Monday, September 24, 2018

கருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு ?





கருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சமூக பேச்சுகளை காணலாம்... எதார்த்தத்தில் இந்த புலம்பலும் , ஆதங்கமும் முற்போக்குத் தன்மை உடையதோ, ஹிந்துத்துவ பார்ப்பன எதிர்ப்புத் தன்மையுடையதோ இருக்க முடியாது.. இன்னமும் கைது செய்யப்படாமல் அல்லது நீதிமன்றம் அவரை கைது செய்ய அவசியமில்லை என கருத்து கூறும் அளவுக்கு ஹிந்துத்துவ பார்பானியம் தன் பூணூல் பலத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறதோ ... அதே அளவுக்கு இங்கு இடைநிலை சாதியாதிக்கத்தின் அதிகார பலமும் மேலோங்கியே கிடங்கிறது... கருணாஸ் பேசியதும் எச் ராஜாவின் ஆவேச வாக்குவாதமும் ,அதன் பிறகும் கூட இந்து அறநிலையத்துறை அதிகாரிளை வேசி என பேசியதும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்... தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல மொத்த இந்திய சமூகத்திலும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மேலோட்டமாக கொண்ட ஒரு சார் பார்ப்பன எதிர்ப்பு, மிகத் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு என்று இரண்டு வகையில் இருக்கிறது... அதாவது சாதி , மதத்தினை மிகத்தீவிரமாக எதிர்க்கும்போது அது இயல்பாகவே பார்ப்பனிய எதிர்ப்பாகிவிடுகிறது, அதே வேளையில் தங்களுக்கு சாதி முக்கியம் , மத வழிபாடு வேண்டும் ஆனாலும் பார்ப்பனனை எதிர்ப்போம் என மேலோட்டமாக எதிர்ப்பு தெரிவிப்பது என இந்திய சமூகம் முழுமைக்கும் இந்த நடைமுறைதான் இருக்கிறது. ஆழ்ந்து கவனித்தால் பார்பனியத்தைவிட இவர்கள் ஆபத்தானவர்கள் என்றுணரலாம்... ஏனெனில் பார்ப்பனியம் என்றுமே தனக்கான அடிமைகளை நேரடியாக உறுவாக்குவதில்லை , இடைநிலை சாதியாதிக்கர்களை வைத்தேதான் அது காய்நகர்த்தும்... இதில் வேடிக்கை என்னவென்றால்... நீங்கள் எந்த ஆண்டை சாதியாகவோ இருந்துக்கொள் ஆனால் எங்களுக்கு நீ "சூத்திரன்" மட்டுமே என்கிறது பார்ப்பனியம்... இதையும் எச் ராஜா " மரு . ராமதாஸ் கோவில் கருவறைக்குள் நுழைந்தால் கருவறுப்போம்" என பேசியதிலும் வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம்... கருனாஸ்கள் , என்றுமே கைது செய்யப்படக்கூடிய சமூக விரோதிகள்தான் , ஆனால் பார்ப்பன பாணியில் பூணூல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் "அதே சூத்திரர்கள்" தான் ... எப்பொழுதும் தலித்தியத்தின் பார்ப்பன எதிர்ப்புக்கும் , சாதியாதிக்க ஆண்டைகளின் பார்ப்பன எதிர்ப்புக்குமான இடைவெளி மிப்பெரிய அளவில் தொடர்ந்தே இருக்கும்...சரி... இதனை கருணாஸ் ,எச் ராஜா ஒப்பீடு கூடாது எனில் வேறு எப்படி ஒப்பிடுவது?
நிறைய இருக்கிறது... கருத்துரிமைக்கு எதிராக எத்தனையோ போராளிகளை இந்த அரசு நசுக்கி ஒடுக்குகிறது... எத்தனோயோ இடதுசாரிய முற்போக்கு இயக்கங்களின் குரல்களை நசுக்கி உடனே கைது செய்து தங்கள் அதிகார பலத்தை பிரயோகிக்கும் அரசு பார்ப்பனியத்திடம் பம்முவது ஏன்? திருமுருகன் காந்தி , சோபியா, திவ்யா பாரதி , நந்தினி, என நீளும் பட்டியல்கள் இருக்க... பெண்களை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களை , இந்து அறநிலையத்துறை எனும் ஒரு துறையை, தந்தை பெரியாரை, இழிவாக மிகவும் கீழ்த்தரமாக பேசும் எவ்வீ சேகர்களை எச் ராஜாக்களை சுதந்திரமாக அதையும் தாண்டி அரசின் பாதுகாப்போடு வெளியே திரிய விடுகிறார்கள் எனில் இது பூணூல்களின் அடிமை அரசுதானே... ஹிந்துத்துவ பார்ப்பனியத்தின் கூடவே இடைநிலை சாதியாதிக்க வெறியர்களையும் இங்கு அடையாளங் காணப்பட வேண்டும்...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...