Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, October 29, 2015

பெரியவரும்,மதுப்பழக்கமும்,,,

நரைத்தமுடி,பெருந்தாடி, நடுக்கத்தில் உடல்,ஆனால் சோர்வடையாத மனதுடன்
,அசாத்தியமான கம்பீரத்தோடு கைத்தடி ஊன்றி நடந்த வருகிறார் அந்தப்
பெரியவர் மெதுவாக,,,ஊர் ஊராய் சுற்றி கடைசியாக தஞ்சம் வெறும் காட்டுவழி
பயணத்தில் தன்னைப்போலவே காய்ந்து கிடக்கும் ஊர் அதுவென அப்போதே
உணர்ந்தார் . ஊர் மக்களின் ஒருவிதப்பார்வையில் அச்சம்
,மந்திரவாதியோ!சூனியக­்காரனோ! சூழ்ச்சி சாமியாரோ! பிச்சைக்காரனோ!
பரதேசியோ! தீவிர கடவுள் பக்தனோ! தீர்த்தக்கரை முனிவனோ! இப்படியெல்லாம்
எழுந்த கேள்விகள் அப்படியே பெரியவர் மீது கண்பார்வையாக விழுந்தது.
கேள்விகளையெல்லாம் உள்வாங்கிய பெரியவரின் முகத்தில் பிரகாசமாய் வெளிச்சம்
அனுபவம் பேசுகிறது அவரின் மீதான விமர்சனப்பார்வைகள். அதற்கிடையிலும்
யாரும் முந்திக்கொள்ளவில்லை எழுந்த ஐயத்தை வெளிப்படையாக கேட்க,,,
பூனைக்கு மணி கட்டினார் கருவேலங்காட்டு பழுத்த பழமாக தெரிந்த ஊருக்கு
மூத்தவரான மற்றுமொரு பெரியவர்,,,
யார்பெருசு நீங்க? யாரைத்தேடி வந்தீங்க?
ஒரவுக்காரக யாராது இருக்காங்ளா? அசலூருக்கு ஏதும் வழி தேட்ரீங்களா? சாமியாரா?
அவர் பங்கிற்கு அடுக்கினார் கேள்விகளை,,,

அதற்குள் கூட்டம் கூடிவிட்டது அந்தப் பெரியவருக்காக இருந்த ஆக்ஸிஜன் அளவு
கொஞ்சம் குறையுமளவுக்கு,,,கூடிய கூட்டத்தாரை நோட்டமிட்டார் பெரியவர்
அத்துணை பேரும் அழுக்குகளாய்,ஆடைகிழி­ந்து,வறுமையின்
பிரதிநிதிகளாய்,மதங்க­ளின் அவதானிப்புகளாய், வறட்சியின் வரவுகளாய்,,,
சுற்றிப்பார்த்துவிட்­டு பேசத்தொடங்குகிறார் அந்தப் பெரியவர்,,, பேச
வந்திருக்கிறேன் உங்களோடு,,,பகிர்ந்து­ கொள்ள வந்திருக்கிறேன் பட்ட
அனுபவங்களை,,, வாழ்தல் வழி இதுவெனத் தெரியும் வந்தேன் உங்களோடு வளர்த்திட
அறிவை,,,எப்படி வசதி அதோ அந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டு
பேசலாமா? பாவம்பா இந்த கைத்தடி என்எடையை எவ்வளவு நேரம்தான் அதுவும்
தாங்கும் உடலுக்குச் சுமையாக மண்ணிற்கு பாரமாக,, பேசியபடியே நடக்கலானார்
பெரியவர்.தடுத்தான் ஒருவன் பெருசு அது ஆத்தா குடியிருக்குர கோயிலு அதோ
பார்! ஆத்தா அமர்ந்திருக்குறா!
ஆத்தாளுக்கு காட்டுகின்ற கரிசனம் ஆடாமல் நிற்கக்கூட முடியாத இந்த
கிழவனுக்கு இல்லையா தம்பி! பேசிமுடிப்பதற்குள் முதற்பேச்சு தொடங்கி வைத்த
முதியவர் முந்திக்கொண்டார்,,, பெருசு களப்பா இருக்கு ஆத்தா கோயில்லேயே
ஒக்காந்து பேசட்டும் ,,, ஏ! கருப்பு பெருசுக்கு குடிக்க மோர் கொண்டுவா!
ஒருவழியாக வேப்ப மரத்தடியில் பெரியவரோடு ஊரும் கூடியிருந்தது. பேசினார்
பகிர்ந்தார் பெரியவர் தன் அனுபவங்களை அத்துணையும் முற்போக்குச்
சிந்தனைகளாக,,,கேட்க கேட்க பெரும் ஆவலாய் இருந்தமையால் ஈர்க்கப்பட்ட ஊர்
மக்கள் அப்படியே வீழ்ந்தார்கள் பெரியவரின் பேச்சால்,,,கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றங்கள் அங்கே நிகழ்ந்த வண்ணமே இருந்திருந்தது அத்துணை
சுறுசுறுப்போடு,,, மூன்றாவது நாள் தொடக்கம் வழக்கம் போல மக்களிடத்தில்
தனது சிந்தனைகளை பகிர்ந்துக்கொண்டிருந்தார் பெரியவர் . அப்போது யாரும்
எதிர்பாரா நேரத்தில் தாயொருத்தி அழுதுப் புலம்பிக்கொண்டே தன்மகனை இழுத்து
வந்து அந்த பெரியவர் முன் நின்றார்,
என்ன? என்ன ஆயிற்று?
பெரியவர் கேள்விகளுக்கு அழுதபடியே தாய் தன் குமுறலை முன்வைத்தார்,,
ஐயா இவன் எம்மொவன் தெனமும் குடிச்சிட்டு வந்து தேவயில்லாம ஒடம்ப
கெடுத்துகினு அங்கங்க சண்ட வாங்கிகினு திரியுரான் , பெத்த கடனுக்கு
சுமக்கறேன், இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லி நல்லவழியில திருத்துங்க
சாமி ஒங்களுக்கு புண்ணியமா போவும்,,, தாய் புலம்பலிருந்து மகனின் நிலையை
புரிந்துகொண்ட பெரியவர் சற்றும் யோசிக்காமல் மூன்று நாட்கள் கழித்து
வந்து சந்திக்கும்படி திருப்பி அனுப்பியிருந்தார். கூடியிருந்தோர்க்கு
ஒன்றுமே விளங்கவில்லை பெரியவரிடமே கேட்டு விட்டனர் . ஏன் மூனு நாளு
கழிச்சு வந்து பார்க்க சொல்ரீங்க என்று,,, மூன்றாம் நாள் வரும் வரையில்
காத்திருங்கள் என்றார் பெரியவர். அது பெரியவருக்கு ஆறாம்நாள் தாய்க்கு
மூன்றாம் நாள், சரியான நேரத்தில் மகனை இழுத்துவந்த தாய் பெரியவர் முன்
நிறுத்தினார். சரியாக ஒருமணி நேர அலோசனை வழங்கியதன் பின்னால் குடிகார
மகன் "இனி தான் குடிக்கப்போவதில்லை என்றும் ,மது இருக்கும் திசையையே
மறந்து விடப் போவதாகவும் உறுதியளித்துவிட்டு பெரியவரிடம் விடைபெற்று
உழைக்கச் சென்று விட்டான்.
இதற்கு ஏன் மூன்று நாட்கள்? என்கிற ஊராரின் சந்தேகத்தை உடைக்கத்
தயாரானார் பெரியவர்.
இங்கே கூடியிருப்போர்களே நான் ஏன் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன் என்று
உங்களுக்கு எழுந்த கேள்விக்கான பதில் இதுதான்,, அதுவரையில் நானும்
மதுவுக்கு அடிமையானவன்தான்,மூன்­றாவது நாள் விட்டொழித்தேன் அந்த
குடிப்பழக்கத்தை,,, மற்றவர்க்கு அறிவுரைகள் வழங்கப்படும் போது நமக்கு
நாமே திருத்திக்கொள்ளுதல் முதல்பணியாக இருக்கிறது. ஆகவேதான் அந்த
மனிதனுக்கு அறிவுரை வழங்கும் முன்னர் முதலில் என்னை நானே திருத்திக்
கொள்கிறேன். இதுதான் முற்போக்கின் சிறந்த வழி. பெரியவர் பேச்சிலேயே பல
நீதிகள் அவிழ்க்கப்பட்டு விட்டது. ஊர் மக்கள் அவரை
மதிக்கத்தொடங்கினார்கள். மற்றவரையும் மதிக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.
மதுக்கடைகள் இல்லாத ஊராக அந்த மக்கள் மாற்றியமைத்து பழைய வாழ்க்கையை
புரட்டிப் போட்டுவிட்டு புது வாழ்வியலுக்கு பயணப்பட்டு குடிமறந்து உண்மை
குடிமக்களாக வாழத் தொடங்கியிருந்தார்கள்­.

Sunday, August 02, 2015

"தாய்ப்பால்" - சிறுகதை



கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக்கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.

யாரிடத்திலும் ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ,மகிழ்சியோ அனைத்திலும் கலந்து கொண்டு ஆகப்பணியாற்றுதல் அதற்கு சிரமமாகப்படவில்லை,,,

அப்படியான விடியற்காலையில் எழுந்திருக்கலாமா? வேண்டாமா? எனும் அரைதூக்கத்திலும் தனக்கே உரித்தான அதிகார மொழியை அவிழ்த்து விடுகிறாள் கங்கா,,,

ஏய்!!! கலா,,, எங்கடி போய் தொலஞ்ச இங்க வாடி,,,
தோ!!! வந்துட்டன்மா,,, காபி பக்கத்துல வச்சிருக்கேன்,குளிக்­க வெந்நீரும் தயாரா கீதும்மா,டிபன் ரெடியா கீது,ஆபீசுக்கு போட்டுகினு போர துணிய கொடுத்தீங்கன்னா இஸ்திரி போட்டு வச்சிட்டுவேன்,,,கலாவின் பேச்சில் அப்படியொரு பணிவு,, பத்து வருடங்களாய் கங்காவின் வீட்டு வேலைக்காரி அவள்தான்,

ம்ம்ம்,,,எதுவுமே உனக்கு லேட்டுதான்,,மணி ஏழு ஆவுது, ஆறுமணிக்கெல்லாம் முடிச்சிட்டு என்ன எழுப்ப கூடாது? நைட்டு லேட்டா படுத்தது ஒனக்கு தெரியும்தானே,,, கங்காவின் அதிகாரம் பட்டுத்தெறித்தது.

இல்லம்மா,,,அதுவந்து,,,அதுவந்து,,,

என்னடி? வந்து,,,போயின்னிட்டு­,,, சீக்கிரமா என்ன எழுப்பனுமா இல்லையா?

இல்லமா,,, கொழந்த அழுதுச்சின்னு பால் குடுத்துட்டு இருந்தேன், அதான் வந்து எழுப்ப முடில,,,

என்னவோ நீ மட்டுந்தான் ஒலகத்துல கொழந்த பெத்துகிட்ட மாதிரி இன்னமும் அதுக்கு தாய்ப்பால் கொடுத்துட்டிருக்க, புட்டிப்பால அது கைல குடுத்து பழக வைடி, அப்பதான் நீயும் மத்த வேலயெல்லாம் சரியா செய்வே,,, சரி!சரி! ராஜாவும்,கொழந்தையும்­ எழுந்துட்டாங்களா?

இன்னம் இல்லம்மா ஐயா இன்னும் எழுந்திருக்கல ஆனா கொழந்த எழுந்து பசிக்கி கத்துச்சி,,, புட்டிபால் போட்டு பக்கத்துலேயே இருந்து குடுத்தேன்,குடிச்சிட­்டு தூங்கறாம்மா,,,

ம்ம்ம்! இந்தா இது இன்னைக்கு போட்டும்போர ட்ரஸ்ஸூ போய் அயர்ன் பண்ணிவையி நா அவர எழுப்பிட்டு , குளிச்சிட்டு வரேன்,,,

சரிங்கம்மா,,, துணியை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் கலா.

சோம்பலை முறித்துக்கொண்டெழுந்­து ராஜாவின் பெட்ரூமுக்கு சென்றாள் கங்கா,,,

என்னங்க! என்னங்க! எழுந்திருங்க,,, மணி ஏழரையாவது இன்னுமா தூங்குவிங்க எழுந்திருங்க ஆபீஸூக்கு லேட்டாச்சி,,,

என்னடி,,, அதுக்குள்ளவா விடிஞ்சிடிச்சி,,, குழந்த என்ன செய்ரா பால் குடிச்சாளா,, நைட்டு ஃபுல்லா தூங்கவே விடலடி,,, எழுந்தமர்ந்து குழந்தை படுத்திருந்த பக்கத்தில் திரும்பி அதன் வயிற்றை தடவிக்கொண்டே கேட்டார் ராஜா தன் மனைவியினடத்தில்,,,

ம்க்கும்,,, எங்கூட படுத்து தூங்க மாட்டேன்னு அடம்புடிச்சி அப்பா கூட தான் படுப்பேன்னுட்டாளே அதுக்கு அனுபவிங்க,,, கால்லே எழுந்து கொழந்த அழுதாளாம் கலா புட்டிபாலு குடுத்து தூங்க வச்சிருக்கா,, நீங்க போய் ரெடியாவுங்க, நான் கொழந்தகூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெடியாவுரேன்,சீக்கிர­ம் போய் ரெடியாவுங்க இப்பவே லேட்டாகிடுச்சி,, குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த ராஜாவை அவசரமாக கிளப்பினாள் கங்கா,,

அரைமணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அழைத்தாள் கலாவை,,

ஏய்!!! கலா,,, இன்னும் என்னடி செய்ர சீக்கிரம் வா! இங்க,,,

அடித்து பிடித்து ஓடிவந்த கலா கங்காவின் அருகில் வந்து என்னம்மா,,, என்றாள் முன்பிருந்த அதே பவ்யத்தோடு,,,

எல்லா வேலயும் முடிஞ்சிடுச்சா,,,சார­் ஆபிஸ் கெளம்ப எல்லாத்தையும் ரெடி செஞ்சிட்டியாடி,,, அப்புரம் அவரோட கோவத்துக்கு ஆளாய்டாதே மனுஷன் கோவப்பட்டா எப்படி நடந்துப்பாருனு தெரியும்ல,,,

எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா,,,

ம்ம்ம்!!! பக்கத்துலேர்ந்து கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ நான் ஆபீஸுக்கு கெளம்ப ரெடியாய்ட்டு வந்துட்ரேன் என்னா,,,

சரிம்மா நீங்க போய் கெளம்புங்க நான் கொழந்தைய பாத்துகரேன்,,,

கட்டில் மெத்தையிலிருந்து எழுந்து குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் கண்ணத்தை லேசாக கிள்ளிவிட்டு வெளியேறினாள் கங்கா ஆபீஸ் கிளம்புவதற்காக,,,
கட்டிலுக்கு பக்கத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டு தன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வரான்தாவுக்கு வந்தாள் கங்கா,,, உற்றுப்பார்த்தாள் தன் குழந்தையை எந்த உலகச் சிந்தனையில் மூழ்கி கிடக்கிறதோ குழந்தை,,, அதன் ஆனந்த தூக்கத்தை ரசித்தபடியே அருகில் அமர்ந்து எஜமானியின் குழந்தையை தன் மடியில் கிடத்தினாள்,,,

நதியின் அரவணைப்பு மழை நீருக்கு மட்டுமே தெரியும் அதுபோல் யாருமற்ற கலாவிற்கு அடைகலம் கொடுத்தது என்னவோ கங்காதான், முதல் முறையாக அவளை தன் வீட்டு வாசலில் பார்த்தாளவள், ஆங்காங்கே கிழந்த ஆடை கையில் பச்சிளம் குழந்தை பார்க்கவே பரிதாபமாய் இருந்தாள் கலா,,,

என்னம்மா வேணும்
ஏதாவது துணிமணி,காசு வேணுமா ? காசல்லாம் இல்ல பழஞ்சோறு கிடக்கு வீட்ல இரு எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போ! என்று கூறியவாறு சற்றே திரும்பினாள் கங்கா,,,

காசல்லாம் வேணாம்மா
எதாவது வூட்டுவேல கீட்டுவேலயிருந்தா குடுங்கம்மா செஞ்சிட்டு அப்புரமா பழஞ்சோறு வாங்கிக்கிறேன்,,, எம்புருஷன் குடிச்சி கொடலு வெந்து செத்து பூட்டாரும்மா,,, எனக்குன்னு ஆருமில்ல கைகொழந்தையோட நெக்கதியா நிக்கரேம்மா,,, வேல,,, என இழுத்தாள் கலா,,,

அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டு சரி உன் பேருன்னா? வூடு எங்க இருக்கு? கேட்டாள் கங்கா,,,

எம்பேரு கலா,
இங்கதாம்மா பக்கத்துல ஆறாவது முக்குட்டு குப்பத்தாண்ட வூடும்மா,,,

சரி ஒன்ன பார்த்தா பாவமா இருக்கு வேல குடுக்கறேன், ஆனா எங்கூட்டோட தங்கனும்,ஒன்ன எப்படி நான் நம்புரது,,

எல்லா வேலயும் நல்லா செய்வேன்மா,கையும் வாக்கும் சுத்தம்மா, நம்பிக்க இல்லனா குப்பத்தாண்ட வந்து கேட்டுபாருங்கம்மா,,,

சரி வா! போலாம் பக்கத்துலதானே இருக்கு அந்த இடம், பத்து நிமிஷத்துல போய்டலாம்லே,,,

பக்கத்துலதான்மா இருக்கு நடந்து போனாலே அஞ்சி நிமிஷம் கூட ஆகாதும்மா,,,

சரி அப்ப வா போலாம்! கங்காவும்,கலாவும் நடக்கத்தொடங்கினார்கள­். கலா சொன்னதுபோல் ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை இருவரும் குப்பத்தை தொட்டார்கள்.

கலா வீட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தாள் கங்கா,,, ஒருவர் கூட அவளைப்பற்றி தவறாகவோ,குறையாகவோ கூறவில்லை மாறாக அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டார்கள்.

ஒருவழியாக விசாரித்துவிட்டு கலாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள் கங்கா,,,

என்னங்க,,,வீட்டு வேலைக்கு ஆள் கேட்டு நீங்களுந்தான் தேட்ரேன்னு சொல்லி பேப்பர்லல்லாம் ஆஃட் கொடுத்தீங்களே,, அதெல்லாம் தேவல,ஒங்களுக்கும் சிரமமில்லாம நானே விசாரிச்சி அழைச்சிட்டு வந்துட்டேன்,,, இவ பேரு கலா,பக்கத்துலதான் இருக்கா,பாவம் யாருமேயில்ல,கையில வேற கொழந்த வச்சிருந்தா,அக்கம்பக­்கத்துல கூட நல்லா விசாரிச்சிட்டேன்,,,ந­ல்லபடியாதான் சொல்ராங்க,அவளும் வீட்டோடயே இருக்கர்தாவும் சொல்லிட்டா,என்னங்க சொல்ரீங்க நீங்க,,, கங்கா தன் கனவனிடம் கூற அருகில் கலா குழந்தையோடு நின்றிருந்தாள் ராஜாவிற்கு வணக்கம் செலுத்திவிட்டு,,,

அதான் விசாரிச்சிட்டேன்னு சொல்ரியே உன் இஷ்டம் ,,இந்தாம்மா கலா வீட்லேயே இருந்து உன் கொழந்தையோட எங்க கொழந்தையையும் நல்லா பாத்துக்க,நாங்க ரெண்டு பேரும் வேலைக்கி போய் சாய்ங்காலம் அஞ்சி மணிக்கிதான் வருவோம், இவ வேல செய்ர இடம் பக்கத்துலேயே இருக்கர்தால மத்தியானத்துக்கு சாப்ட வந்து ரெண்டு மணிக்கு வேலைக்கு திரும்பிடுவா என்னா,,, இதுக்கு முன்னாடி எங்கம்மா கொழந்தைய பாத்துகிச்சி,ஊர்ல அவசரமா வேல இருக்கர்தால கெளம்பி போயிருக்காங்க,அவங்க வந்த ஒடனே கொழந்தைய அவங்க கிட்ட குடுத்துட்டு அதுக்கப்பரம் நீ சிரமமில்லாம மத்த வேலைகள பார்க்கலாம் ஓகேவா,,,சொல்லி முடித்தார் கங்காவின் கனவர் ராஜா.

சரிங்க எஜமான் அப்டியே செய்ரேன்,,,

மொதல்ல ஏதாவது சாப்டுட்டு அப்புரம் வூட்டு வேலய பாரு,,, கங்கா அவள உள்ள அழைச்சிட்டு போய் உன் பழைய துணிய போட்டுக்க குடு,,,பாவம் கைக்கொழந்தையோட இருக்கா,,,

இப்படியாகத்தான் கலா அந்த வீட்டிற்கு வேலைக்காரிமாக வந்தாள் , கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பது போல,கோபத்தோடு கொஞ்சம் அதிகாரம் செய்தாலும் அவர்களிடத்தில் காலாவின் மீது அன்பு நிரம்பியிருந்தது. அதற்குக் காரணம் அவளின் நடத்தை,,, தான் சரியானதொரு ஆளை தேர்ந்தெடுத்துள்ளோம்­ என்கிற பெருமை எப்போதும் கங்காவிற்கு உண்டு.

கங்காவும்,ராஜாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள் . சிற்சில தடைகளுக்குப் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தது,இருவரும­ே வேலைக்குச் செல்பவர்கள்,ஆகவே பிறந்த குழந்தையை பார்த்துக்கொள்வதற்கா­க ஊரிலிருந்து தன் அம்மாவை அழைத்து வந்திருந்தான் ராஜா.கங்கா நவநாகரீக கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்தாள் தனது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்த காரணத்தால் தாய்ப்பால் கொடுத்தால் தன்னழகு கெட்டுவிடுமென்று நம்பியிருந்தாள் . ஆகவே தன்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்தாள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி அவள் மாமியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை,வேறு வழியின்றி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினாள் கங்காவின் மாமியார்.

மணி சரியாய் ஒன்பதை தொட்டுக்கொண்டிருக்க ராஜாவும்,கங்காவும் அவரவர் வேலைக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த­ார்கள். அந்த சமயத்தில் கலாவின் குழந்தை வீல்ல்,,,என்று கத்த உடனே கங்காவின் குழந்தையை ஷோபாவில் பத்திரமாய் கிடத்திவிட்டு தன்குழந்தையை எடுத்து மடியில் கிடத்தி அதற்கு தாய்ப்பாலை ஊட்டிக்கொண்டே காங்காவின் குழந்தையையும் தட்டிக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே தாமதமாகிவிட்டமையால் ராஜா அவசர அவசரமாக கிளம்பி கங்காவிடம் விடைபெற்றுக்கொண்டு, கலா!!! கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ,,, என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.வாசலில் அவர் தலை மறையும் வரை கங்கா வழியனுப்பி நின்றிருந்தாள். அவளுக்கு ஒன்பதரை மணிக்குத்தான் அலுவலகம் என்பதால் அரை மணிநேரம் குழைந்தையிடம் கொஞ்சுவதற்காக ஒன்பது மணிக்கே கிளம்பியிருந்தாள். ஷோபாவில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த குழந்தையின் அருகில் அவளும் வந்தமர்ந்து குழந்தைக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் உடல் முழுவதையும் தடவி கொடுத்துக்கொண்டே கலாவிடம் பேச்சுகொடுத்தாள்.

ஏன்டிம்மா கலா நீ!
ரொம்ப அழகா , கலையா இருந்தாலும் உம் முகத்துல எல்லாம் கோடு விழுந்து பார்க்கவே சோகையா இருக்கே இதுல கொழந்தைக்கு வேற தாய்ப்பால் கொடுத்து ஏன்டிம்மா உன் அழக நீயே கெடுத்துக்கர, அதுக்கு இப்பவே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினேனா,,­, உன் அழகும் அப்படியே இருக்கும், அதுவுமில்லாம புட்டிப்பால் குடிக்கிற சமயத்துல வேற வேல ஏதாவது பார்க்கலாம்ல,,, பாலுக்கா பஞ்சம் நம்ம வூட்ல உன் குழந்தைக்கும் சேர்த்து பால் வாங்கிட்டா போச்சி,,,

அழகு என்னம்மா அழகு அது கெடுக்குது கழுத கொழந்தையோட அறிவு,வளர்ச்சி விடவா நமக்கு அழகு முக்கியம்,,,
பாலோட தன்ம ஒன்னா இருந்தாலும் நம்ம ரத்தத்துல சொரக்குர பால் கொடுத்தா தாம்மா குழந்தைக்கு தாய்பாசம்னா என்னான்னு தெரியும், அப்பதா அது நாளைக்கி வளந்து நமக்கு தாயா புள்ளையா இருக்கும், உசுர கொடுத்து ரெண்டாவது தடவைய பொழச்சி மறுசென்மம் எடுத்து பெத்த கொழைந்தைக்கு தாயோட அரும தெரியனும்னா தாய்ப்பாலத் தவிர வெற எதுலாலேலும் கொடுக்க முடியாதும்மா,,,

தாய்ப்பாலுன்ரது வெறும் பாலில்லம்மா,,அது கொந்தைக்கு நாம குடுக்குற ரத்தம், இப்பல்லாம் ரத்த தானம் செய்ராங்களே! அதெல்லாம் எதுக்கும்மா,,, ஒரு உசுர காப்பாத்ததானே,,, அதேமாதிரி நம்ம கொழந்தைக்கு நாம குடுக்குற தாய்ப்பாலும் ரத்த தானம்தான்மா,,, ஆனா அது தானமில்ல நம்மளோட கடமம்மா,,, எனக்கு பொறந்த இந்த கொழைந்தைக்கு எந்த நோயும் வந்துடாம, அப்டியே ஏதாவது அதுஇதுனு வந்துபுட்டாகூட தாய்ப்பால தவர வேற எதுவும் கொழந்தய காப்பாத்தாதும்மா,,, நான் என் அயகுக்காக பார்த்தா கொழந்தையோட எதிர்காலமே பாழாய்டும்,,, கலா சொல்லச்சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்த கங்கா அழுதே விட்டாள், தான் இவ்வளவுபெரிய தவறையா செய்துக்கொண்டிருக்கி­றோம் என நினைத்த தருணத்தில் அவள் நெஞ்சம் மிகப்பெருமதிர்வாய் வெடிக்கத் தொடங்கியது,,, இனியும் தாமதிக்கக்கூடாது நமக்கு அழகை விட குழந்தையின் அறிவும்,வளர்ச்சியுமே­ முக்கியமென அவள் முடிவுசெய்து விட்டபடையாலும், தன் குழந்தைக்கு உண்மையானத் தாயாக இருக்க வேண்டுமெனில் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டுமென ஒரு ஏழைத்தாய் உணர்த்திவிட்டாள் என்பது அவளின் மனதுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது.

அந்த கணத்திலேயே கொஞ்சமும் தாமதிக்காமல் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தயாரானாள்
கங்கா,,, அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்பதைக்கூட மறந்து போனாள் அவள்,,, 

தன் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டுகையில் ஓர் இனம்புரியாத உணர்வின்பத்தை பெற்றிருந்தாள் அவள். அவ்வுணர்வை அவளைத்தவிர வேறு யாராலும் வர்ணிக்க முடியாது என்பது அப்போது அவளுக்குத் தெரிந்தது . தானொரு உண்மையானத் தாயாக மாறியிருப்தை அவள் மனது அவளுக்கே சொல்ல,,தான் பூமித்தாயின் மடியில் தவழ்ந்து தாய்ப்பால் அருந்துவதாக யாரிடமாவது சொல்ல துடித்துக்கொண்டிருந்தாள்,,,

அன்று மதியம் அலுவலக கோப்புக்கட்டு ஒன்றை எடுக்க மதியமே வீட்டுக்கு வந்திருந்தார் ராஜா.

எசமான், என்ன மத்தியானத்துலேயே வந்துட்டீங்க,,, சாப்பாடு எடுத்து வைக்கவா? கேட்டாள் கங்கா,

ஏம்மா கலா,,, கொழந்த எங்க? ஒரு ஆபிஸ்பைல வச்சிட்டு போய்ட்டேன் அதான் எடுத்துட்டுபோக வந்தேன்,,, கங்கா! வீட்லயா இருக்கா?

கொழந்த அம்மாகிட்ட இருக்கு எசமான்,, அம்மா கொழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துட்டு இருக்காங்க,,,

கேட்டதும் ராஜா ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டு போனான்,என்னது தாய்ப்பால் கொடுக்கறாளா? கண்கலங்கி நின்ற ராஜா மீண்டும் பேசத் தொடங்கினார்,,,

ஏம்மா! கலா,,, ஒனக்கு நான் கடன்பட்டிருக்கேன் என் அம்மா எவ்வளவோ சொல்லியும் கங்கா தாய்ப்பால் கொடுக்க மறுத்துட்டா,,, ஆனா நீ வந்த ஒடனே அவள தாய்ப்பால கொடுக்க வச்சி கொழந்தைய காப்பாத்திட்டேம்மா,,­, ஒனக்கு எப்படி நன்றி சொல்லரதுனே தெரில,,,

என்னங்கய்யா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்ரீங்க ஒங்க உப்ப சாப்டு வளர்ரேன் இது கூட செய்லனா நான் மனுஷியில்லங்க,,, அப்போதும் அவளிடத்தில் பணிவு மலிவாய் எங்கும் நிரம்பி இருந்தது.

ராஜாவுக்கும், கங்காவுக்கும் கலா,,, இன்னொரு தாயாகத் தெரிந்தாள் .





முற்றும்.


(ஆகஸ்ட் 1 உலக தாய்ப்பால் தினம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் வளர்ச்சிக்கும்,அறிவுக்கும் காரணமாய் இருப்போம் என உறுதி எடுக்க தாய்மார்கள் முன்வர வேண்டும்).

Wednesday, May 20, 2015

சிறுகதை : "ஒரு ரயில்பயணம் இரு கல்லறைகள்"

விடியலை வரவேற்று வியப்பில்ஆழ்த்திக்கொண்டிருந்த கானப்பறவைகளின் கூச்சலோடு தன்
முகத்தை மெல்ல மெல்லக் காட்டி
செங்காலை பொழுதினை பரப்பிக் கொண்டிருந்தது இளஞ்சூரியன் .
அவன் அப்போதுதான் சோம்பலை முறித்துக்கொண்டு
எழுந்திருந்தான் . எழுந்தவுடன் சூரிய வணக்கமொன்றையும்
வாசலுக்கு வெளியே நின்று சமர்பித்துக் கொண்டிருந்தான்.கடிகாரம் தன்கடமை தவறாத நகர்தலின் மூலம் மணி ஆறென்று
காட்டிக்கொண்டிருக்க செயலியில் பதிந்து வைத்த ஆறாவது
மணியோசையை கிழித்துக்கொண்டு கேட்டது அந்த குரல்.
ராஜியின் அம்மா அழைக்கிறாள் " ராஜி சீக்கிரம் குளிச்சிட்டு
கெளம்பு உனக்கு இன்னைக்கு இன்ட்டர்வியூடா,,, அவசரப்படவில்லை
ராஜி இதோ வந்துட்டேம்மா!! என்னு மட்டும் பதில்குரல் கொடுத்தான்.
ஒருவழியாக குளித்துவிட்டு காலைக்கடனையெல்லாம்
முடித்துவிட்டு புது அலுவலக இன்ட்டர்வியூவிற்கு கிளம்பத்
தயாராக ஓட்டை நாற்காலியொன்றின் மீதமர்ந்து
இன்ட்டர்வியூவிற்குத் தேவையான கேள்விகளுக்கு எவ்வாறு
பதிலுரைப்பதென தனக்குள்ளே மனப்பாடமும், மணகணக்கும்
போட்டுக்கொண்டிருந்தான். உன் அப்பா இருந்திருந்தா மத்த பசங்க
மாதிரி உன்னையும் கூட்டிட்டு போய் ஆபிஸ் வாசல்ல
விட்டுட்டுவருவாரு! சரி சாப்டியா? பசியோட போகாதே
அப்புரம் இன்ட்டர்வியூல செரமாமா போய்டும்,, இந்தா "பழையது"
குடிச்சிட்டு போ!! ராஜியின் தாயான குமரிவள்ளியின் மகன்
மீதான பற்றுதலை பறைசாற்றிக்கொண்டிருந­­்தது .இல்லம்மா! எனக்கு பசியில்ல ஒடம்பு மட்டும் ஏதோ செய்யுது,,
ஒரே பதட்டமா இருக்கும்மா,,,ராஜீ தன்
உடற்தன்மையை எடுத்துரைக்க , அப்படி சொல்லாத ராஜீ பசியால
வந்த மயக்கமும் இன்ட்டர்வியூ பயமும்
சேர்ந்து ஒடம்ப குலுக்கிப் போடுது, காலையிலே வெறும்
வயித்தோட போனா இப்படிதா ஆகும் . கொஞ்சம் பசியாறிட்டுபோ
ராஜீ. குமரிவள்ளி விடுவதாக இல்லை ஆருதலோடு பசிக்கான
உணவையும், பாசத்தையும் ஊட்டுபவள்தானே தாயாக இருக்க
முடியும் . அவள் கடமையிலிருந்து
ஒருபோதும் தவறியதில்லை,ராஜீ ஒரு அரசுக் கலை கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டாமண்டு படித்துக்கொண்டிருக்கையில்
ராஜீயின் அப்பா இறந்துபோனார். அவளுக்கு வேதனைகள்
ஒருபுறமிருந்தாலும் பிள்ளையின் எதிர்காலம் கருத்தில்
கொண்டு தன்துக்கத்தை தனக்குள்ளேயே புதைத்து
வைத்துக்கொண்டிருந்தாள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரு
வருஷம் தானேயா படிச்சிட்டு வந்துடு அதுக்கப்புரம் நீ வேலதேடி
எனக்கு கஞ்சி ஊத்தினா போதும் . அதுவர ஒனக்கு நாஞ்செய்யாம
வேறயாரு செய்வா? காலேஜுக்கு போடா ராஜீ,, என்று இயலாத
காரணத்தால் கல்லூரிக்குப் போக மறுத்த ராஜுக்கு
அப்போதப்போதைக்கு ஆறுதல் படுத்தி அவனை படிக்கவும்
வைத்துவிட்டாள் குமரிவள்ளி. வறுமை மாறாத அந்த கிராமத்தில்
ராஜீ மூன்றாவது பட்டதாரி. முதல் இரண்டு பட்டதாரிகளும் அக்கிராமத்
தலைவரின் பிள்ளைகள். படிப்பு முடித்து வேலைக்கு
எழுதிப்போடுவதில் கவனமாயிருந்தான் ராஜீ.ஒரே
பிள்ளைக்கு ஆன பணிவிடைகளையும் பாசப்பிணைப்பினையும் ஒருசேர
கொடுத்துக்கொண்டிருந்தாள் குமரிவள்ளி . உலகமுழுக்க தன்
அக்கினியால் மஞ்சள் மாலையிடாமல் மிதமானச் சூழலை தரும் வெயிலை தூற்றும் உதடுகளை அவ்வெய்யிலே கண்டு
கொள்ளாமல் தனக்கான கடமையைச் செய்துவிட்டு மாலையில்
மலைக்காட்டு மஞ்சளில் கரைந்து சிவப்புத் தாமரையாக தன்
வீடுதிரும்புதல் போல அவளும் அவனுக்காகவே உயிரைத் தன்வசம்
பிடித்து தேகத்துச் சோர்வினை கொஞ்சம் கூட மதியாமல்
உழைத்துக்கொண்டிருந்தாள். அப்படியான உழைப்பின் பலனாக
ராஜுயின் எதிர்ப்புக்களோடு வந்த நேர்முக அழைப்புக் கடிதமானது
இருவருக்குமே ஆறுதல் தந்ததென்றேச் சொல்லலாம்.ராஜீ
ட்ரெயின்ல போறியா இல்ல பஸ்ல போறியா? இன்ட்டர்வியூ மதியம்
இரண்டு மணிக்குத்தானே அரைமணிநேரத்துக்கு
முன்னாடியே போனாதா சரியா இருக்கும், அப்பதா
பதட்டப்படாத நம்மளால பதில் சொல்ல முடியும். அதனால் நீ
ட்ரெயின்லேயே போய்டு அதான் சரியா இருக்கும். அறிவுரை
வழங்குவதிலும் அவனுக்குத் துணையாக இருப்பதிலும் எழுந்தச்
சொல்லாடல்களில் பாசம் மிஞ்சி குமரிவள்ளியே கொஞ்சம்
பதட்டமாகத்தான் பேசினாள். சரிம்மா நா ட்ரெயின்லேயே போரேன்
நானும் ட்ரெயின்ல போவதுதான்
சரின்னு நெனச்சிட்டிருந்தேன் நீயே சொல்லிட்டே, நா கெளம்பரம்மா
என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க,, கீழே காலைத் தொட்டுக் கும்மிட்டவனை
கண்ணீரோடு தூக்கி கட்டியணைத்து வழியனுப்பி
வைத்தாள் குமரியம்மாள். அவன் தலை மறைந்தாலும் இவள்
தலைமட்டும் வாசலுக்கு வெளியே மகன் சென்றப் பாதையையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் பல்வேறு
எதிர்பார்ப்புகள் அவளுக்கு உள்ளதென அளவிட்டுச் சொல்லிவிடலாம்.எதிர்பார்ப்புகளை ஏற்காத  மனிதர்கள்தான் இம்மண்ணில்
இருக்கிறார்களா? ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகள் உறங்கிக் கொண்டிருக்கத்தான் செய்கிறது.
வாழும் காலத்தில் ஏமாற்றமே மிஞ்சிய எத்தனையோ உயிர்களிடம்
உறவாடிக்கொண்டிருக்கிறதே இயற்கையின் செயல்திட்டம்
இதுதானென்று உணர்கையில் ஒரு சிலர் வென்றுவிடுகிறார்கள் ஒரு
சிலர் எதிர்பார்ப்புகளை சுமந்தபடியே வாழ்க்கையின்
ஓட்டத்தில் நகர்ந்தும் போகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது அப்படித்தானே
உறுவாகியது. என்றோச் செய்த உதவிக்கோ,உழைப்பிற்கோ, வேறு
ஏதேனும் செயல்பாட்டிலிருந்து இன்று நமக்கு கிடைக்கும்
எதிர்பார்த்து நிற்கும் ஒன்றை
பெற்றுவிட்டப்பின்னாலே அதற்கு அதிஷ்டமென்றால் அனைத்தும்
பொய்யாகத்தானே போய்விடுகிறது இப்படி அதிர்ஷ்டம்
மேல் எதிர்பார்ப்பினை குமரிவள்ளி
கொண்டிருக்க வில்லை என்பதற்கு அவள்விடும் கண்ணீரே சாட்சியாக
தெரிகிறது.இந்த இன்ட்டர்வியூ
இல்லையென்றால் வேறோரு இன்ட்டர்வியூ மகனின் மேலே முழு நம்பிக்கை இருக்கையில் அதிர்ஷடம்
தேவைபடாதொன்றாக குமரிவள்ளி
திடமாக நம்பிக்கை அவள் கொண்டிருந்தாள். மணி சரியாக எட்டென்று
ராஜுயின் கடிகாரம்
காட்டிக்கொண்டிருந்தது. குக்கிராமமான கொம்பூர் என்கிற அவனது ஊரிலிருந்து பத்து மைல்தூரம் விழுப்புரம் ரயில்
நிலையம் அங்கிருந்து செங்கல்பட்டுக்குச் செல்ல வேண்டும்
அவன் . நேரத்தைச் சரியாக கணித்து
இத்தனை மணிக்கெல்லாம் இன்ட்ர்வீயூவிற்குச்
சென்றுவிடலாமென்று கணக்குப் போட்டு வைத்திருந்தான்
ராஜு.அவன் ஊருக்கு இரண்டுமுறை மட்டுமே விஜயம்
செய்யும் பேருந்து காலைபொழுதில் ஆடியசைந்துக்
கொண்டு வந்து நின்றது அவனின்ற பேருந்து நிறுத்தத்தில்,,பேருந்தில்
ஏறிய ராஜு உடல் அலுப்பு
தெரியாமலிருக்க தன்கூடவே எடுத்துவந்த இன்ட்ர்வீயூவிற்குத்
தேவையான கேள்விபதில் புத்தகத்தை புரட்டியபடியே
பயணிக்கலானான். சரியாக ஒருமணிநேரம் உருண்டோடி
விழுப்புரம் ரயில்நிலையம் வந்தடைந்தது பேருந்து.
அவசரப்படாமல் நிதானமாகவே இறங்கி ரயில்நிலையம் நோக்கி
நடந்தான் ராஜு. அவன் வருவதற்கும் ரயில்நிலைய அறிவிப்புச்
செய்வதற்கும் சரியாக இருந்தது. தான் இந்த வண்டியில்தான் பயணப்பட
வேண்டுமென்று ராஜு ஏற்கனவே
முடிவுசெய்திருந்தது போல் நிகழ்வுகள்
நடந்துக்கொண்டிருந்தமையால் அவனுக்குள்ளே ஒரு ஆத்ம
திருப்தியும், நிம்மதியும் சூழ்ந்துக் கொண்டிருக்க . ஒரு
வழியாக ஒன்பதரை மணிக்கு ரயில்நிலையத்தில் தஞ்சம்
புகுந்தது பல்லவன் எக்ஸ்பிரஸ். ரயில் வந்தவுடன் யாரும்
இறங்குவதாகத் தெரியவில்லை,ஒருசிலர் மட்டும்
குடிநீருக்கும்,அப்போதைய நொறுக்குத் தீனிக்கும் இறங்கிய
வண்ணமிருந்தனர்.
பதிவுசெய்யப்படாத பெட்டியில் இவன் ஏற வேண்டும்.
அதற்கேற்றவாரே முதல்நிலையில் அவன் காத்திருந்ததால் அங்குகூட
அவனுக்கு அனுகூலமாகவே இருந்தது. ரயில்பெட்டியில்
ஏறியவுடன் நால்வர் அமரக்கூடிய இடத்தில் மூவர் அமர்ந்திருக்கும்
இருக்கையினருகே சென்றான் அங்கு அவனுக்கு இடமில்லை
என்றேத் தோன்றியது. அகங்காரமாய் இருநபர்கள் மூவர் இருக்கையினை
ஆட்கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தான் ராஜு எங்கும்
இடமில்லை என்கிற முடிவுக்கு வந்தான் தனதருகே இருக்கையில்
அமர்ந்திருக்கும் முகம்தெரியா நபரிடம், சார்! கொஞ்சம் நகர்ந்து
உட்காந்தீங்கனா நா ஓரமா உட்காந்துக்குவேன் சார்,, என்றான்.
எதோ சலிப்பாக அதே ஆணவத்தோடு
வெறும் உடலசைவினை மட்டும் செய்தார்கள் அவர்கள்.
ஒண்டிக்கொள்ள கொஞ்சம் இடம் கிடைத்தது அவனுக்கு,,
ரயில் வண்டியானது நான் பயணப்படுகிறேன் விரைவில்
எல்லோரும் ஏறிக்கொள்ளுங்கள்
என்று தனக்கே உரித்தான மிகப்பெரும் சத்தத்தை
எழுப்பிவிட்டு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு புறப்படத்
தயாரானது. மெதுவாக அது விழுப்புரம்
ரயில்நிலையத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புறப்பட்டு
சென்னையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.ராஜு
கிடைத்த இடத்தில் ஒட்டிக்கொண்டவுடன் மீண்டும்
பேருந்தில் பயணிக்கையில் வாசித்த புத்தகத்தின் விட்ட
இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கினான். ரயில் வண்டியும்
தன்பாதை விலகாமல்
வேகத்தையும் விடாமல் தொடர்ந்து அதிவேகத்தில் பயணித்துக்
கொண்டிருக்கையில் இருபது
கிலோமீட்டர் தாண்டியிருக்கும், அப்போதுதான் அந்தச் சம்பவம்
நிகழ்ந்தது.


தன்பிள்ளையின் எதிர்காலத்தை நோக்கி
அவன் கால்படுமிடமெல்லாம் கற்பனைக்கெட்டாத வெற்றியை
மீட்டெடுப்பான் என்கிற எதிர்பார்ப்பினை மனதில்
சுமந்துகொண்டு அவன் வீடுதிரும்புகையில்
பசியெடுக்கிறது எனக்கம்மா,, என்று தோய்ந்த குரலில்
கேட்டுவிடக்கூடாதென்பதற்காக அவசர அவசரமாக வீட்டிலிருந்த
அன்றைய சிறு காய்கறிகளை சேர்த்து அன்றைக்கு மட்டும்
கடையரிசி வாங்கி வந்து
சோறுவடித்து தன்மகன் வந்தபின்னாலே அவனோடு
சேர்ந்துண்ண காத்துக்கொண்டிருந்தாள்
குமரிவள்ளி. தாய்ப்பாசத்தின் மெய்ப்பொருளை
கண்டுபிடிப்பதென்பது இயற்கையன்னைக்கு மட்டுமே
தெரிந்திருப்பதில்
வியப்பேதுமில்லையே! அரவணைப்பதில் இயற்கைக்கு
அடுத்தபடியாக அன்னையவள்தானே இடம்பிடித்திருக்கிறாள்.
அதனால்தான் தன்பிள்ளை ராஜுவின் வரவிற்காக அவளும்
பசியோடு காத்திருக்கிறாள்.இரு­
பது கிலோமீட்டரைத் தாண்டி
அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தீடீரென்று
ஒரு கோர விபத்தில்
சிக்கிக்கொண்டது. ஏதோவொரு கிராமத்தின் வயல்வெளி காட்டை
ரயில்வண்டியானது கடந்து
போக,யாரோ விஷமிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆறடி தண்டவாள
உடைப்பின் காரணமாக அதில் சிக்கி
தடம்புரண்டு முதல் மூன்று பெட்டிகளும் தடாலென தரையில்
விழுந்து வந்த வேகத்திற்கே இழுத்துக்கொண்டு போனது. எதிர்பாரா தாக்குதலை எப்படி சமாளிப்பது எதுவும் நன்மைக்கே
என்று இதனையும் கடந்துபோக முடியுமானால் மனிதகுலம்
மிருகமனம் கொண்டதாகத்தானே இருக்கும். முதல்பெட்டியில் ராஜு
இருந்தமையால் அவனுக்கேதும் நிகழாதென்றுச் சொல்ல
ஜோசிக்காரனாலும் முடியாதல்லவா,,தடம்புரண்ட முதல்
பெட்டியில் சிக்கிய ராஜு சம்பவ
இடத்திலேயே உயிரிழந்து கிடக்கிறான். உடல்பாகங்கள்
சிதறிக்கிடக்கின்றன. அவன்
உடலெங்கும் ரத்தம் வழிந்தோட ஒரு கை மட்டும் புத்தகப்பையை
இறுக்கமாக பிடித்திருக்கிறது.
மற்றொரு கையும் இரு கால்களும் துண்டுபட்டு துடிதுடித்துச்
செத்துக் கிடக்கிறான். அவன் மீதும் பயணிகளின் சிதறிய உடற்பாகங்கள்
விழுந்து கிடக்கின்றன.விபத்து
குறித்து தகவலறிந்த ஊடகங்களும் பெருகூட்ட மக்கள் திரளும்
மேயத்தொடங்கினார்கள்
அவ்விபத்துப் பகுதியை,,, பெருங்கூட்டத்தில் யாருடையது
உதவும் கரங்கள்,யாருடையது திருடும் கரங்களென கணக்குப்
போடமுடியவில்லை இருந்தும்
உதவுதலே அங்கே பெரும்பான்மை பெற்றிருந்தமையால் உலகில்
இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்போடு உள்ளதென ஒரு
கணிப்பிங்கே காணமுடிகிறது. நிச்சயம் மனிதர்களின் மனங்களிங்கே
பேசத்தொடங்கும் கடவுள் எதற்கென்றும் கற்பிக்காதே
கடவுளை என்றும்,,,இவற்றையும்
மீறி நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளே காப்பாற்றென்றும்,,,ஒலிக்கத்தான் செய்யும்
அழுகுரலோடு அனுதாபலைகளும் காதுகளை
ஊடுருவி வானத்தை நோக்கி மேலெழுவது முறைதானல்லவா,,,,
கோர விபத்துச் செய்தி வேகமாக பரவினாலும் கொம்பூர்
கிராமத்தையின்னும் எட்டிவிட
வில்லை . இரு பட்டதாரிகளின் தகப்பனான ஊர்த்தலைவரின் வீட்டில்
மட்டுமே தொலைக்காட்சி பெட்டியுள்ளது. விரையில் மகன் வருவானெனும் எதிர்பார்ப்பில் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்த குமரிவள்ளிக்கு
ஒரே ஆச்சர்யம் கூடவே பதற்றமும் ஒட்டிக்கொண்டது. ஊர்த்தலைவர்
குமரிவள்ளியின் வீட்டை நோக்கி நெருங்கி வந்துவிட்டார். அவர்
வாசலை நெருங்குவதற்கு
முன்னதாகவே ஓடோடிச் சென்று வரவேற்றாள் குமரிவள்ளி. சோகம் சூழ்ந்த முகத்தோடு வாசலின் திண்ணையில் வந்தமர்ந்த
ஊர்த்தலைவர் பேச முற்படுகையில் , ஐயா வீட்டு விருந்தாளி
வந்திருக்கிக இருங்கய்யா கொஞ்சம்
மோர் கொண்டாந்து தாரேன்,,,
நில்லுபுள்ள! இதநான் எப்படி
உங்கிட்ட சொல்ரதுனே தெரில மனச தெடப்படுத்திக்கோ ! இந்த பாவி
மனுச துக்கசேதி
கொண்டாந்திருக்கேன் புள்ள ,, டிவிபொட்டில போட்டானுவோ
விழுப்புத்த தாண்டி ரயில்வண்டி கவுந்துபுடுச்சான். ஒரே
அல்லோலகல்லோலமா இருக்காம் அந்த இடம் அப்புரம் கவுந்த ரயில்ல
மாட்டினவங்க பட்டிலு போட்டானுக வள்ளி அதுல ஒம்புள்ள,,,ஒம்புள்ள,,,,,
ஐயா!! எம்புள்ளைக்கு என்னாச்சி,, எம்புள்ளைக்கு என்னாச்சி,,,ஐயோ!
சொல்லுங்கவே எம்புள்ளைக்கு
என்னாச்சி,,,,, அதிர்ச்சியின் உச்சத்தில் பித்துபிடித்துபோய்
தலையிலும் மார்பிலும்
வயித்திலும் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து கத்திக்
கதறினாள் குமரிவள்ளி. ஊர்த்தலைவரின் இழுப்புலிருந்தே
தெரிந்துவிட்டது இழந்தோம் பிள்ளையை என்று,,, அவளது
கதறலையும் அழுகுரலையும்
கேட்டு கொம்பூர் கிராமமே ஒன்று கூடிவிட்டார்கள் அவளது வீட்டில்,,,
கூடி நின்றவர்களும்
அழத்தொடங்கினார்கள் இழந்துவிட்டோம் ஊரில் ஒரு
மனிதனையென்று,,, அதற்குள் இரண்டாவது அதிர்ச்சியையும்
வார்த்தைகளை மென்று விழுங்கி சொல்லத் தொடங்கினார்
ஊர்த்தலைவர். புள்ள! "பாடி"ய
தரமாட்டாங்களாம் மொத்தமா செதஞ்சி போனதால அங்கேய பக்கத்தில எங்கேயோ மொத்தமா பொதைச்சுடுவாங்களாம்,,,,, அவ்வளவுதான் அடிவயிற்று சிறுகுடல் வெளியில் வந்து
விழுவது நிச்சயமென்பதுபோல செய்தி கேட்ட அடுத்த நொடியே
கதறியழுதாள் குமரவள்ளி. தாங்கமுடியவில்லை அவளால்,,,
காலையில் பார்த்த முகத்தை காலமுழுக்க பார்க்காத படி செய்த
கும்மிட்ட கடவுளையெல்லாம் தன் அழுகுரலாளால் உடைத்துப்
போட்டாள். இரவு நகர்ந்துக்கொண்டிருந்து ஒருகையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் மூட்டையொன்றேந்தி
உருவமொன்று ஊர்ச்சுடுகாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
ஊரானது துக்கத்தில் கலந்து கொண்ட அசதியினால் சீக்கிரமே
தூங்கியும் போனது. சுடுகாட்டை நெருங்கியதும் அவ்வுருவம்
மண்ணைத்தோண்டி எடுத்துவந்த மூட்டையை குழியில் போட்டு மூடிவிட்டு அக்குழியருகிலேயே தீக்குளித்துக்கொண்டது.
விடிந்ததும் ஊர்மக்கள் ஒரு குழி தோண்டினார்கள். அதேயிடித்தில்
இப்போது இருகல்லறைகள். ரயில்விபத்து விசாரணையின்
இறுதி அறிவிப்பு அன்று மாலை வெளியானது. சம்பவம் நடந்த
இடத்திற்கு அருகிலிருக்கும் ஊரில் சாதிக் கலவரமாம், கலவரக்காரர்கள்தான் தண்டவாளத்தை உடைத்தார்களாம் ,,மாறாத மனிதர்களிடம் மாற்றத்தின் எதிர்பார்ப்பும் குமரிவள்ளியின் எதிர்பார்ப்பும் ஒன்றாகக் கலந்து கல்லறைகளாக காட்சியளிக்கிறது.

Wednesday, April 01, 2015

கதவுகளின் கோணங்கள்

வெறும் வயல்வெளிகளோடு
காற்றுவெளியில் நெற்கதிற்களின்
வாசத்தை உமிழ்ந்து
கொண்டிருந்தது அந்த பூமி .
யாதொரு தொடர்புமற்ற
கலையிழந்து கானப்பட்டது ஒரு
குடில். இளஞ்சூரியன் மட்டுமே
வெளிச்சத்தில் அக்குடிலின்
கலையழகை கண்டுரசித்திருந்தது .
மூங்கில் தட்டியால் மூடியிருந்த
தற்காலிக கதவை அப்படியே
அப்புறப்படுத்தி வெளிவந்தான்
பொன்னையன். அவனுக்கு முன்பே
எழுந்திருந்தாள் செல்லம்மாள்.
பெண்ணின இயல்பில்
மாற்றமேதுமில்லை அவளிடத்தில்.
காலை கதிரவனை வணங்கிவிட்டு
வேப்பங்குச்சியை ஒடுத்து
பல்லிற்கு தூய்மையளித்தபடியே
செல்லம்மாளை அழைத்தான்
பொன்னையன். ஏ!!! செல்லம்மா
பழஞ்சோறு பானையில கிடக்கு
கடிச்சிக்க கொஞ்சம் பச்ச மிளகா
பறிச்சிகினு வாடி!
இந்தா போறேன் அதுக்கு
முன்னாடி லுங்கிய ஒழுங்கா
கட்டுயா இன்னுமா
தூங்குமூஞ்சியோட இருக்குற
செல்லமாய் சொல்லி சிரித்தாள்
செல்லம்மாள். ஏன்டி இங்கன
அம்மனமா திரிஞ்சாலும் யாரு
கண்ணு பார்க்கபோவது கட்டிகிட்ட
ஒன்ன தவற ,,, ஓரக்கண்ணால்
வம்பிழுத்தான் பொன்னையன் .
க்கும்!!! இதுக்கொன்னும்
கொறச்சலில்ல குழந்த ஒன்னு
வயித்துல தங்குதா? என்று
சலித்துக்கொண்டே மிளகா பறிக்க
சென்றாள் செல்லம்மா,,,

அந்த ஊரில் பெரும் பணக்காரரான
பண்ணையாரின் கழனிக்காடுதான்
அது ,பரம்பரை சொத்தென
சொல்லிக்கொண்டாலும் பலரிடம்
அற்ப விலைக்கு வாங்கப்பட்ட
நிலமாக அது இருந்தது.
பொன்னையான் பரம்பரை
கூலித்தொழிலில்
அவரின் தாத்தா அப்பா காலத்து
தொழிலைத்தான் தற்போது
தொடர்கிறான். செல்லம்மா அவனின்
அத்தமகள் ரத்த சொந்தத்திலே
கட்டியதால் வேறெந்த உறவுகளும்
ஊரில் இல்லை அவனுக்கு .
நெல்லிற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு
மடைகளை ஆங்காங்கே திறந்தும்
மூடியும் வரப்புகளை
சரிசெய்வதுமே அவனின்
வேலையாக இருந்தது கூட
உதவிக்கு களையெடுப்பது முதல்
அத்தனை வேலைகளையும்
செல்லம்மாளும் சலிக்காமல்
செய்துகொண்டிருந்தாள்.
வாக்கப்பட்டதற்கு வாழ்வியலின்
கசப்பும் இனிப்பும் ஒரு சேர
அனுபவித்துக்கொண்டிருந்தாள்
அவள். ஒரேயொரு மனவேதனை
அவளின் நெஞ்சை
பீடித்துக்கொண்டிருந்தது
கொஞ்சுவதற்கொரு
குழந்தையில்லை என்பதுதான்
அது. கழனி வேலைமுடித்து
அடுத்த காவல் வேலைக்கு
தயாரானார்கள் மாலை கதிரவன்
மங்கிய வேளையது. தினமும்
கொஞ்சலோடு தொடங்கும்
இரவினை இருவரும் இம்சிக்க
காத்திருந்தார்கள் .கொஞ்சலோடு
தொடங்கும் உரையாடல்
அழகுதானே,,,
இரவானது பகலை விழுங்கி
பனியினை
கொடுத்துக்கொண்டிருந்த தருணம்
ஊடலில் தொடங்கி கூடலில்
முடிந்தது பொன்னையன்
செல்லம்மாளின் காதல்
மணவாழ்க்கை ,வாழ்க்கை பல
கசப்பாக இருந்தாலும் அளவுகடந்த
மகிழ்சியிலேதான்
வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள் அந்த
ஏழை தம்பதிகள். மறுநாள்
விடியலில் மற்றதையெல்லாம்
மறந்து மீண்டும் துளிர்விடும்
புதுவானத்தை பறக்கிறது மீண்டும்
எழுகிறது தினசரி வாழ்க்கை,
வழக்கம்போலவே வரப்பினை
சரிசெய்து கொண்டிருக்கையில்
சதக் சதக்கென சேற்றோடு கலந்த
வரப்பில் யாரோ ஒருவரின் பாதசத்தம்
கேட்டெழுந்து குணிந்த தலையை
உடனே நிமர்த்தி பரபரப்பானான்
பொன்னையன். வருவது
பண்ணையாரென்று முன்னமே
அவனுக்குத் தெரிந்தது வேறு
யாதொருவரும் அந்த வயலில் கால்
பதிப்பதில்லை என்பதை
அறிந்தவனாயிற்றே அவன்,,
பண்ணையார் வாரமொருமுறை
வயலை பார்வையிட வருவது
வழக்கம் அந்த பார்வை வயலின்
மீதுள்ள ஆசையாலோ அல்லது
நிலத்துடைமையாலோ அல்ல
செல்லம்மாளின் மீதுள்ள
ஆசையின்பால் தானாக வயலை
தேடும் கால்களை பண்ணையாரால்
கட்டுப்படுத்த முடியில்லை அது
செல்லையனுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை , தெரிந்தாலும்
அவன் நம்புவதாக இல்லை
வேலைதரும்
பண்ணையாராயிற்றே அவர்.
சுறுங்கிய கண்களை கொஞ்சம்
நிமிர்த்தி விடுகிறார்
பண்ணையார் .சேற்றுவரப்பில்
கரைபடக்கூடாதென கட்டிய
வேட்டியை லாவகமாக மடித்து ஆடி
அசைந்து பொன்னையன் அருகில்
வந்தார்.
என்ன பொன்னையா? வேலல்லாம்
ஒழுங்கா நடக்குதுல்லே !
பயிறுக்கு மருந்தெல்லாம் சரியா
கலந்து அடிக்கிறியா? தன்னி
பத்துதா போதலனா சொல்லா
பக்கத்து கெணத்துக்காரன்ட
கேக்கலாம் அவன் வீணாதானே
நெலத்த வச்சிருக்கிறான்,அப்புரம் நீ
எப்டி இருக்க அரசி பதார்த்தல்லாம்
திண்ணுதீத்துட்டியா இல்ல
அப்படியே வச்சிருந்து எறைச்ச
கெணத்துல கோட்டிடுரீயா?
நக்கலாக கேள்விகளை அடுக்கி
கடைசியில் நலம் விசாரிப்பில்
முடித்தார் பண்ணையார்.
இல்லிங்க எசமான் உங்க
புண்ணியத்துல எனக்கென்ன கவல
வந்துட போகுது ,கெணத்துல
சோத்த கொட்டுனா உழைச்ச
உழைப்புக்கு பலனில்லை எசமான்

களப்பா வந்திருப்பிங்க குடிசைல
கொஞ்சம் ஒட்காருங்க வேலய
முடிச்சிட்டு இந்தா
வந்துடரேன்,,இந்தா!!!
செல்லம்மா,,,எசமான்
வந்திருக்காருபாரு அந்த கயித்து
கட்டில தூக்கி வெளியே போட்டு
குடிக்கத் தண்ணி குடுடீ,,,
சொல்லிமுடித்து
செல்லம்மாளுக்கும் தகவலை
பரிமாறினான் பொன்னையன்.
எந்தவித முகபாவனையும்
செல்லம்மாளிடம் காணப்படவில்லை
அவளுக்கு நன்றாகவே
தெரிந்திருந்தது பண்ணையாரின்
பார்வை தன்மேல்
இருக்கிறதென்பது,, பலமுறை
பேச்சுவாக்கில் பொன்னையனிடம்
சொல்லியும் வார்த்தை
எடுபடவில்லை அவ்வளவு
நம்பிக்கையை அந்த ஐம்பதுவயது
பண்ணையாரிடம் வைத்திருந்தான்
பொன்னையன்,தவறில்லை
படியளக்கும் பண்ணையாராயிற்றே
அதனால் புரயோஜனமில்லையென
செல்லமாளே முடிவுக்கு வந்தாள்.
எதையும் வெளிக்காட்டிக்கொள்ளா­
மல் இயல்பான நடையிலே வாங்க
எசமான் ஒக்காருங்க இந்தா
கழனிவேளையில அழுக்கா
கெடக்கேன் தோபோய்
துணிமாத்திகினு குடிக்க
தண்ணி கொண்டாந்து
தாரேன்,என்றுச்சொல்லி
குடிசையில் நுழைந்து மூங்கில்
தட்டிக் கதவை சாத்திக்கொண்டாள்
செல்லம்மாள் , வாய்த்தடா
வாய்ப்பென பண்ணையார் பழைய
ஆசையை
புதுபித்துக்கொண்டிருந்தார்.
அரைமணிநேரம் கடந்தோடியது
உச்சி வெயிலானது சுளீரென
நேரே மூளைக்கு ஏறியதையும்
பொருட்படுத்தாமல்
பண்ணையாரின் கழனி விஜயத்தை
கருத்தில் கொண்டு வேகவேகமாக
மடையை கட்டிக்கொண்டிருந்தான்
பொன்னையன். திடீரென்று
ஆஆஆஆஆ!!வென அலறும் சத்தம்
அவனது காதை கிழித்தது
அலறலோசை அவன்
குடிசையிலிருந்தே வருவதை
ஊகித்துக்கொண்டான். தீடீரென
எழுந்த அலறல் சத்தத்தால்
உடலிலெழுந்த அதிர்வின்
காரணமாக மடையை மூடிய
மண்வெட்டி தடுமாறி
மடையைத்திறந்து ஒரு
கானியிலிருந்து மற்றொரு
கானிக்கு தண்ணீர் அடங்க மறுத்து
புதுச்சுதந்திரம் அடைந்ததுபோல
பெருக்கெடுத்து ஓடியது.
பொருட்படுத்தவில்லை
பொன்னையன் ஐயோ ! எசமானுக்கு
என்ன ஆயிற்றோவென்று
அலறிபிடித்து ஆங்காங்கே
சேற்றுவரப்பில் கால்தடுக்கி கானி
சேற்றில் காலூண்றி குடிசையை
நோக்கி ஓடலானான். குடிசையை
நெருங்க நெருங்க ஐயோ எசமான்
ஐயோ எசமானென அவனது
கூக்குரல் அக்கழனிக்காடு
முழுவதும் பரவியது. ஒருவழியாக
குடிசையை நெருங்கினான்.
கயிற்றுக்கட்டிலைத் தவிற ஒன்றும்
குடிசைக்கு வெளியே
தென்படவில்லை அவனுக்கு
,குடிசையின் உள்ளே பார்வையை
திருப்பினானவன்,மூங்கில்
தட்டிக்கதவு கிழிந்து
தொங்கியிருந்தது உள்ளே
ஆடைகிழிந்து அசைவின்றி
நின்றிருந்தார் பண்ணையார்.

எசமான்! ஒங்களுக்கு ஒன்னும்
ஆகலியே எங்கே இந்த மொவ
செல்லம்மா? ஏ!! செல்லம்மா எங்கடி
போன என்னாடி சத்தம் வந்தது
எங்கிருந்துடி சத்தம் வந்ததென
கத்திக்கொண்டே குடிசையில்
நுழைந்தான் பொன்னையன்.
அவனது இத்தனை கால
வாழ்க்கையில் அனுபவிகாத
அனுபவிக்க கூடாத வலியொன்றை
அவன் பார்க்க நேரிடுகிறான்.
சிதறிக்கிடந்த கஞ்சிப்பானை
தட்டுபொட்டு சாமான்களுக்கு
நடுவே அவளின் கையில்
அறுவாமனையுடன்
கழுத்தறுந்துபோய்ஜாக்கெட்டுடை
கிழிந்து புடவை முந்தானையின்
கடைசி பிடியை கைவிடாமல்
பற்றிய அவளின் இடுப்பிலெழும்
ரத்தக் கீரல்களையும் அப்போது கண்ட
பொன்னையன் பண்ணையாருக்கு
பக்கத்தில் அவனுமொரு சிலையாக
நின்றான். அடுத்தென்ன செய்வதென
அவனுக்குத் தெரியவில்லை
அவ்வளவு நம்பிக்கையை
பண்ணையாரிடத்தில் அவன்
கொண்டிருந்தான். கண்கள் மட்டுமே
தாரைதாரையாக கண்ணீரை
கக்கிக்கொண்டிருந்தது பேசவும்
கதறியழவும் நாவெழவில்லை
அவனுக்கு , செல்லம்மாளை ஒரு
கணமும் பண்ணையாரை
மறுகணமும் திரும்பித் திரும்பிப்
பார்க்கிறான் இப்போது கதறியழும்
நேரம் அவனுக்கு கைகூடி வந்தது.
பத்தினி மவ அப்பவே சொன்னாளே
இந்தப் பாவிதான் கேக்கலயே
எசமான் எசமான்னு திரியாதேயா
அந்தாளு எம்மேல ஆசவச்சிட்டான்னு
அப்பவே சொன்னாளே இந்த
பாவிதான் கேக்கலயே!!! எனக்
மண்தரையில் மண்டியிட்டு மடியில்
செல்லம்மாளை கிடத்தி
கதறியழுதான் பொன்னையன்.
நிலமையை யூகித்து
தன்னிலையை
சுதாரித்துக்கொண்ட பண்ணையார்
தப்பிக்கும் முயற்சியில் தன்னை
ஈடுபடுத்த தயாராக படக்கென
குடிசையை விட்டு ஒட
எத்தனித்தார். எசமானென
பொன்னையன் விட்டாலும்
செல்லம்மாளிடம் அவன்
கொண்டிருந்த காதலானது
பண்ணையாரை தடுத்த நிறுத்தத்
தயாரானது. மடியில் கிடந்தவளை
அப்படியே உதறி பட்டென எழுந்து
பண்ணையாரின் கழுத்தை
பின்பக்கமாக பிடித்தான் ,பிடி
இரும்புப்பிடியாக இருந்தது
மண்வெட்டி,கடப்பாறை பிடித்த
முரட்டுக்கையோடு முழு
ஆத்திரமும் உள்வாங்கி
கொண்டிருந்தமையால் ஆயிரம்
கைகள் அழுத்திப்பிடிப்பதுபோல்
உணர்ந்து திமிறும் சக்தியிழந்து
அவன் பிடியில் வசமாக
சிக்கிக்கொண்டார் பண்ணையார்.
சிவந்த கண்களில் இன்னமும்
கண்ணீரோடு கொலைவெறியும்
கலந்திருந்தது பொன்னையனுக்கு
,,இனி பிடியானது
தளரப்போவதில்லையென அறிந்து
தைரியத்தை இழந்த பண்ணையாரின்
விழிகள் சிறிதுசிறிதாக பிதுங்க
ஆரம்பித்தது . பண்ணையாரின் உடல்
முழுதாய் தளர்ந்து தரையில் விழ
துடிக்கிறதென பொன்னையன்
உணர்ந்தான். பிடியை முழுதாய்
அவனும் தளர்த்தினான் பண்ணாயார்
உயிரற்ற ஜடமாய் தரையில்
விழுந்தார். பலத்தை முழுதாய்
பண்ணையாருக்கு செலவிட்டதில்
பாதிஉயிர் தளர்ந்து உடலில்
வலுவிழுந்து செல்லம்மாளின்
அருகிலேயே அவனும் கிடந்தான்
இருண்டது வீடு சுயநினைவை
இழந்து அவனும் மயக்கமுற்று
தரையில் செல்லம்மாளின்
தலைமுடியை கோதியடியே
விழுந்தும் போனான்.விடிந்தது
பகலென்று தெரியவில்லை
அவனுக்கு கதரவன்
அவனுக்குமட்டும் கானாமல்
போனான் அதன் வெளிச்சம் மட்டுமே
அது பகலென்று உணர்த்தியது
லேசாக கண்விழித்து கலையிழந்த
முகத்தை திருப்பி தன்னிலையை
உணரத்தயாரானான். இருப்பது
ஜெயிலென்று அப்போது
உணர்த்தியது அவனது உள்ளம் .
கலங்கிடவில்லை கடந்துபோன
நிகழ்வினை ஒப்பிடுகையில்
இதுவொன்றும் சுமையாகவோ
கொடுமையாகவோ
தெரியவில்லை அவனுக்கு அந்த
வேளையில் அவனுக்கொரு
ஆறுதலாய் மூன்று செய்திகள்
அவனுக்குமுன் மண்டியிடுகிறது
.ஒன்று அனாதைக் குழந்தையை
அவனும் உறுவாக்கிவிட வில்லை
.இரண்டாவது மூங்கில் தட்டிக்
கதவைவிட பலம்
பொருந்தியிருந்தது
சிறைச்சாலை
கம்பிகள்,பண்ணையாரைபோல
எளிதில் உடைத்துக்கொண்டு அவனைப்போலவே யாரும்
சிறைக்குடிலுக்குள்ளே
வரமுடியாது,மூன்றாவதாக செல்லம்மாளின் கற்புக்கு எக்களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. இம்மூன்று ஆறுதல்
செய்திகளும் அவனுக்கான ஆறுதல்
மொழியாகியிருந்தது. இந்தக்
கதவுகளின் பல கோணங்களை
எண்ணிபடியே மீண்டும் தரையில்
அவனுடலை சாத்தினான் வரும்
கனவுகள் முழுக்க
செல்லம்மாளும்,மூங்கில்தட்டி
கதவும்,சிறைச்சாலைக் கம்பிக்
கதவுகளுமாகவே
அடைத்திருந்தது அவன் கனவில் கடைசி
வரையில் கண்ணில் படவில்லை
பண்ணையார். தூரோகத்தை
தோலுரித்துக் காட்டிய
கனவுகளுக்கு அவனும் நன்றி
செலுத்துகிறான்.

முற்றும்.

Saturday, February 14, 2015

பிறந்தது விவாகரத்து

மாலையில் அலுவலகத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுக் கிளம்பிய சரவணனும் கீதாவும் தங்களது வீட்டை அடைந்தார்கள் வேலைசெய்வது வெவ்வேறு அலுவலகம் தான் வீடு மட்டுமே ஒன்றானது .இருவரும் சேர்ந்தே வாசற்கதவை திறந்தார்கள் உள்ளே சென்றபின் அவரவர் அறைகளை அடைந்தார்கள் .ஒருவரையொருவர் பேசிக்கொள்ளவில்லை பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும்,,, ஏன் இப்படியென்ற கேள்விக்கு அன்றைய காலைபொழுது விடை கூறியது .பால்காரன் முதல் பேப்பர்காரன் வரையில் வந்துபோன பின்பு கடைசியாக கதவை தட்டினார் தபால் காரன் . வெளியில் வந்த இருவரில் சரவணன் பெற்றுக்கொண்டான் தபாலை, பெற்றதை வாராந்தா மேசையில் வைத்து விட்டு அவனும் நகர்ந்தான் . வந்தது விவாகரத்து நோட்டீஸ் தான் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மணமுடித்த கையோடு சில மாத மனக்கசப்பில் உறுவான நோட்டீஸ் அது . இன்னும் குழந்தையில்லை .இணைந்த கட்டில் எப்போதோ பிறிந்திருந்தது . இருவருக்குமான உறவு காதலில் தான் மலர்ந்தது. புரியாத வயசுக் காதல் புரந்தள்ளியே போனது பல அனுபவங்களை ,, விவாகரத்திற்கு என்ன காரணம்? கடந்த கால நிகழ்வுகளை அலசிவிடுவது அவசியம். இருவருமே காதலித்து மணந்தவர்கள் சாதிமதம் தடையில்லை பொருளாதாரம் போதுமானதாய் இருந்தது இணைந்த காதலுக்கு. இரண்டுமாதம் கடந்து போனது . கைபேசியில் மட்டுமே காதலை பொழிந்த கரங்களுக்கு காதல் வாழ்க்கையை கரம்பற்றிடத் தெரியவில்லை . திணறினார்கள் ,எதிர்காலத்தை கணிக்கமுடியவில்லை அதுபற்றியும் கைபேசியில் பேசிடவில்லை . புது அனுபவம் எப்படி ருசிப்பதென்று இருவருக்கும் தெரியவில்லை . காதலிக்கும் போது எப்போதாவது எங்கேயாவது இருவரும் தனிமையில் காதலை பகிர்ந்ததுண்டு அதில் தொடுதலும் சீண்டலுமே தொடராய் இருந்ததேத் தவிற வாழ்வு குறித்தான வழவுச்சொற்கள் எங்கேயும் எழுந்திடவில்லை .இருமனமும் திருமணம் கண்டு எட்டு மாதங்கள் ஆனது . அதுவரையில் அவசியமான எதிர்கால சிந்தனைகள் எழாதவாரு மூளையை மழுங்கடிக்கச் செய்துவிட்டிருக்கிறார்கள் இருவரும் . ஆதேவேளையில் அக்குடும்பச்சூழலை சீர்குலைக்கும் வகையில் சந்தேகமெனும் சவப்பெட்டு அவ்வீட்டு வாசலில் காத்திருந்தது . முதலில் எழுப்பியது சரவணன்தான். காரணம் கீதாவுக்கான நட்பு வட்டங்கள். திருமணம் முடிந்தபின்னே தூறே எறியப்படும் முதலன்பு அதுதானே, ஆரம்பித்தான் முதலில் சரவணன்.... கீதா உனக்கு ஃப்ரண்ஸ் சர்க்கிள் அதிகமா இவ்வளவு கான்ட்டக்ட் இருக்கே உன்னோட செல்லில்,,,, ஆமாங்க ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், ட்ராவல் ப்ரண்ஸ்னு,ப்ரண்ஸ்ஸோட­ ப்ரண்ஸ்,னு தனித்தனி குரூப்ஸ் இருக்கு அவ்வளவு பேரும் எம்மேல பிரியமா இருப்பாங்க .,நெருக்கமா இருப்பாங்க, அன்பா பேசுவாங்க,நாங்க அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம்னா நேரம் போரதே தெரியாது அவ்வளவு பேசுவோம் .சொல்லி முடித்தாள் கீதா,,, அனைத்தையும் கேட்ட சரவணனனுக்கு சூடுபோட்டு சுழியிட்டது "நெருக்கமா இருப்பாங்க" எனும் வார்த்தைதான் .சந்தேகத்தின் முதல் தொடக்கத்திற்கு அது போதுமானதாய் இருந்தது. இப்படியாக சென்ற பின் கீதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது அதன் விளைவாக அவ்வப்போது தேடிவரும் நண்பர்களை தள்ளியே வைத்துவிட்டாள் . தனியவில்லை சந்தேகம் . இறுதிநிலை எட்டியது யுத்தத்தில் கடைசி நிலையை அடைவது தானே இயற்கை.ஆரம்பித்தான் சரவணன்,,, ஏண்டி அவ்ளோ நெருக்கமான ப்ரண்ஸோட கூடல்லாம் என்னன்ன செஞ்சியோ என்ன ஏண்டி கல்யாணம் பண்ண ? நானா கெடச்சேன் உனக்கு இந்த கருமம்லாம் லவ் பண்ரதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே (பிரேக்கப் பண்ணியிருப்பேன்) எனக்குனு வந்திச்சி பாரு தைத்திரம் .... சரவணன் வீசிய கடுஞ்சொல்லானது காற்றில் மறைந்தாலும் அடிமனதில் அப்படியே உள்வாங்கிய அதிர்ச்சியில் உறைந்தாள் கீதா,,எதுவும் பேச நாவெழவில்லை அழுகை மட்டுமே அப்போது ஆருதலாய் இருந்தது அவளுக்கு... மூன்று இரவுகள் முழுவதுவாய் வாழ்ந்திருந்தது சந்தேக சங்கடங்கள். முடிவினை நோக்கியது ஒருநாள் துகிலுரித்து எட்டிப்பார்த்தது கதிரவன் விடிந்தது காலை ,, முன்னெப்போதும் இல்லாமல் அதிகாலையிலேயே எழுந்து அலுவலகம் கிளம்பும் முன் ஆசுவாசப்படுத்திக்கொண­்டு வராந்தா இருக்கையில் அமர்ந்தாள் கீதா அவனுக்காக காத்திருப்பானது அந்நேரம் . சரவணனும் வந்தான் அவனும் அலுவலகம் கிளம்பியிருந்தான் அவனுக்கு முன்பாக கீதா ஒரு வித்தியாசமாக காட்சிதந்தாள் .கவனித்தும் கவனிக்காதவாரே சென்றான் நிறுத்தினாள் கீதா,,, ஒரு நிமிஷம் இந்த த்ரீ டேஸா என்னவோ யாருக்கோ நான் விலைபோய்ட்டமாதிரி பேசன ,இன்னைக்கு தான் நம்ம காதலோட கடைசி நாள் . என்னமோ சொன்னியே! நெருக்கமானவங்க கூட வாழ வேண்டியதுதானேனு அதே கேள்வியை நான் உங்கிட்ட கேட்டா எப்படியிருக்கும். உன்னோட ப்ரண்ஸ் சர்க்கிள் மோசமானதுனு நான் சொன்ன ஏத்துக்குவிங்களா,எப்­பப்பார்த்தாலும் எங்கள கொறசொல்ரது சந்தேகப்ரதுனு அலையுறிங்களே உங்களுக்கெல்லாம் எதுக்கு காதல் கல்யாணம்லாம் ,,,இந்தாங்க விவகாரத்து நோட்டீஸ் இனி உங்களோட வாழ எனக்கு விருபபமில்ல கல்யாண தேவையும் எனக்கு ஏற்படல,,, சரவணன் அன்றிரவு அடுக்கிய வார்த்தைகளை விட அதிகமாகவே அடுக்கினாள் கீதா ,,, இதுதான் உம்முடிவா? கேட்டான் சரவணன். கீதா தலையை மட்டும் அசைத்தாள் இப்போது அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ,,, பெற்றுக்கொண்ட நோட்டீஸில் கையெழுத்திட்டு கிளம்பினான் சரவணன். இப்போது எல்லோரிடமும் சந்தோஷமாக பேசிப் பழகுகிறாள் கீதா அதேவேளையில் அனுதினமும் மனதின் ஒருமூலையில் மடிந்த காதலும்,மரணித்த பெண்மையும் அவளை சித்ரவதை செய்துக்கொண்டே இருந்தது. கடைசியாக கைகொட்டி சிரித்தது அந்த கைபேசி காதல் அழுவதில் தான் அதற்கு எத்துனை சந்தோஷம் . இப்போதும் சிரிக்கிறது கைபேசி . அதன்மேல் தவறில்லை காதல் அதற்குச் சரிபடவில்லை.

Friday, January 23, 2015

சிறுகதை "மதுவின் பரிசு"

அமைதி அழகியலில் என்றுமே தனித்துவிடப்படும் அசுத்தமான அரசு மருத்துவனை
அது , அரசின் செயல்பாடற்றது என்று மக்களும் , மக்களின் செயல்பாடற்றது
என்று அரசும் கைவிரித்த கனவுகளை சுமந்துக்கொண்டு ஒரேயடியில் ஓங்கி
நிற்கும் ஆலமரத்தடியில் தன் கடைசிநாளை குறித்துவிட்டு தொட்டால்
தொற்றென்று தனித்து துரத்திவிடப்பட்ட நிலையை கூட உணராத ஒரு ஜீவன் தான்
சங்கரன் . எவளிடம் சென்றுவந்தானோ தொற்றிக்கொண்டே தொடர்ந்த வார்த்தைகளில்
உதறிவிட்ட உறவுகளையும் , இவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும்
திருந்தவே இல்லை திருட்டுத்தனமாக தெவிடியாளிடம் சென்றிருக்கிறான் என்று
குறை கூறி கடந்து போன நட்புவட்டங்களையும் இந்நேரத்தில் நினைப்பதை கூட
மறந்துபோனான் சங்கரன் . அவனுக்கு மட்டுமே அந்த கடந்தகால நிகழ்வுகள்
அச்சுறுத்திக்கொண்டே இருந்தது . மனதின் ஓரத்தில் ஒரேயொரு சந்தோஷம் காதலி
கழன்றுவிட்டாள் என்று,
சங்கரன் தற்போது எய்ட்ஸ் நோயாளி அனைவராலும் அனாதையாக தெருவில் எறிந்த
அவனுடலை யாரோ ஒருவன் எடுத்து வந்து அரசுமருத்துவனையில்
போட்டிருக்கிறார்கள் . மருத்துவர்களும் பிழைக்க வழியில்லை என்று
ஆலமரத்தடியில் எறிந்துவிட்டார்கள் அங்கிருந்து தான் கடைசிநாளை எண்ணி
கடந்த காலத்தை அசைபோட்டுக்கொண்டிருக­்கிறான் சங்கரன்.

எட்டு வருடங்களுக்கு முன்னால் இளங்கன்று பயமறியாது என்கிற துள்ளலுடனே
கல்லூரியில் கால்வைக்கும் போதே மதுவிற்கு அடிமையான சங்கரன் இளமையை
கடக்கலானான். மதுமட்டுமே மாது இவனிடம் நெருங்குவதில்லை அவனும் மாதுவிடம்
நெருங்கியதில்லை , பிறகெப்படி எய்ட்ஸ் நோய்?
எப்போதும் சங்கரன் தனியாக மது அருந்துவதில்லை தன் நட்புவட்டத்தை ஒன்றாக
இணைத்து கும்மாளம் அடிப்பதில் அவனுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷமாய்
இருந்தது . அதிலொருவன்தான் பாண்டி என்கிற பாண்டியன் , பாண்டியன்
அழுக்கடைந்த சேற்றில் முளைத்த காளான் மிகவும் செல்வந்தன் பெண்மோகத்தில்
பைத்தியமானவன், குடிக்க ஆரம்பித்து விட்டால் தன் கூடவே வைத்திருக்கும்
போதையூசியும் அவனுக்கு ஊருகாயாகும் . அப்படி ஒருநாள் சங்கரன் தன்
காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற மனவருத்தின் பால் மதுவருந்த
முடிவெடுத்தான் . உண்மையில் தன் காதலனின் நட்பு வட்டங்களை உற்று
நோக்கியதில் புலப்பட்ட உண்மைகளின் காரணமாக நட்பினை கைவிடும் படி
கேட்டுக்கொண்ட காதல் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட ஓர் உண்மைக்காதல் இறந்த
தினத்தின் துக்க அனுசரிப்பிற்காக பாண்டியும் சங்கரனும் மற்றும்பல
நண்பர்களும் மது அருந்த திட்டமிட்டு அதுவும் கைகூடுகையில் இணைந்தார்கள்
நட்பு வட்டங்கள் அது தான் சங்கரனின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து
விட்டது. பாண்டி மது அருந்தி விட்டு பற்றாக்குறைக்கு போதையூசி ஏற்ற
தயாரானான் ஊசியை வலதுகையில் எடுத்து இடது கைநரம்பில் ஏற்றத் தயாரான
நேரத்தில் , பணமில்லா ஏழையை உதறித்தள்ளிவிட்டு பின்பு அவ்வேழை
செல்வந்தனாகும் தருணத்தில் கூடிவரும் சொந்தங்கள் காட்டுமே அந்த அதீத
அக்கரைபோல் , மூளை முழுதாய் மதுவில் நனைந்தபின் உதவிக்கு வரும்
மதுக்கரங்களின் பற்றுதலாய் திடீரென பொங்கியெழும் அக்கரைப் பாசத்தில்
சங்கரன் பாண்டியின் கரங்களை பற்றிக்கொண்டு ஊசி போட்டுக்காதடா! இதுக்கு
மேல உம்முடம்பு தாங்காதுடா , ஏற்கனவே நமக்கு குடிச்சி குடிச்சி குடலு
கெட்டுப்போச்சி இந்த ஊசியும் ஒடம்பில போன ஒடம்பு என்னத்துக்காவரது ,,,,,
பாண்டி இப்போது போதையில் விட்ரா கைய எல்லாத்தையும் அனுபவிச்சாச்சி
அப்புரம் எதுக்கு இந்த மசிரு ஒடம்பு ,,,,
இப்போது இருவருக்கான மதுகாட்டிய அன்பான அக்கரையின் காரணமாக பாதி
உடம்பிலேறிய ஊசி இடறிவிழுந்து சங்கரனின் இடது கால் முட்டியை பதம்
பார்த்தது. ஒருவழியாக குடியுடன் இரவை கழித்த சங்கரன் இந்நிகழ்வை
ஒருபொருட்டாக மதிக்கவில்லை.

காலம் கடந்தோடியது கல்லூரி காலமும் முடிந்து போனது. சங்கரன் ஒரு
அலுவலகத்தில் உதவியாளனாய் சேர்ந்த சமயத்தில் தகவலொன்று காதுகளுக்கு
எட்டியது இதற்கிடையில் சங்கரன் உடல்நிலையும் மாற்றமடைந்தது.
தகவல் இதுதான் பாண்டி எய்ட்ஸ் நோயால் இறந்தான் கல்லூரி படிக்கும்போதே
அந்நோய் அவனை பிடித்திருந்திருந்தத­ாம் ,,,
தகவலை வாங்கிய செவியோ சும்மாயிருக்க வில்லை எழுந்தது சங்கரனுக்கு
சந்தேகம். இனியும் தாமதிப்பது வீணென அருகில் இருக்கும் மருத்துவமனையை
நாடியிருக்கிறான் .
டாக்டர் எனக்கு செக்கப் செய்யனும்,,,,
எம்மாதிரியான செக்கப்
மலேரியா? டெங்கு? இரத்தகொதிப்பு?
அதுயில்ல டாக்டர் அதுவந்து!!! அதுவந்து!!!
என்ன எய்ட்ஸ் செக்கப்பா அதுக்கேன்பா தயக்குர! இதெல்லாம் சகஜம் எல்லாரும்
செய்து கொள்ள வேண்டியது தாராளமா செக்கப் செய்துகலாம்,, இறுதியாக தோள்மேல்
கைபோட்டு செக்கப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.
இரண்டுமணிநேரம் முடிந்தது இருவரும் வெளிவந்தனர் .

இப்போது மருத்துவர்,,,
ரிசல்ட் நாளைக்குத்தான் தெரியும் மிஸ்டர் சங்கரன் காலையில் வந்து வாங்கிக்கோங்க,,
என்று அனுப்பிவைத்தார் .
மருநாள் காலை சுடுநீர் காலைப் பற்றிய கணக்காய் பதற்றத்துடன்
அமர்ந்திருந்த சங்கரனுக்கு மருத்துவர் அளித்த ரிசல்ட் "ஆம் உனக்கு
எய்ட்ஸ் வளர்ந்துவிட்ட நிலையில் எய்ட்ஸ்"
இம்மருத்துவ முடிவை ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் எழுந்தது தான் என்று
தன்னத்தானே சபித்துக்கொண்டான் சங்கரன் .
அன்று ஆரம்பித்த அதிர்ச்சித் தகவலானது அவனது வாழ்நாளை
துரத்திக்கொண்டேயிருந­்தது. இதில் பலியானது அதனது வாழக்கை மட்டுமல்ல ,
பெற்றோர்,காதலி,சொந்த­ங்கள், நட்பு வட்டங்கள் ,சமூகமென அனைத்தையும்
பலிகொடுத்த உயிர் இதோ ஆலமரத்தடியில் அமர்ந்தவாரே பலியானது.




-______முற்றும்_____­_

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...