Friday, April 03, 2015

மதிப்பிற்குரிய பாமரத் தோழனே

ஓய்வென்பதும்
ஓங்கி மிதிப்பதாய்
எங்கள்
உழைப்பாளி வர்க்கமிங்கே
ஒப்பாரி வைக்கிறதே

பிம்பத்தொளி
திண்ணும்
பாமரத் தோழனே
பாசமாய்
அணைத்தழ
வாராயோ

எங்கள் துயர்மீது
கருணை மழைநீயும்
பொழிவாயோ

ஓங்கி மிதித்ததில்
ஓடுபோலுடைந்த
எலும்புத் துண்டுகளையும்
விடாமல்
சேகரித்து
வளர்த்து விடுகிறான்
பலநாய்களை

முதலளாளி
வர்க்கத்தின்
முதன்மைப்பணியே
அதுவன்றோ

அந்தோ பரிதாபம்
பாமரனே
என் பாசமிகு
தோழனே

கண்களால்
பார்த்தும் காதுகளால்
கேட்டும்
பாசிசத்தின் பிடியால்
மௌனம்
சாதிக்கிறாயே
உன்னிலும் கூடவா
உலவுகிறா னந்த
முதலாளி வர்க்கம்

எங்கள்
பாசத்திற்குரிய
பாமரத் தோழனே
எழுந்திரு
பாசிச
ஏகாதிபத்தியத்தினை
எரித்திடுவோம்

செங்கொடியினை
கையிலெடுத்து
எங்கும் பரவச்
செய்திடுவோம்
புரட்சியெனும்
எரிதழலை,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...