Sunday, April 19, 2015

பார்ப்பனர்களை மட்டுமே சாடுவதுதான் சாதிய எதிர்ப்பா?

பார்ப்பனர்களை மட்டுமே சாடுவதுதான்
சாதிய எதிர்ப்பா?
சாதிய எதிர்ப்பாளர்கள் பார்ப்பனர்களை
மட்டுமே சாடுகிறார்களே அவர்களும்
மூன்று சதவிகிதத்தை கொண்ட
சிறுபான்மை மக்களல்லவா! என்கிற
நியாயப்படுத்துதலை அனைவரும்
முன்வைத்துப் பேசுகிறார்கள்.
நியாயமானதாக தோன்றும் ஆனால் அதன்
அநீதிகளை இந்துத்துவமே மறைத்துக்
காட்டிவிடுகின்றது.முதலில் எங்களை
யார் தேவதாசி மகன்(மகள்)சூத்திரர்க­
ள்,என்றும், இவர்கள் தொட்டால்
தீட்டு,இவர்களுக்கு கல்வி மறுத்தல்,
பார்ப்பன அவையில் ஆடைஅவிழ்க்கும்
விலைமகள் பெண்டீர்களென பல்வேறு
இழிவுகளை எங்களின் மீது இந்துத்துவ
மதத்தின் பெயரால் திணிக்கிறார்களோ
அவர்களைத்தான் முதலில் எதிர்க்கச்
செய்கிறோம். எதிர்ப்பில் எவ்விதமான
பாகுபாடுகளை பார்ப்பதில்லை,
அப்படியிருந்தும் இடைநிலைச்
சாதிகளை எதிர்க்காமல் வெறும் பார்ப்பன
எதிர்ப்பெப்படி சாதி எதிர்ப்பாகிவிடு
மென்கிற கேள்வி நம்மிடையே
எழுப்பப்படுகிறது காரணம்
பார்ப்பனர்களின் கையசைவின் பேரில்
இடைநிலைச் சாதிகள் புரியும்
ஆதிக்கவெறியாட்டங்களின் மீதான
எதிர்ப்பு இன்னும் வலுப்பெறவில்லை
என்பதே காரணமாக அமைகின்றது.சட்ட
ச்சொல் லகராதியில் "குற்றத்தை
செய்பவனை விட செய்யத்தூண்டியவனே
முதன்மை குற்றவாளி"என்கிற பதம்
உள்ளது அதன்படியாக பார்த்தால்
சாதியத்தை தூண்டி சமூகத்தை
சீரழிப்பதில் முதன்மை குற்றவாளியாக
இந்துத்துவ பார்ப்பனர்களே
இருக்கிறார்கள் . இத்தெளிவின்
காரணமாக பார்ப்பன எதிர்ப்பை
முன்னிலைப்படுத்துவதில் எவ்வித
தயக்கமுன்றி யாரெதிர்த்தாலும்
திண்மமாக பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே
எங்களுடையதென சூளுரைக்கின்றோம் .
சாதியத்தை கற்பிக்கும் மனுதர்ம
வர்ணாசிரமத்தின் படியிலான சாதியப்
பிரிவுகள் பிரம்மாவின் உடம்பில்
பிறந்தவர்களாக 1.பார்ப்பனர் 2வைசியர்
3சத்ரியர் 4சூத்திரர்கள் என நால்வகை
மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் செய்யும்
தொழில்களின் மூலமாகவும்
அடிமைத்தன்மைகள் மூலமாகவும்
இந்துத்துவம் இடைநிலை
சாதியப்படிநிலைகளை தங்களின்
சுயபோகத்திற்கேற்றவாரு இந்தியத்தில்
உருவாக்கி வளர்த்தெடுத்தது
.முதன்மையில் ஆதிக்கம் செலுத்தும்
பார்ப்பனர்களுக்கும் அதன்படியிலான
அடுத்தடுத்து இடம்பெறும்
வைசியர்,சத்ரியர்களுக்கும்(உண்
மைச்சத்ரியர்கள்) ஆதிக்கம்
செலுத்துவதில் எவ்வித போட்டியோ
பொறாமையோ ஏற்படுவதில்லை அவர்களால்
உறுவாக்கிய சைவ வைஷ்ணவ
பிரிவினை மோதல்களை தவிர்த்து
வகுப்புப்பிரிவினையில் சமரசமாகவே
செயல்படுகிறார்கள்.ஆனால் இங்கே
முக்கியமாக பார்க்கப்படும்பொழுது
இடைநிலைச் சாதியத்தில் மிகவும்
பின்தங்கியவர்களான சூத்திரர்கள்
தங்களை அதிலிருந்து
விடுவித்துக்கொண்டு தாங்கள்
சத்ரியர்கள் என அறிவித்துக்கொண்டு
கீழமையான பஞ்சமர்களையும்
எதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களோ
அதே சூத்திரர்களையும் அடிமைபடுத்தி
தங்களின் ஆதிக்கத்தை விரிவடையச்
செய்கிறார்கள் இதில் ஆரம்பமாகிறது
இந்துத்துவ பார்ப்பன வெற்றி. ஏனெனில்
தங்களின் கீழான அடிமைகளுடன் கூடவே
இவர்களையும் அடிமைபடுத்தி
ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறார்கள்
இந்துத்துவ பார்ப்பனர்கள்.பார்ப்பானியம்
என்பது தங்களின் ஆதிக்கத்தை
நிலைநிறுத்துவதற்காக இடைநிலைச்
சாதிகள் ஏந்தும் இந்துத்துவ ஆயுதமாகும்
. "பார்ப்பனியம்" எனில் தங்களை
ஆதிக்கர்களாக காட்டிக்கொள்ளும்
மேல்சாதியான
"பார்ப்பனராக,முதலியாராக,பிள்ள
ையாக,மேனன் களாக ,அய்யராக,
அயங்காராக, நாடாராக,தேவராக,வண்ணி­
யர்களாக,கவுண்டர்களாக,தேவேந்திர குல
வேளாளராக, பஞ்சமர்களாக (தலித்துகளும்
ஆதிக்கத்சாதியராக காட்டிக்கொள்வதனால்)
பல உறுவக்கொண்டுத் திரிகிறார்கள்
திரியவிடுவது இந்துத்துவ
பார்ப்பானியமேயாகும். சேர,சோழ
,பாண்டிய , பல்லவ காலத்து மன்னர்களை
துணைக்கழைத்துக்கொண்டு அவர்களுடன்
அரசாண்டான்கள்,போர்வீரர்கள்,பட
ைத்தளபதிகளென ஆதிக்கம்
செலுத்துவதில் முன்னிலை பெற்றவர்கள்
நாங்கள் என்கிற வரலாற்றுப் புரட்டுகளை
கையெலெடுத்து ஆதிக்கச்சாதிகள்
நாங்களென சொல்லித்திரியும்
சாதிஇந்துக்களே தமிழகத்தில் வலம்
வருவதை நம்மால் மறுக்கமுடியாது.
உதாரணமாக பார்ப்பன
சாதியப்படிநிலையில் பார்ப்பனர்களால்
இவ்வாதிக்கர்களை சூத்திரர்களாகவே
பார்க்கப்படுகின்ற நேரத்தில் ஆங்காங்கே
வன்னியர்களும், தேவர்களும், தேவேந்திர
குல வெள்ளார்களும், தங்களை
சத்ரியர்களாக காட்டிக்கொள்வதை
வெளிப்படையாகவே காணமுடிகிறது.
மூன்றாம் படிநிலையில் முன்னேற்றம்
அடைந்தால் சூத்திரர்கள்,பஞ்சமர்­
கள்,இன்னபிற கீழமை சாதிகளின் மீதும்
ஆதிக்கம் செலுத்த முடியுமென்கிற
கற்பிதத்தை பார்ப்பானியம் அவர்களுக்கு
கற்பிக்கிறது . இதன் மூலமாக
எக்காலமும் அழியாச் செல்லமாக மனுதர்ம
வர்ணாசிரம் பாதுகாக்கப்படும் என்பதே
பார்ப்பானிய எண்ணமாக இருக்கிறது .
இதற்கு வரலாற்று அரசாண்டான்களும்
துணையாக இருந்தார்கள் என்பதே
நிதர்சனமாக இருக்கிறது.
அரசாண்ட ராசராச சோழன் காலத்திலும்,
நாயக்கர் காலத்திலும் பார்ப்பானியம்
பெருமெழுச்சி பெற்றது என்பதே
வரலாற்று உண்மையாகும்
.குலக்கல்விமுறை,பெண்களுக்கு
கல்விமறுத்தல்,உடன்கட்டைஏறுதல்,
கிராமத்து இரட்டைக்குடில் முறையென
பார்ப்பன சாதி இந்துக்களின் ஆதரவாகவே
ஆட்சி நடைபெற்றதென்பது
தெள்ளந்தெளிவான நமக்கு வரலாறு
எடுத்துரைக்கிறது . ஆக பெரும்
வளர்ச்சிப்பாதையில் சமூகத்தை
அடிமைபடுத்தும் பிற்போக்குச்
செயல்களுக்கனைத்தும் பார்ப்பனர்களே
முன்னிலை பெறுகின்ற வேளையில்
இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பின் மூலமாக
மட்டுமே சாதிய எதிர்ப்பினை எடுத்துச்
செல்ல முடியுமென்பது தெளிவு,இதில்
தானாகவே பார்ப்பனரல்லாத ஆதிக்க
சாதிகளும் உள்ளடங்கியே எதிர்பானது
இருக்கும். அதைவிடுத்து பார்ப்பன
எதிர்ப்பு ஒருபுறம் பார்ப்பனரல்லாதோர்
எதிர்ப்பு ஒருபுறமென சாதிய
எதிர்ப்பினை இரண்டாக எடுத்துச்செல்லு
தல் சாத்தியமற்றது. இந்த பார்ப்பன
எதிர்ப்பிலேயே தலித்தின ஆதிக்கமும்
அடங்கிப்போகிறது , ஒட்டுமொத்த அடிமைச்
சமூகத்தான் உள்ளீடாக கொண்ட
தலித்துகளும் தங்களின்
சாதியாதிக்கத்தின் மூலமாக
பழங்குடியினரையும்,அருந்ததியனர
ையும் அடக்கியாளுதலும் பார்ப்பன
இந்துத்துவ வெறியேயாகும்
இந்நடவடிக்கைகளின் மூலமாக
அவர்களும் தங்களை பார்ப்பன சாதிய
இந்துக்களாகவே அடையாளப்படுத்தப
்படுவார்கள். அவனை அடிமைபடுத்து என
கைகாட்டி விடுகிறது பார்ப்பானியம்
அவனும் தான் பார்ப்பானியத்திற்குள­
்ளான அடிமையென அறியாமல்
அடிமைபடுத்தி ஆதிக்கவெறியுடன்
திறிகிறானெனில் செயல்படுத்தச்
சொல்வதும் ,செயல்படுத்துவதும் ஒரேச்
செயலில் நடைபெறுகிறது இது பார்ப்பன
எதிர்ப்பு . அடிமை படுத்துதல்
குற்றத்திற்கான தண்டனைகளை
முற்போக்குச்சிந்தனைகள் அவர்களுக்கு
கொடுக்கிறது இது சாதி எதிர்ப்பு . ஒரு
சமூகத்தின் அடிமைத்தன்மையை
கற்பிக்காத வரையில் புலப்படாத
கூறுகளும் ,அடிமைச்சமூகமும்
புதுப்புது வடிவில் புத்துயிர்பெறும்
என்பதை தெளிவாகவே பார்ப்பானியம்
தெரிந்து வைத்திருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...