Tuesday, February 10, 2015

அம்பேத்கரின் அழுகுரல்

பொதுவாக பாலியல் வன்கொடுகளுக்கு சாதியச்சாயம் பூசுவதை எப்போதும் ஏற்க
முடியாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமூகச் சீர்கேடான பெண்கள் மீதான பாலியல்
வன்கொடுமைகளுக்கு சாதியம் பூசிவிட்டால் அதன் போராட்ட வீரியம் குன்றி
மீண்டும் சாதியத்தின் வெறி தலையெடுக்கும் பழையபடி பாதிக்கப்பட்ட பெண்
இன்னார் சாதியென்று ஊடகமும் அரசியலாளர்களும் வெளிபடுத்திவிட்டு
அச்சாதிக்காரரே போராடட்டும் நமக்கு இதில் பங்கில்லை எனச் சொல்லிவிட்டு
கடைசியில் விலகியே நிற்கும். இவ்வாறாகத்தான் பல பாலியல் வன்கொடுமைகள்
மறைக்கப்பட்டதாக நாமனைவரும் உணர வேண்டும். தற்போதுள்ள சூழலில் அச்சாதியப்
பார்வையை அடிமைச் சமூகத்தின் மீதே எழுதும் கட்டாயத்தில் இச்சமூகம்
தள்ளப்பட்டுள்ளது .

"தன் சாதித் திமிர் தலித்துவனுக்கும்
வரக் கூடாது"

என்பதையே இன்றும் கடைபிடித்து வருவதால் தலித்தியத்திலும் தாராளமாக
விமர்சனம் வைக்கலாம் என்றே படுகிறது . ஏனெனில் அதற்கான சூழலையும் அவர்களே
வகுத்துக்கொடுத்து விட்டார்கள் . இதில் மற்றவர்கள் சாதிவெறியரென
சொன்னாலும் கூட கவலையில்லை அதனாலேயே பெயருக்கு பின்னால் சாதியிட்ட
தலித்துகளை ஏற்க மனமேனோ மறுத்து விடுகிறது.

ஆதிக்கம் செய்வதில் தலித்தியம் விலக்காகிடுமா?

என்ற கேள்வியுணர்வு தற்போது அனைவரின் மனதிலும் எழுகிறது.
காரணம் அடிமைச்சமூகத்திலோர் ஆதிக்க வெறி தலைபடுகிறது அது அருந்ததிய
மக்கள் மீது தன் விஷக்கத்தியை செலுத்துகிறது. எவ்வளவு பெரிய ஆபத்து
இதுவென்று எந்த தலித்தியமும் எடுத்துரைக்க வில்லை
குறைந்த பட்ச கண்டணத்தையோ, எதிர்ப்பையோ, தலித்தியம் பேசும் அமைப்புகளோ
அல்லது தலித்திய ஆதரவாளர்களோ அறிவுறுத்த தவறிவிட்டார்கள் என்பதே நிதர்சன
உண்மை. இம்மவுனமும் தலித்தியத்தை தானாக கொல்லுமென்று அவர்கள்
அறியவில்லையா? இல்லை அறிந்தும் மவுனமாகவே இருக்கிறார்களா? என்ற சந்தேகம்
எழுகிறது.ஏதோ குறிப்பிட்ட மக்களுக்காக அம்பேத்கர் "தலித்" எனும்
சொல்லாடலை பயன்படுத்த வில்லை ஒட்டுமொத்த அடிமைச் சமூகத்தையும்
ஒன்றிணைக்கும் சொல்லாக ஜோதி பாபூலே உறுவாக்கி அம்பேத்கர் அதையேற்று
அச்சொல்லிற்கு உயிரளித்தார் என்பதை இன்றைய தலித்தியர்கள் அறிய வேண்டும் .

சமீக காலங்களாக நடந்த பல்வேறு சம்பவங்கள் இதற்கு சவாலாய் நிற்கிறது .
சிவகங்கையில் அருந்ததியர் படுகொலை, நாமக்கல்லில் ஒட்டுமொத்த அருந்ததிய
குடுப்பங்களை ஒதுக்கியே வைத்தல் ,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் காமாட்சிபுரத்தில்
மூன்று பறையர் சாதி வெறியர்களால் பதின்ம வயது அப்பாவி அருந்ததியர் சமூக
சிறுமி திசம்பர் ஒன்றாம் தேதி கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது,
காஞ்சியில் அருந்ததிய கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை என பட்டியலை
அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம். இது எந்த மாதிரியான சூழலை
உறுவாக்கி மக்களுக்குத் தந்திருக்கிறதென்பதை தலித்தியர்கள் சிந்தித்துப்
பார்க்க வேண்டும் . சாதியத்தில் அடிமைபட்டுள்ள ஓர் அடிமைச் சமூகம் தங்களை
விட பொருளாதாரத்திலும், எண்ணிக்கையிலும் வலிமை குறைந்த அருந்ததிய
சமூகத்தை அடிமை படுத்துவதென்பது தலித்தியத்தின் தோல்வியென்றே
என்னத்தோன்றுகிறது. எப்படியானாலும் தலித்துவர்களும் இந்துத்துவ
சாதியத்தின் அடிமைகளே ! என்று தலித்தியம் எடுத்துரைக்கும் இச்செயல்
மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆதிக்கம் அதன் படிநிலையை அடைந்து அதன்
முழுமையான வெற்றியை கைக்குள் அடக்கிவைத்திருக்கின்­ற தலித்தியம்
இருக்கின்ற வரையில் தலித்தியத்தை ஒடுக்கும் ஆதிக்கச் சாதிகளை எப்படி
தலித்தியம் முறியடிக்க முடியும் . "போராடாத வரையில் கைபிடி மண்ணும்
அடிமையின் கைவிலங்கு" என்பதையல்லவா இது உணர்த்துகிறது. அம்பேத்கர் ,
ஜோதிபா புலே,பண்டிதர் , தாத்தா இரட்டைமலை , போன்றோரை கற்பிக்காமல்
அவர்களை புறக்கணித்து தன் சுயநல தேவைக்காக தலித்தியம்
பயன்படுத்தப்படுகிறதெ­ன்பதை இந்நிகழ்வு வெட்டவெளிச்சமாக்கியு­ள்ளது.
சுயநல தலித்தியச் சிந்தனையாளர்கள் கவனத்திற்கு கொஞ்சம் காதுகொடுத்து
கேளுங்கள். சட்டமும் அதை வடித்த அம்பேத்கரும் அழுவது உங்களுக்கு
கேட்கும். "சாதிதான் சமூகமெனில் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்பதை
இந்தியாவிற்கு உணர்த்திய அம்பேத்கர் உங்களுக்கு அரசியலுக்கு மட்டுமே
பயன்படுவதாக எண்ணிக்கொண்டு ஒரு அடிமை சமூகத்திலேயே எழும் இன்னொரு
அடிமைத்தனத்தினை எதிர்க்க தலித்திய தலைவர்கள் மற்றும் தலித்திய
அமைப்புகள் முன்வர வேண்டும் . அம்பேத்கர் பார்வையில் இதுவொரு அரைகூலாக
ஏற்றுக்கொண்டு அடிமையின ஆதிக்கத்தில் முற்றுபுள்ளி வைக்க அனைவரும் முன்வர
வேண்டும்.

1 comment:

  1. ஜாதி ஓட்டு போய்விடும் என்பதால் அரசியல்தலைவர்கள் அவர்களின் அருவடிகள் சமூக அமைப்புக்களை துணிந்து செயல்படவிடுமா என்பது??

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...