Tuesday, April 07, 2015

முதிற்கன்னி நிலவு

வெண்ணிற தேகம்
சிவப்பது எப்போதென
பலமணி துளிகளாக
முற்றத்து கிணற்று வாலியில் முகம்
பதித்து ஏங்கிக்கொண்டிருந்தது­ முதிற்கன்னி நிலா
ஒரு புள்ளியில்
உலகம் இணையுமாமே எனக்குமது நிகழாதோ எள்ளளவு திலகமது திரண்டுவந்து
திருமண பந்தம் தந்துவிடாதோ
ஏக்கத்தை தண்ணீரில் எழுதிக் கொண்டிருந்த நிலவின் அழுகையில் கிணற்று
வாலியில் கண்ணீரும் நிரம்பிவழிந்தது

நிலவின் துக்கத்தில் தானும் பங்கெடுத்து பாசத்தில்
மூழ்கிபோனது
கிணற்று வாலி
தேகத்தை தட்டிக்கொடுத்து தேற்றுதல் மொழிபேசும் நேரமிதுவென
நிதர்சனத்தை உணர்ந்தெழுந்து
உருகும் நிலவினை உண்மையாய்
அரவணைத்து
உலக உண்மையினை
உணரச் செய்துவிட
தயாரானது
கிணற்று வாலி
வட்டங்கள் இரண்டும் ஒன்றிணைவதால்
அதுவுமொரு
தாயாக அப்பொழுது

ஏ!!!
முதிற்கன்னி நிலவே முகத்தை என்னிடம் திருப்பு
உனது பிம்பத்தை
உள்வாங்கி
உன்னோடு நானும்
உருகிறேன்
உண்மையிதுவென
உரைக்கப் போகிறேன்
உலகம் சுற்றும்
நீயேன் உருகியழ
வேண்டும்
கூண்டுச்சிறையில்
வாடும் காதல் பறவைகளைபோல என்சிறு வட்டத்தில் முதிற்கன்னி நிலவே
நீயும் முகம்பதித்து அழுதிடலாமோ

முப்போக விளைச்சலைபோலே மூன்று பக்கமும் சூழ்ந்திருக்கும் தண்ணீருலகை
நீயும் மறந்து
சிறுவட்டத்தில்
அடைந்து கிடந்து
ஆகவில்லை
திருமணமென
அழுதுப் புலம்புவது
ஏனோ

எண்ணில் நீயும் விலகிக்கொண்டு
சிறையை நீயும்
உடைத்து கொண்டு விரிந்த உலகத்தில் விருப்ப மணவாளனை தேடிப்பிடியேன்

நீயாக வெளிவந்தால் நிரம்பி வழிந்திடுமே வரிசையில்
மாப்பிள்ளைகள்
ஊமைக் கனவுகளை உடைத்தெறிந்து
உனக்குள் முடிபோட்ட சிறைக்கதவுகளை
திறந்து கொண்டு
நீயும் வெளியே வா
முதிற்கன்னி நிலவென சுற்றத்தாரினி
சொல்லத் தயங்குவார்கள் சோலை
வனப்புகள் போல
அத்தனை விரல்களிலும் திரண்டிருக்கும் குங்குமச் சிமிழுக்கு சொந்தக்காரி
நீயென
கோடி மின்னல்களும் கொடியேற்றும்
இடிகளும்
மணமேடையருகில் மயங்கித்தான்
கிடக்கிறது
மணமகளே
வெளியே வா
மணவாளனுக்கு
நீயும் மாலையிடு திசையெங்கும் சூழ்ந்திருக்கும் தண்ணீரில் எனது
தாலாட்டும் நிறைந்திருக்கும்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...