Saturday, February 14, 2015

ஆன்மாவின் அருகில்

அசதியில்
உறைந்திருந்தது
ஆன்மா
அமைதியை
தேடிச்செல்ல
துடித்தது
தூவானம் தூரமாய்
தெரிந்தது
தானாக அழைத்தது
அன்பெனும்
மழையை

அழைத்தால் வருமா
மழை?
ஆன்மாவிற்கு
மட்டுமே
தெரிந்திருந்தது
அழகாய் செலுத்தினால்
அன்பெனும் மழை
அழைத்தவுடனே
வருமென்று

ஆன்மாவின்
அருகில்
அமர்ந்தது
அன்பெனும்
மழை

யுகங்கள்
கடந்துபோய்
யுகதிகள்
முக்தியாகி
முற்றிய வயதிலும்
நிலமெனும்
நீங்காத மனதினில்
நீரினை வழங்கிய
அன்பெனும்
மழையே
நிதர்சன
உண்மைகளை
கேள்
உனை என்றும்
உள்ளத்தில்
சுமந்ததனால்
என்னவோ
சுமையாக தெரியவில்லை
உடல்
எனை சூழ்ந்தே
சுயம்வரம்
கொண்டாய்
சுகமேதும் அனுபவிக்கவில்லை
நீ

சொல்லன்பே
இன்றென்
அமைதிக்கு
ஆருதலளிப்பாயா
ஆன்மா
கேட்டது

ஆன்மாவின்
அஞ்சல்தலை
உதிரங்களை
அளந்தே
வைத்திருந்தது
அன்பெனும்
மழை

அதிகம் பேசவில்லை
அன்பெனும் மழை
அதிகம் பொழிந்தால் தூற்றுவார்கள்
மழையை
அதற்கு பேரும் பேய்மழையென
தெரியாதா அன்பெனும்
மழைக்கு

அவசியச்சொற்கள்
மட்டுமே
அப்போதைய
ஆருதலென்று
உணர்ந்த அந்த
அன்பெனும்
மழை

சிலதுளிகளை
ஆன்மாவிற்காக
உதிர்த்தது

அன்புள்ள ஆன்மாவே
அமைதிக்கு நீயே
அழகிய சிற்பம்
சிற்பியின் கைகளை
உளி குத்திடலாமா
அதுவும் துரோகம்
தானே,,

அன்பை சுமந்து அருகே
நானிருக்க அமைதி
வேண்டிடலாமா
நீ

கடைசியில் நீயும்
நானுமாகி
நிரந்தரமில்ல
உலகில் நீண்டதொரு
விடியலை
விதைத்திட மாட்டோமா

ஆன்மாவே அமைதியை
விரும்பு அடிமனதில்
அன்பே குடியிருக்கும்
அப்போதும் பெய்து
கொண்டிருப்பேன்
பார்முழுதும்
அன்பெனும்
மழையாகி
சுவாசத்தில் சுவைத்திருப்போம்
சுயநலமில்லாத
நாமிருவரும்
நமக்கிடையே
முளைத்திருக்கும்
புதியதொரு
புறாச்சிறகு

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...