Friday, February 26, 2016

தந்தை பெரியாரின் "உண்மை"

தமிழ்ச் சமூகத்திற்கு தற்போதைய மிகப்பெரும் தேவையாக திராவிட பெரியாரை
முன்வைக்கலாம். தந்தை பெரியாரை இப்போது பேசாவிட்டால் மக்களின் அறிவு
மழுங்கடிக்கப்பட்டு ஏதேனுமொரு முதலாளியத்தை நோக்கி பயணிக்க வைத்துவிடும்.
கடைசிவரை அடிமை சமூகமாகவே தமிழ்ச்சமூகம் மாறும் சூழலிங்கே உறுவாக்க
இந்துத்துவ பார்ப்பானியம் முயற்சி செய்து கொண்டிருப்பதால் பெரியார்
நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறார். இன்றைக்கு சுமார் நூற்றாண்டுகளுக்கு
முன்னால் நடந்த பெரியாரின் இளம்பருவத்து நிகழ்வு அது, அப்போது
பெரியாருக்கு வயது இருபத்துநான்கு, தந்தை வெங்கடப்ப நாயக்கரின் மண்டி
வியாபாரத்தில் மகன் ராமசாமி பொறுப்பேற்றிருந்த காலத்தில், திருச்சியில்
ஒரு வழக்கிற்காக வக்காலத்தொன்றில் தந்தையின் கையெழுத்தை மகன் ராமசாமி
போடுகிறார். இதை அறிந்த எதிர்தரப்பு வழக்குரைஞர் அவர் சென்றவுடன் , தந்தை
மகன் ஆகிய இருவர் மீதும் "மோசடி" வழக்கு தொடுக்கிறார், தந்தையும் மகனும்
பயந்துவிடுகின்றனர். சேலம் வியராகவாச்சாரி, நார்ட்டன் துறை, முதலான
அன்றைய புகழ்பெற்ற வழக்குரைஞர்களையெல்லா­ம் சென்று அலோசனை கேட்கின்றனர்.
"கையெழுத்தை நான் போடவில்லை" என ராமசாமி சொல்லிவிடுவதுதான் ஒரேவழி"
எதற்காக வீணாக செலவு செய்கிறீர்கள் இன்று உப்புசப்பில்லா வழக்கென்று
அவர்கள் வழக்காட மறுத்து விடுகின்றனர். ஆனால் தந்தையும் மகனும் இப்படி
பொய்சொல்ல தயாராக இல்லை, சிறைக்கு செல்ல ராமசாமி தயாராகிறார். தான்
அணிந்திருந்த காப்பு, கடுக்கண், முதலியவற்றை கழற்சிவிட்டு தாடி
வளர்க்கிறார், களி உண்ணப் பழகுகிறார், வழக்கு நாளில் தந்தையும் மகனும்
குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர்.­ வழக்கை விசாரித்த உதவி கலெக்டர்
மேக்பர்லேண்ட் "எதிரி யாரையும் மோசம் செய்ய இக்காரியம் செய்யவில்லை" என
வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார். -இந்த சம்பவத்தை
விடுதலையில் (26.7.1952) இல் தந்தை பெரியார் பகிர்ந்து கொள்கிறார். தந்தை
பெரியார் பகிர்ந்து கொள்ள நேர்ந்ததன் பின்னணியும்,காரணமும்­
குறிப்பிடவேண்டியதாயி­ருக்கிறது.
நடக்க இருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு போராட்டம் ஒன்றில் பங்கெடுக்க
இருப்பவர்களின் பெயர் பட்டியலை அவர் விடுதலையில் வெளியிடுகிறார்.
வெளியானது முதலே கடுமேயான விமர்சனத்திற்கும் கண்டணத்திற்கும் ஆளாகிறது.
விமர்சகர்கள் "பெயர்களை கொண்டு போராட்டக்காரர்களை கைது செய்துவிட்டால்
பின் போராட்டம் நடப்பது எப்படி? மறைமுகமாக செய்ய வேண்டியதை நேரடியாகவே
செய்யச் சொல்கிறீர்களே! என்பது அவர்களின் கேள்வி.
அதற்கான பெரியாரின் பதில் என்பது தன் பொதுவாழ்வுக்கு வந்த அனுபவத்தை
பேசுகிறது. பெரியார் பதிலெழுதுகிறார் , எனது முப்பது வருட பொதுவாழ்வில்
ஒரு செயல்கூட, ஒரு போராட்டம் கூட நான் மறைவாய் நடத்தினது இல்லை , நடத்த
அனுமதித்ததும் இல்லை , என்மீது பொதுவாழ்வில் சுமார் இருபது வழக்குகளுக்கு
மேலும், என் சொந்த வாழ்வில் சில வழக்குகளும் நடந்திருக்கும் ,
ஒன்றுக்குக்கூட நான் எதிர் வழக்காடி இருக்க மாட்டேன் ஒப்புக்கொள்ளவும்
தயங்கியிருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.
பொது வாழ்வுக்கு "உண்மை" எந்தளவிற்கு அவசியமென்பதை தந்தை பெரியார் உணர்த்துகிறார்.

7 comments:

  1. அதனால் தான் அவர் பெரியார் ...

    கும்பகோணம் குளத்தை பார்க்கும் போது இன்னும் ஆயிரம் பெரியார்கள் தேவை இருப்பதை உணர்கிறோம் ...நன்று

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி!
    மாகமக குளத்தை பற்றி கட்டுரை எழுதுகையில்
    நாற்றம் தாளமுடியவில்லை அதனால் பாதியில் நிறுத்திக்கொண்டேன்.

    ReplyDelete
  3. பெரியார் இந்த பன்னீர்சொம்பை பார்த்தல் என்ன சொல்வார்? நடுநிலைமை வி-யாதிகள் என்ற நசுங்கிய சொம்புகளையும் அந்த சொம்புகளை ஆட்டுப்பிவர்களையும் பற்றி என்ன சொல்வார்?

    அதே சமயம்..இதே சொம்படிக்கும் வேலையை மு.க. அவர்கள் தன் கட்சிக்கார்களை செய்ய வைத்து இருந்தால் இந்த நடு நிலைமை வி-யாதிகள் எப்படி பொங்கி பொங்கல் வைத்து இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. பெரியாருக்கு பின்னாலிருந்து திருடிய திராவிடத்தை அடிமையாளர்கள் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் அதிமுக அதே வேளையில் திமுக விடமும் சில கருத்து வேறுபாடுகள் எனக்குண்டு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்! திமுகவும் அப்படித்தான்--அதில் சந்தேகமில்லை; நான் சொல்வது நம் நடுநிலைமை வியாதிகள் திமுக செய்தால் தான் குற்றம் என்று ஒரு சார்பு நிலை எடுப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்!

      Delete
  5. தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  6. அவர்களை நாம் ஒதுக்கி வைத்துவிடலாமே, ஒரு அனாதையை போல,,, எதற்கெடுத்தாலும் திமுக வை சாடும் இவர்களுக்கு ஒரேயொரு குறிக்கோள்தான் "திராவிடத்தை அழிக்க வேண்டும்" அது இந்த தமிழ்மண்ணில் சாத்தியமில்லை என்பது நடுநிலைவியாதிகளுக்கே தெரியும்.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...