Sunday, May 03, 2015

திமுக தலைவருடனான இணையத்து கருத்தியலில் நான்

யார் பெரியாரிஸ்டுகள் என்பதை
கேள்வி கேட்கும் பெருந்தருணம்
இங்கே எப்படி உறுவாகியது?
அப்படி பெரியாரிஸ்டுகள் என
தங்களை அழைத்துக் கொள்பவர்கள்
கலைஞர் கருணாநிதியின்
ஆதரவாளர்களாக இருக்கிறார்களே!
ஏனென கேட்கும் அரசியலை
விமர்சனமென்ற பெயரில்
கேவலங்களை வெளிபடுத்தி
அப்படியே நகர்ந்து விடும்
அறிவுஜீவிகளின் அவசரக்
கோபத்தினால் தெளிக்கப்படும்
அவதூறுகளுக்கு எப்படியான
பதில்களை அளிப்பது என்பதை
கற்றறிந்தே வைத்திருக்கிறோம்
திராவிட பெரியாரிஸ்டுகளான
நாங்கள்.முதலில் தங்களை
நடுநிலையாளர்களென்று
அறிவித்துக் கொண்டிருக்கும்
இப்படியான விமர்சனர்கள்
உண்மையில் அரசியல் தலைவர்களை
இழிவுபடுத்தாமல் விமர்சனம்
வைக்கிறார்களா என்றால்
இல்லையென்றே சொல்லிவிடலாம்
அந்தளவிற்கு தாக்குதலை
ஏற்படுத்திவிட்டு நாங்களும்
அரசியல் விமர்சகர்களென
அறிவித்துக் கொண்டு வலம்
வருகிறார்கள் இணையத்திலும்,
பொதுவெளியிலும்,,பெற்ற
தாயினை "அம்மா" வென்று
அழைப்பது கூட
கவுரவக்குறைச்சலாக எண்ணி
அவர்களை முதியோரில்லங்களில்
அடைத்து விட்டு , நாட்டையாளும்
பார்ப்பன அதிமுக வின் தலைவியை
செல்லமாக "அம்மா" வென்று
அழைத்திடுகிறது இந்த நடுநிலை
விமர்சன கூட்டம். அதோடு
நில்லாமல் அவர்களுக்கான
எதிர்மறை தலைவர்களையும்
விட்டுவைக்க வில்லை இவ்வரசியல்
விமர்சகர்கள். திமுக தலைவர்
கருணாநிதியை கட்டுமரம்,
உபிக்கள், ஈழத்துரோகி,
கெழடுகலைஞர், கொலைஞர்
என்றும் மதிமுக வின் தலைவர்
வைகோவை வாக்கர்ஸ்,
தொடைநடுங்கி வைகோ, என்றும்
இதுபோலவே இன்னும் பல
தலைவர்களையும் சேர்த்து மிகக்
கேவலாமாககேலிசெய்தவர்கள்தான்
இங்கே தங்களை அறிவுஜீவிகளாக
காட்டிக்கொண்டு அரசியல்
விமர்சகர்களாக வலம்வருகிறாகள்
மேலும் இவர்கள் திராவிடத்தின்
மீதான பொய்க்கருத்துகளையும், பல
கேள்விகளை முன்வைக்கின்றோம்
பேர்வழிகளென பகுத்தறிவை
கொச்சைபடுத்தும் செயல்களிலும்
தங்களை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.இதற்கான
செயலுறுத்தும் சில விளக்கங்களை
பெரியாரை ஏற்ற திராவிடத்
தொண்டனாக கடமைபட்டுள்ளேன்.
முதலில் அதிமுக தலைவர்
ஜெயலலிதா அவர்களை எப்போதும்
எக்காரணங்கொண்டும் "அம்மா"
என்று அழைத்ததில்லை, அதற்கான
தகுதி அவர் பெறவில்லை என்பதே
என்மனவோட்டமாகும். பிறகு
மேற்குறிப்பிட்ட தலைவர்களை
இதுவரைக்கும் கேலிக் கிண்டல்
செய்து இணையத்திலும் ,
பொதுவெளியிலும்
பேசியதுமில்லை ,
எழுதியதுமில்லை இது
அரசியலின் அவக்கேடான
செயலென்று அறிந்தாலோ
என்னவோ,இப்போது வாதமேற்றும்
கருத்துக்களுக்கான
விடையளித்தலை இப்பெரியாரிய
எதிர்ப்பாளர்களுக்காக எழுதும்
தருணத்தை இவர்களே எனக்கு
ஏற்படுத்திக்
கொடுத்திருக்கிறார்கள்.
பெரியாரிஸ்டுகள் திமுக வின்
ஆதரவாளர்களாக இருக்கிறார்களே !
எனும் பொது புத்திக்கான அனுபவ
நிகழ்வினை பெரியாரிஸ்ட் என்கிற
முறையில் முன்வைக்கிறேன்.

சமூகத்தின் மீதான எவ்வித
அக்கரையுமற்று எதனையும்
எளிதாய் கடந்துபோகும்
மனநிலையில் திராவிடத்தின்
மீதான காழ்ப்புணர்ச்சியினை
மட்டும் தினந்தினம் பேசும் சராசரி
மனிதர்களை நினைக்கையில் அச்சம்
நம்மை பிடித்துக்கொள்கிறது.
அவர்களுக்கும் சேர்த்தேதான்
திராவிடம் ஏற்றவர்கள்
குரலெழுப்புகிறார்கள் என்பதை
உணர்த்தியாக வேண்டிய சூழலில்
தள்ளப்பட்டிருக்கிறார்கள். முதலில்
திராவிடம் பேசுவோர்
திமுக தலைவர் திரு
கருணாநிதியின் ஆதரவினை
பெற்றவர்கள் என்கிற போலி
பிம்பத்தினை உடைத்தெறிய
கடமைபட்டுள்ளேன்.
அது சுதந்திர தினத்தின் முந்தைய
நாள் ஆகஸ்ட் 14 . 2012 அன்று திமுக
தலைவர் திரு மு கருணாநிதி
முகபுத்தமெனும் சமூக
வலைதளத்தினை ஆரம்பித்த தருணம்
. முதலில் திமுக வின்
தொண்டர்களோ அல்லது
நிர்வாகிகளோ ஆரம்பித்த முகநூல்
கணக்கென்ற சந்தேகம் தோன்றியது ,
பிறகான நேரத்தில் முகநூல் திமுக
வினர் அக்கணக்கு திரு மு
கருணாநிதி அவர்களின் அசல்
கணக்கென்று அதிகாரப்பூர்வமாக
அறிவித்து அக்கணக்கினை
பிரபலமடைய அதிகமாக தங்களை
ஈடுபடுத்தினார்கள். இதனை
உணர்ந்து மூன்று நாட்களுக்கு
பிறகு அம்முகநூல் கணக்கு
கலைஞருடையதுதானென்ற
உறுதிபடுத்துதலின் பேரில் ஒரு
பதிவிற்கு பின்னூட்டம் அளித்தேன்.
வரம்பு மீறாத அனாவசிய தூற்றல்
ஏதுமின்றி அளித்த பின்னூட்டம்
அப்படியே பதிவிடுகிறேன் .

"பெரியாருக்கு பின்னால்
திராவிடம் திருடப்படுகிறது"
என்பதற்கும்

மேதகு பிரபாகரன் அவர்களின்
தாயாரை சென்னை விமான
நிலையத்தில் அப்படியே திருப்பி
அனுப்பியதற்கும்,

உங்களின் மீதான
2G அலைகற்றை ஊழல்
குற்றச்சாட்டிற்கும் "

தகுதியான
பொதுவிளக்கத்தினை
பொதுவெளியில் அளிக்க திமுக
தலைவர் தயாரா?

அதிகம் கேட்டுவிடவில்லை
இம்மூன்று கேள்விகளை மட்டுமே
அவரிடத்தில்
முன்வைத்தேன்.

அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு
பிறகு எனது செய்தியோடையில்
அவரின் முகபுத்தக விருப்பப் பக்கம்
தென்படவில்லை , காரணம் கொஞ்சம்
புரிய ஆரம்பித்தது அதன் பிறகான
திமுகவினரின் மிரட்டல்
குறுஞ்செய்திகளின் மூலமாக
திமுக தலைவர் மு
கருணாநிதியின் விருப்பப் பக்கம்
என்னை தடைசெய்திருப்பது
உறுதியானது . கலைஞர்
கருணாநிதி அவர்களின் முகபுத்த
கணக்கில் விருப்பமோ,
பின்னூட்டமோ, என்னால் அளிக்க
முடியாது , பதிவை
பார்த்துக்கொள்ளலாம் அதனை
பகிர்ந்துவிடலாம், அதுமட்டுமே
செய்யும்படியான தடையை
உறுவாக்கியிருந்தார்.
.
அதன் பிறகான திமுக
அபிமானிகளால் தொடுக்கப்பட்ட
ஒருவார கால தொடர் மிரட்டலுக்கு
நான் அச்சப்படவில்லை என்பதனை
அறிந்தவுடன் என் முகநூல்
கணக்கினை முடக்கினார்கள் திமுக
அபிமானிகள் . ஓரளவிற்கு
முகநூலின் நுட்பத்தினை அறிந்தே
வைத்திருந்த காரணத்தினால் ,
எனது அடையாள அட்டையின்
நகல்கொண்டு மீண்டும் எனது
முகநூல் கணக்கினை
மீட்டெடுத்தேன். இன்றுவரையில்
திமுக தலைவர் திரு மு
கருணாநிதியின் முகபுத்தக பக்கம்
என்மீதான தடையை அகற்றவில்லை.
இதன் மூலம் திராவிடம் ஏற்றவர்கள்
அனைவரும் திமுகவினை ஏற்றுக்
கொண்டிருக்கவில்லை என்பதை
உணர்த்துகிறேன். தமிழகத்தில்
முற்றிலுமாக பார்ப்பானியத்தை
உள்வாங்கிய அதிமுகவையும்,
பார்ப்பானியம் பாதியளவு
உள்நுழைந்துவிட்ட திமுகவையும்
எதிர்ப்பதில் எவ்வித
பாகுபாடையும் திராவிடம்
ஏற்றவர்கள் பார்ப்பதில்லை, மேலும்
திராவிடத்தின் மீதான எதிர்ப்புப்
பேர்வழிகள் வசைபாடும் அவமானச்
சொற்களையோ , அடுத்தவரை
இழிவுபடுத்தும் சொற்களையோ,
எந்தவொரு விவாத களத்திலும்
பதிவிடவில்லை என்பதையும்
தெரியபடுத்த கடமைபட்டுள்ளேன்.
இதுதான் பெரியாரியமும்,
திராவிடமும் எங்களுக்கு கற்பித்த
பாடமாகும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...