Saturday, November 14, 2015

இவர் ஆசிரியரா? மனுவாதியா?

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடிமையாக்கும் எண்ணம் இருக்கின்ற வரையிலும்,
அக்குறிப்பிட்ட சமூகத்தை நிரந்தரமாக அடிமையாக்கும் நடவடிக்கைகளில் தங்களை
ஈடுபடுத்திக் கொள்ளும் மிக அச்சுறுத்தும் ஆதிக்கம் முளைத்தெழுகின்ற
வரையில் இந்தியத்தில் "தூய்மை இந்தியா" , டிஜிட்டல் இந்தியா போன்ற
திட்டங்களெல்லாம் போலியான பிம்பமுடையதாகவே எடுத்தாளப்பட வேண்டும். அந்த
வகையில் இந்துத்துவம் தன் சாதிய மனப்போக்கினை அகற்றாத வரையில் இங்கே
சமத்துவம் என்கிற பேச்சிக்கே இடமில்லை . ஒரு குறிப்பிட்ட சமூகம் இன்ன
தொழில்தான் செய்ய வேண்டும் . என்று தீர்மானிக்க பார்ப்பானியத்திற்கு
அதிகாரம் இருக்குமெனில் . அத்தொழிலை ஏன் நீங்கள் செய்யக்கூடாதென்று
திரும்ப கேட்கும் அதிகாரம் அக்குறிப்பிட்ட சமூகத்திற்கு இல்லை என்றுச்
சொல்லிவிட முடியாது. முழு அதிகாரம் அவர்களிடத்தில் இருந்தாலும் ஆதிக்கம்
மீது அவர்களுக்கு இருக்கும் பய உணர்வு தடுத்து விடுகிறது. அதையும் மீறி
தங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தை அடிமைச் சமூகம்
பிரயோகப்படுத்துமேயான­ால் , தின்னியம், குடிசை எரிப்பு, வன்கொடுமை, என
எண்ணிலடங்கா கொடுமைகளை சந்திக்க நேரிடுகிறது. இது ஆதிக்க அதிகாரத்தின்
உச்சநிலை அடக்குமுறைகளாக உள்ளது. திட்டமிட்டு தலித்துகள் மலம்
அள்ளுதல்,செருப்பு தைத்தல், துப்புரவு பணியாளர்களாக இருத்தல்,போன்ற
தொழில்களைதான் செய்ய வேண்டுமென்கிற திணிப்பு ஏற்படுத்திய ஆதிக்கச்
சமூகத்தினர்.
தலித்துகளுக்கு ஒரே ஆதரவாக இருக்கும் இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பது எந்த
வகையில் நியாயமாகும். அப்படி எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு
கொடுக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட தொழிலை ஏற்றுக்கொள்ள முன்வருவார்களா?
இப்படியாக தலித்துகளை அடக்கி ஒடுக்கி அவர்களின் பஞ்சமி நிலங்களையும்
பறித்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக தள்ளப்பட்டிருந்தாலும­்
இன்னமும் தொடர்ந்தே இருக்கிறது தலித்துகள் மீதான தாக்குதல். ஒரு நல்ல
ஆசிரியர் நூறு பெற்றோர்களுக்கு சமம் என்பார்கள். ஆனால் ஆசிரியர்களே சாதி
வெறியோடும் தலித்தின விரோத கண்களோடும் கல்வி நடத்தும் கூடங்களில்
இருந்தால் சாதியற்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடவே முடியாது.
ஆசிரியர்கள் என்பவர்கள் உயர்சாதி பொருளாகவே மாறிவிட்ட சூழலில் எப்படி
இவர்களால் சமூகப்பார்வையை விரிவுபடுத்த முடியும்?
நாமக்கல் மாவட்டம், இராமாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி
தமது உயர்சாதி ஆதிக்க வெறியின் உச்சத்தை தொட்டுவிட்டபடியால்,இ­ரண்டாம்
வகுப்பு படிக்கும் அருந்ததியர் சமூக மாணவனை பள்ளி கழிவறையை சுத்தப்படுத்த
வைத்து தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறால்­ என்றால் படிப்பறிவால்
இவ்வகையான ஆசிரியர்கள் பெற்ற பலன் வெறும் சாதியுணர்வினை வளர்க்க
மட்டும்தானா? ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் இதனுள் உள்நிறுத்தி பார்க்க
முடியாது என்றாலும் இச்சமூக அவலத்தினை கண்டிக்கும் வகையில் அங்கே மற்ற
ஆசிரியர்கள் முன்வராதது மிகவும் வருந்தத்தக்கது. வன்கொடுமைகள் தொடர்
நிகழ்வுகளாக மாறிவிட்டச சூழலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக
எந்தவொரு முற்போக்கு வாதமும் இங்கே நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும்
ஆசிரியர்கள் ஆனாலும் நாங்கள் ஆதிக்கச் சாதி வெறியர்கள் மற்றும்
பிற்போக்கு வாதிகள் என்கிற ஆணவத்தோடு திரியும் மனிதர்கள் நிச்சயமாக
தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

2 comments:

  1. சிறந்த கண்ணோட்டம்
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...