Saturday, October 31, 2015

யார் இந்த கோவன்?

வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப்
பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். 'கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா
கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா
பார்லிமென்ட்டு'என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம்
தெறிக்கும். 'மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப்
பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!
"கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய
கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள்.நடவு
வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க.சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான்
வளர்ந்தேன். 'நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம்,
நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்'னு அம்மா ராகத்தோடு
இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா,ஒரு
கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம்
சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும்
வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல
சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம்.
இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு
சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.
ITI முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின்
தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, 'நாட்டுப்புற உழவர்களே,
நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக்
கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க' என்ற பாட்டைப் பாடச்
சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன்.
திடீர்னு போலீஸ் வந்துடுச்சு.எனக்கு வெடவெடன்னு பயம்.
இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே
வளர்த்தாங்க. 'நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக்
கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்'னு தானே சொல்றாங்க.
அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை
அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட
ஆரம்பிச்சப்போதான், 'போராளிகளின் முதல் தேவை துணிவு'ன்னு புரிஞ்சது.
கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால்
மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை
அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில்
சேர்ந்தேன்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப்
போய்ப் பாடுவோம். 'சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை
செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப்
பாடுபட் டோம்'கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா
வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப்
பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட
ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின்
வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.
நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு
கிராமத்துக்குப்போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத்
தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல
கிராமங்களில் 'நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு
வரும்'னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன்
வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் 'இன்னிக்கு சாப்பாடும், தங்குற
இடமும் நீங்கதான் தரணும்'னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு
தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும்
கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட
சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப்
போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி
எழுந்து வர்றோம்.
எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை
மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப
துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப்
பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை
அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால்
அல்ல;இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால்,அது
கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, 'புரட்சி… புரட்சி'என்று
நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.
இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட
கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சிஅரசியல்வாதிகளின் பச்சை
சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம்.
பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம்
செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே
தாக்கப்பட்டோம்.ராமநாதபுரத்தில்,அ.தி.மு.க காரர்கள் அடித்தார்கள். கட்சி
பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக
அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு
முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன.இன்று நாட்டு
மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறுகாலனி
ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிரசாரம்
செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை
ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத்துக்கு இசையைஒரு கருவியாகப்
பயன்படுத்துகிறோம்.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!,
ஆனந்தவிகடன் 13,Oct,2010

கூழாங்கற்கள் -ஹைக்கூ

சொற்கள்
அசைபோடுகிறது
ஊமையின்
மனதில்,,,
________
பந்தல்
அவளுக்குரியது
கடனடைக்க
போதவில்லை
மொய்ப்பணம்,,,
________
புல்லாங்குழல்
மரக்கிளையில்
தீட்டிய வண்ணமோ
கருப்பு,,,
________
வாசிப்பை
நிறுத்தாத
பிடில்
இந்தியாவிலும்
-(நீரோ)க்கள்
________
பலத்த மழை
ஏரியை
சுற்றி சுற்றி
-நிலாவட்டம்
________
ஆற்று மணல்
வீடு
எடுத்து வந்த
தண்ணீரும் வற்றி
அழுகிறான்
-சிறுவன்
________
கொன்ற
நத்தைகள்
குவியலாக
மனிதன்
நீர்த்துளி
சேகரிப்பில்,,,
________
உள்ளத்தில்
சமதள விரிப்பு
அடம்பிடிக்கும்
பிள்ளைக்கு
சமாதானம்,,,
________
சிறுவர்கள்
பட்டம்
பறக்கிறது
தும்பி
கயிற்றுடன்,,,
________
சேமித்த
உணவு
அலகுடைத்த
மனிதன்
அழும் காக்கைகள்,,,
________
உடலறுத்த
நதி
பாதைகள் விலகி
ஜொலிக்கிறது
-கூழாங்கற்கள்,,,
________
காதுகள் இனிக்க
கிளையில்
புல்லாங்குழல்
விரட்டாதீர்கள்
வெட்டாதீர்கள்,,,
________
வெட்டிய மரம்
கட்டிய கூடு
கிளைசேர
துடிக்கிறது
-இலைகள்,,,
________
மழையில்
நனையும்
கரும்பலகை
புத்தக அட்டையால்
மூடிய கூரை,,,
________
மாலைநேர
பூக்கள்
கடன் கேட்கிறேன்
காற்றிடம்
அன்பை முறிக்காமல்
வீசிய மணம்,,,
________
பதவி நாற்காலி
பிய்த்த உடல்
நிர்வாணமாய்
-தேசியக்கொடி,,,
________
முதிர்ந்த
இளைஞன்
அணித் தலைவனாய்
சா(ச)த்தியம்
அரசியலில்,,,
________
உலகப் போர்களே
வெட்கமாக
இல்லையா?
இப்படி குடிக்கிறீர்களே
குருதியை,,,
________
சேற்றில்
தாமரை
மனமில்லை
குளத்தில்
கல்லெறிய,,,
________
தேனருந்தும்
பட்டாம்பூச்சி
வண்ணங்களை
திருடாதீர்கள்
பூக்களே,,,
________
களவாடிய
மேகம்
கண்கள் தேடுகிறது
நிலவை,,,
________
காற்றுக்கு
தசைபிடிப்பு
கலையாத
-கார்மேகம்,,,
________
கழிவற்ற
பொருளாய்
கனவினை
சுத்தம் செய்கிறேன்
காட்சிகள்
தெளிவாக,,,
________
பூம்புகாரில்
புகார் பெட்டிகள்
வழக்குகள்
நிலுவையில்
அப்படியே,,,
________****________‪

சிவசேனாவின் தொடர் அட்டூழியங்கள்

சிவசேனாக்கள் காவி உடையில் வலம் வரும் கொலைக்கார கும்பல்கள் என்பதை
எப்போதும் நிருபித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் சமீபத்தில்
எழுத்தாளரான குல்கர்னியின் மீது மை வீசி தங்கள் எதிர்ப்பை ஆதிக்க
வெறியோடு காட்டியதை இந்தியா அறிந்திருக்கும். ஒட்டுமொத்த இந்திய
எழுத்தாளர்களையும் கதிகலங்கச் செய்திட்ட இச்செயலுக்கு எதிர்வினையாக
அவர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப அளித்து தங்கள்
எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனாலும்
தொடர்ந்து சிவசேனாக்கள் தங்கள் கொலைவெறியை காட்டிக்கொண்டேதான்
இருக்கிறார்கள் . அந்தளவிற்கு சாதிய மதவெறியும், ஊழலும்,
கொள்ளையடித்தலும் அவர்களுக்குள்ளே ஊறிப்போயிருக்கிறது என்பதற்கு இன்றைய
நிகழ்வும் ஒரு சாட்சியாக நிற்கிறது.

மகாராஷ்டிராவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை (RTI) செயற்பாட்டாளர்
மல்லிகார்ஜூன் பாய்கட் என்பவர் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக நடக்கும் பல
சமூக அநீதிகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு
கொண்டு வந்து அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக,சமூகத்தில் நிகழ்ந்த நில
அபகரிப்பான 14 ஆயிரம் சதுர அடியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட ஒரு
கட்டிடத்தைப் பற்றிய விவரங்களை, லத்தூர் நகரில் நடந்த பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்பலப்படுத்தினார். இதனை கண்டிக்கும்,
வகையிலும்,குறிப்பிட்­ட அந்த கட்டிடம் சிவசேனாக்கள் கட்டுப்பாட்டில்
இருந்தமையாலும், இன்று (30.10.2015) அவரை கடத்திச் சென்று கல்லூரி
ஒன்றில் வைத்து அங்கு கூடியிருந்த சுமார் நான்காயிரம் மாணவர்கள்
முன்னிலையில் அவரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, அவரது
முகத்தில் கருப்பு மையைப் பூசியுள்ளனர்.
சிவசேனாவின் தொடரும் அட்டூழியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்துத்துவ
வெறியாட்டியத்தால் இந்தியாவின் இறையாண்மை நேரடியாகவே கொல்லப்படுகிறது.
மேலும் நான்காயிரம் மாணவர்கள் முன்னிலையில்? என்பது மிகவும்
வருத்தத்திற்குரியது.­ மாணவர்களின் இந்த மௌனம் நிச்சயம் அழிவின் பாதைக்கே
இட்டுச்செல்லும். இனியும் எதிர்ப்பு என்பதை காட்டாத வரையில் இந்துத்துவ
பார்ப்பானிய சிவசேனாக்கள் மனித பிணங்களின் குவியலில் ஏகபோகமாய் வாழ்ந்து
தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவார்கள் என்பதே உண்மை.
சாதியம்,மதவெறி,ஊழல்,­சுரண்டல், ஆகியவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை
நிறைவேற்றுவதுதான் உண்மையான சமூக சமத்துவத்திற்கான வழிவகுக்கும்.

Thursday, October 29, 2015

பெரியவரும்,மதுப்பழக்கமும்,,,

நரைத்தமுடி,பெருந்தாடி, நடுக்கத்தில் உடல்,ஆனால் சோர்வடையாத மனதுடன்
,அசாத்தியமான கம்பீரத்தோடு கைத்தடி ஊன்றி நடந்த வருகிறார் அந்தப்
பெரியவர் மெதுவாக,,,ஊர் ஊராய் சுற்றி கடைசியாக தஞ்சம் வெறும் காட்டுவழி
பயணத்தில் தன்னைப்போலவே காய்ந்து கிடக்கும் ஊர் அதுவென அப்போதே
உணர்ந்தார் . ஊர் மக்களின் ஒருவிதப்பார்வையில் அச்சம்
,மந்திரவாதியோ!சூனியக­்காரனோ! சூழ்ச்சி சாமியாரோ! பிச்சைக்காரனோ!
பரதேசியோ! தீவிர கடவுள் பக்தனோ! தீர்த்தக்கரை முனிவனோ! இப்படியெல்லாம்
எழுந்த கேள்விகள் அப்படியே பெரியவர் மீது கண்பார்வையாக விழுந்தது.
கேள்விகளையெல்லாம் உள்வாங்கிய பெரியவரின் முகத்தில் பிரகாசமாய் வெளிச்சம்
அனுபவம் பேசுகிறது அவரின் மீதான விமர்சனப்பார்வைகள். அதற்கிடையிலும்
யாரும் முந்திக்கொள்ளவில்லை எழுந்த ஐயத்தை வெளிப்படையாக கேட்க,,,
பூனைக்கு மணி கட்டினார் கருவேலங்காட்டு பழுத்த பழமாக தெரிந்த ஊருக்கு
மூத்தவரான மற்றுமொரு பெரியவர்,,,
யார்பெருசு நீங்க? யாரைத்தேடி வந்தீங்க?
ஒரவுக்காரக யாராது இருக்காங்ளா? அசலூருக்கு ஏதும் வழி தேட்ரீங்களா? சாமியாரா?
அவர் பங்கிற்கு அடுக்கினார் கேள்விகளை,,,

அதற்குள் கூட்டம் கூடிவிட்டது அந்தப் பெரியவருக்காக இருந்த ஆக்ஸிஜன் அளவு
கொஞ்சம் குறையுமளவுக்கு,,,கூடிய கூட்டத்தாரை நோட்டமிட்டார் பெரியவர்
அத்துணை பேரும் அழுக்குகளாய்,ஆடைகிழி­ந்து,வறுமையின்
பிரதிநிதிகளாய்,மதங்க­ளின் அவதானிப்புகளாய், வறட்சியின் வரவுகளாய்,,,
சுற்றிப்பார்த்துவிட்­டு பேசத்தொடங்குகிறார் அந்தப் பெரியவர்,,, பேச
வந்திருக்கிறேன் உங்களோடு,,,பகிர்ந்து­ கொள்ள வந்திருக்கிறேன் பட்ட
அனுபவங்களை,,, வாழ்தல் வழி இதுவெனத் தெரியும் வந்தேன் உங்களோடு வளர்த்திட
அறிவை,,,எப்படி வசதி அதோ அந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டு
பேசலாமா? பாவம்பா இந்த கைத்தடி என்எடையை எவ்வளவு நேரம்தான் அதுவும்
தாங்கும் உடலுக்குச் சுமையாக மண்ணிற்கு பாரமாக,, பேசியபடியே நடக்கலானார்
பெரியவர்.தடுத்தான் ஒருவன் பெருசு அது ஆத்தா குடியிருக்குர கோயிலு அதோ
பார்! ஆத்தா அமர்ந்திருக்குறா!
ஆத்தாளுக்கு காட்டுகின்ற கரிசனம் ஆடாமல் நிற்கக்கூட முடியாத இந்த
கிழவனுக்கு இல்லையா தம்பி! பேசிமுடிப்பதற்குள் முதற்பேச்சு தொடங்கி வைத்த
முதியவர் முந்திக்கொண்டார்,,, பெருசு களப்பா இருக்கு ஆத்தா கோயில்லேயே
ஒக்காந்து பேசட்டும் ,,, ஏ! கருப்பு பெருசுக்கு குடிக்க மோர் கொண்டுவா!
ஒருவழியாக வேப்ப மரத்தடியில் பெரியவரோடு ஊரும் கூடியிருந்தது. பேசினார்
பகிர்ந்தார் பெரியவர் தன் அனுபவங்களை அத்துணையும் முற்போக்குச்
சிந்தனைகளாக,,,கேட்க கேட்க பெரும் ஆவலாய் இருந்தமையால் ஈர்க்கப்பட்ட ஊர்
மக்கள் அப்படியே வீழ்ந்தார்கள் பெரியவரின் பேச்சால்,,,கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றங்கள் அங்கே நிகழ்ந்த வண்ணமே இருந்திருந்தது அத்துணை
சுறுசுறுப்போடு,,, மூன்றாவது நாள் தொடக்கம் வழக்கம் போல மக்களிடத்தில்
தனது சிந்தனைகளை பகிர்ந்துக்கொண்டிருந்தார் பெரியவர் . அப்போது யாரும்
எதிர்பாரா நேரத்தில் தாயொருத்தி அழுதுப் புலம்பிக்கொண்டே தன்மகனை இழுத்து
வந்து அந்த பெரியவர் முன் நின்றார்,
என்ன? என்ன ஆயிற்று?
பெரியவர் கேள்விகளுக்கு அழுதபடியே தாய் தன் குமுறலை முன்வைத்தார்,,
ஐயா இவன் எம்மொவன் தெனமும் குடிச்சிட்டு வந்து தேவயில்லாம ஒடம்ப
கெடுத்துகினு அங்கங்க சண்ட வாங்கிகினு திரியுரான் , பெத்த கடனுக்கு
சுமக்கறேன், இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லி நல்லவழியில திருத்துங்க
சாமி ஒங்களுக்கு புண்ணியமா போவும்,,, தாய் புலம்பலிருந்து மகனின் நிலையை
புரிந்துகொண்ட பெரியவர் சற்றும் யோசிக்காமல் மூன்று நாட்கள் கழித்து
வந்து சந்திக்கும்படி திருப்பி அனுப்பியிருந்தார். கூடியிருந்தோர்க்கு
ஒன்றுமே விளங்கவில்லை பெரியவரிடமே கேட்டு விட்டனர் . ஏன் மூனு நாளு
கழிச்சு வந்து பார்க்க சொல்ரீங்க என்று,,, மூன்றாம் நாள் வரும் வரையில்
காத்திருங்கள் என்றார் பெரியவர். அது பெரியவருக்கு ஆறாம்நாள் தாய்க்கு
மூன்றாம் நாள், சரியான நேரத்தில் மகனை இழுத்துவந்த தாய் பெரியவர் முன்
நிறுத்தினார். சரியாக ஒருமணி நேர அலோசனை வழங்கியதன் பின்னால் குடிகார
மகன் "இனி தான் குடிக்கப்போவதில்லை என்றும் ,மது இருக்கும் திசையையே
மறந்து விடப் போவதாகவும் உறுதியளித்துவிட்டு பெரியவரிடம் விடைபெற்று
உழைக்கச் சென்று விட்டான்.
இதற்கு ஏன் மூன்று நாட்கள்? என்கிற ஊராரின் சந்தேகத்தை உடைக்கத்
தயாரானார் பெரியவர்.
இங்கே கூடியிருப்போர்களே நான் ஏன் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன் என்று
உங்களுக்கு எழுந்த கேள்விக்கான பதில் இதுதான்,, அதுவரையில் நானும்
மதுவுக்கு அடிமையானவன்தான்,மூன்­றாவது நாள் விட்டொழித்தேன் அந்த
குடிப்பழக்கத்தை,,, மற்றவர்க்கு அறிவுரைகள் வழங்கப்படும் போது நமக்கு
நாமே திருத்திக்கொள்ளுதல் முதல்பணியாக இருக்கிறது. ஆகவேதான் அந்த
மனிதனுக்கு அறிவுரை வழங்கும் முன்னர் முதலில் என்னை நானே திருத்திக்
கொள்கிறேன். இதுதான் முற்போக்கின் சிறந்த வழி. பெரியவர் பேச்சிலேயே பல
நீதிகள் அவிழ்க்கப்பட்டு விட்டது. ஊர் மக்கள் அவரை
மதிக்கத்தொடங்கினார்கள். மற்றவரையும் மதிக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.
மதுக்கடைகள் இல்லாத ஊராக அந்த மக்கள் மாற்றியமைத்து பழைய வாழ்க்கையை
புரட்டிப் போட்டுவிட்டு புது வாழ்வியலுக்கு பயணப்பட்டு குடிமறந்து உண்மை
குடிமக்களாக வாழத் தொடங்கியிருந்தார்கள்­.

Wednesday, October 28, 2015

மரணம் தழுவிய மண்

பின்னால் தொடரும்
நிழல் மறைகிறது
பூமிதொடும்
அன்பெனும் நிஜங்களை
பார்த்து,,,

_______

இதயம் தொலைத்து
நின்றேன் இனியவளே
உனக்காக,,,
காதல் கண்களை
மூடியது காட்சிகள்
இங்கு பிழையாக,,,

_______

தன்னை மறந்து
மண்ணை நேசிக்கும்
காற்றிடம் தன் காதலை
சொல்லத் துடிக்கிறது
இயற்கை,,,

_______

நட்பை விதைக்கும்
எந்த கணங்களும்
ரணங்களானதில்லை
உண்மையான
நட்பில் விரிசல்கள்
விழுந்ததில்லை,,,

_______

பார்த்தவுடன்
பன்னீரை
தெளித்துவிடுகிறாய்
உச்சத்தில் என்
உயிர் நனைகிறது,,,

_______

தாமாக அமைவதல்ல
வாழ்க்கை
அதுவொரு தேடலின்
சிறுபகுதியாக,,,

பனிச் சாரலில்
வெடித்த இரவுகள்
சுழன்ற நிலவிடம்
சூழ்ச்சிகள்
பலிக்கவில்லை
பத்திரமாய் இறக்கிவிட
பஸ்பமாகிறது
நட்சத்திரம்,,,

என்னைக் கடந்து
செல்பவனே
வதைக்காதே
உன்பார்வையில்
விளைந்தவள் நான்
மலர் தருவாய்
என் பெண்மை
மலர்ந்திட,,,
_______

திட்டாதீர்கள்
மரங்களே என்னை
காகிதங்களை
எரிப்பவன் நானல்ல
வடிக்கிறேன் கண்ணீரை
கவிதையாக,,,

_______

எமன் வீசிய
பாசக்கயிறு
உறுதியற்றதாய்
எளிதில்,,,
எழுதிவைத்தாய்
காதலிக்கிறேன்
உன்னையென்று,,,

_______

தூவலின்
ஒளிச் சிற்பம்
நிறப்பிரிகை
நகைச்சுவையாகிறது,,,

_______

தயவு
தாட்சனைகள்
தாழிட்டிக்கொண்டன
தவறுகள்
தட்டில்
தட்சனையாக,,,

_______

நெகிழியில்
மழைத் துளி
மரணத்தை
தழுவியது
-மண்

_______

மனம்விட்டுப்
பேசுங்கள்
மனதை
விட்டுவிட்டு
பேசாதீர்கள்,,,

_______

சாரல்
கிழவியின் தளர்ந்த
உடலில்
கிழிந்த சீலை
காற்றை
நிறுத்துகிறது,,,

_______

மர்மம்
அவிழ்க்கப்படவே
இல்லை
மனதின் ஆழத்தால்
அவளே
பெண்ணாக,,,

_______

கட்டிய கணவன்
நானிருக்க
கண்டாங்கி சேலை
எதுக்கடி
ஒட்டிக்கொள்
என்னையே
ஆடையாக.,,

_______****_______

Tuesday, October 27, 2015

BJP,RSS அளவில்லாத இந்துத்துவ சர்வாதிகாரம்

இந்திய நாட்டை பசுமையாக்க நேரமில்லாமலும், வேண்டுமென்றே தவிர்த்தும்
தங்கள் "காவி" நிறத்தை கையிலெடுத்திருக்கும்­ இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக
விடமிருந்து வன்முறையை மட்டுமே எதிர்பார்க்க முடியும் அதுவும் ஒன்றரை
ஆண்டுகளில்,,, இன்னும் மூன்றரை ஆண்டுகளில் இந்தியா சமத்துவ நாடென்பதை
கைவிட்டுவிட்டு இருள் சூழ்ந்த குற்றப் பிண்ணனி நாடாக இருக்கும் என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை,அத்துணை பயங்கரவாதச் செயல்களையும் கணக்கச்சிதமாக
செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர்களாக இந்துத்துவ காவிகள் சிறந்து
விளங்குகிறார்கள். இதற்கு பெரும் சான்றாக ஜம்முவில் ஆர்எஸ்எஸ் பேரணியும்
அதையும் கூச்சமின்றி ஒளிபரப்பு செய்த இந்திய தேசிய தூர்ஷன்
தொலைக்காட்சியும் உண்மையில் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. தொடர்ந்து
எழும் இந்துத்துவ பார்ப்பானிய காவிகளின் சர்ச்சனைகளுக்குப் பின்னால்
இரண்டு விஷயங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. விஷ நாக்குகளை
பெற்றிருக்கின்ற ஆர்எஸ்எஸ் , பாஜக , மற்றும் சிவசேனாக்களிடம்
மாட்டிக்கொண்டு மரணத்தின் வாசலில் தத்தளித்துக்கொண்டிரு­க்கிறது இந்திய
சனநாயகம், எந்த மாநிலங்களை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஓலக்குரலாகவே
ஒலிக்கிறது அவ்வளவு சீக்கிரமாக இந்திய தேசியத்தை "இந்து தேசியமாக மாற்றத்
துடிக்கும் மதியிழந்தோர் ஆட்சியார்களாக இருக்கையில் எதுவும்
சாத்தியமாகலாம் சமத்துவம் தவிர்த்து,,, இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் முகப்புரையில் அதற்கே உரித்தான ஒருப் பொதுநிலை முரண்பாட்டை
களைத்து சமூக நீதியை பேணிகாத்து வந்துக்கொண்டிருக்கிற­து. என்னவெனில்
"இந்தியா ஒரு சமயசார்பற்ற சமத்துவ நாடு, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட
நாடு"
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அனைத்து சமூக
நீதிகளையும் அழித்து இந்தியா ஒரு இந்துக்கள் நாடு? என்கிற பாணியினை
புகுத்த "பொது சிவில் சட்டம்" கொண்டுவரும் முனைப்போடுதான் இந்துத்துவ
பார்ப்பானிய ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் இதற்குச் சான்றாக ஆர்எஸ்எஸ்
சங்பரிவார ஆதரவுடன் ஆட்சியமைத்த பாஜக மோடி அரசின் ஒன்றரை ஆண்டுகால
ஆட்சியில் இந்தியாவின் அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ஒன்றரை
ஆண்டுகளில் தலித் , இசுலாமிய , பழங்குடி மக்களின் மீதான தாக்குதல்களும் ,
அவர்களை பகிரங்கமாக எதிர்க்கும் விதமான கருத்துக்களும், அதனை
நியாயப்படுத்தி வெளியிடும் செய்தி ஊடகங்களும் சமத்துவத்திற்கு எதிரான
மிகப்பெரும் சவாலை விடுக்கிறது. இந்தியாவில் தலித்துகளை தாக்கி அவர்களின்
உரிமையினை பறித்து ஒட்டுமொத்தமாக அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்த
முற்படும் இந்துத்துவ பார்ப்பானிய பாஜக வின் உச்சக்கட்ட நடவடிக்கைதான்
ஹரியானாவில் சாதிவெறியர்களால் கொளுத்தப்பட்ட பச்சிளம் தலித் குழந்தைகளை
"நாய்கள்" எனும் விதமாக கருத்துகளை விதைக்கிறது. போலவே காவிக்கு பச்சை
ஆகாதெனும் கீழ்மட்டச் சிந்தனையின் விளைவாக தாத்ரி இசுலாமியர் ஒருவரை
மாட்டிறைச்சி சமைத்து உண்ணதாக குற்றம் சுமத்தி அடித்துக் கொலைச் செய்ய
வைத்திருக்கிறது. மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வையும்
கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த பார்ப்பானிய ஆணாதிக்க ஆட்சியதிகாரம்.

உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி "உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு
பயப்படும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவிற்கு ஏழாவது இடம்" இதுதான்
மோடி அரசின் டிஜிட்டல் மற்றும் கிளீன் இந்தியா திட்டமென்றால் இந்தியர்கள்
நம்பித்தான் ஆக வேண்டும். இட ஒதுக்கீட்டில் மூக்கை நுழைத்தல்,
எழுத்தாளர்கள் படுகொலைகள், விவசாய்களை வசைபாடுதல் , தலித் விரோத
போக்குகள், சிறுபான்மை மக்களை இழிவாக நடத்துதல், மாட்டிறைச்சி உணவில்
இந்துத்துவ வெறியை காட்டுதல் , இந்தி மொழி திணிப்பு, பெண்ணடிமையை
ஆதரித்தல், சாதியாதிக்கத்தை புகுத்துதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகள்
மூலம் மக்களிடம் சாதிமத இனவெறியைத் தூண்டி அதன் மூலம் இந்துத்துவத்தை
வளர்த்தெடுப்பது மட்டுமல்லாது மேலும் முக்கியமான இரண்டு காரணங்களை
முன்வைத்தே மூன்று இந்துத்துவ பார்ப்பானிய அதிகாரங்கள் செயல்படுகின்றன.
முதலாவது காரணம்: தங்களது இந்துத்துவ பாசிச ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு
விட்டனர் என்பதை உறுதி செய்வதற்காகவும்,பாஜக­ா நல்லாட்சி புரிகிறது
என்பதனை சுட்டிக்காட்டவும், இந்தியா இந்துக்கள் நாடாக இருக்க
விரும்புகிறது என்பதனை எடுத்துரைக்கவும் "பீகார் தேர்தல்" அவர்களுக்கு
தேவைப்படுகிறது. ஆட்சியதிகாரம் பிடித்து தனது ஆட்சியின் தவறுகளை சரிசெய்ய
பாஜக முயல்கிறது. இரண்டாவது காரணம் : பருப்பு மற்றும் அத்யாவசிய உணவுப்
பற்றாக்குறை,பதுக்கல்­கள்,மற்றும் விலையுயர்வை மறைத்து மக்களை தங்களது
ஆட்சிக்கு ஆதராவாக திசைதிருப்பதல் மற்றும் சிந்திக்க விடாமல் தடுத்தல்.
போலவே "வியாபம்" எனும் மிகப் பெரும் ஊழலை மறைத்து அதற்கும் ஆட்சிபுரியும்
பாஜகவிற்கும் எவ்விதச் சம்மதமும் இல்லை என்கிற மாயத்தோற்றத்தை
உறுவாக்குதல். இவ்விரு காரணங்களையும் முன்வைத்தே ஆளும் பாஜக அரசு பாசிசப்
போக்கை கையிலெடுத்திருக்கிறத­ு என்பதே உண்மையாக இருக்கிறது. இதற்கு
ஏற்றார்போல் அதன் பிரதான எதிர்கட்சியான காங்கரஸும்
செயல்பட்டுக்கொண்டிரு­க்கிறது. முன்னாள் காங்கரஸ் நிதி அமைச்சரான பிரணாப்
முகர்ஜி, தன்னை எவ்வித அரசியல் சார்புடைய இந்தியக் குடிமாகனாக காட்டிக்
கொள்வாரேயானால் இந்தியக் குடியரசுத் தலைவர் என்கிற முறையில்
அரங்கேற்றப்படும் அனைத்துவிதமான சமூகச் சீர்கேடுகளை முன்வைத்து
இதுவரையில் ஏன் எந்தவொரு கண்டனமோ,அறிக்கையோ,எச­்சரிக்கையோ விடுக்கவில்லை
எனும் கேள்விக்கு எந்த அதிகாரத்தாலும் பதில் சொல்லவே முடியாது.
கடைசிவரையில் மக்களும் ஊமையாக,,, மன்னனும் வசதியாக,,,
வாழ்ந்தே பழகிவிட்டோம் இந்திய திருநாட்டின் தலைவிதி அதுவென தலையெழுத்தை
மாற்ற நாமும் தயாரற்று இருந்து விட்டோம்.

சமூக வலைதளங்களில் "காதல் கவிதைகள்" சாத்தியமா சமத்துவம்?

சமூகத்தின் மிகப்பெரும் சாபமாக மனிதர்களிடத்தில் சவால்விடும் ஒரு
மூர்க்கச் சீர்கேடாக இருக்கும் சாதிமத வெறியின் பின்புலத்தை
ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் ரத்தம் குடிக்கும் அட்டைப் புழுக்களாகவே
இருந்து வந்திருக்கிறது. எங்கும் சாதி எதிலும் சாதி, எல்லாவற்றிலும்
தலமையாகிறது மதம். சாதிமத அமைப்புகளால் சீரழிந்து கிடப்பது
சமூகப்பொதுவெளி மட்டுமல்ல சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு சாதிமத
வெறியினை ஊட்டியே வந்திருக்கின்றன.
பேஸ்புக்,ட்விட்டர்,ஜ­ீபிளஸ்,பிளாக்கர்,வேர்ட்பிரஸ்,என நீண்டுக்கொண்டே
போகும் சமூக வலைதள பட்டியல்களில் அனேக மக்கள் தங்களை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.­ அவரவர் மனதில் தோன்றியவற்றை பதிவுகளாக ஏற்றி
காரசாரமான விவாதங்களும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. அதில்
உண்மையும்,பொய்யும் கலந்தே இருக்கும். அப்படியான பதிவுகளில் சில நல்லப்
பதிவுகள் கவனிப்பாரற்று கிடப்பது தவிர்க்க முடியாதொன்றாக இருக்கிறது.
அந்த கவனிப்பாரற்று கிடந்த முகபுத்தக நண்பரின் பதிவு என்னை மிகநீண்ட
நேரமாக சிந்திக்கவைத்து அதன் உண்மை நிலையை அறியும் ஆவலைத் தூண்டியது.
ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்தமையால் அதன்மையத்தில் எழுத்துக்களை கொண்டு
கருத்துக்களை பதிவு செய்யவது எனக்கு எளிமையாக இருந்தாலும், இன்னமும்
சிந்திக்க வைக்கிறது அந்த முகபுத்தக நண்பர் இட்ட பதிவு,

"சமூக வலைதளங்களில் இடும் "காதல் கவிதைகள்" மூலம்
உண்மையில் சாதிமதற்ற சமூகத்து உறவை தக்க வைத்துக்கொள்கிறதா?"

என்று கேட்டிருந்தார் அந்த நண்பர், மிக நீண்ட சிந்தனையில் என்னை
ஆட்படுத்திவிட்டது அவரின் கேள்வி. இது சாத்தியமா? எனும் விவாதம் யாரும்
முன்வைக்கவில்லை நானும் அதில் அடங்குவேன் வெறும் லைக்கை மட்டும்
இட்டுவிட்டு,,, பதிவை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் .
அதன் ஆழத்தன்மையை அவ்வளவு எளிதாக கடந்துபோக முடியாது.காரணம் அதில்
கவிதையும் காதலும் கலந்திருக்கிறது.
உண்மையில் காதல் கவிதைகளை எழுதுவதன் மூலம் சமூக வலைதளங்களில் நிலவும்
சாதிமத உணர்வை அகற்ற முடியுமா? என்றால் அதற்கான பதில் இல்லை என்பேன் நான்
எனது அனுபவத்தில்,,, காரணம் பொதுதளத்தில் எந்தளவிற்கு சாதிமத வெறியுணர்வு
மண்டியிருக்கிறதோ அதைவிட மேலாக சமூக வலைதளங்களை அது ஆக்கிரமித்துள்ளது
என்றே எடுத்துக்கொள்ளலாம். முகபுத்தகத்தை பொருத்தவரையில் பல்வேறு சாதிய
வகுப்புப் பிரிவுகளுக்கும் , ஒவ்வொரு மதப்பிரிவுகளுக்கும் விருப்பப்
பக்கங்கள் (like page) உண்டு, குழுமங்கள் உண்டு. ஒரு நபர் புதிதாக
முகபுத்தக கணக்கொன்றை தொடங்குகிறார் என்றால் அவர் முதலில் தேடுவது
தான்சார்ந்த சாதிமத பற்றாளர்களையும்,அதன்­ குழுமங்களையும்,அதன் விருப்பப்
பக்கங்களையும் மட்டுந்தான் அதைத்தாண்டி அவர் வேறெதையும் தேடுவதல்லை
என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. இது பெரும்பான்மையாக இருக்கும்
மனநிலை உணர்வுப் போக்காகும். சமூகத்தையும்,சமூக அவலங்களை பற்றி
பதிவிடுதல்,விவாதித்தல்,முற்போக்குச் சிந்தனை விதைத்தல், என
பங்கெடுப்போர் இங்கு "சிலர்" என்கிற எண்ணிக்கையில் மட்டுமே
இருக்கிறார்கள். காதல் கவிதைகள் இங்கே கவனிப்பாரற்ற நிலையில் தான்
இன்னமும் வலம்வந்துக்கொண்டிருக­்கிறது. அதையும் மீறி ஒருசில காதல்
கவிதைகள் புகழடைகிறது என்றால் அந்தக் கவிதைகளின் சொந்தக்காரர் சாதிமத
எதிர்ப்பாளராக தம்மை முன்னிருத்தாத நபராகத்தான் இருப்பார். ஒருவேளை தம்மை
முற்போக்காளராக முன்னிருத்தும் முகநூல் பயணாளர் காதல் கவிதைகள்
எழுதும்போது அதில் பிற்போக்கு எதிர்ப்பு வினையை செயல்படுத்த முடியாத
கையறு நிலையிலேயே இருப்பார் இது முகநூலில் காலங்காலமாக இருக்கும்
வறையறையாகவே தொடர்கிறது. நான் ஹைக்கூ எனும் ஜென்கவிதைகளால்
ஈர்க்கப்பட்டவன். அந்த நண்பரின் ஹைக்கூ கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவரின்
எழுத்துக்களை நேசிக்கத் தொடங்கினேன். ஒருநாளைக்கு குறைந்தது ஐந்து
ஹைக்கூக்களையாவது எழுவார் அதில் இரண்டு ஹைக்கூ கவிதைகளையாவது
முற்போக்குச் சிந்தனையை விதைப்பார். ஆனால் மற்ற கவிதைகள் பெறும் வரவேற்பை
விட குறிப்பிட்ட அந்த முற்போக்கு கருத்து கொண்ட ஹைக்கூ கவிதைகள் அதிகம்
பகிராமலும் அதிகம் விருப்பமளிக்காமல் மிகச்சாதாரணமாய் கடந்துபோகும் . இது
ஹைக்கூ கவிஞன் கி சார்லஸ் அவர்களின் பதிவுகளில் மட்டுமல்ல அனேக
கவிஞர்களின் காதல் கவிதைகளிலும் இதேநிலைதான். இங்கே கவிஞர்களை கூட சாதிமத
வர்க்க முரண்பாட்டோடு பார்க்கப்படுவதுதான் வேதனையான ஒன்று.
கடந்த 2014 அன்று அருமை நண்பர் ஹைக்கூ கவிஞன் கி சார்லஸ் அவர்கள் உலகை
விட்டு பிறிந்தபோது அவரோடு சேர்ந்து காதல் கவிதைகளும் விடைபெற்றுக்கொண்டு
விட்டதை எண்ணி இன்றளவும் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இது
சமூகத்தின் பிரதிபிம்பமாய் இன்றளவும் தொடர்ந்தே இருக்கிறது. ஆனாலும்
பின்வாங்குதல் மனிதர்க்கு அழகில்லைதானே! எழுதிக்கொண்டேதான்
இருக்கிறார்கள் கவிஞர்கள் காதல் கவிதைகளை ! என்றேனும் ஒருநாள்
கவனிக்கப்பட்டு சாதிமத பேதங்கள் கண்ணாடிபோல் உடையும் . அன்றைய நாள்
வருகின்றபோது காதல் கவிதைகள் சாதிமத பேதங்களை சவக்குழியில் தள்ளி
சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்தும் எனும் நம்பிக்கையோடு,,, தொடர்ந்து
எழுதப்படும் சமூக வலைதளங்களில் காதல் கவிதைகள்.

Saturday, October 24, 2015

குலச்சாமிகள்

ஒன்று கூடினார்கள் அவர்களோர்
அமைப்பாக

தீரன் சின்னமலையையும்
ராமசாமி படையாச்சியையும்
துணைக்கழைத்துக்கொண்டு,,,

கொண்டாடினார்கள்
வீரப்பனையும்
பிரபாகரனையும்
அவர்களுக்கே உரித்தான தலைவர்களென்று,,,

மனுவின் கட்டளைப்படி
சேரிகளை அடித்து
நொறுக்கி ஊருக்கு மட்டுமே உரிமையென
உள்ளே இருக்கும்
சாதியுணர்வுடன் வீரப்பனுக்கும் பிரபாகரனுக்கும்
எழுப்பினார்கள்
சிலையை
குலதெய்வ வழிபாட்டு
தடங்களில்,,,

கொளுத்தப்பட்ட குடிசைகள்,எரிக்கப்பட்ட தேர்கள்,அழிக்கப்பட்ட
கற்புகள்,வீசப்பட்ட கத்திகள்,அறுக்கப்பட்ட கழுத்துகள் எல்லாவற்றையும்
இருவருக்கும் படையலாக்கி ஊரே
வணங்கியது அந்த
குலதெய்வத்தை

முன்னோர்கள் படைத்தார்களாம்
மூத்திரம் விடக்கூட
பார்ப்பானியனின்
காலில் விழுந்தோர்கள்

வேண்டாமென அதிகாரம் தடுத்து அகற்றினார்கள்
அவ்விரு சிலைகளையும்

கிளர்ந்து எழுந்தார்கள்
குடிசைகளையும்
கோயில்தேரை கொளுத்தியவர்களும்

கூடே இணைந்தார்கள்
கோகுல்ராஜ் கழுத்தை
அறுத்தவர்களும்,,,

ஆயுதங்கள் கைகளில்
ஏந்தி வேடிக்கை பார்க்கும் எல்லைச்சாமிகள்
கற்சிலைகளும் கண்ணை குருடாக்கும்
குலச்சாமிகளும்
கும்மியடிக்கிறதிங்கே

குருதி வாடை காற்றில்
கலந்து கல்லறைகள்
கருப்புக் கரிகளாக,,,

வீரப்பன் பிரபாகரன்
அகற்றப்பட்டார்களாம்
எங்கோ ஒலிக்கிறது
எதிர்ப்பு அலைகள்

அதன் வீச்சம் அறியாமையின்
தோற்றம்

எப்போது தாக்கப்படுவோம்
எல்லைச்சாமிகளின்
துணையோடு
பயத்தில் உறைந்துபோன
பாமரனின் தோற்றம்
வெறும் எலும்புக்கூடுகளாய்

பொறுக்கி எடுக்கிறார்கள்
அதையும்
வீரம் வையகம்
பரவ வேண்டுமாம்

வேட்டிகளில் படிந்திருக்கும் ரத்தக்கறைகள்
அறிந்திருக்கவில்லை
எதற்கு இவர்கள்
அடித்துக் கொ(ல்)ள்கிறார்கள்
என்று

குலச்சாமிகள் கும்மியடிக்கிறார்கள்
அடித்துக் கொ(ல்)ள்ளுங்கள்
அதுதான் தேவை
என்று ,,,

யாரோ ஒருவன் -ஹைக்கூ

நீயெனக்கு துணைவியானால்
ஏற்பேன்
தலைவிதியானாலும்
காதலின் முதல்
விதியதுவென,,,

______

மீளத் துடிக்கிறேன்
மங்கையவள்
பார்வையிலிருந்து,,,
மனதோடு பேசுவது நீயா?
உன் விழிகளா?

______

யாரோ ஒருவனிடம்
அவள் சிரித்துப் பேசுகின்ற
பொழுதுகளில் ஏற்றுக்கொண்டு
ரசிக்கும் கபடமற்ற
மனதால் மெய்பிக்கப்படுகிறது
அவனின் ஆண்மை,,,

______

இரவில்
தூங்காத கண்களுடனே
நான்
உன்னோடு உலாவரத்
துடிக்கிறேன் நிலவுக்கு
துணையான
விண்மீன்களை போலவே,,,

______

அன்போடு அழைக்கிறேன்
அருகில் வரவேண்டும்
நீயொரு காவியத் தலைவியாக
தலைவனுக்கு காதலியாக,,,

______

நிச்சயம்
என்மன அழுக்கை
காட்டுவதில்லை கண்ணாடி
துடைக்க வேண்டியது
என்மன
அழுக்கையே அன்றி
கண்ணாடியை அல்லவே,,,

______

மேகம் வெளுத்து
மோகம் முளைத்து
முனகலோசை கூட்டி விடுகிறது
காற்று
ஸ்பரிஸத்தின் உச்சத்தில்
அது எல்லை கடக்கிறது
மண்வாசனை,,,

______

ஒரு மகானுக்கு
பணிவிடை செய்வதிலேனும்
இவ்வுலகினை யாசித்திருந்திருப்பேன்
புத்தன் மனைவியின்
புலம்பலின்னும்
அப்படியே,,,

______

உனக்காக
ஆகாயம் தனது எல்லைகளை
அகலப்படுத்துகிறது
அன்பிற்குரியவளே,,,

______

அந்த விதைகளை
முளைக்க வைப்பதே
காய்ந்து போன சருகுகள்தானே
காயங்களே
மனதிற்கு மருந்தாகலாம்
சில நேரங்களில்,,,

______

பிடித்திருக்கிறது உன் மௌனம்
எனை விழுங்கி
தின்பதனால்,,,

______

திருடன் போலிஸ்
கையில் கள்ளச்சாவி
அனாதையாய்
நீதி

______

யாரிடமும் பேசாமலிருக்கிறது
பட்டாம்பூச்சி
உன் தேனொழுகும் குரலால்
கவர்ந்த பின்னாலே,,,

______

மாடிகளில்
காகித கப்பல்
ஏழையின் வீட்டுக்கூரையில்
ஒழுகும் மழைத்துளி,,,

______

"ம்" எனும் உச்சரிப்பில்
ஒராயிரம் கவிதைகள் எழுதிவிடுகிறார்கள்
காதலர்கள்
கைபேசி உரையாடலில்,,,

______

என் தொலைந்துபோன தேசத்தில்
துருபிடித்த கத்திகள்
மட்டும் கூடிச் சிரிக்கிறது
வெறித்தனமான இனவழிப்பால்,,,
இன்னமும் இருளில் என்
ஈழதேசம்,,,

______

உன்னைவிட பிரகாசமானது
என்னவளின் முகமென்றேன்
நிலவிடம்,,,
என் கனவை கடன்
கேட்டு தினமும்
துன்புறுத்தும் ருசிகண்ட
பூனையாக மாறிவிட்ட
நிலவு,,,

______

சிறுகச் சிறுக
உயிரை துறக்கிறேன்
காற்று வெளியில்
நீயொரு கானல்நீராய்,,,

______

வண்டல் மணல்
லாரிகளின் வலுக்கட்டாய
புணர்வு
வலியில் ஆறு,,,

______

எரியாத விளக்குகள்
இருளில் அறிவு
மனப்பாடக் கல்வி,,,

______

கழுதையின் சிரிப்பு
பொதி சுமக்கும்
மெட்ரிகுலேஷன் பிள்ளைகள்
வலிக்கிறது முதுகு,,,

______

இதுதான் நடக்குமென்றால்
தடுக்காதீர்கள் அழட்டும்
பனிக்கட்டி
எரித்த
குழந்தைகளை சுமந்தவாரே,,,

______

உதிர்ந்த இலைகளில்
எண்ணி பார்க்கிறேன்
ரேகைகளை
ஏழையின் உடம்பாகிறது சருகுகள்,,,

______

மழை இரவு
மிதிக்கிறேன் நிலவை
தோண்டிய குழியில்
நான்,,,

______****______

"எங்கே செல்கிறது தலித்தியம்"

"ஆதிக்கம்" எந்த வடிவில் வந்தாலும் அது
கண்டனத்திற்குரியதாகவ­ும்,எதிர்க்க வேண்டியதாகவும் பதிவு செய்யப்பட
வேண்டும். போராட்ட முறைகளின் படி "ஆதிக்கம்" அழிக்கப்பட வேண்டிய ஒன்றாக
களத்தில் நிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் "மதமும் மதம்சார்ந்த சாதி
ஆதிக்கத்தையும்" எதிர்ப்பதற்கு இடைவிடாது செயல்பட வேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு எதிர்ப்பும் இருக்க வேண்டிம் . இதில் வடிவங்களை மாற்றிக்கொண்டு
"தலித்துகள்" தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வார்களேயானால் அவர்களும்
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்க சாதி வெறியர்களாகவே நிச்சயம் செய்திட்டு
எதிர்க்கப்பட வேண்டும். இதில் விலக்குகள் தேவையற்றது இனியும்
தலித்தியத்தில் போலி சித்தாந்தவாதிகள் நுழைவார்களேயானால்
பொறுத்துக்கொள்ளாது எதிர்ப்பை பதிவு செய்வதே உண்மை "தலித்தியம்" ஆகும்.

இதுபோன்றதொரு சம்பவம் இனியும் நிகழ்த்தப்படுமேயானால­் அது தலித்தியத்தை
பொய்யாக்கிவிடும் என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது. ஏற்கனவே விழுப்புரம்
மாவட்டம் கண்டமங்களம் எனும் கிராமத்தில் அருந்ததிய இளைஞன் பறையர் பெண்ணை
காதலித்து திருமணம் செய்ததற்காக கொலை செய்த சம்பவம் தலித்தியத்தின்
சாபக்கேடாக இருந்திருக்கிறது. தற்போது இன்னொரு சம்பவம்
நிகழ்ந்திருக்கிறதென்­றால் தலித்தியம் பார்ப்பானிய இந்துத்துவத்தின்
பிடியில் சிக்கிக்கொண்டிருக்கி­றது என்பதை உறுதியாக நமக்கு
உணர்த்துகிறது.

21.10.15 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எனும் கிராமத்தில்
பாலமுருகன் என்கிற அருந்ததிய இளைஞன் நதியா என்கிற பறையர் பெண்ணை
காதலித்தமையால் திருமணம் செய்து வைத்திருக்கிறார் சக தலித்திய இயக்க
மாவட்ட நிர்வாகியான போஸ் என்பவர்...
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்க ரீதியாகவும்,கட்சி ரீதியாகவும்
இருக்கும் விசிக,புரட்சிபாரதம்,­இன்னபிற,,, நிர்வாகிகள் ஒன்றிணைந்து போஸ்
என்பவரை மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­். "எங்கே செல்கிறது
தலித்தியம்" இந்த கேள்விகளுக்காக நிச்சயம் அவர்கள் குற்றவாளிகளாக
கூண்டில் ஏறியே ஆக வேண்டும். முதலில் தலித்தின மக்களுக்குள்ளேயே நடக்கும்
திருமணங்கள் சாதிமறுப்பு அல்லது கலப்புத் திருமணத்தில்
உள்ளடங்காது.ஏனெனில் பார்ப்பான இந்துமத வர்ணாசிரம சாதியப்
படிநிலைகளின்படி அனைவரும் சூத்திரர்கள் என்பதைத் தாண்டி பஞ்சமர்கள் எனும்
பதத்தில் அடங்குவர். இதில் எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு ஆதிக்கச்
சாதிவெறி? அப்படியான சூழ்நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோமானால்
கோகுல்ராஜ்,இளவரசன் படுகொலைகளை எதிர்க்கத் தகுதியற்றவர்களாக
தலித்தியவாதிகள் கண்களுக்குத் தெரிகிறார்கள். எந்த வகையில் நீங்கள்
புரட்சியாளர் அம்பேத்கரையும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசரையும், ஐயா
அயோத்திதாசரையும்,ஐயா­ ஜோதி பாபுலேவையும் ஏற்றக்கொண்டவர்களாய்
காட்டிக்கொண்டிருக்கி­றீர்கள். மெய்பிக்க முடியுமா உங்களால்? அப்படி
மெய்பித்திருந்தால் இது போன்றதொரு சம்பவம் நடந்திருக்குமா,, பார்ப்பானிய
இந்துத்துவ சாதி வர்ணத்தின் அடிப்படையிலான ஆதிக்கப் படிநிலைகளை
தலித்தியம் "பறையர்-அருந்ததியர் மோதலாக காட்டி சக தலித்திய மக்களை
அடிமைபடுத்த நினைக்குமேயானால் இதனை "போலிதலித்தியம்" என்றுச் சொல்வதைத்
தவிர வேறெதும் தோன்றிட வில்லை , காலங்காலமாக ஆதிக்கர்களால்
இழிதொழிலுக்காக படைக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள் என்று பரப்பி
சாதியாதிக்கத்தை அவர்களிடம் செலுத்தி மலமள்ளுதல்,செருப்பு தைத்தல், கூடை
பின்னுதல்,கால்நடைகளி­ன் கழிவுகளை சுத்தப்படுத்துதல் இன்ன பிற,,,
பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி வாழ்நாள் முழுவதையும் அவர்களின் உழைப்பை
சுரண்டி எடுக்கும் அதே மனநிலையில் பறையர்கள் இருப்பார்களேயானால் சக
தலித்துகள் நிச்சயம் சாதிவெறிபிடித்த மிருகங்களே,,,இதையா தலித்தியம்
என்கிறீர்கள் அப்படியெனில் தலித்தியம் செத்துவிட்டதாக எடுத்துக்கொள்ள
வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். தற்போதுள்ள சூழலில் தலித்தின
மக்களின் ஒற்றுமையின்மை காரணமாக இந்துத்துவ பார்ப்பான ஆர் எஸ் எஸ்
மற்றும் பாஜக ஒன்றுகூடி நிகழ்த்திய ஹரியானா தலித் குழந்தைகள்
எரிப்பு,கர்நாடக இளம் தலித் எழுத்தாளர் தாக்குதல், தமிழகம் சேஷ
சமுத்திரம் தலித் குடிசைகள் எரிப்பு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்
தலித் பெண்கள் கற்பழிப்பு இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டேப் போகிறது
இதில் தலித்தினத்திற்குள்ளே­யே நடந்த இந்த சம்பவத்தையும் இணைக்க
வைத்துவிட்டதுதான் தலித்தியமெனில் "இசங்கள்" தேவையில்லையென கொன்றுவிடுவதே
நல்லது. விசிக, புரட்சிபாரதம் மற்ற இதர கட்சிகளும் தலித் இயக்கங்களும்
இச்சமூக அவலத்திற்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட போஸ் மற்றும் திருமண
தம்பதிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளித்து,கட்சி நிர்வாகிகளின்
இக்கேவல மான அணுகுமுறைகளை கண்டுத்தும் , பொறுப்புகளை பறித்தும், தலித்தின
ஒற்றுமையினை உறுதிபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு
அம்பேத்கரியல்,மார்க்­ஸியல்,பெரியாரியல் போன்ற முற்போக்கு
சிந்தனையார்களின் உழைப்பை களங்கப்படுத்தாமல் கல்வியை முதலில் புகுத்தப்பட
வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

Thursday, October 22, 2015

முடிந்தவரை முரண்களை ஒதுக்கி வைப்போம்

பிஜெபி,ஆர்எஸ்எஸ்,சிவசேனா இவை மூன்றையும் ஒன்றோடொன்று வேறுபடுத்தி
பார்ப்பதென்பது முட்டாள் தனம் , மூன்றுமே சாதிய மனுவியத்தின் அங்கமாக
விளங்குகின்றது. இவற்றுக்கிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு
அவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறது என்றால் அதன் நோக்கம்
ஒன்றேதான்,வெளியில் முரண்பட்டதுபோல் காட்டிக் கொண்டால்தான்
சாதியத்தையும்,சாதியின் மூலக்கூறான மதத்தையும் தக்கவைத்து
வளர்ச்சியையும்,அதிகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது.
அதே வேளையில் தங்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் பார்த்தும்
கொள்கிறது. இதில் நான்காவதாக காங்ரஸையும் இணைத்துக் கொள்ளலாம் . காரணம்
எதையும் மறைமுகமாக ஆதரிப்பதில் காங்ரஸும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.
இங்கே எந்த முற்போக்கு சித்தாந்தமும் அழிக்க வல்ல சக்தியாக
உறுவாக்கப்படவில்லை என்பதே இந்திய சனநாயத்திற்கு கேள்விக்குறியாக
இருக்கிறது. அதற்கான தடைகளை உடைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முற்போக்கு
சிந்தாந்தத்திற்குள்ளும் இருக்கும் முரண்பாடுகளை களையெடுக்க வேண்டும்.
கம்யூனிஸம் பெரியாரியத்தை தூற்றுவது, தமிழ்த்தேசியம் திராவிடத்தை
தூற்றுவது, திராவிடம் மற்ற இரண்டையும் தூற்றுவது, அனைத்துமே
அம்பேத்கரியலை ஒதுக்குவதென நமக்குள்ளேயே இயக்க ரீதியிலான முரண்பாடுகளை
கொண்டிருப்பதன் காரணமாக மட்டுமே ஒவ்வொரு சமூக அவலங்களிலும் இங்கே ஒரு
பிரிவினை ஏற்பட்டு இதற்கு இவர்கள் மட்டுமே போராட வேண்டும் என பொதுபுத்தி
உறுவாகிப்போய், பொதுவான பிரச்சனைகளை ஒரு கட்டுண்ட சிறைக்குள் நாமாகவே
தள்ளிவிடுகின்றோம் . இது சாதிமதவியளார்களுக்குச் சாதகமாகி விடுகிறது.
கொள்கை மற்றும் இயக்க ரீதியிலான கோட்பாடுகளின் மத்தியில் வெவ்வேறான
கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் பொதுவான சமூக அவலங்களை
முன்னெடுக்கையில் ஒன்றாகப் பாடுபடுதலை புரட்சிக்குத் தேவையான வித்தாகும்.
திராவிடத்துக்குள்ளும்,தமிழ்த்தேசியத்துக்குள்ளும்,பொதுவுடமைக்குள்ளும்,மெல்ல
மெல்ல வலதுசாரியம் நுழைவதை கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. காரணம் இங்கே
இயக்கங்களின் வறையறைகள் ஒரு கட்டுக்குள் இல்லை என்பதே நிதர்சனம். இது
கசப்பாக இருக்கலாம் ஆனால் கசப்பான மருந்துதான் நோய்க்கான மருந்தாகிறது.
இடதுசாரியம் ஓர் ஆரோக்கியமான சூழலை பெறவேண்டுமெனில் முதலில் செய்ய
வேண்டியது போட்டியை உறுவாக்குவது. போட்டி என்பது பொறாமையால் அல்லாமல்
பொறியாக மாறிட வேண்டும். ஒவ்வொரு சமூக அவலங்களுக்குள்ளும் இருக்கும்
அநீதிகளை வெளிக்கொணர முற்போக்கு இடதுசாரியங்களுக்குள்ளே போட்டி இருத்தல்
அவசியமாகிறது. யார் முதலில் சமூக அவலங்களை வெளிக் கொணர்கிறார்களோ அவர்கள்
மற்ற முற்போக்கு இடதுசாரியங்களின் உழைப்பையும்,கஷ்டங்களையும் எடுத்துக்
கூறி நன்றி பாராட்டுதல் வேண்டும். என்னாலான சிந்தனை இதுவாகத்தான்
இருக்கிறது.

அழைப்பு

மதி மயக்கத்துடனே
அந்த மாலை நேரத்தை
மனதில் அடைத்து
விட்டு,,,

எனை
திரும்பத் திரும்ப
அழைக்கும் வானத்தின்
சிவந்த முகத்திடம்
கேட்கிறேன்,,,

எங்கே அழைக்கிறாய்
எதற்காக அழைக்கிறாய்
என்று,,,

அவ்வானம் கக்கிய
மெய்யான
செங்கதிர்கள்
மேய்ந்துவிட பார்க்கிறது
என்னை,,,

உணர்ந்தும்
விடையேதும்
வராதமுன்னே வீட்டிடம் விடுதலை பெற்று
அழைப்பு வந்த
திசைநோக்கி
நடக்கிறேன்
என் மயக்கம்
அப்படியே,,,

போகப் போக
முடிவற்ற தேடலுக்கும்
முடிவுற்ற வாழ்வுக்கும்
இடையில் சிக்கிய
ஒரு மரத்தின்
வேர்களை வந்து முட்டியது
அந்த அழைப்பு,,,

நின்ற இடத்திலேயே
தெளிவுற்றவனாய்
ஒரு முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,

என்னைப் போல
அதுவும் தனித்து விடப்பட்ட
தனிமரமென்பதால்
அல்ல,,,

சேர்ந்துவிட்டோம்
நாங்கள் இனி
தனிமையை உணராதவர்கள்
என்பதற்காக,,,

ஒரு
முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,

Monday, October 19, 2015

பேசும் இதயம் 1

உதிர்ந்து எழுகிறது
ஒவ்வொரு மலரும்
என்னிதழ் முத்தம்
அவளிடத்தில்,,,

____

முத்தங்கள் மொத்தமாய்
கொட்டிவிட
கானக் குயில்கள்
தேடிப் பிடிக்கிறது
நம் காதலை,,,

____

தமிழ் விளையாடும்
சோலையில்
நம் உயிர் உறவாடுகிறது
வளர்த்த பெருமை
மண்ணுக்கும், மனதையாளும்
மொழிக்கும்,,,

____

தூரல் போடுகிறது
தூரமாய் நிற்காதே
அருகில் வா!
மழையோடும்
மழலை மொழியோடும்
நனைந்தே போகலாம்
நாம் காதலை
சுவாசிக்கப் பிறந்தவர்கள்,,,

_____

நேற்றே
கானல் நீரானேன்
இன்றெனை
அழைக்கிறாயே!
சலனமில்லாத
நம் சந்திப்புகளை
மறந்திருக்குமா
இந்த மேகம்,,,

_____

காதலிக்கத் தெரியவில்லை
எனக்கு
காற்றோடு நான்
கரைந்து போகிறேன்
காயங்கள் மறைவதாயில்லை,,,

_____

இடம் பொருளறிந்து
நம் எல்லைகள்
மீறாது
மீண்டும் பிறப்போம்
காதலின் குழந்தையாய்,,,

_____

வயலின் கடைசி
விளிம்பில்
அவன் தேடுவது
உழைப்பின் பலனை
இறந்த மண்ணுக்கு
மீண்டும் உயிர்தருகிறான்
உழவன் அவனாதலால்,,,

_____

முந்தானை எட்டாமல்
முழங்கையால்
பிடித்திருக்கிற ாள்
புடவையை
என்மீது பார்வையை
தெளித்தபடியே,,,

_____

காந்தியின் சிரிப்புக்குக்கீழ்
இறுக்கமாய் ஒரு
நீதி,,,

_____

பாவம்,அவள்
கற்பித்து விட்டார்கள்
கலியாணம் முடிந்த
கையோடு மறந்துவிடு தாயை என்று,,,

_____

பதவி வேண்டுமெனில்
பகுத்தறிவை அடகு
வைக்கலாம்
ஆசைகள் வெறியாக
அடிமைகள் இங்கே
பரவலாக,,,

_____

கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் பேசுங்கள்
மௌனம் தாமாக கட்டிக்கொண்ட
காதலுக்கான
வரமாகையால்,,,

_____

கற்பனையில்
மிதக்கிறேன்
உண்மையில்
எனை இயக்குவது
நீயென அறியாமல்,,,
புரியாத இன்பம்
பருகுவதும்
பேரானந்தமே,,,

_____

ஊர்க் குருவிகளின்
ஒப்பாரி மழையாக
நாளை
திங்கட்கிழமை,,,

_____

ஆயிரத்தில் ஒருவனாக
இருப்பதை விடவும்
அனைவருக்கும்
தோழனாக இருப்பதே
ஆகச் சிறந்த
மருந்தாகும்
மனதிற்கு,,,

_____

ஒரு தாயின் சபதமே
சேயின் அடுத்த
நகர்வு
மண்மீது மரம் கொண்ட
பற்றுதல் போல,,,

_____

உன் நினைவுகளின்
ஊடே நானும்
கண்விழிக்கிறேன்
வசந்தமாகிறதென்
விடியல்,,,

_____

மனிதம் படைக்கும்
நோக்கத்துடன்
மண்ணை நேசித்துவிடு
இயற்கை நமக்கு
இன்பத் தாலாட்டாகும்,,,

_____

ஐந்தாண்டுத் திட்டத்தில்
அனைவருக்கும்
கல்வி
நிறைவேறாமலேயே
எத்தனை ஐந்தாண்டுகள்,,,

_____

கவிஞர்கள் எழுதினார்கள்
உன்னை
நாணலென்று
தலையாட்டி
விடுகிறாய் நீ!
எதற்கெடுத்தாலும்
சுய அறிவின்றி,,,

_____

இதயத்தின் வேர்களான
ரத்த நாளங்களில்
கொடியாக
படர்கிறாள்
அசைக்க முடியாத
மற்றுமொரு தாயாக
காதலியவள்,,,

_____

நிறைவேறாத
ஒரு காதல்
ஆசையாக
இருவேறு
பாதச்சுவடுகள்
ஆதீத முரண்
அழித்தலே செய்யும்,,,

_____

விவசாயிகள்
கோமாளிகளாக
வியாபாரிகள்
கோடீஸ்வரர்களாக
வரவேற்றார்கள்
வால்மார்ட்டை,,,

_____

வசந்த காலம்
எதுவெனக் கேட்டால்
வாழ்நாளையே
சுட்டிக்காட்டுவ ேன்
அவளும் நானும்
அவ்வளவு நெருக்கமாய்,,,

_____

நீ மண்ணை
நேசிக்க கற்றுக்கொண்டாலே
பாதி மனிதனாகி விடுகிறாய்
மீதி மனிதனுக்கு
நேசித்துவிடு
உன் தாயை,,,

_____

தூக்கம் வருமுன்
நிலவை ஒருமுறை
பார்த்துக்கொள்கிறேன்
பரிதாபமாய்
அனேக சன்னல்கள் மூடப்பட்டிருந்தது,,,

_____

வீட்டில் ஊமையாய்!
கொலுவில் பொம்மையாய்!
சிறையில் கைதியாய்!
கனவினை தொலைத்ததொரு
காட்சிப்பொருளாய்!
அவளொரு பெண்ணாய்!
முடங்கியே இருந்து விட்டாள்
இன்னமும் விழித்தெழாமல்,,,

_____***_____

Sunday, October 18, 2015

பவழ முத்துக்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிய பவழ
முத்துக்களை

சிரமப்பட்டு
சேர்க்கிறேன் சீக்கிரம்
கோர்க்க வேண்டும்
ஒரு மாலையை

மலர் மல்லிகை
என் மடியில்
தவழ்ந்து விளையாட
சம்மதம் தெரிவிக்கும்
நாள்வரையில்
நான் காத்திருக்கப்
போவதில்லை

என் காதலொன்றும் வலுவிழக்கவில்லை
சீக்கிரம் கோர்த்து விட வேண்டும்
ஒரு மாலையை

அழகின் புன்சிரிப்பால்
நன் மதியினை
மயக்கச் செய்யும் நிலவிடமிருந்து
நான் விலகியாக வேண்டும்

வழிவிடு என்று வார்த்தைகளால் சுட மனமில்லை
எனக்கு

நிலவும்
அவள் முகமும்
ஒன்றாக பட்டதனால்

என் பாதையில்
குறுக்கிடும் மலர் வண்டுகளே
மண்ணை கொஞ்சம்
சீண்டித் தாருங்கள்

பவழ முத்துக்கள்
அவை புதையுண்டு
கண்கட்டி வித்தை
காட்டுகின்றன
கண்டுபிடித்துத் தாருங்கள்

சீக்கிரம் கோர்க்க வேண்டும் ஒரு மாலையை

பாடும் பறவைகளே
பார்த்து
பொறுக்குங்கள் இரையை

விதைகளென
நினைத்து
என்
பவழ முத்துக்களை
அழகான அலகால்
கொத்தி விடப்போகிறீர்கள்

மணிக்கண்ணால்
நீங்கள்
பார்த்து விட்டால்
மறக்காமல் கொடுத்துதவுங்கள் என்னிடத்தில்
எந்தன் பவழ முத்துக்களை

சீக்கிரம் கோர்க்க வேண்டும்
ஒரு மாலையை

பல சோதனைகள்
கடந்து நானும்
சொல்லிவிட்டேன்
காதலை
அவளிடத்தில்

பல கேள்விகளால்
எனை துளைத்து மனதால் அவளும்
எனை ஏற்று கேட்டுவிட்டாள்
ஒரு பவழ முத்து மாலையை

மனைவியாகப் போகிறாள்
மாலையை கோர்த்து விட்டேன்
மடியில் நானும் சிறுபிள்ளையாக

காதலின் பூமாலைகள்
நம்கழுத்தினை அலங்கரிக்கையில்

சிரமப்படுதலில் கூட சுகம் இருக்கத்தான் செய்கிறது,,,

புயலென ஒருநாள்

வெட்டுண்டு
கிடக்கிறது எங்களின்
கைகள்
கூலி உயர்வு கேட்டதற்காக

குருடாகி இருட்டில்
தடவுகிறோம்
எங்களின் வாழ்வை தொலைத்து

வரலாற்றுப் பதிவுகளில்
எழுதினார்கள்
எங்களை
"என்ன ஆணவம்
அவர்களுக்கு அதனால் வெட்டப்பட்டது
கைகள்" என்று

ஒருநாள் விடியுமென்று
ஒவ்வொரு நாளும்
தேய்ந்து போகையில் நிலவுக்கு மட்டுமே அன்றைக்கொருநாள் வெளிச்சம் கிட்டியது

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நாங்களாம்
எங்கள் பஞ்சமி
நிலங்களை
பறித்தோர்கள்
பழிக்கிறார்கள்

உழுவதற்கு மாடுகள்
இல்லாத பொழுதுகளில்
எங்களையே
பூட்டினார்கள்
கலப்பையில்

பட்ட கஷ்டங்கள்
படியேற துடிக்கையில்
பக்குவமாய் பூட்டப்பட்ட கால்விலங்குகள்
முதுகெலும்பு வரை
ஏற

ஒடிந்து போன
விறகுகளாய் ஆதிக்கமெனும் விதைகளின்
உரங்களாய்

செயலிழந்து
அறிவிழந்து
உணவிழந்து
அழகிழந்து
தூக்கி எறியப்படுகிறோம் கடைசியில் வெறும்
சக்கைகளாய்

ஒருநாள் புயல்காற்றில் ஆடி அடங்கும்
உங்களின் ஆதிக்கம்
அதுவரையில்
குளிர்காயலாம்
எங்களின் மூச்சுக்காற்றில்

இயற்கையும் ஏழையும்
குணத்தால் ஒன்று
குறித்துக்கொள்ளுங்கள்
உங்களின் அழிவை அன்று,,,

Tuesday, October 13, 2015

கிராம பூ(ச்சாண்டி)சாரிகள் மாநாடு

தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு மதவழிச் செயல்முறைகளில்
முக்கியமானதாக கருதப்படுவது குலதெய்வ வழிபாடு அல்லது சிறுதெய்வ
வழிபாடாகும். தன் பாட்டன் முப்பாட்டன் காலத்திய மதவழிச் சமூகத்தின்
படிநிலைகளின்படி அப்படியே தொடர்ந்து வாழியடி வாழையாக வணங்கப்படும்
தெய்வங்கள் சிறுதெய்வங்களாகும். அச்சிறு தெய்வங்களுக்கு என்று தனியாக
அர்ச்சகர்களோ,புரோகித­ர்களோ இல்லை அதற்கு மாறாக "பூசாரிகள்"
என்றழைப்படுவோர் இறைதூதனாக இருந்து செயல்படுகின்றனர். அவர்கள்
பார்ப்பனராக இருப்பதில்லை அந்தந்த கிராமத்தின் உடைமையாளராக
இருக்கிறார்கள். நமது இந்திய மற்றும் தமிழ்நாட்டு கிராம அமைப்பு முறையின்
படி "இரட்டைக் குடில் முறையிலேயே சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது அதாவது
சேரி அல்லது காலனி,ஊர் என்கிற இரட்டை குடியமைப்புகளாக இனக்குழுக்களை
உருவாக்கிக்கொண்டு வாழுமிடம் கிராமம் என்றழைக்கப்படுகிறது.
அதனடிப்படையில் சேரி அல்லது காலனிக்கென்று ஒரு குலதெய்வமும் அதற்கொரு
கோவிலும் கோவிலின் பணிக்காக தர்மகத்தாவும்,இறைதூத­னாக பூசாரியும்
இருக்கிறார்கள். அதேபோலத்தான் ஊர் எனப்படும் ஆதிக்கர்களும்
பின்பற்றுகிறார்கள். கிராம பூசாரிகள் வேதமோ உபகிடதமோ
போதிப்பதில்லை,மந்திர­ உச்சரிப்போ அவர்கள் பயன்படுத்துவதில்லை மாறாக தன்
தாய்மொழியில் இயல்பான முறையில் குலதெய்வத்திடம் முறையிட்டு மக்களுக்கான
தேவையை பூர்த்திசெய்ய வேண்டி இறைவனை வேண்டுகின்றனர். அதற்காக
அவர்களுக்கென்று தனிக் கட்டுப்பாடு முறைகளேதும் இல்லை . இந்த வகையில்
கிராம பூசாரிகள் மற்ற பார்ப்பன அர்ச்சகர்களிடமிருந்த­ு வேறுபட்டு தனித்தே
செய்படுகின்றார்கள். ஆனால் பார்ப்பன ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் கீழே தான்
அவர்களின் நடைமுறைச் செயல்பாடுகள் இருக்கும். பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின்
கீழ் கிராம பூசாரிகள் என்றழைக்கப்படுவோர் மிக அதிகமாகவே மக்களை
இந்துத்துவத்தில் இணைக்க முற்படும் சக்திகளாக இருக்கிறார்கள் . இதில்
போலிச் சாமியார்கள் என்று சிக்குவோர்களின் எண்ணிக்கையில்
பூசாரிகளுக்கென்று தனியிடம் உண்டு , அதுமட்டுமல்லாத மூடபழக்க வழக்கங்களை
மக்களின் மனதில் பதிந்து தங்களையே கடவுளாக்கப்பட வேண்டும் என்கிற
கட்டளையையும் அம்மக்களின் மீதே திணிக்கிறார்கள் பூசாரிகள். புகழ் பெற்ற
மேல்மருவத்தூர் அடிகளாரையே முன்னுதாரனமாக எடுத்துக்கொள்ளலாம் ஓம்சக்தி
ஆலையம் எனப் பெயரிடப்பட்ட அத்திருத்தலத்திற்கு (அவர்களின் பாஷையில்)
அடிகளாரையே தெய்வமாக வழிபடுகிறார்கள் மக்கள் . குறிப்பாக அதில்
சிக்குவோர் பெரும்பான்மையான பெண்களே,, முழுக்க முழுக்க இந்துவத்துவத்தை
பின்பற்றுகின்ற கிராம பூசாரிகளும் ஆரியர்களே என்று அறியாமல் , ஆரியர்கள்
எதிர்க்க வேண்டுமெனில் பூசாரிகளை புகழ வேண்டுமென்று மாநாடு போட்டு
இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் சீமான் தலைமையிலான வீரத்தமிழர் முண்ணனி
எனும் அமைப்பு பார்ப்பானியத்தின் செயல்திட்ட அமைப்பே அன்றி வேறென்னவாக
இருக்க முடியும். முடிந்தால் அவர்கள் மருவத்தூர் அடிகளாரின் ஆதிக்கத்தை
எதிர்த்து களமாட முடியுமா?
சிறு தெய்வ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு என்கிற போர்வையில் பூசாரிகள்
செய்யும் ஒவ்வொரு அட்டூழியத்திலும் ஏழை பாமர மக்களின் வியர்வை
சுரண்டப்படுகிறது என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. அவ்வாறு
இருக்கையில் தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் வீரத்தமிழர் முண்ணனி
அமைப்பானது இன்னொரு சங்பரிவார அமைப்பாகவே மாறியிருக்கிறது ஆர் எஸ் எஸ்
இன் அனைத்து விதமான பார்ப்பன இந்துத்துவ நடவடிக்கைகளை அப்படியே
உள்வாங்கியதொரு அமைப்பிற்கு பிற்போக்குத் தனங்களை தவிர வேறென்ன
அறிந்திருக்க முடியும். அதையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு
அப்படியென்ன புரட்சி பேசுகிறார்கள் கிராம பூசாரிகள் மாநாட்டில் என்று
பார்வையிட்டால் தகவலேதும் அதிலில்லை, அனைத்தும் ஒரே சுழற்சி மையமாக
நின்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிபோல "திரும்ப திரும்ப பேசுர
நீ" என்றபடியே முடித்திருக்கிறார் நாம்தமிழர் கட்சி சீமான் அவர்கள்,,,
விடுதலைப் போராட்ட வீரர் ஐயா "கக்கன்" அவர்கள் முதன்முதலித்
பூசாரிகளுக்கென்று தனி அந்தஸ்து வாங்கித் தந்து தலித்துகள் மற்றும்
சாணார்கள் கோயில்களில் நுழைய தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அன்றைய
இராஜாஜி 1939 அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம்,
சட்டத்தினைக் கொண்டு மதுரையில் கிராம பூசாரிகள், தலித்துக்கள் மற்றும்
சாணார்களை அழைத்துக் கொண்டு தலைமைதாங்கி கோயிலினுள் நுழைந்தார். கிராம
பூசாரிகளுக்கான முதல் அங்கீகாரம் அங்கேதான் கிடைக்கப்பெற்றது.
இவ்வரலாற்றை தனது ஒன்றரை மணி நேர உரையில் ஓரிடத்தில் கூட குறிப்பிடாத
சீமானுக்கே இந்நிகழவு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் தெரிகிறது.
போலவே மாநாட்டில் கூடிய கிராம பூசாரிகளுக்கே இது தெரிந்திருக்குமா? என்று
கூட எண்ணத்தோன்றுகிறது. ஆகஸ்ட் 30 அன்று நிகழ்ந்த கிராம பூசாரிகள் மாநாடு
என்பது இந்துத்துவ பூச்சாண்டிகள் மாநாடு என்று வேண்டுமானால் அழைக்கலாமே
அன்றி அது ஒருபொழுதும் தமிழ்த்தேசியத்தில் இடம்பெறாது காரணம்
இந்துத்துவத்தின் பிடியில் இருக்கும் போலித்தமிழ்த்தேசியம்­ ஒருபொழுதும்
முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும்,வா­ர்த்தெடுக்கவும் வாய்ப்பே
இல்லை என்பதும் பிற்போக்குத் தனத்திற்கான வழியே அதுவென்றும் மிகத்
தெளிவாக உணர்த்தும் முப்பாட்டன் முருகனுடைய பிள்ளைகள் அல்லவா அவர்கள்,,
முப்பாட்டி யாரென்று இன்னமும் அவர்கள் முடிவு செய்ய வில்லையாம் ஒரு வேளை
ஜெயலலிதாவாகக் கூட இருக்கலாம்.

Saturday, October 10, 2015

கோரச் சம்பவமும் கவிதை சமர்ப்பணமும்

கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன்
நான்

அதன் வீச்சம் கூட
எளிதில் என்னை கவர்ந்தாலும்
நமைச்சலின் வலி நானுணர்ந்த வலி வேதனைகளை விட குறைவுதான் என்பதால்

கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன் நான்

என் மேனி படர்ந்து யோனியில் ஆண்குறிகள் மோதி முட்டி வேட்கை தணிக்கும்
விலங்கின சக்திகளிடம் விளையாட்டு பொம்மையாய் நான்

அப்பாவும்,அண்ணனும் அவர்களோடு சேர்ந்துகொண்ட சக காட்டு மிராண்டிகளும்
கண்டிப்பாய் என்
வலியுணர வாய்ப்பில்லை

எனை புணர்ந்து விட்டு விந்தெனும் எச்சிலை தெளித்தார்கள்
கருப்பாய் இருண்டதென் வாழ்க்கை

என்தாய் எனை பெற்றெடுத்துவிட்டு மண்ணுக்குள்
கதறுகிறாள்
கேட்கவா போகிறது
அவளின் கதறலொலி

முகம் காட்டும் கண்ணாடியில் என் முகம் தவிர எல்லோர் முகமும் வெளிச்சமாய்
சிரிக்கிறது எனை புணர்ந்து விட்ட மகிழ்சியில் அவர்கள் முகம் மலர்கிறது

நான் மட்டும் மூடிக்கொள்கிறேன் என் முகத்தையல்ல
யோனியை

எவன் எவ்வடிவில்
வருவானோ எனை புணர்வதற்கென்று அச்சம் நீங்காத
அதிர்ச்சி வசத்தில் ஆட்கொண்ட என்னை
அறைந்து விடுங்கள் சிலுவையில்

கழுமரங்களேனும்
என்மீது பரிதாபம் கொள்ளட்டும்

உடல் சீண்டி என் யோனியில் ஊடுறுவும் ஆணுறுப்பு எப்போதேனும் வெட்டப்படுமா
? எதிர்பார்த்து ஏமாந்து போனேன்

வெட்டுவதாக இருந்த கத்தியும் எனை புணர்வதற்கு ஆவலாய் வரிசையில் அது காவல்துறையின்
வடிவமாக

விலங்கினங்கள்
எனை புணரும் போதெல்லாம் என் அடிவயிற்று சதைபிடிப்பால் எழும்
அதிக வலியில்
குளிர்காய துடிக்கையில்

பூமிக்கு நான் சுமையா? இல்லை நான் பூமிக்கு சுமையா? எழும்
எண்ணங்களில் சீழ் வடிந்து என் யோனியின் வழியே அதுவும் வழிந்தோடுகிறது

என் தாய்நாடு பாதுகாக்காத எனதுடலை எச்சில் இலையால் மூடுங்கள்
வரும் தெருநாய்களெல்லாம் காலைத் தூக்கட்டும் ஆணுறுப்பு அவ்வளவு பழகிப்போனது
எனக்கு

காம வேட்கையாடு வேட்டையாட வேண்டுமென்று
பெண் உடலை பார்க்கும் சமூகத்து விஷப்பார்வையிலும் அதன் சீண்டல்களிலும்
தீராத வலியையும்
போகாத நமைச்சலையும் அந்நமைச்சலின் ஊடே
எழும் எனதுடல் வீக்கங்களையும் வழியும் ரத்தங்களையும் எனக்கு எளிதில்
கம்பளிப் புழுக்கள் கொடுத்ததில்லை

ஆகவே காதலிக்கிறேன் கம்பளிப் புழுக்களை

அதுமட்டுமா?
இல்லை இல்லை தன்னுடலை யாரும் சீண்டக்கூடாதென்று
கம்பளிப் புழுக்களுக்கு முற்களை படைத்த இயற்கை அன்னை

எனை கைவிட்டதனால்
பட்ட துன்பத்தை பகிர்ந்துகொள்ள

அதுமட்டுமே எனக்கு உற்றத்தோழனாய்
அதனாலும் அதைமட்டுமே காதலிக்கிறேன் நான்

மனித மிருகங்களிடம்
விலகி புழுபூச்சிகளிடம் காதல் கொள்வது
அவ்வளவு சுலபமல்ல அனுபவித்துப் பாருங்கள் என் வலியை
அர்த்தம் புரியும் உங்களுக்கு,,,
_

அந்த கோரச்சம்பவம் :
சிவகங்கையில் சிறுமி தனது தந்தை, சகோதரர் உட்பட 26 பேரால் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற­ாள் . தன்னை பல ஆண்டுகளாக தந்தை
மற்றும் அண்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்டக்டர், அண்ணனின்
நண்பர்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனை சென்றபோது டாக்டர், வக்கீல் ஆகியோரும்
பலாத்காரம் செய்தனர். இது குறித்து புகார் செய்ய போலீஸ் நிலையம்
சென்றபோது ஆரம்பத்தில் எஸ்.ஐ., பின் இன்ஸ்பெக்டர் அவரைத் தொடர்ந்து ஒரு
ஏடிஜிபி ஆகியோரும் தன்னை சீரழித்து விட்டதாக கூறினார். இதுகுறித்து
சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி புகார் செய்தார்.
இதனடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூன் மாதம் கைது
செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்
வின்சென்ட், இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில்,
`சுகந்தியை 12 ஆண்டுகளாக தொடர்ந்து பலர் பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி. வரை உயரதிகாரிகள் பலருக்கு
இதில் தொடர்பு உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என
கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக தலைமைச் செயலர்,
போலீஸ் டி.ஜி.பி, சி.பி.ஐ,சிவகங்கைமகளி­ர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே,இன்று பொதுநல வழக்கிற்காக
ஆஜராகச் சென்ற வக்கீல் வின்சென்ட் அவர்களை சமூக விரோதிகள் வழிமறித்து
தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறார­்கள்.இந்த கேடுகெட்ட சமூகம் தான்
பெண்களுக்கான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிறது என்று தங்களைத் தாங்களே
சொல்லித் திரிகின்றது.

நான் மனிதனாக

கிழித்த உடலில்
வெடித்த எலும்புகள் சூடேறி
மதங்கொண்ட
யானைகளின்
வசம் போக மிச்சமிருக்கிறது
விட்டுச்சென்ற காலடியில் என் உடல்
மண் ஒட்டிய
நிலையில்

விடாது துரத்திய வேதனைகளின் ஊடே உடலை தவிடாக்கும்
ஊறும் எறும்புகளும் எனக்குத் தோழனே

மட்கும் குப்பையாக
மனிதனை ஆக்குவது
மண்ணும், மழுங்காத தீப்பிழம்புமாக இருக்கையில்

இல்லாத இடம்தேடி எங்கே அலைகிறதென் ஆன்மா

விழுந்து விழுந்து விழுதுகளில்
எண்ணெய் தடவியதில்
அழுக்கேறிய அச்சாணியாக
என்னைச் சொருகிய சக்கரம் சுழல்கிறது காலத்தின் சுழற்சியாய்

ஆன்மாவின் ஆச்சர்ய நிகழ்வுகளில் நின்று இருண்ட உலகிற்கு வெளிச்சம் நீட்டும்
தீப விளக்கைத்தேடி
விழி இருண்டு
கிடக்கிறேன்

விளங்கவில்லை
இன்னமும்
ஆதிக்கம் அடுத்து
எதன் வடிவிலென்று

சமூகமே!
குருதியில் சாக்கடை கலப்பது சாதி
மூளையில் புழுக்களை வளர்ப்பது மதம்

விட்டுவிடுங்கள் ஏதேனுமொரு
இயற்கை அன்னை
சாதிமதம் பாராமல்
எடுத்து வளர்க்கலாம் என்னை

அன்னை
இயற்கையோடு
சாதியற்றவனாய் மதமற்றவனாய்
நான் மனிதனாய்

வளர்வதையே விரும்புகிறேன்
வழிவிட்டு
நில்லுங்கள்,,,

Monday, October 05, 2015

அந்த மூன்று நாட்களில்

பருமடைதலின் போதெழும்
அளவில்லாத சுமையை
இறக்கிவைக்க
முடியாமல் இடிவிழுந்த
பனைமரமாய் கலையிழந்து காட்சியளிக்கிறேன்
நான்

என் கவலை உணர்ந்த
ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கிறேன்
அத்துணை விஷமப் பார்வையிலிருந்தும் என்னை காக்க
மண்ணை
துணைக்கழைக்கிறேன்

என் பிறப்புறுப்பில் கசிந்த ரத்தம் அப்போதுதான் காவு விடப்பட்டது
அம்மண்ணிற்கு

முதல் வயிற்றுவலி
உயிரெடுத்து உச்சந்தலை வெடிக்கையில் உணர்ந்தேன் அம்மாவின் பிரசவத்தை

அப்படியே சங்கிலித் தொடராகிவிடுகிறது
சுழற்சி
அம்மா துடிக்கையில் அவள் அம்மாவின் பிரசவத்தை நினைத்திருப்பாள் நிச்சயமாக
என்னைப்போலவே

நிஜத்தில் நானிருந்தாலும் பின்தொடரும் நிழலின் கருப்போடு ஒட்டிக்கொள்கிறேன் நான்
அந்த மூன்று நாட்களில்

நிழலே வேண்டாமென்று
சலித்துக் கொள்கிறேன்
சகதியாகிறது என்மனம்
அழுத்ததால்

புணர்புழையில் கசியும்
ரத்தத்தின் வாடையிலும்
காம வேட்டையாடத் துடிக்கும் வெறிமிகுந்த ஓநாய்களிடமிருந்து எப்போதெனக்கு விடுதலை

என்னுடையில் ரத்தக்கறை படிந்திடுமோ, பார்ப்போரின் முகம் சுளித்திடுமோ,
எனும் மிகுதி அச்சத்தில்
உடல் சுறுக்கி
நடை தளர்ந்து
மெல்ல நாஃப்கினை நாடிச்செல்கையில்

அங்கேயும் பார்வைகள்
பலவிதமாய்
தீண்டத் தகாதவளாகிறேன்
நான்

என்னுயிரை ஆடையால் மறைத்து திளைக்கச் செய்திருந்தாலும்

அதனுள்ளிருக்கும்
வெற்றுடம்மை வேவுபார்த்து பிய்த்தெடுக்கும் கழுகுகளின் கண்களில்

என் பிறப்புறுப்பில்
வழியும் ரத்தச் சுவடுகள்
ஒட்டித்தானிருக்கின்ற­து

யாவரும் தொடரும்
காம பசிக்கான உணவை
புதைத்து வைத்திருக்கும்
புதையலா என் தேகம்

இல்லவேயில்லை
ஒநாய்கள்,கழுகுகள்
பார்வைகளை
என் பாத
செருப்புக்களால் அடித்து,
எல்லையில்லா என் பயணத்தை
தீர்மானிக்கிறேன்

புறப்படத் தயாராகும்
நேரத்தில் தடையாக்கும்
மாதவிடாய் ரத்தத்தில்
ஓவியங்களை வரைய
கருந்தேள் காத்திருந்தாலும்

எனை கொட்டும் நோக்கோடு அதன் கொடுக்கு நீட்டியிருந்தாலும்

உடைக்கத் தயாராகிறேன்
சமூக அவலமெனும் அக்கருந்தேளின் கொடுக்கை

நானும் இப்பூமியிலோர்
சக மனுஷியாகையால்,
மிதிக்கப்படாமல் என்னை
மதிக்க கேட்கிறேன்
நானும் இப்பூமியிலோர்
சக மனுஷியாகையால்,,,

Saturday, October 03, 2015

பொம்மை மழைத்துளி

பார்வையில் மின்னும்
பளிங்கு கற்களைப்போல
காட்சிக்குத் தெளிவாய்
கையில் ஒரு துளி

கரங்களை விரித்துவிடு
என்போல் பல துளிகள்
உன்னை பற்றிக்கொள்ளும்
என்கிறது அந்த மழைத்துளி

புத்தம் புதியதாய்
பூமிக்கு புதுவரவாய்
தனக்கே சொந்தமான
புதுமை ஜாலம் காட்டும் பொம்மையினை கண்டதும்

பூக்கும் புதுமலராய் புன்னகையோடு அப்பொம்மையோடு விளையாடும்
மழலை நெஞ்சத்தில் நஞ்சேதும்
நாம் கண்டதில்லை
அல்லவா

அதுபோலவே
கரங்களை
பற்றிக்கொண்டது
அந்த மழைத்துளி
எனக்கது
புதுபொம்மையாய்

உடைந்த
பொம்மைக்காக
அழும் மழலையின்
அதே பாசத்தோடு
அழுது விடுகிறேன்
கரங்களில் மழைத்துளி கரையும் போது

பெய்த கனமழை
பட்டென நின்றதும்
நிசப்த பெருவெளியின்
நடுவில்
பித்தம் பிடித்தவனாய்
தனிமையை வெறுத்தவனாய்
தத்தளித்திருக்க

போனதை திரும்ப
அழைக்கிறேன்
என் கண்ணீரின் வெப்பத்தை
கார்மேகம் கண்டு
உருகத் தொடங்கியது
மீண்டும் பெருமழையாய்

எனை முழுதாய் அணைத்து முத்தத்தால்
கண்ணீரை துடைக்கிறது
முகத்தில் விழுந்த மழைத்துளிகள்

இந்த அரவணைப்பு போதுமெனக்கு இனி இம்மண்ணில்
நானொரு
நதியாய், கடலாய்,
மரஞ்செடி கொடியாய்,
தவழ்ந்து வந்து
விளையாடுவேன்
தண்ணீர் கிடைத்த
மகிழ்சியில்

புத்துணர்வோடு
பூமிக்கு படியளப்பேன்
பசி தீர்க்கும் விவசாயியாய்,,,

கடவுளெனும் மிருகத்திடம்

சகலமாய் பேசி
என் பக்கம் இழுத்துவிட
ஓர் பட்டத்தை
துணைக்கழைத்தேன்

அதன் மாஞ்சாக் கயிறு
மரணத்தின் சாவியெனத் தெரியாமல்

தளர்ந்து போன இதயத்திற்கு தெளிவென்பது தேவையானதால்
கடைக்கோடியில்
நின்று கையசைக்கும்
குழந்தையிடம்
கேட்டு வாங்கிக்கொள்கிறேன்
என் தைரியத்தை

கழுமரத்தில் என் வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகளின் ஊடே
மனசாட்சிகள் என்னை
முன்னோக்கி விட

அவர்களின் பார்வையிலிருந்து
நான் மறைந்து போகவில்லை
மனிதனாய்
பிறந்துவிட்ட
காரணத்தினால்

ஆட்சியதிகாரத்தோடு
அரியணையில்
வீற்றிருக்கும் அந்த மிருகத்தின் முன்னால்

ஏதுமற்ற நிராயுதபானியாக
நிற்கிறேன் நான்

மண்டியிடு இல்லையேல் மரணித்துவிடு
என்கிறது அந்த
மிருகம்

மிச்சமிருக்கும் ஒரே
ஆயுதத்தை அம்மிருகத்தின் மேல்
பிரயோகப்படுத்தப் போகிறேன்

செயலற்றுப் போவது
என்சொல்லா?
இல்லை
மிருகத்தின் மிகை எச்சரிக்கையா? நானறேன்

சொல்லத் துணிந்துவிட்டேன்

கடவுளாய் அவதரித்திருக்கும்
மிருகமே மண்டியிடப் போவதில்லை உன்னிடத்தில்

நீயும்
மனிதனாக மாறிவிடு
மனிதமிங்கே மடை திறக்கட்டும்

சொல்லி முடித்தேன்
செயலற்றுப் போனது
மிருகம்

காலத்தின்
கட்டாயத்தால் கட்டளையிட்டது
மிருகம்

கைதிகளை உடனே
விடுதலை செய்
என்று,,,

Thursday, October 01, 2015

வலுசேர்ப்போம் சகோதரி கௌதம மீனா அவர்களின் போராட்டத்திற்கு,,,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை சேர்த்தமைக்காக அண்ணல்
அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதியினத் தலைவராக சித்தரித்தும் , இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தினை எதிர்த்தும் , புறக்கணித்தும் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க மனநிலை கொண்ட உயர்குடி வர்க்கத்தை
எதிர்த்துப் போராட எங்களுக்குத் தேவையான ஒன்றாக இருப்பது " இட ஒதுக்கீடு
பிச்சை அல்ல அது எங்களுக்கான உரிமை" எனும் முழக்கம் மட்டுமே , முற்றிலும்
முதலாளித்துவத்தை மையப்படுத்தியும், சாதிமத வாதத்தினை மையப்படுத்தியும்
இயங்கும் மத்திய மோடி மற்றும் மாநில ஜெ அரசிடமிருந்து தாழ்த்தப்பட்ட
மற்றும் பிற்படுத்தப்பட்ட உரிமைகளையும், இட ஒதுக்கீடு சட்டத்தையும் மீட்க
வேண்டிய கட்டாயத்தின் பேரில் தற்போது எங்களின் உடன்பிறவா சகோதரி கௌதம
மீனா அவர்கள் களமாடிக்கொண்டிருக்கி­றார் . சாகும் வரை உண்ணாவிரதம் எனும்
புரட்சி ஆயுதமே தற்போதைய தேவையாக இருக்கிறது. அதன்படியில்

எங்கள் சகோதரி கொளதம மீனா அவர்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை துறையில்
இட ஒதிக்கீட்டை நடைமுறைத்தகோரி தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப்
போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார்.­.அவரின் உடல்நிலை மிகவும்
மோசமாகிகொண்டே வருகிற நிலையில் சகோதரி கொளதம மீனா அவர்களின் கரத்தை
வலுப்படுத்துவது முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் அடிமைச்
சமூகத்தின் கடமையாக இருக்கிறது . அவரின் போராட்டம் நமக்கான
போராட்டம்..அடுத்த தலைமுறைக்கான போராட்டம் . இட ஒதிக்கீடு பிச்சை அல்ல
நமக்கான உரிமை... எனும் முழக்கத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தை வலுவடையச்
செய்திடல் வேண்டும். சகோதரி கௌதம மீனா அவர்களின் உண்ணாவிரதப்
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஐய்யா நல்ல கண்ணு அவர்களும் விசிக
தலைவர் திருமாவளவன் அவர்களும் தங்களின் ஆதரவினை தெரிவிக்கும் வகையில்
சகோதரி அவர்களை சந்தித்து கரம் கொடுத்திருக்கிறார்கள­் . வர்க்கச்
சுரண்டலுக்கு எதிராகவும், பறிக்கப்படும் உரிமையை
மீட்டெடுக்கும்படியாக­வும் மக்கள் ஆதரவு சகோதரி கௌதம மீனா அவர்களுக்கு
அளிக்குமாறு அரைகூவல் விடுக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு உரிமை
மீட்டெடுப்புக் களமாக
இடம் ... அறிவுசார் சொத்துரிமைத் துறை அலுவலகம் முன்பு ,கிண்டி
பேருந்துநிலையம்அருகி­ல்... அணிதிரள்வோம் ஆதிக்கத்தை எதிர்த்தும், இட
ஒதுக்கீடை மீட்கவும்,,,

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...