Tuesday, April 21, 2015

-கெட்டவார்த்தைகள்-

கெட்ட வார்த்தைகள்

முதலில் இப்பதிவிற்காக 18+
போடவேண்டுமா எனச் சந்தேகம்
எழுகின்ற பொழுது அதற்கான
தேவை ஏற்படவில்லை என்றே
தோன்றியது இருந்தாலும் மனிதச்
சிந்தனையானது ஒன்றோடொன்று
வேறுபட்டிருப்பதனால்
வேண்டுமானால் அவரவர் 18+ என
தீர்மானிக்க முழுச்சுதந்திரத்தை
இப்பதிவு வழங்குகிறது.
தமிழ்ச் சமூகத்தில் ஓரு
இனத்தையோ அல்லது தனக்கு
ஆகாத நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களையோ,
எதிராளியென அடையாளம்
கண்டவர்களையோ ,ஏதேனும்
வாக்குவாதம் செய்யப்படும்போதை,
பிடிக்காதவர்களை
அவமானப்படுத்தப்படும் போதோ
நமது வாய்ச்சொல்லில்
அனாவசியமாகவும் இயல்பாகவும்
வந்து விழுகின்றன
கெட்டவார்த்தைகள்.பெரும்பாலும்
பெண்ணின இழிவினை
மையப்படுத்தியே உறுவான இந்த
கெட்டவார்த்தைகளானது
பிற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி,
முற்போக்குச்
சிந்தனையாளர்களானாலும் சரி ,
சக மனிதர்களானாலும் சரி
அப்போதப்போதைக்கு
அவர்களுக்கான சிந்தனைகளை
மறந்து தொடர் பெண்ணிழிவு
கெட்டவார்த்தைகளை உபயோகித்த
வண்ணம் உள்ளனர் .
இக்கெட்டவார்த்தைகள் இணையம்
வரையில் தொடர்ந்திருக்கிறதென்­­
பதுதான் காலத்தின்
கொடுமையாக இருக்கிறது.
ஆணாதிக்கம் எங்கும் பரவி
கிடக்கிறது என்பதற்கும் இதுவே
ஒரு சான்றாகவும்
அமைகிறது.அதே போல
பிஞ்சுள்ளம் கொண்ட
குழந்தைகளின் மழலைச்
சொல்லிலும் கெட்டவார்த்தைகள்
கலந்திருப்பதும் அதனை
அகமகிழ்ந்து பெற்றோர்களும்
உறவுகளும் வரவேற்று
பூரிப்படைகிரார்கள்
எனச்சொன்னால் பின்னுக்குத்
தள்ளப்படுகிறதா இந்தச்
சமூகமென்கிற கேள்வி எழத்தானே
செய்யும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரையில் வாயில் சகஜமாக
புழங்கும் கெட்டவார்த்தைகளின்
அர்த்தங்களை அவர்களும் அறிந்தே
வைத்திருக்கிறார்கள் ஆனால்
தன்தாய் சகோதரி என பார்க்கும்
மனநிலையிலிருந்து அவர்களும்
விலகியே இருக்கிறார்கள். இந்த
இடத்தில்தான் பெண்ணடிமைத்தனம்
வளர்த்தெடுக்கப்படுகிறது
எனலாம்."தெவிடியாப் பையன்"
இக்கெட்டவார்த்தையின்
அர்த்தமானது வெளிப்படையாகவே
தெரியும் காரணம் தேவரடியாள்
என்கிற தேவதாசியிலிருந்து
திரிபான வார்த்தை இது. கண்ட
ஆண்களிடம் உடலுறவு
வைத்திருக்கும் தாய்க்கு பிறந்த
மகனென்பது இதற்கான
வெளிப்படையான விளக்கம்.
இவ்வார்த்தை உபயோகிப்பவர் இது
பெண்ணடிமையை
உயர்த்திப்பிடிக்கிறது மனித
இனத்தின் உயர்வான தாய்மையை
இவ்வார்த்தை
கொச்சைப்படுத்துகிறது எனும்
சிந்தனையானது நமக்கேன்
இன்னும்
வரவில்லை.

அதைப்போலவே
தாயையும் தாய்மையையும்
கொச்சைப்படுத்தும் "ங்கோத்தா"
எனும் கெட்டவார்த்தை சகஜமாகவே
இங்கே அனைவருக்குள்ளும்
புழங்குகிறது .
சினிமாத்துறையானாலும்,சகமனிதனானாலும்,ஊடக­
மானாலும் இவ்வார்த்தைக்கான
அர்த்தமும் வெளிப்படையாகவே
தெரிந்தும் ஏதோ ஒரு பொய்யான
ஆளுமையினை மெய்ப்பிப்பதற்காக
"ங்கோத்தா" எனும்
கெட்டவார்த்தையினை ஆதரித்த
வண்ணமுள்ளனர். இப்போதைய
சினிமாக்களில் "ங்கோத்தா" என்பது
நாகரீகச் சொல்லாவே
பாவிக்கப்படுவதென்பது
பெண்ணடிமைத்தனத்தில் சேராதா ?
பெண்ணிழிவில் இவர்களும்
தன்பங்களிப்பை
செய்கிறவர்கள்தானே,
ஆங­
்கிலம்,இந்தி, வடமொழி,இன்னும் பிற
மாற்றுமொழிகள் தமிழ்மண்ணில்
வேறூண்றும்போதெல்லாம் எழும்
"தமிழ் இனி மெல்லச்சாகும்" என்கிற
ஆதங்க உணர்வு ஏன் தமிழ்க்
கெட்டவார்த்தைகளுக்கும்
பொருந்திப் பார்க்கப்படுவதில்லை,
கெட்டவார்த்தைகளென்ன அவ்வளவு
புனிதத் தன்மையினை தமிழில்
பெற்றிருக்கிறதா என்ன, அவ்வாறு
புனிதத் தன்மையினை
பூசியவர்கள் அனைவருமே
பெண்ணடிமையினை
ஆதரிப்பவர்களாகவே
பார்க்கப்படுவார்கள். வட்டாரத்
தமிழ்மொழி
கெட்டவார்த்தைகளிலும் புகுந்து
விளையாடுகிறதே இதனை ஏன்
தமிழுக்கும்,தாய்மைக்­­
கும்,பெண்ணினத்திற்கும்
விரோதமானதான பார்வை இங்கே
எழவில்லை. வடமாவட்ட தமிழ் புகும்
வார்த்தை "பாடு" என்பது
,விரோதத்தின் உச்சத்தில்
மனிதர்களை அழைக்கின்ற போது
"டேய் பாடு" எனச்
சர்வச்சாதாரணமாய்
உபயோகிக்கிறார்கள் .
தென்மாவட்டத்தில் இச்சொல்லாடல்
மாறுபட்டு "தாயோளி" என
மருவியிருக்கிறது.சொற்களில்
மட்டுமே வேறுபாடு
கொண்டிருந்தாலும் "பெற்றதாயை
அடுத்தவனுக்கு
கூட்டிக்கொடுக்கும் மகன்(ள்)"
என்பதே இரண்டு
சொற்களுக்குமான கெட்டவார்த்தை
அர்த்தமாகும் . இங்கேயும் மனித
இனத்தின் உயர்நிலை
"தாய்மையானது"
கொச்சப்படுத்தப்படுகிறதே எனும்
உருத்தல் ஏன்
எழவில்லை,பெண்ணடிக்கு
துணைபோன காரணத்தில்தானா
கெட்டவார்த்தை உபயோகிப்பவர்
மனதில் உருத்தல் எழவில்லை.

அதைப்போலவே "புண்டை , சிதி ,
கூதி , எனும் கெட்டவார்த்தைகள்
அனைத்தீம் "பெண்ணுறுப்பு"
பதமாக இருக்கிறது .
பெண்ணித்தின் உச்சந்தலை
தொடங்கி உள்ளங்கால் வரையிலான
வர்ணனைகளின் புகலிடமாக
கெட்டவார்த்தைகள் மேலோங்கி
இருக்கிறது . இதைவிடக்
கொடுமை தாய்மையின்
தன்மையான பெண்ணின
"முலைக்காம்பையும் "
இக்கெட்டவார்த்தைகள்
விட்டுவைக்கவில்லை .
இவைகளனைத்தும்
பெண்ணினத்திற்கான
தாக்குதலாகவும் , பெண்ணடிமை
போகச் சொல்லாடலெனவும்
தெரிந்தேதான் பயன்படுத்துகிறது
இந்த கேடுகெட்ட தமிழ்ச் சமூகம் .
கட்டுரை கட்டுரையாக
பெண்ணடிமை குறித்து
எழுதிவிட்டோ ,பேசிவிட்டோ
எங்களுக்கும் "கெட்டவார்த்தைகள்"
தெரியும் நாங்களும் அதனை
உபயோகப்படுத்துவோம் எனும்
தலைகணம் கொண்டவர்களுக்கு
மத்தியில் தான் இந்த பெண்ணினம்
அடிமை பட்டிருக்கிறது. அடுத்தவர்
உணர்ச்சிகளை
தூண்டுவிடுவதற்காக
கெட்டவார்த்தைகளை பயன்படுத்தி
தங்களின் தாய்,சகோதரிகளையே
கேவலப்படுத்துகிறார்கள் இவர்கள்.
இதுபோன்று இன்னும்
எத்தனையோ கெட்டவார்த்தைகள்
வட்டாரச்
சொல்லாடலாகவும்,பொதுச்
சொல்லாடலாகவும் தமிழ்ச்
சமூகத்தில் வலம் வருகிறது .
ஒட்டுமொத்த "கெட்டவார்த்தை"
சொல்லாடல்களுமே ஒன்றைத்தான்
ஆணித்தரமாக உணர்த்துகிறது ,
அது பெண்ணடிமையை போற்றி
வளர்த்தெடுக்கிறது. இதுபோன்ற
ஒட்டுமொத்த பெண்ணினத்தையே
இழிவுபடுத்தும் மற்றும்
அடிமைபடுத்தும்
கெட்டவார்த்தைகளை நம் தாய்தமிழ்
மொழிக்கெதிரான சமூகச்
சீர்கேடாக மனதில் ஏற்று
குறைந்தபட்சம்
"கெட்டவார்த்தைகளை" நாம்
தவிர்ப்பதென்பதுதான் நம்
பெண்ணினத்திற்கும் நல்லது நம்
தாய்த் தமிழுக்கும் நல்லது.
தயவுகூர்ந்து
"கெட்டவார்த்தைகளை"
நியாயப்படுத்தாதீர்கள் ,நாமனைவரும்
பெண்ணின தாய்மையின் வயிற்றில்
பிறந்தவர்கள் ,தாய்ப்பாலோடு
சேர்த்து தமிழ்ப்பாலை உறிஞ்சி
சுவைத்த நாமே
பெண்ணினத்திற்கு என்றும்
எதிரிகளாக உருபெறக்கூடாது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...