Saturday, January 05, 2019

கௌசல்யா - சக்தி சச்சரவுகள் குறித்து - RJ மீனா

RJ MEENA வின் பதிவு

தமிழ் சமூகத்திற்கு வணக்கம்! நலம் சூழ்க!

27.12.2018 அன்று நடைபெற்ற சக்தி கௌசல்யா திருமணம் சார்ந்த விசாரணையில் கலந்து கொண்ட ஒரு பெண்ணாக பொது சமூகத்தின் முன்பு அங்கு நடைபெற்ற விடயங்களை சம்பந்தப்பட்ட பெண்களின் சார்பில் வைக்க விரும்புகிறேன்.

நான் நிமிர்வு கலையகத்தின் முன்னால் பறைக் கலைஞர். சக்தி கௌசல்யா மற்றும் வேறு சில பெண்கள் சார்ந்த "சில ரகசிய விடயங்கள் " எனக்குத் தெரிந்ததால் என்னை திட்டமிட்டு கலையகத்திலிருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து நான் கலையத்தில் விளக்கம் கேட்ட போது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மாறாக நான் நடத்தை சரியில்லாத பெண் என என் குறித்து கேட்ட மற்றும் கேட்காத சக தோழர்களிடம் சக்தி நேரடியாக சொல்லியது குறித்து நான் அந்த விசாரணையில் விளக்கம் கேட்டேன். ஆனால் உரிய விளக்கம் ஏதும் தராமல் நான் காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாக சொல்லப்பட்டது. மேலும் நான் சக்தியிடம் காதலிப்பதாய் சொன்னதாகவும் அந்த பிரகஸ்பதி மறுத்து என்னை கலையகத்திலிருந்து வெளியேற்றியதாகவும் சொல்லப்பட்டது. ( இவன பத்தி தெரிஞ்சும் காதலிச்சு நாசமாபோக நான் என்ன கௌசல்யாவா).

ஒரு பெண்ணை உடலியல் ரீதியாக தொந்தரவு செய்வது மட்டும் அல்ல உளவியல் ரீதியாக தொந்தரவு செய்வதும் அவளை பொதுத்தளத்தில் இயங்க முடியாதபடி செய்வதும் மன்னிக்க முடியாத குற்றம்தான். தன் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அந்த பெண்ணின் நடத்தை மீது விமர்சனம் செய்து உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தினால் அவர்கள் அஞ்சி விடுவார்கள் என்பது எங்கள் விடயத்தில் பொய்த்துப் போனது. ( இது எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் சக்தி பயன்படுத்தும் நவீன யுக்தி இதுதான்..)நாங்கள் இனிமேலும் ஒடுங்கி இருக்கமுடியாது.ஆகவே தான் எழுதுகிறேன்.

அங்கு சக்தி கௌசல்யா இருவரும் பல கேள்விகளுக்கு விமர்சனங்களுக்கு வாய் திறக்காமல் மௌனியாக இருந்தது மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் கோரிக்கைக்கு துளி கூட செவிமடுக்காமல் அவர்களாக தன்னிச்சையாய் தீர்ப்பு சொன்னது எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டு அறங்கேற்றிய நாடகம் போல இருந்தது.

1, தனிமனித ஒழுக்கம் இல்லாத சக்தி பறை இசைத்து அதை கொச்சைப் படுத்தக் கூடாது. அது தனி மனித உரிமை என சொல்வீர்களேயானால் சமூகம் சார்ந்த குறிப்பாய் அம்பேத்கரிய, பெரியாரிய மேடைகளில் சக்தி பறை வாசிக்கக் கூடாது. அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் பெயர்களை உச்சரிக்கக் கூடாது. (ஆக மொத்தம் பறையை எடுக்க கூடாது)

2. கௌசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை சங்கர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆணவப்படுகொலைப் போராளி நாடகத்தை இனியும் அரங்கேற்றக்கூடாது. அதைப்பற்றி பேசும் உரிமையையும் தகுதியையயும் இழந்துவிட்டார். இவை இரண்டு மட்டுமே நாங்கள் வைத்த கோரிக்கை ஆனால் முன்னரே முடிவு செய்து வந்தார்போல் எங்கள் கோரிக்கைகளுக்கு துளியும் செவிமடுக்காமல் சில தீர்ப்புகள் சொல்லப்பட்டது.

மூன்று இலட்ச ரூபாய் தருவதாய் சொன்னதை "அந்தப் பெண்" அங்கேயே மறுத்துவிட்டார். அதை பெறவும் இல்லை. பெறப்போவதும் இல்லை.

மொத்தத்தில் இந்த தீர்ப்பில்  பாதிக்கப்பட்ட திருநங்கை உட்பட எங்களுக்கும் உடன்பாடில்லை என்பதை சமூகத்தின் முன்பு சுய சாட்சியமாக ஏனைய பெண்களின் சார்பில் பதிவு செய்கிறேன்.

இவ்விருவரின் தவறுகள் மற்றும் செயல்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்ட இந்த சூழலில் அவர்கள் மேடை ஏறுவதும் போலிப் போராளிகாய் வேடமிடுவதும் நியாயம்தானா என முடிவு செய்யும் உரிமையை காலத்தின் சாட்சியாக தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கிறோம்.

பின் குறிப்பு :

நாங்கள் வைத்த மேற்படி இரண்டு கோரிக்கைகளும் கூட நாங்கள் வலிந்து திணித்தது அல்ல. திருமணத்திற்கு முன்பே சக்தி வேண்டுமா அல்லது பொதுவாழ்க்கை வேண்டுமா எனக் கேட்டபோது சக்தி தான் வேண்டும் என சொன்ன கௌசல்யாவின் வாக்கை இப்போது காப்பாற்றக் கோருகிறோம்.

திருவாளர் ஒழுக்கசீலர் சக்தியும் இனிமேல் பறையைத் தொட மாட்டேன் என சொன்னார். ஆகவே அதை செய்ய சொல்கிறோம்.

இந்த விசாரணையின் போது அவர்கள் இருவரிடமும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒருவரை ஒருவர் கிள்ளி விளையாடிக் கொண்டிருந்தது இன்னமும் அதிர்ச்சியாக இருக்கிறது.  யார் என்ன பேசினாலும் பதில் சொல்லி விடக் கூடாது என திட்டமிட்டே வந்திருக்கிறார்கள்.

அறிக்கையின் முதல் வரியிலேயே திருமணத்திற்குப் பின்பு நடந்த விமர்சனங்கள் என்கிறார்கள் உண்மையில் திருமணத்திற்கு முன்பே பலருக்கும் தெரியும். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி சம்பந்தப் பட்ட பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் நடக்காது என்று வாக்குறுதி அளித்துவிட்டு ரகசியமாய் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இது பற்றிய ஆடியோ விரைவில் வெளியாகும்.

நன்றி.!

RJ MEENA

No comments:

Post a Comment

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில்...