Wednesday, January 09, 2019

10% பொருளாதார இட ஒதுக்கீடு சதி





ஆளும் பாசிக பாஜகவானது அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு ? அதாவது பொது பிரிவினருக்கு... 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019) வை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு...  இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு அதுவும் ஏற்கப்படால் நிச்சயமாக இட ஒதுக்கீடு குறித்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காவி அரசு மூக்கை நுழைத்து திருத்தியாக வேண்டிய அபாயம் இருக்கிறது.

ஆதிக்க சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு ? இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தலித்துகள் உட்பட இதர இடைநிலை சாதியர்களின் இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் சமூக அநீதி நிகழும் என்பதில் மாற்றுக் கருத்தினை யவராலும் சொல்ல முடியாது... நிலைமை இப்படியிருக்க சாதிய ரீதியலான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு வித்திடும் இட ஒதுக்கீட்டில் "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு "என்பதே ஒரு ஏமாற்று வேலை, இதில் பார்ப்பனியம் வென்றிருக்கிறது என்றே சொல்லலாம்.  10 சதவீத இட ஒதுக்கீடு என்பது இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான அதாவது பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆக... அம்பேத்கரின் அரசயலைப்புச் சட்டத்தை மொத்தமாக நசுக்கவே இதனை பாஜக வஞ்சகம் புரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது அது பற்றியான பேச்சுக்கே இடமில்லை. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் படிப்படியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு உரிமையை மெல்ல மெல்ல நசுக்கி மொத்தமாக இட ஒதுக்கீடு என்பதை "பொருளாதார அடிப்படையில்" கொண்டு வந்துவிடலாம்... இதன் மூலம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகள் படி , இட ஒதுக்கீடு குறித்தான வழக்குகள் தொடுக்கப்படும்போது... "சாதியற்ற சமூகம்" என்று வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதபடி ஆகிவிடும் . விளங்கும்படி சொல்ல வேண்டுமெனில் இந்தியாவில் சேரி-ஊர் என பிரித்து வைக்கப்பட்டிருக்கும் சாதிய இரட்டைக்குடில் முறையை முற்றிலுமாக ஒழித்தாகிவிட்டது என்கிற நிலைமையை அரசுகள் கொண்டிருக்குமேயானால் அது இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ரத்து செய்யலாம் என்கிறது உச்சநீதிமன்றம், ஆகவே இவ்வழியை பயன்படுத்தி அரசுகள் இட ஒதுக்கீடு முறையில் நுழைய "சாதி முதலில் ஒழிய வேண்டும்" ஆனால் பின்வாசல் வழியான "பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு என்றால் மொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்து அனைவரையும் "பொதுப் பிரிவு" என்பதற்குள் கொண்டு வந்துவிட்டால் சாதியமும் அப்படியே இருக்கும் , பார்ப்பனியமும் சாதியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கணக்கு போடுகிறது இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக...அதுமட்டுமின்றி... இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டில்  ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டக்கூடியவர்கள், மற்றும் 5 ஏக்கர் நிலத்திற்கு கீழே உள்ளவர்கள் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் உயர்ஜாதி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்ட மசோதாவாக இருக்கிறது... எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது? அதிலிருந்தும் இந்த அரசு மிகப்பெரிய முட்டாள்களை கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்... வறுமைக்கு வரையறை 8 லட்சமும் 5ஏக்கர் நிலமும் எனில் வரி விதிப்புக்கான 2 லட்ச வரம்பை எங்கே முறையிடுவது? ஆக தங்களை ஒடுக்கப்பட்ட பார்ப்பானாக காட்டிக் கொள்வதில் இந்த பார்ப்பனிய சமூகம் முனைந்திருக்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்.. சரி ... அதை விட்டுவிடலாம் அவர்கள் ஒடுக்கப்பட்ட பார்ப்பானராகவே இருந்துவிட்டு போகலாம் அதே வேளையில் இதே ஒடுக்கப்பட்ட பார்ப்பனர்கள் துப்புரவு பணி செய்ய தயங்களை முனைப்புடன் வந்து பணி செய்ய தயாரா? அதற்கு மட்டும் ஏன்  இந்த 10% இட  ஒதுக்கீட்டை விலக்கி வைக்கிறது? ஏனென்றால் சாதிய சமூகத்தில் தலித்துகள் மட்டுமே துப்புரவு பணி செய்ய திணிக்கப்படுகிறார்கள் அதுவும் அதே ஹிந்துத்துவ பார்ப்பன வழியில்...உலகிலேயே வறுமை கோட்டினை மேல்நோக்கி கணக்கிட்ட  அதி புத்திசாலிகள் நம் ஆர்எஸ்எஸ் மூளைகள்... இவர்களிடம் இந்த நாடு சிக்கிக்கொண்டு பாடாய்படுகிறது... இருக்கின்ற மிகப்பெரிய சிக்கலையும் அதனை தீர்க்கும் வழிகளையும் கைவிட்டுவிட்டு எல்லாம் இருந்து மக்களை அடிமைபடுத்தியே கொழுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அஜென்டாக்களுக்குதான்இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 76% சதவிகிதம் (  அதுவும் தோரயமாக ) தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருக்கிறது என்கிறது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வு ஆணையம்... ஆனால் இவர்களோ இருக்கும் 50% இட ஒதுக்கீட்டை மீறி மேலும் 10% பிராமணர்களுக்குவாரி வழங்குகிறது பெரும் மோசடி இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?  இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் அது நிச்சயம்சமூகநீதிக்கு எதிராகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லைதானே....இந்து மத சாதிய வர்ணாசிரம அடிப்படையில் வேண்டுமால் இவ்வாறு கணக்கிடப்படலாம் , ஆனால் ஒரு துளியளவும் இதனால் எவ்வித பிரயோசனுய் இல்லை என்பதுதான் உண்மை.பார்ப்பனியம் என்றுமே நேரடியாக எந்த காலத்திலும் மோதாது... அதன் குள்ளநரித்தனம் என்பது இடைநிலை சாதியாதிக்கர்களை தூண்டிவிட்டபடியே தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் என்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான்இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு.... ரிசர்வேஷனை ஒழித்துவிட்டால் சாதி ஒழியும் என்றும் , சாதி சர்டிபிகேட் கிழித்தால் சாதி ஒழியும் என்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் சாதி ஒழியும் என்றும் கிருக்குத்தனமான பேச்சுகளையெல்லாம் இதே இடைநிலை சாதிகளை வைத்து பேச விட்டு இப்போது பொது  பட்டியலில் 10% த்தை... மிக லாவகமாக தட்டிச்சென்றிருக்கிறது பார்ப்பனியம் , அவ்வாறே அவர்கள் ஒடுக்கப்பட்ட பிராமனியர்களாக இருக்குமாயின் அவர்களை சேரியில் குடியேறச்சொல்லுங்களேன் பார்க்கலாம்... அத்துணை முகங்களும் கோபத்தில் விழி பிதுக்கும்... ஏனெனில் இங்கு சாதியத்தை வளர்த்தெடுப்பதே அவர்கள்தானே?

இந்த மோடி அரசு மட்டுமல்ல இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த மாயாவதியாகட்டும் , பினராயி விஜயனாகட்டும் , காங்கிரஸ் ஆகட்டும் " ஒடுக்கப்பட்ணவர்களின் வாக்கு வங்கியினை விட ஆதிக்க சாதியத்தின் வாங்கு வங்கியினை கவனத்தில் கொண்டே ஆதரிக்கிறது எனலாம் .. இதன் மூலம் பெறும் ஓட்டரசியல் என்பது மிகப்பெரியதான சமூக அநீதி என்றே சொன்னால் அது மிகையாகாது. பாஜகவை பொறுத்தவரையில்  அடுத்த ஆட்சிக்கு யார் வரப்போகிறார்கள் என்கிற தேர்தல் காய்ச்சலிலும் , நிச்சயமாக தலித் வாக்குகள் விழாது , அவர்களின் வாக்கு வங்கி அவசியமற்றது எனவும் , தனக்கே உரிய ஹிந்துத்துவ பார்ப்பனிய சாதிய பாசத்தாலும் , இந்த பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு வடிவம் கொடித்திருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது... நிச்சயமாக காங்கிரஸ் அடுத்த ஆட்சிக்கு வந்தாலும் இந்த மசோதாவை நிறைவேற்றியே ஆகும் , ஏனெனில் சாதியத்தை , மதத்தை  வைத்து அரசியல் செய்வதில் ஆர் எஸ்எஸ் இன் இன்னொரு வடிவமாகத்தான் காங்கிரஸ் இன்றளவும் இருக்கிறது...

இந்து மதவாத சக்திகளை அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வழியில் ஒழித்து  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே இப்போதைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. 

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...