Monday, February 23, 2015

இப்படிக்கு காதலன்

ஒரு எதார்த்த
இடைவெளியில்
எனதுயிர்
விளக்கேற்றி
இம்மடலை
வடிக்கிறேன்

உன் விழிகளில் வழிந்தோடும்
விருட்சக்
கனவுகளாக
வலிகளுக்கு
மருந்தாக
இந்த மடல்
அமையுமெனும் நம்பிக்கையில்
நான்

படித்து விடடி
என்
பாசத்திற்குரியவளே

குறுஞ்செய்தியில்
தொடங்கி
குனிந்த தலை நிமிர்ந்திடாத
வாட்ஸ்சப் வரையில் யுகங்களை
கடந்து விட்டோம்
ருசியற்ற மடலிது
என்
விழிகளுக்கு
விருந்தாகுமா?

மடலை
எழுதும் போதே முகத்திலெழும் கிண்டலையும்
கணித்து விட்டேன்
அதையும் நான்
ருசித்து விட்டேன்

கஷ்டம் தான்
என்ன செய்ய
கணிணியும்
கைபேசி யுகமும்
தராத காதல்
சுகத்தை
காதலை ஏந்திய
இந்தக் காதல் மடலல்லவா
தருகிறது

இணையம்
வீழ்த்தியது
மொழியை
மட்டுந்தானா
இல்லவேயில்லை
நம் காதலின்
அசைவுகளும்
அதிலடங்கும்

மடலை வாசிக்கும்
முன்பே
உன் காதுமடல்
கம்மல்
மழலையாவதை
நானறிவேன்

காகிதம்
கைதொடும்
முன்பே
உன்
கால்களிரண்டும் நடனமாடுவதை
நானறிவேன்

என் வார்த்தைகளை
சுமந்து வரும் எழுத்துக்களை
ஏந்தும்
கண்களுக்கு
பௌர்ணமி
நிலவு
பரிசாகட்டும்

மடலை
பிரித்து படி
செவ்விதழில்
சொற்கள்
சொர்க்க பூமியில்
சுழன்று வரட்டும்

பிரித்தவுடன்
தெரிகிறதா
காதலில்
முளைத்த
காகித மடலின்
அருமை

இதோ முதலெழுத்தே முத்துக்களை சிதறிவிடுகிறது

பத்திரமாக
பார்த்துக்கொள்
அதை இதய
பாத்திரத்தில்
சேமித்து வை

நம் காதல்
கைகூடும்
வேளையில்
அதுவே
கழுத்திற்கு மாலையாகட்டும்

அழகில்
பூத்தவளே
ஆருயிர்
காதலியே

கேள்

மழையெனும்
மழலையை
மடியில்
சுமக்கும்
வான்மேகமொரு
தாயெனில்

பத்து மாதம்
காதலெனும்
மழலையை
மடியில்
சுமக்கும்
நானுமொரு
தாய்தானே

எப்போது எனக்கு
பிரசவம்
பார்ப்பாய் நீ

காதல்
மழலை
அவ்வப்போது
வயிற்றில்
உதைக்கிறாள்(ன்) வலியும்
சுகம் தானே
சுமந்தே மெய்சிலிர்க்கிறேன்
நான்

நானென்பது
நாமாக
அமையும்
வேளையில்

வான்மேகத்து
பிரசவமும்
என்னுடைய
பிரசவமும்
ஒன்றாக அமைந்து பரசவசத்தில்
வாழ்நாட்களை
எண்ணலாம்
வழிநெடுகிலும் வழிந்தோடும்
மழலை
மழையும்
நம் காதல்
மழலையும்
காற்றினில்
மீண்டும் கலந்து காலமெல்லாம் பெற்றெடுக்கும்
அதுவும் பல
மழலைகளை

சிறு துளி பெரு
வெள்ளமாம்
பெரியோர்கள்
சொன்னதிது
பொய்த்து
விடலாகுமா
பொய்க் காதலுக்கு
நாமும்
இடம்தந்திடலாமா

இம்சையிலும்
இழப்பினிலும்
இமைமூடா
பிரிவினிலும்
வாழுமாம்
காதல்
வளர்த்தெடுப்போம் வாழ்வுதில்
ருசி கானுவோம்
காகிதம் சுமந்து
வந்த காதலை
வாசிக்கும்
செவ்விதழும் காட்சியாக்கும் கருவிழியும் கலங்குவதையும் சினுங்குவதையும்
சிந்துவதையும்
நானறிவேன்
வருத்தம் வேண்டாம் வந்துவிடுவேன்
விரைவில்
உன் விரல் தொடாமல்
மண்ணில்
வீழ்ந்து விடாது எனதுடல் வாழ்த்தி வழியனுப்பிவிடு விரைவிலொரு
முடிவை எட்டிவிடு விடைபெருகிறேன்




இப்படிக்கு
காதலன்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...