Tuesday, June 16, 2015

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை பற்றி,,,(கம்யூனிஸ்ட்)

ஆர் கே நகர், இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொங்கியிருக்கிறது . வருகின்ற
27ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தாகவிட்ட நிலையில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தோழர் மகேந்திரன் களத்தில்
இருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும்
தொகுதியில் ஆக்கிரமித்துள்ளதாலும­்,தேர்தல் அதிகாரத்தின் மீதான
நம்பிக்கையின்மையாலும­் ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக,
தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட
தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், போட்டியிடாமல் ஒதுங்கின.
இந்நிலையில் பெருஞ்சவாலை எதிர்கொள்ளும் இடதுசாரியத்தின் வேட்பாளர் தோழர்
மகேந்திரன் அவர்களை பற்றி சின்னத்திரை (சீரியல்) இயக்குநர் தோழர் கவிதா
பாரதி (Kavitha Bharathy) தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அவரது
முகபுத்தகத்தில் பதிந்தார். முகபுத்தகத்தில் இடதுசாரியத்தின் மீது
பற்றுள்ளவராய் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னால் தோழர் கவிதா பாரதி
எனக்கு அறிமுகமானார். கூடுமானவரை இணையத்து தோழமைகளை நேரிலோ அல்லது
கைபேசியிலோ நட்பு உறவாடுவதை தவிர்க்கும் பழக்கமுள்ளதால் அவர் இடும்
பதிவுகளுக்கு கருத்துகள் தெரிவிக்கும் அளவுக்கு மட்டுமே நான் இருந்தேன்
இது எனக்குள் இருக்கும் பழக்கமுறை.
வலைப்பதிவுலகிற்கு வந்த நாள் முதலாய் முகபுத்தகம் மீது குறைந்த கவனமே
செலுத்தியதன் விளைவாக கால தாமதத்தோடுதான் அவர் பதிவை வாசிக்க நேர்ந்தது.
படித்ததும் பிடித்து போனதால் அப்பதிவை அப்படியே பகிர மனம் ஏங்கியதன்
காரணமாக தருகிறேன் தோழர் கவிதா பாரதியின் பதிவை அப்படியே,,,,


அப்போது எனக்கு வயது பத்தொன்பது.. சென்னையிலிருந்து பொதுக்கூட்டத்தி
ற்காக பெருந்துறை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப்
பொறுப்பிலிருந்த தோழர் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.. கட்சியைச்
சேர்ந்த என் நண்பர் தோழரைப்ப்பார்க்க என்னையும் அழைத்துச் சென்றார்..
பேசிக் கொண்டிருக்கும்போது எதோ எழுதுவதற்காக தோழர் பேனாவைத் தேடினார்..
நான் என் பேனாவை எடுத்துக் கொடுத்தேன்..
வீடு திரும்பிய பிறகுதான் தோழர் என் பேனாவைத் திருப்பித் தரவில்லையென்பது
தெரிந்தது.. ஆசைப்பட்டு வாங்கிய ஹீரோ பேனா... அப்போது அது என் சக்திக்கு
மீறிய பெரிய விலை. .
அதைத் தொலைத்த வருத்தம் ரொம்ப நாள் மாறவில்லை..
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு என்னைஅழைத்துச் சென்ற அதே நண்பர்
அந்தப் பேனாவை என் வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்... எனக்கு நம்ப
முடியாத பேரதிசயமாக இருந்தது இந்நிகழ்வு..
தோழர் மறந்து போய் பேனாவைக் கொண்டு போய்விட்டார்.. ஆனால் பல
நாட்களுக்குப் பிறகு கட்சியின் மாநிலக்குழுக்கூட்டம்­ சென்னையில
நடந்தபோது என் நண்பரின் பெயரையும், என் அடையாளத்தையும் சொல்லி ஈரோடு
மாவட்டச் செயலாளரிடம் பேனாவைக் கொடுத்தனுப்பியி ருக்கிறார்..
பின் மாவட்டக்குழுக் கூட்டம் நடந்தபோது அது எங்கள் சென்னிமலை
ஒன்றியச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட ு என் நண்பர் கைக்கு வந்து என்
வீட்டிற்கும் வந்து சேர்ந்தது.. மறந்துபோய் கொண்டு சென்ற ஒரு பேனாவைக்கூட
மிக நேர்மையாக திருப்பி ஒப்படைத்த தோழரின் பெயர் சி.மகேந்திரன்..
அவர்தான் இப்போது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடதுசாரிகளின் வேட்பாளர்,,,,

என்னதான் இடதுசாரியம் அதன் கொள்கை கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தாலும்
ஆளும் அதிமுக வின் சர்வாதிகார முதலாளித்துவத்திற்கு­ முன்னால்
தோற்றுப்போய்விடும் என்பதில் சந்தேகமேயில்லை ஏனெனின் மக்களின்
சிந்திக்கும் திறணை திட்டமிட்டே அழிப்பதில் ஆளும் கட்சிகளுக்குத்தான்
கைவந்த கலையாயிற்றே!
இடதுசாரியம் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை இரண்டாம்
இடம் பெருவதே வலது சாரியத்திற்கு விழும் பலத்த அடியாய் இருக்கும். தோழர்
மகேந்திரன் வெற்றியோ! தோல்வியோ! சவாலை சந்திக்கும் ஆளுமையாளர் என்பதில்
இடதுசாரியம் நம்பிக்கையோடு இருக்கிறது .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...