Monday, May 04, 2015

சாதியத்தால் எரியும் குடிசைகள்

சாதியற்ற சமூகமென்பது தமிழகத்தில் வெறும் பகல்கனவாக பரிமாற்றம்
அடைந்திருக்கிறது என்பதை நிகழும் சாதியக் கலவரங்கள் நமக்கு
தெளிபடுத்துகிறது. எங்கும் சாதி எதிலும் சாதியென்று அவரவர்கள் தங்களின்
ஆதிக்கத்தை சாதியத்தின் பெயரால் நிலைநிறுத்த துடித்துக்
கொண்டிருக்கிறார்கள் . ஆண்டாண்டுகாலமாய் தாழ்த்தப்பட்ட அல்லது
ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைகளும் ஆதிக்க அடக்கு முறைகளும்
பல்வேறு வடிவங்களைப் பெற்று புதுப்புது யுக்திகளின் மூலமாக ஆதிக்க
சாதியவெறியர்கள் அவர்களின் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்த வண்ணம்
உள்ளனர் , ஒரு பக்கம் இவர்களின் சாதிவெறியினை அடக்கி நல்வழிபட்டுத்தாமல்
மீண்டும் மீண்டும் சாதியத்தை தூண்டும் அரசியலாளர்கள் . "சமத்துவம்"
என்கிறச் சொல்லை குழிதோண்டி புதைத்திடவே இங்கே ராமதாசுகளின் முழுநேரப்
பணியாக இருக்கின்றதே , அப்படியிருக்க " சாதியற்ற சமூகம்" என்பது
பலகனவாகத்தானே நமக்குத் தெரியும் .

பெரம்பலூரில் வன்னியச் சமூகத்திற்கும் தலித்துகளுக்குமிடையே­ நேற்றிரவு
(3.5.2015) மோதல் ஏற்பட்டது வழக்கம் போலவே தாமதமாகத்தான் அங்கே
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். பெரம்பலூர் மாவட்டம்
வேப்பந்தட்டை அருகேயுள்ள பசம்பலூர் என்ற பகுதியில், ஒரு சித்ரா
பவுர்ணமியை முன்னிட்டு வன்னியர்கள் சாமி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அதே பகுதியில் வசிக்கும் தலித்துகளும் கோயில் திருவிழாவிற்கு ஏற்பாடு
செய்து வந்தனர். வன்னியர்களின் குடியிருப்பு வழியாக, சாமி ஊர்வலம் வந்த
போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும்
கல்வீசித் தாக்கிக் கொண்டனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலு மற்றும்
அரவிந்த் ஆகியோரின் குடிசை வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனையடுத்து
அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புபணியினை
மேற்கொண்டதையடுத்து விடியற்காலையில்தான் அமைதிச் சூழல் ஏற்பட்டது.
தாழ்த்தப்பட்டோர்களுக­்கு எதிரான வன்முறைகள் அல்லது அடக்கு முறைகளை
அனைத்து ஆதிக்க இனங்களுமே ஒன்றாக கூடி எதிரிகளாகத்தான் செயல்படுகின்றன
என்பது யாராலும் மறுக்க முடியாது எப்போது இந்த மண்ணில் " தலித்தல்லாதோர்
பேரவைகள்" என்று உறுவாக்கப்பட்டனவோ அன்றிலிருந்தே தீண்டாமைகளும்,
தலித்தின வன்முறைகளும் மிகச்சாதாரணமாக நிகழ்த்தப்படுகிறது . அதுவும்
யாரின் பெயரால் , சாதியத்தை கற்பத்த அதே கடவுளின் பெயரில்தான் இங்கே
சாதியக் கலவரங்கள் நிகழ்கின்றன. இதற்கு முந்தைய சேலத்து நிகழ்வும் இதேச்
சாயலைத் தான் கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும் , இன்னமும்
இங்கே பல குடிசைகள் கொளுத்தும் கும்பல்களுடன் வலம்வரும் பாமரத் தமிழனை
பார்க்கையில் பாவமாகத்தான் இருக்கிறது. மனிதன் மிருகமாவதை
வேடிக்கைபார்க்கும் கூட்டங்களில் கொடி பிடிக்கும் பாமரத் தோழர்கள்
சாதியத்தை நம்பி சவக்குழியில் அவர்களாகவே வீழ்வதை தடுத்து
நிறுத்தவேண்டுமெனில் நமக்கே நமக்கான " சாதியற்ற சமூகத்தை நாமே முன்னின்று
இங்கே வென்றெடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...