Friday, March 08, 2019

வெயில்




பூரண சரணாகதி அடைகிறேன்

என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...



பெருந் தழலில் காய்ந்து

வியர்வையில் நனைந்து

எனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்

முத்தங்களிட்டு உன்னை

எனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்

பேரன்போடு உள்நுழைந்து

அழைப்பாய் ...



வா .... ஒரு குளியலில்

கூடலாமென சினுங்கும்

அந்த மொழிக்காகவே

தினம் என்னில் வதைக்கும் சூரியனில்

வேண்டி தருகிறேன் என்னையே ...



வதைத்தாலும் வெயில்

அழகென

எனக்கு மட்டுமே தெரியும் ...



வியர்த்திடும் எல்லா பொழுதுகளிலும் விசிறி ஆடை போர்த்திவிடுகிறாய் ..



உச்சி வெயிலில்

நீ ... தரும் உச்சந்தலை

முத்தத்தில் குளிர்ந்து விடுகிறது இந்த வெயில் ...



சொல்கிறேன் ...

வெயில் பேரழகு ...

மழையை விடவும் ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...