Friday, May 22, 2015

சுய "சாதி" பரிசோதனையை பிரயோகப்படுத்துதல்

சுய சிந்தனையின் மூலம் சாதனைகள் பல புரிவதெப்படி? என்பது காலத்தில் அழிந்துபோய்
அச்சுய சிந்தனையின் மூலம் தன் சாதியை வளர்ப்பதெப்படி? எனும் குறுகிய
வட்டத்தில் தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விட்டு நிற்கிறது நம் சமூகம்.
எதன்மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை . எனும்
முற்போக்குச் சிந்தனைகளிலே சில முரண்பாடுகளை இங்கே காண நேரிடுகிறது.
காரணம் தன் சுயசாதி பற்று இவர்களை ஆட்கொண்டு அடிமைபடுத்துகிறது என்றுச்
சொன்னால் அது மிகையாகாது. சோதனை ஓட்டத்தில் தன்சாதிப் பெருமையை
இன்னொருவரிடம் பரிசோதித்து விடலாமே என்கிற நப்பாசை வருகிறதே ஏன்? அதுவும்
அறிவியல் தொடங்கி ஆன்மீகம் வரையில் தனக்கு அவர்கள் என்றுமே அடிமையெனும்
பொது புத்தியில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் விளிம்புநிலை
ஒதுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே மீண்டும் மீண்டும்
சுயசாதிப் பரிசோதனைகளும் நிகழ்த்தப்படுகிறது.பெருமிதம், ஆக்கரமிப்பு,
அடிமைநோக்கம், அதனால் ஏற்படுகின்ற அர்ப்பமகிழ்ச்சி, இவையனைத்தும்
மனிதனுக்கு அப்(போதை)க்குத் தேவைப்படுவதால் தினமும் ஏதேனுமொரு வழியில்
விளிம்புநிலை மக்களிடம் சுயசாதி பரிசோதனையினை பிரயோகப்படுத்துகிறார­்கள்.
இதில் ஆண்,பெண் பேதமில்லை சமவுரிமை கேட்டு பெண்டீரும் போராடுவதற்கில்லை.
ஆணும் பெண்ணும் சுய சாதி பரிசோதனைகளை பிரயோகப்படுத்தும் போது மட்டும்
சமமாகவே ஒன்றிணைகிறார்கள்.சாதிய ரீதியலான அடிமைச் சமூகம் தான்
இன்னசாதியில் பிறந்தேன் என்று பிரயோகப்படுத்த தயங்கும். காரணம் இங்கே
ஆண்டான் அடிமையென்பது எதார்த்தமான ஒன்றாக இருக்கிறது. அந்த அடிமைச்
சமூகமானது நம்மை பார்த்து அச்சப்பட வேண்டும், பயந்து ஒதுங்க வேண்டும்,
பார்க்கும் போதே பக்தி ஏற்பட வேண்டும். என்பனவையாக சுயசாதி பரிசோதனையை
தன்வரலாற்று நிகழ்வுகள் மூலம் மேல்சாதியாக இருக்கும் எவரும் எளிதாக
பிரயோகப்படுத்தி விடுகிறார்கள். இன்று வரையில் சேரி அல்லது கலனி ,ஊர்
எனும் இரு வகுப்பு வாத பிரிவுகளாக உடைந்து காணப்படும் சமூகச் சூழலுக்கு
இதுவே காரணமாகும்.இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்! எனச்சொல்வோர்
அனைவருமே தன் சுயசாதி பெருமையை பிரயோகப்படுத்துபவர்க­ளாகவே
இருக்கிறார்கள் இல்லையெனில் சிற்சில தீண்டாமை ஒழிப்பை காரணங்காட்டினால்
பெருந்தீண்டாமைச் செயல்களை எளிதாய் மறைத்து விடலாமென்று இவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை இதனை கற்பிப்பது மட்டுமே மதமும், மதம்
விதைக்கும் மூட நம்பிக்கைகளும் முக்கியப் பணிகளாக கொண்டிருக்கிறது.
செயல்படுத்துவது மட்டும் இவ்விரண்டிற்கும் அடிமையாகப்பட்டவர்கள்­
செய்துவிடுகிறார்கள்.­ கவலையில்லை சாதி வளர்கிறது அதுபலரை நமக்குக் கீழான
அடிமைகளையும் வளர்த்தெடுக்கிறது எனக்கிற மனமகிழ்ச்சியின் மூலம் தன்னை
மேன்மையானவர்களென்று காட்டிக் கொள்ளவது இவ்வகையிலான மதப்போதகர்களுக்கு
மகிழ்சி வெள்ளம் பொங்கி வழிந்தோடுகிறது. ஒவ்வொருவரும் தங்களைச்
சுற்றியுள்ள எதார்த்த நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனிக்கத் தொடங்கினால்
இவ்வுண்மை புலப்படும் . புலப்படும் உண்மைகளில் பெரும்பான்மை,சிறுபான­்மை
எனும் விதிகளின் மூலம் கணக்கிட்டால் சுயசாதி பரிசோதனை பிரயோகத்தின் அளவு
மிகத்தெளிவாக நமக்குத் தெரிந்துவிடும்.இந்தியாவில் வாழும் ஒவ்வொரு
மனிதனும் சுயசாதி பரிசோதனைகளுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் .
ஆண்டான் அடிமை இரண்டுமே இதிலடங்கும். இவ்வாறு இருக்கும் இந்தியச் சூழலை
இனியும் காப்பாற்ற முடிமாயென்றால் அது சந்தேகமே,, அதேவேளையில் ஒருவர்
"தான் இன்ன சாதியில் பிறந்தேன் இது எனக்கு அவசியமற்றதென்று உணர்ந்தேன்"
என சூளுரைக்க எடுத்துக் கொள்ளும் சுயசாதி பிரயோகம் செல்லும்
தன்மையுடையதாக எடுத்தாளலாம் , இதில் சாதியே எனக்கு வேண்டாமென்கிற
உறுதிபெற்றபின்னரே அவ்வாக்கு உத்திரவாதம் பெற்று
செல்லுபடியாகும்.சிறுவயதில் அம்மாவிடமோ தந்தையிடமோ தன்சகோதரனைப் பற்றியோ
அல்லது தன்சகோதரியைப் பற்றியோ அல்லது அவர்கள் ஏதேனும் நம்மைச்
செய்துவிடும் முன்னரோ அல்லது பின்னரோ அவர்களைப் பற்றி மிகைபடுத்திக்
கூறுகின்ற சாடல்களை எதிர்த்து பெற்றோர்கள் வைக்கின்ற பெருங் கூச்சலின்
மூலமாக சக பிள்ளைகள் அடங்கிப்போவார்களே அதே போன்ற மனநிலையை
அப்படியேசுயசாதி பரிசோதனை பிரயோகப்படுத்துபவர்க­ளும் பெற்றிருப்பார்கள்
என்பதே இன்றைச் சூழலுக்கான எதார்த்த நிகழ்வு.ஒவ்வொருவரும் சமூகத்தின்
மீதான அக்கரை கொண்டு இச்சமூகம் சாதிக்க வேண்டும் என்கிற நற்சிந்தனையின்
காரணமாக தன் சுயசாதி பரிசோதனை பிரயோகத்தினை களைவதன் மூலம் சாதியத்தை
முற்றிலுமாக அழித்துவிட முடியாதென்றாலும் அது பிற்காலத்து பேருதவிக்கு
முக்கிய பங்காங்காற்றும் என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம்.

2 comments:

  1. நண்பருக்கு அருமையானதொரு அலசல் மிகவும் யதார்த்தமாக கொண்டு போனவிதம் அருமை தங்களின் தளத்திற்க்கு இன்று முதல் முறையாக வருகிறேன் பல விடயங்களை நான் தவற விட்டமையை உணர்கிறேன் வாழ்த்துகள்.
    தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லையே.... தங்களது தளத்தில் இணைந்து கொள்ளும் வழியில் இல்லை தொடர்கிறேன்.
    நட்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...