Sunday, May 10, 2015

"இட ஒதுக்கீடு" சர்ச்சைகளும்,தீர்வுகளும்

இட ஒதுக்கீடு குறித்தான விவாதங்கள் எழுப்பப்படும்
போதெல்லாம் பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களையே முன்னெடுத்து வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இட ஒதுக்கீட்டினை
அழித்தால் சாதியம் தானாக அழிந்துவிடும் என்றும், இட
ஒதுக்கீடு மட்டுமே சாதியத்தை இன்னமும் உயர்த்திப் பிடிக்கிறது
என்றும், இட ஒதுக்கீடு மேலும் பிரிவினைக்கு வழிவகுக்கிறது
என்றும் , இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றோர்களான கிரிமிலேயர்
சமூகத்தினர் தத்தம் இட ஒதுக்கீட்டினை கோருதல்
கூடாதென்றும், அவர்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு
வேண்டாமென்று வலியுறுத்த வேண்டுமென்றும், பொருளாதார
அடிப்படையில் இட ஒதுக்கீடு அமையப் பெற வேண்டுமென்றும்,
இட ஒதுகீட்டினால் ஒருசார் மட்டுமே பயன்பெறுவதனால்
மற்றவர்களுக்கான உரிமைகள் மறுக்கப் படுகிறதென்றும் , இப்படி
பல்வேறு விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றது, இட
ஒதுக்கீட்டின் மீதான கவன ஈர்ப்பு ஒரு குற்றமானதாகவே இங்கு
பார்க்கப்படுகிறது , போலவே தலித்துகளும் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை
அறியாமல் அவ்விட ஒதுக்கீட்டின் மூலமாகவே படித்துப் பட்டம்பெற்று
"எங்களுக்கு இட ஒதுக்கீடு
வேண்டாமென்றுச் சொல்லும் சுயநலச் சிந்தனைகளையே
பெற்றிருக்கிறார்களென்றால் எந்தளவிற்கு இட ஒட ஒதுக்கீட்டின்
மீது ஆதிக்கச் சாதியானது காழ்ப்புணர்ச்சியை
வெளிபடுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிறகானச் சூழலில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு
கோருவோர் ஏதேனும் செயல்திட்டம் வகுத்திருக்கிறார்களா,, என
நோக்கினால் அதுவுமில்லையென்றே பதில், அடுத்தாற்போல் பொருளாதார இட ஒதுக்கீடு கேட்போர் அவ்வாரான பொருளாதாரத்தில்
பின்தங்கியவர்களை தலித்துகள் செய்யும் தொழிலைச் செய்ய
முன்வருவார்களா ,, என கேட்டால் கவுரவம் ஆதிக்கம் அப்போது
எழுந்துநின்று அதுவெப்படி எங்களால் இழிதொழிலைச்
செய்யமுடியென்று நம்மிடமே கேள்விகள் முன்வைக்கிறார்கள்.
தலித்துகளுக்கான இழிதொழிலை தீர்மாணிப்பதும் இவர்களாகவே
இருக்கிறார்கள். பெரும்பாலும் கல்வியாண்டில் புது மாணவர்கள்
சேர்க்கையின் போது எழுப்பபடும் இந்த இட ஒதுக்கீட்டின் மீதான
சர்ச்சைகளில் "மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்கவில்லை" என்கிற
பானியில் அவரவர் விமர்சனங்களை முன்வைக்கும் நேரம்
நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே இட ஒதுக்கீடு குறித்தான அவசியத்தையும், அனுகூலங்களையும்
தெளிவுபடுத்துவதென்பது அவசியமாகப் படுகிறது.
இட ஒதுக்கீடு குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் "சமத்துவ
உரிமை(Right to Equality)யில் தெளிவுபடுத்துகிறது (ஷரத்து 15 முதல் 18 வரை)
ஷரத்து 15 கூறுவது என்னவெனில் ஷரத்து 15(1) : அரசு எந்தக்
குடிமகனையும் அவனுடைய மதம்,இனம், சாதி,பால், பிறப்பிடம்
ஆகியவற்றில் எதனையாவது காரணமாகக் காண்பித்து அவனை
பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது. ஷரத்து 15(2) - எந்தக்
குடிமகனும்,அவன் சார்ந்துள்ள மதம்,இனம்,சாதி,பால்,பிறப்பிடம்
ஆகியலற்றினடிப்படையில் பின்வரும் சூழ்நிலைகளில்
தகுதியின்மைபடுத்தவோ,­ பொருப்புக்குள்ளாக்கவோ,தடைபடுத்தவோ,
அல்லது நிபந்தனை விதிக்கப்படவோ கூடாது.
a) கடை, பொது ஓய்வு
விடுதிகள்,உணவு விடுதிகள்,
மற்றும் பொதுவான பொழுது
போக்கு இடங்கள் இவற்றில்
நுழையும் போதும்,
b) அரசினால் பொதுமக்களின்
உபயோகத்திற்கென
முழுமையாகவோ அல்லது
பகுதியாகவோ,நிதியுதவி
அளிக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட
கிணறுகள், தொட்டிகள்,
குளியல்துறைகள், சாலைகள்,
கோவில்கள் போன்றவைகளை
உபயோகிக்கும் போதும்,
இவையனைத்துக்குமான
தீண்டாமையை செயல்படுத்தும்
நோக்கோடு எவ்வித பாகுபாடும்
காட்டக்கூடாது.
ஷரத்து 15(4) சமுதாயம் மற்றும்
கல்விநிலையில் பின்தங்கியுள்ள
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான
சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதில்
இருந்து அரசை ஷரத்து 15 தடுக்க
முடியாது ஏனெனில்
சமுதாயத்தில் மற்றும் கல்வியில்
பின்தங்கியுள்ள
வகுப்பினர்களுக்கு (bockward classes or
dalit) அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கு
தனிச்சலுகைகள் அளித்து
அவர்களும் சமுதாயத்தில்
முன்னேற்றமடைய தனிச் சிறப்புச்
சட்டங்களை இயற்றி சமுகத்துச்
சமநிலையை அரசு பேண
வேண்டுமென்கிற நோக்கத்தின்
அடிப்படையில் ஷரத்து 15ல் அல்லது
ஷரத்து 29(2) ல் கூறப்பட்டுள்ள
எதுவும் தடுக்காது.
ஷரத்து 17 தீண்டாமை :
இந்திய அரசியலமைப்பின் 17வது
ஷரத்து தீண்டாமையை ஒழிக்கிறது,
மற்றும் எந்த வகையிலும் தீண்டாமை
நடமுறைப்படுத்துவதை
தடுக்கிறது, மேலும்
தீண்டாமையின் மூலம் எந்த
தகுதியின்மையாவது
ஏற்படுத்தப்பட்டால் அது குற்றமாக
கருதப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படும்
என்று கூறுகிறது ,

இதற்காக 1955ல் இந்தியப் பாராளுமன்ற அவையில் தீண்டாமைக் குற்றங்கள் சட்டத்தை இயற்றியது பிறகான சூழலில்
1976ல் திருத்தப்பட்டு தற்போது மக்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டமாக
உருபெற்றது. தீண்டாமை என்பதற்கான சட்ட வரையறை எங்கும்
குறிப்பிடாத காரணத்தினால்.
Devarajiah v.Padmana என்கிற வழக்கின்
மைசூர் உயர்நீதிமன்ற தீர்ப்பும்
(இந்து வருணசாதியப்படிநிலை)ஷ­
ரத்து 15(2)உம் தீண்டாமை குறித்து
தெளிபடுத்துகிறது.

இனி இட ஒதுக்கீடு குறித்தான பகுதிக்குச் செல்லலாம் இதில்
பொதுப்பணித்துறை,அரசு­ப்பணிகளில் இட ஒதுக்கீடு குறித்தப்
பார்வையிலிருந்து விலகி "கல்வி" நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
செய்வது தொடர்பாக மட்டுமே எடுத்தாளப்படுகிறது.ஏனெனில்
தேவை அதுவாகத்தான் இருக்கிறது. ஷரத்து 15(4)ன் படி யார் பின்தங்கிய
வகுப்புனர்? இந்த ஷரத்திற்கான முக்கிய வழக்கானது
தமிழகத்தில்தான் எழுப்பப்பட்டது ,,
state of Madras vs Chenpakam Durairajan -எனும்
வழக்கின் பொருண்மைகளின் படி சென்னை அரசாங்கம் மருத்துவக் கல்லூரி,
பொறியியற் கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் மாணவர்களை சாதி மற்றும்
சமய அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான கல்வியுரிமைக்காக இட ஒதுக்கீடு செய்யுமாறு அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தது. ஆனால் மாணவர்கள் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில்
கல்லூரிகளில் சேர்க்காமல் சாதி மற்றும் சமய அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்திருப்பது செல்லாதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய
முடியாத நிலையில் ஷரத்து 15 ன் மீதான சமத்துவத் தன்மையிலிருந்தும் விலகிப்போவதாக பிறகு உணர்ந்து இதனை தவிப்பதற்காக
இந்திய அரசியல் அமைப்பில் 1951ஆம் ஆண்டில் ஷரத்து 15 (4) சேர்க்கப்பட்டது
ஷரத்து 15(4) ஆனது பின்தங்கிய வகுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடுகிறதேயொழிய , யாரெல்லாம் பின்தங்கிய வகுப்பினர்
என்ற வரையறை கூறவில்லை, அதனால் ஷரத்து 340ன் படியிலான விசாரணைக்குழு நியமனத்தைப் பயன்படுத்தி யாரெல்லாம் பின்தங்கிய
வகுப்பினரென 1955ல் ஒரு குழு தனது அறிக்கையை சம்ர்ப்பித்தது
ஆனால் உரிய தெளிவின்மை காரணமாக மத்திய அரசானது
அவ்வறிக்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை , அதன்பிறகு யார்
பின்தங்கியவர்கள் என அறிந்தாறாயும் அதிகாரம் நீதிமன்றங்களின் கைகளுக்குச் சென்றது அதனடிப்படையில் ஷரத்து 16(1)
அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி நியமனத்தில் சம வாய்ப்பு,ஷரத்து 16(2) சாதி,மதம், இனம், பால்,பிறப்பிடம்
இவற்றின் அடிப்படையில் அரசின் அலுவலகத்தில்
அல்லது பணியில் ஒரு குடிமகன் அமரத் தகுதியற்றவனாக ஆக்கப்படக்கூடாது. என்கிற சட்ட ஷரத்துகள் அடிப்படையிலும்,
தனக்கே உரித்தான திர்ப்புரைகளின் மூலமாகவும்

M.R.Balaji vs State of Mysore எனும் வழக்கின்
பொருண்மைகளின்படி மைசூர் அரசானது மருத்துவ மற்றும்
பொறியியல் கல்லூரிகளில் பின்தங்கிய வகுப்பினருக்கு 28% மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு 20% தாழ்த்தப்பட்டோருக்கு18%
பழங்குடிகளுக்கு 2% ஆக 68% ஒதுக்கீடு செய்தது இதனை எதிர்த்து மேற்படி
மாணவர் தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டுமென்று வழக்கிட்டார். உச்ச நீதிமன்றம் "பின்தங்கிய நிலை என்பது
சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய நிலையை குறிப்பிடுகிறதே தவிர இவற்றில் ஏதேனுமொன்றில் பின்தங்கிய நிலையை
குறிப்பிட வில்லை, மேலும் "சாதி" என்பது பின்தங்கிய நிலையை நிர்ணயிக்கும் காரணியே அன்றி அதுமட்டுமே அளவுகோளாகிவிடாது
ஷரத்து 15(4) "சாதி" பற்றிக் குறிப்பிட வில்லை
மாறாக "வகுப்பினர்" என்றே குறிப்பிடுவதனால் சாதியின் அடிப்படையில்
அமைந்த மேற்படியான அரசின் உத்தரவு செல்லாது என்றும், முதன் முதலாக
இட ஒதுக்கீடு அளவை 50%விகிதத்திற்கு மேல் செல்லக்கூடாதென்றும் திர்ப்புரை வழங்கியது . இதனைப் போலவே அடுக்கடுக்காக
நீண்டுக்கொண்டிருந்த பல்வேறு வழக்குகளில் சூழலுக்கேற்றவாரு படிப்படியாக சட்டமாற்றத்தை மேற்கொண்டது.

A.Periakarupan vs State of Tamilnadu,
இவ்வழக்கில் சாதியின் அடிப்படையில்
பின்தங்கிய வகுப்பினர்களை வரிசைபடுத்துவது ஷரத்து 15(4) க்கு உட்பட்டதே என்றும், அதேவேளையில் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை
நிறுபிக்க வேண்டுமென வலியுறுத்தியது. State of AP vs U S V Balaram ,இவ்வழக்கிலும் அதே நிலையைத்தான் உச்ச நீதிமன்றம்
வலியுறுத்தி மேலும் சாதியின் கூடவே சமூதாயத்தில் மற்றும் கல்வியில்
பின்தங்கியிருக்கிறார்கள் என்பதனை ஆராய்ந்து அதன் பின்னரே பட்டியலில்
இணைக்கப்பட வேண்டுமென்று உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. Ram Krishna Singh vs State of Mysore ,இவ்வழக்கில் 1941 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்த்தொகை கணக்கை கொண்டு 1959 ஆண்டு இட
ஒதுக்கீடு நிர்ணயம் செய்யக்கூடாது என தீர்ப்புரை வழங்கியது . K S jayasree vs State of Kerala , எனும் வழக்கில் சாதி மற்றும் வறுமையை
குடிமக்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிக்க
உதவும் ஒரு சார்புக் கருவியாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது . இவ்வாறு உச்சநீதி மன்றம் பல்வேறு படிநிலைகளைக்
கொண்டு இட ஒதுக்கீடு குறித்தான பார்வையின் உச்சத்தில் வந்து நின்றது ஒரு
முக்கிய வழக்கு . Indira Sawhney vs Union of India எனும் வழக்கான இது 1977 இம்
ஆண்டின் மண்டல் கமிஷனுக்கு எதிராக 1990ல் போடப்பட்ட வழக்காகும். இந்தியாவின் பார்வைமுழுக்க இட ஒதுக்கீடு குறித்தான மண்டல் கமிஷன் மீது விழ உச்ச நீதிமன்றமானது வழக்கை நிராகரித்து
மண்டல் கமிஷனில் சில மாறுதல்கள் அதாவது 14 மாறுதல்களை
கொண்டுவந்து மண்டல் கமிஷனுக்கு புதுக் கொள்கைகளை வகுத்துக்கொடுத்தது. அதன் முக்கிய கொள்கையான மாநில அரசின்
அதிகாரம் அமையப்பெற்றது இதனடிப்படையில்தான் தமிழகத்தில் 69% இட
ஒதுக்கீடு (பொது 26.5%,முஸ்லீம் 3.5%, வன்னியர் 20%, தாழ்த்தப்பட்டோர் 18%இதில் 3%அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடென்று பிரித்துக்
கொடுத்தது) செய்து சட்டமியற்றியது . இரண்டாவதான முக்கிய
கொள்கைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு நீட்டியமைப்பதன் மீதான
கட்டுப்பாடுகளையும் விதித்தது , பின்தங்கியவர்கள் கல்விக்கும்
சமூகத்திற்குமான முழு அந்தஸ்த்து பெற்று தீண்டாமையில் விடுபட்டு
சமூகநிலையினை எட்டிவிட்டார்கள் என்று அறியப்படுமானால் இட ஒதுக்கீட்டினை அந்தந்த மாநில அரசுகள் விடுவித்துக்
கொள்ள வேண்டும் மீறும் பட்சத்தில் அரசியலமைப்பிற்கு எதிரானதென்று
அறிவுறுத்தப்படுமென்று பிறப்பித்தது. ஆக உச்ச நீதி மன்ற கொள்கைகளின்
படி ஷரத்து 15, ஷரத்து 15(1) , ஷரத்து 15(2), ஷரத்து 29 , ஷரத்து 30 ஆகிய சட்டப்பிரிவுகள் மீறப்படாத வரையில் இங்கே இட ஒதுக்கீடு
நீடித்திருக்கும் என்பதேயாகும் , இன்றையச் சூழலிலும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை
மக்களுக்கெதிரான தாக்குதல்களும் , வன்முறைகளும் நடைமுறையில் இருக்கின்ற வரையில் இட ஒதுக்கீடு நீடித்திருக்கும் என்பதே இதன்
சாரம்ஸமாக இருக்கிறது , இன்றளவும் நகரங்களில் மறைமுகமாகவும்,
கிராமங்களில் நேரடியடியாகவும் "சேரி,ஊர்" என்கிற பாகுபாடுகளுகளும்
மேற்சொன்ன மக்களின் மீதான வன்முறைகளும் நடைமுறையில் இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். அவ்வாறிருக்கின்ற வேளையில் இட ஒதுக்கீடு
மட்டுமே சாதியை உயர்த்திப் பிடிக்கிறதென்பது அறியாமையைத்தான்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முழுமையாக இட ஒதுக்கீடானது அகற்றப்பட வேண்டுமெனில் இவ்வாறான அவலங்களை எதிர்த்து சமூகத்தில் சமத்துவத்தை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...