Tuesday, November 17, 2015

அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலையான,,, "பதிவு" ஒரு கருத்தை மாற்றுமா?

தோழர் எஸ்.பி. செந்தில் குமார் அவர்களின் பதிவுகளிலிருந்து
http://senthilmsp.blogspot.c­om/2015/11/blog-post_17.html
தோழர் எஸ்.பி . செந்தில் குமார் (S.P.
Senthil Kumar) அவர்களின்
கூட்டாஞ்சோறு வலைப்பூவானது
எனது வாசிப்பு பட்டியலில் ஒன்று.
இன்று அவர் ஒரு பதிவு
எழுதியிருந்தார். "அவுரங்கசீப்
சாலையை அப்துல் கலாம் சாலை
என்று மாற்றியதும் நான் ஏன்
ஆனந்தக் கூத்தாடினேன்?" என்கிற
தலைப்பில்,,, தனது நண்பர் நசீர்
அஹமத் கூட்டாஞ்சோறு
வலைதளத்தில் பகிரும்படி அந்தப்
பதிவை அனுப்பிவைத்தாதாகவும்,
அதனை எழுதியவர் பாகிஸ்தானைச்
சேர்ந்த தாரிக் ஃபதா என்பவராகவும்
குறிப்பிட்டிருந்தார். பின்னூட்டம்
அளிக்க முடியவில்லை, அதுவும்
நல்லதுதான் கொஞ்சம் நீளமாக
பின்னூட்டமளிக்க
முடியாதென்பதால்,,, அவுரங்கசீப்
சாலையை அப்துல் கலாம் சாலை
என்று மாற்றியதும் நான் ஏன்
ஆனந்தக் கூத்தாடினேன்? ஏனென்றால்
தோழர் தாரிக் ஃபதா பார்ப்பன
வரலாற்றுப் புனைவுகளையே இந்திய
வரலாறாக படித்தமையால் ஆனந்த
கூத்தாடுகிறார். அது அவர் மீதான
குற்றமில்லை , நமது இந்திய சரித்திர
வரலாறுகளை எழுதி வைத்தவர்களே
குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும்.
பெரும்பாலும் நமது பள்ளிக்
காலங்களில் பாட புத்தகங்களால்
பெறப்பட்ட வரலாற்று அறிவானது,
வளர்ந்து அதற்கு வெளியே பல நூலக
புத்தகங்களை படிக்கின்ற பொழுது
"அப்போ பள்ளிக்கூட பாடபுத்தக
வரலாறெல்லாம் பொய்யா" என்கிற
ஆச்சர்யம் அனேக புத்தக
வாசிப்பாளர்களுக்கு இருக்கும்.
காரணம் பள்ளிப்பாட புத்தகங்களில்
இடம் பெறும் பல
வரலாற்றுப்பதிவுகளை எழுதியவர்கள்
பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அந்த
வரலாற்று புத்தகங்களைத்தான் தோழர்
தாரிக் ஃபதா படித்திருக்கக்கூடும்.
இந்தியாவில் நிலவும்
ஹிந்துத்துவத்திற்கும்,ISIS க்கும்
எவ்வித வேறுபாடுமில்லை
அல்கோய்தா போன்ற சர்வாதிகார
நிலைப்பாட்டையே இங்கே ஹிந்து
தீவிரவாதம் என்கிறோம், அங்கே
மதப்பிரிவுகளின் பெயரால், இங்கே
வகுப்புப் பிரிவினையின் பெயரால்,
இதற்கு எந்த பாரபட்சமும்
காட்டப்படுவதில்லை. பிழைப்பு வாத
பார்ப்பானிய வரலாற்றுத் திரிபுகளில்
வழக்கமான ஒன்று, நாம்
அனைவருக்கும் பழக்கப்பட்டதும் கூட
"ஆரியர் வருகை, முகமதிய
படையெடுப்பு" என்பதுதான்
அது,,,மிகச்சாதரணமாய் கடந்துபோகும்
இவ்வரிகள் மிகப்பெரிய மறைக்கப்பட்ட
வரலாறுகளை கொண்டுள்ளது. கைபர்
போலன் கணவாய்கள் வழியாக
ஆரியர்கள் வருகைபுரிந்தார்கள் எனில்
முகமதியரும்,போர்த்து
கீசியர்களும்,பிரிட்டீஷார்கள்களும்
வருகையாளர்களாகவேதானே இருக்க
முடியும், இதில் பிரிட்டீஷ் வணிகம்
புரிய வந்தார்கள் என்பதும்
பிழைப்புவாதமே , பிரிட்டிஷ் முதல்
நோக்கம் மதப்பரப்புரையாகவே
இருந்தது. உலகின் பெரும்
சாம்ராஜ்யத்தை உறுவாக்கி தங்களின்
கிருத்துவ மதத்தினை உலமாக்குதலை
மட்டுமே கொண்டிருந்தார்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷார்களும்
கிருத்துவ மத பரப்புரை
படையெடுப்பாளர்களாகவே
இருந்திருக்கிறார்கள். அதற்கு
அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி
எனும் வணிகமும்,ஆதிக்க அதிகாரமும்
தேவைப்பட்டது என்பதே இங்கே
மறைக்கப்பட்ட வரலாறாக இருக்கிறது.
அதே கண்ணோட்டத்தில் முகமதிய
ஔரங்கசீப் சாம்ராஜ்யமானது
கிட்டத்தட்ட தென்னிந்த தமிழகத்தை
தவிர்த்து அனைத்து இடங்களையும்
கைப்பற்றிய சாம்ராஜ்யமாகும். ஆனால்
ஆடம்பரமாக
வாழவில்லை,எளிமையையை
கையாண்டிருக்கிறார். தனது கைப்பட
எழுதிய குர்ஆன் விற்ற பணத்தில்
வாழ்க்கை நடத்தியிருக்கிறார். தான்
இறக்கும் போது அரச மரியாதையோடு
அல்லாமல் குரானை தான் கைபட
எழுதி விற்ற சேமிப்பு பணத்தில்
மட்டுமே அடக்கம் செய்யப்பட
வேண்டும் என எழுதிவைத்தபடியே
அவரின் இறுதி அடக்கமும் நடந்தது
என்பது மறைக்கப்பட்ட வரலாறாய்
இருக்கிறது.
தன் சொந்த தந்தையை
சிறைவைத்து,சகோதரர்களை கொன்று
ஆட்சி நாற்காலியில் அமர்ந்த
சர்வாதிகாரி ஔரங்கசீப் என்கிறார்
தாரிக் ஃபதா , உலக அரங்கில்
அரசாணை ஆட்சி அதிகாரங்கள்
பெரும்பாலும் அவ்வகையிலேயே
பெறப்படுகின்றன,இது முதமதியர்கள்
வரலாற்றில் அல்லது ஔரங்கசீப்
வரலாற்றில் மட்டும் இருப்பதாக
அந்நபர் எண்ணுகிறார் என்றால்
அறியாமையின் உச்சமாகவே இதனை
எடுத்துக்கொள்ளலாம். மேலும் முன்னர்
சொன்னது போல் "முகமதிய
படையெடுப்பு" என்பதை மட்டுமே
ஒரு பிரிவினை முகமதியராய் அவர்
மனதிலேற்றியிருக்கிறார்.
மற்றவர்களை ஏன்
படையெடுப்பாளர்கள் என்று வரலாறு
சொல்லவில்லையென்று சிந்திக்க
மறந்து விடுகிறார் அல்லது அவரை
அந்த புனைவு வரலாறுகள் சிந்திக்க
திட்டமிட்டே வைப்பதில்லை.
எல்லாவற்றையும் கடந்து ஔரங்கசீப்
இந்து முஸ்லீம் பிரிவினையை
ஏற்படுத்தினார், கட்டாய மதமாற்றம்
செய்தாரென அவரின் வரலாற்றுப்
பதிவுகள் சொல்வதனால் ஔரங்க சீப்
எனும் ஆளுமையின் வரலாற்று
நினைவுகளை அழிப்பதும் அழிப்பை
ஆதரிப்பதும் சரிதானா? அப்படியெனில்
தமிழக வரலாற்றின் மூவேந்தர்களின்
வரலாற்று நினைவுகளையும்
நிச்சயமாக அழித்தே ஆக வேண்டிய
சூழல் உறுவாகிவிடும், ஔரங்க சீப்
எனும் முகமதியனை பழிதீர்த்த
இந்துத்துவ வாதிகள் இதற்கு
உடன்படுவார்களா? தமிழக சோழ
வரலாற்றினை எடுத்துக் கொண்டால்
வெளிப்படையாகவே மிகக்கீழ்த்தரமான
பெண்ணடிமைச் சின்னமாக விளங்கும்
தேவரடியாள்,தேவதாசி, முறைகளுக்கு
பெருமாதரவு அளித்து முதன்முதலில்
அரங்கேற்றம்,,, என்கிற
வரலாற்றையும் கொண்டிருக்கிறது.
போலவே நாயக்கர்கள்
வரலாறும்,பல்லவ
வரலாறும்,பாண்டிய வரலாறும்
காலங்காலமாக தொடர்ந்த இச்சமூக
அவலத்திற்கு பெரியார்
முன்னிலையில் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டிதான் முற்றுப்புள்ளி
வைத்தார்கள். இதனால் பெண்ணடிமை
போற்றிய,குலக்கல்வியை பரப்பிய,சாதி
வேறுபாடுகளை தீவிரமாக ஆதரித்த,
பெண் கல்வி மறுத்த,
இத்யாதி,,,இத்யாதி,,, காரியங்களை
செய்த சோழர்களின் அரசாட்சி
நினைவுகளை அழிக்க ஔரங்க சீப்
நினைவுகளை அழித்தவர்கள் ஆதரவு
அளிப்பார்களா? என்று தெரியவில்லை
, எந்தவொரு வரலாற்று
பின்னணியிலும் அரசாட்சி பொறுத்த
மட்டில் பல்வேறு இழுக்குகள் இடம்
பெறும். ஆனால் அதையெல்லாம்
காரணங்காட்டி உலக தீவிரவாதத்தோடு
ஒப்பிட்டு நினைவுச் சின்னங்களை
அழிக்க முற்படுவது சரிதானா என்று
பார்க்கப்பட வேண்டும். சில
வாரங்களுக்கு முன்பு நாம்தமிழர் கட்சி
சீமான் அவர்கள் மேற்சொன்ன தாரிக்
ஃபதா அவர்களை போன்று நாயக்கர்கள்
தமிழகத்தின் கொடுங்கோல்
ஆட்சியாளர்கள்,அவர்களின் காலம்
இருண்ட காலம் ஆகவே "நாயக்கர்கள்
மஹால்" ஐ அப்புறப்படுத்த
வேண்டும் என்று பேசியிருந்தார். தாரிக்
ஃபதா அங்கே மாற்றியலுக்காக அப்துல்
கலாமை வைத்தார். சீமான் இங்கே
ராஜராஜ சோழனை முன் வைக்கிறார்
இதனால் ஔரங்க சீப் பெயரை
மாற்றியவர்கள் சீமானின் கருத்திற்கு
உடன்படுகிறார்களா? போலவே அப்துல்
கலாம் அவர்களின் மீதும் விமர்சனம்
இருக்கின்றது. அவர் பிறப்பால்
இஸ்லாமியரென்றால் முழுக்க
முழுக்க இந்துத்துவ மனிதராகவே
வாழ்ந்து இறந்தார் எனும்
விமர்சனத்தை முடிந்தளவு மறைக்க
முயற்சித்தாலும் வெளிச்சத்தில்தான்
அது இருக்கும். கடைசியாக நமது
மக்களில் பெரும்பான்மையினர்
கொண்டிருக்கும் ஒரு கருத்தை
மாற்றுவதாக இந்த பதிவு இருப்பதால்
பகிர்ந்ததாக கூறியிருக்கிறார் , மூன்று
சதவிகித பார்ப்பானர்களால் தொன்னூறு
சதவிகிதம் அடிமையாய் இருக்கும்
பெரும்பான்மையினர் கொண்டிருக்கும்
மாற்றுக் கருத்தென
குறிப்பிட்டிருக்கலாம்.

5 comments:

  1. hello; s.senthzl' -sethu, brahmines; arya varthem'- called (presnt pakistan- punjab afganisthan ,kashmir} invader;'gajini-gorimuhammad ,persia, mugals lot of others destroyed; north indian no power,relgioun,political(bramhin); only tamil nadu; they are supermo power relgioun,political; pls watch; maharaja ranjith sing, kalayi.blogspot.----also watch DD POTHGAI EVE 6.00 clock india of fort; contct my ph no;9789920589, narayanan.chrompet,in chennai.ok va;

    ReplyDelete
  2. my email;kandan69almi@gmail.com

    ReplyDelete
  3. நண்பர் செந்தழல் சேது அவர்களுக்கு தங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் அனுமதித்தால் இந்த பதிவையும் எனது தளத்தில் பகிர்கிறேன்.
    நானும் அவுரங்கசீப்பின் நல்ல குணங்களை தினம் ஒரு தகவலில் எழுதியிருக்கிறேன். எல்லோரிடமும் நல்ல குணங்களும் உண்டு. தீய குணங்களும் உண்டு. அவற்றில் எது விஞ்சி நிற்கிறது என்பதை வைத்தே ஒருவரை எடைபோட முடியும். அக்பரிடமும் மோசமான குணங்கள் இருக்கின்றன. ஆனால் அவரை ஒரு நல்ல அரசராகத்தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அவரிடம் விஞ்சி நிற்பது நல்ல குணங்கள் மட்டுமே.
    பார்ப்பனர்கள் மீது எனக்கும் கோபம் உண்டு. அதற்காக எல்லாவற்றையும் பார்ப்பன கண்ணாடி வழியே பார்ப்பதிலும் உடன்பாடில்லை. தோழர்களும் பகுத்தறிவாளர்களும் அந்த கண்ணாடியை எப்போதும் கழற்றுவதே இல்லை என்பதுதான் உண்மை.
    மாற்று கருத்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. பார்ப்பனர்கள் மீது எனக்கும் கோபம் உண்டு. அதற்காக எல்லாவற்றையும் பார்ப்பன கண்ணாடி வழியே பார்ப்பதிலும் உடன்பாடில்லை. தோழர்களும் பகுத்தறிவாளர்களும் அந்த கண்ணாடியை எப்போதும் கழற்றுவதே இல்லை என்பதுதான் உண்மை.

    #சார் யார் முதலில் எம்மக்களை அடிமைபடித்தி வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் எமக்கான முதல் எதிரி, தோழர்களும் பகுத்தறிவாதிகளும் பார்ப்பன கண்ணாடியை கழட்டி வைப்பதில்லை என்கிறீர்கள். கழட்டி தூரே எறிய நாங்கள் தயார் , வகுப்பு பிரிவினையையும், மதப்பிரிவினையையும் (சைவ,வைஷ்ணம்) தூரே எறிய அவர்கள் தயாராக இல்லையே , அதுமிட்டுமில்லாது தற்போதைய சூழலில் நிச்சயமாக அரசானது ஒரு காழ்ப்புணர்ச்சி கண்ணோட்டத்தில் மட்டுமே சாலை பெயர்மாற்றம் செய்திருக்க கூடும். மேலும் அந்த தோழர் லாலா லஜ்பத் ராய் மறைக்கப்பட்டதற்காக கவலைபடுகிறார். தவிறில்லை, எந்த தலைவர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் மறைப்பது தவறு. ஆனால் அதேவேளையில் நேருவால், காந்தியால்,அம்பேத்கரால் , பெரிதும் மதிக்கத்தக்க "ஜின்னாவை" இந்துக்கள் பச்சையாக புறக்கணித்தது ஏன் அவருக்கு வலிக்கவில்லை . பாகிஸ்தான் செய்த தவறையே இந்தியாவும் இந்துத்துவமும் செய்கிறதே அதை ஏன் அந்நபர் சுட்டிக்காட்டவில்லை. அவுரங்கசீப் எனும் முகமதியனை எதிர்த்த காரணத்திற்காக இந்துக்கள் மராட்டிய சிவாஜியை புகழ்ந்தார்கள். ஆனால் சிவாஜி அந்த இந்துத்துவ பார்ப்பானியத்தால் நாடிழந்து,நாதியற்றவனாக வீசப்பட்டான் என்கிற மறைக்கப்பட்ட வரலாற்றை மேடையில் ஏற்றினார் அண்ணா, இங்கே திட்டமிட்டே வரலாறுகள் புனையப்படுகிறது என்பதுதான் பார்ப்பானியத்தின் மீதுள்ள ஆதங்கம். மற்றபடி ஏதுமில்லை.
    தங்கள் வருகைக்கு நன்றி! மேலும் தங்கள் தளத்தில் இதனை பதிவிட வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் காரணம் கருத்துக்கள் ஒன்று மட்டுமே இருந்தால் போதுமென நினைக்கிறேன்.
    ஒரு வேண்டுகோள்! தங்கள் தளத்தில் மொபைல் பயன்பாட்டின் மூலம் கருத்துரை இட முடியவில்லை, அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...