Saturday, March 14, 2015

மார்க்ஸின் வறுமையில் காதல்

வறுமையில்
வாழாது
காதல்
என்போர்
பலரை கண்டேன்

பாவம்
அவர்கள்
பக்தியில்
மிதக்கிறார்கள்
என
பாவப்படுகிறதென்
மனது

பட்டினியில்
பாம்பாய்
நெளிவது
காதல்
என்போர்
பலரை
கண்டேன்

என் கருணை
அவர்கள் மீது
விழாதபடி
நானும்
பக்குவமடைந்தேன்

நமக்கென்று
நிரந்தரமாய்
தங்குமிடம்
இல்லையெனில்
தங்காது
காதல்
என்போர்
பலரை
கண்டேன்

நானுனர்ந்த
அரவணைப்பு
அவர்கள்
உணர
வாய்ப்பில்லை
உணர்த்தும்
உள்மனதை
இப்போது
திறக்கலானேன்

கேளுங்கள்
தோழர்களே

வறுமையிலும்
வாழ்ந்துவிடும்
காதல்
பசி
பட்டினியிலும்
சாகாது
காதல்
தங்க இடமில்லாதபோதும்
தங்க மகுடத்தில்
ஏறவைத்துவிடும்
காதல்

காதல் ஒன்றே
மனிதம் படைக்கும்
காதல் ஒன்றே
மானிடம் போற்றும்

எதையும்
நம்பிவிடாதீர்கள்
அறிவியலின்
தோல்வி
ஆராய மறுப்பதில்
இருக்கிறது

ஆதாரம்
தருகிறேன்
ஆகாரமாய்
பருகி
விடுங்களேன்

அவ்வாதாரத்தையும்
அலசி பார்த்துவிடல்
நன்று

ஹைகேட்
கல்லறையில்
அறிஞனொருவன்
உறங்குகிறானே
அவனே
காதலுக்கு
ஆதாரம்

அவன் ஒன்றும்
ஆடம்பர
மாளிகையில்
வசதியாய்
வாழ்ந்தவனில்லை

வறுமையில்
உழன்று
வாழ்க்கை
சுழற்சியில்
வாழ்ந்து
காட்டினான்
அம்மனிதன்
அவன் பெயர்
கார்ல் மார்க்ஸ்

வறுமையில்
பிறந்தது
"மூலதனம்"
நுகர்ந்து
பாருங்கள்
காதல் வாடை
வீசுமதில்
வசந்த மலர்களின்
வாசத்துடன்

வறுமையில்
வீழ்ந்தாலும்
கடைசி வரை
மார்க்ஸை
காதலித்தாள்
ஜென்னி

உண்மை காதலுக்கு
அவளே ஆதாரம்
அவளுக்கும்
பங்குண்டு
"மூலதனம்"
படைக்கவே
காதலை
மூலதனமாக
வைத்தவள்
ஜென்னி

ஆதாரம்
தந்துவிட்டேன்
அழகியல்
காதலை
அவர்களைபோல்
பெற்றெடுங்கள்

என்றும் நினைவுகளை
சுமந்தவாரே
கார்ல் மார்க்ஸின்
நினைவு நாளில்
மார்க்ஸியத்தை
மனதிலேற்றி
மாமனிதனின்
வறுமை காதலை
மனதார நானும்
புகழ்ந்திடுவேன்


14 March 1883 (வயது 64)

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...