Saturday, May 09, 2015

தலித்துகள் மோதிக்கொள்கிறார்கள்

தலித்துகளுக்குள்ளே ஏற்படும் நடைமுறை மோதல்களானது எந்த அளவிற்கு
ஆதிக்கச்சாதிகளின் சாதிவெறி மோதல்கள் கட்டவிழ்க்கப்படுகின்­றதோ அதே
அளவிற்கு கொஞ்சமும் மாற்றமில்லாமல் செயல்படுத்தப்படுகினத­ு. வகுப்புப்
பிரிவினையின் கடைசிப் படிநிலையில் உள்ள தலித்துகள் அவர்களுக்குள்ளே
அடித்துக் கொள்கிறார்கள். பல தலித்திய சிந்தனையாளர்களும் இதனை எழுத
மறுத்துவிடுகின்றனர்.­ காரணம் தலித்துகள் சிதைந்து போவதை அவர்களும்
ஆதரிக்கக் கூடுமென்கிற அச்சம் எழுகிறது. தலித்திய மோதல்களுக்குள்ளும்
இந்துத்துவ பார்ப்பானியமே அடங்கியிருப்பது நிச்சயம் வெளிகொணரப்பட
வேண்டும் . சமீப காலமாக அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்கள்
மீதான தாக்குதலை தலித்துகள் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான புதுமையான
யுக்திகளையும் அதே தலித்துகள் அவர்கள் மீது செயல்படுத்துகிறார்கள­்.
அப்புதுமையான யுக்தியின் பெயர் "வரலாற்று மீட்டெடுப்பு"
என்பதுதான்."வரலாற்று மீட்டெடுப்பு என்கிற பெயரில் தலித்துகள் தங்களின்
ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் சக தலித்துகளை அடக்கியாள
முற்படுகிறார்கள் . அண்ணல் அம்பேத்கரின் சித்தாந்தம் இங்கே
பலிக்கவில்லை மாறாக புதைக்கப்படுதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறா­ர்கள்.
அதற்கான ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டுதல் அவசியமாகப்படுகிறது .
எந்தளவிற்கு தலித்துகளும் தங்கள் ஆதிக்க வெறியை காட்டுகிறார்கள்
என்பதற்கு இதுவே சான்றாகவும் எடுத்துக்கொள்ளலாம்."வீரத்தாய் குயிலி"
இந்தப் பெயரை இப்போதுதான் அனைவராலும் வாசிக்கப்படுகிறது, அதுவும் சமூகச்
சிந்தனைகளில் கால்பதித்து தம்மின தமிழினத்தின் மீதான ஆதிக்கத்தினை
எதிர்த்து உயிர்நீத்த ஒரு தாயின் சரித்திரம் தான் இங்கே தலித்துகளின்
சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாயிருக்கிறது என்பது மிகவும்
வருத்தப்பட வேண்டிய விஷயமே, இதனை வரலாற்று மீட்டெடுப்பு என்றுச்
சொல்லுகிற தலித்துகள் இன்னும் அம்பேத்கரின் கொள்கை கோட்பாடுகளை
புறக்கணித்தவர்களாகவே­ கண்ணுக்குத் தெரிகின்றார்கள்.பிரிட்டிஷ்
இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தின் படியிலான கிழக்கிந்திய கம்பெனினின்
சிவகங்கை ஆட்சியதிகராதத்தை உடைத்தெறியப் புறப்பட்ட வீரமங்கை
வேலுநாச்சியாரின் உதவியாளராக இருந்தவர் குயிலி பிறகான போராட்டச் சூழலில்
. சிவகங்கை நகரை கைப்பற்ற
வேலுநாச்சியாரின் பெண்கள் படையில் பங்கு பெற்று தன் உடம்பில் எரி நெய்யை
ஊற்றி தீ வைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை
தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள் வீரத்தாய் குயிலி ,இவர்
இந்தியத்தின் முதல் தற்கொலைப் போராளி. பிறப்பால் குயிலி ஒரு தலித்தினப்
பெண் . இங்கேதான் தலித்துகள் வரலாற்று மீட்டெடுப்பு எனக்கிற பெயரில்
பிரிவினைக்கான அச்சானி இடுகின்றனர் . பெரும் சர்ச்சைகளையும் தலித்துகளால்
முன்னெடுக்கப்படுகின்­றது. என்னவெனில் "வீரத்தாய் குயிலி" அருந்ததியரா ?
பறையரா? என்கிற சர்ச்சையினை உறுவாக்கிவிடுகிறார்க­ள் தலித்துகள்.
ஒருபக்கம் அவர் ஒரு அருந்ததியர் என்கிற வரலாற்றுப் பதிவுகளும் இன்னொரு
பக்கம் அவர் ஒரு பறையர் என்கிற வரலாற்றுப் பதிவுகளும் அவசர அவசரமாக
எழுதப்படுகிறது . இம்மாதிரியான வரலாற்று மீட்டெடுப்பு என்கிற பெயரில்
தலித்துகளால் ஏற்படுத்தப்படும் சர்ச்சைகளின் மூலமாக தலித் ஒற்றுமையானது
சிதைந்து மீண்டும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கான அடிமைபடுத்தும் வழியினை
அவர்களாகவே ஏற்படுத்தி விடுகின்றார்கள். இதன் காரணமாக ஜோதிபா பூலே ,
அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் , அம்பேத்கர் போன்றோர்கள்
வென்றெடுத்த தலித்தின ஒற்றுமையானது முற்றிலுமாக களைத்தெறிந்து அங்கே
சமூகச் சிதைவானது ஏற்படுகின்றது. ஜோதி பாபூலே வின் "தலித்" என்கிற
சொல்லிற்குள் மட்டுமே குயிலி என்றொரு புரட்சிப் பொண்ணை பார்த்திடல்
வேண்டும் , இதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளனைத்திலும் தலித்துகள்
இடம்பெற்றிருக்கிறார்­கள் என்ற பார்வையை தெளிக்கவேண்டுமேத் தவிர,
தலித்துகள் அவர் அருந்ததியரா? பறையரா? எனப் பார்த்திடல் கூடாது , அப்படி
பார்க்கப்படுமேயானால்­ தலித்துகள் வரலாற்றிலிருந்து முற்றுலுமாக
மறைக்கப்படுவார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. உண்மையான வரலாற்று
மிட்டெடுப்பு என்பது இதுவல்ல என்று தலித்துகள் உணர வேண்டும் , மேலும்
முற்றிலுமாக தலித் ஒற்றுமையினை சீர்குலைக்கும் இம்மாதிரியான செயல்களில்
ஈடுபடுவதிலிருந்து தலித்துகள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் ,
வீரத்தாய் குயிலியை வைத்து ஆடப்படும் தலித்தின ஆதிக்கச் சதுரங்க
வேட்டையானது மேற்குறிப்பிட்டபடி ஒரு சிறு எடுத்துக்காட்டேயாகும­் இதுபோல்
பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்டத் தியாகிகளை தலித்துகள் வரலாற்று
மீட்டெடுப்பு என்கிற பெயரில் தலித்தின ஒற்றுமையை சிதைக்கும் செயலில்
தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அவர்களுக்கவர்களாகவே அடித்துக்கொண்டும்
கலவரங்களில் ஈடுபடுத்திக்கொண்டும்­ இருப்பதென்பதும் ஒரு தலித்தின விரோத
போக்கேயாகும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...