர் 20 இல் அரசியல்
சாசனத்தை நிறைவேற்றியது.
இதற்கு ஓராண்டுக்கால
உழைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென்
ஆப்பிரிக்க
அரசியல் சாசனத்
தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம்
அதிக காலம் எடுத்துக்
கொண்டது உண்மைதான். ஆனால்,
கனடா கன்வென்ஷனைவிட அதிக
காலம் எடுத்துக் கொள்ளவில்லை;
ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக்
குறைவாகவே நாம் எடுத்துக்
கொண்டிருக்கிறோம். நாம் கால
அளவை ஒப்பிடும் போது,
இரண்டு விஷயங்களைக் கவனத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, கனடா, தென்
ஆப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின்
அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல்
சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான்
ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல்
சாசனத்தில் 395 விதிகள் உள்ளன.
அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7
விதிகள் மட்டுமே உள்ளன. முதல்
நான்கு விதிகள் 21 பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டு அரசியல் சாசனத்தில்
147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில்
1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல்
சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.
இரண்டாவது விஷயம்
என்னவென்றால் – அமெரிக்கா,
கனடா,
ஆஸ்திரேலியா மற்றும்
தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின்
அரசியல் அமைப்புச்
சாசனங்களை உருவாக்கியவர்கள்,
திருத்தங்கள் சம்பந்தமான
பிரச்சினையைச் சந்திக்க
வேண்டியிருக்கவில்லை.
முன்மொழியப்பட்ட
வடிவத்திலேயே அவை ஏற்றுக்
கொள்ளப்பட்டன. ஆனால்,
அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய
சபை 2,473 திருத்தங்கள்
வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த
உண்மை களை எல்லாம்
கணக்கிலெடுத்துக்
கொண்டு பார்த்தால்,
நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற
குற்றச்சாட்டு, முற்றிலும்
ஆதாரமற்றது என்று எனக்குத்
தோன்றுகிறது. இவ்வளவு கடினமான
பணியை, இவ்வளவு விரைவில்
நிறைவேற்றியதற்காக, அரசியல்
நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப்
பாராட்டிக் கொள்ளலாம்…
ஒரே ஒரு தனிப்பட்ட உறுப்பினரைத்
தவிர, வரைவுக் குழுவின் பணிகளைக்
குறித்து, அரசியல் நிர்ணய
சபை உறுப்பினர்களின்
பாராட்டுதல்களில் பொதுவான
உடன்பாடு காணப்படுகிறது.
தனது பணிகளை அங்கீகரித்து,
தன்னிச்சையாக தாராளமாக
வழங்கப்பட்ட பாராட்டுதல்களினால்,
குழு மகிழ்ச்சி அடைந்திருக்கும்
என்பதில் அய்யமில்லை. இந்த
வரைவுக் குழு சபையின்
உறுப்பினர்களும் வரைவுக் குழுவில்
என்னுடன் பணியாற்றிய நண்பர்களும்
என் மீது பொழிந்த புகழாரங்களுக்கு,
நன்றி தெரிவித்துக் கொள்ள
சொற்கள்
கிடைக்காமல் திண்டாடுகிறேன்.
பட்டியல் சாதியினரின் நலன்களைப்
பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர,
வேறு எந்தவித நோக்கங்களுமின்றிதான்
நான் அரசியல் நிர்ணய சபையில்
சேர்ந்தேன். அதிகப் பொறுப்பான
பணி களை ஏற்க நான்
அழைக்கப்படுவேன் என்று நான்
சிறிதளவுகூட சிந்திக்கவில்லை.
என்னை வரைவுக்
குழுவுக்கு சட்டமன்றம்
தேர்ந்தெடுத்தபோது, நான் பெரிதும்
வியப்படைந்தேன். வரைவுக்
குழு என்னை அதன் தலைவராகத்
தேர்ந்தெடுத்தபோது, நான் அதைவிட
கூடுதல் வியப்படைந்தேன்.
எனது நண்பர்
அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யர்)
போன்ற என்னைவிட மிகவும்
தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள்
வரைவுக் குழுவில் இருந்தனர். என்
மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு,
பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து –
அவர்களுடைய கருவியாக என்னைப்
பயன்படுத்தி – நாட்டிற்குத்
தொண்டு செய்ய
எனக்கு அளித்துள்ள
வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய
சபைக்கும், வரைவுக் குழுவிற்கும்
நன்றியுடையவனாக இருப்பேன்…
எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப்
பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால்,
அரசியல் நிர்ணய சபையின்
நடவடிக்கைகள் சுவையற்றதாக
இருந்திருக்கும். கட்சிக் கட்டுப்பாடு,
அதன் கண்டிப்பான தன்மையால்
சட்டமன்றத்தை ‘ஆமாம் சாமி’களின்
கூட்டமாக மாற்றியிருக்கும்.
நல்லவேளை சில ‘புரட்சியாளர்கள்’
இருந்தனர். திரு. காமத், டாக்டர் பி.எஸ்.
தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர்
சக்சேனா, பண்டிட் தாகூர்தாஸ்
பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிட
வேண்டும். அவர்கள் எழுப்பிய
பிரச்சினைகளெல்லாம் பெரும்பாலும்
சித்தாந்தம் பற்றியவையே.
அவர்களுடைய ஆலோசனைகளை நான்
ஏற்றுக் கொள்ளத் தயாராக
இல்லாதிருந்தது, அவர்களுடைய
ஆலோசனைகளின் மதிப்பைக்
குறைத்துவிடவில்லை. சட்டமன்ற
நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம்
அளிக்க, அவர்கள் செய்த
பணியை குறைத்து மதிப்பிட
முடியாது. நான் அவர்களுக்கு மிகவும்
கடமைப்பட்டுள்ளேன். அவர்கள்
இல்லையென்றால், அரசியல்
சாசனத்தின் அடிப்படை யான
கோட்பாடுகளை விளக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காமல்
போயிருக்கும். அரசியல்
சாசனத்தை எந்திர கதியில்
நிறைவேற்றுவதைவிட
இது முக்கியமானது.
இறுதியாக, இந்தச்
சபை நடவடிக்கைகளை நடத்திய
முறைக்கு தலைவர் அவர்களே,
உங்களுக்கு நான் என் நன்றியைக்
கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த
சபையின் நடவடிக்கைகளில்
பங்கு கொண்டவர்களுக்கு – தாங்கள்
காட்டிய பரிவும், மரியாதையும்
அவர்களால் மறந்துவிட முடியாது.
வரைவுக் குழுவின் திருத்தங்கள் சில
தருணங்களில் தொழில் ரீதியான சில
காரணங்களினால் ரத்து செய்யப்பட
வேண்டி வந்தது.
அவை எனக்கு மிகவும் நெருக்கடியான
தருணங்களாக இருந்தன. அரசியல்
சாசனத் தயாரிப்புப் பணி; சட்டப்
பிடிப்பில் சிக்கிக்கொள்ள
அனுமதிக்காததற்கு நான் முக்கியமாக
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பர்கள் திரு.
அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யரும்),
திரு. டி.டி. கிருஷ்ணமாச்(சாரி)யும்
அரசியல்
சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க
முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்
ளனர். எனவே, நமது அரசியல்
சாசனத்தின் சிறப்புத் தகுதிகளைப்
பற்றி இப்பொழுது நான் பேசப்
போவதில்லை. ஏனெனில், ஓர் அரசியல்
சாசனம் எவ்வளவு சிறப்பாக
இருந்தாலும் அதைச்
செயல்படுத்து பவர்களின்
தன்மையைப் பொறுத்து,
அது மோசமானதாக மாறலாம். ஓர்
அரசியல் சாசனம் எவ்வளவு மோசமாக
இருப்பினும், அதைச்
செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக
இருப்பின் – அது ஒரு சிறந்த அரசியல்
சாசனமாக செயல்படும். ஓர் அரசியல்
சாசனத்தின் செயல்பாடு அதன்
தன்மையை மட்டும் முற்றிலும்
சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான
சட்டமன்றம், ஆட்சித்துறை,
நீதித்துறை ஆகியவைகளை உருவாக்க
மட்டும் அரசியல் சாசனம்
வழிவகை செய்யும். ஆனால், அரசின்
இந்த அமைப்புகளின்
செயல்பாடுகளுக்கு ஆதாரமான
காரணிகள் – மக்களும், அவர்கள் தங்கள்
நோக்கங் களையும் அரசியல்
விருப்பங்களையும் நிறைவேற்ற
கருவிகளாகப் பயன்படுத்தும் அரசியல்
கட்சிகளுமேயாகும். இவற்றின்
செயல்பாடுகளைப்
பொறுத்தே அதன்
வெற்றியுள்ளது.

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...