Tuesday, June 30, 2015

காதல் தோல்வி

அவன் என்னை
மறந்தும் கடந்தும் எங்கோ சென்று
விட்டதனால்

என் காதல்
தோல்வியை
தழுவியதாய்
காற்றிடம் புலம்பிய பொழுதுகளில்

அழுது விடாத
அதன் அரவணைப்பு
என் கண்ணீருக்கு ஆருதலானது

தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே

உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள்
சரிவர
அமையாமைக்கு
நீயே காரணம்

புல்லாங்குழல்
வாசிக்கப் பிறந்தவை
அன்றி
வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ

துடைத்துவிடு
கண்ணீரை
அழாதே
என்முன்னால்

காற்றின் கரங்கள் எனைத்தழுவி
அரவணைக்க
ஆருதல் வார்த்தைகள்
மனதினை வருடிவிட

காதலில் நான்
தோற்றேனென
மீண்டும்
மறுமொழியிட
மனதிற்கு
தோன்றவில்லை

தோல்வியென்பது
என்றுமே
காதலுக்கில்லையென
இதமான இளங்காற்று உணர்த்திவிட்டு

நகர்கிறது
இன்னொரு காதல்
தோல்வி கண்ட
தோழியினடத்தில்,,,

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு­­ மத்தியில்
மெட்ரோ ரயில் திட்டம் திறந்து வைக்கப்பட்டது . சென்னைக்கு வருகை
தருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற இவ்வேளையில் மெட்ரோ
ரயில் திட்டம் ஒரு வரவேற்பான செயல்திட்டமாக கொண்டுள்ளது. இதற்கிடையில்
சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது மற்றும் பழம்பெரும் வரலாற்றுச்
சின்னங்கள் அழிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் இத்திட்டத்திற்கு
எழுந்த வண்ணம் இருந்த போதிலும் மக்களின் போக்குவரத்துத் தேவை கருதி
பல்வேறு கட்டங்களாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்து அதன் முதற்கட்டமாக
திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது.
மெட்ரோ ரயில் சேவையில் பாராட்டுதலுக்குரிய விஷயம் அதன் ஓட்டுநர் சேவையில்
பெண்களை அனுமதித்திருக்கிறார்­­கள்
என்பதே,கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க பிரீத்தி
மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளை நியமித்துள்ளார்கள்.
தற்போது இவர்களுக்கு 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேசன் படிப்பில் பட்டயம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
அதன்பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான
பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது பயிற்சி முடிவடைந்த நிலையில், மெட்ரோ
ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள­­்.
அவர்களின் பணி சிறக்கவும் சேவையினை தொடரவும் வாழ்த்துக்கள். இவ்வகையிலான
கடினமான துறைகளில் பெண்களை பணிக்கமர்த்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.அதே
வேளையில் மெட்ரோ ரயில் சேவையின் மிகப்பெரும் குறைபாடு அதன்
விலைப்பட்டியலாகும். மெட்ரோ ரயில் பயணக்கட்டணம் ஏழை பாமர மக்களுக்கும்
நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏற்றதாக இல்லை, பெருமுதலாளிகளுக்கு
ஏற்றதாகவே நிர்ணயிக்கப்பட்டிருப­­்பதனால் இது ஏமாற்றமே தருகிறது. ஒரு
சராசரி வர்க்கப் பயணர் பேருந்தில் பயணிக்க திட்டமிடுகையில், தன்
கையிருப்புக்கேற்றவார­­ு மஞ்சல்பலகை,பச்சைப்பல­­கை, வெள்ளைப்பலகை, என
மாநகரப் பேருந்து வகைகளில் தன் கையிருப்பிற்கு ஏற்ற பேருந்தை
தேர்ந்தெடுத்து பயணிக்கிறான் இதில் சொகுசுப் பேருந்தும்,மிக சொகுசுப்
பேருந்தும் அவனது கவனத்தில் இடம்பிடித்ததே இல்லை இது எதார்த்த நடைமுறையாக
இருக்கிறது. இதிலும் பேருந்துப் பயணம் செலவு பிடிக்கிறது என்பதனால் மாநகர
மின்சார ரயில்சேவையையே அதிகம் விரும்புகிறார்கள் . இவற்றோடு
ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மிக சொகுசுப் பேருந்தின் கட்டணத்திற்கு நிகராக
மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் இருக்கிறது. ஆக மீண்டும்
முதலாளித்துவத்திற்கா­­க ஆரம்பிக்கப்பட்டதே மெட்ரோ ரயில் சேவை என்பதை
அரசானது நேரடியாகவே தெளிவுபடுத்தியிருக்க­­ிறது. இதில் பாதிக்கப்பட்ட ஏழை
பாமர மக்களின் நிலமையை அரசானதது உணருமா? என்றும் தெரியவில்லை,அப்படி
உணர்ந்தாலும் மக்களை கண்டுகொள்ளாது என்பதையும் அரசின் செயல்பாடுகள்
நமக்கு நன்றாக உணர்த்துகிறது.எது எப்படியோ சென்னையில் மெட்ரோ
ரயில்திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தாலும் பாமர மக்களும் , நடுத்தர
வர்க்கத்தினரும் பயணப்படுவதை புறக்கணிப்பார்கள். நம்மை பொருத்தவரையில்
ஆடம்பர பொருளங்காடியை வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டு காலி பாக்கெட்டை
துழாவி வெறுங்கை வீசி நடைபோட பழகிப்போனதின் பட்டியலில் மெட்ரோ ரயில்
சேவையும் சேர்த்துக்கொள்ளலாம் . அதை தவிர்த்து வெறெதையும் மெட்ரோ ரயில்
சேவை நமக்கு உணர்த்திடவில்லை. ஒருவேளை அன்னாந்து பார்த்தாலே காசு
கேட்பார்களோ என்கிற அச்சம்தான் மனதிலெழுகிறது,கேட்டா­­லும் கேட்பார்கள்
ஆளும் அதிகார வர்க்கத்தினர்.இதற்காக முகூர்த்த நாள்,நல்லநேரம்,ராகு, கேது
என்றெல்லாம் பார்த்து திறப்பு விழா வைத்தென்ன பயன்? கட்டணம் சிகரத்தில்
இருக்கையில் கண்சிவந்து மெட்ரோ ரயிலை வேடிக்கை மட்டுமே பார்க்க
வைத்துவிடுகிறது.

Sunday, June 28, 2015

அடிப்பதை நிறுத்தாதே அப்பா!

விடியற் காலையில்
பால் வாங்க
நான் போகிறேன்
கடைக்கு,,,

மின்கட்டணம்
நாளை கட்டவேண்டும்
இன்றே கொடுத்துவிடு அட்டையை
என்னிடத்தில்,,,

நுகர்வோர்
அங்காடியின்
கூட்ட நெரிசலை
நான் தாங்குவேன்
கொடு இப்படி
என்னிடத்தில்
ரேஷன் அட்டையை,,,

இன்று முழுவதும் முகூர்த்த தினமாம் அனைத்து நிகழ்சிகளிலும்
நீயிருக்க வேண்டும் குழந்தைகளை
என்னிடம் விடு
காலை பள்ளியில்
விட்டு மாலையில் வீட்டுப்பாடங்களை
நானே கவனித்துக் கொள்கிறேன்,,,

ஞாயிறு விடுமுறை
வீட்டை நான்
நாய் போல காவல்
காக்கிறேன்
நீ கவலைமறந்து
செல் கடற்கரைக்கு,,,

இப்படி அனைத்துச் சுமைகளையும்
அணைத்துக் கொண்டு அடிமையாய்
வாழ்வதுனக்கு பிடித்திருந்தும்

வாழ வந்தவளின்
பேச்சைக் கேட்டு
சனி ஒழியட்டும்
என

அப்பா!!!
உன்னை எங்கு
நான் விற்று விட்டு
வந்தேனோ
அதே
முதியோரில்லச் சந்தையில்
என்னை விலைபேசுகிறான்
உன் பேரன்,,,

பேரம் படியவில்லை
இன்னும்
இழுத்தடிக்கிறான்
அவனோடு
என்னையும்,,,

தொடர் சங்கிலி
அறுபட அறிவை
அன்றே பெற்றிருக்க வேண்டும் நான்,,,

கோபம் வருகிறதப்பா உன்மேல்
தோளுக்கு மேல்
வளர்ந்த பிள்ளையை
அடித்து திருத்துதலை என்மீது முதலறிமுகப் படுத்தியிருக்க வேண்டும் நீ!!!

இப்போது பார்!
செய்த பாவம்
அப்படியே இன்னமும் நிலுவையில்
என் நினைவுகளில்,,,

விரைவில் உன்
கல்லறையில் நான்

அப்பா அப்போதும்
என்னை அடித்து
திருத்தத் தயங்காதே
அங்கே அம்மாவும்
அதே சிந்தனையில் தானிருப்பாள்,,,

அவளிடம் பொய்க் கோபத்தோடு அதட்டிவிட்டு என்னை அடிப்பதை
மட்டும் நிறுத்தாதே
அப்பா,,,

இந்துத்துவத்தின் பிடியில் ஈழத் தலைவரா?

ஈழத்தின் விடுதலைத் தலைவர் மேதகு பிரபாகரனின் உருவச்சிலைகளை இந்துக்
கோவில்களில் நிறுவுவதும் அதனை அரசின் ஆணைக்கிணங்க காவல் துறையினர்
அகற்றுவதும் தொடர்கதையாகியிருக்கி­­றது. விடுதலைப் புலிகளின் இயக்கத்
தலைவர் பிரபாகரனை இந்துக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆகவேதான்
குறிப்பிட்ட இந்துத்துவ குலதெய்வ வழிபாட்டில் பிரபாகரனின் உருவச்சிலைகள்
இடம்பெறுகின்றன. முதலில் குலதெய்வ வழிபாடுகளான சிறு தெய்வங்கள் மற்றும்
ஊர் எல்லை காவல் தெய்வங்களான
மாரியம்மன்,அங்காளம்ப­­ன்,கருப்பு,முனி,ஐய்­ய­னாரப்பன், போன்ற தெய்வங்களை
வணங்குதல் என்பது இந்துத்துவத்தில் சேராதென்று கூறப்படுவதை ஏற்க இயலுமா
என்றால் முற்றிலுமாக ஏற்க முடியாதென்றே எடுத்துக்கொள்ளலாம். அவ்வகையான
சிறு தெய்வங்களை வணங்குதல் என்பதை இந்துத்துவத்தில் சேராதென்பதற்கு
அச்சிறு தெய்வங்கள் இடைநிலைச் சாதியினர்களால் வணங்கப்படுவது அதில்
அர்ச்சகர்கள்,பார்ப்ப­­னர்கள் இடம்பெறவில்லை மாறாக இனக் குழுக்களில்
ஒருவரான இடைநிலைச் சாதியரே பூசாரியாக அங்கம் வகிக்கின்றனர் ஆகவே
சிறுதெய்வ குல தெய்வங்களை வணங்குதல் இந்துத்துவத்தில் சேராதென்று
விளக்கமும் அளித்துவிடுகிறார்கள்­­.அவ்வாறு நோக்கினால் இனக் குழுக்களின்
ஒருவரான சக இனத்து பூசாரி தலைமை ஏற்கிறார் என்பதற்காக மட்டுமே சிறு
தெய்வங்கள் இந்துத்துவத்தில் இடம்பெறாதென்றுச் சொல்லிவிட முடியாது.
சிறுதெய்வ வழிபாட்டின் அனைத்துச் சாங்கிய சடங்குகளும் அப்படியே
இந்துத்துவத்தில் இடம்பெறச் செய்கிறது மேலும் இந்துத்துவத்தில் மட்டும்
ஏன் சிறுகடவுள்,பெரியகடவு­­ள் இருக்கிறார்கள் என்கிற கேள்விகளுக்கெல்லாம்
விடைதேடுதலென்பது
ஆற்றில் அளந்துபோடும் அரசிக்குச் சமம் . அந்தளவிற்கு எத்தனையோ தெய்வங்கள்
இந்துத்துவத்தில் இடம்பெற்றிருக்கின்றன­ . சிறுதெய்வ வழிபாட்டில் மேதகு
பிரபாகரனை வணங்குதல் முறையா? என்றால் அதுவும் மூடத்தனமல்லாமல் வேறெதுவாய்
இருக்க முடியும். ஒரு இனக்குழுக்களின் அனைத்து வீடுகளிலும் நிச்சயமாக
சாமியறை,அல்லது கடவுளின்குடில் ஒன்று இருக்கும் அச்சாமியறையில் இடம்
பெறாத மேதகு பிரபாகரனின் உருவம் பொதுவெளியில் பங்கு போடப்படுகிறது.
சாமியறை என்பதும் இங்கே ஏற்கப்படாதென்றாலும் சுட்டிக்காட்டுதலுக்க­­ு அது
தேவைப்படுகிறது.
ஈழத்தை பொறுத்தவரையில் போர்வீரர்களை மட்டுமே தமிழ்ச்சமூகம்
எடுத்துக்கொள்கிறது மாறாக விடுதலைப்புலி போர்வீர்களின்
படைப்புகள்,கலை,இலக்க­­ியம், படைப்புத்திறன்,நிர்வ­­ாகத்திறன் ஆகியவற்றை
புறந்தள்ளியதன் விளைவுதான் தமிழ்ச்சமூகத்தில் மேதகு பிரபாகரன்
கடவுளாக்கப்படுகிறார்­­. புலிகள் வெறும் போர்வீரர்கள் இல்லை அதையும்
தாண்டி படைப்புலகச் சிந்தனையாளர்கள் என்பதை முதலில் உணர்த்தப்பட
வேண்டும். பிரபாகரன் உருவத்தை சிறுதெய்வ வழிபாட்டில் வைத்து வணங்குதலை
விட அவரின் சிந்தனைகள்,செயல்பாடு­­கள் ,ஈழப்படைப்புகள்,போர்­­ யுக்திகள்,
ஆகிய புத்தகங்களை நாமும் படித்து நமது சந்ததிகளையும் படிக்கவைத்து
பார்ப்பதே மிகச் சிறந்தவையாக எண்ணவேண்டும்.இம்மாதம் (ஜூன்) 5ம் தேதி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில்
அமைக்கப்பட்டிருந்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில், சேவுகராய
அய்யனார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மேதகு பிரபாகரன் சிலையாகட்டும்,
சென்ற வாரம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் எல்லைக்குட்பட்ட
சடையாண்டிகுப்பம் கிராமத்தில் ஊருக்கு வெளியே ஐய்யனாரப்பன் கோயிலில்
நிறுவப்பட்ட மேதகு பிரபாகரன் சிலையாகட்டும் இரண்டுமே வெளிபுரத்தில் ஈழ
உணர்வை கொண்டிருப்பதுபோல் தெரியுமே தவிர மறைமுகமாக இன குழுக்களின்
இந்துத்துவத்தையே கொண்டிருக்கிறது. அதுவும் ஒருசார் இன குழுக்களின்
ஆதிக்கம் தலைசிறந்து விளங்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக மேதகு
பிரபாகரனையும்,ஈழ விடுதலையையும் கேடயமாக பயன்படுத்த முனைந்துள்ளார்கள்
என்பது தெளிவு. உண்மை ஈழ உணர்வும் மேதகு பிரபாகரனும் வெளிபட வேண்டுமெனில்
அது பயிற்சி முறையிலும் புத்தக உறுவாக்க முறையிலும் , பொது இடத்தில் சிலை
நிறுவுதல் முறையிலும் மட்டுமே சாத்தியப்படுமேயொழிய இந்துத்துவ சிறுதெய்வ
குலதெய்வ வழிபாடுகளில் என்றுமே சாத்தியப்படாது என்பதே தெளிவு.
இவ்வெவ்வேறு இடங்களில் ஆளும் அதிகார வர்க்க அரசானது மேற்கொண்ட மேதகு
பிரபாகரன் சிலை அகற்றுதல் நடவடிக்கைகளை இதன் மூலம் நியாயப்படுத்தி
பார்க்கும் கண்ணோட்டம் இருக்குமாயின் அதுவும் இந்துத்துவத்தின்
அடிமைத்தனமாகவே இருக்கும். காரணம் ஆளும் அதிகார வர்க்க அரசானது முழுமையாக
இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டதொரு அரசாகும். அதன் பொருட்டு எழும்
செயல்பாடுகளை கண்டித்தல் அவசியப்படுகிறது ஏனெனில், மதம் புனிதமென்றால்
புரட்டுகளே மதமாகும்
என்பதில் தெளிவு
விட்டுவிடுவோம்
அதற்கப்பால்
அது அவர்களது நம்பிக்கை
அவர்களது நிலம்
அவர்களது புரிதல் அதுவாதுவே அவர்களுக்குக் கற்பித்திருக்கிறது
அதனிடமிருந்து வெளியேற கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது
விரைவில் இந்துத்துவத்திலிருந்­­து அவர்கள் வெளியேறி விட வாய்ப்பும்
உரிமையும் அவர்களுக்கு உண்டு ஆகவே
எழுப்புகிறார்கள் கடவுள் சிலையை
பிரபாகரனாக,,,
ஒருவேளை பிரபாகரன்
ஆதிக்கச் சர்வாதியாக இருந்திருந்தால் ஆளும் அரசானது பாலபிஷேகமே
அரங்கேற்றியிருக்கும்­­. இரவோடு இரவாக ஒரு சிலை அகற்றப் படுகிறதென்றால்
"பிரபாகரனை" பார்த்து பயப்படுகிறது அரசென்று போலிவீரம் பேசுவதை தவிர்த்து
உற்று நோக்கினால்
தெளிவாகத் தெரியும் ஜெவின் "சர்வாதிகாரம்"
சர்வாதிகாரம் களையெடுக்க வேண்டுமெனில் தமிழ்ச் சமூகத்தில் இந்துத்துவ
கடவுளாக மேதகு பிரபாகரனை பாவிக்கும் பார்வை அகற்றப்பட்டு அவரது
சொல்,செயல் சிந்தனைகளே எடுத்தாளப்பட வேண்டும்.

Saturday, June 27, 2015

அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ? தொடரும் கௌரவக் கொலைகள்

தீர்வுகளைத் தேடி இன்னும் எவ்வளவு தூரம்தான் பயணிக்க வேண்டுமென்று
ஒருமுடிவும் தெரியவில்லை இந்த தமிழ்ச் சமூகத்தில் நிலவும் ஆதிக்க
இந்துத்துவ சாதி வெறியின் அவல நிலைகள் வழித்தடங்களை தடுத்து நிறுத்தி
திசைமாற்றிவிட்டு ஏளனம் செய்கின்றது. எதுவும் மாறிடப்போவதில்லை தொடரும்
எங்கள் கௌவரக் கொலைகளென்று மிகப்பெரும் சவாலையும் சவடாலிட்டுச் தமிழ்ச்
சமூகத்தை அதன் பிடியில் தக்கவைத்துக்கொ(ல்)ள்­­கிறது.அன்று தர்மபுரியில்
இளவரசன் இன்று நாமக்கல்லில் கோகுல்ராஜ் , பெயரும் ஊரும்தானிங்கே மாற்றமே
தவிர அதே தண்டவாளம்,அதே படுகொலை, அதே காதல்விவகாரம், அதே கௌரவக்கொலை, அதே
ஆதிக்கச்சாதி வெறி என்று தொடரும் சாதியாதிக்கத்தின் கட்டவிழ்க்கப்பட்ட
கௌரவக் கொலையென்பது தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடென்று ஏன் உணர
மறுக்கிறார்கள்? ஏனென்றால் சாதிவெறியானது இங்கே தாண்டவமாடுவதனால் பல
காதலர்கள் தலைகள் இங்கே தண்டவாளங்களுக்கு இரையாக்கப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்திற்கான­­ இன்றைய தேவை சாதிமறுப்பு அல்லது கலப்பு
மணங்களேயென்றால் அது மிகையாகாது . ஒரு கவிஞன் எழுதினான் அடிக்கடி அந்தப்
பாடல்வரிகளை மட்டும் நினைவுக் கூர்ந்து மனதிலேற்றிவிடுவது
அவசியமாகப்படுகிறது.
"காதலை பாடாத காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல்தான் சாபம்!
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே யாரோடு அவனுக்கு கோபம்!
ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம்
கண்ணீரின் வரலாறு
உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம் உலகத்தில் அதுதானே சட்டம்!

கடைசி வரியில் இடம்பெற்ற எழுதப்படாத சட்டம் தன் இயக்கத்திலிருந்து
சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை கௌரவக் கொலையென்று அது இயங்கி
காதலையும்,காதலர்களைய­­ும் கொன்றழிப்பதிலேயே குறியாய் இருப்பதற்கான
சான்றுதான் இந்நிகழ்வு
அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ......... ஒவ்வொரு சாதிவெறி
நிகழ்வுகளுக்கும் சொல்லப்படும் அதே அம்பேத்கரின் வாக்கு இங்கே மீண்டும்
மீண்டும் பதிந்துவிடுதல் தேவைப்படுகிறது அது
"சாதிதான் சமூகமெனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்பதே
நிகழ்வு இனி ஒரு பார்வை ,,,
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார்
பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்துள்ளார்.அதே கல்லூரியில்
படித்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கோகுல் ராஜ் தலித்
சமூகத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். இருவரும் படிப்பை முடித்துவிட்ட
நிலையில், கோகுல்ராஜ் தன் காதலியான சுவாதியை சந்திப்பதற்காக
திருச்செங்கோட்டுக்கு­­­ வந்துள்ளார். இதனிடையே கோகுல்ராஜை பின்தொடர்ந்த
சாதிவெறிக்கும்பல் அவரை கடத்திச் சென்றிருக்கிறது . மகனை காணவில்லையென்று
கோகுலின் தாயார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் பதிவு செய்துவிட்டு ,
பெற்றோர்களும் காவல் துறையும் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
வேளையில்,கிழக்கு தொட்டிப் பாளையம் ரயில்வே பாதையில் தலை நசுங்கிய
நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கோகுல்ராஜை கடத்திய
ஆதிக்கச் சாதிவெறி கும்பலானது கொலை செய்து தண்டவாளத்தில்
வீசியிருக்கிறது. காதலுக்கு சாதியம் ஒரு தடையெனில் சவுக்கடி
காதலுக்கு விழவேண்டுமே தவிர சாதியத்தின் மீது விழுந்துவிடக் கூடாதென
ஆதிக்கச் சாதிவெறியர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதற்கு கோகுல்
ராஜின் ரத்தவெள்ளம் உணர்த்தி
விட்டுச்சென்றிருக்கி­றது.

Friday, June 26, 2015

தமிழ்த்தேசியத்தில் எழும் "ஜ"ந்தேகம் ச்ச்சீ! "ச"ந்தேகம்

தமிழ்தேசியத்தின் சிந்தனைகள் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது . எப்படி
இவர்களிடத்தில் மட்டும் இப்படியான சிந்தனைகள் எழுகின்றது? கேள்விக்கான
விடையை அவர்களாகவே தந்துவிடுகிறார்கள் "நாங்கள் தமிழ்த்தேசியர்களென்ற­­ு"
தமிழ்த்தேசியவாதிகளின­­் முன்னெடுப்பு முறைகளில் கோமாளித்தனங்கள்
நிறைந்திருப்பதை மீண்டும் உறுதியாகியிருக்கிறது­­. தமிழ்ச்சமூகத்தில்
தற்போது அவர்களெடுக்கும் பரப்புரை முன்னெடுப்பு "சாதியத்தை ஒழிக்க
வேண்டுமெனில் "ஜா"தியம் என்பதை "சா"தியம் என்றெழுதினால் போதுமானது
சாதியம் ஒழிந்துவிடும்" வேடிக்கையாகல்லவா! இருக்கிறது இவர்களின் பரப்புரை
கூற்று,,, இந்துத்துவ பார்ப்பானிய வடசொற்களான "கிரந்த"எழுத்துக்களை­­
அழித்தால் உடனே சாதி ஒழிந்து விடுமா? அப்படி பார்த்தால் இதுவரை சாதிய
எதிர்ப்பு பற்றி நான் எழுதுகின்ற போதெல்லாம் "சாதியம்" என்றே எழுதுகிறேன்
எங்கும்,எவ்விடங்களில­­ும் "ஜாதியம்" என்று எழுதியதேயில்லை,
அப்படியிருக்கையில் சாதியம் ஒழிந்துவிட்டதா என்ன? சாதியாதிக்கம்
மெம்மேலும் அதிகரித்துக்கொண்டேதா­­னே இருக்கிறது,வேறுவழியி­ன்றி நான்
சாதியத்தை எதிர்த்தெழுதிவிடுகிற­­ேன் என்ன செய்வது சமூகத்தை
நேசித்துவிட்டேனே எழுதித்தானே ஆகவேண்டும். தமிழ்த்தேசியர்கள் சாதியம்
குறித்த இந்த அணுகுமுறையில் "கிரந்தம்" எழுத்துக்களை அழித்தால் சாதி
அழிந்துவிடுமென்றால் தமிழ்ச்சமூகத்தில் என்றோ சாதி அழிந்திருக்கும்.
காரணம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கிய காலம்தொட்டே கிரந்த
எழுத்துக்களை புறக்கணித்தல் என்பது நடந்துகொண்டுதானிருக்­­கிறது.அதனை
சாதியத்தில் ஒப்பிட்டு வெறும் கிரந்தம் எழுத்துக்களை மாற்றினால் சாதி
ஒழிந்துவிடுமென்றால் தமிழ்த்தேசியத்தின் சிந்தனைகளை கண்டு சிரிப்பதைத்
தவிர வேறெதுவும் தோன்றவில்லை,உண்மையில­் சாதி ஒழிப்புக்கு கிரந்த
எழுத்துக்கள் தடையாக இருக்கின்றவா? என்றால் சாதிக்கும் கிரந்த
எழுத்துக்கும் கொஞ்சம் கூட தொடர்பேயில்லை எனலாம் , காரணம் கிரந்த
எழுத்துக்கள் அழிப்பென்பது மொழி சார்ந்தது , சாதி ஒழிப்பு என்பது
இனத்தோடும் மதத்தோடும்,வர்க்க ஏற்றத்தாழ்வுகளோடும்,­­அடிமை ஆதரிப்போடும்
சேர்ந்து பயணிக்கும் ஒன்று இங்கே மொழிப் பிரச்சனை எழவில்லை மாறாக யார்
யாரை அடிமைபடுத்தி பணியவைத்தல் வேண்டும் என்ற வர்க்க அல்லது வகுப்புப்
பிரிவினை பிரச்சனை. இதில் எல்லா மொழி பேசுவோர்களும் ஒரு
கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள் அதுதான் சாதிய கட்டுப்பாடு.
தமிழ்த்தேசிய பற்றாளர் திரு சீமானின் "நாம் தமிழர் கட்சி ஆவணம்"
சமீபத்தில் வெளியிட்டேன் முழுமையாய் வாசித்தவர்களுக்குத் தெரியும்
அதிலிருக்கும் சூழ்ச்சமம். சாதியமைப்பு என்பது மேலோட்டமான
மேற்கட்டுமானத்தை கொண்டிருக்கிறது ஆகவே அதன்மீதான எதிர்ப்பு அவசியமற்றது
திராவிடத்தால்தான் நாம் வீழ்ந்தோம் அதுவே அடிகட்டுமானத்தை
கொண்டிருக்கிறது அதனால் திராவிட எதிர்ப்பையே முதன்மையாக எடுத்துச் செல்ல
வேண்டும். என்கிற நடையில் அவ்வாவணம் இருக்கும் . இப்படியான நூல்களை
எழுதுவோரிடம் சாதி எதிர்ப்பு வெறும் கிரந்த மொழியை அழித்துவிடுதல்
மட்டுமே என்பதாக வருவதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை. போலவே தமிழ்த் தேசியப்
பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களும்,
இதே கருத்துகளை பரப்புரை செய்து வருவதை பார்க்க நேரிடுகிறது. இன்னபிற
தமிழ்த்தேசியர்களும் சாதி எதிர்ப்பு அல்லது ஒழிப்பினை மேலோட்டமான
கண்ணோட்டத்திலேயே அனுகுகிறார்கள் அதன் வெளிப்பாடு வெறும் கிரந்த
எழுத்துக்களை ஒழித்தால் சாதி ஒழியும் என்கிறார்கள் . சாதி எதிர்ப்பில்
அவ்வளவாக கவனம் செலுத்தாத கம்யூனிஸ்ட்டுகளே அதன்தேவை கருதி "வர்க்க
முரண்பாடுதான் சாதியமென்பது அதனை எதிர்ப்பது முதல்பணியாக இருக்கிறது"
என்றுணர்ந்து தீண்டாமை எதிர்ப்பு அமைப்புகளை உறுவாக்குவதில் தங்களின்
கவனத்தை திருப்புகிறார்கள் . ஆனால் தமிழ்த்தேசியமோ இன்னமும் மேலோட்டமான
கண்ணோட்டத்தையே சாதி எதிர்ப்பு மீது வைத்திருக்கிறதென்பது­­ வருத்தத்தையே
அளிக்கிறது. எனது சந்தேகம் என்னவெனில் வடமொழி சொற்களான கிரந்தம்
ஒழிந்தால் சாதி ஒழியும் எனில் சாதியானது மொழிநடையிலேயே பிறந்ததா? அவ்வாறு
மொழிநடையில் சாதி பிறந்ததெனில் இன்னமும் ஏன் நமது கிராம அமைப்பு முறையில்
சேரி,ஊரென்ற பிரிவினை காணப்படுகிறது? தமிழ்த்தேசியத்தின் சாயம்
வெளுக்கும் காலம் தொலைவில் இல்லை விரைவிலேயே அதன் தன்மையை தமிழ்ச்சமூகம்
உணரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. சாதி குறித்தான பார்வை
சுறுக்கம் தமிழ்த்தேசியம் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகவும்
அமைந்து விடுகிறது.

Thursday, June 25, 2015

இரு தோழர்கள்!

வாடைக்காற்றில் வயிற்றுப்பசியோடு சுற்றித் திரிந்த பறவையொன்று
எச்சில் இலையை
ஏக்கமாய் பார்த்துவிட

எனக்கே போதாதிது
நீ வேறு
வந்துவிட்டாயாவென
விரட்ட மனமில்லாமல் விரலசைத்து
அழைக்கிறது
பிஞ்சு மனசு

அருகில் வந்தமர்ந்த உடலோடு
இறக்கைகளும்
ஒட்டிப்போன பறவையினடத்தில்

பாசம் வைத்து
பந்தியில் இடம் பகிர்ந்தளிக்கிறானே
அவன் யார்?

விடைத்
தேடியலையும்
எச்சில் இலைகளுக்கு விவரம் போதவில்லை வீசப்பட்ட இலைகளோ விருந்துண்ணும்
பக்குவமாயிங்கே

மாயவித்தைகளை
மடியில் சுமந்தவனில்லையவன் மழைநீர் அவனது
விக்கலை விரட்டும்

என்றோ பிறந்தவன்
இன்னமும் தேடுகிறான் குப்பைத் தொட்டியில்
உணவை

பரிவுகாட்டிய பறவையினடத்தில் பட்டகதையை
விவரிக்கிறான்
அத்தனையும் சோகக்கதைகளே,,,

நொந்துபோகாமல்
செவிசாய்த்து
கேட்கிறது
அந்தப் பறவையும்

இறுதி உரையாடல்
இடியினை
விழுங்க
பறவையே கேள்!!!

ஏழையாய் பிறந்தது தவறில்லை
ஏழையாய் வாழ்ந்து
மடிவது தவறென்று யாரோவொருவன்
சொன்னானாம்
சிரிப்புதான் வருகிறதெனக்கு

பிறந்தபொழுதே புதைக்கப்பட்டுவிட்டா­ல் பூமிக்கு ஒரு சுமையிருக்காது

வாழ்ந்தே விடுகிறேன் பூமியெனை திட்டுகிறது ஏனடா
சாகவில்லையென்று

காத்திரு பூமியே
கடைசிவரை
சமூகமென்னை
திரும்பி பார்க்குமா? திருந்தி வாழுமா?
தேடியலையும் வரை
துறக்க மாட்டேன் இவ்வுயிரையென்றேன்

தேடு! தேடு!
நன்றாகத் தேடு!
அதுவரையில்
நீயெனக்கு சுமையில்லையென சுருண்டு விழுந்தது பூமியென்
காலடியில்

நமது கதை
சிரிப்பாய் சிரிக்கிறது
பார்த்தாயா பறவையே சிறுவனும் சிரித்தான்,
பறவையும் சிரித்தது

எச்சில் இலை
பந்தி
இனியாரேனும்
வீசுவார்களா?

எதிர்பார்ப்பில்
இருவருமே
தோழர்களானார்கள்,,,

காதல் துளிகள்

உயிரை
வாங்கும்
கவிதைக்கு
உனது பெயரையே
சூட்டுகிறேன்
இம்சைகள்
மிக பிடிக்கும்
என்பதால்,,,

___

இளங்கதிர்
உதயம்
என்னவளின்
கழுத்தில்

___

கசியும்
மௌனம்
உள்ளே
தோய்ந்த
இதயம்

___

அவளின்
நினைவுகளில்
மிச்சமிருப்பது
என் காதல்
மட்டுமே,,,

___

நீலம்
கரைதொடும் முன்பே
நித்தமும்
உயிர்த்தெழ
துடிக்கிறேன்
உயிரே
எனைப் பிரியாதே,,,

___

முகம் சிவக்கிறது
தாமரைக்கு
உன்
சிறு கோபத்தை
சேமித்து வைக்கிறேன்
நான்,,,

___+___

Wednesday, June 24, 2015

நீயும் வா என்னோடு,,,

ஓவியங்களை
உறங்குமாறு கட்டளையிடுகிறேன்

கனவினில் தெளிந்த
நீராகத்
தெரிகிறாய் நீ

பறிக்கத் துடித்தால் கண்ணை பறிக்கும்
மலர்களை
மேலோட்டமாய் திட்டித்தீர்க்கிறேன்

கள்ளத்தனமாய்
தேன் திருடும் இதயத்திருடியாகத் தெரிகிறாய் நீ

துள்ளியாடும்
தோகை இளமயிலிடம் கோபித்துக்
கொள்கிறேன்

சலங்கை காலாடும் சில்லிடும்
மழைத் துளிகளாகத் தெரிகிறாய் நீ

நீயும்
கவனித்திருப்பாய்
இந்தக் காதலனின் செய்கைகளை

இறுதியாக உயிரோடு உறவாடும் காதலெனும் மூவெழுத்திடம் மண்டியிட்டு மடியேந்துகிறேன்

சுவற்று
விரிசலைபோல
நம் காதலுக்கேதும் நேர்ந்து விடக்கூடாதென்று

நீயும் வா
என்னோடு

காதலெனும்
மூவெழுத்திடம்
வரம் கேள்
வளரும் பிறைபோல
நம் காதல்
வளரவும்,வாழவும் வேண்டுமென்று,,,

உன்னை மறந்து,,,

நிஜம்தான் நிஜம்தான் உன்னை
மறந்தது நிஜம்தான்
நிழல் எதுவாக
இருப்பினும் நிஜமாக நீயாகத் தெரிவது
என் கண்கள்
செய்யும்
ஏமாற்று வேலை

விசித்திர பூச்சென்டுகள் போலியெனத்
தெரிந்தமையால்
புதைத்து விடுகிறேன்
என் காதலை

நிஜப்பூக்களை வருடி கார்கூந்தலில்
எப்போது
அமர்த்துகிறாயோ
அப்போது
தொலைத்து விடத் தயாராகிவிடுகிறேன் மறந்தது நிஜமென்பதை

அதுவரையில்
நீயாகவே சூடிக்கொள்ளும் காகித பூக்களுக்கு முன்னால்
காதலித்ததை
மறந்தும் மறுத்தும் கடந்து செல்கிறேன்

நிஜங்களுக்கிங்கே
வாழ வழியில்லையெனில் நிழல்களும்
குடை விரித்தல்
சாத்தியம் தானே

சத்தியம் செய்துவிட முடியவில்லை
மறந்தேனென்று
என்னால்

நிழலோடு நிஜமாகவே
வாழும் பூக்களுக்கு மத்தியில் பொய்யுரைக்க முடியவில்லை

தவிக்கிறேன்
துடிக்கிறேன்
இறுதியில் மூச்சுத்திணறி தவிர்க்கமுடியாதொரு தருணத்தை எட்டிவிட்டபடியால்
சொல்லிவிட்டேன் பூக்களிடத்தில்

பூக்களே
நிஜம்தான் நிஜம்தான்
அவளை மறவாமல்
மனதினில் பூட்டியது நிஜம்தான்

என்ன செய்ய
நான் என்ன செய்ய

அவளோ காகித பூக்களின் நிழலை விரும்புகிறாள்
நிஜமாக ஜொலிக்கும்
உன்னை மறந்து,,,

களத்து மேட்டு "கருப்பன்"

பாறைகளென்றோ கூழாங்கற்களானது
மாற்றம் தந்த
மலை நதியைத்தான் காணவில்லையிங்கே

களவாடியவன்
கரன்சியில் புரள கட்டியழுவ
கண்ணீரும் வற்றிப்போனது களத்துமேட்டு கருப்பனுக்கு

திண்ண உணவு செரிக்கவில்லையாம்
தினம் குடிக்கிறார்கள் குளிர்பானத்தை

தாகமெடுத்தால்
தண்ணீரில்லை
திணறும் மூச்சோடு
தினம் கடக்கிறான் களத்துமேட்டு
கருப்பன்

உணவில் கலப்படமாம்
ஊரே அலறியது
களத்துமேட்டு
கருப்பன் மட்டுமே சிரித்தான்

உற்பத்திக்கு வழியில்லையெனில் கலப்படம் அவசியம்தானே,,,

பச்சை நிறங்களை
பார்த்தே நாளாகிப்போனதிங்கே நாறும் மனிதர்கள் உடலெங்கும்
பூசிக்கொண்டார்கள்
வாசனைத்
திரவியங்களை

களத்து மேட்டு
கருப்பன் கடைசியாய் அரை கூவலிடுகிறான்

அடேய் மானிடா
ஆற்றை காப்பாற்று
அழ தேவையில்லை
இனி அனைத்தும்
உன்மடியில்
உற்பத்தி தொடங்கிவிட்டால்
கலப்படம் அவசியமில்லை
கண்ணுற்று பாரடா
உற்பத்தி இங்கில்லை

உழுதவன் விதைநெல்லை ஊழல்செய்து விற்றுவிட்டார்கள்

கலப்படமில்லா
பொருள் வேண்டுமா?
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,
கருப்பனிங்கே காத்திருக்கிறேன்
கொஞ்ச நெல்லையும் காப்பாற்றவேனும்
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,

கருப்பன் அழைக்கிறான் காதுகொடுக்குமா
இந்த கலப்பட உலகம்,,,

Thursday, June 18, 2015

நன்றி சொல்ல வந்திருக்கிறேன் 200 பதிவுகள் முடித்த கையோடு,,,

எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் எழுதுவதை நிறுத்த மனமில்லை எனக்கு,,, தோழனே
நீ எழுது நாங்கள் துணையாக நிற்கிறோமென்று ஏணிப்படியாய் எத்தனையோ முகங்கள்
எத்தனையோ தளங்களிலிருந்து ஏற்றிவைத்து என்னை அழகுபடுத்துவதனால் எழுதுவதை
உயிராகவே நேசிக்க இதயம் பழகித்தான் போனது . இவ்வாண்டில் (2015) 200
பதிவுகளை எழுதி முடித்திருக்கிறேன் அத்தனை பதிவுகளும் சராசரியாய் 100
பார்வையாளர்களுக்கு மேல் தாண்டியவை எனும்போது இரட்டை சந்தோஷம் எனக்குள்
முளைத்துவிடுகிறது. ஆகவே நன்றி! சொல்ல வந்திருக்கிறேன். மனிதம் இன்னமும்
உயிர்ப்போடிருப்பது அன்போடு கலந்தெழும் நன்றியில்தானே!
எனக்கு சமீப காலமாகத்தான் "வலைப்பூ" அறிமுகமானது எழுதும் வாய்ப்பு கடந்த
காலங்களில் எனக்கு கிட்டியதேயில்லை, இதனை எனது 100வது பதிவிலேயே
தெரிவித்துவிட்டேன். ஆனால் இன்றதை காணும்போது இத்தனை பதிவுகளை எழுதி
விட்டோமா! எனும் ஆச்சர்யத்திலிருந்து நான் மீளவேயில்லை, காரணம் இணைய
வெளியில் எனக்கு முதலறிமுகம் பேஸ்புக்கும் , ட்விட்டரும் மட்டுமே
அதைத்தாண்டி சென்றதேயில்லை, இவ்வாண்டில் சிகரத்தின் முதல்படியிலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டெழுந்து முன்னேற்றப் பாதைக்கு
முத்தமிடுவேன். தமிழ்ச் சமூகம் என்னை தூக்கி வளர்த்திருக்கிறது,
நன்றியுணர்வோடு செயல்படுதல் என்பதென் முதற்கடமையாகும். ஊக்கமளித்து
எழுதத் தூண்டிய அனைத்துள்ளங்களுக்கும­் என் மனமார்ந்த நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட நபர்களைக்கூட நான் கைகாட்ட
முடியாது,எனது கைகளுக்கு வலுசேர்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
பேஸ்புக்,ட்விட்டர், கூகுள்ப்ளஸ் ,வலைப்பூவுலகம்,­ என அனைத்து
தோழர்களையும் வணங்கி என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். பெயர் பட்டியல்
வெளியிட்டால் பெயர் விடுபட்டுவிடுமோ! என்கிற அச்சம் எனக்கிருக்கிறது.
ஆகவே மீண்டுமொருமுறை என் தமிழ்ச் சமூகத்தையும்,தோழர்கள­ையும்,
நினைவுபடுத்தி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறே­ன்.

"புதியதோர் ஜனநாயகம் பூத்துக் குலுங்கிடவே தமிழ்தாய் ஊட்டிய
பாலில் ஒருதுளி
விதைகளுக்கிடுகிறேன்
விரைவில் அவை முளைத்தெழலாம்"

Wednesday, June 17, 2015

பிரபஞ்சத்தின் காதலியவள்

தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

பூக்களை
மேய்ந்து விட்டு இன்பத்தேனை சுவைத்துண்டதும்
கண்டும் காணாமல்
உதறித் தள்ளிடும் வண்டுகளாய்
மேய்ந்த ஆண்மக்கள் விலைமகளென்று பெயரிட்டார்கள்
அவளுக்கு

நிர்வாண கோலத்தில் நிழலிருந்தாலும்
அனல் பார்வை வீச்சால்
அடைய துடிக்கிறார்கள் அவளின் அந்தரங்க
உடல் பாகத்தை

பார்வைகள் பலவிதமாய் ஒவ்வொன்றும்
புதுவிதமாய் பட்டுத்தெறித்தன

ரசனைகளின் வெளிப்பாடு
பிடித்த பகுதிகளை அவர்களே
தேர்வு செய்கிறார்கள் அவர்களே மதிப்பீடும் போடுகிறார்கள்
போகப் பொருளாகத்
தெரிகிறாளவள் ஆண்மக்களுக்கு

பேசிய பேரப்பணம்
வந்து சேரவில்லையாம் தரகனை திட்டிவிட்டு தரதரவென
அவளை இழுத்து
தாகம் தீரும்வரை புணர்ந்துவிட்டு கடைசியில் கைவிலங்கிட்டான் காவல்காரன்

வழக்கு வழுக்கி விழந்தது வாயிற்படியில்
அவளைப்போலே
எத்தனையோ
பெண்கள் வரிசையில்
அவளும் ஒரு
எண்ணிக்கை சேர்க்கையில்

நிச்சயமாய் அவள்
ஆடை அணிந்திருக்கிறாள் சாட்சிக் கூண்டில்
உடல் நிற்கிறது

நீதி தேவதையின்
கண்களோடு
காதுகளையும் சேர்த்திங்கேதான் கட்டியிருக்கிறார்களே

கடைசியாக நோட்டமிடுகிறாளவள்
சாட்சியம் கேட்கும் நீதிபதியை

அப்பப்பா!!!
ஒரே வியப்போடு பேரதிர்ச்சியும்
அவளுக்கு

என்னை விட
அதிகமாக நீதிதேவதைதான் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருப்பாள்
உண்மைகளை
உணர்ந்த பொழுதில்
தரகர் கட்டினான்
அபராதப் பணத்தை

இனி கூடுதலாய் புணர்தலுக்கு
நேரமொதிக்கியாக வேண்டுமவள்

கிடைக்கும் இடைவெளிகளில் இயற்கையை
ரசித்துவிட
தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

மனதிலெழும் இன்பத்தின் பிம்பத்தை எப்போதும் தூரத்திப் பிடிக்கத் துடிக்கும்
பிரபஞ்சத்தின் காதலியவள்
கடைசிவரை
காட்சிப் பொருளாகவே
இருக்கிறாள்

மனசாட்சிகள் பல
அவளுக்குப் பின்னால்
இன்னமும்
சிரித்துக் கொண்டே தானிருக்கிறது,,,

Tuesday, June 16, 2015

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி நடுவில் சுஷ்மா

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி இரண்டு பேருக்கும் எந்தவொரு
வித்தியாசமும் இருந்ததில்லை இதில் சுஷ்மா துண்டுச் சீட்டுபோல செயல்பட்டு
லலித் மோடிக்கு விசா வழங்கியிருக்கிறார் அவ்வளவே ,, கண்ணுக்கெட்டிய
தூரத்தில் குதூகலத்தோடு குற்றவாளியொருவன் திரிகிறானென்றால் அதுயெப்படி
"தலைமறைவு" ஆகிவிடும் தேடப்படுவதில் தேவையற்ற அரசியல் இருப்பது நமக்கு
புலனாகிறதல்லவா, எதன் அடிப்படையில் விசா வழங்குனீர்கள் எனக்கேள்வி
எழுப்பினால் "நம்பிக்கை" அடிப்படையில் என்கிறார் சுஷ்மா . நம்பிக்கை
நட்சத்திரம் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுகிறார் . ஆக
ஊழலுக்கெதிரான ஆட்சி என்பதை பிஜெபியால் தரவே முடியாது என்பது
ஓராண்டிற்குள்ளாகவே தெரிந்து விடுகிறது. இதைத்தானே காலங்காலமாக
எதிர்க்கின்றோம் . அப்போதெல்லாம் எங்களுக்கு
"தீவிரவாதி,மதவெறி,கல­கக்காரன்" என்றெல்லாம் பட்டம் சூட்டி பாசிஸத்திற்கு
பெரும்பான்மை அளித்த நல்லுங்களுக்கு "ஆழ்ந்த நன்றி! சொல்வதைத் தவிர
வேறெதுவும் தோன்றவில்லை, சமீபத்தில் மோடியின் ஓராண்டு சாதனைக்கு தனி
புத்தகமே அச்சிட்டு வெளியிட்டது மாலைமலர் . ஊடகத்தில் செயல்படும்
கார்ப்பரேட்டுகளுக்கு­ ஓராண்டு காலமாய் மோடி கொடுக்கும் தைரியத்தில் ஆர்
எஸ் எஸ் அமல்படுத்தும் இந்துத்துவ வெறிகொண்டு
பேச்சுகளும்,எழுத்துக­ளும்,அறிக்கைகளும் தெரிந்தே மறைக்கப்பட்டதில்
வியப்பேதும் எழவில்லை, வேண்டுமானால் அப்பட்டியலில் இன்னொன்று
கூடியிருக்கிறது அதுவே லலித் மோடியின் விசா வழங்கள் விவகாரமென்று
மீண்டும் பிஜெபிக்கு எதிரான விவாதங்களை அதே வீரியத்தோடு நாங்களும்
முன்வைக்கிறோம். என்ன செய்ய முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாதையை
நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோமே ,,,ஊழல்,உழைப்புச் சுரண்டல், சமூக
நீதிக்கெதிராக செயல்படுதல், இன்னும் சமூகத்தை சீரழிக்கும் எதுவெல்லாம்
இருக்கின்றனவோ அதுவாகவே ஊறிப்போன ஒரு சர்வாதிகார அரசிடமிடமிருந்து சமூக
நல்லிணக்கம் தேடுவதென்பது "நீரில் எழுதுவதற்குச் சமம்" வேறுவழியில்லை
மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காகவே மோடியை தேர்ந்தெடுத்தோம் என்கிறது
சமூகம், மாற்று அரசியலே வேண்டாம் இரு தேசிய கட்சிகளும் குருதி குடிக்கும்
கட்சிகளாகவே இருக்கிறது. ஆகவே வேண்டும் எங்களுக்கு மீண்டுமொரு சுதந்திர
போராட்டமென்று சூளுரைக்கும் தைரியத்தை இழந்த கையாலாகத நொண்டிச்சாக்குதான்
இத்த "மாற்று அரசியல் மோகம்" ஒன்றைத் தெளிவாக இச்சமூகம் புரிந்து கொண்டு
செயல்பட வேண்டும்
" எந்தவொரு சரித்திரத்திலும் சர்வாதிகாரம் நிலைத்து நின்றதுமில்லை அது
வெற்றிவாகை சூடியதுமில்லை" இதனை உணர்ந்தாலே எளிதில் ஊழலற்ற இந்திய நாட்டை
இச்சமூகம் எளிதாய் கைப்பற்றிவிடும். சூழ்ச்சமம் இதிலிருப்பதனால்தான்
ஆட்சியாளர்கள் சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்கிறார்கள். உடைத்தெறிவது
நமது கடமையாக இருக்கிறது.கிட்டத்தட்ட உலக பணக்கார வர்க்கத்தின் அனைத்து
செயல்பாடுகளையும் உள்ளிழுத்துக்கொண்டு உழைப்பைச் சுரண்டும் பணியில் என்றோ
தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டது "இந்தியம்" மாற்றம் வேண்டி மாற்று
அரசியலை தேடுவதற்குப் பதில் மாசற்ற மனிதர்களை இச்சமூகம் தேட வேண்டும்.
அதற்கு முதலில் தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டு­ "அரசியல் ஒரு
சாக்கடை" என்று கற்பிதம் செய்யாமல் , "அரசியல் ஒரு சரித்திரம்" என்று
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் கற்பிக்கப்பட இச்சமூகம் முன்வர
வேண்டும்.சட்டமும்,சம­ூகமும் தானாக வளைவது இல்லை சமூக மக்களே முதலில்
அதனை வளைத்து விடுகிறார்கள். சீர்திருத்தம் சமூக மக்களிடமே எழ
வேண்டுமேயன்றி யாரேனுமொரு பிரதிநிதியை தேடியலைதவதனால்தான் லலித்
மோ(ச)டிகளும் நரேந்திர மோ(ச)டிகளும் இங்கே உறுவாகிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை பற்றி,,,(கம்யூனிஸ்ட்)

ஆர் கே நகர், இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொங்கியிருக்கிறது . வருகின்ற
27ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தாகவிட்ட நிலையில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தோழர் மகேந்திரன் களத்தில்
இருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும்
தொகுதியில் ஆக்கிரமித்துள்ளதாலும­்,தேர்தல் அதிகாரத்தின் மீதான
நம்பிக்கையின்மையாலும­் ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக,
தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட
தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், போட்டியிடாமல் ஒதுங்கின.
இந்நிலையில் பெருஞ்சவாலை எதிர்கொள்ளும் இடதுசாரியத்தின் வேட்பாளர் தோழர்
மகேந்திரன் அவர்களை பற்றி சின்னத்திரை (சீரியல்) இயக்குநர் தோழர் கவிதா
பாரதி (Kavitha Bharathy) தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அவரது
முகபுத்தகத்தில் பதிந்தார். முகபுத்தகத்தில் இடதுசாரியத்தின் மீது
பற்றுள்ளவராய் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னால் தோழர் கவிதா பாரதி
எனக்கு அறிமுகமானார். கூடுமானவரை இணையத்து தோழமைகளை நேரிலோ அல்லது
கைபேசியிலோ நட்பு உறவாடுவதை தவிர்க்கும் பழக்கமுள்ளதால் அவர் இடும்
பதிவுகளுக்கு கருத்துகள் தெரிவிக்கும் அளவுக்கு மட்டுமே நான் இருந்தேன்
இது எனக்குள் இருக்கும் பழக்கமுறை.
வலைப்பதிவுலகிற்கு வந்த நாள் முதலாய் முகபுத்தகம் மீது குறைந்த கவனமே
செலுத்தியதன் விளைவாக கால தாமதத்தோடுதான் அவர் பதிவை வாசிக்க நேர்ந்தது.
படித்ததும் பிடித்து போனதால் அப்பதிவை அப்படியே பகிர மனம் ஏங்கியதன்
காரணமாக தருகிறேன் தோழர் கவிதா பாரதியின் பதிவை அப்படியே,,,,


அப்போது எனக்கு வயது பத்தொன்பது.. சென்னையிலிருந்து பொதுக்கூட்டத்தி
ற்காக பெருந்துறை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப்
பொறுப்பிலிருந்த தோழர் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.. கட்சியைச்
சேர்ந்த என் நண்பர் தோழரைப்ப்பார்க்க என்னையும் அழைத்துச் சென்றார்..
பேசிக் கொண்டிருக்கும்போது எதோ எழுதுவதற்காக தோழர் பேனாவைத் தேடினார்..
நான் என் பேனாவை எடுத்துக் கொடுத்தேன்..
வீடு திரும்பிய பிறகுதான் தோழர் என் பேனாவைத் திருப்பித் தரவில்லையென்பது
தெரிந்தது.. ஆசைப்பட்டு வாங்கிய ஹீரோ பேனா... அப்போது அது என் சக்திக்கு
மீறிய பெரிய விலை. .
அதைத் தொலைத்த வருத்தம் ரொம்ப நாள் மாறவில்லை..
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு என்னைஅழைத்துச் சென்ற அதே நண்பர்
அந்தப் பேனாவை என் வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்... எனக்கு நம்ப
முடியாத பேரதிசயமாக இருந்தது இந்நிகழ்வு..
தோழர் மறந்து போய் பேனாவைக் கொண்டு போய்விட்டார்.. ஆனால் பல
நாட்களுக்குப் பிறகு கட்சியின் மாநிலக்குழுக்கூட்டம்­ சென்னையில
நடந்தபோது என் நண்பரின் பெயரையும், என் அடையாளத்தையும் சொல்லி ஈரோடு
மாவட்டச் செயலாளரிடம் பேனாவைக் கொடுத்தனுப்பியி ருக்கிறார்..
பின் மாவட்டக்குழுக் கூட்டம் நடந்தபோது அது எங்கள் சென்னிமலை
ஒன்றியச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட ு என் நண்பர் கைக்கு வந்து என்
வீட்டிற்கும் வந்து சேர்ந்தது.. மறந்துபோய் கொண்டு சென்ற ஒரு பேனாவைக்கூட
மிக நேர்மையாக திருப்பி ஒப்படைத்த தோழரின் பெயர் சி.மகேந்திரன்..
அவர்தான் இப்போது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடதுசாரிகளின் வேட்பாளர்,,,,

என்னதான் இடதுசாரியம் அதன் கொள்கை கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தாலும்
ஆளும் அதிமுக வின் சர்வாதிகார முதலாளித்துவத்திற்கு­ முன்னால்
தோற்றுப்போய்விடும் என்பதில் சந்தேகமேயில்லை ஏனெனின் மக்களின்
சிந்திக்கும் திறணை திட்டமிட்டே அழிப்பதில் ஆளும் கட்சிகளுக்குத்தான்
கைவந்த கலையாயிற்றே!
இடதுசாரியம் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை இரண்டாம்
இடம் பெருவதே வலது சாரியத்திற்கு விழும் பலத்த அடியாய் இருக்கும். தோழர்
மகேந்திரன் வெற்றியோ! தோல்வியோ! சவாலை சந்திக்கும் ஆளுமையாளர் என்பதில்
இடதுசாரியம் நம்பிக்கையோடு இருக்கிறது .

தமிழ்ச் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்களும் அதனோடு ஒரு இணையதள கவனஈர்ப்பும்


தமிழ்ச் செய்தி ஊடகத்துறையில் சிறந்ததொகுப்பாளர்கள் பட்டியலை http://www.thenewsminute.com/article/star-anchors-driving-tamil-tv-news-uprising  வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிப்பதாக இருக்கிறது . உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் உடலுழைப்பை சமூக சேவைக்காக அர்ப்ணிக்கும் சிறந்த தமிழ்ச் செய்தியாளர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தல் நமது கடமையாகும்.அதே வேளையில் இதுஒருபுறமிருக்க இன்னொரு கவலையும்தமிழ்ச் செய்தி ஊடகத்துறையை சுற்றிவளைத்திருக்கிறது. எவ்வழியிலென்றால்"இணையம்" வழியில் தமிழ்ச் செய்தி ஊடகம்சுற்றிவளைத்து மிகப்பெரும்அதிர்ச்சியினை தந்திருக்கிறது. சிலதினங்களுக்கு முன்னால் http://arumbithazh.blogspot.in/2015/06/blog-post_2.html          02-6-15 அன்று "தமிழ்ச் செய்தி ஊடகங்களின்கவனத்திற்கு,,," என்கிற முன்னரே எழுதியபதிவுக்கான ஏற்ற புகைப்படத்தினைதேர்வு செய்வதற்காக கூகுள்தேடுபொறியில் "Tamil News Reader" எனச்சொடுக்கி என் பதிவுக்கு பொருத்தமான"அனைத்து தமிழ்ச் செய்திவாசிப்பாளர்களின் கூட்டுப் புகைப்படம்"ஏதேனும் கிடைக்கும் என்கிறஎதிர்பார்ப்பில் தேடலானானேன். முதல்பக்கத்திலேயே பேரதிர்ச்சி தந்ததுகூகுள் தேடுபொறி. அனைத்தும் "பெண்" தொகுப்பாளர்களையேசுட்டிக்காட்டியது கூகுள் அதுவும்ஆபாச நோக்கத்தோடு பதியப்பட்டபுகைப்படங்களையே கிட்டத்தட்ட 15பக்கங்களுக்கு மேல் காட்டியிருந்ததுகூகுள். மிகவும் நொந்துபோய் என்பதிவுக்கான பொருத்தமற்றபுகைப்படத்தினை வைக்க நேர்ந்தது .தமிழ்ச் செய்தி ஊடகங்களில் செய்திகள்தொகுப்பு முறைப் பட்டியலில்"இணையம்" தற்போது சேர்ந்திருப்பதுமிகத் தெளிவாகத் தெரிகிறது. வணிகச் செய்திகள்,விளையாட்டுச்செய்திகள்,உலகச் செய்திகள் பட்டியலில்இணையச் செய்திகளை தற்போதுஅனைத்து ஊடகங்களும்வழங்கிவருகின்றன. போலவே விவாதநிகழ்ச்சிகளில் கூடஇணையதளத்திற்கென்று ஒரு சிறப்புப்பகுதியையும் ஒதுக்கி இணையவெளிகருத்துக்களை மக்களிடையேகொண்டுசெல்லும் பணியைசெம்மையாகச் செய்யும் தமிழ்ச் செய்திஊடகவியளார்களுக்கே இந்தநிலமையெனில் இணையம்பொருத்தவரையில் தமிழ்ச்சமூகம் மிகவும்பரிதாபத்திற்குரியதே,,,ஏற்கனவே கூகுள் தேடுபொறிதமிழ்ச்சமூகத்தை மிகவும் கேவலமாகவும்ஆபாசமாகவும் காட்டிக்கொண்டிருக்கி­றது. கூகுளில் "தமிழ்,Tamil" என்றுதேடினால் எத்தனையோ நல்ல வரலாற்றுப்பதிவுகள் மற்றும் வலைப்பதிவர்கள்இருந்தும் அதுகாட்டுவது என்னவோஆபாச புகைப்படங்கள், காணொளிகள்,பதிவுகள்,ஆபாசக் கதைகளாகவேதருவதை பலகாலமாகவேசுட்டிக்காட்டப்பட்டுள்ள வேளையில் தமிழ்ச்செய்தி ஊடகவியளார்களையும்குறிப்பாக பெண்களையும் அதே ஆபாசநோக்கோடு காட்டிவிட்டுச் செல்வதைமிகச் சாதாரணமாக கடந்து போகமுடியவில்லை. குறிப்பாக Tamil NewsReader எனத் தேடுகையில் கூகுள் காட்டும்"தொடர்புடையவை" என்பதன்அதிர்ச்சியிலிருந்து இன்னமும்மீளமுடியவில்லை.இப்பரப்புரைகளுக்கு கூகுளா? இல்லைஇணையத்தை பயன்படுத்தும்தமிழ்ச்சமூகமா? யார்தான் காரணம்என்றும் தெரியவில்லை. ஒட்டு மொத்தமாகஒரு தமிழ்ச்சமூகத்தையே கேவலபடுத்தும்கூகுள் தேடுதளத்தின் பின்விளைகளின்ஒரு பகுதிதான் தமிழ்ச் செய்திஊடகத்துறை. இதுபோன்று பல்வேறுதுறைகளில் பல்வேறு கோணங்களில்ஆபாசங்களை அள்ளித்தெளித்திருக்கிறது கூகுள் தேடுதளம்.எதுவுமற்று வெற்றிடத்தைநிரப்பிக்கொண்டிருக்கிறது பலசெய்திகளையும், விவாதங்களையும்தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும்ஊடகமானது அந்நிகழ்சிகளின் கீழைமேலும் (படிக்க,,,பார்க்க,,,­ரசிக்க,,,பின்தொடர,,,கருத்துகளைதெரிவிக்க,,,வாக்களிக்க,,,)என்று தனதுவலைதளங்களையும்,பேஸ்புக்,ட்விட்டர்போன்ற சமூக வலைதளங்களையும்பகிர்ந்து அதற்கென்று முக்கியத்துவம்கொடுப்பது போலவே அதேவலைதளங்களில் அரங்கேரும் ஆபாசஅநாகரீக செயல்களை எதிர்த்துசெய்திகளையும்,விவாதங்களையும்முன்னெடுத்துச் செல்லவேண்டியதுதமிழ்ச் செய்தி ஊடகவியளார்களின்கடமையாகவும், இணையத்து ஆபாசவலையில் அவர்களும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைநன்குணர்ந்து இணையத்தின்ஈனச்செயல்களுக்கான தீர்வினைவெளிகொணரப்பட வேண்டும். பொதுவெளியில் பெண்ணினத்தை ஆபாசநோக்கோடு பார்க்கும்ஆணாதிக்கமானது அதை விட ஒருபடிமேலே இணையத்தில் ஆபாசப் பார்வையைவிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டுதமிழ்ச் செய்தி ஊடகமும்,பணிபுரியும்ஊடகவியளார்களும் இணையஆபாசத்திற்கெதிராக செய்திகளையோ,விவாதங்களையோ, முன்னெடுப்பார்கள்என்கிற நம்பிக்கையில் இங்குபதிவுசெய்யப்படுகிறது.

Monday, June 15, 2015

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

சாதியத்தை உயர்த்திப் பிடித்து சாதியானது சமூகத்திற்கு மிகத்தேவையென
சுயசாதி பெருமைபேசும்
மனிதர்களிடம்,
"சாதி உங்களுக்கு என்ன செய்தது?" எனும் கேள்வியை முன்வைக்கையில் எவ்வித
சிந்தனைகளுக்கும் இடம்தராமல் பட்டென பதிலுரைப்பார்கள் ஒற்றை காரணத்தை,,,
"சாதிதான் எங்களுக்கு கீழே அடிமைகளை உறுவாக்கித் தருகிறது" என்பதுதான்
மனிதர்களின் வாயில் தெறிக்கும் பதிலாக இருக்கிறது. இங்கே சக மனிதனை
அடிமைபடுத்துவதென்பது­­ மிகச்சரியானதுதானென வாதிடப்படுகிறது. சாதி
சமூகத்திற்கு தேவையான ஒன்றென அடிமைபட்ட அடித்தட்டு மக்களிடம்
எளிமையாகவும் கூடவே அதிகாரத்தோடும் நியாயப்படுத்தப்பட்டு­­
செயல்படுத்தப்படுகிறத­­ு.
ஏழை,பணக்காரன் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட
சக மனிதனை அடிமைபடுத்த தொழில்,பிறப்பு, தெய்வ வழிபாடு போன்றவற்றில் எழும்
மூல சமூக கட்டமைப்புச் சாதியத்தால் மிகச்சாதாரணமாக மற்றவனை
அடிமைபடுத்திவிடலாம் என்கிற பொதுபுத்திக்கு வந்துவிட்டது சாதி ஆதிக்கச்
சமூகம். தங்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும்,போலிய­­ான கவுரவத்தை
நிலைநிறுத்திக் கொள்ளவும் , சக மனிதன் மீது அடிமை விலங்கை கட்டுவித்தல்
தான் நியாயத்தின் பேராற்றலெனில் சாதியத்தை நியாயப்படுத்துதல் என்பது
ஒருபோதும் சமூகத்தை நல்வழிப்படுத்தப் போவதில்லை.
சாதியம் உங்களுக்குச் செய்யும் அடிமைபடுத்துதல் பணியானது
நிலைத்துநிற்கும் தன்மையுடையதாக என்றுமே இருந்ததில்லை. ஒரு கட்டத்தில்
அது உங்களையே ஆட்கொண்டு அடிமைபடுத்தும் ஆகச்சிறந்த பணியை செவ்வனே செய்து
முடிக்கும். ஏதோ இந்துத்துவம் மட்டுமே சாதியத்தை உயர்த்திப்
பிடிக்கிறதென்று எண்ண வேண்டாம். உறுவாக்கத்தில் விதையின் வேர்களாய்
மட்டுமே இந்துமதம் இருந்தாலும் கிளை விருட்சங்களாய் அதன் இயக்க
விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு இஸ்லாம்,கிருஸ்த்துவம­­் என்று
வேற்றுமதத்திலும் பரவிகிடக்கிறது இந்த மனுதர்ம வருணாசிரம சாதியம். இதனை
சுட்டிக்காட்டிதான் அம்பேத்கர் அவர்கள் பௌத்த மதத்தினை தேர்வுசெய்து
மதமாற்றத்தினை உறுதிசெய்கிறார். "சாதியம்" எனும் ஒரு கருவிக்கு வெட்டவும்
தெரியும் வெட்டியதை வெட்கமில்லாமல் புணரவும் தெரியும். கல்வி
கற்றவர்களிடத்தில் அறிவியலை விட சாதியமே மேலோங்கிறதே ஏன்? அதுவும் 21ம்
நூற்றாண்டில் கல்விகற்றோரிடத்தில் அதிகளவில் "சாதியம்" தலைதூக்குகிறதே,,,
காரணம் தேடி களைத்துபோக வேண்டும் எளிதான புரிதல் ஒன்றே "அறிவியல்
எங்கெல்லாம் இயங்குகின்றதோ அங்கெல்லாம் அது சாதிமதத்தால்
இயக்கப்படுகிறது" இந்தச்சூழலில் கல்விகற்றவன் எளிதாய் சாதியத்தின்
வலையில் சிக்கிக்கொள்கிறான். கண்ணோட்டம் ஒன்றே அவர்களுக்கு முன்னால்
செல்கிறது அவர்களும் அதற்கு வளைந்து கொடுக்கிறார்கள் அதுவாகவே தானாய்
சாதியமும் வளர்ந்து நிற்கிறது. என்ன கண்ணோட்டம் அது? அடுத்தவர்களை அடிமை
படுத்துதல் என்பதே அவ்வொற்றைக் கண்ணோட்டம். சாதி உங்களுக்கு என்ன
செய்தது? மீண்டும் தொடக்க கேள்வியை முடிவில் வைத்தாலும் வளர்ந்தே
நிற்கிறது "சாதியம்" அழிந்தே போகிறதிங்கே "மனிதம்" அடிமைத்தனத்தை எப்போது
அகற்றப்போகிறோம் நாம்,,,

Sunday, June 14, 2015

(ஓமந்தூர்) ராமசாமி ரெட்டியின் சொந்த ஊருக்கு வந்த சோதனை

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த சென்னை
மாகாணத்து முதல் முதலமைச்சராக இருந்தவர். மார்ச்,1947 –ஏப்ரல் ,1949
வரையில் முதலமைச்சர் பதவியில் அங்கம் வகித்து பல்வேறு மக்கள்நலத்
திட்டங்களை செயல்படுத்தினார் .காந்தியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு
இந்திய தேசிய காங்ரஸில் இடம்பெற்றிருந்த இந்து மத பற்றாளராய்
இருந்திருக்கிறார்(கா­­ந்தியின் யுக்தி) கடைசிகால ஆன்மீகத்தில்
ஈடுபாடென்று முடிகிறது அவரது பயணம் . விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம்-புதுச்சேர­­ி தேசிய நெடுஞ்சாலை அருகில்,ஓமந்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளியின் பக்கத்தில் தமிழக அரசு அவரை சிறப்பிக்கும் வண்ணம்
"ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம்" நிறுவியுள்ளது. அவர் பிறந்த
ஓமந்தூர் கிராமத்தின் நிலை என்னவாய் இருக்கிறதென்று பார்வையிடத்
தேவையில்லை சமூகத்தின் அழிவுச் சம்பவங்களுக்கு சாட்சியாகவே நிற்கிறது
அக்கிராமம். அதுவும் இந்துத்துவ ஆதிக்கச் சாதியத்தின் பிடியில் முன்னாள்
முதலமைச்சரின் ஊரென்றால் ஏன் இதனை சமூகச் சீர்கேடாக பார்க்கக்கூடாது?
1947இல் சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டத்தை ஏற்படுத்தி
அச்சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள்
நுழைய வழிவகை செய்யப்பட்டது இவரின் காலத்தில்தான்,அதனை தன் சொந்த
கிராமத்திலும் செயல்படுத்தினார் . ஆனால் இன்றைய நிலை அவ்வாறில்லை சாதியக்
கலவரங்களோடு பிணைந்துவிட்டது என்றால் சட்டம் செயலற்றுக் கிடக்கிறதென்றே
பொருள்படுகிறது. நிகழும் சமூகவிரோதச் சம்பவங்கள் "நம்பிக்கையற்ற ஒரு
அரசிற்கு மத்தியில் நடைபிணமே மக்கள்" என்கிற பொதுபுத்திக்கு எளிதாய்
எட்டிவிடுகிறது.
ஓமந்தூர் கிராமத்தில் "ஓசியம்மன்" என்கிற கோவில்
தலித்துகளுக்கும்,வன்­­னியர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தளமாக பல
ஆண்டுகளாகவே இருந்துவந்தச் சூழலில் தற்போது அக்கோவிலை மையப்படுத்தி
சாதியக் கலவரங்கள் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த (8.6.2015)
திங்கட்கிழமையன்று ஓசியம்மன் கோவிலுக்கு ஊர்த்திருவிழா எடுக்கப்பட்டது.
அன்று தலித்துகள் கோவில் விழாவில் கலந்து கொண்டு அவர்களுக்கா
ஒதுக்கப்பட்ட (ஒதுக்குப்புறமாக) இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
செய்திருக்கிறார்கள் அப்போது அங்கிருந்த வன்னியச் சமூகத்தினர் கேலிக்
கிண்டலோடு அவர்கள் பொங்கல் வைத்த இடத்தில் பட்டாசையும் கொளுத்திப்
போட்டிருக்கிறார்கள்.­­ அதிர்ச்சியில் சிதறி ஓடியிருக்கிறார்கள்
தலித்துகள் . பிறகானச் சூழலில் மாலை ஆறுமணிக்குமேல் இரு சமூகமும்
கடுமையாக மோதிக்கொள்ள சாதியக் கலவரம் அங்கே மூண்டிருக்கிறது. திடீர்
தாக்குதலுக்கு தலித்துகள் ஆட்பட்டமையால் அவரவர் தங்கள் குடும்பங்களை
காப்பாற்றிக் கொள்ள குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள
வயல்வெளி யில் இரவுமுழுக்க தங்க வேண்டியச் சூழலுக்கு தலித்துகள் மீதான
வன்முறை அரங்கேறியிருக்கிறது.­­ வழக்கம் போல காவல்துறையினர்
காலதாமதத்தோடு அக்கிராமத்திற்குச் சென்று முதற்கட்டமாக தலித்துகள்
தரப்பில் இருபத்தைந்து பேரையும்,வன்னியர்கள்­­ தரப்பில் பத்து பேரையும்
கைது செய்திருக்கிறது. வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட தலித்
சமூகத்தின் மீதுதான் வழக்கம்போல சட்டம் பாய்ந்திருக்கிறது. பிறகு
செவ்வாய் அன்று தலித் சமூகத்தில் ஒரு நபரை வன்னியச் சமூகத்தினர் கல்லால்
அடித்திருக்கிறார்கள்­­ மீண்டும் பதற்றநிலை அங்கே சூழ்ந்திருந்த வேளையில்
காவல்துறையினர் இரண்டாம் கட்டமாக அதே தலித் சமூகத்தினர் பத்துபேரை
கைதுசெய்திருக்கிறது.­­ கலவரச் சூழலின் காரணமாக தற்காலிக ஊரடங்கு உத்தரவு
அறிவிக்கப்பட்டு வெள்ளியன்றுதான் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது
சாதிக்கலவரம். கடந்து பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்திருக்கிறது ஓமந்தூரில்
சாதிய மோதல். முன்சம்பங்கள் அனைத்தும் அவ்வளவான பெருந்தாக்கத்தை
ஏற்படுத்தியல்லை ஆனால் சாதிய ஆதிக்கத்தின் உச்சநிலையை இன்றைய
காலக்கட்டத்தில் ஒரு முன்னால் முதலமைச்சரின் சொந்த கிராமம்
சிக்கிக்கொண்டிருக்கி­­றது. வழக்கம்போல தங்களின் பேனாவின் ஜால
எழுத்துக்களால் வெறுமனே "இருதரப்பினரிடயே மோதல்" என்கிற இயலாதத் தனத்தோடு
செய்தி வெளியிட்டிருக்கிறது தமிழ்ச் செய்தி ஊடகங்கங்கள். சுதந்திர
இந்தியாவின் முதல் தமிழக முதலமைச்சரின் சொந்த கிராமம் சாதியில் சிக்கி
சீரழிவதையும் வேடிக்கைதான் பார்க்கிறது இந்தச் சமூகமும் , சமூகத்தை
வழிநடத்தும் அரசும்,, தொடர் தலித் விரோத போக்கு, சாதியாதிக்கத்தின்
வன்முறை வெறியாட்டம், அடிமைபடுத்துவதில் மும்முரம், இந்துத்துவ
பார்ப்பானிய வளர்த்தெடுப்பு, என்று ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமூகத்தை
பிளவுபடுத்தி கடைசிவரையில் அடிமைச் சமூகத்தை ஆதிக்கம் செய்வதிலேயே
உயர்ந்து நிற்கும் சாதிவெறிகளுக்கு மத்தியில் மனிதத்தை மீட்டெடுக்காமல்
செயலற்று நிற்கும் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்கையில்
வெறுப்பைத் தவிர வேறோன்றும் எழவில்லை, கல்வி பயின்றாலும் கடைசி வரை
தூக்கி பிடுப்போம் சாதியை ஏனெனின் நாங்கள் ஆண்டப்பரம்பரையென பெருமைபட
பேசும் சமூகத்திற்கு முன்னால் தமிழத்தின் முதல் முதலமைச்சர் ராமசாமி
ரெட்டியின் நலத் திட்டங்கள் தோற்றுத்தானே போகும், எது எப்படியானாலும்
தொடர்ந்தே அரங்கேறும் இங்கே சாதிக் கலவரங்கள் ஏனெனில் இந்துத்துவம்
தமிழகத்தை வீழ்த்தாமல் உறங்காது என்பதே அதன் வளர்ச்சியின்
வெளிபாடாயிருக்கிறது.­­ "ஜனநாயகம் சிறந்தோங்குகிறது" என்பதன் மேல்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் கொண்டுவர வேண்டும்.

Friday, June 12, 2015

மழைக் காதலர்கள்

கவலைகள் மறந்து
கருவிழிகளை
காற்றோடு அலைபாய
விட்ட தருணத்தில்
தவங்கலைந்த
மேகங்கள் கண்ணீரின்
தாகந்தணிக்க
வந்திறங்கியதோ

கழுத்துச் சுளுக்கிற்கு
கவலைபடவில்லை
கண்ணீரே தினம்
காணும் சோக
முகங்களிங்கே
ஏராளம்

சுகமளிக்க இறங்கி
வரும் மழையே
மான்போல துள்ளுகிறது
மனது உனை
பார்த்தவுடனே

ஓங்கி எழும் பெருமழையில்
ஒருதுளி
மழைத் துளியை
கண்ணத்தில்
கசிய விட்டதில்

கண்ணீர்க் குடம்
நிரம்பி வழிகிறது
இது கவலைகள்
சுமந்த காலிக்குடமல்ல
காதலை சுமந்த
காட்டாற்று வெள்ளம்
நிரம்பி வழிகிறது பார்
ஆனந்தக் கண்ணீராலே

அனைத்தையும்
அணைத்துக் கொள்வதனால்
காதலை திருடும்
கற்சிலைகளும் துள்ளியாடுகிறது
அவைகளின் வரவேற்பறையில்
நீ

பெருங்காற்றில்
பரவுகிறது பலமொழிகள்
பத்திரப் படுத்து
மழையே

பார்முழுதும் விரிந்து
கிடக்கிறார்கள்
பல
மழைக் காதலர்கள்,,,

Wednesday, June 10, 2015

"நாம் தமிழர் கட்சி ஆவணம்" இதோ! இங்கே!

இதற்கு ஏன் இவ்வளவு ரகசிய பாதுகாப்பென்றே எப்போதும் தோன்றுகிறது. பல முறை
வாசித்துவிட்டேன் "நாம் தமிழர் கட்சி ஆவணத்தை" எளிதாக கடந்து போகும்
ஒன்றாகவே எடுத்தாளப்பட்டுள்ளது­ எழுத்துக்கள். பிறகு ஏன் நாம் தமிழர்
இந்நூலை ரகசியப் படுத்துகிறார்களென்றா­ல் நூல் தாங்கிநிற்பது
"இந்துத்துவம்" ஒன்றை மட்டுமே எனச் சொன்னால் அது மிகையாகாது. "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" குறித்து பல்வேறு தரப்பினர்கள் தங்களின் விமர்சனத்தை
கொட்டிவிட்டார்கள் என்கிறபடியால்,இந்நூல­ுக்கான விமர்சனத்தை எழுத
அவசியமில்லை என்றே கருதுவதனால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆகவே "நாம்
தமிழர் கட்சி ஆவணம்" நூலினை தறவிறக்கம் செய்யும் சுட்டியை மட்டும்
தருகிறேன். "நாம் தமிழர் கட்சி ஆவணம்" தறவிறக்கம் செய்ய இதோ எனது
மின்னூலிணைப்பு,,,,

https://www.google.com/url?q=https%3A%2F%2Fwww.dropbox.com%2Fs%2F39dpms45anfpqz1%2F%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2520%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%2520%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.pdf%3Fdl%3D0&sa=D&sntz=1&usg=AFQjCNHgYaNSPWOmjAS71k81bslTr99DzQ

Tuesday, June 09, 2015

சாதி இந்துக்களை எதிர்க்க "தேவை ஒற்றுமை"மிக அவசரத்தின் முன்னேற்பாடாக தமிழகத்தில் "இந்துத்துவம்" வளர்த்தெடுக்கப் படுவதாக மட்டுமே நமது சிந்தனைகள் திசைமாறிச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இன்று நேற்றல்ல தமிழகத்தில் பல நூற்றாண்டு காலமாகவே இந்துத்துவம் கால்பதித்துள்ளது. அதுவரையில் திராவிடத்தால் முறியடிக்கப்பட்ட நிலையில் இன்றிருக்கும் திராவிடமானது மெல்ல மெல்ல பார்ப்பானியம் பக்கம் தங்களை ஈடுபடுத்திக் கொண்டமையால்,இந்துத்துவமானது தன் மக்கள் விரோத போக்கினை வெளிப்படையாகவே அரங்கேற்றுவது நம் பார்வைக்கு வருகிறது அவ்வளவே, அதையும் தாண்டி எவ்வித காரணகாரியங்களும் இடம்பெற்றிடவில்லை.தமிழகத்தில் இந்துத்துவத்தின் இன்றைய எழுச்சியை முதல்நிலை பார்ப்பானியத்தை விட இடைநிலை சாதி இந்துக்களே அதிதீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.சாதிய அடிப்படையில் மட்டுமே இந்துத்துவத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை கண்டறிந்தமையாமல் அவர்களின் சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் செல்கிறது எனலாம்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சாதிய ரீதியலான இயக்கங்கள் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது, நேரடியாக சாதி இந்துக்கள் தங்களின் இயக்கங்களுக்கு சாதி ஒட்டு இடாமல் "தமிழ்" மொழியை ஒட்டிக்கொண்டு இயக்கத்தினை வளர்த்திருக்கிறார்கள், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் பண்பாட்டு இயக்கம்,தமிழ் வளர்ச்சி இயக்கம்,தமிழ் கிளர்ச்சி இயக்கம் போன்ற இயக்கங்கள் சாதி இந்துக்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்களாகும், சிறு கூட்டங்களாக அவ்வப்போது பிளவுபட்டு மீண்டும் இணையும் கூட்டங்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். (தமிழக அரசியல் ஓர் அலசல்-கண்ணுபிள்ளை) ஒருவிதத்தில் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் சாதி இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்,இருந்தும் "தமிழை ஏன் பயன்படுத்தினார்கள்?" என்கிற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஆரிய வடமொழி கலப்பை தமிழானது உள்வாங்கிக்கொண்டு அதேநடையில் பல்வேறு கலை,இலக்கியங்கள் இத்தமிழ்ச் சமூகத்தில் வலம் வந்தமையால் எளிதாக சாதி இந்துக்கள் தமிழை ஓர் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்கள் . தமிழகத்தில் இன்றைய பிஜெபி அன்றைய காலத்தில் "ஜனசங்கமாக" இயங்கிக்கொண்டிருக்கும் போது அதனோடு சேர்ந்த பல்வேறு இயக்கங்களும் சாதி இந்துக்களின் இயக்கங்களாக இருந்திருக்கிறது. குறிப்பாக தமிழை ஒட்டு வைத்த சாதி இந்துக்களின் இயக்கங்கள்.தமிழகத்தில் குலக்கல்விமுறையை மீண்டும் செயல்படுத்த படாதபாடுபட்ட ராஜாஜி அவர்கள்தான் ஜனசங்கத்திற்கு பக்கபலமாக நின்று பாதுகாத்தார் என்பது வரலாற்று உண்மையாகும், அடிப்படையில் மனுதர்ம வருணாசிரமத்தின் சாதியத்தை ஆதரிப்பவராகவும் அதற்காக உறுவாக்கப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவராகவும் ராஜாஜி அவர்கள் இருந்திருக்கிறார். இடைகாலத்தில் திராவிட இயக்கங்களும் அதனிடமிருந்து அரசியல் அதிகாரம் பிடிக்க வந்த திமுக, அரசியல் கட்சிகளும் காங்ரஸை வீழ்த்திய காலகட்டத்தில் ஜனசங்கம் கானாமல் போனது. இன்றைய சமூகச் சூழலில் வெளியுலகிற்கு வந்திருக்கும் ஜனசங்கம் பெயரை மாற்றிக்கொண்டாலும் இந்துத்துவ கொள்கை கோட்பாடுகளில் எந்தவித மாற்றமுமின்றி பிஜெபியாக வளர்ந்து நிற்கிறது. அதன் பின்னால் அரசியல் ரீதியாக கூட்டணியமைத்த கட்சிகள் பெரும்பாலும் சாதியக்கட்சிகளாகவே இருந்ததை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் நமக்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.ஏன் இருபெரும் திராவிட கட்சிகளிடத்தில் சாதிய கட்சிகள் இடம்பெறவில்லையா? என கேள்வி எழலாம், இரு திராவிட கட்சிகளும் சாதி இந்துக்களின் இயக்கம்,மற்றும் கட்சிகளுக்கு இடம் கொடுத்து அரசியலை முன்னெடுத்துச் செல்வதனால்தான் பார்ப்பானியத்தின் பிடியில் இன்றைய திராவிடமென எடுத்துரைக்கப்படுகிறது. ஆக முந்தைய காலத்திய மறைமுக சாதி இந்துக்களின் இயக்கங்கள் இன்று அந்தந்த இந்துத்துவ ஆதிக்கச் சாதியின் பெயரோடு வெளிப்படையாகவே இயங்கி அரசியலை பிடிக்க படைதிரட்டுகிறதென்றால் , தமிழ்ச் சமூகத்தில் மண்டிக்கிடந்த "முற்போக்குச் சிந்தனைகள்" வீழ்ந்து செயலற்றுப் போய்விட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம். முற்போக்களார்கள் அவரவர் கொள்கை கோட்பாடுகளை தனித்தனியாக வகுத்தல் என்பது இயக்கத்தின் உரிமையாகும்,ஒரு இயக்கத்தின் செயல்திட்டம் இன்னொரு இயக்கத்திற்கு பொருந்தாத் தன்மையுடையாதாக இருக்கும் ஆனால் பிற்போக்குச் சிந்தனைகளாகவே முளைத்தெழுந்த இந்துத்துவ பார்ப்பானிய சாதி இந்துக்களை எதிர்க்கின்ற வேளையில் அனைத்து முரண்பாடுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒற்றுமையாக ஆதிக்கத்தை எதிர்க்க தவறவிட்டதன் விளைவு தமிழகம் இன்று இந்துத்துவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.இங்கே தமிழகத்தை பொருத்தமட்டில் மார்க்ஸிய சிந்தனையானாலும்,லெனினிய சிந்தனையானாலும்,அம்பேத்கரிய சிந்தனையானாலும்,திராவிட பெரியாரிய சிந்தனையானாலும் இன்ன பிற முற்போக்குச் சிந்தனையானாலும் இந்துத்துவத்திற்கு எதிராகவும், சாதி இந்துக்களின் இயக்கங்களுக்கு எதிராகவும் ஒரணியில் திரண்டு ஒற்றுமையுடன் சமூகத்தை சீர்படுத்தும் நோக்கோடு திரள வேண்டும், மக்கள் சமூகத்தையும் முற்போக்குச் சிந்தனையின்பால் கவனத்தை ஈர்க்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் அதற்கு முதல் செயல்திட்டமாக முற்போக்காளர்கள் "ஒற்றுமை"கடைபிடிக்க வேண்டும்.

Monday, June 08, 2015

(தடை நீங்கியது)அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடை நீக்கலும், இந்துத்துவ தொடர் பரப்புரை நிகழ்வுகளும்,,,அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடையை சென்னை ஐஐடி நிர்வாகம் விலக்கியுள்ளதென்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம் இம்மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றென்று உணர்ந்து பிளவுபட்டுக் கிடந்த முற்போக்காளர்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து தோழமையை நிறுபித்து இந்துத்துவத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட்டதால் "அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பு" மீதான தடை உடைத்தெறியப்பட்டிருக­­்கிறது எனலாம், இந்த ஒற்றுமையின் பலத்தை கண்டு பார்ப்பானியம் நடுங்கியிருக்கிறது என்றாலும் , நம் முற்போக்குச் சிந்தனைகளுக்கு எதிராக இந்துத்துவம் ஒரு விதத்தில் வளர்ச்சியின் பாதையில் சில அடிகளை எடுத்து வைத்துள்ளதென்றுச் சொன்னால் அது மிகையாகாது.தமிழ்ச் செய்தி ஊடகங்களின் வியாபார விவாத காணொளிகளே இதற்கு சாட்சியாக அமைகின்றது , மத்திய பிஜெபியின் இந்துத்துவ தீவிர பற்றுதல் காரணமாக அதே இந்துத்துவ பார்ப்பானிய ஐஐடி நிர்வாகம் விதித்த அம்பேத்கர் பெரியார் வாசிப்பு அமைப்பின் சாரம்ஸங்களை அப்படியே உள்வாங்கி வியாபார ரீதியலான தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய விவாதங்களில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிஜெபி ராகவன்,போன்றோர்கள் சில விஷத்தன்மையான சூழ்ச்சிகளை தூவிவிட்டு இந்துத்துவத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டார்கள் என்பது தெளிவு.விஷம் கலந்த மூன்று விதைகளை தமிழ்மண்ணில் அவர்கள் விதைக்கிறார்கள்.
1. அம்பேத்கர் இந்துக்களுக்கு எதிரானவரல்ல,
2.பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர்,
3.சொந்த நாட்டிலேயே
முதல்தர இந்துக்கள்
மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்.
முதல் பொய்பரப்புரையை எடுத்துக்கொண்டோமானால் அம்பேத்கரை வாசிக்காத வயோதிகள் இவர்களென்றுத் தெளிவாகத் தெரிகிறது . ஏனென்றால் முழுக்கமுழுக்க பெரியாரை விட அம்பேத்கரே இந்துத்துவ எதிர்ப்பினை கையாண்டவர் என்பதை அம்பேத்கரின் எழுத்துக்களும், உரைகளும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதனை பெரியாரே விடுதலை நாளேட்டில் எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய பிஜெபி ராகவனும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் இடைவிடாது "இந்துக்களுக்கு எதிராவனர் அம்பேத்கர் இல்லை" என்கிற புரட்டு இதற்கு முன்னரே அதே இந்துத்துவ ஆதிக்கர்களான மத்தியில் ஆர்எஸ்எஸில் தொடங்கி நம் தமிழ் சமூகத்து இந்துத்துவ சங்கராச்சாரியார் வரையில் பரப்புரையில் ஈடுபட்டவர்களாகவே
இருக்கிறார்கள். சாதி இந்துக்களின் சூதனமான அனுகுமுறையில் அம்பேத்கரை இழிவுபடுத்துதல் தொடர்ந்தே அரங்கேற்றப்படுகிறது அதற்காக சாதி இந்துக்கள் அம்பேத்கருக்கு விழாவும் எடுத்து சிறப்பித்து தங்களின் மனுதர்ம வர்ணாசிரமத்தை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதே இங்கே சுட்டிக்காட்டுதல் வேண்டும். திடீரென்று சாதி இந்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் "அம்பேத்கர் பற்று" என்பது குறிப்பிட்டு தலித் மக்களை ஒடுக்கி அவர்களின் மீது தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதன் மூலம் தலித்துகளை இந்துக்களாகவே கடைசி வரையில் வைத்திருந்தால் மனுதர்ம சாதியத்தை அழிவிலிருந்து சூதனமாக அவர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள். சாதியத்தை உயர்த்திப் பிடித்து தலித்துகளை கவர்ந்திழுப்பதில் சாதி இந்துக்களுக்கு எவ்வித காரணகருவிகளும் அவசியப்படவில்லை, ஏனெனில் ஒன்றைமட்டும் நன்றாக அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அது "தலித்துகள் இந்துக்களாக இருக்கிறார்கள்" ஆகவே இந்துத்துவ பார்ப்பானியத்திற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். "சாதியற்ற இந்துக்களென்று இங்கே யாருமில்லை" என்கிற அம்பேத்கரின் கூற்று மெய்ப்படுகிறது .
இரண்டாவதாக "பெரியார் தலித்துகளுக்கான எதிரி"
என்கிற இந்துத்துவ பார்ப்பானியத்தின் பரப்புரையின் மூலம் "தலித்துகளை இந்துக்களாகவே" வைத்திருக்கும் உள்நோக்கம் இருக்கிறதென்பதை வெட்டவெளிச்சமாக்கியு­­ள்ளது. இந்துத்துவத்தின் தலித்துகள் மீதான தாக்குதல்களையும் , அடிமைதனத்தையும் அம்பேத்கர் எந்தளவிற்கு எடுத்துச்சென்றாரோ அதேஅளவிற்கு பெரியாரும் முன்னெடுத்துச் சென்றார் என்பதே திராவிடத்தின் அம்பேத்கர் பற்றாக இருக்கிறது. ஒருவேளை "நான் அடிப்பதுபோல நடிக்கிறேன் நீ அழுவதுபோல நடி" என்கிற காந்தியத்தின் "ஹரிஜன" இழிவுச்சொல் யுக்தியினை அப்படியே திராவிடத்தின் பெரியார்
கையாண்டால் தலித்தின விரோதியாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் பெரியார் இந்துத்துவ பார்ப்பானிய சாதி வருணத்தின் கடைசி படிநிலையான "சூத்திரன், பஞ்சமன்" என்பதையே சாதி இந்துக்களுக்கு எதிராக வைக்கிறார். பெரியாரின் எழுத்துக்களும், உரைகளும் கண்டு பார்ப்பானியம் அச்சமடைந்து அதற்கெதிர் விளைவாக தலித்துகளை பெரியாருக்கு எதிராக வலைபின்னுகிறார்கள். இதில் சில தலித் இயக்கங்களும் சிக்கிக்கொண்டு பார்ப்பானியத்தின் துணையோடு இந்துத்துத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் பெரியார் தலித்துகளுக்கான விரோதியென்று தமிழ் சமூகத்தில் பரப்பி விட்டு அவர்களும் தலித்துகளை இந்துக்களாகவே மாற்றும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆக சாதி இந்துக்கள் திராவிடத்தை ஒட்டுமொத்தமாக அழித்து இந்துத்துவத்தையும்,இ­­ந்துத்துவ வருண சாதி பேதங்களை வளர்த்தெடுக்கவும் பெரும்பாலும் தலித்துகளையே பலியிடுகிறார்கள் என்பது தெள்ளந்தெளிவாகத்
தெரிகிறது. தமிழ்மண்ணில் இதுவரை காலூண்றாத சங்பரிவா,ஆர்எஸ்எஸ்,பிஜெபி போன்ற இந்துத்துவ வெறியர்களுக்கு தற்போதுள்ள சூழலில் தடம்பதிக்க வேண்டுமெனில் நிச்சயம் தலித்துகள் தேவைப்படுகிறார்கள் . இதன் விளைவாக மட்டுமே பெரியாரை தலித்தின விரோதியெனும் போலி பிரசாரத்தை இவர்களால் செய்ய முடிகிறது. மூன்றாவதான "சொந்த நாட்டிலேயே முதல்தர இந்துக்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்" என்பதின் உள்ளார்ந்த அர்த்தங்கள் அப்படியே வெளிப்படையாக தெரிகிறது. இந்தியாவில் "பார்ப்பனர்கள்" மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சாதி இந்துக்கள் முன்வைக்கிறார்கள். கவலை தோய்ந்த விஷயம் என்னவெனில் பார்ப்பானிய ஆதிக்கத்தின் நரபலிகளானவர்களே சாதி இந்துக்கள்தான் என்கிற உண்மை இங்கே மறைக்கப்படுகிறது. அந்த நரபலிகளிலிருந்து சாதி இந்துக்களை மீட்டு சாதியற்ற சமூகமாக மாற்ற முன்வராத எழுத்துக்களும், உரைகளும் இங்கே ஏகபோகத்திற்கு பரப்பி விடும் பத்ரி,ஜெயமோகன்,போன்றோர்கள் சாதியத்தால் மிகக் கேவலப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் சுய அனுபவங்களையும், மனித மலத்தாலேயே அடிவாங்கிய பெரியாரின் சுய அனுபவங்களையும் அனுபவித்துள்ளார்களா ? என்றால் இல்லவேயில்லை, இவ்வாறிருக்க பார்ப்பானிய பற்று இவர்களுக்கு இருப்பதென்பது ஆச்சர்யப்பட வைக்கவில்லை, இது சாதி இந்துக்களின் அவ்வப்போதெழும் அழியா இந்துத்துவ வெறியின் உட்கூறாகவே நேரடியாக புலப்படுகிறது.இவ்வகை­யிலான பொய் பரப்புகளையெல்லாம் வெறுங் கனவாக்கி வேண்டும் இங்கே மக்களுக்கான விடுதலை என்று இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கச் சாதியத்தின் சுயரூபச் சிந்தனைகளை மண்ணோடு மண்ணாக புதைத்திட அரும்பாடுபட்டு தமிழ் மண்ணில் விதிக்கப்பட்ட அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு அமைப்புத் தடையினை எதிர்த்து முற்போக்குச் சிந்தனைகளால் பார்ப்பானியத்தை முறியடித்த அத்துணை இயக்கங்களுக்கும் "அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு அமைப்பு" எனும் மாணவ அமைப்பிற்கான தடையினை உடைத்தல் என்பதொரு மாபெரும் வெற்றி என்றுச் சொன்னால் அது மிகையாகாது. கரம்கோர்த்து நின்ற கம்யூனிஸ்ட்,திராவிடம்,தலித் இயக்கங்கள் இன்ன பிற முற்போக்குச் சிந்தனை இயக்கங்கள் இத்தமிழ் மண்ணை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச்செல்லும் , இது விரையில் நடக்கும், என்பதற்கான சான்றாகவே இவ்வெற்றி கண்களுக்குப் புலனாகிறது.

Sunday, June 07, 2015

அம்பேத்கர் உரையில் மும்பை வாழ் தமிழர்களுக்கான உரிமைக்குரல்

மும்பை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்காக
புரட்சியாளர் அம்பேத்கர் பேசியது,,,
-----------
சிறுபான்மையினரின்
பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள்
தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால
கல்வியைப் பெற முடியுமா?

இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக
நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா?
என்று நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

"சிறுபான்மையினர்" என்ற சொல், மத
சிறுபான்மையினர் என்ற
சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத
சிறுபான்மையினரின்
நலன்களை நமது அரசியல் சட்டம் பாதுகாக்கும்
நோக்கத்தோடு, நாடாளுமன்றம் மற்றும்
சட்டப்பேரவைகளில்
அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்குகையில்,
எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைந்த
எண்ணிக்கையில்
உள்ளவர்களை "மொழி" சிறுபான்மையினர்
என்று நான் குறிப்பிடுகிறேன்.
எடுத்துக்காட்டாக, சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள்,
வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர்.
இவர்கள் பொதுவாக, "வந்தேறி"யாக
அல்லது மொழி ரீதியாக இந்தியா முழுமையும்
ஒப்பிட்டுப் பார்க்கும் போது,
சிறுபான்மையினராகக் கொள்ளப்படா விட்டாலும், தாங்கள் வாழும் பகுதிகளில்
மொழி சிறுபான்மையினராகவே வாழ நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத
உண்மையாகும். இவர்களை நான் "கலாச்சார
சிறுபான்மையினர்' (Cultural
Minorities) என்று குறிப்பிட
விரும்புகிறேன்.
இந்தியா ஒரே நாடு என்று பொருள்படுத்தி,
தமிழர்களின் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, பம்பாயில் வாழும் தமிழர்களின்
பண்பாட்டு உரிமைகளைப் புறக்கணிக்க நான்
தயாராக இல்லை .
இவர்கள் தாங்கள் வாழுமிடத்தில்
அல்லது தங்குமிடத்தில் "மொழி" ரீதியாக வாழ
நேரிடுவதால், அவர்களின் உரிமைகளை எவ்வித
இடையூறுமின்றி பாதுகாக்க வேண்டிய
தேவை எழுந்துள்ளது. அவர்களது மொழி,
எழுத்து மற்றும் இலக்கியம் பாதுகாக்கப்பட
வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.
பணிக்காக புலம் பெயர்ந்து செல்பவர்கள்,
அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புவதில்லை.
தங்களின் பூர்வீக இடத்தின் மொழி, வாழ்வியல்
முறை மற்றும் பண்பாட்டைத் துளியும் இழக்க அவர்கள் தயாராக இருப்பதும் இல்லை. மாறாக,
தங்களது பூர்வீக இடத்துடன் நிரந்தரத்
தொடர்பினை ஏற்படுத்தி தங்களின்
வாழ்க்கையை நடத்துகின்றனர். திருமணம்,
திருவிழா மற்றும் அனைத்துச்
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சொந்த
ஊருக்குச் சென்று மகிழ்கின்றனர்.
நடைமுறை இவ்வாறாக இருக்கும்போது, தங்களின்
பணிநிமித்தம், பம்பாயில் வாழும்
தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி தருவது,
பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக்
கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக
அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன். இதைப்போலவே, அந்தந்த
மொழிவாரி மாநிலங்களைச் சார்ந்த மக்கள், தங்களது தேவைகளுக்காக,
வேற்று மொழி மாநிலங்களுக்குச்
சென்று வாழ்ந்தாலும், அவர்களது தாய் மொழிக்
கல்வியினை தடையின்றிப் பெறுவதற்கு,
சம்பந்தப்பட்ட மாநில அரசு தங்களது சட்டமன்ற
விதிகளின் படி வழிவகை செய்ய வேண்டும்.
இது, அரசமைப்புச் சட்டத்தின்
கடமை என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன்.
ஆந்திரம் அல்லது தென்னிந்திய தமிழ் நாட்டைச் சார்ந்தவர்
பம்பாயில் வாழும் போது, பம்பாயில்
இந்தி பிரதான மொழியாக இருப்பதால், தமிழ் மற்றும் தெலுங்கு அல்லது இன்னபிற
தாய்மொழி படிப்பது மிகுந்த
பொருட்செலவினை ஏற்படுத்தும். இந்தத்
தடையை நீக்கி புலம் பெயர் சிறுபான்மையின மக்களின் தாய் மொழிக் கல்விக்கு
ஆகும் செலவை,
சம்பந்தப்பட்ட மாநில அரசு முழுமையாக
ஏற்றுக் கொள்ள நமது அரசியல் சட்டம்
வழிவகை செய்துள்ளது.
ஒரு மொழியின் எழுத்தும், கலாச்சாரமும்
அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதுதான் மற்ற
எல்லா நடைமுறை சிக்கலைவிடவும் முக்கியம்.
எந்த ஒரு மாநில அரசு இயற்றும் சட்டமும்,
நமது நாட்டின் எந்தவொரு மொழியின்
எழுத்து மற்றும் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது. ஏனெனில்,
ஒரு மொழியின் எழுத்து அல்லது கலாச்சாரம்
பாதிக்கப்படுமானால், அது சம்பந்தப்பட்ட
தனிமனிதனின்
அடிப்படை உரிமையை அர்த்தமற்றதாக
மாற்றி விடுகிறது. இதை அனைத்து மாநில
அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை மீறி எந்த ஒரு மாநில அரசாவதோ அல்லது மத்திய அரசாவதோ சட்டத்தின் மூலம்
தங்கள் மொழியைத் திணிக்க, புலம் பெயர் வாழ் மக்களின் மொழியை
அலட்சியப்படுத்தினால், அந்த மாநில அரசு இயற்றும் சட்டம், இந்திய
அரசமைப்புச் சட்டப்
பிரிவு 8க்கு முரண்பாடு உடையதாகிறது.
இதன்படி, அந்த மாநில அரசின் சட்ட மன்றம்
இயற்றும் சட்டம் செயலற்றதாகி விடும்
என்று நமது அரசியல் சட்டம் தெளிவாகக்
கூறுகிறது.
'பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு :13 , பக்கம்:429

Saturday, June 06, 2015

கையில் ஒரு ரூபாய்

தெருவெங்கும்
தேங்கி கிடக்கும்
கழிவுநீரில்
தாகம் தீர்க்கத்தான்
நான் போனேன்

கழிவுநீரால் வயிற்றுப்பசி அடங்கியதாய் தெரியவில்லை அத்தனை புழுக்களும்
அடிவயிற்றை அடைத்துக்கொள்ள
அதுகளுக்கேனும்
உணவு தேட வேண்டுமே!

கழிவு நீரில்
என்னிரு கைகளை
நுழைத்து துழாவிக் கொண்டிருந்தேன்
துர்நாற்றம் தென்றலானது
எனக்கு

விடாமல் அலசி
ஆராய்ந்ததில் எதுயெதுவோ என் கைகளில் சிக்க
இதுவெல்லாம் இங்கே
புழக்கத்தில் உள்ளதா! என்றெண்ணம் விட்டு விலகாத விழிகளின்
குறியீடுகளை யாரும்
கவனித்ததாய்
தெரியவில்லை

கவனித்தல் அவசியமற்றதென்று
நீண்ட தேடலுக்குப்பின்
துருபிடித்த
ஒருரூபாய் என்னிரு
கைகளை முத்தமிட்டு
உணர்த்தியது

என் முகத்தில் பூத்த
புன்னகையை
எப்படி அறிந்தனவோ
தெரியவில்லை
மகிழ்சியில்
வயிற்றுப் புழுக்கள்

அன்றைய உணவு
அவைகளுக்கு கிடைத்துவிட்டது
நானும் காசு பார்த்துவிட்டேன்
என் கையில்
ஒரு ரூபாய்,,,

Wednesday, June 03, 2015

வசந்தகால இரவொன்றில்,,,,

வசந்தகால இரவொன்றில்
காற்றுக்கு இரையாகி
சலசலக்கும் சலங்கையொலியை
செவிகளுக்கு வந்துசேர
தடையில்லாமல்
இருப்பதென்னவோ
என் ஜன்னலாகத்தான்
இருக்கிறது

கேளாய்! நீ! கேளாய்!
சருகிலைகளின்
இறுதிச் சடங்கொலியை
கேளாய்! என
ஜன்னல் எனை
துணைக்கு அழைக்க

தூக்கம் தொலைத்தேன்
நான்
எழுந்தேன் மெதுவாக
சோர்வெனை சோதனைக்குட்படுத்த
அதில் மீண்டெழ
உடல் துடிப்பதை
உணர்ந்தவனாக
என்னை நானே
தயார் படுத்திக்கொண்டேன்

சருகுகளின் அழுகையோசை அப்போதும் என் செவிகளில் சூட்டுத்தன்மையை
ஏற்படுத்திக் கொண்டேயிருக்க

தானாகவே
வழிந்தோடிய கண்ணீர் என் பாய்விரிப்பையும் நனைத்து விட
என் ஜன்னலோர
நாற்காலியில் வந்தமர்ந்தேன்

அழுவது சருகுகளேதானென உணர்ந்தேன்
ஏனழுகிறதென்ற
உண்மையும் அப்போதுணர்ந்தேன்

தலைநிமிர்ந்து
வானத்தில் வட்டமிடும் பறவைகளுக்கு
தங்கும் மாளிகையாய் இருந்து மனிதனால் கொலைசெய்யப்பட்ட ஆலமரமொன்று
மரணித்து கிடக்கிறது

அதன் பிள்ளைகள்
வாடி கூடிநின்று அழுகிறார்கள்
விரைவில் அவைகளும் உரமாகலாம்
மண்ணிற்கு

உள்ளத்தால்
ஊமைக் கனவுகளாய்
ஓர் அஞ்சலி அதற்கு செலுத்தி விடுவதை
தவிர வேறென்ன
செய்துவிட முடியும் என்னால்

இரவு மின்தடைக்கு மின்மினி பூச்சியாகும் ஒற்றை மெழுகுவர்த்தியை எடுத்து
வந்து உயிர்கொடுத்தேன்

கொழுந்து விட்டு
எரியாத சாந்த முகத்தோடு என்சோகத்தோடும் சருகுகளின் சோகத்தோடும்
அலைபாய்ந்து அங்குமிங்குமாக
ஆடி அசைந்து
ஒப்பாரி வைக்கும்
தீப வெளிச்சத்தை
அணையாமல் மிதமாக கட்டித்தழுவிய காற்றசைவும் கண்ணீரின் வலியறிந்திருக்கக்
கூடும்

நான்,
சருகுகள்,
மெழுகுவர்த்தி,
மேசை,
நாற்காலி,
ஜன்னல்,
காற்று,
ஒலி,ஒளி யென்று

அனைவரும்
செலுத்தினோம்
வீழ்ந்த ஆலமரத்திற்கு கண்ணீரஞ்சலியை

அப்போதுதான்
எல்லாம் அப்படியே
இருக்க இங்கெப்படி
ஏதோ மாற்றமென்று
வீதியுலா வந்த
நிலவின் புத்திக்கு எட்டியது

விரைந்து இறங்கினாள் வின்னழகு நிலவின்
மகள்

அவள் கவனத்தை
நாங்கள் ஈர்த்தோமா!
இல்லவே இல்லை
அவளுக்கும் உயிரோட்டமுண்டு உயிர்வலி உணர்ந்தவள்
அவள் ஆகவே அவளே
வந்திறங்கினாள்

மரணித்து கிடக்கும் ஆலமரம்
மௌனத்தோடு சேர்ந்திருக்கும்
நாங்கள்
திசைதிருப்பி
விழிகளை சிமிட்டாமல் நிலவின் மகள் பார்க்கிறாள்

பரிவுடன் காட்சிதனை ஜன்னலும்
எடுத்துரைக்க
அழைக்கிறாள்
மழையை
நிலவின் மகள்

பெருமழையிடமும் பேரிடியிடமும் ஆணையிடுகிறாள்
நிலவின் மகளானவள்

அதோ அவர்கள்
நம் உறவினர்கள் நம்மினத்து
ஆலமரத்திற்கு
அஞ்சலி செலுத்துகிறார்கள்

யாரோ இறந்து கிடந்தால் நமக்கென்ன என்று
இல்லாமல் யாராயிருந்தாலும் ஏற்றுகிறார்கள்
தீபத்தை

அணைக்காலும்
நீயும் அஞ்சலி
செலுத்து
அன்புள்ளம் இங்கே புதிதாய் துளிர்க்கட்டும்

ஆணைக்கேற்றவாரு கண்ணீரஞ்சலி
கடைசியில் தொட்டது விடியலை

எழுந்து சென்றேன் என்னை இரவில்
அழவைத்த
வீழ்ந்து கிடக்கும் ஆலமரத்தினடியில்

கண்டகாட்சி
கனவில்லை நிஜம்தான் புதுவிதை
முளைக்கத் தொடங்கியாயிற்று இப்பூமியில்

இனிநான் நிம்மதியாக தூங்கி இரவுகளை கடந்துவிடுவேன்,,,

"விபச்சாரன்" பெண்ணியத்தின் கடைசி ஆயுதம்


நிகழ்காலத்து நவீன வரதட்சனை
சீர்கேடானது வளர்ந்து கொண்டேச்
செல்கிறதே தவிர குறைய
வாய்ப்பேயில்லை என்பதான
சூழலை நாம் காண நேரிடுகிறது.
கவுரவம் , அந்தஸ்து, ஆதிக்கம்,
பணத்தாசை, அடிமைபடுத்தும்
நோக்கம், போன்றவற்றால்
பெண்ணினத்தை
பிணையக்கைதியாக
பார்ப்பதும்,வியாபாரப் பொருளாக
பார்ப்பதும்,என்றுமே அடிமை
பட்டவள் பெண் என்கிற தோற்றத்தை
உறுவாக்குவதும் ஆணாதிகத்தின்
முதன்மைப் பணியாகவே இருந்து
வருகிறது, அந்த
வகையில்"வரதட்சனை"
என்கிற பெயரில் ஆணாதிக்கம்
பெண்ணினத்தை
அடக்கியாளுவதை ஒரு
கலையாகவே சித்தரித்து
செயல்படுத்தி வருகின்றதெனச்
சொன்னால் அது
மிகையாகாது."பணத்தை
பெற்றுக்கொண்டு உடலை விற்கும்
பெண்ணை "விபச்சாரி"
என்றழைக்கும் போது பணத்தை
பெற்றுக்கொண்டு உயிரணுவை
விற்கும் ஆணை ஏன்? "விபச்சாரன்"
என்றழைக்கக் கூடாது" எனக் கேள்வி
எழுப்புவதில் தவறேதும்
இருப்பதாக
தோன்றவில்லை.விபச்சாரியென்று
பெண்ணிற்கு பட்டமளித்தவர்கள்
போகும் ஆண்களுக்கு
உத்தமனென்று
முடிசூட்சியுள்ளார்களே,,,
இதிலும் ஆணாதிக்கம் தானே
முழுமை பெற்றிருக்கிறது.
விபச்சாரம் இழிதொழிலென்றால்
இருவுடலுக்கும் சேர்த்தே
இழிச்சொல்லை வைத்திருக்கலாமே
ஏன் பெண்ணை தாக்கி "விபச்சாரி"
என்ற ஒன்றை மட்டும்
விதைத்துவிட்டுச்
சென்றிருக்கிறார்கள் . கற்பை
பொதுவில் வைத்தால் ஆணாதிக்கம்
அழிந்துவிடுமென்பதை அவர்கள்
நன்கு உணர்ந்துள்ளார்கள். அதைப்
போலவே "தாய் வீட்டுச் சீதனம்"
என்றுச் சொல்வது பெண்ணிற்கு
கவுரவத்தை கொடுக்கும் என்கிற
போலி பிம்பத்தை உறுவாக்குவதை
செம்மையாக செய்துமுடிக்கிறது
ஆணாதிக்கம்.ஆகவே தான்
ஆணாதிக்க சக்திகளை "விபச்சாரன்"
என்றழைக்க வேண்டியிருக்கிறது
விபச்சாரத்திற்கும், வரதட்சனைக்கும்
என்னத் தொடர்பு இருக்கிறதென்று
எதிர் விமர்சனம் இங்கே எழலாம் .
இரண்டிலுமே மதிப்புப் பொருள்
பரிமாற்றத்தை கொண்டிருக்கிறது
ஆனால் இழிச்சொல் மட்டும்
பெண்ணினத்திற்கு வந்து
சேருகிறது,நமது சமூகத்தில்
ஆண்டாண்டுகாலமாக
தொடர்ந்திருக்கும் வழக்க
முறைகளில் மணமான பெண்
கணவன் வீட்டில் வாழ்தல் என்பதாகும்.
ஆகவே மணப்பெண் வாழ்நாளில்
பொருளாதாரச் சிக்கல்களை
சமாளிக்க முடியாமல் திணறக்
கூடாதென்பதற்காக சீதனம்
கேட்கின்றோம் அதையும்
பெண்வீட்டாரின் இஷ்டப்படியே
விட்டுவிடுகிறோம் என்று
வரதட்சனைக்கு புனிதச் சாயம்
பூசுவது யாரென்று
உற்றுநோக்கினால் தெளிவாகவே
தெரிகிறது முழுதும்
ஆணாதிக்கர்கள்தானென்று,,
இல்லற வாழ்வில் இன்பமோ துன்பமோ இருவருமே சரிநிகராகத்தான்
அனுபவிக்கிறார்கள் . ஆணுக்கு
பெண் பெண்ணுக்கு ஆண் என
நின்று வாழ்வியலின் இன்ப
துன்பங்களை பகிர்ந்து கொண்டு
வறுமைச் சவாலை
எதிர்கொள்ளுவது என்பதில்
தனிப்பெரும் சுவாரஸ்யம்
இருக்கிறது. பெண்வீட்டாரிடம்
பெரிய தொகையோ,அல்லது
பொருளையோ பெற்றுக்கொண்டு
இல்லற வாழ்வு சிறக்க ஆண்மகனை
நன்றாக படிக்க
வைத்திருக்கிறேன்,அவனுக்காக
சொத்து சேர்த்திருக்கிறேன் ஆகவே
கொடு பணத்தையென்று
பெண்வீட்டாரிடம் பிடுங்குவது
பச்சைக் கொலைக்குச் சமமாக
இச்சமூகம் பார்வையை திருப்புதல்
வேண்டும், வரதட்சனை பணம் அல்லது
பொருள் பெருதலை மோசடி
என்றோ திருட்டு என்றோ
சொன்னால் அதுவொரு
சிறுகுற்றமாக பார்க்கக்கூடும்
என்பதால் கொலைக்கு நிகராகவே
பார்க்கப்பட வைக்கிறது.எரிவாயு ,
மண்னெண்ணெய், மின்சாரம்,விறகு ,
இப்படியான எத்தனையோ
அடுப்புகளில் "உலை"
கொதிக்கிறதோ இல்லையோ
ஆனால் பெண்ணின் "உடல்"
தினந்தினம் கொதித்து
தீக்கிரையாகி உலைகொதிக்கும்
பாத்திரத்தின் அடியில் சுண்டி கரி
பிடிப்பது போல பெண்ணும் உடல்
கருகி உயிரை பறிக்கும் பல்வேறு
நிகழ்வுகளை பார்த்த வண்ணம்
"வேண்டும் அவளுக்கு வரதட்சனை
கொடுத்திருந்தால் உயிரை
விட்டிருப்பாளா! நம்ம சம்ரதாய
சடங்கை உசாதீனப்படுத்தினாளே
வேண்டும் அவளுக்கு" என்று
நியாயப்படுத்தி விட்டு கடந்து
போகும் அற்ப மனநிலையும்
ஆணாதிக்கத்திற்கு என்றோ
வந்துவிட்டது.இக்கேவல
மனநிலைக்காகவே
ஆணாதிக்கத்தை "விபச்சாரன்"
என்றழைக்கப்பட வேண்டுமேயொழிய
வரதட்சனை கொடுமைகளை
வளர்த்துவிட்டு நாமும் வேடிக்கை
பார்த்தால் வளரும் சமூகத்தில்
எண்ணிலடங்கா அனாதைப்
பிள்ளைகள்,தாய் இழந்த
பிள்ளைகளென்று பெருகி விடும்
அபாயத்திலிருந்து தப்பிக்கவே
முடியாது. பிறக்கும் போதே கணத்த
சுமைகளொடு பிறப்பது
பெண்ணினமாகத் தான் இருக்க
முடியும் பெற்றெடுப்பவளும்
பெண்ணாகத்தான் இருக்கிறாள்
ஒரு தாயாக,,, இதனோடு கூடவே
இச்சமூகம் திணிக்கும் பல்வேறு
சுமைகளை தாங்கிக் கொண்டு
அதனோடு கூடவே பல்வேறு
இழிச்சொற்களை சுமந்து கொண்டு
வாழ்வதற்கு பதில் சாவதே
மேலென்ற எண்ணத்தையும்
இறுதியில் பெறும்
பெண்ணினத்திற்கு
ஆணாதிக்கத்திடமிருந்து
விடுதலை வேண்டுமெனில்
நிச்சயம் அவர்களிடத்தில் "விபச்சாரன்"
பட்டம் புகுத்தப்பட வேண்டும்.
ஆதிக்கத்தை அழியாமல்
இன்றுவரையில் பாதுகாத்துக்
கொண்டிருக்கும்
"வரதட்சணை,கொடை,சீதனம்,சீர்"
என்று பல்வேறு பெயர்களில்
வலம்வரும் சமூகத்து
சீர்கேடுகளுக்கும் , தொடரும்
கொலை மற்றும்
கொடுமைகளுக்கு,
ஆணினத்திற்கு மிகப்பெரும்
பங்குண்டு என்பதால் "விபச்சாரன்"
என்கிற பட்டம் அவர்களித்து
பெண்ணினம் எழுச்சி பெற
வேண்டிய காலச் சூழலை இன்றைய
பெண்ணினச் சமூகம்
பெற்றிருக்கிறது. பட்டத்தை
சுமத்துவதால் ஆணினம் வெட்கி
தலைகுணிந்து நிச்சயம்
பெண்ணினத்திற்கு
விடுதலையளிக்கும் காலம்
வெகுதூரத்தில் இல்லையென்றுச்
சொன்னால் இலக்கை
அடையப்போகிறோம் என்பதில்
இருக்கிறது பெண்ணின
சமூகத்தின் எழுச்சி. ஒவ்வொரு
இடத்திலும் "விபச்சாரன்" என்கிற
முத்திரை குத்தப்பட வேண்டும் .
அது வரதட்சனையிலிருந்து
தொடங்கப்பட வேண்டும்.(2013. Sep 27 ல் ட்விட்டரில் நான் (செந்தழல்.சே "sethu_ss") பதிந்தது.சில காரணங்களால் கணக்கை என்றோ செயலிழக்கச் செய்து விட்டாலும் எண்ணங்கள் உயிர்ப்போடு அப்படியே இருக்கத்தான் செய்கிறது)

Tuesday, June 02, 2015

தமிழ்ச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு,,,

நமது தமிழ்ச் சமூகத்தில் மிகச்சிறந்த நன்னெறிகளில் ஒன்று
"எதிரியையும் மதிக்கப் பழகு" என்பதேயாகும். இப்பொன்மொழியின் பொருள்
விளக்கம் இன்றைய காலத்தில் கோனலாக புரிந்துணரப்படுகிறது­­. நமக்கு  எதிரியாக தென்படுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையானது எதிரியையே மனமாற்றத்திற்கு ஊன்றுகோலாய் அமைய வாய்ப்பினை நாமே எதிரிக்கு உறுவாக்கித் தருதலின் மூலம் வீழ்த்திவிடலாம் என்கிறது முன்னோர் கொடுத்துவிட்டுச்
சென்ற மேற்கண்ட பொன்மொழி.மற்றவரை நாம் மரியாதையுடன் அழைப்பதற்கு
தமிழிலுள்ள அழகு வார்த்தைகளை போல வேறெந்த மொழிகளிலும் அறவேயில்லை. வயதில்
மூத்தோர்களையும்,வயதி­­ல் சிறியவர்களையும்,மூத்­­த குடிமக்களையும்,
பெண்டீர்களையும் மரியாதையுடன் அழைக்க நமது தமிழ்மொழி பரிந்துரைத்த வார்த்தைகளை புறக்கணிப்பது சரியா? அதிலும் மக்களுக்கான நேரடித்
தொடர்புநிலையில் சமூகப்பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள்
புறக்கணிப்பதென்பது மிகவும் வேதனைதரும் விஷயமாகும். தமிழ்த்தாய் நமக்காக
விட்டுச் சென்ற "திரு,திருமதி,செல்வி­­, ஐயா,தோழர்" போன்ற வார்த்தைகளை
தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதை உணரும் பொழுது நமது தமிழ்ச்சமூகம்
மற்றவருக்கு மரியாதை அளிப்பதை மறந்த சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றது என்பது தெளிவாகவே வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது கடந்த பதினைந்து
ஆண்டுகளாகவே தொடரும் இந்த அவலங்களுக்கு தமிழ்ச் செய்தி ஊடகங்கள் தக்க தீர்வுகளை எடுக்க முன்வர வேண்டும். முன்னணி அரசியலாளர்கள் தொடங்கி விவசாய ஏழை பெருமக்கள் வரையில் உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் மூலம்
செய்திகளில் அங்கம் வகிப்பவர்களை அழைக்கும் போது நமது தமிழ்ச் செய்தி
சமூகமானது வெறும் பெயரிட்டே அழைக்கிறது. ஆளுமைகளில் தொடங்கி அடித்தட்டு
மக்கள் வரையில் வெறும் பெயர்களை மட்டும் உச்சரிப்பதென்பதான் ஊடகங்களின் நாகரீக வளர்ச்சியெனில் மற்றவருக்கு மரியாதை அளிப்பதை அநாகரீகமாக கருதுவதென்பது தவறென்று ஏன் தமிழ்ச் செய்தி ஊடகம் உணர மறுக்கிறது. இந்திய
மக்கள் பிரதிநிதியான பிரதமரை அழைக்கும் போது " பிரதமர் (திரு) நரேந்திர மோடி என்றும், மாநில முதல்வரை அழைக்கின்ற போது (செல்வி) ஜெயலலிதா
என்றும், அதற்கு நிகரான எதிர்கட்சித் தலைவர்களை அழைக்கின்ற பொழுது
அவர்களின் பெயருக்கு முன்னால் "திரு,திருமதி,செல்வி­­,ஐயா" போன்ற
வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவர்களுக்கான மரியாதை செலுத்துவதில் என்ன
சிக்கல் இருந்துவிடப் போகிறது தமிழ்ச் செய்தி ஊடகத்திற்கு,,, இவ்வாறு மரியாதை செலுத்துவதை புறக்கணித்து செய்தியாளர்கள் செய்திகளை வாசிக்கும்
போது அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு "இவர்களுக்கு ஏன் மரியாதை? கொடுக்க வேண்டும்" என்கிற எண்ணத்தின் படியிலேயே இன்றைய தமிழ்ச்சமூகம் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.இன்ற­ளவும் அடுத்தவருக்கு மரியாதையளிப்பதை
அரசுத் தொலைக் காட்சியான "பொதிகை"(பெயரளவில் அரசு தொலைகாட்சி)
விடாப்பிடியாக இருப்பதை காண நேரிடுகிறது. ஒப்பீட்டளவில் பெரும் முன்னணி
தனியார் செய்தி ஊடகங்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு செய்தி ஊடகமும் வெவ்வேறு அரசியலுக்கு பின்னால்
இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகம்தான். ஆனால் இதையே காரணங்காட்டி பிடிக்காத
அரசியல் தலைவருக்கோ மற்றும் தொண்டர்களுக்கோ கொடுக்கப்பட வேண்டிய
மரியாதையை புறக்கணிப்பது முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். அரசு
உயரதிகாரியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களாக இருந்தாலும் அவர்களை
அழைப்பதில் தமிழ்ச் செய்தி ஊடகம் பாரபட்சம் காட்டாமல்
"திரு,திருமதி,செல்வி­­,ஐயா" போன்ற வார்த்தைகளை பெயருக்கு முன்னாலிட்டு
உச்சரித்தால் நிச்சயம் உச்சரிக்கும் ஊடகத்தின் மீது மக்கள் நன்மதிப்பை
பெற்றிருப்பார்கள். இதன் மூலமாகவே தொடர்ந்து முன்னணி செய்தி ஊடகமாக
நிலைத்து நின்றிடலாம். செய்தி வாசிப்பாளர்கள் நன்கு அறிவார்கள்
மக்களிடையே செய்தியானது ஆழமாக பதிய வேண்டுமெனில் வாசிக்கும்
விதமும்,வார்த்தைகளை பிரயோகிக்கும் முறையும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு நன்கறிந்த செயல்முறைகளையே செய்தி ஊடகம் புறகணித்தால் விரைவிலேயே மக்களும் செய்திகள் வாசிப்பதையும்,பார்ப்­­பதையும்
புறக்கணித்தே விடுவார்கள். ஆகவே இதன்மீது கவனத்தைச் செலுத்தி தமிழ்ச் செய்தி ஊடக வாசிப்பாளர்கள் " திரு,திருமதி,செல்வி,­­ஐயா" போன்ற தமிழ்
வார்த்தைகளை உபயோகப்படுத்த முன்வர வேண்டுமென்பது முன்வைக்கும் அரைகூவலாகும்.

Monday, June 01, 2015

பகுத்தறிவு பிச்சை

பகுத்தறிவு பிச்சை
கேட்டு கண்ணில்படும்
கதவுகளையெல்லாம்
தட்டினோம்

திறக்காத கதவுகளின்
இடுக்கில் விரட்டும்
ஒலிசப்தம்
போ!!! போ!!! பூசையறையில்
பூனைபோல
நுழையாதே
போ!!! வென விரட்டியடிக்க

பக்கத்தில் பார்ப்பானியமோ
பிச்சைக்காரனே
பிழைப்புக்கு வழிதேடு
பகுத்தறிவு பிச்சை பாத்திரம் என்றுமே
நிரப்பாதொன்றும்

அதுவொரு காலிகுடம்
தூக்கிக்கொண்டு
திரியாதே என்றும்
புத்திசொல்ல வந்துவிட்டான்

புழுவாய் துடிக்கிறோம்
பகுத்தறிவு பிச்சைக்காரர்கள்
நாங்கள்

பார்ப்பானியத்தை
உற்றுப் பார்க்கையில்
உழுதவன் சோற்றுப்
பருக்கைகள்
ஒட்டியிருந்தது அவர்களின் கைகளில்

இந்துத்துவத்தை
தின்று கொழுத்து போயிருந்தார்கள்
அவர்கள்

தவறுகள் எங்களின்
மீதேயிருக்க
எப்படி நிரம்பும்
பகுத்தறிவு பிச்சை பாத்திரம்

தலித் திராவிடத் தமிழ்தேசியப்
பொதுவுடைமையென
ஒன்றுவிடாமல்
ஒன்றோடொன்று
மோதவிட்டு இன்று

அதே இந்துத்துவத்து
மோட்சம் தேடி கைலாயம் போக
பகுத்தறிவெனும்
பிச்சையை
நாங்களும் பிழைப்புக்கு
ஏந்தினோம்

பார்ப்பானியம் எங்களுக்கு
பைத்தியமென
மகுடம் சூட்டுவதற்கு
நாங்களே காரணமாகி நின்றோம்

கடைசிவரை ஓயவில்லை
எங்களின் இயக்கச் சண்டைகள்

வாசல்தோரும் முருகனின் வேலாயுதம்
பகுத்தறிவு மீது
பாய வருவதையும்

தடுக்க திராணியில்லாமல்
உயிர் பிழைத்தால்
போதுமென
அடுத்த வாசலை
நோக்கி

இப்படியே தொடர்கிறது
பகுத்தறிவு பிச்சை

வேண்டாத சாமியில்லை
போகாத கோயிலில்லை

பகுத்தறிவை
என்றோ
அடகுவைத்தோம்
பார்ப்பானியம்
பாரினில் வளர்ந்திடவே

அம்மா தாயி
பகுத்தறிவு பிச்சை
போடும்மா!

தவறாமல் தொடர்வண்டி போலவே
தொடர்ந்தே வருகிறது
அப்பொன்மொழி
எங்களுடனே,,,

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...