Sunday, November 01, 2015

சமூக வலைதள கருத்தியலாக்கம்,,,

நமது சமூகம் முற்றிலும் இணையதள யுகத்தில் கால்பதிந்து அவரவர் தங்கள்
கருத்துக்களை முகநூலிலும்,ட்விட்டரிலும்,வாட்ஸ்
அப்பிலும்,வலைப்பூவிலும்,ஜி ப்ளஸ்ஸிலும் இன்னபிற சமூக வளைதளங்களிலும்
பதிந்து தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவரின்
கருத்துக்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ நமக்கு பிடிக்காமல் போகலாம்
அல்லது அதற்கான மாற்றுக் கருத்து நம்மிடையே உறுவாகியிருந்தாலும் நட்பின்
காரணமாக சொல்லச் தயங்கலாம் , வேறுசிலரோ நட்பே வேண்டாமென்று ஒதுங்கி
விடுவதும் உண்டு . ஆனால் அது சரியான முடிவாக இருக்க முடியாது , காரணம்
பதிவரின் மற்றக் கருத்துக்களோ அல்லது வரலாற்று ஆய்வுகளோ நமக்கு
பிடித்துபோக உடனே அவரிடமிருந்து விலகினால் மறு ஆய்வு மற்றும்
மறுபார்வையிலிருந்து நாம் தள்ளியே இருக்க முடியும் . மீண்டும் அந்த
வாய்ப்பு நமக்கு கிட்டாமலும் போகலாம் . மிகவும் கீழ்த்தரமான மனித உரிமை
மீறல்களுக்கும், மனித இனத்தின் ஒற்றுமையை குலைக்கும்
விதத்திலும்,ஆதிக்கம்­ செலுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கோடும்,ஆபாச
நோக்கோடும் எழுத்துக்கள் இருக்குமாயின் நாம் அந்த நட்பிலிருந்து முற்றாக
விடுவித்துக்கொள்வது ஆகச்சிறந்ததாக இருக்கிறது. கருத்து முரண்பாடுகள்
ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கும் அதன் நிலைகளின் அவசியக்
கூறுகளால் பலர் பிரிந்திருக்கிறார்கள­். நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும்
கருத்து முரண்பாடு, திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கு­ம்,
தமிழ்த்தேசிய திராவிடத்திற்கும் பொதுவுடைமைக்கும், பொதுவுடைமைக்கும்
தேசிய இனங்களுக்கும் என்று பல கூறுகளாக இணையத்தில் கருத்து முரண்பாட்டுச்
சண்டைகளையும் விவாதங்களையும் காண நேரிடும் ஒரு சராசரி இணைய
உபயோகிப்பாளரின் எண்ணங்கள் நிச்சயம் மாற்றப்பட்டு அவர் அத்தனை காலங்களாக
பழகியும்,பாராட்டியும­் வந்த நட்பை ஒரே விநாடியில் உதறித்தள்ளிவிட்டுச்
செல்கிறார் என்றால் இங்கே அக்கருத்து முரண்பாட்டால் எழும் விவாதமானது
சண்டையாக மூண்டு மன அழுத்தத்தை அளவில்லாமல் அனுபவித்ததன் விளைவுதானே
அன்றே வேறில்லை. சரி,,,இந்த மன அழுத்தத்தின் காரணமாக எழும் நட்பு
முறித்தலால் அவர்களின் முந்தைய அல்லது பிந்தைய நற்சிந்தனைப் பதிவுகள்
பாதிப்படைந்து நமக்கு பயனற்றுப் போய் புதிய தகவலை நாமே முன்வந்து
புறக்கணித்து விடுகிறோமே அதற்கு என்ன தீர்வு இருந்துவிடப் போகிறதென்று
எண்ண வேண்டாம் . அனைத்திற்கும் தீர்வென்ற ஒன்று உண்டு உலகில், ஆனால் அதனை
தேடியெடுப்பதில் சோம்பலை தெளிக்கின்றோம் எனலாம். ஒரு புத்தகத்
திருவிழாவில் ஆசான் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசுகிறார், வழங்கப்பட்ட
தலைப்பு "எதை படிக்கலாம்" என்பதாகும் . ஆழச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள
"வாசிப்பு" மட்டுமே நமக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில்
தலைப்பிற்கேற்ற தனது உரையில் ஆசான் அவர்கள் மிகத்தெளிவாக ஒன்றைக்
குறிப்பிட்டார்."எது நமது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், கேள்விகளுக்கும்
உகந்ததாக இருக்கின்றதோ அதை படியுங்கள், மற்றதை மேலோட்ட ஆய்வுக்கு அது
எடுத்துச் செல்லும். இதற்கு என்னை விட பெரியார் அவர்கள் சிறப்பாக
எடுத்துரைக்கிறார் ,"நானே உரைத்தாலும் அப்படியே ஏற்காமல் அதனை மறு
ஆய்வுக்கு உட்படுத்துங்கள் அதுவே பகுத்தறிவு வளர்ச்சி" என்கிறார்.ஆக நாம்
எதை படிக்க வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிப்பது அல்லது
திணிப்பதிலிருந்து வெளியேறி உங்களை நீங்களே முதலில் வாசிக்கப் பழகுங்கள்.
என தன் ஆழக்கருத்தை அந்த புத்தக கண்காட்சித் திருவிழாவில் பதிவுசெய்தார்
ஆசான் ஈரோடு தமிழன்பன். அவரின் கருத்துக்களை அப்படியே இணைய வெளிவிக்கும்
பொருந்துமாறு பார்க்கையில் "வாசிப்பு" என்பது மிகத்தெளிவான ஒன்றாக
கிடைத்துவிடுகிறது. தீர்வாக அதுவும் திகழ்கிறது. இணையத்தில் பதியப்படும்
பெரும்பாலான கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் அத்தனையும்
புரட்டுகளாகவும்,ஏதோவ­ொரு சாதியம் மற்றும் மதத்தினை உள்வாங்கிக்
கொண்டதாகவுமே இருக்கும். எப்படி நமது பள்ளிக்கால புத்தக வரலாறுகள் அதன்
பிறகான நமது வாசிப்பிலிருந்து படித்ததெல்லாம் பொய்யாகிப் போகின்றதோ
அதேபோலதொரு உணர்வை இணைய கருத்துக்களும் நமக்குச் சொல்கின்றது. என்னைப்
பொருத்தவரையில் மார்க்ஸிய,லெனினிய,அம­்பேத்கரிய, பெரியாரிய பாதைகளில்
பயணிக்கும் இணைய பயன்பாட்டாளர்களையும்­,அதைதவிர்த்து நாகரீக முறையில்
கருத்துகளை வெளிப்படுத்தும் இணைய பயன்பாட்டாளர்களையும்­ சேர்த்தே
வாசிப்பை முன்னெடுக்கிறேன் . இதன் மூலம் ஒப்பிட்டும் மறு ஆய்வுக்கு
உட்படுத்தியும் செல்ல முடிகிறது. ஒருவர் மற்றவைகளை எதிர்ப்பு
கருத்தியலாக்குகிறார்­ என்றால் அவர் அறிவுக்குள் நம்மை மறு ஆய்வுக்கு
அழைக்கிறார் என்பதை உணரமுடியும். ஆகவே எதிர்க்கிறார் என்ற ஒற்றை காரணத்தை
முன்வைத்து ஒரே அடியில் அவரிடமிருந்து விலகுவது சரியாய் இருக்காது. போலவே
அவ்வகையான எதிர்ப்பிலும்,ஆதரவில­ும் விஷமத்தனமும் ,ஆபாசமும் , சமூக
விரோதமும் இருக்கிறதெனில் தாராளமாக அவரிடமிருந்து விலகிக்கொள்வது
காலச்சிறந்தது. இணையத்தில் நாம் எதை வாசிக்கத் தொடங்கியிருக்கிறோம்
என்பதன் விளைவுகளை இறுதியாக தீர்மானிப்பது நமது ஆழச்சிந்தனையாகும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...