Monday, February 04, 2019

சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்




சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ... எப்பொழுதும் ஒன்று சொல்வதுண்டு " யானைகள் அத்துமீறி விளைநிலங்களில் நுழைகின்றன என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் ,, மனுசப் பயல்களாகிய நாம்தான்தான் அவைகளின் வனப்பகுதிகளை அழித்து அத்துமீறி வந்தேறிகளாக குடிபுகுகின்றோம் ....



ஒரு நாட்டில் குறைந்தபட்சமாக 33% என்கிற அளவிலாவது காடுகளின் பரப்பு இருக்க வேண்டும். இந்த அளவு என்பது இறுதிகட்ட அபாய அளவு. ஆனால் இன்றைக்கு இந்த அபாய அளவையும் தாண்டி கீழிறக்கி இப்போது சுமாராக 15% அளவிற்கு  போனால் போகிறது என்கிற அளவில் மட்டுமே மலைச் சரிவுகளில் காடுகளை இடையிடையே விட்டு வைத்திருக்கிறோம்...

நமது நாட்டை பொறுத்தவரை மலை முகடுகளையும் சமவெளிகளையும் நமக்கே நமக்கானதாக ஆக்கிரமித்துக் கொண்டோம். இடையே விட்டுவைத்திருக்கிற அந்த மலைச்சரிவுகளே ஒட்டுமொத்த வனவிலங்குகளுக்கானது என வரையறுத்து வைத்திருக்கிறோம்.  இதற்குமேலும் இந்த நில அளவு சரியாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் இப்போது இருக்கின்ற அந்த குறைந்த பட்ச அளவையாவது இதோடு விட்டுவைத்து இதற்கு மேலும்  கீழே இறங்கி விடாமலிருக்கும்படி, அதிகார வர்க்கத்தின் மீதும் கார்ப்பரேட் சாமியார்கள் மீதும் நமது எதிர்ப்பு கிளம்ப வேண்டும் ... காடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த மனிதர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ ... ஒரு நாட்டின் வனத்தை அழித்து முற்றிலுமாக அங்கே காவி மயத்தை நிறுவி மக்களை மூடர்களாக வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்ற கஞ்சா சுடுக்கிகளிடம் காட்டாத வீரத்தை இந்த அரசு ஒரு யானையிடம் பிரயோகிக்கிறது என்பது வெட்கக்கேடு இல்லையா ? முதலில் இதுபோன்ற போலிச்சாமியார்களிடமிருந்து காடுகளை மீட்டும் போலவே மற்ற மனுசப் பயல்களிடமிருந்தும் காடுகளை மீட்டு வன மிருகங்கள் வாழ ஏதுவாக காடுகளை பாதுகாத்தால் போது அவைகள் ஊருக்குள் நுழைவதை தன்னாலே நிறுத்திக்கொள்ளும் , இதில் அதிமுக்கியமாக peta பீட்டா  அமைப்புகள் இப்போது வரையில் சின்னத் தம்பி யானைக்காக எவ்வித அறிக்கையும் விடவில்லை என்பதை கவனித்தீர்கள் எனில் அவ்வகையான அமைப்புகள் விலங்குகள் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு மேற்குறிப்பிட்ட போலிச் சாமியார்களின் சுகபோக வாழ்வுக்கு மட்டுமே துணைபோகும் என்பதை நன்கு அறியலாம் ... #savechinnathambi சின்னத் தம்பியை பாதுகாப்பதில் தான் மனித நேரம் நிரம்பியிருக்கிறது ...


0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...