Monday, April 06, 2015

கைக்குட்டை யாருடையது?

பெருந்திரளான
இடவடர்த்தியில்
ஒருகை மட்டும்
உயர்ந்து நிற்கிறது

வெளிர்நிறத்தில்
பளீரென மின்னிய
வலதுகை தான்
அது

வலதுகை இறுக்கத்தால்
கொஞ்சம் தளர்ந்து
நான்கு மடிப்பு
இரு மடிப்பாகி
பவ்யமாக பூமி
பார்க்கிறது
ஒரு பொருள்

புவியீர்ப்புக் கிரையாகமல் பத்திரமாய் பிடித்திருந்த வலதுகைக்கு
முத்தமிடும்
ஒரு முனையில்
முனகலோசை
எழுப்பிக் கொண்டிருந்தது
அந்த பொருள்

பள்ளிக்கூட
பிள்ளையை தாங்கிப்பிடிக்கும் தாயைபோல
அரவணைத்துக் கொண்டிருந்தது

ஆட்காட்டி விரலும் கட்டை விரலும்
தவம் செய்தவையாக
மனதில் அப்பொருளும்
மயக்கத்தை
கொண்டிருந்தது

என்ன
பொருளதுவென்று
யாருக்கும்
தெரியாமலில்லை
தெரிந்தே தொலைத்தவர்களும் தெரியாமல் தொலைத்தவர்களும் இங்கேதான்
இருக்கிறார்கள்

அடர்ந்த காட்டில் எப்போதும் மெச்சியிருக்கும் இறைச்சலை கிழித்துக்கொண்டு
காதலில் வயப்பட்டு தன்கொஞ்சலால் கூடியிருக்கும்
கூடுகளின் உயிர்களை
தன்பக்கமிழுக்கும் கவனஈர்ப்புக் கலையினை கற்ற குயிலோசை போலவே

கூட்டத்தின் கவனத்தை குறிவைத்து
தகர்த்திய குயிலோசை ஒலிக்கப்போகிறதென்று யாரும் அறியவில்லை

இன்ப அதிர்வாய்
அனைவரின் காதுகளிலும் தேனாய் பாய்ந்தது அந்த
தேனோசை

அதிகம் மேலெழும்பாத
அதியச பேரொலியது

என் ரோஜா மலர்கொண்ட கைபையில்
தொற்றுண்ட
புத்தம்புதிய
வெள்ளை நிறத்திலான இந்த கைக்குட்டை
யாருடையது?

யாரிந்த
கைக்குட்டைக்கு சொந்தக்காரர்?

கூட்டத்தின் கண்களெல்லாம்
குயிலோசை
கேட்டவிடம்
திரும்பிப் பார்க்க
தேவதையின் வலதுகையினை
கண்களெல்லாம்
கவர்ந்திழுக்க

கைக்குட்டை
சொந்தக்காரன்
எவனோ?

முன்வந்து
தன்பொருளை தேவதையினை
தொட்டுணர்ந்து
பெறுபவன்
நிச்சயம் அதிஷ்டக்காரனென
அங்கலாய்த்து
கொண்டிருந்த
கூட்டத்தில்
இன்னமும் சலசலப்பு
ஓயவில்லை

கைக்குட்டை
சொந்தக்காரனும்
வந்து வாங்க
முன்வரவில்லை

ஓயாமலெழ வேண்டுமந்த
தேவதையின்
குயிலோசையென
தொடர்ந்தே
செல்கிறது
தொடர்வண்டி
பெருங்கூட்டம்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...