Monday, June 01, 2015

பகுத்தறிவு பிச்சை

பகுத்தறிவு பிச்சை
கேட்டு கண்ணில்படும்
கதவுகளையெல்லாம்
தட்டினோம்

திறக்காத கதவுகளின்
இடுக்கில் விரட்டும்
ஒலிசப்தம்
போ!!! போ!!! பூசையறையில்
பூனைபோல
நுழையாதே
போ!!! வென விரட்டியடிக்க

பக்கத்தில் பார்ப்பானியமோ
பிச்சைக்காரனே
பிழைப்புக்கு வழிதேடு
பகுத்தறிவு பிச்சை பாத்திரம் என்றுமே
நிரப்பாதொன்றும்

அதுவொரு காலிகுடம்
தூக்கிக்கொண்டு
திரியாதே என்றும்
புத்திசொல்ல வந்துவிட்டான்

புழுவாய் துடிக்கிறோம்
பகுத்தறிவு பிச்சைக்காரர்கள்
நாங்கள்

பார்ப்பானியத்தை
உற்றுப் பார்க்கையில்
உழுதவன் சோற்றுப்
பருக்கைகள்
ஒட்டியிருந்தது அவர்களின் கைகளில்

இந்துத்துவத்தை
தின்று கொழுத்து போயிருந்தார்கள்
அவர்கள்

தவறுகள் எங்களின்
மீதேயிருக்க
எப்படி நிரம்பும்
பகுத்தறிவு பிச்சை பாத்திரம்

தலித் திராவிடத் தமிழ்தேசியப்
பொதுவுடைமையென
ஒன்றுவிடாமல்
ஒன்றோடொன்று
மோதவிட்டு இன்று

அதே இந்துத்துவத்து
மோட்சம் தேடி கைலாயம் போக
பகுத்தறிவெனும்
பிச்சையை
நாங்களும் பிழைப்புக்கு
ஏந்தினோம்

பார்ப்பானியம் எங்களுக்கு
பைத்தியமென
மகுடம் சூட்டுவதற்கு
நாங்களே காரணமாகி நின்றோம்

கடைசிவரை ஓயவில்லை
எங்களின் இயக்கச் சண்டைகள்

வாசல்தோரும் முருகனின் வேலாயுதம்
பகுத்தறிவு மீது
பாய வருவதையும்

தடுக்க திராணியில்லாமல்
உயிர் பிழைத்தால்
போதுமென
அடுத்த வாசலை
நோக்கி

இப்படியே தொடர்கிறது
பகுத்தறிவு பிச்சை

வேண்டாத சாமியில்லை
போகாத கோயிலில்லை

பகுத்தறிவை
என்றோ
அடகுவைத்தோம்
பார்ப்பானியம்
பாரினில் வளர்ந்திடவே

அம்மா தாயி
பகுத்தறிவு பிச்சை
போடும்மா!

தவறாமல் தொடர்வண்டி போலவே
தொடர்ந்தே வருகிறது
அப்பொன்மொழி
எங்களுடனே,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...