Sunday, May 24, 2015

கல்கியின் மூன்று வரலாற்று நூல்களை எவ்வாறு வரிசைபடுத்தி வாசிப்பது?






இலக்கிய உலகில் "கல்கி" என்கிற
இரா. கிருஷ்ணமூர்த்தி என்றதும்
எல்லோர் மனதிலும் கடலலைபோல
அடித்தெழுந்து ஓய்ந்து நிற்குமந்த
"பொன்னியின் செல்வன்" எனும்
வரலாற்றுப் புதினம். நாம் வாழும்
நிகழ்கால உலகினை
உதறித்தள்ளிவிட்டு கடந்தகால
வாழ்வுக்கு திரும்ப முடியுமா?
என்றால் திரைப்படங்களில்
காட்டப்படும் மாயாஜாலங்கள்
தேவையில்லை புத்தகங்களை
வாசித்து விடுங்கள் நீங்கள் நிச்சயம்
முந்தைய கால சமூதாயத்தோடு
ஒன்றிணைந்து வாழ்வீர்களென்று
உணரச்செய்தவர் கல்கி.
வார்த்தை ஜாலங்கள்,இயற்கை வர்ணிப்புகள்,காதல்
ரசனைகள்,இல்லற இனிப்புகள்
இவையனைத்தையும் ஒரு பேனா
எழுதுகிறதே! அது பேனாவா?
இல்லை மாயக்கோலா? எனும்
சந்தேகம் வந்தால் சந்தோஷத்தோடு
கல்கியின் படைப்புகளை நீங்கள்
நுகர்ந்துள்ளீர்கள் எனச்சொல்லலாம்.
பூவிதழை மீறி வழியும் பூக்களில்
வழியும் தேனமுதை கண்டதும்
தேனீக்கள் கொண்ட இன்பத்தேன்
மகிழ்வினை கண்டு இருதேனமுது
ஒரே கிண்ணத்தாலா!  . எனும்
ஆச்சர்யத்தின் அறிகுறிகளை
அப்படியே உள்வாங்கி வரலாற்றுப்
புதினமெனம் புத்தக பூக்களில்
வழியும் தேனெழுத்துக்களை
நுகரும் வாசகனும்
தேனமுதாகிவிடும் விந்தையைச்
செய்துகாட்டியதால் தானோ
என்னவோ கல்கி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
அனேகர்களால் வாசிக்கப்பட்ட "பொன்னியின் செல்வன்" உண்மையில் வாசகனை
கட்டிப்போடும் கயிறுதான்.
அதேவேளையில் இவ்வொற்றை
நாவலை படித்துவிட்டு கல்கியை
வாசித்துவிட்டேன்   என்று
சொல்வது இன்று பரவலாக
பார்க்கலாம். அப்படி பொன்னியின்
செல்வனை மட்டும் படித்துவிட்டு
நகர்ந்து போகிறவர்கள் உண்மையில் அந்நாவலையே முழுமையாக வாசிக்கவில்லை என்றேத் தோன்றினால் அது மனதிற்கு கொஞ்சம் வேதனையாகத்தானிருக்கும்.
பொன்னியின் செல்வன் நாவலானது முற்றுபெற்ற
நாவலா? என்றால் இல்லையென்றேச் சொல்லிவிடலாம் காரணம் அந்நாவல்
மேலும் இரு நாவலுக்குத்
தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.
அப்புள்ளியானது எங்கேயுள்ளது
என்பதை வாசகன் அறிந்தால்
மட்டுமே அவ்வாசகன் முழுமையாக
பொன்னியின் செல்வனை நுகர்ந்து
விட்டானென்று எடுத்துக்
கொள்ளலாம். பொன்னியின் செல்வன் நாவலை
வாசித்தோருக்கு"கோடியக்கரையை" அவ்வளவு
எளிதாக மறந்துவிட முடியாது.
அவ்விடத்தில்தான் மூன்று நாவல்களுக்கா
புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரலாம் . நாவலின்
கதாநாயகனான பொன்னியின் செல்வனான
அருள்மொழிவர்மனுக்கு ஏற்பட்ட
விஷக்காய்ச்சலை குணமாக்கும்
புத்த பிக்ஷ்க்கள் இறுதியாக
காட்டாற்று பேரலைகளால்
அடித்துச் செல்லப்பட்டு அழிந்து
போவார்களே அந்நிகழ்வில் தான்
அடுத்த நாவலுக்கான
புள்ளியிருக்கிறதென்று
உணர்ந்தால் வாசிப்பானது
முழுமை கொண்டதாக
எடுத்துக்கொள்ளலாம்.



அந்த அடுத்த நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட
முடியாது . பல்லவர்களின் கலைவண்ணத்தை
எடுத்துச் சொல்லும் "சிவகாமி
சபதம்" என்கிற வரலாற்று நாவல்தான்
அது, விளங்கவில்லையா?
மீண்டுமொருமுறை வாசித்து விடுங்கள்
பொன்னியின் செல்வன் எனும்
நாவல் முடிவில்லை அது ஆரம்பமென்று
விளங்கும். சிவகாமி சபதம் என்கிற நாவலை
வாசித்தோருக்கு சளுக்க வீர்களையும் அச்சளுக்க
வீர்களின் தளபதியான நீலகேசி எனும் நாகநந்தி புத்த பிக்ஷ்ஷூவை மறந்திருக்க
மாட்டார்கள். சிவகாமியின் மீதான
அதீத காதலால் அவரை அடைய நாடுகடத்தி
தன்னுடைய சளுக்க நாட்டில் குடியமர்த்தும்
நாகநந்தி எனும் புத்த பிக்ஷ்ஷு சிவாகாமி
சபதமெனும் நாவலின்படி
எதிராளியாகவும் , துரோகியாகவும் ,
வில்லனாகவும் சித்தரிக்கப்படுகிறார் .
இறுதியில் பரஞ்சோதியால் கைகளை இழந்து
கொல்லப்பட்டாரா? இல்லையா?
என்கிற எதிர்பார்ப்பு எழுப்பப்பட்டிருக்கிறதே
அங்கேதான் மூன்றாவது நாவலுக்கான
புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதென்று
வாசிப்பாளர்கள் உணர்ந்தால் சிவகாமி
சபதம் நாவலை அவர்கள் முழுதாய்
நுகர்ந்துவிட்டார்களென்று எடுத்துக்
கொள்ளலாம்.



அந்த மூன்றாம் நாவல் எது? என்கிற
கேள்வியெழுமேயானால் அந்த
நாவலையும் அவ்வளவு எளிதாக
கடந்துவிட முடியாது . மேற்கண்ட
சிவகாமி சபதமெனும் நாவலால்
அறியப்பட்ட பல்லவர்களின் காலத்திய வரலாற்றுப் புதினமான "
பார்த்திபன் கனவு" எனும்
நாவல்தான் அம்மூன்றாவது
புள்ளியென உணரலாம்.
பார்த்திபன் கனவு நாவலை
வாசித்தவர்களுக்கு கபால
பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷுவை அவ்வளவு எளிதாக
மறந்து விட முடியாது. நரசிம்ம
பல்லவரின் ஆட்சியினை கவிழ்க்க
கபால பைரவராக வேடமிட்ட புத்த
பிக்ஷ்ஷு மேற்கண்ட சிவகாமி சபதம்
எனும் நாவலில் சிவகாமியை
கடத்திச் சென்று அதனால்
கையிழந்து பரஞ்சோதியிடம்
உயிர்பிச்சை பெற்று மூன்றாவது
நாவலுக்கு முக்கியமானதொரு
இடத்தில் அங்கம் வகித்த
நீலகேசியோடு பார்த்திபன் கனவு
நாவலை முடித்திருப்பார் கல்கி .
இதன் மூலம் பொன்னியின்
செல்வனோடு நாவல் முடிவுபெறவில்லை என்பதை
உணரலாம் .ஆகவே வாசிப்பாளர்கள்
பொன்னியின் செல்வனோடு
முடித்துக் கொள்ளாமல் அதன்
தொடர்சியான சிவகாமி
சபதம்,பார்த்திபன் கனவு, நாவல்களை வாசித்தால் தான் நாவலின் தேனமுது ருசியை சுவைக்க முடியும் . முதலில் பொன்னியின்
செல்வன், இரண்டாவதாக சிவகாமி
சபதம் ,மூன்றாவதாக பார்த்திபன்
கனவு என்று வரிசைபடித்தி
வாசிக்கப்பட வேண்டும் .
அவ்வாறில்லாம் இதன் வரிசைகளை
வேறுபடுத்தி வாசித்தால்
முழுமையாக நாவலை
ருசித்துண்ண முடியாது .
வாசிக்கத் தொடங்குங்கள்
வரிசைபடியே
ருசித்துப் பருகுங்கள்
நாவலெனும்
தேனையே,,, புத்தக வாசிப்புதான்
நம்மை புதுவுலகை படைக்கும்
வழிகளை காட்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...