Sunday, February 25, 2018

ஒரு நடை பிணம்




எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்
எண்ணக் கதவுகளுக்கு
கண்ணீரின் தேவைகள் 
அவசியமாகிறது...

அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...

எந்த சவுக்கடிகளும்
சீக்கிரத்தில்
தீர்ந்து போவதை
விரும்பாத கண்கள்
வேடிக்கை பார்த்து
எக்காளமிடுகிறது....

ஆமாம் ஏன்?
எங்கோ நடப்பதற்கு
ஏன் நான் அழ வேண்டும்?

எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...

இப்படியான இசங்களினால்
ஆழ்மனதின்
அமிழ்ந்துவிட்ட
கூர்முனை கத்திகளின்
கீறல்கள் தந்த
தழும்புகளே ஏராளம்...

நான் ஆதிப் பழங்குடி
நான் நரிக்குறவன்
நான் தலித்
நான் பெண்
நான் சிறுபான்மையன்
நான் காதலன்
நான் காதலி
இத்யாதி இத்யாதி....

கொலை செய்தோ
குடிசைகளை கொளுத்தியோ
ஆணவப்படுகொலை செய்தோ
வண்புணர்வு செய்தோ
மசூதி இடித்தோ
எதுவோ....

துடிக்கத் துடிக்க சித்ரவதை
செய்யுங்கள் சனநாயகத்தை...

செவிடர்களை கண்டே
பழகிப்போய்
வெறுத்துவிட்ட
மனங்கள்தான்
என்னுடையது...

அதனாலே
அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...
வலியுடன்....

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்





இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!

விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!
அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!

ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன் சொத்தை அபகறிக்கும் திருட்டு கூட்டங்களிக்கிடையேதான் தலித் சமூகம் இன்றும் வாழ்ந்து கொன்டிருக்கிறது. சிறுவனை கொலை செய்தல் , பெண் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தலில்தான் உங்களின் சாதிவெறி இருக்கிறதெனில்.. அச்சாதியாதிக்கத்தை ஆணவப்படுகொலைகளை தடுத்து சம உரிமைக்காக தலித் ஆதிக்கம் எழுந்து நிற்குமேயானால் அந்த தலித் ஆதிக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது... இங்கே முழுக்க முழுக்க சாதியத்தாலே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் என்றுமே மனிதன் கொடூர மிருகமாகத்தான் இருக்க முடியும்.. சாதியத்தை அதன் வேரான ஹிந்துத்துவ பார்ப்பனியத்தை... அதனை வளர்த்தெடுக்கும் இடைசாதி ஆதிக்க வெறியினை அம்பேத்கரை விடவும் , பெரியாரின் கைத்ஊடி விடவும், மாவோவின் எதிர்வினையை பயன்படுத்துகையில் அடித்து விரட்ட இயலும் என்றே தோன்றுகிறது... ஆம்
" நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்பதே அது.....

Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை





Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக அடித்தே கொன்றார்களே ! அவர்களுடன் மிருகங்களைக்கூட  ஒப்பிடாதீர்கள்... ஏனெனில் மிருங்கள் தங்கள் பொது எதிரியான " பசியுடன் " மட்டுமே போரிடுமே தவிர... இவ்வாறு கொலை செய்யாது.

தஷ்வந்த் தூக்கில் தீர்வு கிடைத்திடுமா ?



அப்படி பார்த்தால் இச் சமூகத்தில் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாய் இருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை... அந்தளவுக்கான வன்மம், முறையற்ற பராமரிப்பு, ஒழுக்கம் தவறிய செல்லம்தான் இங்கு குழந்தை வளர்பாகிறது... அது போக பாலியல் குறித்தான விழிப்புணர்வு இங்கில்லை அந்தளவுக்கு மதங்கள் தங்கள் புனிதங்களை புகட்டி விட்டிருக்கிறது... ஆண்டாளை எப்படி தாசியென சொல்லலாம் என பொங்கியவர்கள் தங்கள் மதங்களுக்குள்ளேயான பாலியல் வஞ்சகங்களை மறைத்திடுகிறார்கள், போலவே  இதற்கான எதிர்வினை என ஆண்டாள் எப்படி "காமம்" பற்றி செய்யுள் எழுதலாம் என பொங்கியவர்களே இங்கு ஏராளம்... ஆக இங்கு இப்பொழுதும் காமம் ஒரு ரகசியப்படுத்துதலாகவே இருக்கிறது அதன் விளைவாகவே பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குறித்து தங்கள் மகன், மகள் களுக்கு எடுத்துகூறுவதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது... அதே மாதிரி எப்படியானாலும் சில மிருகத்தன்மை ஒட்டிக் கொண்ட மனிதர்களின் தொடுதல் எவ்வகையானது என்று தங்கள் பிள்ளைகளுக்கும் விளக்கிட தவறிவிடுகிறார்கள்... ஒரு தூக்கு இதையெல்லாம் சரி செய்யுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன்.. போலவே... ஏதேனும் ஒரு சம்பவம் தஷ்வந்துக்கள் மாதிரியாக நிகழ்ந்து அதில் பலரின் விமர்சனங்களை நன்றாக கவனியுங்கள் , குறி அறுக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்றே இருக்கும் ஒருவரும் " நிகழ்ந்து விட்டது அடுத்து என்ன மாதிரியாக சமூகத்தை நகர்த்தப் போகிறோம்" என விமர்சனம் எழவே எழாது... இதுவும் கடந்து போகும் என்பதாகத்தான் எதுவும்,, இயலாமைக்கு " சவுதி தண்டனையை நடைமுறைப் படுத்த வேண்டுவோம்,,,
எழுதுவேன் இன்னமும்....

Tuesday, February 20, 2018

பெயரற்றவ(ளி) னின் பேரன்பு





பெயரற்றவ(ளி)னின் பேரன்பு

அவ(ள்)ன் அசைவுகளற்றவனில்
இருந்து
ஒரு தும்பியின்
விரல் பிடித்து சில மணித் துளிகளை
கடந்து விடும் ஆசையில்
முற்றத்து பூஞ்செடிகளின்
மீது பற்று கொள்கிறான்...

துறப்பு என்பதன் பொருளில்
தன்னை அர்ப்பணித்து
தேடுகையில்
அவனை சூழ்ந்து வெறும்
தும்பிகள் மட்டுமே
தன் மெல்லிய சிறகுகளினால்
சிறை வைத்துவிடுகிறது

தும்பிகள்  அனைத்தும் சேர்ந்து அவனை என்ன சொல்லி அழைக்கும்....

ஆழ்ந்த உறக்கத்தில் அத்துணை பெயர்கள் கனவுகளில் அவனுக்கு
மட்டும்....

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...