Saturday, May 23, 2015

ஊரில் நல்லவர்கள் யார்?


நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு
தற்செயலாக அவனை பார்க்க
நேர்ந்தது காலச்சூழல் நட்பெனும்
உறவை பலகாலமாக பிரித்தே
வைத்திருந்திருந்தது . எங்கள்
சந்திப்பு சாலையோரத்தில் நிகழ
பேசினோம் போசினோம் பிரிந்த
காலத்தை நினைவு கூறுதலில்
தொடங்கி நிகழ்காலத்து பரிணாமம்
வரையில் பேசினோம். இறுதியாக
விடைபெற்றுப் போகுதலை
ஒருதலை வருத்தமாக
ஏற்றுக்கொண்டோம். அவனது
கிராமத்திற்கு என்னை
அழைத்திருந்தான். சிறுவயதில்
அவனோடு சேர்ந்துக்கொண்டு
ஓடியாடிய மண்ணில் மீண்டும்
கால்பதிக்க ஒரு வாய்ப்பு
கிடைக்கப்பெற்றது . மனதிற்குள்
மகிழ்ச்சி பொங்கியது. நிச்சயம்
வருகிறேன் நண்பா என்றுச்
சொல்லிவிட்டு இருவருமே
பிரிந்து சென்றோம். ஒரு
விடுமுறை தினத்தை தேர்வு
செய்து அதற்கு முந்தைய மாலை
பொழுதில் அவனை கைபேசி
மூலமாக அழைத்தேன். மச்சி!
ஊர்லயா இருக்க நாளைக்க
வீட்டுக்கு(கிராமத்தி­­
ற்கு)வரலாம்னு இருக்கேண்டா!
வரவா? நான் கேட்டேன்.
இன்னைக்கே வீட்லதான் இருக்கேன்
மாமா,,, நாளைக்கு சொந்த வேல
எதுவுமில்ல அதனால இங்கயே
தானிருப்பேன், கண்டிப்பா வா!!!
கூட யாரையாவது கூட்டிக்கிட்டு
வரியா? இல்ல தனியா வரியா மச்சி?
அதுகேத்தமாதிரி ஏற்பாடு
செய்திடுவேன்,,இது அவனது
உரையாடல்.நம்ம கூட படிச்ச
"கிலோமீட்டர்"(வாய் கொஞ்சம் நீளம்
அதிகம் பேசுவான்) எங்கூட வரான்
மச்சி நாங்க ரெண்டுபேரும்
காலைலேயே வந்துடரோம்,என்றேன்
நான். சரி மாமா கொஞ்சம் சீக்கிரமே
வந்துடு,, முடிந்தது
உரையாடல்.மறுநாள்
விடியற்காலையிலேயே நானும்
கிலோமீட்டரும் இருசக்கர
வாகனத்தில் நண்பனது கிராமத்தை
நோக்கி பயணித்தோம்.
ஒருமணிநேர பயணத்திற்கு பிறகு
கிராமத்தைச் சென்றடைந்தோம்.
வழியிலேயே எங்களுக்குத்
தெரிந்து விட்டது கிராமம்
களவாடப்பட்டுவிட்டதென­­
்று,,,ஒருவழியாக நண்பனின்
வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம்.
நாங்கள் கிளம்பும்போதே தகவலைச்
சொன்னதால் அவனும் எங்களின்
வரவிற்காக வாசலிலேயே
காத்திருந்தான். அவன் வீடு வெகல்
வேய்ந்த கூரைவீடு,மூவருமே
உள்ளே சென்றோம் அம்மா , அப்பா ,
தம்பிகள் சகோதரிகள் அனைவருமே
நலம் விசாரித்து வரவேற்றார்கள்.
காலை சிற்றுண்டியை முடித்து
விட்டு கிராமத்தை சுற்றிப்பார்க்க
வேளையோடு கிளம்பினோம். ஒரே
அதிர்ச்சியும்,ஆச்சர்யங்களும்
எங்களை ஆட்கொண்டு விட்டது.
மனிதனின் மறதி எங்கிருந்து
தொடங்குகிறதென்று எனக்கு
புலப்பட ஆரம்பித்தது. குளித்த
கிணறுகளை
காணவில்லை,விளையாடிய
வயல்வெளிகளைக் காணவில்லை,
அனைத்தையும் புதைத்துவிட்டு
அங்கே "நிலம் விற்பனைக்கு" என்கிற
பலகை தொடங்கவிடப்பட்டிருந்தது.
ஒரு வழியாக உச்சி வெயிலின்
போது வீடுதிரும்பினோம். அவன்
வீட்டிற்கு எதிரேயுள்ள வேப்பமர
நிழலில் போடப்பட்ட நாற்காலிகளில
அமர்ந்து மீண்டும்
பேசத்தொடங்கினோம். வீட்டில்
கோழியடித்து குழம்பு
கொதிக்கும் வாசனை கமகமத்தது.
பேசத் தொடங்கினோம் நாங்கள்
கிசுகிசுக்களோடு வயது வந்தோர்
பட்டியலை முழுக்க (வயசுப்பசங்க
பேசினாலே அது இருக்கத்தானே
செய்யும்) இப்படி
பேசிக்கொண்டிருக்கும்
வேளையில் அதே வீதியோரத்தில்
எங்களைப் போன்றே இருவர்
பேசிக்கொண்டிருப்பது எங்களின்
கவனத்தை ஈர்த்தது. ஒருவர் மிக
அமைதியானவரைப் போலவும் அதீத
பக்தியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டவர் போலவும்,
சாந்தமுகத்தோடும்
காட்சியளித்தார். மற்றொருவர்
அவருக்கு நேர்மறையான
கோணங்களை கொண்டிருப்பவராக
காட்சியாளித்தார் உடையில்
எளிமை தெரிந்தது. நான்
நண்பனிடம் கேட்டேன்,யாரு மச்சி
அவங்க ரெண்டு பேரும் ரொம்ப
நேரமா நம்மள போல
பேசிக்கொண்டிருக்கிறார்களே!
அவங்களா மச்சி அதோ அமைதியா
நெத்தியில பொட்டு வச்சிகனு
பேசிட்டிருக்காரே அந்த அண்ணன்
நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடுதான்
மச்சி ரொம்ப நல்லவர். எதிலேயும்
மூக்க நொழைக்க மாட்டார்,
தானுண்டு தன்வேல உண்டுனு
இருப்பார்,யார் கூடவும் அதிகமா
பேச மாட்டார்,PWD ல
வேலபார்க்கரார்,வீடு ஆபீஸூ
இரண்டுந்தான் அவருக்கு,,,
பக்கத்துல இருக்காரே அவர பாரு
மச்சி ரொம்ப மோசமானவர்
எப்பபார்த்தாலும் கோர்ட்டு, கேசு,
போலிஸ்டேஷனு,
தாலுகாபிஸு,பஞ்சாயத்து
போர்டுனு சுத்திகிட்டே இருப்பார்
அவரு பூமியில ஒக்காரதே
அபூர்வம். அந்தாளு ஏதோ தனியா
நெலம் வச்சிகிட்ட வெவசாயம்
பாக்குராரு,பாரேன் நம்ம
பார்த்தோமே "இந்த நிலம்
விற்பனைக்கு இல்லைனு" போர்டு
வச்சி சேட ஓட்டிட்டு இருந்துச்சே
அது அந்தாள இடந்தான். இவுக
ரெண்டுபேரம் ரொம்ப நேரமா
பேசராங்கனா ஏதாவது
விஷயமிருக்கும் அந்தண்ணன்
எப்படியும் நம்மள தாண்டிதான்
போகனும் என்னானு கேட்ருவோம் .
என்று அந்த இருவரையும்
அறிமுகப்படுத்தினான் நண்பன்.
எனக்கு ஏனோ அந்த மோசமான
நபரிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஒரு வழியாக தூரத்தில்
பேசிக்கொண்டிருந்த இருவரும்
விடைபெற்றுக்கொண்டார்கள்
நல்லவராக சொல்லப்பட்டவர் அவர்
வீட்டுக்குச் செல்ல எங்களை நோக்கி
வந்துக்கொண்டிருந்தார். எங்களை
நெருங்கிவிட்டார் நண்பன்
எழுந்திருக்கச் சொன்னான்
மரியாதைக்காக,,வண்கம்னே இவங்க
ரெண்டுபேரும் என்னோட பிரண்ட்ஸ்
என்று எங்களை
அறிமுகப்படுத்தினான். வணக்கம்பா!
சொல்லிவிட்டு எதுவும் பேசாமல்
புன்சிரிப்பினை மட்டும்
விதைத்துவிட்டு நகரத்
தொடங்கனார் அந்த நல்லவர். நண்பன்
கொஞ்சம் தயக்கமாக அண்ணே
எதாவது தகவலா ரொம்ப நேரமா
அந்த அண்ணன்ட்ட பேசிட்டு
இருந்தீங்களே ஊர்ல ஏதாவது
விஷேஷமா என்று பவ்யமாக
இடைமறித்தான் நண்பன்.



அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி
வீட்ல ரெண்டு நாளா கரண்ட்டு வந்து
வந்து போகுது கம்பத்துல ஒயர்
லூசாயிருக்கு போல EBக்கு போன்
போட்டேன் இதோ! அதோனு
இழுத்தடிக்காரங்க அப்புரம் பேங்க்ல
லோன் வாங்கியிருந்தேன்
இந்தமாசம் அதிகப்படியா தப்பா
சேலரில பணம் புடிச்சிட்டானுவ
அதையுஞ் சொல்லி என்னானு
பாருங்கனு அண்ணன்ட்ட
சொல்லிட்டிருந்தேன்.ஓ
அப்படியாண்ணே நா வேற ஏதோனு
நெனச்சி கேட்டேண்னே சரிண்ணே!
என்று விடைபெறுதலுக்கான
குழைதலை நண்பன் தன்
பாவனைகளால் செய்து
கொண்டிருந்த வேளையில்,
நம்மளால் தான் சும்மாயிருக்க
முடியாதே எதையாது
யாரையாவது எங்கேயாவது
வம்பிழுத்து குறும்புத்தனம்
பன்னுவதில் பெயர்
போனவர்களாயிற்றே,,இதை நன்கு
உணர்ந்ததன் காரணமாகத்தான் நண்பன்
அந்த அண்ணனை விடைபெற்று
அனுப்புவதிலேயே குறியாக
இருந்தான். உடனே நான்
குறிக்கிட்டு "அண்ணே அப்போ
எல்லாத்துக்கும்
இன்னொருத்தரைத்தான் தேடரிங்க
நீங்களே எதுக்கும்
போகமாட்டீங்களா,,, என்றுதான்
கேட்டேன் அதற்கேற்றார்போல்
கிலோமீட்டரும் கொள்ளென்று!!!
சிரித்து விட்டான். வந்ததே
அண்ணனுக்கு கோபம் சாந்தமுகம்
இப்போது கோரமுகமாக
மாறியிருந்தது. நண்பன் வேர்த்து
வெலவலத்துப் போயிருந்தான்.
போச்சிடா வம்பை
விலைகொடுத்து
வாங்கிவிட்டான்களே! என்று
நிச்சயம் அவன் நினைத்திருப்பான் .
அவனுக்குள்ளும் சிரிப்பு
இருந்தது ஆனால்
வெளிபடுத்தமுடியாத இக்கட்டான
சூழலை அவன் பெற்றிருந்தான்.
அதே கோபத்தோடு முகம்
திருப்பிக்கொண்டு
வேகநடைபோட்டு வீட்டிற்குள்
சென்று கதவடைத்துக் கொண்டார்
அந்த நல்லவர் அண்ணன். மச்சி!
மன்னிச்சிடுடானு சிரித்தபடியே
நாங்களிருவரும் நண்பனிடம்
சொன்னோம். விடு மாமு
இதெல்லாம் விஷயமேயில்ல
நாளைக்கே சரியாகிடும் பாரேன்,,
இது நண்பனின் பதில். நான்
சொன்னேன் அதுக்கில்ல மச்சி
எல்லாத்துக்கும் முன்னாடி போய்
குரல்கொடுத்து பிரச்சனைக்கு
தீர்வு காண்கிற ஒரு மனுஷன போய்
மோசமானவரு, அந்தாளு
இந்தாளுனு நீ பேசனதுதான்
எனக்கு பிடிக்காம போச்சி,பாரு!!
இப்ப போன நல்ல அண்ணனே அவரோட
வூட்டு பிரச்சனைன்னாலே அந்த
மோசமானவரைத் தான்
தேடிப்போராரு அவரு எப்படி
மோசமானவரா இருக்க முடியும்?
தானுண்டு தன் வேல உண்டுனு
இருக்கிறங்க எல்லாருமே நல்லவங்க
இல்ல மச்சி , ஒவ்வொரு வூட்டையும்
தன் சொந்தமா மதிச்சி பொதுப்
பிரச்சனைகளை சந்திக்கிரானே
அந்த சிலரை நீ நல்லவன்னு கூட
சர்ட்டிபிகேட் கொடுக்கத்தேவல
கூடுமானவர
மோசமானவன்,அந்தாளு,இந­
்தாளுனு பேசாதடா மச்சி!!
என்றேன்.
ஒரு வழியாக கிராமத்திலிருந்து
விடைபெற்றுக்கொண்டு வீடு
சேர்ந்தோம் நாங்கள்
இருவரும்,வீட்டிற்கு வந்ததும்
கைபேசியில் நண்பன் அழைத்தான்
"மச்சி ஜாக்ரதையா வீட்டுக்கு
வந்துட்டியா? அப்புரம் மச்சி ஒரு
விஷயம் நீ சொன்ன அந்த அண்ணனும்
நானும் ப்ரண்ட்ஸாகிட்டோம். சரி
மச்சி எப்பவாவது ஃப்ரியா இருந்தா
மறுபடியும் வீட்டுக்கு
வந்துட்டுபோ!! அவன்
பேசியதிலிருந்து மகிழ்ச்சி
எனக்குள் ஆட்கொண்டுவிட்டது.
வேறென்ன சொல்ல மீண்டுமொரு
விடுமுறை நாளுக்கான
காத்திருப்பும் நல்லர்கள் யாரென
கண்டுபிடிப்பும் எதிர்நோக்கிய
பயணத்தை விரைவில் தொடங்க
துடித்துக்கொண்டிருந்து
என்மனது என்றேச் சொல்லலாம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...