Tuesday, January 08, 2019

இயக்க அரசியலும் தேர்தல் அரசியலும்




இயக்க_அரசியல் Vs தேர்தல்_அரசியல்

இயக்க அரசியலும் தேர்தல் அரசியலும் முரண்பட்டதா?

தேர்தல் அரசியல்  தற்போது மிகப் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், ஆகவே இயக்க இரசியலை முன்னெடுப்பதாகவும் , இப்போதைக்கு தேர்தல் அரசியலை புறக்கணிப்பதே நல்லதெனவும் சொல்கிறார்கள்... ஆனால் தேர்தல் அரசியலுக்கும் இயக்க அரசியலுக்கும் முரண் என்பதே இல்லை என்பேன், ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையதாகவே இருக்கிறது... திக, மற்றும் அதனின் பிரிவு அமைப்புகள் மற்றும் இடதுசாரிய (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் தவிர்த்து) அமைப்புகள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காதவைகள் , விசிக தொடக்கத்திலும் தேர்தல் பாதை திருடர் பாதை என்று முழக்கமிட்ட அரசியல் களம்தான்...  ஆனால் "ஒரே இடத்தில் குவியும் அதிகாரத்தை உடைத்தெரிய தேர்தல் அரசியல் இங்கு அவசியமாகிறது, மக்களின் வாக்குரிமையே இங்கு  அதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும் சக்தியாகவும் அதுவே "மக்களாட்சி" என்றான பிறகும் தேர்தல் அரசியல் மிக அவசியமாகிறது...
ஆனால் இங்கு தேர்தல் அரசியல் மூலமாகவே ஒரே இடத்தில் ஆட்சியதிகார குவியல் நிகழ்த்தப்படுவதுதான் சிக்கலாக அமைகிறது, என்ன காரணம்?
முழுக்க  இயக்க அரசியலையும் தேர்தல் அரசியலையும் பிரித்து பார்ப்பதே முக்கிய காரணமாக அமைகிறது, தேர்தல் அரசியல் மூலம் அரசியல் அதிகாரமானது ஒரே இடத்தில் குவிவதை தடுப்பது என்பது முழுக்க முழுக்க இரக்க அரசியலிடமே இருக்கிறது , இயக்க அரசியலின் அடுத்தகட்ட நகர்வே தேர்தல் அரசியலாக பார்க்காததன் விளைவு இதுவாக இருக்கிறது , இயக்க அரசியல் மக்களிடம் சென்று தமது கொள்கை கோட்பாடுகளினூடே தேர்தல் அரசியலின் அவசியத்தையும் , அதன் அரசமைப்பு அடிப்படை உரிமைகளை தக்கவைக்கும் செயல்திட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.. இயக்க அரசியலானது மக்களின் மனவோட்டத்தில்   சனநாயம் , சமத்துவம் , சகோதரத்துவம் , பொருளாதார சீர்தீர்த்தம் , சனநாயக உரிமை , அரசமைப்பு அடிப்படை உரிமைகள் தக்கவைப்பு , சாதிய மதவாதத்திலிருத்து  தற்காத்துக் கொள்ளுதல் , கல்வி , பெண்கள் விடுதலை , சமூக சீர்திருத்தங்கள் இவையனைத்தும் தீர்மானிப்பது தங்கள் ஆட்காட்டி விரல் மட்டுமே என்கிற அரசமைப்பு உரிமையை மக்களாட்சியின் விளக்கத்தை அதன் அவசியத்தை  இயக்க அரசியலின் அடுத்த நகர்வாக எடுத்துச் செல்வதன் மூலம் ஒரு சிறந்த அரசியலை  மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை தடுத்து நிறுத்தும் வழியாக அமையும் , ஓர் முறையற்ற அரசாளுமையை மற்றும் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிவதை கண்டு திரும்ப திரும்ப நாம் மக்களையே குறை சொல்கிறோமே தவிர இயக்க அரசியலில் உள்ள குறைபாடுகளை மறந்துவிடுகிறோம் , தேர்தல் அரசியலை புறக்கணிப்போம் என்று அறைகூவலிடுபவர்களிடத்தில்
சரி... அதற்கு எதிர்வினையாக மன்னராட்சி இருக்கலாமா? என்றால் பதில் இருக்காது... காலந்தோரம் எவரோ நம்மை சர்வாதிகாரம் செய்து ஆளுவார்கள் அவர்களை காலம் முழுக்க எதிர்க்கவே இயக்க அரசியல் என்றால் இங்க சனநாயக மக்களாட்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே... ஏன் இயக்க அரசியலோடு தேர்தல் அரசியலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எது தடுக்கிறது?  இங்கு மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு இயக்க அரசியல் கூடவே தேர்தல் அரசியலை கொண்டு செல்வதில்தான் ஒரு முறையான மக்களாட்சி பிறக்கும் , நம் அரசமைப்பும் அதன் மூலம் பாதுகாக்கப்படும்....

தொடர்ந்து எழுதலாம் ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...