Tuesday, May 17, 2016

வள்ளுவன் குறித்தான விவாதத்தில் அயோத்திதாச பண்டிதர்

1892இல் சென்னையில் மகாஜன
சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி
தலைமையில் நடந்தது. கூட்டத்தில்
அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன
விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த
திருக்குறளைப் பாடினார்; சுக்கில-
சுரோனிதம் கலப்பரியாது என்று
குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக்
கொண்டிருந்த அறிஞர் திரு.க
அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள்
சொல்லியதை நான் ஏற்றுக்
கொள்வதென்றால், நான் சில கேள்விகள்
கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும்
என்றார்.
நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று
இழிவுபடுத்தப்படும் பறையர்கள்
என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின்
கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப்
பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில்
அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார்
விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று
எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம
சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல்
நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச
பண்டிதர் தொடர்ந்து
பெருங்குற்றங்களைச் செய்து
சிறைச்சாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள்
யார் விந்துக்குப்
பிறந்திருப்பார்களென்று நீர்
நினைக்கிறீர் என்று கேட்டார்.
சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில்
கூறாமல் திருதிரு என்று விழித்துக்
கொண்டு நின்றார். அறிஞர்
க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில்
சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று
சினந்து கேட்டுக் கொண்டிருக்கும்
பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில்,
பி.அரங்கைய நாயுடும், எம்.
வீரராகவாச்சாரியாரும் அறிஞர்
க.அயோத்திதாச பண்டிதரை
அமைதிப்படுத்தினார்கள்.
சிவநாம சாஸ்திரியை
கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து
பேசினார்கள். சிவநாம சாஸ்திரி
உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல
கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்
வையம் போற்றும் நூலாம்
திருக்குறளைத் தந்த பேரறிஞர்
வள்ளுவரைப் பற்றி சிவநாம
சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி,
தம் ஆரிய நஞ்சைக் கக்கினார்.
இவ்வாறு நடப்பது இன்றல்ல,
நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய்
நடக்கின்றது. இன்றும் தமிழனை
இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக
தொண்டாகக் கொண்டுள்ளார்கள்
பார்ப்பனர்கள்.

2 comments:

  1. அறிந்து கொண்டேன்....

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...