Thursday, November 05, 2015

தோழிமார்களின் ரூ1000கோடி ஊழலை மறைக்கும் ஜெவும் ஊடகங்களும்,,,




ஒரு அதிமுக்கிய ஊழல் குற்றச்சாட்டு செய்தி வந்து ஐந்து நாட்களாகிறது. அந்தச் செய்தியையும் ஏதோ பொதுவில் போட்டோம் படித்தால் படியுங்கள் என்கிற பாணியிலேயே இடம் பெற்றிருந்தது. பெருங்குற்றம் சர்வ சுதந்திரமாக உலாவுமிடத்தில் ஊழலாவது மண்ணாவது என்று எப்பொழுதும் போல காணாமல் போய்விட்டது அந்த செய்தி.
ஊழல் பெருங்குற்றத்தில் வராது என்று வெகுசன மக்களையும் நம்பவைத்திருப்பதுதான் அரசியலின் ஆழப்பிடிப்பு ,ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள ஊழல் குற்றத்தின் கட்டுரையிலும் ஆழமான உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை அதனைத் தொடர்ந்து தன் ஆய்வுகளை மற்ற பத்திரிக்கைகளும் , செய்தி ஊடகத் தொலைக்காட்சிகளும் தொடக்கூட முன்வர வில்லை இதில் தொலைக்காட்சிகள் ஒருபடி மேலேபோய் சசிகலா இளவரசி ஊழலைப் பற்றி வாய்திறக்க மறுத்தே விடுகின்றன. முன்னதாக தன் செய்தியை இவ்வாறு வெளியிட்டிருந்தது ஹிந்து நாளிதழ்.

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கியுள்ளார். இந்த தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளில் மிகவும் பிரபலமான நிறுவனமான SPI சினிமா சென்னையில் செல்வாக்கு மிக்க பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. டிஜிட்டல் திரைகளை 3டி வசதிகளுடன் திரையரங்குகளில் அமைத்த ஆசியாவின் முதல் நிறுவனமும் SPI சினிமா நிறுவனம்தான்.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள 11 திரைகளுடன்(11 தியேட்டர்கள்) பிரமாண்டமாக உள்ள லக்ஸ் திரையரங்கை ஜாஸ் சினிமா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்று இதற்கு முன் அழைக்கப்பட்ட ஜாஸ் நிறுவனம் கடந்த 2005ல் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் முன்னிலையில் கடந்த 2014 ஜூலை 14ல் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி நடந்துள்ளது என்று ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த பெயர் மாற்றத்துக்கான தீர்மானத்தில் சசிகலா ஒப்புதல் கையெழுத்து போட்டிருப்பதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிறுவனம் திரைப்படங்களை தயாரித்தல், வினியோகம் செய்தல் மற்றும் சினிமாத் துறை சம்மந்தப்பட்ட தொழில்களையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
லக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. எஸ்பிஐ சினிமா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த லக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து பல விஷயங்கள் ஜாஸ் சினிமாஸ் என்ற இணைய தளத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளதும் லக்ஸ் நிறுவனம் ஜாஸ் நிறுவனத்திற்கு கை மாறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ சினிமா மற்றும் ஜாஸ் நிறுவனங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளோ, ஊழியர்களோ வாய் திறக்க மறுக்கிறார்கள்.அதே நேரத்தில் இரு நிறுவனங்களுக்கும் உள்ள ஒப்பந்தம் முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜாஸ் சினிமா நிறுவனத்தின் ஆவணங்களை பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கார்த்திகேயன் கலியபெருமாள், சிவகுமார் கூத்தையப்பர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். ஏற்கனவே, எஸ்பிஐ சினிமா நிறுவனத்தை பிவிஆர் சினிமாஸ் என்ற நிறுவனம் வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே ரூ. 600 கோடி முதல் ரூ.1000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால், தற்போது சசிகலா, இளவரசிக்குச் சொந்தமான ஜாஸ் நிறுவனம் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் வாங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அதில் இயக்குநர்களாக உள்ள கார்த்திகேயன் கலியபெருமாள், இளவரசியின் மருமகன். சிவகுமார் கூத்தையப்பர் சத்தியமூர்த்தி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா பங்குதாரராக உள்ள ஜாஸ் நிறுவனம் ரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்களை வாங்கியுள்ளது என்பது இதன் மூலம் நீரூபணமாகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.

தி ஹிந்து வெளியிட்டுள்ள இச்செய்தியை தொடர்ந்து விகடன் அட்டைப்படமேற்றி இரண்டாவதாக செய்தி வெளியிட்டது ஆனாலும் இரண்டிலும் சரியானத் தகவல்கள் இல்லாத நிலையிலேயே ஊழல் மட்டும் நிகழ்ந்திருக்கிறது என்பதை உறுதியாக எடுத்துக்கூறுகிறது. இதுவரையில் 1000 கோடி ரூபாய் ஊழலைப்பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட மறுப்பது ஏன்?
பயமா? இல்லை ஜெவினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக மாறிப்போனார்களா?
இல்லை ஒட்டுமொத்தமாக ஜெவுக்கு அடிமையாகிப்போனார்களா? இப்படியான கேள்விகள் எழத்தான் செய்கிறது. அதற்கு சாட்சியாகவும் ல்யூக்ஸ் டூ ஜாஸ் சினிமாஸ் 1000 கோடி சசிக்கலா க்ரூப் வாங்கியதை மக்கள் கூட்டியக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசத்தொடங்கியவுடன் புதியதலைமுறை தொலைக்காட்சி,தந்தி, பாலிமர், போன்றவைகள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டார்கள்.

ஆளும் அதிமுக எனும் ஊழல் அரசின் முதலமைச்சரான ஜெவின் தோழிகள் சசிகலாவும் ,இளவரசியும் புரிந்த 1000 கோடி ரூபாய் ஊழலுக்கும் முன்னர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சமக தலைவரும் அதிமுக கூட்டணியாளருமான சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. அத்தனை துள்ளியமாக அவர்கள் ஊழலை மறைக்க காய் நகர்த்தியிருந்தாலும் உண்மை வெளியே வரத்தானே செய்யும். நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கண்ட SPI நிறுவனத்திற்கு நற்சான்றிதழ் அளித்தார் சரத்குமார் என்பது நாமறிந்ததே , தேர்தலுக்கு முந்தைய ஒரு பிரச்சாரத்தில் சரத்குமார் தரப்பினருக்கு ஆதரவாக இயக்குநர் சேரன் பேசுகையில் ஒரு விஷயத்தை போட்டுடைத்தார் . நடிகர் சங்கம் SPI நிறுவனத்திடம் ரூ 5 கோடி கடன்பட்டிருந்த நிலையில் கையில் 1கோடி மட்டுமே நிதி இருந்ததாகவும் சரத்குமார் அவர்கள் மிக சாமர்த்தியமாக? தனது திறமையால்? 4 கோடியினை தள்ளுபடிச் செய்ய வைத்தார். அதன்படி SPI நிறுவனம் 4 கோடியை தள்ளுபடி செய்தது என்று குறிப்பிட்டார் (இந்த 4 கோடி SPI தகவல் SBI வங்கியென மாற்றி பொய்த் தகவலுடன் வாட்ஸ்அப்,பேஸ்புக் என வைரலாக வங்கியை பிடுத்து உலுக்கினார்கள் நம்மவர்கள் . )
SPI இன் 4 கோடி நடிகர் சங்க கடன் தள்ளுபடிக்கும் சசிகலா,இளவரசி ல்யூக்ஸ் டூ ஜாஸ் சினிமாஸ் 1000 கோடி ஊழலுக்கும் நிச்சயமாக தொடர்பு இருந்திருக்க வேண்டும், இதனைப்போல தள்ளுபடி என்கிற பெயரில் தியேட்டர்களை பேரம் பேசி வாங்கியிருக்கலாம் என்கிற கோணத்தையும் உறுவாக்கியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் செய்தி ஊடகங்களும் இவ்வூழலை மறைக்க முற்ப்படுகிறதென்றால் அவர்களும் பேரமாக்கப்பட்டு விட்டார்களா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஊழலரசியலை முன்னெடுப்பதில் திராவிடத்தை அழித்து பெயரளவுக்கு மட்டும் தன் கட்சியின் பெயரில் ஒளித்து வைத்திருக்கும் இரு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு நாட்டைச் சுரண்டுகிறது. ஊழல் செய்து
1000 கோடி ரூபாய்க்கு வாங்கிய 11 திரையரங்குகளின் வருமான இலாபத்தை எப்படியும் திரைப்பட பார்வையாளர்களாகிய மக்களிடமிருந்தே வசூலாக்கப்படும் என்பதையும் மறந்த தமிழன் உண்மையில் மறதியின் உச்சமாக இருக்கிறான். இதுவரையில் தானே முன்வந்து விசாரணையில் இறங்கிடாத காவல்துறையும் அவர்களிடத்தில் ஓர் பொம்மையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...