Monday, May 23, 2016

ஜெயா 6 வது முறை? ஊடகங்களின் உளவியல்

தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை தொடர்ந்து (6) ஆறாவது முறையாக
கைப்பற்றி பதவியேற்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா! என்று
அனைத்து காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களும் சொல்லிச் சொல்லி
சிலாகிக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மற்றும் அதிமுகவின் அதீத பாசம்
அவர்களை (ஊடகங்கள்) அவ்வாறு
பேசவைத்திருக்கிறது எனலாம். தேர்தல் முடிந்து தமிழகத்தை ஆளும் தகுதியை
அதிமுக பெற்ற இரண்டாவது நாளிலேயே சட்ட ஒழுங்கு சீர்குலையும் விதமாக
வியாசர்பாடியில் பொதுமக்களை ரவுடிகள் சராமாரியாக அரிவாள் , போன்ற
ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார். அதுவும் பொதுவெளியில் பொதுசனங்களை,,,
இதில் பெண்களும் ஒரு கைக்குழந்தையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்
வருகின்றது. ஆனாலும் இச்சம்பவம் குறித்து காட்சி மற்றும் எழுத்து
ஊடகங்கள் இதுவரை வாய்திறக்கவில்லை, அதாவது அதிமுகவின் முதுகை
சொரிந்துவிடும் ஊடகங்கள். சரி! அதுபோகட்டும் விஷயத்திற்கு வரலாம்,,,
உண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6 வது முறையாக முதல்வராக
பதவியேற்கிறார் எனில் இடைப்பட்ட காலத்தில் 2 முறை பதவியேற்றிருக்கிறாரே­
ஓ பன்னீர் செல்வம். அதாவது, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த
தீர்ப்புகளின் அடிப்படையிலும் அதன் எதிரொலியாகவும் இரண்டு முறை
முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறங்க (தள்ள) வேண்டிய கட்டாயத்தில்
ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு­
முதலமைச்சராக பதவியேற்கும் முறைமையின் படி மட்டுமே கணக்கில்
எடுத்துக்கொண்டோமானால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக
பதவியேற்பது இது (4)நான்காவது முறையாகும். அடுத்த இரண்டு ஓ பன்னீர்
செல்வத்திற்கு போகும். ஒருவேளை ஓ பன்னீர் செல்வம் அவர்களின் அரசியல்
வரலாற்றுப் பதிவிலிருந்தோ, அல்லது அவரின் அரசியல் அனுபவத்தை வினவுகின்ற
காலத்தில் அவரின் இரண்டுமுறை முதலமைச்சர் பதவியேற்பை
குறிப்பிடாமலிருந்தால்ஜெயா ஆறாவது முறையாக பதவியேற்கிறார் எனலாம்.
தற்போதைய தமிழக நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் முந்தைய முதல்வர்
பதவியேற்பையும் சேர்த்துக்கொண்டு ஊடகங்கள் 6 என்கிற எண்ணை
பிடித்துக்கொண்டு வலம் வருவதன் உளவியல் என்னவாக இருக்குமென்று
யோசிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை, அவர்களுக்கு கார்ப்பரேட் மையமாக தமிழகம்
மாறவேண்டும், விளம்பரம்,சினிமா என்று சமூகத்தை சீரழிக்க வேண்டும் என்பதே!
விடுபட்ட ஒன்று உள்ளது, அடுத்த தமிழக முதல்வரின் சமூக பொறுப்பு நிலை
குறித்து மக்களின் குரலாக எதிரொலிக்காமல் , எதிர்கட்சிகளின் சமூக
பொறுப்பு நிலை குறித்து அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கும் உளவியலிலும்
சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை சிறப்பாக செய்கிறார்கள் இன்னமும் ஊடகங்கள்
திமுக மீதான எதிர்ப்பையும், காழ்ப்புணர்ச்சியையும­், நம்புங்களேன் தயவு
செய்து நம்புங்களேன் நமது ஊடகங்கள் உண்மையான நடுநிலையாளர்கள். அதனால்தான்
ஜெயா புகழ்பாடி கடந்த ஐந்தாண்டு அட்டூழியங்களை மக்களிடம் கொண்டுசேர்க்காத
உண்மையான நடுநிலையாளர்கள் நமது ஊடகங்கள்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...