Tuesday, October 16, 2018

பிழை



காட்சிகள் சிந்தும்
நின் உடல் மொழியில்
பெருங்கனவுகள் ஒளிந்திருக்க
இயல்பாய் இமைக்கும்
கண்ணசைவுகளில்
யாதொரு மந்திரமும்
புலப்படவில்லை
எது பிழையென
நானறியேன்
கீழ்வானம் சிவப்பதற்குள்ளாக
என் சிறைவாசம் விடுவித்தலாகாதோ....

Friday, October 12, 2018

திவாலிந்தியா



இது ஏதோ பழைய திவான்களின் நாடு என புருவங்களை உயர்த்த வேண்டாம்... அதைப் போலவே புதிய திவான்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்... மோடி ஆட்சியில் இந்தியா ஏகபோக வளர்ச்சியடையும் என மோடிக்கே 56 இன்ச் என அளந்துவிட்ட அத்துணை வாய்களும் இன்று கமுக்கமாய் வேறொரு விஷயங்கள் , சம்பவங்கள் என நம்மை மடைமாற்றிக்கொண்டே இருக்கிறது... ஆனால் ஹிந்துத்துவ பார்ப்பனிய பாஜக மோடியின் பின்னடைவுகளை பற்றி நாம் எடுத்துக்கூறினால் உடனே அவர்களுக்கு வால் முளைத்துவிடுகிறது... அந்த புதிய திவான்கள் யார்?
அதானிகளும் , அம்பானிகளும் , வால்மார்டுகளும் தான் மோடி ஆட்சியில் முளைத்த புதிய திவான்கள்... ஏதோ வளர்ச்சி , வளர்ச்சி என்று கதைத்துவிட்டு இந்த இந்திய நாட்டை சுரண்ட என்னென்ன வழிகளெல்லாம் இருக்கின்றதோ அந்தந்த வழிகளையெல்லாம் யுக்தியாக பயன்படுத்தி சனநாயக இந்தியாவில் சாதிமத வெறியை குறிப்பாக ஹிந்துத்துவ மதவெறியை கிளறி விட்டு சமத்துவத்தை , சகோதரத்துவத்தை குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை மொத்தமாய் சீர்குலைத்து இன்று "திவாலாகும்" நிலையில் கொண்டு வந்திருப்பதுதான் மோடியும் மோடிக்களை கைப்பாவையாக்கி வைத்திருக்கும் இந்த கார்ப்பரேட்டுகளின் முக்கிய பணிகளாக இருக்கிறது... எங்கும் சுரண்டல் , எதிலும் சுரண்டல் என்பதே மோடியின் ஆட்சியில் பிரதான மந்திரமாய் இருக்கிறது, இவர்களை நாட்டை சுரண்டுவது மட்டுமில்லாமல் நாட்டின் குடிமக்களையும் சேர்த்தே வதைத்தெடுக்கிறார்கள்‌..
அதென்ன "திவாலிந்தியா" ?





ஆமாம் இந்தியா திவாலாகும் சூழலுக்குத்தான் தற்போது தள்ளப்பட்டுள்ளது, முக்கியமாக இவர்கள் நாட்டை திவாலாக்கும் வேலையை விட ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தை திவாலாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள் , பாஜக மோடி பிரதமராக பதவியேற்றில் பெட்ரொல் விலை ரூ 30 க்கு கிடைக்கும் என அன்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ 100 ஐத் தொடப்போகிறது.. அதேபோல டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை மோடி ஆட்சிக்கு வந்தால் அபரிவிதமாக ஏற்றம் காணும் என்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் என்ன நடக்கிறது? டாலரின் மதிப்புதான் ஏற்றமடைந்து ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் அதள பாதாளத்தை நோக்கி செல்கிறது அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.47 என உயர்ந்து நிக்கிறது, இந்த தலைகீழ் விகிதங்களைத்தான் ஹிந்துத்துவ மோடியின் வளர்ச்சியென்று வரிந்துகட்டப் போகிறார்களா? எதை உயர்த்த வேண்டுமோ அது உயர்த்தப்படவில்லை, எதை குறைக்க வேண்டுமோ அதையும் குறைத்தபாடில்லை , ஆனால் இன்னமும் இவர்கள் இல்லாத அந்த 56 இன்ச்சை? (எதை?) பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். புதிய திவான்களை வளர்த்துவிட்டு பாமரர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த புதிய இந்தியா "திவாலிந்தியா" என இவர்கள்தான் பிரசவித்தார்கள் என பெருமையோடு வேண்டுமானால் மோடி பக்தர்கள் பூரிப்படைந்து கொள்ளலாம்...


இன்னமும் தேடிப் பார்க்கிறேன்...

"நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்றால்? " என ஹிந்துத்துவ பார்ப்பன பாஜகவின் காலை நக்கிக்கொண்டிருந்த ஜோ டி குரூஸ்கள் , ஜெமோக்கள் , சாருக்கள் , இப்போது புதிதாய் முளைத்த அரசியல் புள்ளியல் நிபுணர்? மாரிதாஸ்கள் எந்த எலி பொந்துக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் பேனாக்களை அவர்களே செரித்துக்கொண்டிருக்கிறார்களென்று...
எதுவானாலும் சுரண்டல்களுக்கு எப்பொதுமே பெருச்சாலிகளின் துணைவேண்டுமல்லவா.....

Sunday, October 07, 2018

கனவுகள் வருவதில்லை




யாதொரு கனவுகளும் எனக்குள்
வருவதில்லை
பிறைதேடி பகலிரவு முழுவதும்
உறக்கத்தை தேடி
நித்தம் அலையுமென்
ஆத்மார்த்தமான மனதிற்குள்
எதையோ அழியாச் சுடராய்
கட்டிவைத்துள்ளேன்
பேரன்பு எனக்குள் படர்ந்து
ஆராதிக்கும் பிசாசுகள் ஆனாலும்
ஏற்றுக்கொள்வேன்
அப்போதாவது சிறு கனவேனும்
வருமல்லவா....

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...