Monday, July 04, 2016

புத்தனுக்கு

அமைதியாக
புத்தன்
அமர்ந்திருக்கிறான்

ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது

அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்

ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது

என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று

வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்

மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது

இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,

5 comments:

  1. கவிதை அருமை நண்பரே மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அற்புத வரிகள் நன்று

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...