Saturday, June 06, 2015

கையில் ஒரு ரூபாய்

தெருவெங்கும்
தேங்கி கிடக்கும்
கழிவுநீரில்
தாகம் தீர்க்கத்தான்
நான் போனேன்

கழிவுநீரால் வயிற்றுப்பசி அடங்கியதாய் தெரியவில்லை அத்தனை புழுக்களும்
அடிவயிற்றை அடைத்துக்கொள்ள
அதுகளுக்கேனும்
உணவு தேட வேண்டுமே!

கழிவு நீரில்
என்னிரு கைகளை
நுழைத்து துழாவிக் கொண்டிருந்தேன்
துர்நாற்றம் தென்றலானது
எனக்கு

விடாமல் அலசி
ஆராய்ந்ததில் எதுயெதுவோ என் கைகளில் சிக்க
இதுவெல்லாம் இங்கே
புழக்கத்தில் உள்ளதா! என்றெண்ணம் விட்டு விலகாத விழிகளின்
குறியீடுகளை யாரும்
கவனித்ததாய்
தெரியவில்லை

கவனித்தல் அவசியமற்றதென்று
நீண்ட தேடலுக்குப்பின்
துருபிடித்த
ஒருரூபாய் என்னிரு
கைகளை முத்தமிட்டு
உணர்த்தியது

என் முகத்தில் பூத்த
புன்னகையை
எப்படி அறிந்தனவோ
தெரியவில்லை
மகிழ்சியில்
வயிற்றுப் புழுக்கள்

அன்றைய உணவு
அவைகளுக்கு கிடைத்துவிட்டது
நானும் காசு பார்த்துவிட்டேன்
என் கையில்
ஒரு ரூபாய்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...