Wednesday, April 01, 2015

கதவுகளின் கோணங்கள்

வெறும் வயல்வெளிகளோடு
காற்றுவெளியில் நெற்கதிற்களின்
வாசத்தை உமிழ்ந்து
கொண்டிருந்தது அந்த பூமி .
யாதொரு தொடர்புமற்ற
கலையிழந்து கானப்பட்டது ஒரு
குடில். இளஞ்சூரியன் மட்டுமே
வெளிச்சத்தில் அக்குடிலின்
கலையழகை கண்டுரசித்திருந்தது .
மூங்கில் தட்டியால் மூடியிருந்த
தற்காலிக கதவை அப்படியே
அப்புறப்படுத்தி வெளிவந்தான்
பொன்னையன். அவனுக்கு முன்பே
எழுந்திருந்தாள் செல்லம்மாள்.
பெண்ணின இயல்பில்
மாற்றமேதுமில்லை அவளிடத்தில்.
காலை கதிரவனை வணங்கிவிட்டு
வேப்பங்குச்சியை ஒடுத்து
பல்லிற்கு தூய்மையளித்தபடியே
செல்லம்மாளை அழைத்தான்
பொன்னையன். ஏ!!! செல்லம்மா
பழஞ்சோறு பானையில கிடக்கு
கடிச்சிக்க கொஞ்சம் பச்ச மிளகா
பறிச்சிகினு வாடி!
இந்தா போறேன் அதுக்கு
முன்னாடி லுங்கிய ஒழுங்கா
கட்டுயா இன்னுமா
தூங்குமூஞ்சியோட இருக்குற
செல்லமாய் சொல்லி சிரித்தாள்
செல்லம்மாள். ஏன்டி இங்கன
அம்மனமா திரிஞ்சாலும் யாரு
கண்ணு பார்க்கபோவது கட்டிகிட்ட
ஒன்ன தவற ,,, ஓரக்கண்ணால்
வம்பிழுத்தான் பொன்னையன் .
க்கும்!!! இதுக்கொன்னும்
கொறச்சலில்ல குழந்த ஒன்னு
வயித்துல தங்குதா? என்று
சலித்துக்கொண்டே மிளகா பறிக்க
சென்றாள் செல்லம்மா,,,

அந்த ஊரில் பெரும் பணக்காரரான
பண்ணையாரின் கழனிக்காடுதான்
அது ,பரம்பரை சொத்தென
சொல்லிக்கொண்டாலும் பலரிடம்
அற்ப விலைக்கு வாங்கப்பட்ட
நிலமாக அது இருந்தது.
பொன்னையான் பரம்பரை
கூலித்தொழிலில்
அவரின் தாத்தா அப்பா காலத்து
தொழிலைத்தான் தற்போது
தொடர்கிறான். செல்லம்மா அவனின்
அத்தமகள் ரத்த சொந்தத்திலே
கட்டியதால் வேறெந்த உறவுகளும்
ஊரில் இல்லை அவனுக்கு .
நெல்லிற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு
மடைகளை ஆங்காங்கே திறந்தும்
மூடியும் வரப்புகளை
சரிசெய்வதுமே அவனின்
வேலையாக இருந்தது கூட
உதவிக்கு களையெடுப்பது முதல்
அத்தனை வேலைகளையும்
செல்லம்மாளும் சலிக்காமல்
செய்துகொண்டிருந்தாள்.
வாக்கப்பட்டதற்கு வாழ்வியலின்
கசப்பும் இனிப்பும் ஒரு சேர
அனுபவித்துக்கொண்டிருந்தாள்
அவள். ஒரேயொரு மனவேதனை
அவளின் நெஞ்சை
பீடித்துக்கொண்டிருந்தது
கொஞ்சுவதற்கொரு
குழந்தையில்லை என்பதுதான்
அது. கழனி வேலைமுடித்து
அடுத்த காவல் வேலைக்கு
தயாரானார்கள் மாலை கதிரவன்
மங்கிய வேளையது. தினமும்
கொஞ்சலோடு தொடங்கும்
இரவினை இருவரும் இம்சிக்க
காத்திருந்தார்கள் .கொஞ்சலோடு
தொடங்கும் உரையாடல்
அழகுதானே,,,
இரவானது பகலை விழுங்கி
பனியினை
கொடுத்துக்கொண்டிருந்த தருணம்
ஊடலில் தொடங்கி கூடலில்
முடிந்தது பொன்னையன்
செல்லம்மாளின் காதல்
மணவாழ்க்கை ,வாழ்க்கை பல
கசப்பாக இருந்தாலும் அளவுகடந்த
மகிழ்சியிலேதான்
வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள் அந்த
ஏழை தம்பதிகள். மறுநாள்
விடியலில் மற்றதையெல்லாம்
மறந்து மீண்டும் துளிர்விடும்
புதுவானத்தை பறக்கிறது மீண்டும்
எழுகிறது தினசரி வாழ்க்கை,
வழக்கம்போலவே வரப்பினை
சரிசெய்து கொண்டிருக்கையில்
சதக் சதக்கென சேற்றோடு கலந்த
வரப்பில் யாரோ ஒருவரின் பாதசத்தம்
கேட்டெழுந்து குணிந்த தலையை
உடனே நிமர்த்தி பரபரப்பானான்
பொன்னையன். வருவது
பண்ணையாரென்று முன்னமே
அவனுக்குத் தெரிந்தது வேறு
யாதொருவரும் அந்த வயலில் கால்
பதிப்பதில்லை என்பதை
அறிந்தவனாயிற்றே அவன்,,
பண்ணையார் வாரமொருமுறை
வயலை பார்வையிட வருவது
வழக்கம் அந்த பார்வை வயலின்
மீதுள்ள ஆசையாலோ அல்லது
நிலத்துடைமையாலோ அல்ல
செல்லம்மாளின் மீதுள்ள
ஆசையின்பால் தானாக வயலை
தேடும் கால்களை பண்ணையாரால்
கட்டுப்படுத்த முடியில்லை அது
செல்லையனுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை , தெரிந்தாலும்
அவன் நம்புவதாக இல்லை
வேலைதரும்
பண்ணையாராயிற்றே அவர்.
சுறுங்கிய கண்களை கொஞ்சம்
நிமிர்த்தி விடுகிறார்
பண்ணையார் .சேற்றுவரப்பில்
கரைபடக்கூடாதென கட்டிய
வேட்டியை லாவகமாக மடித்து ஆடி
அசைந்து பொன்னையன் அருகில்
வந்தார்.
என்ன பொன்னையா? வேலல்லாம்
ஒழுங்கா நடக்குதுல்லே !
பயிறுக்கு மருந்தெல்லாம் சரியா
கலந்து அடிக்கிறியா? தன்னி
பத்துதா போதலனா சொல்லா
பக்கத்து கெணத்துக்காரன்ட
கேக்கலாம் அவன் வீணாதானே
நெலத்த வச்சிருக்கிறான்,அப்புரம் நீ
எப்டி இருக்க அரசி பதார்த்தல்லாம்
திண்ணுதீத்துட்டியா இல்ல
அப்படியே வச்சிருந்து எறைச்ச
கெணத்துல கோட்டிடுரீயா?
நக்கலாக கேள்விகளை அடுக்கி
கடைசியில் நலம் விசாரிப்பில்
முடித்தார் பண்ணையார்.
இல்லிங்க எசமான் உங்க
புண்ணியத்துல எனக்கென்ன கவல
வந்துட போகுது ,கெணத்துல
சோத்த கொட்டுனா உழைச்ச
உழைப்புக்கு பலனில்லை எசமான்

களப்பா வந்திருப்பிங்க குடிசைல
கொஞ்சம் ஒட்காருங்க வேலய
முடிச்சிட்டு இந்தா
வந்துடரேன்,,இந்தா!!!
செல்லம்மா,,,எசமான்
வந்திருக்காருபாரு அந்த கயித்து
கட்டில தூக்கி வெளியே போட்டு
குடிக்கத் தண்ணி குடுடீ,,,
சொல்லிமுடித்து
செல்லம்மாளுக்கும் தகவலை
பரிமாறினான் பொன்னையன்.
எந்தவித முகபாவனையும்
செல்லம்மாளிடம் காணப்படவில்லை
அவளுக்கு நன்றாகவே
தெரிந்திருந்தது பண்ணையாரின்
பார்வை தன்மேல்
இருக்கிறதென்பது,, பலமுறை
பேச்சுவாக்கில் பொன்னையனிடம்
சொல்லியும் வார்த்தை
எடுபடவில்லை அவ்வளவு
நம்பிக்கையை அந்த ஐம்பதுவயது
பண்ணையாரிடம் வைத்திருந்தான்
பொன்னையன்,தவறில்லை
படியளக்கும் பண்ணையாராயிற்றே
அதனால் புரயோஜனமில்லையென
செல்லமாளே முடிவுக்கு வந்தாள்.
எதையும் வெளிக்காட்டிக்கொள்ளா­
மல் இயல்பான நடையிலே வாங்க
எசமான் ஒக்காருங்க இந்தா
கழனிவேளையில அழுக்கா
கெடக்கேன் தோபோய்
துணிமாத்திகினு குடிக்க
தண்ணி கொண்டாந்து
தாரேன்,என்றுச்சொல்லி
குடிசையில் நுழைந்து மூங்கில்
தட்டிக் கதவை சாத்திக்கொண்டாள்
செல்லம்மாள் , வாய்த்தடா
வாய்ப்பென பண்ணையார் பழைய
ஆசையை
புதுபித்துக்கொண்டிருந்தார்.
அரைமணிநேரம் கடந்தோடியது
உச்சி வெயிலானது சுளீரென
நேரே மூளைக்கு ஏறியதையும்
பொருட்படுத்தாமல்
பண்ணையாரின் கழனி விஜயத்தை
கருத்தில் கொண்டு வேகவேகமாக
மடையை கட்டிக்கொண்டிருந்தான்
பொன்னையன். திடீரென்று
ஆஆஆஆஆ!!வென அலறும் சத்தம்
அவனது காதை கிழித்தது
அலறலோசை அவன்
குடிசையிலிருந்தே வருவதை
ஊகித்துக்கொண்டான். தீடீரென
எழுந்த அலறல் சத்தத்தால்
உடலிலெழுந்த அதிர்வின்
காரணமாக மடையை மூடிய
மண்வெட்டி தடுமாறி
மடையைத்திறந்து ஒரு
கானியிலிருந்து மற்றொரு
கானிக்கு தண்ணீர் அடங்க மறுத்து
புதுச்சுதந்திரம் அடைந்ததுபோல
பெருக்கெடுத்து ஓடியது.
பொருட்படுத்தவில்லை
பொன்னையன் ஐயோ ! எசமானுக்கு
என்ன ஆயிற்றோவென்று
அலறிபிடித்து ஆங்காங்கே
சேற்றுவரப்பில் கால்தடுக்கி கானி
சேற்றில் காலூண்றி குடிசையை
நோக்கி ஓடலானான். குடிசையை
நெருங்க நெருங்க ஐயோ எசமான்
ஐயோ எசமானென அவனது
கூக்குரல் அக்கழனிக்காடு
முழுவதும் பரவியது. ஒருவழியாக
குடிசையை நெருங்கினான்.
கயிற்றுக்கட்டிலைத் தவிற ஒன்றும்
குடிசைக்கு வெளியே
தென்படவில்லை அவனுக்கு
,குடிசையின் உள்ளே பார்வையை
திருப்பினானவன்,மூங்கில்
தட்டிக்கதவு கிழிந்து
தொங்கியிருந்தது உள்ளே
ஆடைகிழிந்து அசைவின்றி
நின்றிருந்தார் பண்ணையார்.

எசமான்! ஒங்களுக்கு ஒன்னும்
ஆகலியே எங்கே இந்த மொவ
செல்லம்மா? ஏ!! செல்லம்மா எங்கடி
போன என்னாடி சத்தம் வந்தது
எங்கிருந்துடி சத்தம் வந்ததென
கத்திக்கொண்டே குடிசையில்
நுழைந்தான் பொன்னையன்.
அவனது இத்தனை கால
வாழ்க்கையில் அனுபவிகாத
அனுபவிக்க கூடாத வலியொன்றை
அவன் பார்க்க நேரிடுகிறான்.
சிதறிக்கிடந்த கஞ்சிப்பானை
தட்டுபொட்டு சாமான்களுக்கு
நடுவே அவளின் கையில்
அறுவாமனையுடன்
கழுத்தறுந்துபோய்ஜாக்கெட்டுடை
கிழிந்து புடவை முந்தானையின்
கடைசி பிடியை கைவிடாமல்
பற்றிய அவளின் இடுப்பிலெழும்
ரத்தக் கீரல்களையும் அப்போது கண்ட
பொன்னையன் பண்ணையாருக்கு
பக்கத்தில் அவனுமொரு சிலையாக
நின்றான். அடுத்தென்ன செய்வதென
அவனுக்குத் தெரியவில்லை
அவ்வளவு நம்பிக்கையை
பண்ணையாரிடத்தில் அவன்
கொண்டிருந்தான். கண்கள் மட்டுமே
தாரைதாரையாக கண்ணீரை
கக்கிக்கொண்டிருந்தது பேசவும்
கதறியழவும் நாவெழவில்லை
அவனுக்கு , செல்லம்மாளை ஒரு
கணமும் பண்ணையாரை
மறுகணமும் திரும்பித் திரும்பிப்
பார்க்கிறான் இப்போது கதறியழும்
நேரம் அவனுக்கு கைகூடி வந்தது.
பத்தினி மவ அப்பவே சொன்னாளே
இந்தப் பாவிதான் கேக்கலயே
எசமான் எசமான்னு திரியாதேயா
அந்தாளு எம்மேல ஆசவச்சிட்டான்னு
அப்பவே சொன்னாளே இந்த
பாவிதான் கேக்கலயே!!! எனக்
மண்தரையில் மண்டியிட்டு மடியில்
செல்லம்மாளை கிடத்தி
கதறியழுதான் பொன்னையன்.
நிலமையை யூகித்து
தன்னிலையை
சுதாரித்துக்கொண்ட பண்ணையார்
தப்பிக்கும் முயற்சியில் தன்னை
ஈடுபடுத்த தயாராக படக்கென
குடிசையை விட்டு ஒட
எத்தனித்தார். எசமானென
பொன்னையன் விட்டாலும்
செல்லம்மாளிடம் அவன்
கொண்டிருந்த காதலானது
பண்ணையாரை தடுத்த நிறுத்தத்
தயாரானது. மடியில் கிடந்தவளை
அப்படியே உதறி பட்டென எழுந்து
பண்ணையாரின் கழுத்தை
பின்பக்கமாக பிடித்தான் ,பிடி
இரும்புப்பிடியாக இருந்தது
மண்வெட்டி,கடப்பாறை பிடித்த
முரட்டுக்கையோடு முழு
ஆத்திரமும் உள்வாங்கி
கொண்டிருந்தமையால் ஆயிரம்
கைகள் அழுத்திப்பிடிப்பதுபோல்
உணர்ந்து திமிறும் சக்தியிழந்து
அவன் பிடியில் வசமாக
சிக்கிக்கொண்டார் பண்ணையார்.
சிவந்த கண்களில் இன்னமும்
கண்ணீரோடு கொலைவெறியும்
கலந்திருந்தது பொன்னையனுக்கு
,,இனி பிடியானது
தளரப்போவதில்லையென அறிந்து
தைரியத்தை இழந்த பண்ணையாரின்
விழிகள் சிறிதுசிறிதாக பிதுங்க
ஆரம்பித்தது . பண்ணையாரின் உடல்
முழுதாய் தளர்ந்து தரையில் விழ
துடிக்கிறதென பொன்னையன்
உணர்ந்தான். பிடியை முழுதாய்
அவனும் தளர்த்தினான் பண்ணாயார்
உயிரற்ற ஜடமாய் தரையில்
விழுந்தார். பலத்தை முழுதாய்
பண்ணையாருக்கு செலவிட்டதில்
பாதிஉயிர் தளர்ந்து உடலில்
வலுவிழுந்து செல்லம்மாளின்
அருகிலேயே அவனும் கிடந்தான்
இருண்டது வீடு சுயநினைவை
இழந்து அவனும் மயக்கமுற்று
தரையில் செல்லம்மாளின்
தலைமுடியை கோதியடியே
விழுந்தும் போனான்.விடிந்தது
பகலென்று தெரியவில்லை
அவனுக்கு கதரவன்
அவனுக்குமட்டும் கானாமல்
போனான் அதன் வெளிச்சம் மட்டுமே
அது பகலென்று உணர்த்தியது
லேசாக கண்விழித்து கலையிழந்த
முகத்தை திருப்பி தன்னிலையை
உணரத்தயாரானான். இருப்பது
ஜெயிலென்று அப்போது
உணர்த்தியது அவனது உள்ளம் .
கலங்கிடவில்லை கடந்துபோன
நிகழ்வினை ஒப்பிடுகையில்
இதுவொன்றும் சுமையாகவோ
கொடுமையாகவோ
தெரியவில்லை அவனுக்கு அந்த
வேளையில் அவனுக்கொரு
ஆறுதலாய் மூன்று செய்திகள்
அவனுக்குமுன் மண்டியிடுகிறது
.ஒன்று அனாதைக் குழந்தையை
அவனும் உறுவாக்கிவிட வில்லை
.இரண்டாவது மூங்கில் தட்டிக்
கதவைவிட பலம்
பொருந்தியிருந்தது
சிறைச்சாலை
கம்பிகள்,பண்ணையாரைபோல
எளிதில் உடைத்துக்கொண்டு அவனைப்போலவே யாரும்
சிறைக்குடிலுக்குள்ளே
வரமுடியாது,மூன்றாவதாக செல்லம்மாளின் கற்புக்கு எக்களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. இம்மூன்று ஆறுதல்
செய்திகளும் அவனுக்கான ஆறுதல்
மொழியாகியிருந்தது. இந்தக்
கதவுகளின் பல கோணங்களை
எண்ணிபடியே மீண்டும் தரையில்
அவனுடலை சாத்தினான் வரும்
கனவுகள் முழுக்க
செல்லம்மாளும்,மூங்கில்தட்டி
கதவும்,சிறைச்சாலைக் கம்பிக்
கதவுகளுமாகவே
அடைத்திருந்தது அவன் கனவில் கடைசி
வரையில் கண்ணில் படவில்லை
பண்ணையார். தூரோகத்தை
தோலுரித்துக் காட்டிய
கனவுகளுக்கு அவனும் நன்றி
செலுத்துகிறான்.

முற்றும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...