Friday, April 24, 2015

யாரிந்த "லீலாவதி" சிந்தனைககளும், நினைவனுசரிப்பும்

தோழர் "லீலாவதி" இந்தப்பெயரை இடதுசாரிகளே இன்று மறந்துபோனது மிக
வருத்தமானதொன்றாகும்.­ தன் சீறிய மார்க்ஸிய சிந்தனையால் மதுரை மாநகரை
அச்சப்பட வைத்ததுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எடுத்துக்காட்டாக
விளங்கும் தமிழின மார்க்ஸிய சிந்தனைவாதிதான் தோழர் லீலாவதி .
தன்னோடல்லாமல் தான் பெற்ற மார்க்ஸிய சிந்தனையை தமிழ்ச்சமூகத்திற்கு
அற்பனித்த சிந்தனைவாதி, பெண்ணடிமையின் ஒரு பகுதியான "பெண்ணானவள்
வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டும்" என்கிற பொதுபுத்தி பிற்போக்குச்
சிந்தனையிலிருந்து இளவயதிலேயே தம்மை விடுவிடுத்துக்கொண்டு
சமூகத்து வெளியே தானுமொரு கம்யூனிசப் போராளிதான். எனக்கும்
மானுடப்பற்றுண்டென்று­ மெய்பித்துக் காட்டியவர் தோழர்
லீலாவதி.கம்யூனிஸத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மதுரை மாநகர 59வது
மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்
லீலாவதி தொடர்ந்து சமூகத்திற்கான தனது பங்களிப்பை சீறியச் சிந்தனையோடு
நிறைவேற்றி வந்தவர்.தலித் ஒற்றுமை, சாதிமத எதிர்ப்பு, அடிப்படைத் தேவைகளை
பூர்த்தி செய்தல் என முற்போக்குச் சிந்தனையில் மக்களின் நல்வாழ்வினை
வென்றெடுத்தவர். மதுரை மாமன்ற வில்லாபுரம் பகுதியில் பொதுமக்கள்
விநியோகத்திற்கான குடிநீர்க் குழாயில் செயற்கையான தடுப்பை சட்டவிரோதமாக
தடுத்துநிறுத்தி அதே குடிநீரை விலைக்கு விற்ற ஆதிக்கச் சாதியர்களின்
முதலாளித்துவ வர்க்கச் சுரண்டலை எதிர்த்து சட்டமன்றம் வரையில் போராடி
குடிநீருக்கான விடுதலையை மதுரைத் தமிழ்சொந்தங்களுக்கு வழங்கினார் . ஒரு
பெண் சமூகத்தின்பால் அக்கரை கொண்டு மார்க்ஸிய லெனினியத்தை ஏற்று இந்த
மக்களுக்கும், பெண்னினத்திற்கும் ஒரு சிந்தனையாளராகவும் மக்கள்
போராளியாகவும் வலம் வருவதை எந்த ஆதிக்கச் சாதிவெறியர்கள் தான்
பொறுத்துக்கொள்வார்கள­் . ஒழித்தல் அல்லது அழித்தலென்பது அவர்களுக்கு
கைவந்த கலையாயிற்றே திட்டம் தீட்டுவதிலும், திருடுவதை தடுப்போரை
தீர்த்துக் கட்டுவதிலுமே
ஆதிக்க வெறித்தனைத்தை காட்டினார்கள் இந்தத் தமிழ்ச் சமூக
விரோதிகள்.காட்சியினை கண்முன்னே நிறுத்திப் பாருங்கள் தமிழ்ச் சமூகமே,,,
ஒரு கம்யூனிஸப்போராளி மக்கள் மனதில் சாதியத்தை அழித்த ஒரு பெண்
அதிகாலையில் அதே வில்லாபுரம் பகுதியில் ஆதிக்ச் சாதியத்து சமூக
விரோதிகளான ஆறுபேர் கொண்ட கும்பல் நடுத்தெருவில் சின்னாபின்னமாக வெட்டி
ரத்தவெள்ளத்தை தமிழ்காத்த மதுரை மண்ணில் ஓடவிட்டிருக்கிறார் .
கேட்பாரற்று கேட்கும் துணிவிழந்து வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள­்
மக்கள். குற்றம் மக்களின் மீதில்லை காரணம் இயல்பான நடுக்கத்தை மக்கள்
வெளிபடுத்தியிருக்கிற­ார்கள் வேறென்னச் செய்ய முடியும் மக்களால்,
வீரத்திற்கு பேர்போனது மதுரை மண்ணென்று பழையகதையைத்தானே மீண்டும்
பாடியிருக்க வழியுண்டு அங்கே , எது வீரம், எதுபுரட்சி, எது கம்யூனஸம்,
எதுவிடுதலை, எதுமார்க்ஸியம், எது லெனினியம், எது முற்போக்குச் சிந்தனை,
எது வழிகாட்டி , இப்படியான இன்னும் பலவான தீர்வுச் சிந்தனைகளை தேடாமல்
விட்டதாலோ என்னவோ இழந்தோம் நாமொரு கம்யூனஸப் போராளியை, பெண்ணினத்திற்கு
எதிராகவும், தமிழ்ச் சமூகத்திற்கு எதிராவும் எழுப்பப்படும் அல்லது
வளர்த்தெடுக்கப்படும்­ ஆதிக்கத்தினை நாம் அழிக்க வேண்டுமெனில் நமக்கு
வேண்டும் முற்போக்குச் சிந்தனை, உண்மைக் கம்யூனிஸத்தை இந்தச் தமிழ்ச்
சமூகம் வளர்த்தெடுப்பதில்தான­் நமக்கான விடுதலைகள் நமக்கிங்கே
கிடைக்கும்.


"தோழர் லீலாவதியை படுகொலைச் செய்தி, 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள்"


ஆம் இன்று அவரின் நினைவுநாள் கம்யூனிஸ வீரவணக்கம் எம்மின தோழருக்கு


வேண்டும் இங்கே விடுதலை.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...