Saturday, June 29, 2019

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலை



          சாதிதான் சமூகமென்றால்
          வீசும் காற்றில் விசம்
          பரவட்டும் - தோழர் பழனி பாரதி


கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.


இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள்  தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் அரிவாளால் கனகராஜையும் அவர் காதலித்த பெண்ணையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறான்.

இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


சாதி வெறிகள் தமிழக மண்ணில் மிகவும் வேகமாக வளர்வதை இந்த ஆணவப் படுகொலை காட்டுகிறது , சுயசாதி வெறியில் கொலைகளை நிகழ்த்தும் மிருகங்கள் உண்மையில் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்களே ... சாதியம் இருக்க வேண்டும் ஆனால் சாதிவெறி இருக்க கூடாது என்கிற போலியான பிம்பங்களை முதலில் அழித்தொழித்தல் வேண்டும் "சாதியே வெறி தான் " என்பதை தயவுசெய்து அடித்தள மக்களிடம் உணர்த்தப்பட வேண்டும் , சாதி ஒழிப்பு என்பது மிகத்தீவிரமாக எடுத்துச்செல்ல சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் ...

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது மோடியே ...



ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின் அரசியல் உளவியல் , இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்ப்பன அஜென்டாவை திணிக்கும் பிற்போக்குகளை கடந்து வந்திருப்போம் , ஜோடி குரூஸ் , ஜெமோ , மாலன் , பானு கோம்ஸ் , சாரு , என இதன் பட்டியல்கள் நீளும் ... போலவே மாநில அடிமை அரசும்  மோடிக்களின் காவி மயமாதலை எவ்வாறு அமல்படுத்துகிறார்கள் என்பதை நாமும் கண்கூடாக பார்த்துக்கொண்டு வருகிறோம் , அரசு பள்ளிக்கு துரோணன் பெயர் , பாரதிக்கு காவி முண்டாசு (பாரதியே காவிதான் என்றாலும் அடையாளப்படுத்துதல் எதற்கு? ) வகுப்பறை மேசைகளில் காவி நிறம் அடிப்பது , பாட புத்தகங்களில் காவியை திணிப்பது , என அடுக்கடுக்குகளாய் சொல்லிக்கொண்டே போகலாம் ... இப்போது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதை எடுத்துக்கொண்டோமானால் அது முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு எதிரானது , கிட்டத்தட்ட இந்தி மொழியை ஒரே தேசம் ஒரே மொழியென இவர்கள் மாற்றத் துணிந்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம் , ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருள் வழங்கலாம் , அதன் விலை நிர்ணயம் , விநியோகத்தின் தன்மை , பொருட்களின் தரம் , என்பன எல்லாவற்றையும் இனி கார்ப்பரேட்டுகளே தீர்மாணிக்கும் , ஏற்கனவே ரேஷன் கடைகளில்  எவனோ எந்த போலி நிறுவனமோ  மட்டமாக  தயாரிக்கும் உதிரி பொருட்களை வாங்கினால்தான் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற கார்ப்பரேட் மூளை வியாபார யுக்தி இங்கு எப்போதோ வந்துவிட்டது , மிகவும் மலிவான தரம் கொண்ட சோப்பு , தேங்காய் எண்ணெய் , டீதூள் , என அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தகுதியற்றதாகவே தூக்கி வீசப்படுகிறது , ஆனால் அதனை ரேஷன் கடைகளில் விற்கும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடைகிறது , இது இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்தளவுக்கு கொள்ளையடிக்க போகிறது என்பதை  தயவுசெய்து ஏழை எளிய மக்கள் உணர வேண்டும் .

Thursday, June 27, 2019

அழுது உடையும் கண்ணீர்




நிதானிப்பதற்குள்
நிராகரித்து விடுகிறது
காதலும் வாழ்வும்
மடிந்து மண்ணில் துளிர்விடும்
புதிய சிறகுகளின்
வார்த்தைகளில் சிறு சிறு
சாரல் தெளிக்கவும்
வானம் பார்த்து மீண்டும்
தரைக்கு திரும்புகிறது
எதனுடனும் ஒட்டாத அவளி(னி)ன்
அழுது உடையும் கண்ணீர்

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...