Thursday, April 16, 2015

காதல் தந்த பரிசு

எனக்காவே
ஒளிவீசுகிறது
என்னவள்
ஏற்றிவைத்த
சுடரொளி
சுகமாகத்தான்
இருக்கிறது
வெடிக்கும்
பருத்தியில்
வெளிவரும்
சுகவாச
பஞ்சுகள்
தலையணைக்குள்
தவழ்கிறதே
விடிந்த காலையில் வியர்க்காத
முகத்தை நோட்டமிடுகிறேன் நொண்டிச்சாக்கு
புலப்பட மறுக்கிறது
என்னவள்
விழித்தெழுந்தாள் கண்களில்
விளையாடுவது
நானென அறிந்தேன்
முகம் பதிக்காமல் முத்தமொன்றை
தந்தேன் காற்றில் அம்முத்தம்
அலைமோதுகிறது
அங்கேயே சிலநிமிடம் சிலையாக
நின்றிருந்தேன்
சிமிட்டாத அவள் கண்களுக்கு
நானும் இரையானேன்
கார்மேகம்
கரும்புனல் தின்று
காதலை
கசியவிடுகிறது கருங்கூந்தலோ அதில்நனைந்து
பூக்களுக்கு புத்துணர்வாய்
திகழ்கிறது
பூலோகம் கைகளில்
தழுவ போதுமெனக்கு வாழ்ந்திட வேண்டும்
இனி அவளுக்காகவே
நான் வாழ்ந்திட
வேண்டும்
விடிய விடிய
வியப்பில் என்னவள் வின்னைத்தொட வேண்டுமென்கிறது
காதல் தந்த
முதல் பரிசை
தொலையாமல்
பூட்டி
வைத்திருக்கிறேன் என்னவளுக்காக
எப்போதும் அதனை
திறந்தும் தித்திக்கும் முக்கனிச் சுவையாய் திறந்தும் காட்டிடுவேன் தொலையவில்லை
காதலென்று
நிரூபிக்கத் தேவையில்லை நீதான் என்
பரிசென உனக்கும் தெரிந்திருக்கும்
உறக்கம் நமக்கேது கண்விழித்த
காதலுக்கு
கடைசிவரை
நாமிருவருமே
துணையாக
தூணாக வேண்டாமா
என்னவளே
ஏற்றிய தீபத்தில்
என்னையே
எண்ணெயாக
ஊற்றிவிடு
காதல் சுடரால்
பூவுலகினி
வெளிச்சத்தில்
வாழும்

2 comments:

  1. கடைசிவரை
    நாமிருவருமே
    துணையாக
    தூணாக வேண்டாமா
    என்னவளே //அருமையான கேள்வி.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...