Friday, July 10, 2015

தமிழகத்தை பிரித்தாளும் சாதியாதிக்கம்

தமிழகத்தில் சாதியாதிக்கம் தலைவிரித்தாடுகின்ற போதெல்லாம் அதன் மீதான
விமரிசனப் பார்வையானது இரண்டாக பார்க்கப்படுகிறது. வட தமிழகம்,தென்
தமிழகம் என்று திசைகளை அடிப்படையாய் வைத்துதான் சாதியாதிக்க விமரிசனம்
முன்வைக்கப்படுகிறது . சாதியமானது தன் பிரித்தாளும் பணியில் இருதிசைகளையே
கொண்டிருக்கிறது என்றாலும் அதன் மீதான விமரிசன பார்வையில் அவ்வாறு
பிரித்தாளப்பட வேண்டியதில்லை. சாதியத்தின் மீதான எதிர்ப்பினை
தெரிவிக்கும் பொழுது திசைகளை மறந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே எடுத்தாளுதல்
என்பதே காலச் சிறந்ததாகும்.தென் தமிழகத்தில் அடிமைபடுத்தும்
சாதியாதிக்கர்களாக கொங்கு வெள்ளாள கவுண்டர்,தேவர், தேவேந்திரர்
இத்யாதி,,,இத்யாதி,,,­ என நீளும் இடைநிலைச் சாதிகளின்
அடக்குமுறைகளாகட்டும்­ , தென் தமிழகத்தில் அடிமைபடுத்தும்
சாதியாதிக்கர்களாக வன்னியர்,கவுண்டர், என்கிற இடைநிலைச் சாதிகளின்
அடக்குமுறைகளாகட்டும்­ இரண்டுக்குமான ஒரே நேர்கோட்டுச் செயல்பாடென்பது
ஒத்த தன்மையுடையதாக இருக்கின்ற பொழுது சாதிக்கு எதிராக எழும் குரல்கள்
ஒட்டுமொத்த தமிழகத்தை சேர்ந்ததாக இருக்குமேயானால் சாதி ஒழிப்புக்கான
கூர்தீட்டல் சீராக அமையும். நெடுங்காலமாக இச்சாதியாதிக்கத்தை முன்வைத்தே
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற
கோரிக்கையை முன்வைத்து அதற்கான அறிக்கைகளையும் அவ்வப்போது
வெளியிடுகின்றார் . இடைநிலைச் சாதிகளின் இந்நிலைப்பாட்டிற்கும­் ,
வர்க்கச் சுரண்டலுக்கும் இசைந்துபோவது போலவே சாதியத்தை எதிர்த்து
விமர்ச்சிப்பவர்களும்­ செயல்படுகிறார்கள் எனும் போது தமிழகம்
கேள்விக்குறியாகிறது. வட தமிழகம்,தென் தமிழகம் என்று பிரித்தாளும்
சூழ்ச்சியில் இடைநிலை சாதியாதிக்கர்களுக்கு­ முழு அளவில் ஒத்துழைப்பு
அளிப்பதில் இந்துத்துவ பார்ப்பானியர்களும் , போலி தமிழ்த்தேசியர்களும்
பெரும்பங்காற்றிவருகி­றார்கள். இந்துத்துவ பார்ப்பானியமானது
மறைமுகமாகவும் , போலி தமிழ்த்தேசியமானது நேரடியாகவும் செயல்படுகிறது.
தமிழராய் ஒன்றிணைவோம் வாருங்கள் என குரலெழுப்பும் தமிழ்த்தேசியமானது
தமிழகம் இரண்டாக பிளவுபடும் அறிக்கைகள் வருகின்றபோதெல்லாம் அதுபற்றி
வாய்திறக்க மறுக்கிறது அல்லது அதனை ஆதரித்தே செயல்படுகிறது எனலாம்.
இவ்வாறான எந்தவொரு சூழலையும் கணக்கில் கொள்ளாமலும்,கவலைபடாம­லும்
சாதியாதிக்கத்தை எதிர்ப்பவர்களும் குறிப்பாக தமிழகத்தை இரண்டாக
பார்க்கிறார்கள் என்பது என்றுமே சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடாது.
எங்கெல்லாம் சாதியத்தின் பேரில்
அடக்குமுறைகளோ,வன்முற­ைகளோ,வண்புணர்ச்சிகளோ­,கொலைகளோ நடக்கின்ற பொழுது
அதனை எதிர்த்துச் செயல்படுவோர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையே உச்சரிக்கப்பட
வேண்டியது அவசியமாகிறது. செயல்பாட்டளவில் அதற்கான தேவையே இடைநிலைச்
சாதிகளே தத்தம் உறுவாக்கி வைத்திருக்கிறது. எவ்வாறெனில் இடைநிலை சாதிகள்
பெரும்பாலும் பல்வேறு சாதிப்பெயர்களில் அழைக்கப்பெற்றாலும் அவர்கள்
முன்னிருத்திச் செல்வது இந்துத்துவ சாதிய மனுதர்ம வர்ணாசிரமத்தை மட்டுமே,
இதன் பொருட்டே அவர்கள் "நாங்கள் ஷத்ரியர்கள்" என்றுகூறி ஆதிக்கத்தை
நிலைநிறுத்துகிறார்கள­். வட தமிழகமானாலும்,தென் தமிழகமானாலும்
ஷத்ரியர்கள் என்கிற ஒருமித்த குரலில் இடைநிலைச் சாதிகள் ஒன்றிணைகிறார்கள்
இதுவை இத்துத்துவ ஆர் எஸ் எஸ் பார்ப்பானியத்திற்கு போதுமானதாக
இருக்கிறது. ஆகவே சமூகத்தின் மீது அக்கரை கொண்டு சாதியத்தை எதிர்க்கின்ற
எவரும் தங்களின் செயல்பாட்டு நோக்கங்களில் ஒருமித்த கருத்துக்களோடு
ஒட்டுமொத்த தமிழகத்தை முன்னிருத்துவதன் மூலம் தமிழ்ச்சமூகத்தில்
சமத்துவத்தை நிலைநாட்டிடலாம் . கூடுமானவரை சாதியத்தில் வட,தென் என்று
பாகுபடுத்திச் செயல்படுவது இந்துத்துவ பார்ப்பானிய இடைநிலைச் சாதிகளுக்கே
பெரும் ஆதாயமாக அமைந்து விடும் என்பதை என்றுமே மறந்து விடக் கூடாது.
இரட்டை வேடத்திலிருந்து தமிகத்தை மீட்டெடுக்க வேண்டியது நமது
முதற்கடமையாகும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...