Saturday, February 14, 2015

பிறந்தது விவாகரத்து

மாலையில் அலுவலகத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுக் கிளம்பிய சரவணனும் கீதாவும் தங்களது வீட்டை அடைந்தார்கள் வேலைசெய்வது வெவ்வேறு அலுவலகம் தான் வீடு மட்டுமே ஒன்றானது .இருவரும் சேர்ந்தே வாசற்கதவை திறந்தார்கள் உள்ளே சென்றபின் அவரவர் அறைகளை அடைந்தார்கள் .ஒருவரையொருவர் பேசிக்கொள்ளவில்லை பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும்,,, ஏன் இப்படியென்ற கேள்விக்கு அன்றைய காலைபொழுது விடை கூறியது .பால்காரன் முதல் பேப்பர்காரன் வரையில் வந்துபோன பின்பு கடைசியாக கதவை தட்டினார் தபால் காரன் . வெளியில் வந்த இருவரில் சரவணன் பெற்றுக்கொண்டான் தபாலை, பெற்றதை வாராந்தா மேசையில் வைத்து விட்டு அவனும் நகர்ந்தான் . வந்தது விவாகரத்து நோட்டீஸ் தான் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மணமுடித்த கையோடு சில மாத மனக்கசப்பில் உறுவான நோட்டீஸ் அது . இன்னும் குழந்தையில்லை .இணைந்த கட்டில் எப்போதோ பிறிந்திருந்தது . இருவருக்குமான உறவு காதலில் தான் மலர்ந்தது. புரியாத வயசுக் காதல் புரந்தள்ளியே போனது பல அனுபவங்களை ,, விவாகரத்திற்கு என்ன காரணம்? கடந்த கால நிகழ்வுகளை அலசிவிடுவது அவசியம். இருவருமே காதலித்து மணந்தவர்கள் சாதிமதம் தடையில்லை பொருளாதாரம் போதுமானதாய் இருந்தது இணைந்த காதலுக்கு. இரண்டுமாதம் கடந்து போனது . கைபேசியில் மட்டுமே காதலை பொழிந்த கரங்களுக்கு காதல் வாழ்க்கையை கரம்பற்றிடத் தெரியவில்லை . திணறினார்கள் ,எதிர்காலத்தை கணிக்கமுடியவில்லை அதுபற்றியும் கைபேசியில் பேசிடவில்லை . புது அனுபவம் எப்படி ருசிப்பதென்று இருவருக்கும் தெரியவில்லை . காதலிக்கும் போது எப்போதாவது எங்கேயாவது இருவரும் தனிமையில் காதலை பகிர்ந்ததுண்டு அதில் தொடுதலும் சீண்டலுமே தொடராய் இருந்ததேத் தவிற வாழ்வு குறித்தான வழவுச்சொற்கள் எங்கேயும் எழுந்திடவில்லை .இருமனமும் திருமணம் கண்டு எட்டு மாதங்கள் ஆனது . அதுவரையில் அவசியமான எதிர்கால சிந்தனைகள் எழாதவாரு மூளையை மழுங்கடிக்கச் செய்துவிட்டிருக்கிறார்கள் இருவரும் . ஆதேவேளையில் அக்குடும்பச்சூழலை சீர்குலைக்கும் வகையில் சந்தேகமெனும் சவப்பெட்டு அவ்வீட்டு வாசலில் காத்திருந்தது . முதலில் எழுப்பியது சரவணன்தான். காரணம் கீதாவுக்கான நட்பு வட்டங்கள். திருமணம் முடிந்தபின்னே தூறே எறியப்படும் முதலன்பு அதுதானே, ஆரம்பித்தான் முதலில் சரவணன்.... கீதா உனக்கு ஃப்ரண்ஸ் சர்க்கிள் அதிகமா இவ்வளவு கான்ட்டக்ட் இருக்கே உன்னோட செல்லில்,,,, ஆமாங்க ஸ்கூல், காலேஜ், ஆபீஸ், ட்ராவல் ப்ரண்ஸ்னு,ப்ரண்ஸ்ஸோட­ ப்ரண்ஸ்,னு தனித்தனி குரூப்ஸ் இருக்கு அவ்வளவு பேரும் எம்மேல பிரியமா இருப்பாங்க .,நெருக்கமா இருப்பாங்க, அன்பா பேசுவாங்க,நாங்க அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம்னா நேரம் போரதே தெரியாது அவ்வளவு பேசுவோம் .சொல்லி முடித்தாள் கீதா,,, அனைத்தையும் கேட்ட சரவணனனுக்கு சூடுபோட்டு சுழியிட்டது "நெருக்கமா இருப்பாங்க" எனும் வார்த்தைதான் .சந்தேகத்தின் முதல் தொடக்கத்திற்கு அது போதுமானதாய் இருந்தது. இப்படியாக சென்ற பின் கீதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது அதன் விளைவாக அவ்வப்போது தேடிவரும் நண்பர்களை தள்ளியே வைத்துவிட்டாள் . தனியவில்லை சந்தேகம் . இறுதிநிலை எட்டியது யுத்தத்தில் கடைசி நிலையை அடைவது தானே இயற்கை.ஆரம்பித்தான் சரவணன்,,, ஏண்டி அவ்ளோ நெருக்கமான ப்ரண்ஸோட கூடல்லாம் என்னன்ன செஞ்சியோ என்ன ஏண்டி கல்யாணம் பண்ண ? நானா கெடச்சேன் உனக்கு இந்த கருமம்லாம் லவ் பண்ரதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே (பிரேக்கப் பண்ணியிருப்பேன்) எனக்குனு வந்திச்சி பாரு தைத்திரம் .... சரவணன் வீசிய கடுஞ்சொல்லானது காற்றில் மறைந்தாலும் அடிமனதில் அப்படியே உள்வாங்கிய அதிர்ச்சியில் உறைந்தாள் கீதா,,எதுவும் பேச நாவெழவில்லை அழுகை மட்டுமே அப்போது ஆருதலாய் இருந்தது அவளுக்கு... மூன்று இரவுகள் முழுவதுவாய் வாழ்ந்திருந்தது சந்தேக சங்கடங்கள். முடிவினை நோக்கியது ஒருநாள் துகிலுரித்து எட்டிப்பார்த்தது கதிரவன் விடிந்தது காலை ,, முன்னெப்போதும் இல்லாமல் அதிகாலையிலேயே எழுந்து அலுவலகம் கிளம்பும் முன் ஆசுவாசப்படுத்திக்கொண­்டு வராந்தா இருக்கையில் அமர்ந்தாள் கீதா அவனுக்காக காத்திருப்பானது அந்நேரம் . சரவணனும் வந்தான் அவனும் அலுவலகம் கிளம்பியிருந்தான் அவனுக்கு முன்பாக கீதா ஒரு வித்தியாசமாக காட்சிதந்தாள் .கவனித்தும் கவனிக்காதவாரே சென்றான் நிறுத்தினாள் கீதா,,, ஒரு நிமிஷம் இந்த த்ரீ டேஸா என்னவோ யாருக்கோ நான் விலைபோய்ட்டமாதிரி பேசன ,இன்னைக்கு தான் நம்ம காதலோட கடைசி நாள் . என்னமோ சொன்னியே! நெருக்கமானவங்க கூட வாழ வேண்டியதுதானேனு அதே கேள்வியை நான் உங்கிட்ட கேட்டா எப்படியிருக்கும். உன்னோட ப்ரண்ஸ் சர்க்கிள் மோசமானதுனு நான் சொன்ன ஏத்துக்குவிங்களா,எப்­பப்பார்த்தாலும் எங்கள கொறசொல்ரது சந்தேகப்ரதுனு அலையுறிங்களே உங்களுக்கெல்லாம் எதுக்கு காதல் கல்யாணம்லாம் ,,,இந்தாங்க விவகாரத்து நோட்டீஸ் இனி உங்களோட வாழ எனக்கு விருபபமில்ல கல்யாண தேவையும் எனக்கு ஏற்படல,,, சரவணன் அன்றிரவு அடுக்கிய வார்த்தைகளை விட அதிகமாகவே அடுக்கினாள் கீதா ,,, இதுதான் உம்முடிவா? கேட்டான் சரவணன். கீதா தலையை மட்டும் அசைத்தாள் இப்போது அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ,,, பெற்றுக்கொண்ட நோட்டீஸில் கையெழுத்திட்டு கிளம்பினான் சரவணன். இப்போது எல்லோரிடமும் சந்தோஷமாக பேசிப் பழகுகிறாள் கீதா அதேவேளையில் அனுதினமும் மனதின் ஒருமூலையில் மடிந்த காதலும்,மரணித்த பெண்மையும் அவளை சித்ரவதை செய்துக்கொண்டே இருந்தது. கடைசியாக கைகொட்டி சிரித்தது அந்த கைபேசி காதல் அழுவதில் தான் அதற்கு எத்துனை சந்தோஷம் . இப்போதும் சிரிக்கிறது கைபேசி . அதன்மேல் தவறில்லை காதல் அதற்குச் சரிபடவில்லை.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...