Thursday, May 28, 2015

பழைய சினிமா பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்களேன்

பழைய பாடல்களை பார்க்கத் தொடங்குங்களேன் அதுவும் பெற்றோர்களுடன்
பார்க்கையில் நிச்சயம் நீங்கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை அவர்களின்
அனுபவத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் உங்களுக்கு
பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கின்ற பொழுது அதனோடு கூடவே அப்பாடல்
எங்கே எப்போது கேட்கப்பட்டது? எதனால் அப்பாடல் கவனத்தை ஈர்த்தது? அன்றைய
நிகழ்வுகள் என்னென்ன? என்று பாடல் கேட்கும்போதெல்லாம் உங்கள் நினைவுகளில்
அப்பாடல் வரிகளோடும் , இசையோடும் அனுபவமும் கலந்து ஓர் இன்பத்தில் அல்லது
அதற்கெதிரான துன்பத்தில் உங்கள் மனது மூழ்கி கிடப்பதை உணர்ந்து
அவ்வுணர்வினை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மனம் துடிக்கையில் பகிர்தலை
தடை செய்யாமல் நீங்களும் உடனடியாக பகிர்ந்து கொள்கிறீர்கள் . எனக்கு
பிடித்தமான இப்பாடலை எங்கே கேட்டேன் தெரியுமா? அப்போது எனக்குள்ளும்
என்னை சுற்றியுள்ள சமூகத்துக்குள்ளும் என்ன நிகழ்வுகள் நடந்தது தெரியுமா?
என்று உறுக்கமாகவோ அல்லது உற்சாகத்துடனோ மற்றவரோடு பகிர்ந்து கொள்ள
துடிக்கையில் நீங்கள் தனிமைபடுத்தப் பட்டுள்ளீர்கள் என்றுணர்ந்தால் தன்
உணர்வுகள் தடை செய்யப்பட்டிருக்கிறத­ெனும் வலியிலிருந்து உங்களால் விடுபட
முடியாதுதானே,அவ்வாறிருக்க பெற்றோர்களின் உணர்வுகளுக்கு தடையாக
நீங்களிருப்பது நியாயமற்றதென்று ஏன் உணர மறுக்கிறீர்கள்.ஒருமுறையேனும்
இதைச் செய்து பாருங்களேன் . உங்கள் பெற்றோருக்கு பிடித்தமான பழைய பாடலை
அவர்களோடு சேர்ந்து நீங்களும் பாருங்கள் பாடலோடு சேர்த்து பெற்றோர்களின்
முகபாவனைகளை கவனியுங்கள், முன்னெப்போதுமில்லாத மாற்று முகபாவனைகளை
பெற்றிருப்பார்கள் பெற்றோர்களென அறிவீர்கள் . அதோடு நில்லாமல் பாடலையும்
குலைத்து விடாமல் மிதமான பேச்சு கொடுங்கள் , அம்மா,அப்பா,தாத்தா,ப­ாட்டி
யாரிருந்தாலும் . திரையிலோடும் பாடலுக்கான பின்னனி நிலவரம்தான் என்ன
உங்களுக்கு ஏன் அந்த பாடல் பிடித்திருக்கிறதென்ற­ு பேச்சுவாக்கில்
கேட்டுப்பாருங்கள் பல உண்மையான வரலாற்று நிகழ்வுகளோடு பெற்றோர்களின்
காதலும்,கண்ணீரும் பேச ஆரம்பிக்கும் . அதன் பிறகு நீங்கள் உணவீர்கள் இந்த
உணர்களையா இத்தனைநாள் நாம் தடைசெய்து வைத்திருந்தோமென்று,,­ கூடவே
அப்பாடலும் உங்களுக்கு பிடித்து போகும்.இதன் மூலமாகவே பழைய பாடல்களையும்
மீட்டெடுக்கும் பணியில் நாமிறங்கி விட்டோமென்று ஒரு மகிழ்சியும்
உங்களுக்கு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக எனக்கான ஒரு நிகழ்வினை
முன்வைக்கலாமென்று தோன்றுவதனால்,,,
எனக்கு பழைய பாடல்களின் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை நடிகர் திலகம்
சிவாஜி வாங்கிய பணத்திற்கு மேல் நடிக்கிறார் என்கிற புத்தியாகவும்
இருக்கலாம் , (சம காலத்து அனேகரின் புரிதலாகவும் இது இருக்கிறது) ஆனால்
ஒரு நாடகக் கலைஞனுக்கு வசனமட்டுமல்லாது அவன் உடலில் வளைவு நெளிவு அதனோடு
கூடிய முகபாவனைகளை கொண்டிருந்தால் மட்டுமே கடைசி பார்வையாளனையும்
கவர்ந்திழுக்க முடியுமென்றும், கலைஞனின் கருத்துகளை கடைசி பார்வையாளன்
உள்வாங்கிக் கொள்ளமுடியுமென்றும் உணர தவறவிட்டதை உணர்த்தினார்கள்
எம்பெற்றோர்கள் .அன்றைய நடிகச் சிகாமணிகள் அனைவரும் தெருவீதி நாடகத்தில்
நடித்தவர்களென்றும்,அ­தன் மூலம் சமூகத்திற்கு செய்தி சொன்னவர்களென்றும்
பழைய பாடலை எம்பெற்றோர்கள் முன் பார்த்தமையால் அறிந்த வரலாற்று
தகவலாகும். ஆகவேதான் உணர்வுகளையும்,உறவுகள­ையும் சிதைத்து விடாமல்
சீர்படுத்த பழைய பாடல்களை பெற்றோர்களுடன் சேர்ந்து பாருங்கள் ,பழைய
பாடல்களோடு நம் வாழ்வும் இனிக்கும்.

2 comments:

  1. பழைய பாடல்கள் நமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போன்ற உணர்வை கொடுப்பவை. உங்களின் தல பதிவுக்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்தப் பதிவைத் தான் வாசித்தேன். உண்மையைச் சொல்லும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    profile படத்தை மாற்றிவிட்டீர்களே?

    ReplyDelete
  2. பாட்டுக் கேட்பதை பின்பு பார்ப்போம். முதல் இன்றைய பிள்ளைகள் பெற்றோரைச் சக மனிதராக மதிக்கட்டும்.
    காசு காய்க்கும் மரமாகப் பார்த்தல், ஏன் பெற்றாய் எனக் கேட்டல், தனக்கு எல்லாம் தெரியுமென இறுமாத்தல், தலைமுறை இடைவெளி என அலட்டல், தன்னை எதுவும் கேட்க்கக் கூடாது என விரட்டல்.
    நீங்கள் நீயா நானா பார்ப்பதில்லையா? விரல் விட்டெண்ணக் கூடியவர்களானாலும் கருத்து விசமாகவல்லவா இருக்கிறது.

    மற்றும் படி பிள்ளைகள் கேட்குதோ இல்லையோ, நமக்கு மனதுக்கு இதமாக என்றுமே உள்ளது பழைய பாடல்களும், காட்சிகளுமே!
    அப்பபோ புதுப் பாடல்களும்.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...