Wednesday, January 02, 2019

தீட்டென்பது வெறும் மயிற்




ஆதி பிறப்பென்பது அவ்வழியே தழைத்து

ஈடு இணையற்ற மானிட
வளர்ப்பில் உயிர் கொடுத்து

உனக்கும் எமக்குமான
பந்தம் பேரன்பில்
உணர்வுகளை ஊட்டி

மனித சக்தியில்
மாசற்ற இதயம் எங்கே என வினவுகையில்
அதே அவ்விடத்தில் எங்கு நீ பிறந்தாயோ...
எவள் மடியில் வளர்ந்தாயோ அங்கு வழியும் ரத்தக் கசிவுகளில்  மற்றுமோர்
இதயம் துடித்திடுகிறது

அவள் உன் தாய்
அவள் உன்  மனைவி
அவள் உன் மகள்
அவள் உன் தங்கை

எங்கே வந்தது இதில் தீட்டு?

திணிக்கப்பட்ட புனிதங்களின் வழியே
தீட்டை நுழைத்திட்டு
அடிமையென அவளை அனுமதிக்காத கோவில்
கருவறை எனில்...

குழந்தையென வயிற்றுக்
கருவறையில் இருந்து
எந்த வழியில் நீ பிறந்தாயோ...
அதே யோனியில் வழியும் ரத்தக் கசிவுகள்
தீட்டெனில்?
நீயும் நானும் தீட்டுடையவர்கள்தானே?
திருந்தடா மானிடா...
தீட்டென்பது வெறும் மயிற்....

வனிதா மதில் பேரணி குறித்து...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...